பின்பற்றுபவர்கள்

11 ஜூன், 2012

அரசு அதிகாரி + கார்ப்ரேட் ஒப்பந்தம் = (பாலியல்) குற்றம் !


தவறான நபர் அரசு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்த நபரால் ஏற்படும் சமூகக் குற்றங்கள் எந்த அளவுக்கு பொது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த குற்ற வழக்கு எடுத்துக்காட்டுகிறது (விவரம் கீழே) , கூடவே கார்ப்ரேட் நிறுவனங்கள் விற்பனைகளின் சாதிக்க எந்த அளவுக்கு கீழ் இறங்குகின்றன என்பதையும் காட்டி இருக்கிறது இந்த வழக்கு. அரசு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளும் அரசியல்வாதிகளின் தலைமையும் மக்களுக்கான சேவை ஆற்றுபவை என்கிற புரிந்துணர்வில் தான் அந்த பதவிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பு, அதற்கு ஈடாக அவர்களுக்கு ஊதியமும், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், இவற்றை பதவி சுகம் என்னும் நோக்கில் அவர்கள் அணுகும் போதும் அவற்றின் பொறுப்புகள் மீதான தனது அனுமதிக்கப்பட்ட ஆளுமைகளை (மாட்டிக் கொள்ளாமல்) தன்னலத்திற்காக பயன்படுத்த முடியும் என்று அவர்கள் (கீழ்) இறங்கும் போது அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆகிறார்கள், அதாவது பதவியை தன் விருப்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது என்கிற குற்றம். அதை அதிகார துஷ்ப்ரோயகம் என்று சொல்லுவார்கள்.

*****

சிங்கப்பூரில் தற்காப்புப் படை அதாவது தீயணைப்பு துறை இயற்கைப் பேரிடர் தற்காப்பு  உள்ளிட்டவைகளை உள்ளடக்கியத் துறையின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர் ஒருவர், தனது துறைக்கு தேவையான பாதுகாப்புச் சாதனங்களை தனியார் நிறுவனங்களிடம் பெற ஒப்பந்த (டென்டர் ) உரிமம் கொடுப்பதற்கு லஞ்சமாக அந்நிறுவனங்களின் விற்பனைப் பிரிவு தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்களிடம் பாலியல் சேவையை பெற்றிருக்கிறார் என்பதே குற்றம். மொத்தம் மூன்று நிறுவனங்களின் விற்பனைப் பிரிவு மேலளாராகப் பணியாற்றியப் பெண்களிடம் தனது இச்சையை தீர்த்துக் கொண்டுருக்கிறார் அந்த அதிகாரி, இவையெல்லாம் அவர் பணியில் இருந்த காலத்தில் பணியிடையே நடந்த பாலியல் குற்றங்கள். இத்தனைக்கும் அந்த நபர் திருமணம் ஆனவராம், வயதும் 52 ஐ கடந்துவிட்டிருக்கிறது. மிகச் சிறந்த அதிகாரியாகப் பணியாற்றி பதவி உயர்வும் பதங்கங்களும் பெற்று அந்த உயர் பதவியை அடைந்திருக்கிறார் என்று சொல்கின்றன செய்திகள்.

இவரது திருமணம் தாண்டியா பாலியல் உணர்வு பேராசைக்கு பலியான பெண்களில் இருவர் 40 வயதைக் கடந்தவர்கள், ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருப்பவர்கள், ஒருவர் மட்டுமே திருமணம் ஆகாதவர், இந்த வழக்கும் விபரமும் வெளியான போது அந்தப் பெண்களின் பெயர்களும் அவர்கள் வேலைப் பார்த்த நிறுவனங்களின் பெயர்களும் வெளியாக அந்தப் பெண்களின் குடும்பங்கள் சிதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, அந்த நிறுவனங்களின் வேலைப் பார்ப்பவர்கள் இதை நம்ப முடியாத செய்தியாக மென்று கொண்டு இருக்கின்றனர்.

