பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2012

பசு மாடுகளை கொல்லலாமா ?

பசுமாடு புனிதம் என்று நான் நினைப்பதில்லை, ஆனால் அதன் மீது மிகுந்த மதிப்பு உண்டு, எந்தவித பலனும் பாராமல் நமக்கு பாலை தருவதால் சிலர் அதை தாய்க்கு ஈடாகப் போற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு, பால் சைவமா ? பால் கன்றுக்குத் தானே, அதையே நீங்க திருடி குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களில் எவரும் மாட்டு இறைச்சியையோ, வேறு எந்த விலங்கின் இறைச்சியையோ உண்ணாதவர்கள் இல்லை, பசுவதைப் பற்றி விவாதங்கள் வரும் போது எதிர் தரப்பு 'பசும் பால்' பற்றிய கேள்வியை எழுப்பி பசுவிடம் பால் சுரப்பது கன்று குட்டிக்குத் தானே ? என்று கேட்பர். பசுக் கொலைகள் என்பதில் நான் புனிதத்துவத்தை முன்னிறுத்தி தடுக்க விரும்பியதில்லை, மாறாக அதன் மூலம் பெற்ற பாலிற்கான நன்றிக்கடன் என்ற அளவில் அவற்றை கொல்லாமல் விட்டால் என்ன என்றே கேட்பதுண்டு. பசுவைப் பொருத்த அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுபவை, மற்ற வீட்டு விலங்குகளுக்கு இருப்பது போல் காம்புகளின் எண்ணிக்கையையும் மடியையும் ஒப்பிட, பசுவிடம் சுரக்கும் பால் அதன் இனவிருத்திக்கு மறைமுகமாக உதவுவதற்கு வளர்ப்பவர்களுக்கு இரண்டு காம்பு, கன்றுக்கு இரண்டு காம்பு என்றே அமைந்திருக்கும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு பல காம்புகள் அமைந்திருந்தாலும் அவை ஈனும் குட்டிகளுக்கு அவை சரியாகவே இருக்கும், தவிர அவற்றை பயன்படுத்தி மனிதனுக்கு பழக்கம் இல்லை, உபரியான பால் என்பதை உற்பத்தி செய்வதில் மாடும், அடுத்து ஆடும் உள்ளன, சிலர் ஆட்டின் பாலையும் விரும்பிக் குடிப்பார்கள், அவற்றை ஆடு இழப்பதால் குட்டிகளுக்கும் பெரிய இழப்பு இல்லை, காரணம் கன்று குட்டிகளைப் போல் அன்றி ஆட்டுக் குட்டிகள் பிறந்த அடுத்த நாளே புல்லை சுவைக்கக் கற்றுக் கொள்ளும்,என்பதால் ஆட்டின் பாலைக் கறப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். 

பசு இரண்டு கன்றுகள் போடுவது எப்போதாவது நடைபெறுவது தான், மரங்கள் தன் இனவிருத்திக்கு விதையை மூடியிருக்கும் பழத்தை இலவசமாகக் கொடுப்பது போல் பசுக்களின் பரிணாமத்தில் பால் உற்பத்தி என்பது கன்று அருந்தும் அளவை விட மிகுதியானது, குறிப்பாக மனிதர் உள்ளிட்ட விலங்கினங்கள் அனைத்திற்கும் பலவகையான சுரப்பிகள் உண்டு, குறிப்பிட்ட பருவகாலங்களில், சுரப்பிகள் தூண்டுதலில் வர உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் பொழுது அவை தொடர்ந்து வேலை செய்யும், பால், தேன், மனித உமிழ் நீர் மற்றும் அனைத்து சுரப்பிகளும் அதன் உற்பத்தியை செய்து கொண்டு தான் இருக்கும், எனவே இரத்தம் தான் பாலாக மாறுகிறதா, தேனாக மாறுகிறதா என்பதவிட சுரப்பிகள் சுரப்பதற்கு இரத்தம் எரிபொருளாக பங்காற்றுகிறது என்பதைத் தவிர்த்து, இரத்தம் தான் பாலாக மாறுகிறது எனவே சைவ விரும்பிகள் அதை குடிப்பது தவறு என்பதை நான் புறம் தள்ளுவேன், தீவிர பவுத்த சைவர்கள் இரத்தம் தான் பால் என்று கருத்தில் சோயா பாலைத்தான் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்குகிறார்கள். நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடே என்றாலும் உடலில் அதன் மூலம் உற்பத்தி ஆவது இரத்தம் தான் என்பதால் இது குறித்த கருத்துகளை புறம் தள்ள முடியும். பசு மட்டுமல்ல காளையின் உடல் அமைப்பும் அதன் உறுதியான மேல் கழுத்தும் உழவு செய்வதற்கு அதனைப் பூட்டுவதற்ப உறுதியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு லாபம் தர அவைகளால் முடியவில்லை என்றால் அவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்திருக்கவும் மாட்டார்கள்.

மற்றபடி பசு தெய்வம், என்பதையோ புனிதம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்வதில்லை, பால் கொடுக்கும் உயிர்களில் தாய்க்கு அடுத்து பசு வருவதால் அதன் மீது மதிப்பு உண்டு, எங்கள் வீட்டில் ஒரே வேளையில் நான்கு பசுமாடுகள் வரை வளர்த்திருக்கிறோம், எங்க ஊரில் உடமையாக பசு வைத்திருக்து பால் கறந்து குடிப்பது ஒரு மதிப்பு என்று பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள், வீட்டுக்கு பயன்படுத்தியது போல் 'சாஸ்திரத்திற்கு' என்று கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு விற்பார்கள், கறந்த பாலை அப்படியே கொடுத்தால் நல்லது இல்லையாம், என்கிற முட நம்பிக்கையும் பெற்றோர்களுக்கு உண்டு, சென்ற முறை ஊருக்குச் சென்ற பொழுது மாடுகள் ஒன்றையும் காணும், ஏன் என்று கேட்க, அவற்றை பராமரிக்க முடியவில்லை என்று அம்மா சொன்னாங்க, அம்மாவுக்கு பசு மாடு லஷ்மி என்ற நம்பிக்கை உண்டு, மாடுகளுக்கு லஷ்மி, சரஸ்வதி என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள். இன்றும் கூட வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதை வளக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள், சாணக் கரைசல் ஒரு கிரிமி நாசினி என்றே சொல்லப்படுகிறது, பெரும்பாலும் களி மண் சுவர்களையும் தரையையும் கொண்ட குடிசை வீடுகளில் சாணம் கரைத்து மொழுகுதல் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. அந்த காலத்தில் வீடுகளைச் சுற்றி புதர்கள் இருந்ததால் சாண வாசனை போகும் வரைத ஊர்வன மற்றும் பூச்சி வகைகள் வீட்டுக்குள் வராது என்பதற்காக மாதம் ஒருமுறையேனும் வீட்டை மொழுகுவது பெண்களின் வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தது. பசு மாடு லக்‌ஷிமி என்கிறீர்களே வளர்த்ததில் எதாவது ஒரு பசு மாட்டையாவது அவை வயதாகி சாகும் வரை வளர்த்திருக்கிறீர்களா ? நான்கு ஈற்றுகள் முடிந்த பிறகு வேறு எங்காவது இரண்டாம் ஈற்று என்று விற்றுவிடுவது தானே வழக்கம், வாங்கியவர்கள் அதை கேரளாவுக்கு தானே கொண்டு செல்வார்கள், என்று கேட்டதற்கு அம்மாவிடம் இருந்து வந்த பதில் 'அதோட தலையெழுத்து நாம என்ன செய்ய முடியும் ?' என்பதே, பசுமாடு வளர்ப்பவர்களின் அனைவரும் நிலைகளும் இது தான். இதைப் பார்க்கும் பொழுது பசுவின் மீது கட்டப்படும் புனிதத்தை அதனை நம்புவர்களே மீறிவிடுகிறார்கள் என்னும் போது மற்றவர்கள் பசுவை அடித்து திண்பதில் நாம் என்ன குறை சொல்ல முடியும் ? 

