சென்ற ஏப்ரல் 1, ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணிக்கு விஜய் தொலைகாட்சியை ஓடவிட்டேன், பக்தி திருவிழா நிகழ்ச்சி யாரோ ஒரு வைணவ சாஸ்திரிகள் நன்னா ப்ரசங்கம் பண்ணிண்டே பஜனை பண்ணினா, நேக்கு தான் ஒண்ணும் புரியல, கீழே உள்ளதைப் படிச்சுப் பாருங்கள், நேக்கு புரியலைன்னாலும் நோக்கு புரியும்னு பதிவு செய்து கொஞ்ச கொஞ்சமாக கேட்டு தட்டச்சினேன், ப்ரசங்கம் பண்றச்ச நாலு பேர் நாமம் பொட்டுண்டு முன்னாடி உட்கார்ந்து கேட்டுண்டு இருந்தா மத்தவாளைப் பார்த்தா ப்ராமணாப் போல் தெரியவில்லை, ஆனால் சாஸ்திரிகள் நன்னா ப்ராமண பாஷையில் தான் பேஷினா, கேட்டுண்டுருந்த மத்தவாளுக்கு அர்தம் ஆனதா நேக்கு தெரியாது.
**********
இப்போது பிரஷங்கம்....
"சாதுக்கள்னா யாரு ? தீர்கமான ஆயுளைக் கொடுக்கணும் அப்படிங்கிறது தான் ஒரு பிறவியிலே அவனுக்கு தீர்கமான ஆயுள் கிடைக்கறது, அந்த தீர்கமான ஆயுள் கிடைத்த பிறவியிலும் அவன் புண்ணியம் பன்றான், அந்த பிறவியிலும் அவன் நறையா புண்ணியம் பண்றதைப் பார்த்துட்டு அடுத்தப் பிறவியிலே அவனுக்கு * அக்ஷயமான ஐஷ்வர்யத்தை பஹவான் அனுக்கிரஹம் பண்றான், அந்த அக்ஷ்யமான ஐஷ்வரியத்தை வச்சிண்டு அவன் நறையா புண்ணிய காரியங்களை பண்ணும் பொழுது பஹவான் பார்க்கிறான் அடுத்த ஜென்மாவிலே அவனுக்கு பெரிய எஸ் எஸ் கீர்த்தியைக் கொடுக்கிறான், அந்த கீர்த்தி இருக்கக் கூடிய ஜென்மாவிலேயும் அவன் நறையா புண்ணியங்களை பண்ணிண்டே வர பஹவான் பார்க்கிறான், இவனுக்கு எதக் கொடுத்தாலும் அதற்கு தகுந்த புண்ணியத்தைப் பண்றான் இனிமே இவனுக்கு கொடுக்கறத்துக்கு ஒண்ணுமே இல்லை தீர்கமான ஆயுள் கொடுத்தாச்சு ஆரோக்கியம் கொடுத்தாச்சு அழகு கொடுத்தாச்சு, புகழ் கொடுத்தாச்சு பஹவான்கிட்ட இப்ப கொடுக்கிறதுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு மோ... க்ஷ ...ச...ம். ஆனா சாத்திரங்களெல்லாம் என்ன சொல்றதுண்ணா புண்ணியத்துக்கு பலன் மோக்ஷசம் இல்ல. புண்ணியம் பண்ணினால் நல்ல ஜென்மாக்கள் வரும் அந்த ஜென்மாக்களிலே நாம் சவுக்கியமாக இருக்கலாம். "
***************
அருஞ்சொற்பொருள்
தீர்கமான ஆயுள் - நீண்ட வாழ்நாள்
புண்ணியம் - நற்பலன்
ஐஷ்வர்யம் - செல்வம்
அனுக்கிரஹம் - கிட்டுதல்
அக்ஷ்யமான - குன்றாத
ஜென்மா - பிறவி
எஸ் எஸ் கீர்த்தி - எஸ் எஸ் வாசனா ? ஆவ்வ் ( கீர்த்தி - புகழ்)
மோக்ஷசம் - மேலுலகம்
சவுக்கியம் - உடல் நலம்
* மேலேயும் கீழேயும் திரும்பத் திரும்ப சிலவரிகள் வருவது அவர் பேசியதில் இருந்ததே
