பின்பற்றுபவர்கள்

11 மே, 2012

ஒபாமா ஆதரவளிக்கும் ஓரின திருமணங்கள் !

ஓரின சேர்க்கை மற்றும் அவர்களிடையே திருமணம் என்பதெல்லாம் முகம் சுளிக்கக் கூடியது என்று நினைக்கும் மதவாதிகள் இதை ரகசியமாகப் படிக்க வேண்டாம். கடவுள் இல்லை என்றாலும் இருக்கு என்றாலும் உலகம் சுற்றுவதைப் போல் நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இத்தகைய நிகழ்வுகள் உங்கள் கருத்தைக் கேட்டு நடப்பதில்லை என்பது தான் உங்களுக்கான தகவல். ஓரின சேர்க்கைப் பற்றி மதவாதிகளுக்கு மதம் சாராத தனிப்பட்ட கருத்து இருக்க முடியாது. நீங்கள் எதிர்த்தாலும், விமர்சனம் செய்தாலும் இத்தகைய நடவடிக்கைகள் நின்று போவதில்லை. தவிர உங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் அத்தகைய உறவுகளில் ரகசியமாக ஈடுபடுகின்றனர் என்பது நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உண்மை.

ஓரின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் அமெரிக்க அதிபர் என்கிற பெயரை ஒபாமா பெற்றிருக்கிறார், அமெரிக்காவில் ஓரின சேர்க்கை சட்டப்படிக் குற்றம் இல்லை என்றாலும் அவர்களிடையே திருமணம் என்பது அமெரிக்காவில் சில மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஒபாமா அவற்றை அங்கீகரிப்பதன் மூலம் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் அவர்களிடையே திருமணம் சட்ட நடைமுறைகளுடன் ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

இழந்த செல்வாக்கை இத்தகைய சீர்திருத்தங்களினால் பெற முடியும் என்று ஒபாமா நினைக்கிறார் என்பதுடன் அவர் சார்ந்த கட்சிக்கு எதிர்கட்சி ஓரின திருமணத்திற்கு எதிர்ப்பு நிலை கொண்டிருப்பதால், ஓரின வாக்களர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெறமுடியும் என்று ஒபாமா நினைக்கிறார் என்கின்றனர் அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள், அமெரிக்கா மற்றும் கிறித்துவ பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஐரோப்பிய நாடுகள் வாடிகன் போப்பை மதிபபர்கள், மற்றபடி போப்பின் வழிகாட்டுதலையெல்லாம் பின்பற்ற மாட்டார்கள், குறிப்பாக மேற்குலக நாடுகளில் தேவாலயங்கள் சிலவற்றில் ஓரின சேர்க்கையாளர்கள் பங்கு தந்தையாக இருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

திருமணம் என்ற உறவே முறையான ஆண் / பெண் இணைப்பு மற்றும் சந்ததிப் பெருக்கத்திற்கான சமூகச் சடங்கு, திருமணத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு என்பது முக்கியம் எனவே திருமணங்கள் சட்டப்பூர்வமானவை, ஆனால் ஓரின சேர்க்கையாளர்களின் பாலியல் களிப்பை இந்த திருமண சடங்கில் சேர்ப்பது அவசியமா ? இவர்களுக்கு இதெல்லாம் எதற்கு ? தன்னுடைய தகாத செயலின் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் தான் இவர்கள் சமூக அங்கீகாரம் வேண்டி திருமணம் செய்து கொள்ள விழைகிறார்களா ? என்றெல்லாம் கேள்விகள் எழும்.

மேலை நாட்டினரைப் பொறுத்த அளவில் திருமணப் பதிவு என்பது பிறரின் ஒப்புதலைப் பெறுவதற்கோ, ஆசிர்வாதம் பெறுவதற்கோ அன்று, அவர்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு குறித்த கவலையால் மேலை நாடுகளில் திருமணங்கள் சட்டப்படி பதிவு செய்யபடுகின்றன. ஓரின சேர்க்கையாளர்களுக்கு என்ன கவலை ஏற்பட்டுவிடப் போகிறது ?