பசுக்களை அடிமாடுகளாக மாற்றுவது அதனை வளர்த்தவர்களின் செயலே அன்றி அதனை வாங்குபவர்களோ, வெட்டி திண்பவர்களோ கிடையாது, கைவிடப் பட்ட மாடுகள் தான் அடிமாடுகள் ஆகின்றன. எருமையும் தானே பால் கொடுக்கிறது, அதனை ஏன் புனிதமாகக் கருதாமல் எமனாகக் கருதுகிறார்கள், நம் மனதில் இருக்கும் கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதனை இழிவு படுத்திப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சியும் தான், தமிழர்களில் பெரும் விழுக்காட்டினர் கருப்பு நிறம் தான் என்பதால் தமிழர்களுக்கு எருமை மாடுகளை எமனாகக் காட்டுவதற்கு தகுதியே கிடையாது.

அந்த காலத்து ஆட்கள் எல்லாவற்றையும் மதித்தார்கள், போற்றினார்கள் என்று பொத்தாம் பொதுவாக பலர் கூறுவதும், நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், பசு புனிதம் என்று நம்பப்பட்ட காலங்களில் சிறுநகரங்களிலும், சிற்றூர்களிலும் (கிராமம்) ஊருக்கு ஒன்றாவது கால்நடை பட்டி உண்டு, இந்தப் பட்டிகள் பெரும்பாலும் ஆடுமாடுகளை அடைத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், அடுத்தவர் வயலில் இறங்கி மேயும் போது அவை பிடிபட்டால் பட்டியில் ஒப்படைக்கப்படும், பட்டி நடைமுறைகள் ஆடுமாடுகளுக்கு உடைமையானவர்கள் அவற்றிற்கு நஷ்ட ஈடு தலையாரியிடம் கொடுத்து அவற்றை விடுவிக்க வேண்டும், விடுவிக்கும் வரை பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுமாடுகள் பட்டினிதான், அப்படி பட்டினி போட்டு அடைத்து வைத்திருப்பது 10 நாட்கள் வரை தொடரும், அதற்குள் உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக ஆக அவற்றை ஏலம் விடுவார்கள், ஏலம் எடுப்பவர்கள் ரூ 20 க்கும் 30க்கும் ஏலம் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வழி தவறி வந்த ஆடுமாடுகள் தான் மீட்பவர் வரும் வரை பட்டினி கிடக்க நேரிடும். இது எவ்வளவு கொடுமை பாருங்க, தான் செய்தது தவறே என்று அறியாத விலங்கினங்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்படும் ஆடுமாடுகளில் ஈனும் நிலையில் உள்ளவைகளும் கூட உண்டு, எங்கள் வீட்டு மாடு ஒரு முறை பின் தொடையில் ஆழமான பேனா கத்தி கீரலுடன் வந்து சேர்ந்தது, எங்கு சென்றது யார் கீறினார்கள் என்றே தெரியவில்லை, பேச இயலாத உயிர்களை முன்பு வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறார்கள், அதற்கு பதிலாக அவற்றை ஒரு நிமிடத்தில் வெட்டி இறைச்சி ஆக்குவது அவற்றிற்கு செய்யும் கொடுமைகளில் மிகவும் குறைவானது தான். முன்னோர்களெல்லாம் தவறு செய்யாதவர்கள் அவர்கள் விலங்குகளிடம் எவ்வளவு அன்பு செலுத்தி இருக்கிறார்கள் பாருங்கள், இன்றைக்கு புளுகிராஸ் அமைப்புகள் பெருகியதால் பட்டிகள் மறைந்துவிட்டன, ஆனாலும் அடிமாட்டு விற்பனைகளுக்கு குறைவே இல்லை.


இன்றைய மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க பசுவிடம் பால் எந்திரம் வழியாகத்தான் கறக்கப்படுகிறது. எந்திரங்கள் உறிஞ்சும் போது மாடுகளுக்கு ஏற்படும் வலி கூடுதல் ஆனதே. 

பசு புனிதம் என்று கூறுவதால் அவற்றை போற்றத் தேவையில்லை, ஆனால் அவற்றின் பலன் பெற்ற நன்றி உடையவர்கள் என்பதால் அதனைப் போற்றுவதில் தவறு இல்லை. பசுவதைகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கையும் வதைப்பது மிகப் பெரிய தவறு அதற்கான உரிமையும் நமக்கு இல்லை. இன்றைக்கு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வெளிநாடுகளில் மாடுகள் பெருகியதே ஓசோன் படலம் விரிந்ததன் காரணமாகச் சொல்கிறார்கள், மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், சாணங்களை உடனடியாக உரமாக மறுபயீனீடு செய்யாமல் அவற்றை தேக்கி வைத்திருப்பதாலும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமலும் கொட்டுவதால் அவற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் அளவும் மிகுதி. மாடுகள் உற்பத்தியை, மாட்டுப் பண்ணைகளை குறைத்துவிட்டால் பனிப் பகுதிகளின் ஆயுளை கூட்டி, கடல் நீரால் உலக அழிவு என்கிற பேரபத்தையும் தள்ளிப் போடலாம். 

மாடுகளை கொன்று திண்பவர்களை விட, செத்தமாடுகளை உண்பவர்கள் தாழ்வானவர்கள் இல்லை, ஏனெனில் மாடுகள் இன்னார் உண்ணுவார்கள் என்பதற்காக இறப்பதில்லை, மாடுகளின் பாலைக் குடிப்பதில் தவறு இல்லை, மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு , அது போல் மாட்டு இறைச்சிகள் உண்பது தவறு இல்லை, ஆனால் தவிர்க்கலாம், போதிய இறைச்சிகாக அதன் உற்பத்தியை கூட்டுவதும் தவறே, அதன் எதிர் பலனை நாம் தான் அனுவிப்போம்.

'பிஸ்மில்லா' என்று சொல்வது கூட மாடுகளைக் கொல்வதன் கட்டுப்பாடுகள் குறித்தது, ஆனால் கறியின் சுவையில் அதனை உரிமையாக்கிக் கொ(ள்)ல்கிறார்கள். விலங்கினங்களை கொல்வது தவறு என்கிற கருத்து இல்லை என்றால் அவற்றை கொல்லும் போது பிஸ்மில்லா சொல்வதும், அவற்றை அப்படி சொல்லப்பட்டதை மட்டுமே 'ஹலால்' என்று சொல்வதும் கூட தேவையற்றது தானே.

52 கருத்துகள்:

Nimal சொன்னது…

நீங்கள் சொல்வது ஒருவகையான twisted logic ஆக தான் இருக்கிறது.

Atmospheric methane can lead to greenhouse effect and global warming, whereas damage to ozone layer is caused by chlorofluorocarbons, or CFCs.

அனேக மிருகங்களின் இறச்சியை உண்பவன் என்கிற வகையில் பசு/மாடு இறச்சியை மட்டும் தவிர்ப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

அதற்கு சொல்லப்படும் காரணங்களும் பெரும்பாலும் (மீத்தேன்/ஓசோன்) சப்பைக்கட்டுகளாகவே தெரிகின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//Nimalaprakasan Skandhakumar கூறியது...
நீங்கள் சொல்வது ஒருவகையான twisted logic ஆக தான் இருக்கிறது.

Atmospheric methane can lead to greenhouse effect and global warming, whereas damage to ozone layer is caused by chlorofluorocarbons, or CFCs.

அனேக மிருகங்களின் இறச்சியை உண்பவன் என்கிற வகையில் பசு/மாடு இறச்சியை மட்டும் தவிர்ப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.

அதற்கு சொல்லப்படும் காரணங்களும் பெரும்பாலும் (மீத்தேன்/ஓசோன்) சப்பைக்கட்டுகளாகவே தெரிகின்றன.//

ஓசோன் படலத்திற்கும் வேட்டு வைக்கும் என்று(ம்) தான் சொல்கிறார்கள்

Methane is important to both tropospheric and stratospheric chemistry, significantly affecting levels of ozone, water vapor, the hydroxyl radical, and numerous other compounds. In addition, methane is currently the second most important greenhouse gas emitted from human activities.

http://www.sciencedirect.com/science/article/pii/S0012825201000629

Kite சொன்னது…

மாடுகளைப் பாதுகாக்க ஜைன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சில சிவன் கோவில்களும் கோ சாலைகளை அமைத்து தொண்டாற்றி வருகிறார்கள். மாடு வளர்த்த எங்கள் உறவினர் ஒரு கட்டத்தில் அது சாத்தியப்படாதபோது ஒரு ஜைன கோ சாலையில் மாட்டை விட்டு அவற்றின் பராமரிப்புக்காக வருடத்திற்கு ஒரு சிறு தொகை செலுத்தி வருகிறார். அவ்வப்போது சென்று மாடுகளையும் பார்த்து விட்டு வருவார்கள். சில மாடுகள் வயதாகி இறந்தபோதும் தகவல் சொல்லி அனுப்பினார்கள். ஆகவே பராமரிக்க முடியாததால் விற்கிறேன் என்பது நொண்டிச் சாக்கு. அடி மாட்டுக்கு கிடைக்கும் விலையை வீணாக்குவானேன் என்ற வியாபார நோக்கம்தான் காரணம்.