***************
"இவனோ புண்ணியத்துக்கு மேல புண்ணியம் பண்ணிண்டே இருக்கான், * அந்த புண்ணியத்துக்கு பலனா தீர்கமான ஆயுள், ஐஷ்வர்யம், ஆரோக்கியம், எஸ் எஸ், கீர்த்தி எல்லாம் கொடுத்தாச்சு, பஹவான் பார்க்கிறான் நம்மகிட்டேர்ந்து இவனுக்கு கொடுக்காதது மோட்சம் தான் ஆனா புண்ணியத்திற்கு பலனா மோக்ஷத்தக் கொடுக்க முடியாது, அதனால பஹவான் என்ன பண்ணறான்னா இவனோட புண்ணியங்களெல்லாம் உயர்ந்த நிலையை அடையும் பொழுது பஹவன் அவனுக்கு சத்சங்கத்தைக் கொடுக்கிறான், அந்த சத்சங்கத்தினால இவன் மோட்சம் வரட்டும் என்று நினைக்கிறான், அதாவது ஒரு ஜீவனுக்கு எப்பொழுது சத்சங்கம் கிடைக்கினும்கிறது ப்ராப்தம் ஆகிறதுன்னா பல கோ(ட்)டி ஜென்மாக்களில் இவன் பண்ணின புண்ணியங்களெல்லாம் பழுத்து ஒரு நிலையை அடையும் பொழுது தான் அவனுக்கு சத்சங்கம் அப்படிங்கிறது ப்ராப்தம் ஆகிறது. சத்சங்கம் என்றால் என்ன ? ஒரு இடத்தில போர்டு இருக்கு வாசல்ல இது சத்சங்கம் னு எழுதி இருக்கிறதால சத்சங்கம் ஆகிடாது, சத்சங்கம் அப்டினுட்டா, பொதுவா அதற்கு ஒரு அர்தம் சொல்லனும் அப்படின்னுட்டா சாதுக்களுடைய சங்கம் .....சத்சங்கம். "
***************
அருஞ்சொற்பொருள்
சத்சங்கம் - பக்தர் / அன்பர் கூட்டம்
ப்ராப்தம் - விதி
***************
"சாதுக்கள்னா யாரு அப்படினுட்டு பாஹவதமே ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒரு பதிலும் சொல்றது 'ஜீவன் முக்தி, க்ரண முக்தி, காய முக்திய சாது மஹான். அந்த சாதுக்கள் மூன்றே மூன்று காரியம் தான் பண்ணிண்டு இருக்காளாம், அந்த மூன்று காரியத்திற்கு அந்நியமா வேற ஒரு காரியம் பண்ணி பழக்கமில்லே தெரியாது, என்ன பண்ணுவா அப்படின்னா ? எங்கேயாவது யாராவது பஹவானைப் பத்தி சொல்லமாட்டாளா ன்னு ஏங்கி தவிச்சி சதா ஷர்வ காலமும் பஹவானுடைய கதைகளையும், குணங்களையும், லீலைகளையும் கேட்டுண்டே இருப்பாளாம், அப்படி சொல்றதுக்கு யாருமே இல்லேன்னு அப்படின்னுட்டா, நான் சொல்றேன் நீ கேட்கிறியான்னு சின்ன குழந்தையை உக்காத்தி வச்சிண்டாவது பஹவானோட பால லீலைகளை அந்த குழந்தைக்கு எந்த அளவுக்கு புரியுமோ அந்த அளவுக்கு சொல்லுவா, சொல்றதுக்கும் ஆளில்லே, கேட்கிறதுக்கும் ஆளில்லே ங்கிற போது 'க்ருஷ்ணா ஹரே கோவிந்தா, ஹரே க்ருஷ்ணா ராமா கிருஷ்ண கோவிந்தா, நந்த நந்தன கோவிந்தா, ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா அப்படின்னு பஜனை பண்ணிண்டே இருப்பாளாம், ஒண்ணு பகவத் மூலம் சொல்றது மற்றொன்று பகவத் மூலம் அழிக்கிறது இல்லேன்னா பஹவானைப் பற்றி பாடிண்டே இருக்கிறது, இந்த மூன்று காரியங்களை மட்டுமே யார் பண்ணிண்டு இருக்காளோ அவா தான் சாதுக்கள்."