ஓரின சேர்க்கையாளர்களிடையேயும் காதலர்களாக இருப்பவர்கள் உண்டு, ஆண் / பெண் காதல் உறவைப் போலவே அவர்களிடையே தனக்கு விருப்பமானவருடன் மட்டும் நெருக்கமாக உள்ளவர்கள் உண்டு, அவர்கள் ஒன்றாக வசிக்கவும், அவர்களுடையேயான பந்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, சட்ட ரீதியாகத் தொடர அவர்கள் அரசுகளின் அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். ஆண் / பெண் திருமண பந்தமே மண விலக்கு என்று முறியும் போது இவர்களும் நீண்ட நாள் சேர்ந்து வாழுவார்கள் என்பது என்ன நிச்சயம் ? இவர்களுக்கு விருப்பம் இருந்தால் ஓரின சேர்க்கை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் அவர்கள் சேர்ந்து வாழ என்னத் தடை ? 

ஓரின சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதோ, திருமணம் ஆகாமல் பருவமடைந்த ஆண் / பெண் சேர்ந்து வாழ்வதோ மேல் நாடுகளில் தடை இல்லை, இருந்தாலும் திருமண அங்கீகாரமானது சேர்ந்து வாழ்வதற்கான ஒப்பம் எதையும் புதிதாகக்க் கொடுப்பதில்லை,திருமண ஒப்பந்தத்தில் இணையும் இவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் நம்பியுள்ளனர், ஒன்றாக வாழ விரும்புகிறார்கள்  என்பதை பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் சட்ட ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்தவராக ஆகிவிடுவர். குறிப்பாகச் சொன்னால் சொத்து உரிமை. சொத்து உரிமை வழக்குரைஞர் வைத்து உயிலாக எழுதுவதன் மூலம் கிடைக்காதா ? கிடைக்கலாம். ஆனால் அதையெல்லாம் யாரும் முன்கூட்டியே செய்ய விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்கள் கேட்கும் திருமண ஒப்பு  வெறும் சொத்து உரிமை மட்டுமே குறித்தது அல்ல. தன் இணையைப் பொறுத்த அளவில் தனக்கு பின்னால் அல்லது தான் செய்ய வேண்டிய கடமைகள் என்பது சொத்துகள் தாண்டிய இருவருக்குமிடையான பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. முக்கியமாக இவர்களில் ஒருவர் இறந்தால் இறுதிச் சடங்கு செய்பவர் யார் ? அதற்கு இறந்தவர்களின் உறவினர்கள் அனுமதிப்பார்களா ?

ஓரின சேர்க்கையாளர்கள் திருமண ஒப்பம் வேண்டாம் என்று தனக்குப் பிடித்தவருடன் வாழத் துவங்கினால் அவர்களுக்கு தங்களது இணையுடன் வெறும் புரிந்துணர்வு அடைப்படையில் தான் உரிமைகள் இருக்கும், அதுவும் இணை உயிருடன் இருக்கும் வரையில் மட்டுமே. சட்ட ரீதியான திருமணம் செய்து கொண்டால் அவர்கள் ஒருவரை ஒருவர் முழுக்க சார்ந்திருக்கவும், பாதுகாப்பாக இருப்பதற்கு அவை வழி அமைக்கும் என்று நம்புகிறார்கள்.

Marriage benefits should be available to all couples, no matter what. In places where gay marriages are banned, the gay couples are not able to have the same benefits as others. When filing for health care or insurance through a job, gay couples are not able to add each other on. Most loved ones, such as a spouse or a child, in a straight marriage, can make life altering decisions in a hospital if need be. Since gay marriage is not legal, said person’s spouse is not recognized as their next of kin and care is delayed.


Who would be affected if homosexual marriage was legalized? No one. Everyone believes there is one person who is out there to love us. Gay people feel the same way.
http://www.teenink.com/hot_topics/pride_prejudice/article/245702/Gay-Marriage-Why-it-Should-be-Legalized/

ஓரின சேர்க்கையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் ஏன் ?

ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காவிட்டால் அவர்கள் தங்களுக்குள் மறைவாக செயல்படும் சூழலை உருவாக்கி மேலும் பல ஓரின சேர்க்கையாளர்கள் உருவாகிவிடுவார்கள், இரவு நேரப் பேருந்துகளினுள் எந்த ஒரு கையும் உங்கள் தொடையை தடவ முயற்சிக்காது.

ஓரின சேர்க்கை என்றாலே முகம் சுளிக்கும் சமூகத்தில் என்றோ ஒரு நாள் தான் சார்ந்த உறவினர்களுக்கு ரகசிய உறவு தெரியவரும் போது, தலை குனிந்து தற்கொலை செய்து கொள்வார். 