Pant belt மிருக தோல்களைத் (leather) தவிர வேறு பொருள்களில் கிடைக்காததால் நான் பல நேரம் belt அணியாமலே கச்சிதமான அளவுள்ள pants அணிந்து சமாளித்து வருகிறேன்.

இறைச்சி உண்ணாமல் இருக்க வேண்டுமென்ற வாதத்தை மற்ற விலங்குகளுக்கும் பயன்படுத்தலாம். பொதுவாக இறைச்சி உண்பவர்கள் மரக்கறி உண்பவர்களைப் பார்த்து தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே என்பார்கள். நெல்லோ காய்கறிகளோ பருவத்தே அறுவடை செய்யாவிட்டால் அழுகிப் போய் விடும். ஒரு விலங்கு இவர்கள் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மேலும் தாவரங்கள் மனிதனிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை அவற்றுக்கு எந்த வசதியையும் அளிக்கவில்லை. ஆனால் ஒரு ஆடோ, மாடோ வாய்ப்பிருந்தால் மனிதனை முட்டித் தள்ளி விட்டு தப்பிக்க வாய்ப்புண்டு. ஆகவே இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள இயல்பான உணவு சைவமே என்பது என் கருத்து. சிந்திக்க தெரிந்த மனித உயிரினம் சைவமே உட்கொள்ள வேண்டும்.

சிலர் சைவம் மட்டும் சாப்பிட்டால் ஆடு, மாடு, கோழிகளின் எண்ணிக்கை பெருகி விடாதா என்பார்கள். அதைச் சமாளிப்பது இயற்கையின் பாடு. மேலும் இவற்றுக்கு உணவளிக்க மனிதன் நிறைய தாவரங்களை வளர்க்க வேண்டி வரும். அதனால் சுற்றுச்சூழல் மேம்படும்.

Kite சொன்னது…

கடவுள் என் முன் வந்தால் என் முதல் வேண்டுதல் அனைவரும் மரக்கறி உண்பவர்களாக மாற வேண்டுமென்பதுதான். மனிதனின் இயற்கை உணவு அசைவம் என்றால் ஏன் அவன் அதை சமைக்காமல் உண்ண முடிவதில்லை?

நிகழ்காலத்தில்... சொன்னது…

இரண்டாவது படத்தை எடுக்க முடியுமா? கோவியாரே

மனச ரொம்ப கஷ்டப்படுத்துது ..

தமிழ்மலர் சொன்னது…

இரண்டாவது படத்தை எடுக்க முடியுமா? கோவியாரே

மனச ரொம்ப கஷ்டப்படுத்துது ..

Yaathoramani.blogspot.com சொன்னது…

இரண்டாவது படத்தில் அதன் விழிகளைப் பார்க்க
மிகுந்த சங்கடமாகத்தான் உள்ளது
ஆயினும் கட்டுரைக்கு அந்த உறுத்தல்
தேவையாகத்தான் உள்ளது

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.இது பல பரிமாணம் உள்ள பிரச்சினை.முதலில் பசு புனிதம் என்னும் மதம் சார்ந்த கருத்தை ஒதுக்கி விடலாம்.

என் போன்ற சகலவித அசைவ உணவு உண்பவர்கள் அது கிடைப்பதால் மட்டுமே நுகர்கிறோம். ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பில் அனைவ‌ருக்கும் தாவ‌ர‌ உண‌வு உற்ப‌த்தி செய்ய‌ முடியுமா?

பசு நமது வேலையாள் போல் .பசுவின் உழைப்பான பாலை பல வருடங்கள் நுகர்கிறோம்.அதன் பிற்கு அதனை கசாப்புக் கடைக்காரர்களிடம் விற்பது தவறுதான்.ஆனால் இது எருதுக்கும் பொருந்தும்.ஆகவே பசுவை கொலவது தவறு எனில் எருதையும் கொல்வது,உண்பது தவறுதான்.

ஆட்டின் பாலையும் குடிக்கிறோம்,கோழியின் முட்டையையும் ஆப்லேட், ஆஃப் பாயில்,ஃபுல் பாயில்....இன்னும் என்ன வகை வகையாக போட்டு உண்கிறோம்.அத‌ற்கும் பொருந்துமா இது?

இப்படி பார்த்தால் பன்றி மட்டுமே இறைச்சிக்காக மட்டுமே பயனுள்ள விலங்கு ஆகும்!!!!!!!!!!!!!.

பசு,எருது இரண்டையும் வளர்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அதை வைத்து பிழைக்கும் ஏழைகளே.அவர்களால் உழைக்க முடியா பசு,எருதுகளை உணவு அளித்து பராமரிக்க முடியாமல் விற்று விடுகிறார்கள்.

ஒரு காப்பகம் போல் கட்டி பசு எருது ப‌ராம‌ரிக்கலாம் என்றல் அதற்கு செலவு செய்வது யார்?.

இக்கேள்விக்கு விடை தெரிந்தால் பிரச்சிஅனி தீர்ந்து விடும்.
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சிலர் சைவம் மட்டும் சாப்பிட்டால் ஆடு, மாடு, கோழிகளின் எண்ணிக்கை பெருகி விடாதா என்பார்கள். அதைச் சமாளிப்பது இயற்கையின் பாடு. மேலும் இவற்றுக்கு உணவளிக்க மனிதன் நிறைய தாவரங்களை வளர்க்க வேண்டி வரும். அதனால் சுற்றுச்சூழல் மேம்படும்.//

சரிதான், ஆனால் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் ஆகும், எனவே சுற்றுச் சூழலுக்கு சிறந்த பாதுகாப்பு என்று கூறமுடியாவிட்டாலும், மாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளைவிட குறைவு தான்.

மிக்க நன்றி ஜெகநாதன்.

கோசாலை பற்றி நண்பர் ஒருவர் கூட சொன்னார், நீங்களும் தெளிவாக அதுபற்றி சொல்லி இருக்கிறீர்கள், மனம் இருப்பவர்களால் தான் செயல்படுத்த முடியும்

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில் சிவா கூறியது...
இரண்டாவது படத்தை எடுக்க முடியுமா? கோவியாரே

மனச ரொம்ப கஷ்டப்படுத்துது ..//

நாமக்கே விருப்பம் இல்லாவிட்டாலும் என்றோ கொல்லப்பட்ட மாட்டின் படம் தானே சிவா, தவிர முள்ளி வாய்க்கால் பிணங்களை ஒப்பிட இது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//இரண்டாவது படத்தை எடுக்க முடியுமா? கோவியாரே

மனச ரொம்ப கஷ்டப்படுத்துது ..//

முள்ளி வாய்க்கால் படுகொலைகளை விட ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Ramani கூறியது...
இரண்டாவது படத்தில் அதன் விழிகளைப் பார்க்க
மிகுந்த சங்கடமாகத்தான் உள்ளது
ஆயினும் கட்டுரைக்கு அந்த உறுத்தல்
தேவையாகத்தான் உள்ளது//

மிக்க நன்றி ரமணி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வணக்கம் சகோ,

நல்ல பதிவு.இது பல பரிமாணம் உள்ள பிரச்சினை.முதலில் பசு புனிதம் என்னும் மதம் சார்ந்த கருத்தை ஒதுக்கி விடலாம்.

என் போன்ற சகலவித அசைவ உணவு உண்பவர்கள் அது கிடைப்பதால் மட்டுமே நுகர்கிறோம். ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பில் அனைவ‌ருக்கும் தாவ‌ர‌ உண‌வு உற்ப‌த்தி செய்ய‌ முடியுமா?

பசு நமது வேலையாள் போல் .பசுவின் உழைப்பான பாலை பல வருடங்கள் நுகர்கிறோம்.அதன் பிற்கு அதனை கசாப்புக் கடைக்காரர்களிடம் விற்பது தவறுதான்.ஆனால் இது எருதுக்கும் பொருந்தும்.ஆகவே பசுவை கொலவது தவறு எனில் எருதையும் கொல்வது,உண்பது தவறுதான்.

ஆட்டின் பாலையும் குடிக்கிறோம்,கோழியின் முட்டையையும் ஆப்லேட், ஆஃப் பாயில்,ஃபுல் பாயில்....இன்னும் என்ன வகை வகையாக போட்டு உண்கிறோம்.அத‌ற்கும் பொருந்துமா இது?