(இதுக்குமேல் கேட்கவில்லை தொலைகாட்சியை நிறுத்தியாச்சு)
***************
அருஞ்சொற்பொருள்
பாஹவதம் - சமய நூல்
ப்ராப்தம் - விதி
மஹான் - மூத்த அறிஞர்
சாது - சாமியார்
அந்நியம் - மாற்றாக
காரியம் - செயல்
லீலை - விளையாட்டு
பால - சிறு அகவை
காயம், க்ரணம், ஜீவன் - உடல், பொருள், ஆவி(உயிர்)
சதா ஷர்வ காலமும் - முக்காலமும் அல்லது எப்பொழுதும்
***************
சென்னையில் கைரிக்ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை பாஷையில் பேசுறாங்க, தமிழை கொலை செய்கிறார்கள், கொச்சைப் படுத்துகிறார்கள் என்கிறோம், ஆனால் நானூறு பேர் அமர்ந்திருக்கு ஒரு அவையில் பிரசங்கம் என்ற பெயரில் பார்பன மொழி வழக்கிலேயே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெளியில் பார்பனர்கள் தங்களுக்குள் தவிர்த்து பிறரிடம் பார்பன தமிழ்மொழிப் பேசிவது கிடையாது, எனவே பார்பனர்களுக்கு பொதுவாக பலர் பேசும் பொதுத்தமிழ் உரையாட வராது என்று சொல்வதற்கில்லை, நம்புவதற்கில்லை, ஆனால் எல்லோரும் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் வலிந்தே இவ்வாறு பேசுகிறார்கள், ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது, ஒரு வேளை இழந்து போன பார்பனப் பெருமையை 'ப்ராமணர்' என்னும் கட்டமைப்பாக மீட்டெடுக்கும் முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது, 30 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக தமிழகத்தில் நரேஷ் "ஐயர்" மற்றும் அனுஷா "ஐயர்" போன்ற பெயர்கள் தோன்றி இருக்கின்றன. பார்பனர்கள் தனி அடையாளம் விரும்பும் வரை பார்பன எதிர்ப்புகளை பார்பனர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது பார்பனர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பார்பனர்களும் பார்பன எதிர்ப்புகளை விரும்பியே ஏற்படுத்திக் கொள்கிறார்கள், வெளியில் இருந்து வரும் பார்பனர் எதிர்ப்பு பார்பனர்களை ஒன்று சேர்க்கும் என்றே பார்பனர்கள் நினைக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
23 கருத்துகள்:
இந்த அளவுக்கு ‘அவாள்’ ப்ரஸங்கத்தை நீங்கள் உரைநடை ஆக்கியது மாபெரும் சாதனை!
பேச்சு மொழிக்கான தகுதியை சமற்கிருதம் இழந்துவிட்டாலும் இவர்கள் மதித்துப் போற்றுவது அதைத்தான் [மிகச் சிலரே விதிவிலக்கு].
வேறு வழியில்லாமல் தமிழில் பேசினாலும் அதைக் கொச்சைப் படுத்துவதில் ஆன்ம திருப்தி காணுகிறார்கள். ஓசையில்லாமல் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களின் இந்தப் பதிவு நம்மவர்களுக்குச் சிறிதளவேணும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி கோவி.
