உலக நாடுகளின் உருக்கமான வேண்டுகோலை புறக்கணித்து அல்லாவின் ஷரியத்தை நிலை நாட்ட சவுதியில் தலை துண்டிக்கப்பட்ட மும்மின் இளம் பணிப்பெண் ரிஷானா (4 மாதக் குழந்தையைக் கொன்றதாக சொல்லிய கொலை குற்றச் சாட்டின் போது அப்பெண்ணுக்கு 17 வயது தனாம்) பெண்ணின் தாயார் சையது ஃபரீனா சவுதி அரசு சார்பில் இரக்க மனப்பான்மையுடன் அள்ளிக் கொடுத்த 20 லட்சம் இலங்கைப் பணத்திற்கு நிகரான ரியாலை வாங்க மறுத்து சவுதிகளும், சவுதி அரேபியாவும் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
தங்கள் மகள் செய்தது கொலை என்றும் அல்லாவின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்தப் பெண்ணின் தாயார் கூறி இருந்தார் எனவே சரியத் சட்டம் சரியே எல்லாம் முறைப்படி நடக்கிறது, சவுதியோ, ஷரியத் சட்டமோ தவறிழைக்கக் கூடியதில்லை, இதை சாக்கிட்டு வஹாபிய எதிரிகள் சவுதி மீதும், ஷரியத் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் என்று சுவனப்புகழ் சுவனப்பிரியன் மற்றும் அவரது சகாக்கள் நடக்கப் போகும், நடந்த நிகழ்வுக்கு கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் அல்லா அந்த பெண்ணுக்கு நற்கூலி தர பிராத்திக்கிறோம் என்று முடித்துக் கொண்டனர். ஒரு மும்மினுக்கு (அல்லா மற்றும் இறுதி இறைத்தூதர் முகமது மீதான நம்பிக்கையாளர்) மும்மின்கள் கொடுக்கும் தண்டனையை மும்மீன்கள் ஏற்கிறோம் காஃபீர் உங்களுக்கு என்னைய்யா கொடச்சல் ? என்று இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
தாங்கள் சார்ந்த மதக் கொள்கையை எதிர்த்து எதுவும் பேச இயலாத நிலையில் கையறு நிலையில் அந்தத் தாயார் ஷரியத் சட்டத்தின் தண்டனையை ஏற்பபதாக கூறி இருந்தார் என்பது சவுதியின் பண உதவியை புறக்கணித்ததில் இருந்து தெரிகிறது, மகளை அனுப்பியது வீட்டு வேலைக்கு இதுல ரோசத்திற்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று அந்த தாயாரை இவர்கள் தூற்றாமல் இருந்தால் பெரிது.
சவுதிக்கு வேலைக்கு செல்லும் அப்பாவிகள் சவுதியில் முறையான விசாரணை இன்றி சிறை தண்டனை அனுபவிக்கின்றனர் என்பதை நண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் சக தமிழனை காப்பாற உதவுங்கள்" என்று ஒப்புதல் வாக்குமூலமாக முன்பு இறைஞ்சி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே சவுதியில் சிறைகள் கூட குளிர்சாதன அறைகள் , பாலைவன சொர்கம் அங்கு தண்டனைக்கு சொல்லக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் சொல்லமாட்டார் என்று நம்புவோம்.
நான்கே மாதமான பச்சிளம் குழந்தையின் மூச்சு திண்றல் மரணத்திற்கு காரணம் என்று நம்பப்படும் குற்றவாளி பெண் இதுவரை அனுபவித்த, ஐந்து ஆண்டுகள் தண்டனை போதாது குற்றவாளியின் தலை வாளால் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று தங்கள் குழந்தையின் மீதான பாசத்தை மறக்க இயலாத அளவுக்கு வெறுப்பும், பழிவாங்கும் எண்ணம் மாறாமல் இருந்திருக்கும் போது, மறக்கவே இயலாமலும், ஆற்றாமையாலும் இருக்கும் தாய் தனக்காக உழைக்கச் சென்ற தங்கள் இளம் மகள் கொலை குற்றம் செய்திருக்க வாய்பே இல்லை தெளிவாகக் கூறுகின்றார் , 22 வயதான அவருடைய மகள் சட்டம் என்ற பெயரில் ஊர் கூடி பொது இடத்தில் அநியாயமாக தலை துண்டிக்கப்பட்டதற்கு பணம் கொடுக்கிறேன் என்று முன் வந்தால் ஏற்றுக் கொள்வாரா ?
மரண தண்டனைகள் கட்டாயம் தேவை தேவை என்று கூறுபவர்களுக்கும், மரண தண்டனைகள் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இரக்க மனம் வாய்க்க வாய்ப்பே இல்லை என்பதை அந்த குழந்தையின் பெற்றோர்களும் நிருபனம் செய்துள்ளனர்.