சமுக அங்கீகாரம் கிடைத்தால் விருப்பப்பட்டவர் விருப்பட்டவருடன் சேர்ந்து வாழ்வார், தற்போது அது இல்லாத சூழலில் அவர்களின் மன நிலை சார்ந்த பலருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

மற்றபடி

திருமணத்திற்கு மேம்பட்ட தகாத கள்ள உறவுகள், சிறுவர் / சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவு, பாலியல் தொழிலாளிகளை நாடி உறவு கொள்ளுதல் இவற்றை ஓரின சேர்க்கையாளர்கள் மட்டுமே செய்வதில்லை.

*****

தான் விரும்பும் ஒருவருடன் வாழ்க்கை நடந்த விரும்பும் ஒரு ஓரின சேர்க்கையளான் பல பெண்களை நாடும் ஆண்களுக்கு தாழ்ந்தவன் இல்லை.

உடல் சேர்க்கை அல்லது உடலின்பம் என்பதில் இனப்பெருக்கதிற்கான நோக்கம் எதுவும் இல்லை எனும் போது சேரும் உடல்கள் ஒரே பால்சார்ந்தவை அல்லது இருபால் சார்ந்தவையாக இருப்பதில் என்ன வேறுபாடுகள் உள்ளது ? வெறும் சமூக அங்கீகாரம் மட்டுமே. 

ஆதாம் என்கிற ஆணில் இருந்து பெண்ணை தோற்றுவிக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை உண்மையாக கருதும் போது ஆணுக்கு ஆண் மீதோ பெண்ணுக்கு பெண் மீதோ நாட்டம் இருக்க முடியாது, அது அவர்களின் மனச் சீர்கேடுகள் என்று கருத்து சொல்வது வெறும் கொள்கை சார்ந்த முரண்பாடுகள் தான்.  ஒரு ஆணில் இருந்தே மக்கள் கிளைத்தாக மேற்குலக மதங்கள் சொல்லுகின்றன, அவற்றைப் ஒப்புக் கொள்கிறவர்கள் தான் ஓரின சேர்க்கையை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

ஓரின நாட்டம் என்பது மன நோய் என்பதை மருத்துவ பேராசிரியர்கள் கடுமையாக மறுத்துள்ளனர், அவை தனிமனித விருப்பம் என்றே சொல்லுகிறார்கள், தனிமனித விருப்பம் என்பது அவனுடைய மனச் சூழலை பொறுத்தது, அந்த மனச் சூழலை அவனுக்கு இயற்கையாக ஏற்படுகிறது, எப்படி ஒரு திருநங்கை ஒருவாக்கத்தில் எந்த ஒரு தனிமனித செயலும் காரணமாக அமைதில்லையோ, ஓரின சேர்க்கை நாட்டமென்பதில் ஒரு சிலர் கட்டாயப்படுத்துதல் ஈடுபட்டு பின்னர் தொடர்வது போல் அனைவருமே கட்டாயத்தில் அவ்வாறு ஆனவர்கள் இல்லை, அவர்களின் மனம் சார்ந்த ஈடுபாடாக அவர்கள் விரும்பியே அவ்வாறு இருக்கிறார்கள்.

மதம் இயற்கையை கட்டுப்படுத்த முயன்று தோல்வி அடைகின்றன என்பதிலிருந்தே இயற்கை மீது மதங்களுக்கு எந்த உரிமையும், ஆளுமையும் கிடையாது என்பது தெளிவாகிறது. மிதமிஞ்சிப் போகும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இயற்கையே இவ்வாறு ஓரின நாட்டத்தை மனித மனங்களில் பதிப்பதாகக் கூடக் கொள்ளலாம், முன்பெல்லாம் தொற்றுநோய்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்துப் போவார்கள், தற்பொழுது தட்டுப்பு மருந்துகள் கண்டிபிடிக்கப்பட்ட நிலையில் மக்கள் தொகை கட்டுப்பாடுகளில் இயற்கை திணறிவருகிறது, இந்த திணறிலில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள எந்த நூற்றாண்டிலும் கண்டிபிடிக்க இயலாத கர்பத்தடை சாதனங்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை மனித மூளைக்கு வழங்கியது, அதையும் பாதுக்காப்பான உறவுகள் என்கிற ரீதியில் மட்டுமே பயன்படுத்துவதால் மக்கள் தொகை வளர்ச்சியில் மிகப் பெரிய வீழ்ச்சிகள் இல்லை இருந்தாலும் வளர்ச்சி வேகம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது, உங்களால் ஓரின சேர்க்கையாளார்களை ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும் அவர்களால் மக்கள் தொகை பெருக்கத்தைத் தடுப்பதன் பங்கு இருக்கிறது என்றாவது ஒப்புக் கொள்ளுங்கள். ஓரின சேர்க்கையாளர்கள் பெருகினால் மனித இனம் அழிந்துவிடும் ? அந்தக் கவலையெல்லாம் இயற்கை ஏற்றுக் கொண்டு மாறு செய்யும்.