இந்த அளவுக்கு ‘அவாள்’ ப்ரஸங்கத்தை நீங்கள் உரைநடை ஆக்கியது மாபெரும் சாதனை!
பேச்சு மொழிக்கான தகுதியை சமற்கிருதம் இழந்துவிட்டாலும் இவர்கள் மதித்துப் போற்றுவது அதைத்தான் [மிகச் சிலரே விதிவிலக்கு].
வேறு வழியில்லாமல் தமிழில் பேசினாலும் அதைக் கொச்சைப் படுத்துவதில் ஆன்ம திருப்தி காணுகிறார்கள். ஓசையில்லாமல் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களின் இந்தப் பதிவு நம்மவர்களுக்குச் சிறிதளவேணும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி கோவி.
//அக்ஷ்யமான - எட்டுவிதமான// எப்படி எட்டு விதமான என்று அறிந்தீர்கள் என்று கூற முடியுமா? அக்ஷ்யமான என்றால் அள்ள அள்ளக் குறையாத என்றுதான் பொருள். உ.ம். அக்ஷ்ய பாத்திரம்.
அவர்கள் எந்த மொழியில் பேசினால் உங்களுக்கு என்ன?சமஸ்கிருதமும் ஒரு இந்திய மொழிதானே?
அவர்களாவது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து பேசுகிறார்கள்.ஆனால் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், ஆங்கிலத்தை தமிழில் கலந்து பேசி தமிழ் மொழியை நீங்கள்தான் கொச்சைப்படுத்துகிறீர்கள்...
இரு சீனர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் தனது தாய் மொழிலயே உரையாடுவார்கள்.அதேபோல் மலாய்காரர்களும்.ஆனால் தமிழர்கள்தான் வெள்ளக்காரன்னுக்கு பிறந்த மாதிரி சொந்த மொழி தவிர்த்து அன்னிய மொழியில் உரையாடுகிறார்கள்.
//அவர்கள் எந்த மொழியில் பேசினால் உங்களுக்கென்ன???
பேசுவதை யார் தடுக்கிறார்கள்? அதுவே தெய்வ பாஷை; மற்றவை [குறிப்பாகத் தமிழ்] நீச பாஷை என்று இழித்துப் பேசியதை...பேசுவதைத்தான் கண்டிக்கிறோம்.
வணக்கம் சகோ,
பேஷ் பேஷ் நன்னா திவ்யமா சொன்னேள் போங்கோ!
எனக்கு சுத்தமாக் ஒன்றும் முதலில் புரியவில்லை!
இதற்கும் அருஞ்சொற்பொருள் கண்டுபிடித்த உமது தமிழ் புலமைக்கு நம் வாழ்த்துக்கள்.
அருஞ்சொற் பொருளுடன் படித்தால் மட்டுமே விள்ங்குகிறது
நன்றி
ஹின்டு கோயிலில் பேசிக்கிறதும் இன்ட லாங்வேஜா
நம்ம பசங்க சிலர் கட்டணம் செலுத்தி சென்னை தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பார்க்கிறர்கள். அவங்களோடு தமிழ் நிகழ்ச்சி பார்த்த போது அதில் வந்த அறிவிப்பாளர் 65 வீதம் இங்கிலிஸ்சும் 35 வீதம் தமிழும் கலந்தே பேசினார்கள். இப்படியெல்லாம் கலந்து பேசினா தான் தமிழகத்தில் மிக உயர்வாக நினைப்பாங்க என்று பசங்க விளக்கம் தந்தார்கள். ஸோ இங்கிலிஸ் தான் தமிழர்களுடைய தெய்வ பாஷை.
முனைவர் பரமசிவம் ஐயா, மிக்க நன்றி
//அமர பாரதி கூறியது...