இணைப்பு : Executed Sri Lankan maid's mother refuses Saudi money
மரண தண்டனைகள் கட்டாயம் தேவை தேவை என்று கூறுபவர்களுக்கும், மரண தண்டனைகள் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இரக்க மனம் வாய்க்க வாய்ப்பே இல்லை என்பதை அந்த குழந்தையின் பெற்றோர்களும் நிருபனம் செய்துள்ளனர்.
இணைப்பு : Executed Sri Lankan maid's mother refuses Saudi money
25 கருத்துகள்:
வணக்கம் சகோ,
நிசானாவின் தாயாரின் சுயமரியாதையை பாராட்டுகிறோம்.இது சவுதியின் காட்டுமிராண்டித் தனத்திற்கு கண்டனம் என்பதே உண்மை.
தாங்கள் செய்வது சரி என்று நினைக்கும் சவுதி அரசு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?. பணம் இருக்கும் திமிரில் ஆடுவது என்பது இதுதான்!!!.
***
நம்ம மார்க்க பந்துக்கள் சவுதி சட்ட சில முரண்பாடுகளை சுட்டும் போது எப்போதும் சவுதி செய்வது இஸ்லாம் அல்ல என வழக்கமாக பொய் சொல்வதை ஏன் ரிசானா விடயத்தில் செய்யவில்லை.
சில மாதம் முன்பு முக்மதுவை விமர்சித்தால் மரண தண்டனை என்பது சவுதி ஷரியாவில் உள்ளது என்று நான் கூறியபோது ,அது இஸ்லாம் அல்ல என அண்ணன் சுவனபிரியன் த்லைமையில் மார்க்க பந்துக்கள் மறுத்த்னர்.
அதே போல் ரிசானா விடயத்தில் சரியாக விசாரணை இன்றி,சவுதி மன்னிக்க மறுத்தது இஸ்லாமிய விரோதம் என தாக்கியா செய்து இருக்க்லாமே!!
வழக்கம் போல் நாங்கள் மட்டும்தானே உங்களின் பொய்களை அடையாளம் கண்டு கூறினாலும்,பெரும்பான்மை பதிவுலகம் மதச்சார்பின்மை ஓவர் டொசில் கண்டு கொள்ளாமல் சென்று இருக்கும்!!
ஏன் ரிசாசா விடயத்தில் சவுதி அரசின் செயலுக்கு வக்காலத்து வாங்க வேண்டும்!!
1. ஒரு வேற்று நாட்டவரை இன்னொரு நாட்டில் தண்டிக்க சில நடைமுறைகள்
உலக் அள்வில் ஏற்படுத்தப் படவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
2. ஒரு நாட்டின் குற்றவாளிகள்,இன்னொரு நாட்டில் ஹாயாக பிரியாணி சாப்பிட்டு மகிழ்வதும் உலகளாவிய சட்ட வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
3. காஃபிர்கள்& அப்பாவி முஸ்லிம்கள்,ஷரியா அமலில் உள்ள மூமின் பெரும்பானமை நாடுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்.பிழைக்கப்போய் கை வெட்டப்பட்டோ,கல் எறியப்பட்டோ,த்லை வெட்டப் பட்டோ சாகும் துர்பாக்கியம் யாருக்கும் வரவேண்டாம்.
இப்படி கொடூர நிகழ்வுகளை[ சினிமா பார்க்காத,தொலைக்காட்சி தொடர் பார்க்காதவர்கள்] இதனை சுற்றி நின்றி இரசிக்கும் மனப்பாங்குள்ள நாடு,சமூகம் அழிவதே
வரலாறு சொல்லும் உண்மைஆகும்!!
நன்றி!!
சார்வாகன்,
நமக்கெல்லாம் கேள்விப்படும் போதே மனம் பதறும் நிகழ்வை காட்சியாக வேடிக்கைப் பார்க்க போனவர்களை நினைக்க இந்த உலகில் தான் வாழ்கிறோம் என்பது வெறுப்பான, வெறுமையான உணர்வைத்தான் தாருகிறது
//ஒரு மும்மினுக்கு (அல்லா மற்றும் இறுதி இறைத்தூதர் முகமது மீதான நம்பிக்கையாளர்) மும்மின்கள் கொடுக்கும் தண்டனையை மும்மீன்கள் ஏற்கிறோம் காஃபீர் உங்களுக்கு என்னைய்யா கொடச்சல் ? என்று இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. //
வஹாபிகளின் கேரக்டரையே புரிய மாட்டேன் என்கிறீர்களே சகோ!!