சிங்கப்பூரில் லஞ்சமாக பணம் பொருள் பெற்றுக் கொள்வது மாபெரும் குற்றம், மிகக் கடுமையான சிறை தண்டனை உண்டு என்று தெரிந்தும், பொருளாகப் பணமாகப் பெற்றால் தானே குற்றம் என்று நினைத்தாரோ என்னவோ பெண்களையே பயன்படுத்திக் கொள்வது குற்றம் இல்லை என்று நினைத்தாரோ தெரியவில்லை, பொதுவாக உயர்பொறுப்பில் உள்ளவர்கள் தன்னை மீறி தன்னைப் பற்றிய குற்றச் சாட்டு வெளியே சென்றுவிடாது என்று நம்புவார்கள், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் குற்றம் செய்வதற்கு இதுவே அடிப்படைக்காரணம், இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருவர் தகவலை ஊடகம் அல்லது அரசின் அமைச்சுகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்ல அடுத்தடுத்த விசாரணைகள் மூலம் இந்த பாலியல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துள்ளது என்று நினைக்கிறேன், எப்படி அந்த உயர் அலுவலர் சிக்கினார் என்பது ஊடகங்களில் இன்னும் வெளியாகவில்லை.

இந்த குற்றச் செயல் மூலம் தெரியவருவது கடுமையான சட்டங்கள் மட்டுமே குற்ற மனப்பான்மையை முற்றிலும் நீக்கிவிடாது, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் உத்தமர்களாக இருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை, பொது மக்களை விட அவர்களே மிகவும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் ஏனெனில் குற்றம் செய்யவும் அதை மறைக்கவும் அவர்களிடம் அதிகாரங்கள் கையில் இருப்பதால், அவர்கள் மூலமாக குற்றங்கள் நடைபெற போதிய வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக மோசமான கார்ப்ரேட் நிறுவன செயல்பாடுகள், தன் நிறுவன விற்பனை வளர்ச்சிக்கு அதன் பொறுப்பில் பணியாற்றுபவர்களிடம், குறிப்பாக பெண் பெறுப்பாளர்களிடம் அழுத்தம் கொடுத்து சாதிக்கச் சொல்லிவருவது. இதில் ஈடுபட்ட பெண்கள் வெறும் பலியாடுகள் தான், அவர்களால் செய்ய முடியாவிட்டாலும் நிறுவனங்கள் வேறு பெண்களை அதில் ஈடுபடுத்தி சாதித்துக் கொள்ளத்தான் முயலும், மற்றப் பெண்களுக்கு அந்த கொடுமைகள் நடைபெறுவதைவிட தானே இதில் இறங்கிவிடலாம் என்று அப்பெண்கள் நினைத்தார்களோ என்னவோ. எந்த ஒரு உயர்பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணும் இதை விரும்பிச் செய்திருக்க வாய்ப்பில்லை.

நடிகைகள் மீது நாட்டம் கொள்ளும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் போல் இந்த ஆள் உயர் பொறுப்பில் உள்ள பெண்களிடம் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆவல் கொண்டவனாக இருந்திருக்கிறான், அதற்கு தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறான்.

******

சிங்கப்பூர் ஊடகங்களில் கடந்த நான்கு நாட்களாக இது தான் தீயான செய்தி. குறிப்பிட்ட குற்றம் முற்றிலும் நிருபனம் செய்யப்படும் போது குறிப்பிட்ட நபருக்கு பிரம்படிகளும், பத்து ஆண்டு சிறை தண்டனையும் உண்டு, மிரட்சியுடன் பார்த்த காவலர்கள் இனி இந்த நபரை அருவெறுப்பாகப் பார்பார்கள்,  ஒன்று அல்ல மூன்று பெண்களின் பெயர்கள் வரை இதில் அடிப்படுவதால் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்று சொல்லவும் ஒன்றும் இல்லை.