//அக்ஷ்யமான - எட்டுவிதமான// எப்படி எட்டு விதமான என்று அறிந்தீர்கள் என்று கூற முடியுமா? அக்ஷ்யமான என்றால் அள்ள அள்ளக் குறையாத என்றுதான் பொருள். உ.ம். அக்ஷ்ய பாத்திரம்.//
நீங்கள் சொல்வது சரிதான், நான் அஷ்டம் என்று நினைத்துவிட்டேன் :)
அக்ஷய - குன்றாத
மிக்க நன்றி
//renga கூறியது...
அவர்கள் எந்த மொழியில் பேசினால் உங்களுக்கு என்ன?சமஸ்கிருதமும் ஒரு இந்திய மொழிதானே? //
சமஸ்கிரம் பேசுகிற இடத்தில் தானே சமஸ்கிரதம் பேசனும், அதை ஏன் தமிழ் நிகழ்ச்சி என்று சொல்ல வேண்டும், தவிர பார்பனர்கள் தங்களுக்குள் உரையாடும் வழக்கை நான் தவறு என்று சொல்லவில்லை, அதை ஏன் பொதுவிலும் பேசவேண்டும் ?//
//அவர்களாவது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து பேசுகிறார்கள்.ஆனால் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், ஆங்கிலத்தை தமிழில் கலந்து பேசி தமிழ் மொழியை நீங்கள்தான் கொச்சைப்படுத்துகிறீர்கள்...//
இது பம்மாத்து மேலே பிறவி என்று சொன்னவர் அடுத்த சில வரிகளிலேயே ஜென்மா என்று மாற்றிக் கொண்டு பேசுகிறார், தவிர நான் கொடுத்திருக்கும் அருஞ்சொற்பொருளில் கொடுத்திருக்கும் தமிழ் சொற்கள், சங்கத்தமிழோ, பழந்தமிழோ அல்லது புரியாத சொற்களோ இல்லை, வழக்கில் உள்ளவை தான்.
முதலில் மேலே 'எஸ் எஸ்' கீர்த்தி என்பதற்கு பொருள் சொல்லுங்கள், நான் ஆங்கிலக் கலப்பை வெகுவாகவே பேச்சிலும் குறைத்தே வருகிறேன்.
//இரு சீனர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் தனது தாய் மொழிலயே உரையாடுவார்கள்.அதேபோல் மலாய்காரர்களும்.ஆனால் தமிழர்கள்தான் வெள்ளக்காரன்னுக்கு பிறந்த மாதிரி சொந்த மொழி தவிர்த்து அன்னிய மொழியில் உரையாடுகிறார்கள்.//
இதற்குக் காரணம் ஊடகங்களில் எழுதுபவர்கள் ஆங்கிலம் கலந்து எழுதுவம் பேசுவதாலும் தான், ஊடகங்களில் பெருவாரியானவை யார் வசம் இருக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.
சார்வாகன் ஐயா மிக்க நன்றி
//thequickfox கூறியது...
நம்ம பசங்க சிலர் கட்டணம் செலுத்தி சென்னை தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பார்க்கிறர்கள். அவங்களோடு தமிழ் நிகழ்ச்சி பார்த்த போது அதில் வந்த அறிவிப்பாளர் 65 வீதம் இங்கிலிஸ்சும் 35 வீதம் தமிழும் கலந்தே பேசினார்கள். இப்படியெல்லாம் கலந்து பேசினா தான் தமிழகத்தில் மிக உயர்வாக நினைப்பாங்க என்று பசங்க விளக்கம் தந்தார்கள். ஸோ இங்கிலிஸ் தான் தமிழர்களுடைய தெய்வ பாஷை.//
பஹவானுக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டுவிட்டாள்னா நன்னா இருக்கும்.
//thequickfox கூறியது...