ஏன் சொல்லவில்லை என்றால் .காஃபிர்கள் அல்லாவை ஏக இறைவன் என்றோ,முகம்து(சல்) இறைத்தூதர் என்றோ,குரான் இறைவேதம் என்றோ ஏற்பதில்லை என்பதால்
ஷரியா காஃபிர்களுக்கு செல்லாது என் நாம் சொல்லி விடக்கூடாது அல்லவா!!
மூமின் பெரும்பான்மை நாடுகளில் அனைவருக்கும் ஷரியா.
இதை உலக முழுதும் கொண்டுவரவே நம்து சகோக்கள் [வேறு வழி இல்லாமல்] பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்திக்க மாட்டீர்களா!!
நன்றி!!
//இதை உலக முழுதும் கொண்டுவரவே நம்து சகோக்கள் [வேறு வழி இல்லாமல்] பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்திக்க மாட்டீர்களா!!//
வாளால் நடுத்தெருவில் தண்டனை என்ற பெயரில் கொலைகள் நிகழ்த்திக்காட்டுவதற்காக எழுதுகிறார்களோ !
பொதுஇடத்தில் தலைவெட்டுவதையும் தீவிரமாக ஆதரித்து சில மார்க்கபந்துக்கள் பதிவிடும் போது என்ன சொல்றது.
அந்த தாயின் வேதனை புரிகிறது. மேலும் எந்த உயிரினையும் விலை கொடுத்து இரத்த பணம் என்ற பெயரில் வாங்கிவிடலாம் என நினைக்கும் எண்ணத்திற்கு நல்ல செருப்படி அளித்துள்ளார். "ஆயிரம் கோடி ருபா என் மகபோல் வருமா " என தமிழில் கதறியுள்ளார் அவர். சவுதியிலிருந்து பணம் இல்லை துக்கம் விசாரிக்கவும் வீட்டுப்பக்கம் வந்துடாதீங்க எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்மூர் சூனாபினாக்களை போலவே இலங்கை முசுலிம் தலைவர்களும் சவுதிலிருந்து துட்டு வாங்கி தருகிறோம் என சவுதிக்கு நல்ல பெயர் பெற்றுதர முயற்சி மேற்கொண்டுள்ளதை மறுத்து இசுலாமிய வேடதாரிகளுக்கு நல்ல செருப்படி கொடுத்துள்ளார்.
http://dbsjeyaraj.com/dbsj/archives/14908
@சகோ சார்வாகன்
//காஃபிர்கள்& அப்பாவி முஸ்லிம்கள்,ஷரியா அமலில் உள்ள மூமின் பெரும்பானமை நாடுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்.பிழைக்கப்போய் கை வெட்டப்பட்டோ,கல் எறியப்பட்டோ,த்லை வெட்டப் பட்டோ சாகும் துர்பாக்கியம் யாருக்கும் வரவேண்டாம்.//
அமெரிக்கா வந்த புதிதில் இங்கு கிடைப்பதை விட 4 மடங்குக்கு மேல் சம்பளத்துடன் கூடி வேலை சவுதி பல்கலை ஒன்றில் கிடைக்கும் தருவாயில் இருந்தது. எங்க வீட்டுக்காரம்மா "என்னை டைவர்ஸ் பண்ணிவிட்டு எங்கோ போய் தொலை" என கட் அன் ரைட்டாக சொல்லிவிட்டார். இன்னொரு இளிச்சவாயை எங்கு போய் தேடுவது என அந்த ஐடியாவை தலை முழுகினேன். அவரது சகோதரர் அங்கு பெட்டி தட்ட கம்பனியால்- அனுப்பப்பட்ட போது திரும்பி வரும்வரை மரணபீதியில் 6 மாதம் கழிந்தது என பின்பு சொன்னார். நம்ம வாயி வேற சும்மா இருக்காது. இசுலாமையோ நபியே தப்பா சொன்னேன்னு பிடிக்காதவன் எவனோ போட்டு விட்டா உடனே விசாரிக்காம நம்மள போட்டுவிடுவானுக. நல்ல காலம் எஸ்கேப்புடா சாமி! நீங்க சொன்னது சரிதான். பிச்சை எடுத்தாலும் இந்தியாவிலோ அல்லது மேற்கிலோ எடுப்போம், ஏன் 8-ம் நூற்றாண்டுக்கு போய் சாவானேன்?
மரண தண்டனை இருந்தாலும் அது பாரபட்சமாக இருக்கக்கூடாது.
கொலை செய்யப்பட்டவரின் உறவினர் மன்னித்தால் கொலை செய்தவருக்கு தண்டனை கிடையாதாம். என்ன பிதற்றல்.