8 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆதியிலிருந்தே இதை அனுபவித்து வருகிற உயர்தட்டு
அதிகாரிகளும் அரசியல் வியாதிகளும் இதைஇதை வரவேற்கும்விதமாகவோ என்னவோ இதற்கு
"இன்டெலெக்சுவல் வீக்னஸ் " என பெயர் கொடுத்துமரியாதை செய்திருக்கிறார்கள்
இப்போது திவாரி அவர்களிடம் ரத்த சாம்பிளைவலுக்கட்டாயமாகத்தானே எடுக்க வேண்டி இருக்கிறது
தெளிவூட்டிப்போகும் அருமையானபதிவு
பகிர்வுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//"இன்டெலெக்சுவல் வீக்னஸ் " என பெயர் கொடுத்துமரியாதை செய்திருக்கிறார்கள்//

"நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, ________ நடிகை பத்தினியும் இல்லை" என்ற புகழ்பெற்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

நன்றி ரமணி

கிரி சொன்னது…

// ஒன்று அல்ல மூன்று பெண்களின் பெயர்கள் வரை இதில் அடிப்படுவதால் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்று சொல்லவும் ஒன்றும் இல்லை.//

இவரே தன் தவறை ஒத்துக்கொண்டதாக செய்திகளில் படித்தேன். இனி ஒழுங்காக நடந்து குடும்பத்தினரின் "நன்மதிப்பை" பெற முயற்சிக்கப்போவதாக கூறி இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

கிரி, அது இவன் இல்லை, அவன் வேறொரு பள்ளி முதல்வராக பணியாற்றியவன், அவன் கைதானது பதின்ம வயதினருடன் ஆன பாலியல் வழக்கு.

எம்.கே.குமார் சொன்னது…

கோவியாரே, சம்பந்தப்பட்ட பெண்களைப் ’பலியாடுகள்’ என்பதாய்ப் புனைவது சரியானது அல்ல என நினைக்கிறேன். இவ்விவகாரத்தில் ஆதி முதல் அந்தம் வரை அவர்களது அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் இவை எதுவுமே சாத்தியம் இல்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியாரே, சம்பந்தப்பட்ட பெண்களைப் ’பலியாடுகள்’ என்பதாய்ப் புனைவது சரியானது அல்ல என நினைக்கிறேன். இவ்விவகாரத்தில் ஆதி முதல் அந்தம் வரை அவர்களது அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் இவை எதுவுமே சாத்தியம் இல்லை!//

பெரிய பதவியை அடைந்தவர்கள் தனது விருப்பத்தின் பெயரில் ஈடுபட்டு இருக்க முடியாது, அவ்வாறு ஈடுபட எத்தனையோ வழிகள் உண்டு, நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டி இருக்கிறது என்றே நினைக்க முடிகிறது, மொத்தம் நான்கு பேராம், அத்தனை பேரும் விரும்பியா அந்த அருவெறுப்பை செய்திருக்க வாய்ப்பில்லை.