நம்ம பசங்க சிலர் கட்டணம் செலுத்தி சென்னை தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பார்க்கிறர்கள். அவங்களோடு தமிழ் நிகழ்ச்சி பார்த்த போது அதில் வந்த அறிவிப்பாளர் 65 வீதம் இங்கிலிஸ்சும் 35 வீதம் தமிழும் கலந்தே பேசினார்கள். இப்படியெல்லாம் கலந்து பேசினா தான் தமிழகத்தில் மிக உயர்வாக நினைப்பாங்க என்று பசங்க விளக்கம் தந்தார்கள். ஸோ இங்கிலிஸ் தான் தமிழர்களுடைய தெய்வ பாஷை.//
பஹவானுக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டுவிட்டாள்னா நன்னா இருக்கும்.
நீங்கள் 'எஸ் எஸ் கீர்த்தி' என்று புரிந்து கொண்டது 'யசஸ் கீர்த்தி' என்று நினைக்கிறேன். யசஸ், கீர்த்தி இரண்டிற்குமே ஒரே பொருள் தான் - புகழ் - ஒரு பொருட் பன்மொழி.
// குமரன் (Kumaran) கூறியது...
நீங்கள் 'எஸ் எஸ் கீர்த்தி' என்று புரிந்து கொண்டது 'யசஸ் கீர்த்தி' என்று நினைக்கிறேன். யசஸ், கீர்த்தி இரண்டிற்குமே ஒரே பொருள் தான் - புகழ் - ஒரு பொருட் பன்மொழி.//
மிக்க நன்றி குமரன், ஓரளவுக்கு தமிழில் கலந்திருக்கும் வடசொற்களை அறிந்துள்ளேன் என்றே நினைந்திருந்தேன், எனக்கு தெரியவில்லை என்றால் பார்வையாளர்களில் எத்தனை பேர் அதனை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக கீர்த்தி புரிந்திருக்கும்.
:)
கோவி சார்,
இதை முழுசா கேட்டீங்களா?
ரொம்ப பொறுமை தான் அய்யா உங்களுக்கு.
உங்க அருஞ்சொற்பொருள் இல்லாம படிச்சி பார்த்தேன். எனக்கு புரிஞ்சது என்னன்னா, " சாதுக்கள் அதாவது சாமியார்கள் கேக்க ஆளில்லேனா பஜனை பண்ணிண்டே இருப்பார்கள்"
எனக்கு புரிஞ்சதை தான் நான் சொன்னேன்
மன்னிக்கவும்!
எனக்கு புரிஞ்சதை தான் நான் சொன்னேன்
/////renga கூறியது...
அவர்கள் எந்த மொழியில் பேசினால் உங்களுக்கு என்ன?சமஸ்கிருதமும் ஒரு இந்திய மொழிதானே? //
சமஸ்கிரம் பேசுகிற இடத்தில் தானே சமஸ்கிரதம் பேசனும், அதை ஏன் தமிழ் நிகழ்ச்சி என்று சொல்ல வேண்டும், தவிர பார்பனர்கள் தங்களுக்குள் உரையாடும் வழக்கை நான் தவறு என்று சொல்லவில்லை, அதை ஏன் பொதுவிலும் பேசவேண்டும் ?//
இப்படித்தான் பேச வேண்டும் இது தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிக் கொண்டே போனால் எத்தனை டிவி நிகழ்ச்சிகள் (சன் கலைஞர் உட்பட) நடக்கிறது. எத்தனை நிகழ்ச்சிகளில் தங்கிலீஸ் கொலை நடக்கிறது.. அங்கெங்கல்லாம் போய்க் தட்டிக் கேட்கவேண்டியதுதான்... சன்டிவி என்று திமுக காரன் வைத்துக் கொண்டிருக்கிறானே. அதை தட்டிக் கேட்கவேண்டியதுதானே... யாரோ ஒரு உபன்யாசகர் உலகமகா குத்தம் செயததைப் போல பேசுவதுதான் வறட்டு போலி முற்போக்கு.. இந்த வேசம் கட்டுவதுதான் தவறு என்று கண்டிக்க வேண்டியிருக்கிறது
//இப்படித்தான் பேச வேண்டும் இது தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிக் கொண்டே போனால் எத்தனை டிவி நிகழ்ச்சிகள் (சன் கலைஞர் உட்பட) நடக்கிறது. எத்தனை நிகழ்ச்சிகளில் தங்கிலீஸ் கொலை நடக்கிறது.. அங்கெங்கல்லாம் போய்க் தட்டிக் கேட்கவேண்டியதுதான்... சன்டிவி என்று திமுக காரன் வைத்துக் கொண்டிருக்கிறானே. அதை தட்டிக் கேட்கவேண்டியதுதானே... யாரோ ஒரு உபன்யாசகர் உலகமகா குத்தம் செயததைப் போல பேசுவதுதான் வறட்டு போலி முற்போக்கு.. இந்த வேசம் கட்டுவதுதான் தவறு என்று கண்டிக்க வேண்டியிருக்கிறது//
உபன்யாசரோ, உப்புமா கிண்டுவரோ கிடையாது, சொற்பொழிவாளர் அப்படின்னு சொல்லனும்.