ஆனால், மன்னிப்பை வெகு எளிதில் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை யோசித்து பார்த்தீர்களா?
ஒரு பெரிய கோடீஸ்வரனோ அல்லது ஒரு பெரிய போலீஸ் அதிகாரியோ ஒருவனை கொலை செய்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள்.
கொலை செய்யப்பட்டவரின் தாய் அல்லது உறவினர்களை ரெண்டு போடு போட்டு, மன்னித்து விடுவதாக எழுதி வாங்கிகொண்டால் என்ன நீதி அங்கே இருக்கும்?
நீதிபதி, போலீஸ் அதிகாரி, மன்னர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து மிரட்டி மன்னித்ததாக எழுதி வாங்கினால், அங்கே நீதி இருக்குமா?
--
கொலை செய்யப்பட்டவருக்கு தாய் தந்தை இல்லாமல், தூரத்து உறவினர் மட்டுமே இருந்தால், காசு வாங்கிகொண்டு போய்விடலாம்.
==
கொல்லப்பட்டவர் அனாதை என்றால், கொலை செய்தவரை மன்னிக்க ஆள்கள் இல்லையென்றால், கொலை செய்தவருக்கு என்ன தண்ட்னை?
-
ஒரு ஆளை விட்டு மன்னரையோ அல்லது மன்னரின் மகளையோ கொலை செய்ய ஒருவன் அனுப்புகிறான் என்று வைத்துகொள்ளுங்கள். அந்த ஆள் சாக துணிந்தவன் என்று வைத்துகொள்ளுங்கள்.
யாரை தண்டிப்பார்கள்? கொலை செய்தவனையா அல்லது கொலை செய்ய தூண்டியவனையா?
மன்னரின் மகளை கொன்றதற்கு ரத்த பணம் கொடுக்க கொன்றவன் தயாராக இருந்தால் மறுக்கலாம். ஆனால், கொன்றவனைத்தான் கொல்லமுடியுமே தவிர, கொல்ல தூண்டியவனை கொல்ல இந்த சட்டத்தில் இடம் உள்ளதா?
-
மடத்தனமான சட்டங்கள்!
-
இந்த சட்டங்கள், பணக்காரர்களுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்குமான சட்டங்கள். அவர்கள் மட்டுமே எந்த குற்றத்தையும் செய்துவிட்டு நிம்மதியாக நடக்கலாம். ஏழைகள் பராரிகள் மீது ஏறி மிதித்து நீதி நிலை நிறுத்துகிறார்கள்.
சவுதிகளுக்கு யார் தன்டனை கொடுப்பது:னிஷ்ஷயம் அல்லா தரமாட்டார்:
எனென்றால் அப்படி யாரும் கிடையாது....அதனால்தான் ரிசானாவின் தலை வெட்டுப்படும்போது, தடுக்க யாரும் இல்லை:என்ன கொடுமை நிறைந்த உலகமடா இது?
சகோ நிலவன், அருமையான வாதங்கள்.
பணம் படைத்த்வன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய ஷ்ரியாவில் அதிக வாய்ப்புகள் உண்டு.ஒரு பேச்சுக்கு உன்னத்மான நோக்கத்தில் 6 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டது என்றாலும், அதற்கு அல்வா கொடுக்கும் அள்வுக்கு பணம் அதிகாரம் படைத்த குற்றவாளிகள் பெருகி விட்டார்.
அரபு நாடுகளில் ஷரியா ஏழைகள், பிறநாட்டவர் மீதே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
***
//மன்னரின் மகளை கொன்றதற்கு ரத்த பணம் கொடுக்க கொன்றவன் தயாராக இருந்தால் மறுக்கலாம். ஆனால், கொன்றவனைத்தான் கொல்லமுடியுமே தவிர, கொல்ல தூண்டியவனை கொல்ல இந்த சட்டத்தில் இடம் உள்ளதா?//
இல்லை. சவுதி அரசன் Faisal 1975ல் அமெரிக்கவில் இருந்து வந்த உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இஸ்ரேலுக்கு எதிராக எண்ணெய் த்டை முதலில் கொண்டுவந்த அரசர் என்பதால் உலகே அபோது ஆடியது. ஆகவே சி.ஐ.ஏ இக்கொலையை நிகழ்த்தியது என்க் கூறப்பட்டாலும் சவுதி கொன்ற்வனை கொன்று வழக்கை முடித்து விட்டது.
http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/25/newsid_4233000/4233595.stm
அதன் பிறகு சௌதி அமெரிக்காவிற்கு பிரச்சினை எதுவும் கொடுப்பது இல்லை
நன்றி!!
மனிதம் இல்லாத மதங்களால் மனிதனுக்கு என்ன பலன்?