இப்படி பார்த்தால் பன்றி மட்டுமே இறைச்சிக்காக மட்டுமே பயனுள்ள விலங்கு ஆகும்!!!!!!!!!!!!!.

பசு,எருது இரண்டையும் வளர்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அதை வைத்து பிழைக்கும் ஏழைகளே.அவர்களால் உழைக்க முடியா பசு,எருதுகளை உணவு அளித்து பராமரிக்க முடியாமல் விற்று விடுகிறார்கள்.

ஒரு காப்பகம் போல் கட்டி பசு எருது ப‌ராம‌ரிக்கலாம் என்றல் அதற்கு செலவு செய்வது யார்?.

இக்கேள்விக்கு விடை தெரிந்தால் பிரச்சிஅனி தீர்ந்து விடும்.
நன்றி//

சார்வாகன், இங்கு பசு பற்றி எழுதி இருந்தாலும் அது காளைக்கும் பொருந்தும், எருமை மாட்டைக் கூட குறிப்பிட்டு இருக்கிறேன்.

//ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பில் அனைவ‌ருக்கும் தாவ‌ர‌ உண‌வு உற்ப‌த்தி செய்ய‌ முடியுமா? //

ஏன் முடியாது, ஆண்டு ஆண்டுக்கு வீனாகிக் கொட்டப்படும் கோதுமைகள் கேள்விப்பட்டதில்லையா ? த்விர உணவுக்கு எந்த விலங்கும் சிக்காத போது கொரியர்களைப் போல் நாயையும் விட்டு வைக்காமல் அடித்துத் திண்ணலாம் என்றெல்லாம் சொல்ல முடியாது இல்லையா ?

சீனன் பன்றிக் கறி இல்லை என்றால் செத்துப் போய்விடுவான், அதையே இன்னொரு மதம் புறக்கணிக்கிறது, பழிக்கிறது. பிரச்சனை எந்த வகை உணவை உற்பத்தி செய்ய முடியாது என்பது எல்ல, எது தான் பழக்கப்பட்டுள்ளது என்பதே.

ஏற்கனவே கடலை முழுவதும் அரித்துவிட்டார்கள்,. பல நாடுகளில் சுறா உள்ளிட்ட அழிந்துவரும் மீன்களை பிடிக்க தடை உள்ளது, முற்றிலும் அழிந்த பிறகு மனுசனையே அடித்து உண்ணுவார்களா ?

? சொன்னது…

சாப்பிடுவது என்று வந்துவிட்டால் தாவரமென்ன ஆடு என்ன மாடு என்ன எல்லாவற்றையும் வெட்டவேண்டியதுதான். மதரீதியாக பலர் கறி உண்பதில்லை. ஆனால் கடவுள் உயிர்கொலை செய்வதை தடுக்க நினைத்திருந்தால் நம்மை பச்சையத்துடன் படைத்திருந்தால் போதும். நாமும் தாவரங்களை போலவே உணவு தயாரித்திருக்கலாம். ஆனால் கடவுள் நம்மை கொன்று சாப்பிட சொல்கிறார்!

ஆனால் மனிதர்களுக்கு என சில கடமைகள் இருக்கிறதல்லவா? அதுதான் மனிதம் மற்றும் பிற உயிரினங்களின் உணர்வினை புரிந்து கொண்டு செயற்படுதல் போன்றவை. ஆதனால் விலங்குகளை சித்தரவதை செய்யாமல் கொல்வது நன்று. மேலைநாடுகளில் இதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளபடுகின்றன. கொலைகளத்திற்கு வரிசையாக செல்லும் போது முன்னிருக்கும் மாடுகள் சாவதை பின்னால் உள்ள விலங்குகள் பார்த்து பயப்படுவதால் அந்த வரிசை S வடிவில் செல்லுமாறு வடிவமைத்தாராம் ஒரு அமெரிக்க மாது. இதனால் முன்னுள்ள விலங்கினை பின்னுள்ளது பார்க்கவே இயலாது. மேலும் விலங்குகள் மூளையில் மின்னதிர்வு தருவதின் மூலம் கொல்லப்படுகின்றன். மூளை முதலில் சாவதால் அவைகளுக்கு வலி தெரியும் முன் செத்துவிடுகின்றன. இப்படி stunning அல்லாது மற்ற முறைகளில் கொல்வது சரியல்ல. சுவனப்பிரயன் சொல்வதற்கு மாறாக ஹலால் முறையும் கொடூரமானதுதான்.

மேலும் தரணி போற்றும் தமிழகத்தில் வசிப்போர் மாட்டுகறி தவிர்ப்பது நல்லது. 'பன்றி மாமிசத்தில் டினா சோலியம் எனும் புழு இருப்பதால்தான் சாப்பிடக்கூடாது' என எமது மத புத்தகம் கூறுகிறது என சிலர் கூறுவர். ஆனால் மாட்டுக்கறியிலும் இப்படி ஒரு புழு உண்டு - டினா சஜினடா. ஊர் மேயும் பன்றிகளும் மாடுகளும் தமிழகத்தில் சாதாரணம் என்பதினால் கவனம் தேவை. மாமிசத்தை பிரிசரில் உறைய வைத்து பின் நன்றாக வேகவைத்து சாப்பிடவும். ஹோட்டலில் சாப்பிடவே வேண்டாம்.

Kite சொன்னது…

ஒரு காப்பகம் போல் கட்டி பசு எருது ப‌ராம‌ரிக்கலாம் என்றல் அதற்கு செலவு செய்வது யார்?.

இக்கேள்விக்கு விடை தெரிந்தால் பிரச்சிஅனி தீர்ந்து விடும்.
நன்றி//

ஜைனர்கள் மற்றும் சில சிவாலயங்கள் (நான் பார்த்தவரை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்) ஏற்கனவே அதற்கான கட்டமைப்பை உருவாக்கி
இருக்கிறார்கள். என் உறவினர் நான்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் செலுத்திக் கொண்டிருந்தார். அது கூட கட்டாயம் கிடையாது.
ஆனால் நன்கொடையை மட்டும் நம்பி இலவச சேவை என்ற நோக்கில் சென்றால் கோ சாலை நடத்துபவர்களை கேள்வி கேட்க இயலாது என்பதால் அவரும் அந்த சிறிய தொகையை செலுத்தி அதில் பங்கு பெற்று வருகிறார்.

Kite சொன்னது…

பொதுவாக அசைவம் என்பதே அறிவில் நம்மை விட குறைந்த உயிரினங்களுக்கு இப்பூமியில் வாழ இடமில்லை என்ற மனித சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றுகிறது.

ஒரு மனிதனிடம் போய் உனக்கு பணமிருக்கா என்று கேட்டுப் பாருங்கள். அவனுக்கு கோபம் வருவது அதிசயம். ஆனால் உனக்கு அறிவிருக்கா என்று கேட்டுப் பாருங்கள். இந்த கேள்வி பலரை கோபமூட்டும் கேள்வி. மனிதன் அறிவை இவ்வளவு மதிப்பதால்தான் மிருகங்களிடமும் அதை எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது.

? சொன்னது…

//ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பில் அனைவ‌ருக்கும் தாவ‌ர‌ உண‌வு உற்ப‌த்தி செய்ய‌ முடியுமா? //

சார்வாகன், உண்மையில் மாமிச உற்பத்தியே கடினம், ஏனெனில் மிருகங்களுக்கு உணவிட தாவரங்களை வளர்த்து பின் அவற்றை வைத்து விலங்குகளை வளர்ப்பதால் பூமிக்கு அதிக சுமை. அத்தாவரங்களை நாம் சாப்பிடுவது சுலமல்லவா?

Kite சொன்னது…

பொதுவாக அசைவம் என்பதே அறிவில் நம்மை விட குறைந்த உயிரினங்களுக்கு இப்பூமியில் வாழ இடமில்லை என்ற மனித சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றுகிறது. ஒரு மனிதனிடம் போய் உனக்கு பணமிருக்கா என்று கேட்டுப் பாருங்கள். அவனுக்கு கோபம் வருவது அதிசயம். ஆனால் உனக்கு அறிவிருக்கா என்று கேட்டுப் பாருங்கள். இந்த கேள்வி அலறிக் கோபமூட்டும் கேள்வி. மனிதன் அறிவை இவ்வளவு மதிப்பதால்தான் மிருகங்களிடமும் அதை எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது.