பின்குறிப்பு : எனக்கு ஓரின சேர்க்கையாளர்கள், அவர்களது ஈடுபாடுகளில் ஒப்புதல் இல்லை, இருந்தாலும் அவர்களின் விருப்பம் குறித்து அவற்றை தவறு என்று சொல்ல எனக்கு உரிமையும் இல்லை. இங்கு எழுதி இருப்பவை புரிந்துணர்வு என்கிற அடிப்படையில் மட்டுமே. ஒரு மதத்தையோ, கடவுளையோ பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் போல் தான் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கருதுகிறேன்.

8 கருத்துகள்:

விழித்துக்கொள் சொன்னது…

thunichchlaana padhivu
nandri thiru kovi kannan avargale
surendran

துளசி கோபால் சொன்னது…

உங்க பின் குறிப்பு ரொம்பச்சரி.

அதே மனநிலைதான் எனக்கும். எல்லாம் அவரவர் சொந்த விருப்பம்.

நடுவில் நாட்டாமையாக, நாம் யார்?

துளசி கோபால் சொன்னது…

சொல்ல விட்டுப்போனது.

நியூஸியில் இவ்வகை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டவையே!

Kite சொன்னது…

அதே மனநிலைதான் எனக்கும். எல்லாம் அவரவர் சொந்த விருப்பம்.//

ஆனால் அவர்கள் அதில் விருப்பமில்லாதவர்களிடம் உறவு கொள்ள முயல்வது அதிகமாக நடப்பதால்தான் அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். இந்தியாவில்
இத்தகையவர்கள் தன்னைப் போன்ற ஆட்களைத் தேடுவதை விட்டு விட்டு சிறுவர்களிடமும், பலவீனமானவர்களிடமும் தங்கள் வேலையைக் காட்டுகின்றனர். அதிலும் பயணங்களின்போது இது போன்ற ஆட்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவு படி இனவிருத்திக்கு வழிவகுக்காத எந்த வித புணர்ச்சியும் ஆயுள் தண்டனை அல்லது பத்து வருடம் மற்றும் அபராதம் விதிக்குமளவு குற்றம். இதில் ஈடுபடுபவர்கள் மனமொப்பி செய்திருந்தால் கூட அது குற்றமே. இந்த கணக்குப்படி ஆண் பெண் உறவில் வழக்கமான புணர்ச்சி தவிர மற்ற விதமான புணர்ச்சி, மிருகங்களோடு உறவு கொள்ளுதல் ஆகியவையும் குற்றம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை சில மாற்றங்களோடு அமல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. மனமொப்பி ஓரினச் சேர்க்கை கொள்வோர், மனமொப்பி ஆண் பெண் உறவில் வேறு விதமான செய்கைகளில் ஈடுபடுவோர் ஆகியோர் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தியது. ஆனால் பதினெட்டு வயதிற்கு கீழுள்ளோருடன் எந்த விதமான புணர்ச்சியும் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. மிருகங்களோடு உறவு கொள்வதும் குற்றமாகவே கருதப்படுகிறது.

இப்பொழுது கூட இந்த சட்டப்படி ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளிடம் ஒருவன் வழக்கமான புணர்ச்சியைத் தவிர வேறு ஏதாவது முறைகளில் உறவு கொள்ள முயன்றால் அவனைத் தண்டிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைப்பு உருவாக்கிக் கொண்டு அதில் உள்ளவர்களிடம் மட்டும் இது போன்ற செய்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாததால்தான் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jagannath கூறியது...
அதே மனநிலைதான் எனக்கும். எல்லாம் அவரவர் சொந்த விருப்பம்.//

ஆனால் அவர்கள் அதில் விருப்பமில்லாதவர்களிடம் உறவு கொள்ள முயல்வது அதிகமாக நடப்பதால்தான் அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். இந்தியாவில்
இத்தகையவர்கள் தன்னைப் போன்ற ஆட்களைத் தேடுவதை விட்டு விட்டு சிறுவர்களிடமும், பலவீனமானவர்களிடமும் தங்கள் வேலையைக் காட்டுகின்றனர். அதிலும் பயணங்களின்போது இது போன்ற ஆட்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
//

பிரச்சனை வெளிப்படையான அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் மறைவாக செயல்படும் சூழலில் இது போல் நடந்து கொள்கிறார்கள். இது போன்ற சிக்கல் எதிர்பால் நாட்டம் உள்ளவர்களிடமும் உள்ளது. எத்தனை ஆண்கள் பாலியல் தொழிலாளியை நாட சமூகத்தின் விருப்பத்தைக் கேட்கிறார்கள் ?