இந்த பெண் மிகுந்த அதிர்ஷ்டசாலி, வாளை வைத்து ஒரே வீச்சில் கொன்றுவிட்டார்கள் என தோன்றியது, இசுலாமிய நாடுகளில் பெண்களின் நிலையை பார்த்த பிறகு.
Aisha Ibrahim Duhulow எனும் சோமாலிய சிறுமி 13 வயது இடுப்பளவு குழியில் வைத்து கதற கதற கல்லால் அடித்தே அந்நாட்டு இசுலாமிய அதிகாரிகள் கொன்றிருக்கிறார்கள். குற்றம் சட்ட விரோத உடலுறவு, எப்படி தெரியுமா? அவளை 3 பேர் கேங் ரேப் செய்துவிட்டார்கள்.
பங்களாதேசத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமிக்கு ஷரியா கோர்டின் தண்டனை 100 சவுக்கடி. 6 நாள் கழித்து அடி தாங்காமல் செத்தே போய்விட்டாள்.
இதை படித்தால் இசுலாமோபோபியா வராமல் என்ன *** வரும் என்பதை இசுலாமிய பதிவருங்க விளக்கினால் தன்யனாவேன்.
ஆக இசுலாமிய சட்டப்படி வன்கொடுமைக்கு ஆளான பெண் விபச்சாரி, திருமணமில்லாம் உறவு வைத்துக்கொண்டவர். ரேப்பிஸ்டை தண்டிக்கும் போது கொடுமைக்கு ஆளான பெண்ணையும் தண்டித்தே ஆக வேண்டுமாம்! இந்த அற்புத சட்டங்கள் இந்தியாவிலும் வேணும் என சில முட்டாள்கள் எழுதுகிறார்கள்.
ரிகானா வழக்கில் எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்ய ஷரியாவில் அனுமதி இல்லையோ (பிணத்தை சேதப்படுத்த கூடாதாம், அப்புறம் எப்படிய்யா போஸ்ட்மார்ட்டம் பண்ணுவான் டாக்டர்?) அது போல ரேப்பை நிரூபிக்க சாட்சி வேணும் என்கிறது போல முட்டாள்தனமான கண்டிசன்கள். அவனவன DNA ஆதாரம்ன்னு எங்கியோ போய்கிட்டு இருக்கறான்.ஆனால் இதுக்கெல்லாம் ஷரியாவில் அனுமதியில்லை. எல்லாம் அறிந்தவனான அல்லாவுக்கும் இதை பற்றி தெரியாது... தெரிந்திருந்தால் ஷரியாவில் சேர்க்காமல் விட்டிருப்பானா என்ன?
நந்தவனத்தான்
பிச்சை எடுத்தாலும் இந்தியாவிலோ அல்லது மேற்கிலோ எடுப்போம், ஏன் 8-ம் நூற்றாண்டுக்கு போய் சாவானேன்?////////////
//////////////
நீங்க ஜஸ்ட் மிஸ் ஆகிடீங்கன்னு நினைக்கிறேன் . சவுதி போயிருந்தீங்கனா இங்க நாங்க உங்களுக்கு ஒரு பதிவு போட நேர்ந்திருக்கும் ..
//இதை படித்தால் இசுலாமோபோபியா வராமல் என்ன *** வரும் என்பதை இசுலாமிய பதிவருங்க விளக்கினால் தன்யனாவேன்.//
இதற்கு பெயர்தான் இஸ்லாமோபோபியா என்றால் கண்டிப்பாக எனக்கும் இஸ்லாமோபோபியா உண்டு. இந்துவோபோபியா கிறிஸ்துவோபோபியா இவைகளும் உண்டு.
@அஞ்சாசிங்கம்
:) Dark humor, ஆனாலும் இதானுங்க நிசம்!
@விஜய்
நீர் மதசார்பின்மை நடுநிலைவாதியோ அல்லது தாவா பதிவரோ... வாழ்க!
கொலை செய்யப்பட்டவனின் உறவினர்கள் மன்னித்தால் கொலைக்கு தண்டனை கிடையாது என்று படு கேவலமான ஒரு சட்டத்தை புகழ்கிறார்கள் இந்த மரைகழண்டவர்கள்..
மொகலாயர்களின் ஆட்சியிலும் நவாப்களின் ஆட்சியிலும் ஆட்சியை பிடிப்பதற்காக அப்பாவையும் சகோதரர்களையும் கொன்று ஆட்சி பீடம் ஏறி உங்களது இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி கொலை செய்தவர்களுக்கு யார் தண்டனை கொடுத்தார்கள்? அவர்களே அரசர்கள்.