? சொன்னது…

இந்தியாவில் பாதிப்பேர் மூன்றுவேளை உணவு இல்லாது அவதிப்படுகையில் கோசாலை கட்டி பணம், உணவு இவற்றை வீணடிப்பது பொறுப்பற்ற செயல் என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்தியாவில் பாதிப்பேர் மூன்றுவேளை உணவு இல்லாது அவதிப்படுகையில் கோசாலை கட்டி பணம், உணவு இவற்றை வீணடிப்பது பொறுப்பற்ற செயல் என நினைக்கிறேன்.//

அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதும், இராணுவ பெருமைக்காகவும் பயன்படுத்தும் பணத்தில் 2 விழுகாடு செலவு செய்தால் கூட ஏழைகள் பசி ஆறிவிடுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

////இந்தியாவில் பாதிப்பேர் மூன்றுவேளை உணவு இல்லாது அவதிப்படுகையில் கோசாலை கட்டி பணம், உணவு இவற்றை வீணடிப்பது பொறுப்பற்ற செயல் என நினைக்கிறேன்.////

பிரதீபா பாட்டிலின் டூர் செலவைவிட கோசாலைகள் செலவு பிடிக்கும் என்று நான் நம்பவில்லை :)

? சொன்னது…

//குறைந்த உயிரினங்களுக்கு இப்பூமியில் வாழ இடமில்லை என்ற மனித சிந்தனையின் வெளிப்பாடு//

இது மனித சிந்தனை அல்ல! இதுதான் இயற்கையின் நியதி. இதை ஒட்டிதான் survival of fittest என அறிவியலார் குறிப்பிடுவர்.

மேலும் விலங்குகளை யாரும் வேட்டையாடி அழிப்பதில்லை. உணவு தேவைக்காகவே வளர்த்து சாப்பிடுகிறோம். புத்த/ஜைன மத வருகைக்கு முன் இந்தியர்கள் மாடு குதிரை என எதையும் விட்டு வைக்காமல் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள். புத்தமதத்தை கடைபிடிக்கும் சீன ஜப்பானியர் இப்போது மாமிசபட்சிணிகள் ஆனால் நாம் சைவ உணவினை கட்டிகிட்டு அழுகிறோம். அதனால்தான் நாம் உடல்ரீதியாக மிக பலவீனமுற்றவாராயிருக்கிறோம்.
சந்தேகமிருந்தால் கால்பந்து ஆடும் பிற நாட்டவர் காலையும் நம்மவர் காலையும் பார்க்கவும். இப்படி நாம் ஆடு மாடு மாதிரி மாறிவிட்டதால்தான் பிரிட்டிஷ்காரனும் அரேபியரும் 800 வருசம் நம்மை மொட்டை அடித்தார்கள்!

கல்வெட்டு சொன்னது…

கோவி,

Q: நீங்கள் சொல்லிய அதே பயன்களை எருமை மாடும் (பசுவை விட அதிக கொழுப்புள்ள பால்) கொடுக்கிறது.

எருமை மாடுகளை ஏன் விட்டுவிட்டீர்கள்? தோல் நிறம் தீண்டாமை ? :-))

*****

ஒட்டகம் என்ற அப்புராணி விலங்கும் பாலைவனத்தில் மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது. இருந்தாலும் சென்னை ஜாம்பஜாரில் வாழும் மனிதர்கள் , இறக்குமதி செய்தாவது கழுதறுத்து கடமை முடிப்பது இல்லையா என்ன?

ஒருவேளை நாம் காட்டில் வாழ்ந்தால் சிங்கம் புலி போன்ற விலங்களுக்கு நாமும் ஒருவேளை உணவே. உணவுச் சங்கிலியில் எந்த ஒரு உயிரியும் தப்ப முடியாது. ஒரு உயிரி மற்ற ஒன்றைச் சாப்பிட்டுத்தான் வாழவேண்டும். உலகின் ஏதாவது ஒரு மூலையில் அனைத்து விலங்குகளும் மனிதனால் சாப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html

.

? சொன்னது…

//பிரதீபா பாட்டிலின் டூர் செலவைவிட கோசாலைகள் செலவு பிடிக்கும் என்று நான் நம்பவில்லை :)//

நானும் நம்பவில்லை :),

ஆனால் இவனுக திருந்த போவதில்லை. அவற்றை அடிமாடாக விற்றால் ஏழைகள் வாங்கி சாப்பிட இயலுமல்லவா?

நிற்க. அந்த பொம்பளை பெயரை கேட்டாலே எரிகிறது. 35 பேருக்கு, 5 வயது குழந்தையை கற்பழித்து கொன்னவனுக்கு உட்பட மன்னிப்பு தந்திருக்கறராம். ஆனால் ராசீவ் கொலைக்கு உடந்தையானவர்களுக்கு இல்லையாம் இவர்களை நேரடி கொலையாளிகளும் இல்லை. எப்பயோ அடுத்த மாதத்துடன் சனி ஒழியும்!

கோவி.கண்ணன் சொன்னது…

// கால்பந்து ஆடும் பிற நாட்டவர் காலையும் நம்மவர் காலையும் பார்க்கவும்.//

மாற்றுக் கருத்து, வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் உள்ள நாடுகளில் தான் கால் பந்தாட்டத்தில் விஞ்சுகிறார்கள், கால் பந்தாட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், வெப்ப நாடுகளில் அவ்வளவு சக்தியை விரயம் செய்ய உடலில் போதிய தெம்பு இல்லாமல் எல்லாம் வியர்வையாகப் போய்விடும் தவிர வெயில் விளையாடும் களைப்பு குளிர்நாடுகளில் விளையாடும் போது ஏற்படுவதில்லை, சென்ற முறை கொரியாவில் உலக கோப்பை நடந்த போது கால்பந்தில் கோலொச்சிய பல நாடுகள் மண்ணை கவ்வியது.

சைவ உணவு சாப்பிடுவதால் யானை பலம் குறைந்ததாக இருக்கிறது, அசைவம் சாப்பிட்டால் இன்னும் பலமாக இருக்கும் என்று சொன்னால் அதில் என்ன உண்மை இருக்கும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நிற்க. அந்த பொம்பளை பெயரை கேட்டாலே எரிகிறது. 35 பேருக்கு, 5 வயது குழந்தையை கற்பழித்து கொன்னவனுக்கு உட்பட மன்னிப்பு தந்திருக்கறராம். ஆனால் ராசீவ் கொலைக்கு உடந்தையானவர்களுக்கு இல்லையாம் இவர்களை நேரடி கொலையாளிகளும் இல்லை. எப்பயோ அடுத்த மாதத்துடன் சனி ஒழியும்!//

காங்கிரஸ் எதிர்ப்பு இல்லாதவர்களுக்கு மன்னிப்பு என்று தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும், மரண தண்டனைக் கூடாது என்கிற கொள்கையில் இருக்கும் நான் இதனை வரவேற்கிறேன். கொலையாளிகளின் குடும்பத்தாரும் மனிதர்கள் தானே அவர்களால் மட்டும் இழப்பை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும், எல்லோரும் மனுநீதி சோழனாக இருக்க முடியுமா ?

? சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி,

Q: நீங்கள் சொல்லிய அதே பயன்களை எருமை மாடும் (பசுவை விட அதிக கொழுப்புள்ள பால்) கொடுக்கிறது.

எருமை மாடுகளை ஏன் விட்டுவிட்டீர்கள்? தோல் நிறம் தீண்டாமை ? :-))

*****

ஒட்டகம் என்ற அப்புராணி விலங்கும் பாலைவனத்தில் மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது. இருந்தாலும் சென்னை ஜாம்பஜாரில் வாழும் மனிதர்கள் , இறக்குமதி செய்தாவது கழுதறுத்து கடமை முடிப்பது இல்லையா என்ன?