Unknown சொன்னது…

1 ) ஆண்களில் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்று மட்டுமே முழங்கப்படுகிறதே, பெண்கள் அணைவரும் யோக்கியமானவர்கள் தானா ?
தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்லகூடிய பெண்கள் இல்லையா? இதையும் தாண்டி இதே காரணத்திற்காக தான் பெற்ற பிள்ளைகளையே கூட கொன்ற பெண்கள் இல்லையா?
2 ) பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பண்புள்ள ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர ஊக்குவிக்கப்படுகிரார்களா? அல்லது ஒழுக்கம்கெட்ட ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர ஊக்குவிக்கப்படுகிரார்களா?
a ) தனது வீட்டில் வெற்று உடம்புடன் திரியும் ஆண் பொது இடங்களில் தன் உடல் மறைத்து நாகரிகமாக உடை அணிகிறான். பிச்சைக்காரன் கூட கந்தை துணி ஆனாலும் தன் உடல் மறைத்து நடமாடுகிறான். ஆனால் இன்றைய பெண் இனமோ கல்லூரிகளில், பொது இடங்களில் தன் உடல் உறுப்புகளில் அதிகபட்சம் எந்த அளவுக்கு அம்பலப்படுத்தி காமத்தை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்பி சமூகத்தை காமகடலாக்கி EXHIBITIONIST - களாக உலா வருகிறார்கள். இதனால் நம் இளைஞர்களான தேசத்தின் தூண்கள் காம நெருப்பால் எரிக்கப்பட்டு இளைஞர்களின் எதிர்காலமும் தேசத்தின் எதிர்காலமும் அழிக்கப்பட்டுவிட்டது.
b) எய்ட்ஸ் நோயை தடுக்க பல கோடி ரூபாயில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இக்கால பெண்கள் சமூகத்தில் அரைநிர்வானமாக உலாவந்து, காம தீயை மூட்டி, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்தின் பலனை எல்லாம் நொடியில் அழித்துவிடுகிரார்கள். காமநோயை பரப்பும் நடமாடும் விளம்பர மாடல்களாக உலா வருகிறார்கள்.
c) பெண்கள் ஆண்களுக்கு பணம் கொடுத்து தங்கள் காம இச்சையை தணித்துக்கொள்ள விலை ஆண்களை தேடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
d) ஊழல் செய்யும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று இக்கால பெண்கள் நாள்தோறும் நிரூபித்து வருகிறார்கள்.
e) ஆண் திருடர்களை போலவே பெண் திருடர்களும் உலா வந்துகொண்டிருப்பதாக பேருந்து நிலையங்களில் காவல் துறையின் ஒலிபெருக்கி எச்சரிக்கை.
f) பெண்கள் வேலைக்கு செல்வது உண்மையில் தனது கணவனுக்கு தோல்கொடுக்கவா ? தங்கள் சுயநலனுக்காகவா ?
ஆண்களுக்கு சமம் பெண்கள் என்று வாயில் மட்டும் கூறிக்கொண்டு, பணிகளும், பதவிகளும் பெண்கள் தங்களுக்கு ஊதியங்களும் சலுகைகளும் ஈட்டிக்கொல்வதற்காக, தங்கள் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகல்தான் என்றும், கடினமான பணிகளை எல்லாம் ஆண்கள்தான் செய்யவேண்டும் என்றும் சாதுரியமாக நலுவிக்கொள்கிறார்கள்.
உண்மையில் அணைத்து பணிகளும் பதவிகளும் மக்களுக்கான சேவையை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவைகளே. பாதுகாப்பிற்கே பஞ்சமில்லாத முப்படைகளுக்கே தலைவரான ஜனாதிபதி முதல் போர்முனையில் துப்பாக்கி ஏந்தி மரணத்தை மலர்மாலையாக எண்ணி ஏற்க்க தயாராக இருக்கும் போர் வீரன் வரை அணைவரும் வெவ்வேறு மக்கள் சேவைகளை நோக்கங்களாக கொண்ட இயந்திரங்களே. இந்த இயந்திரங்கள் இயங்க தேவைப்படும் பெற்றோலை போன்றதே ஊதியங்களும் சலுகைகளும். ஒரு இயந்திரம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை இலக்காக கொள்ளாமல் பெற்றோலை உறிஞ்சுவதை மட்டுமே இலக்காக கொண்டால் அதை எந்த பொறுப்புள்ள மனிதனாவது வைத்திருப்பானா ? மக்களுக்கான சேவை உணர்வு இல்லாமல் சம்பளத்தையும் சலுகைகளையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பெண்களை மக்கள் ஆதரிப்பது சரியா ?
பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பு தான் தேவையே தவிர பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகள் இல்லாத பாதுகாப்பு என்பது சமூகத்தில் தடைசெய்யப்பட்ட போதைபோருட்களை தடையின்றி புழக்கத்தில் விட்டால் ஏற்படும் பேராபத்தை விட பெறும் நாசங்களையே ஏற்படுத்தும்.
ஒழுக்கம் கெட்ட பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கமுள்ள ஆண்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு ஒழுக்கமுள்ள பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கம் கெட்ட ஆண்களை ஒடுக்குவதே அறநெறி செயலாகும்.

Unknown சொன்னது…

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தனது பிள்ளைகளையோ, கணவனையோ கொல்லக்கூடிய பெண்கள் பெருகியுள்ள இந்த காலத்திலும் கூட பெண்களை சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று கூறிவரும் நீர் இக்காலத்து பெண்களின் லட்சணங்களை பற்றி அறியாதவராக இருக்க முடியாது. அத்தகைய பெண்களை உமது வலையில் விழவைக்க தந்திரம் செய்யும் காமுகனாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் கருத்து.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்