ஒருவனுக்கு ஒரே ஒரு சகோதரன். இவன் தன் சொந்த சகோதரனை கொன்றிருக்கிறான். அவனுக்கு வேறு யாரும் சொந்தங்கள் இல்லை. இவனுக்கு என்ன தண்டனை? தன்னைத்தானே மன்னித்துகொண்டுவிடுவானா?
ஒரு அப்பா தன் மகனை கொலை ஒரு ஆளை வைத்து கொலை செய்கிறார் என்று வைத்துகொள்ளுங்கள். கொலை செய்தவனை கொலை செய்யப்பட்டவனின் அப்பா என்ற முறையில் தானே மன்னித்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள். ரொம்ப நல்லா இருக்கிறதா?
அப்பா சொத்தை தனக்கு எழுதிதரமாட்டேன் என்கிறார். அவருக்கு ஒரு தொடுப்பு இருக்கிறது. அந்த தொடுப்புக்கு சொத்தை எழுதிவைத்துவிடுவார் என்று அஞ்சி அந்த அப்பாவை கொலை செய்கிறான் ஒரு மகன். அந்த அப்பாவுக்கு இவனே ஒரே மகன்.
இவனுக்கு என்ன தண்டனை? தன்னைத்தானே மன்னித்துகொள்வானா?
சரி ஆளை வைத்து கொலை செய்துவிட்டு, கொலை செய்தவனை இவன் மன்னித்தால், நீங்கள் ஒப்புகொள்வீர்களா?
//கொலை செய்யப்பட்டவனின் உறவினர்கள் மன்னித்தால் கொலைக்கு தண்டனை கிடையாது என்று படு கேவலமான ஒரு சட்டத்தை புகழ்கிறார்கள் இந்த மரைகழண்டவர்கள்..//
அது தான் ஆண்டான் அடிமை சட்டம் என்பது, அல்லா போட்ட சட்டம் என்றாலும் ஏழைக்கு தப்பிக்க வாய்ப்பு இல்லை, ரத்தப் பணம் கொடுத்துப் பார்க்க துட்டு லேது
//நீங்க ஜஸ்ட் மிஸ் ஆகிடீங்கன்னு நினைக்கிறேன் . சவுதி போயிருந்தீங்கனா இங்க நாங்க உங்களுக்கு ஒரு பதிவு போட நேர்ந்திருக்கும் ..//
:)
என்னையெல்லாம் இலவசமாக கூட்டிச் சொல்கிறேன் என்றாலும் கும்பிடு போட்டுவிடுவேன்
// J.P Josephine கூறியது...
மனிதம் இல்லாத மதங்களால் மனிதனுக்கு என்ன பலன்?//
மதவாதிகளுக்கு பலன் இருக்கே.
நண்பர்களே,
1. நம் தாவா சகோக்கள் ஷரியாவில் மன்னிக்கவும் இடம் உண்டு என சில நிகழ்வுகளை சுட்டுகிறார்கள்.நாம் பாதிக்கப்பட்டவன் மன்னிப்பது, தண்டனை வழங்குவது இரண்டுமே தவறு என்பதும்,இது சட்ட துஷ்பிரயோகம் செய்யவே வழிவகுக்கும்.குற்றம் நிகழ்ந்த சூழல்,இரு புற நியாயம்,காரணம் அனைத்தும் கண்டு மட்டுமே தண்டனை மட்டுமே சடி. குருட்டுத் த்னமாக உயிருக்கு உயிர்(கள்) என்பது சரியல்ல!!
சரி ஒரு பேச்சுக்கு ரிசான அந்த குழந்தையை கொன்றதாக வைப்போம். அப்ப்டி எனில் ஏன் கொன்றாள் என சிந்திக்க மாட்டீர்களா? குழந்தையின் தந்தை அவளை பாலியல் வன்முறை செய்து இருக்க்லாம். அந்த வீட்டில் மிக கேவலமாக நடத்தப் பட்டு இருக்க்லாம். ஒரு வினை,எதிர் வினை இரண்டையும் பார்த்தே தீர்ப்பு வழங்க வேண்டும்.
2. கொல்லப்பட்டவர்களில் எத்னைபேர் வெளிநாட்டவர்,பணம்,அதிகாரம் இல்லாதவர் என பட்டியல் இட்டுப் பார்த்தால் புரிந்து விடும்.
2012 ல் கொல்லப்பட்டவர்க்ள் 76 பேர். இவர்களின் குற்றம் நாடு,பின்புல விவரங்களை மார்க்க பந்துக்கள் சவுதி அரசிடம் த்கவல் அறிந்து வெளியிட்டு நியாயம் பேசலாம்.