ஒருவேளை நாம் காட்டில் வாழ்ந்தால் சிங்கம் புலி போன்ற விலங்களுக்கு நாமும் ஒருவேளை உணவே. உணவுச் சங்கிலியில் எந்த ஒரு உயிரியும் தப்ப முடியாது. ஒரு உயிரி மற்ற ஒன்றைச் சாப்பிட்டுத்தான் வாழவேண்டும். உலகின் ஏதாவது ஒரு மூலையில் அனைத்து விலங்குகளும் மனிதனால் சாப்பிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html//

கல்வெட்டு அண்ணன், ரொம்ப நாள் சென்று பின்னூட்டம் போட்டு இருக்கிங்க, மிக்க நன்றி. எருமையை கொல்லலாம் என்று நான் குறிப்பிடவில்லை, எருமையை ஏன் புனிதமாக கருதமாட்டீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளேன் :)

சைவ மதம் பற்றி கூட இங்கு பேசவில்லை, சைவம் மதம் செய்த அசைவ கொலைகளை நாம் திருஞான சம்பந்தர்காலத்தில் இருந்தே கேள்விப்பட்டுவருகிறோம், தவிர சைவத்தை உள்வாங்கியது என்ற அளவில் பவுத்தமும் சமணமும் முன்னோடியாக இருக்கும் போது அதனை சைவ சமையத்துடன் தொடர்ப்புபடுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

உணவு சங்கிலி என்பது விலங்கின பெருக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு இயற்கை அமைப்பு, மனிதன் தன்னை உணவு சங்கிலிக்குள் இணைத்துக் கொள்ளாத போது உணவு சங்கிலியை நாம் காரணமாகக் காட்டுவது எடுபடாத ஒன்று.

ஒட்டகம் மேட்டரை நானே பலமுறை பார்த்து இருக்கிறேன், கண்ணீர் விடாத குறை தான், காலையில் சிறுவர்கள் அதற்கு உணவெல்லாம் கொடுத்து மகிழ்ந்து கொண்டு இருப்பார்கள், மாலையில் இரத்தமும் சகதியுமாக இருக்கும் இடத்திலும் அதே சிறுவர்கள் தான் நின்று கொண்டு வேடிக்கை பார்பார்கள், மன அளவில் பாதிப்பே இருக்காதா என்று நினைப்பதுண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒட்டகம் என்ற அப்புராணி விலங்கும் பாலைவனத்தில் மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது. இருந்தாலும் சென்னை ஜாம்பஜாரில் வாழும் மனிதர்கள் , இறக்குமதி செய்தாவது கழுதறுத்து கடமை முடிப்பது இல்லையா என்ன?//

இந்த இடுகைக்கு வந்துள்ள இரண்டு மைனஸ் வாக்குகள் கூட ஒட்டக பிரியர்களின் விருப்பமாகத்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன்.:) வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்துடுறாங்க.

? சொன்னது…

பின்னூட்டத்தில் எழுத்துப்பிழை காரணமாக அதை நீக்கினேன் குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

5 வயது குழந்தையை கற்பழிப்பவன் மனநிலை குறைபாடு உள்ளவனாக இருப்பான். அவன் 14 வருசம் கழித்து வெளியே வந்து மீண்டும் அதையே செய்வான். இந்தியாவில் நடக்கும் 3 பாலியல் குற்றத்தில் 2, முன்னாள் குற்றவாளிகளால் செய்யப்படுகிறது என படித்த ஞாபகம். மரணதண்டனையை ஒழித்த பலநாடுகளில் ஆயுள் தண்டனை எனில் ஆயுளுக்கும் சிறை. இந்த 14 வருட தமாசை எடுத்துவிட்டு நிஜ ஆயுள் தந்தால் எனக்கும் சரிதான்.

கல்வெட்டு சொன்னது…

//மனிதன் தன்னை உணவு சங்கிலிக்குள் இணைத்துக் கொள்ளாத போது உணவு சங்கிலியை நாம் காரணமாகக் காட்டுவது எடுபடாத ஒன்று.//

ம்ம்ம்.. valid point கோவி. நான் யோசிக்க மறந்தது.

**
ஆண்டான் அடிமை போல எல்லாவற்றையும் சுவாக செய்யும் பிராணியாகிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சியே. எதியோ நோக்கி பயணித்துக்கொண்டுள்ளோம்.

**

//எருமையை ஏன் புனிதமாக கருதமாட்டீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளேன் //

உண்மை. இருந்தாலும் ...பசுவிடம் உள்ள கரிசனம் எருமையிடம் இல்லாதது போன்று தோன்றியதால் கேள்வி. :‍-))

? சொன்னது…

// வெப்ப நிலை 20 டிகிரிக்கும் கீழ் உள்ள நாடுகளில் தான் கால் பந்தாட்டத்தில் விஞ்சுகிறார்கள்....

சைவ உணவு சாப்பிடுவதால் யானை பலம் குறைந்ததாக இருக்கிறது, அசைவம் சாப்பிட்டால் இன்னும் பலமாக இருக்கும் என்று சொன்னால் அதில் என்ன உண்மை இருக்கும் ?//

கால்பந்து ஒரு உதாரணம்தான் ஐயா! சைவ உணவு உண்ணும் பல இனத்தவர் பலவித உணவுசத்து குறைபாடுகளால் பாதிக்கபடுவதாக தெரிகிறது. இதற்கு காரணம் சைவ உணவு சாப்பிடுபவர் எல்லா சத்தையும் பெற பலவித காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஆனால் ஒப்பீட்டளவில் விலை குறைவான ஒரு மாமிசம் பலவித தேவைகளை தீர்க்கும்.பொதுவாக நான் பார்த்த வரையில் பிற இனங்களோடு ஒப்பிடுகையில், சீனர் உட்பட, இந்தியர் மிகவும் பலவீனமாக தோன்றுகிறார்கள். மனிதன் உயிர் வாழ மாமிசம் தேவையில்லைதான், ஆனால் மாமிச உணவினால் அவனுடைய பலம் அதிகமாகிறது என நம்புகிறேன்.


மேலும் கேதரின் மில்டன் போன்ற மனிதவியலர் ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றிய போது அவன் சைவமாக இருந்திருந்தால் மனித பரிணாமமே நடந்திருக்காது என நம்புகிறார்கள். மனிதனுக்கு கடந்த 10,000 ஆண்டுகளாகத்தான் விவசாயம் செய்ய தெரியும்.பல மில்லியன் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் பலவித சத்துக்களுடன் கூடிய தாவர உணவு கிடைத்திருக்காது என்பதினால் நாஜ்வெஜ் சாப்பிட்டே மனுசன் பிழைத்தானாம். ஆக மனிதன் மாமிச உண்ணியாகவே பிறந்திருக்கறான்! அப்படியெனில் புலி பசித்தால் புல்லை தின்று வாழுமா? (யானைக்கு புலி...சரியா?);-)

நம்பள்கி சொன்னது…

Vit B 12 சைவமா, அசைவமா?
இதை டாய்ரிக்க உதவும், unicellular organism or single-celled organism: சைவமா, அசைவமா?
தயிர் தயாரிக்க உதவும் பாக்டீரியா சைவமா, அசைவமா?
நம்ம வயிற்றில் இருக்கும் நமக்கு தேவையானா பாக்டீரியா சைவமா, அசைவமா?

எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்!

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இந்த உயிரினங்கள்தான் உலகம் முழுவதும் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகள். இவை எந்த நாட்டிலாவது குறைந்து வருகிறதா? வழக்கத்தை விட ஆண்டு தோறும் அதிகரித்தே வருகிறது. உலகில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அசைவம் சாப்பிடுவதால்தான் காய்கறிகளின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. மேலும் பசு மாட்டை வைத்து தனது வருவாயை பெருக்கிய ஏழை விவசாயி அடி மாடாக மாறியவுடன் அதனை விற்று வேறு மாட்டை வாங்கிக் கொள்கிறான். விற்கப்பட்ட பசுவும் அசைவப்பிரியர்களுக்கு உணவாகிறது. இந்த சுழற்சி முறை எங்காவது தடைபட்டால் பாதிப்படைவது பசுவை வைத்து வயிறு வளர்க்கும் ஏழைகள்தான். ஏசி அறையில் கணிணி முன்னால் அமர்ந்து பதிவுகள் எழுதுபவர்களுக்கு அந்த ஏழைகளின் வலி தெரிய வாய்ப்பில்லைதான்.

பெயரில்லா சொன்னது…

நல்லப் பதிவு சகோ. எனக்கும் இப்படியான சிந்தனைகள் எழுவதுண்டு .. ஆடு, மாடு, போன்ற பாலூட்டிகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது என சிந்தித்ததுண்டு ... மீன் போன்றவைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் என்பதால் அவற்றை என்னால் தவிர்க்க இயலாது.

காய்கறிகளா, மாமிசகறிகளா என விவாதித்தால் விவாதம் முடியாது ... !!! ஏனெனில் இன்று காய்கறி சாப்பிடும் பல பிரமாணர்கள் ஒரு காலத்தில் ஆடு, மாடு, குதிரை என ஒருப் பிடிப் பிடித்தவர்களே.. ஆனால் சமணத்தின் தாக்கத்தால் ( பிழைப்புக்காக ) மாற்றிக் கொண்டுவிட்டார்கள் ... !!!