//என்னைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைப்பு உருவாக்கிக் கொண்டு அதில் உள்ளவர்களிடம் மட்டும் இது போன்ற செய்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாததால்தான் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.//

அரசும், சமூகமும் ஆதரவு அளித்தால் அவர்கள் தனிப்பட்ட சமூகமாக வெளிப்படையாக செயல்படுவார்கள். இல்லை என்றால் அவர்களுக்கும் கஷ்டம், ஒருவரின் விருப்பம் தெரியாமல் திருமணம் செய்து வைக்கப்படும் போது திருமணம் செய்து கொண்டவரும் பாதிக்கப்படுகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
சொல்ல விட்டுப்போனது.

நியூஸியில் இவ்வகை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டவையே!//

ஐரோப்பிய மணம் கமழும் ஆஸி - நியூஸியில் இத்தகைய திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதன் காரணம் வெளிப்படையானது. வெள்ளைக்காரர்களின் விரும்பிய உலகம் :)

'பசி'பரமசிவம் சொன்னது…

பாலுணர்வு சார்ந்த இன்பங்களைத் துய்ப்பது, தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கைச் சூழலையும், அவர் விரும்புகிற ‘துய்க்கும் முறை’களையும் பொருத்தது.

ஓர் ஆணும் பெண்ணும், தாம் ‘விரும்புகிற வகையில்’ உடலுறவு கொண்டு மன நிறைவு பெறுகிற வாய்ப்பு உலகில் [அளவிறந்த கட்டுப்பாடுகள் மிகுந்த சமுதாயத்தில்] எத்தனை சதவிகிதம் பேருக்கு வாய்க்கிறது?

1%? [ஒரு சதவிகிதம்?]

ஊஹூம்!!

இரு பாலாரும், இணைந்து சுகம் பெறும் ‘இயற்கை’யோடியைந்த முறைக்கு வாய்ப்பில்லாத போது, பல செயற்கை முறைகளை அவர்கள் கையாளுகிறார்கள்.

ஓரினச் சேர்க்கை அவற்றில் ஒன்று என ஏற்பதில் தவறில்லை. [அது இயற்கையானது என வாதிடுவோரும் இருக்கக் கூடும்].

எது எப்படியோ, எவ்வகையிலும் பிறருக்குப் [சமுதாயத்திற்குப்] பாதிப்பு இல்லாத வகையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதோ, விரும்புகிறவர்கள் திருமணம் செய்துகொள்ள அரசு அனுமதிப்பதோ தவறில்லை என்றே சொல்லலாம்.

தங்களின் இப்பதிவு அனைவரும் ஏற்கத்தக்க நல்ல முயற்சி என்பதே என் கருத்து..

பாராட்டுகள்.

நன்றி.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

அருமையான் பதிவு.ஓரின சேர்க்கை என்பது ஜீன்களின் குறைபாடு என்றும்,இயற்கையின் விளையாட்டுகளுள் ஒன்று என்று அறிவியல் சொலவதை ஏற்கத்தான் வேண்டும் எனில் அவர்கள்க்கும் முறையான வடிகால் வாய்ப்பு அளிப்பதுதான் நியாயம்.

அப்படி செய்யும் பட்சத்தில் இது ஒரு கட்டுக்குள் இருக்கும்.

இப்படி இருப்பது என்பது உண்மை,இது அவர்கள் விரும்பி ஏற்ற பழக்கம் ஒன்றும் அல்ல.

விலங்குகளிலும் ஓரினப் புணர்ச்சி உண்டு என்பதும் இயற்கையின் இன்னும் ஒரு சித்து விளையாட்டு.

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

இயற்கை பிற உயிரினங்களை வழிநடத்தும் அளவிற்கு, பேரறிவு பெற்றதாக தம்மை கருதும் ஹோமோ சேஃபியன்கள் அந்த அளவிற்கு இல்லை.

மதவாதிகளின் எதிர்ப்பு பற்றி கூறினால் அது அவர்கள் இயல்பு அவ்வள்வுதான்.பதிவுக்கு நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்