3. போஸ்ட் மாட்ட்டம் உள்ளிட்ட இக்கால தடவியல் சான்றுகள் இல்லாமல் நடக்கும் விசாரணனை எப்படி சரியாகும்? ரிசானா உள்ளிட்டு தண்டனை நிறைவேற்றப் பட்ட ஒருவரின் விசாரணை பற்றி மார்க்க பந்துக்கள் விள்க்கலாம்.
4. சவுதி கஃபாலா சட்டப்படி சிக்கல் ஏற்படுவதால் 50 நேபாளிகளின் பிணங்கள் சவுதியில் நாறிக் கொண்டு இருக்கின்றன. கொடுமை. படியுங்கள்!!!
http://www.ekantipur.com/the-kathmandu-post/2011/03/08/top-story/the-saudi-trap-dozens-of-nepalis-bodies-rot-in-arabia/219209.html
KATHMANDU, MAR 08 - Over 50 dead bodies of Nepali migrant workers are waiting in Riyadh to be ferried to Nepal. The workers had died of various reasons in the past one year and more.
Officials said the situation is precarious as neither the Nepal government, which supplies a large number of unskilled labourers, nor the Saudi government, which receives them, has proper legislation in place to protect the rights of the migrant workers. Moreover, the victims’ families in Nepal are having a tough time receiving compensation for the deaths as many of them were illegally trafficked to the Gulf country.
Officials at the Ministry of Home Affairs (MoFA) and the Nepali Embassy in Riyadh said it may take more than eight months before the bodies could be ferried to Nepal, as “many of the corpses reveal illegal residency status.”
“It is a very complicated job. We don’t have the exact data, but our rough estimate is that there could be around 50 bodies waiting to be given to their families in Nepal for the past one, and in some cases, more than two years,” an official at the Nepali Embassy in Riyadh said. “The death rate is alarming. It is estimated that around 200 Nepali migrant workers die every month.” Statistics with the embassy in Riyadh show the office issued “No Objection Letters” to 12 dead bodies in just seven days in January. “Workers’ legality is always at stake. Once you change your first employer without permission, you are rendered illegal,” the official said.
Under the Saudi kafala law, it requires 13 different documents in Urdu and English, including police and postmortem reports, for a dead body to be given an “exit visa.”
“This is probably the only country which requires exit visa for even the dead bodies,” Charge d’ Affaires of the Nepali Embassy in Riyadh Paras Ghimire told the Post.
The same legal system is said to have been trapping most of the 90,000 Nepali workers, who want to return home, but are denied exit visa.
சவுதியில் பிணத்துக்கு எக்சிட் விசா வேணுமாம்!!!
சவுதி என்பது நாடா? இல்லை காடா? இதையும் புகழ்ந்து போற்றுபவர்களை என்ன சொல்வது?
நன்றி!!
இஸ்லாம் கூறும் சரீஆ சட்டத்தில் எவ்வித பிழையும் இல்லை மாறாக அதனை அமுல் படுத்தும் சவுதி அசசாங்கத்திடம்தான் சிக்கல்கள் உள்ளது.அதன் தீர்ப்பு வழங்கும் ஒழுங்குமுறைகளிலும் விசாரனை முறைகளிலும் கானப்படும் குழறுபடிகளை சரிஆ சட்டத்தில் கானப்படும் குறைபாடுகளாக சித்தரிக்க சில சகோதரர்கள் முனைகிறார்கள் .அது தவறாகும்.இந்த இறை சட்டத்தின் தனிச் சிறப்பின் காரனமாகவே விபச்சாரம் திருட்டு கொலை போன்ற பாதகச் செயல்கள் அரிதாகக் கானப்படுகின்றது .இதனை வமர்சிக்கும் நாடுகளில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் மலிந்து கானப்படுகின்றது.
//இந்த இறை சட்டத்தின் தனிச் சிறப்பின் காரனமாகவே விபச்சாரம் திருட்டு கொலை போன்ற பாதகச் செயல்கள் அரிதாகக் கானப்படுகின்றது .இதனை வமர்சிக்கும் நாடுகளில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் மலிந்து கானப்படுகின்றது.//
வீட்டுக்கு பூட்டுப் போட்டால் திருட்டு நடக்காது என்பது நம்பிக்கை, ஆனால் பெரிய பெரிய வங்கிகளின் லாக்கர்களே அபேஸ் செய்யப்படுகிறது, சமூகவிரோதிகள் என்ற நிலையில் சட்டங்களுக்கு யாரும் அச்சப்படுவதில்லை, பாதிக்கப்படுபவர்களெல்லாம் அப்பாவிகள் மற்றும் வக்கில் வைத்து வாதாட பணம் இல்லாதவர்கள் தான், பணக்காரர்களையும், சமூக விரோதிகள், கூலிப்படைகள் இவர்களை சட்டம் எதுவும் செய்ய முடியாது.