பசு வேதங்களில் புனிதமாக கருதப்படவில்லை என்றே நினைக்கின்றேன். நேர்ந்துவிட்ட பசுக்களையே புனிதமாக கருதியுள்ளனர்.... !!

நல்ல பதிவு சகோ...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏசி அறையில் கணிணி முன்னால் அமர்ந்து பதிவுகள் எழுதுபவர்களுக்கு அந்த ஏழைகளின் வலி தெரிய வாய்ப்பில்லைதான்.//

நண்பர் சுவனப்பிரியன், ஏழைகளுக்காக நீங்கள் விடும் கண்ணீர் கல்லையும் கரைய வைக்கும் என்பதில் ஐயமில்லை, ஆனா பாருங்க மதங்கள் ஏழைகளுக்கு ஒரு மசுரையும் கூட பிடிங்கித் தருவதில்லை என்று அறிந்தும் ஏசி ரூமில் மதப்பிரச்சாரங்கள் தொடர்ந்து நடக்கின்றன, அதற்கு இது பரவாயில்லைன்னு தோணவில்லையா ? வெட்டி திங்காட்டினாலும் வெட்டிக் கொண்டு சாகமலாவது இருப்பாங்க, சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// இக்பால் செல்வன் கூறியது...
நல்லப் பதிவு சகோ. எனக்கும் இப்படியான சிந்தனைகள் எழுவதுண்டு .. ஆடு, மாடு, போன்ற பாலூட்டிகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது என சிந்தித்ததுண்டு ... மீன் போன்றவைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் என்பதால் அவற்றை என்னால் தவிர்க்க இயலாது.

காய்கறிகளா, மாமிசகறிகளா என விவாதித்தால் விவாதம் முடியாது ... !!! ஏனெனில் இன்று காய்கறி சாப்பிடும் பல பிரமாணர்கள் ஒரு காலத்தில் ஆடு, மாடு, குதிரை என ஒருப் பிடிப் பிடித்தவர்களே.. ஆனால் சமணத்தின் தாக்கத்தால் ( பிழைப்புக்காக ) மாற்றிக் கொண்டுவிட்டார்கள் ... !!!

பசு வேதங்களில் புனிதமாக கருதப்படவில்லை என்றே நினைக்கின்றேன். நேர்ந்துவிட்ட பசுக்களையே புனிதமாக கருதியுள்ளனர்.... !!

நல்ல பதிவு சகோ...//

மிக்க நன்றி இக்பால் செல்வன், நான் இந்த இடுகையை சைவ சமய பிரச்சாரமாகவோ, பார்பனர்கள் சைவர்களா என்கிற ரீதியில் எல்லாம் எழுதவில்லை, சக உயிர்களிடத்து அன்பு செலுத்துகிறவர்களால் தான் சக மனிதர்களை நேசிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலும் கேதரின் மில்டன் போன்ற மனிதவியலர் ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றிய போது அவன் சைவமாக இருந்திருந்தால் மனித பரிணாமமே நடந்திருக்காது என நம்புகிறார்கள். மனிதனுக்கு கடந்த 10,000 ஆண்டுகளாகத்தான் விவசாயம் செய்ய தெரியும்.பல மில்லியன் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் பலவித சத்துக்களுடன் கூடிய தாவர உணவு கிடைத்திருக்காது என்பதினால் நாஜ்வெஜ் சாப்பிட்டே மனுசன் பிழைத்தானாம். ஆக மனிதன் மாமிச உண்ணியாகவே பிறந்திருக்கறான்! அப்படியெனில் புலி பசித்தால் புல்லை தின்று வாழுமா? (யானைக்கு புலி...சரியா?);-)//

இப்படியெல்லாம் எழுதும் போது அதை மதச்ப் பிரச்சாரம் செய்பவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ஆண்டுகளைக் குறைத்து எழுதக் கூடாதா ? மனிதன் பரிணாமமே பெறவில்லைன்னு சொல்கிறவர்களுக்கு தரும சங்கடம் ஏற்படுத்துகிறீர்கள்.

Robin சொன்னது…

ஜீவ காருண்யத்தால் அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். பசு மாடு ஒரு சாமி அதனால் அதை உண்ணக்கூடாது என்றிருப்பவர்களே அதிகம்.

நம்பள்கி சொன்னது…

///கோவி.கண்ணன் கூறியது...
இப்படியெல்லாம் எழுதும் போது அதை மதச்ப் பிரச்சாரம் செய்பவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ஆண்டுகளைக் குறைத்து எழுதக் கூடாதா ? மனிதன் பரிணாமமே பெறவில்லைன்னு சொல்கிறவர்களுக்கு தரும சங்கடம் ஏற்படுத்துகிறீர்கள்.///

உங்கள் வாதத்துடன் நான் ஒத்துப் போனாலும், வாதம் என்று வந்தால் இரு பக்கமும் வாதம் செய்வது..எது சரியோ அதை எடுத்துக் கொள்ளவது எனக்கு வழக்கம்.

இலை தழை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த Dinosaur பற்றி உக்கள் கருத்து!

வேகநரி சொன்னது…

நாம் உடல்ரீதியாக மிக பலவீனமானவர்கள் என்பது உண்மை தான். அதற்க்கு சைவ உணவு காரணமல்ல. நாம் போதுமான நல்ல உணவுகள் உண்பதில்லை. போதுமான உணவுகள் சந்ததி சந்ததியாக கிடைக்கல்ல. அரபுகாரன் வந்து மொட்டையக்கும் அளவுக்கு பலவீனமானவங்களா இருந்திருக்கோமே! நினைக்க மனச ரொம்ப கஷ்டப்படுத்துது.
//சீனன் பன்றிக் கறி இல்லை என்றால் செத்துப் போய்விடுவான்//
கோவி வெள்ளைகாரங்களும் ரொட்டியோடு பன்றி இறைச்சி துண்டு காலையுணவு என்று தொடங்கி பன்றி இறைச்சி இல்லை என்றால் அவர்களால் முடியாது. இந்தியாவிலும் மாட்டு இறைச்சிக்கு பதிலா பன்றி இறைச்சியை அறிமுகபடுத்த முயற்ச்சிக்கலாம்.

Kite சொன்னது…

ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இந்த உயிரினங்கள்தான் உலகம் முழுவதும் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகள். இவை எந்த நாட்டிலாவது குறைந்து வருகிறதா? வழக்கத்தை விட ஆண்டு தோறும் அதிகரித்தே வருகிறது. //

பல்வேறு உலகப் போர்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பின்னும் கூட மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. ஆகவே மனிதர்களைக் கொலை செய்வது குற்றமல்ல என்று சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

Kite சொன்னது…

பல்வேறு உலகப் போர்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பின்னும் கூட மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. ஆகவே மனிதர்களைக் கொலை செய்வது குற்றமல்ல என்று சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

கோவி.கண்ணன் சொன்னது…

//பல்வேறு உலகப் போர்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பின்னும் கூட மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. ஆகவே மனிதர்களைக் கொலை செய்வது குற்றமல்ல என்று சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?//

பிரச்சனை அது மட்டுமல்ல, இவங்க திங்கிற மாடுகளின் எண்ணிக்கை உயர்வதால் ஒட்டு மொத்த உலக நலனும் பாதிக்கடும் வெப்ப நிலை உயர்கிறது, பாதிக்கப்படுபவர்களுக்கு இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.

வருண் சொன்னது…

***மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், ***

இதெல்லாம் யாரு சார் சொன்னது? மாட்டுச்சாணத்தில் எம்பூட்டு CH4 அல்லது மெத்தேன் இருக்குனு தெரிய்லை. ஆனால் மெத்தேன் எல்லாம் அவ்வளவு மோசமான வாயு இல்லை.

ஃப்ளூரோ க்ளோரோ கார்பன் (CFC) தான் ரொம்ப மோசம். மாட்டுச்சாணத்தை விட, நம்ம குளிர்சாதனப் பெட்டியைத்தான் ஒழிக்கனும், காரு, பூச்சிக்கொல்லி மருந்து இதையெல்லாம்தான் ஒழிக்கனும்

///The stratospheric ozone layer makes it possible for life to exist by shielding the earth from harmful ultraviolet (UV-B) rays generated from the sun. There is a substantial amount of scientific evidence that suggests man-made compounds such as chlorofluorocarbons (CFCs), hydrofluorocarbons (HCFCs) and halons destroy ozone in the upper atmosphere (stratosphere). Decreased concentration of stratospheric ozone allows increased levels of UV-B rays to reach the earth's surface.