தாம்ராஸுக்குள் தாராமாராக அவா பாஷைப் பேசட்டுமே வேண்டாம்னு யார் சொன்னது, பிறருக்கு அந்த உரிமையும் கிடையாது.
பொது நிகழ்சியில் இவ்வாறு பேசுவது கண்டிக்கத் தக்கது என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறிக் கொள்கிறேன், முன்பு ஒருவார்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் கண்டனங்களை எழுதி இருக்கிறேன்.
வந்துண்டு, போயிண்டு, அவா, இவாளை க்கூட தமிழில் பார்பனத் திரி நடைச் சொல் என்று ஏற்றுக் கொள்ளலாம், நல்ல தமிழ் சொல் தெரிந்தே இருக்க, வேண்டுமென்றே வடமொழிக் கலப்பை பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது, எங்காவது அந்தப் பேச்சின் ஒளிப்படம் கிடைத்தால் வாங்கிப் போட்டுக் கேட்கவும், முதலில் பிறவி என்று சொன்னவர் பிறகு ஜென்மா என்றார். நான் கேட்கிறேன், பிறவி என்றால் என்ன ஜென்மா என்றால் என்ன ? பதில் சொல்லிட்டு உங்க பதிலைச் சொல்லுங்கோ.
அவா செய்யும் முழுக்க முழுக்க வடமொழி 'உப்பன்யாசத்தில்' இவ்வாறு தமிழ் கலந்து பேஷினா கேட்பவா சும்மா இருப்பாளா சொல்லுங்கோ.
கோவியண்ணா,
பேஷ் ...பேஷ் ரொம்ப நன்னா இருக்கு காபினா னு ச்சே உபன்யாசம்னா இதுனா உபன்யாசம் என்னமா பேஷ்னார் ,சாட்ஷாத் சரஸ்வதி தேவியே அவாள் நாக்குல வாஸம் செய்றாளோ என்னமோ னு ஸிலாஹிக்காம இப்படிலாம் பேஷலாமோ ,இப்படிலாம் பேஷினா உங்க அடுத்த ஜென்மாவிலயும் தமிழ் பிலாக்கராவே ஜனிச்சு ரொம்ப கஷ்டப்படுவேள் :-))
அட்ரா சக்க சி பி செந்திகுமார் பேட்டி காமெடி கும்மி பாகம் 1
// பிறருக்கு அந்த உரிமையும் கிடையாது.//
அப்படிச் சொல்ல உமக்கு எந்த உரிமை உள்ளது என்று கூறவும்.. அது ஒருதனியார் சேனல்.. தனியார் நிகழ்ச்சி., உம்மிடம் ரிமோட் இருக்கிறது..ஆனால் உரிமை பற்றி பேசுகிறீர்.. இப்படியே இதை நீட்டித்துக் கொண்டால், நாமே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதான் முடியும்.. ஒரு வேளை சுற்றி வளைத்து அதைத்தான் சொல்ல வருகீறீர் என்றால் மேற்கொண்டு பேசுவோம்..
கருத்துரையிடுக