ஒருத்தரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாதுன்னு சட்டம் போட்டால் குற்றமே நிகழாது.
மனிதநேயத்தைச் சொல்லித் தராமல் சட்டம் வைத்திருந்தால் எல்லாம் சரி ஆகிவிட வாய்ப்பில்லை, எந்த ஒரு குற்றமும் நிகழும் முன் சட்டம் இருக்கிறதா என்று பார்த்து நிகழ்வதே இல்லை.
அது என்ன சார் ஒரே விதமான குற்றத்திற்கு ஒரு நாட்டில் கல்லால் அடித்துக் கொல்கிறார்கள், இன்னொரு நாட்டில் கழுத்தை அறுக்கிறார்கள்.
******
வசதி உள்ளவன் நாலு பொண்டாட்டியைக் கட்டிக் கொண்டால் பாலியல் தொழிலை தடுத்துவிடலாம் என்றால் ஒன்று கட்டவே வாய்ப்பில்லாதவன், அந்த நாளில் ஒன்றை கணக்கு செய்து உணர்வுகளை தனித்துக் கொள்ள முடிவு செய்யும் பொழுது கள்ள உறவு பெருகுமா பெருகாதா ? கள்ள உறவு பாலியல் தொழிலை விட சமூகத்திற்கு நல்லதா ?
நீங்களும் உங்கள் வியாக்கியாணங்களும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூட சரியாக இருந்திருக்குமா என்பது ஐயமே
தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com
மனிதநேயத்தைச் சொல்லித் தராமல் சட்டம் வைத்திருந்தால் எல்லாம் சரி ஆகிவிட வாய்ப்பில்லை, எந்த ஒரு குற்றமும் நிகழும் முன் சட்டம் இருக்கிறதா என்று பார்த்து நிகழ்வதே இல்லை.
கோவியாரின் கருத்தை வழிமொழிகிறேன்
சிவ.உதயகுமார்
//இந்த இறை சட்டத்தின் தனிச் சிறப்பின் காரனமாகவே விபச்சாரம் திருட்டு கொலை போன்ற பாதகச் செயல்கள் அரிதாகக் கானப்படுகின்றது .இதனை வமர்சிக்கும் நாடுகளில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் மலிந்து கானப்படுகின்றது.//
சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும் கிளிகள் மாதிரியே இஸ்லாமியர்கள் எல்லாம் இதையே சொல்லி கொண்டு திரிகிறார்களே மசூதியில் சொல்லி கொடுக்கபட்டதை உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பாவிதனமாக அப்படி உளறி கொண்டு திரிகிறார்களா? அல்லது சவூதி அரேபியாவில் ஷரியாவினால் ரிஸானா கொல்லபட்டத்திற்க்கு சுபி அழுதுவிட்டு வெளியே வந்து நாலு மதா பிள்ளையின் அரபி தாய்க்காகவும்,சவூதி அரேபியாவுக்காகவும் பிரசாரம் செய்தது போல மதகடமை என்பதிற்காக வேண்டும் என்றே பொய் சொல்லி திரிகிறார்களா?
//நீங்களும் உங்கள் வியாக்கியாணங்களும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூட சரியாக இருந்திருக்குமா என்பது ஐயமே//
மிக சரியா சொன்னீர்கள்.
ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் பதிவனாக இருந்த அனுபவத்தில் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளணும்னு ஆவல்.
நம்ம மார்க்க பந்துக்கள் மீது எனக்கு அளவில்லா பாசம் வந்து விட்டது. ஏனெனில் 7 வருஷத்திற்கு முன் பதிவுலகத்தில் இஸ்லாமிய விஷயங்களைப் பற்றியெழுதும்போது மார்க்க பந்துக்கள் மட்டுமே எதிர்த்து எழுதுவார்கள். ஆனால் இன்று இஸ்லாமியப் பதிவுகளுக்கு ‘மோசமான’ காபிர்கள் நிறைய பேச ஆரம்பித்து விட்டார்கள். இதற்குக் காரணம் நம் வஹாபி சகோக்கள் முக்கி .. முனங்கி .. நிறைய எழுதினார்களே அதனால் மட்டுமே இந்த நிலை வந்திருக்கிறது. தாங்கள் யார் என்பதை முழுசா சொல்லிக் கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு ரொம்ப நன்னி!
வஹாபிக்கள் இல்லைன்னா நம்மில் சிலர் நல்ல மார்க்கம் என்று ஒரு வேளை நினைத்திருக்கலாம். அதையெல்லாம் முற்றாகத் துடைத்தெறிந்த
நம்ம மார்க்க பந்துக்கள் வாழ்க ... வளர்க் ...
கருத்துரையிடுக