Read more: http://wiki.answers.com/Q/Why_are_CFC_bad_for_the_environment#ixzz1zUDg1rJh///

பசுக்கள் இதுபோல் கெமிக்கல்களை "உருவாக்குவது" கெடயாது.
-------------------

பசுவை என்ன, கரப்பான் பூச்சி, எலி, பாம்பைக் கொல்றதும் தப்புதான் ஆனால் பசுனா நமக்குமட்டும்தான் ரொம்ப செண்டிமெண்ட்ஸ் அதிகமாகுது, வெளிநாட்டுக் காரங்களுக்கெல்லாம் அப்படி இல்லை..நீங்க சொல்றதை அதிசயமா பார்ப்பாங்க. நீங்களும் வெளிநாட்டில், அதாவது பசுவை தெய்வமாக வணங்கும் சூழல்ல பொறக்கலைனா இதையே வேறமாரி உணருவீங்கனு நம்புறேன்.

வருண் சொன்னது…

KOvi: The article you cited in sciencedirect as response to the first question goes like this.

***Methane (CH4) is the most abundant organic trace gas in the atmosphere. In the distant past, variations in natural sources of methane were responsible for trends in atmospheric methane levels recorded in ice cores. Since the 1700s, rapidly growing human activities, particularly in the areas of agriculture, fossil fuel use, and waste disposal, have more than doubled methane emission ***


இதிலே "ஹுமன் ஆக்டிவிட்டிஸ்" னு சொல்றது என்னனா "industrialization and artificial chemical preparation "தான். நிச்சயமாக மாட்டுக்கழிவுகள் கெடையாது. Again, "the waste disposal" என்பது மாட்டுச்சாணம் அல்ல! அவங்க சொல்றது உங்க கார்ல பயன்படுத்துற ஆயில், 3000 மயிலுக்கப்புறம் கருப்பாகி இருக்கும்ல அதுபோல கழிவுகளை!

வருண் சொன்னது…

***நம்பள்கி கூறியது...

Vit B 12 சைவமா, அசைவமா?
இதை டாய்ரிக்க உதவும், unicellular organism or single-celled organism: சைவமா, அசைவமா?
தயிர் தயாரிக்க உதவும் பாக்டீரியா சைவமா, அசைவமா?
நம்ம வயிற்றில் இருக்கும் நமக்கு தேவையானா பாக்டீரியா சைவமா, அசைவமா?

எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்!

சனி, 23 ஜூன், 2012 1:41:00 am GMT+08:00***

உங்க கேள்வி யாருக்கும் புரியலைபோல! :)

ஒரு சைனா நண்பர் சொன்னாரு வெஜிட்டேரியன் மக்களுக்கெல்லாம் வைட்டமின் பி 12 எப்படி கெடைக்கிதுனா, கீரை மற்றும் பச்சை காய்கறியில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பச்சை புழுக்களில் இருந்து கெடைக்கிறதாம். அதாவது இவர்களுக்குத் தெரியாமலே இவர்கள் புழுக்களை தின்று அதில் உள்ள வைட்டமின் பி 12 அவங்களுக்கு தேவையான அளவு கெடைக்கிதாம். நான் கதையெல்லாம் விடவில்லை. சீரியஸான ஆராய்ச்சிக்குறிப்பு பத்தி சொல்றேன். :)

வருண் சொன்னது…

***Jagannath சொன்னது…

பொதுவாக அசைவம் என்பதே அறிவில் நம்மை விட குறைந்த உயிரினங்களுக்கு இப்பூமியில் வாழ இடமில்லை என்ற மனித சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றுகிறது.***

அண்ணே நீங்க அறிவுஜீவி மற்றும் அறியாமையின் உச்சத்திலே இருக்கீங்கபோல. நீங்க சாப்பிடுற மோரு, தயிரு, ப்ரெடு எல்லாத்துலயும் உயிரிகள் இருக்கு. அதையெல்லாம் டெய்லி உயிரோட திங்குறீங்க!

***மனிதனின் இயற்கை உணவு அசைவம் என்றால் ஏன் அவன் அதை சமைக்காமல் உண்ண முடிவதில்லை?***

யாரு சொன்னா சமைக்காமல் உண்ண முடியாதுனு? நீங்களே உயிரோட நெறையா உயிரிகளை டெய்லி தின்னுக்கிட்டுதான் இருக்கீங்க! உங்க அறியாமையால்தான் அதெல்லாம் உங்களுக்கு தெரிய மாட்டேங்குது.

Jeevanantham Paramasamy சொன்னது…

"மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு"

இந்த கருத்து தவறானது. மாடுகளை பாலுக்காக வளர்ப்பது பொழுதுபோக்கு இல்லை, அது அவர்களின் வயிற்று பிழைப்பு. அந்த மாடுகளினால் அவர்களுக்கு உபயோகமில்லாமல் போனால் அதனை கறிக்காக விற்பது தவறில்லை...

வேண்டுமானால், கிழட்டு மாடுகளையெல்லாம் வாங்கி முதியோர் இல்லம் மாதிரி நடத்துங்கள், உங்களை அந்த மாடுகள் வாழ்த்தும்.... :)

நீங்கள் சொல்வதிற்கும், மாட்டுக்கறி சாப்பிடவேண்டாம் என்று சொல்லும் வேத மதத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் சொல்வதிற்கும், மாட்டுக்கறி சாப்பிடவேண்டாம் என்று சொல்லும் வேத மதத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.//

உழைப்பாளிகளின் உடல் உழைப்பை உறிஞ்சுவிட்டு துறத்திவிடு என்று சொல்லும் முதலாளித்துவ தத்துவமும் உங்கள் கருத்துகளுக்கும் கூட வேறுபாடுகள் இல்லை

Jeevanantham Paramasamy சொன்னது…

//உழைப்பாளிகளின் உடல் உழைப்பை உறிஞ்சுவிட்டு துறத்திவிடு என்று சொல்லும் முதலாளித்துவ தத்துவமும் உங்கள் கருத்துகளுக்கும் கூட வேறுபாடுகள் இல்லை//

உங்களுக்கு மாட்டை வளர்க்கும் மனிதனை விட அந்த மாடு தான் பெரியதாக தெரிகிறது. எனக்கு மாடுகளை விட அதனை வளர்க்கும் மனிதனின் வயிறுதான் தெரிகிறது.

பால் தரமுடியாத, உழவுக்கு பயன்படாத மாடுகளை விற்கிறார்கள், நீங்கள் அவற்றை வாங்கி பராமரியுங்கள்.....

மனிதன் தவற மற்ற உயிரினங்களை ஏன் அஃறிணை என்கிறோம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவானந்தம் பரமசாமி கூறியது...

உங்களுக்கு மாட்டை வளர்க்கும் மனிதனை விட அந்த மாடு தான் பெரியதாக தெரிகிறது. எனக்கு மாடுகளை விட அதனை வளர்க்கும் மனிதனின் வயிறுதான் தெரிகிறது. //

உங்களுக்கு தொழிலாளர்களைவிட அவர்களுக்கு கூலி கொடுக்கும் முதலாளிகளின் நலன் தான் தெரிகிறது. சும்மா உட்கார வைத்து கூலி கொடுப்பானா ? என்று கேட்கிறீர்கள், உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்தார்கள் அவர்களுக்கு வேலை இல்லாத நேரத்திலும் கஞ்சிக்கு காசு கொடுக்கலாம் என்பது என்னுடைய வாதம்.

//பால் தரமுடியாத, உழவுக்கு பயன்படாத மாடுகளை விற்கிறார்கள், நீங்கள் அவற்றை வாங்கி பராமரியுங்கள்..... //

பலன் இருக்கும் வரை முதலாளி கூலி கொடுப்பான், அவனுக்கு பலன் இல்லை என்றால் நீங்க கூலி கொடுங்களேன் என்று கேட்கிறீர்கள்.

//மனிதன் தவற மற்ற உயிரினங்களை ஏன் அஃறிணை என்கிறோம்?//

பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தாமல் மனிதத் தன்மை பற்றி பேச எதுவுமே இல்லை, ஏனெனில் உழைக்கும் மனிதனையும் அஃறிணையாகத் தான் பார்க்கிறது முதலாளிகளின் உலகம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்