பின்பற்றுபவர்கள்

14 மே, 2010

இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !

பொதுப்புத்திக்காரர்கள் அனைவருமே சொல்லுவது,

* சாதிக் கொடுமையை பார்பனர்கள் செய்கிறார்களா ?

* சாதிக்கலவரங்களில் பார்பனர்கள் ஈடுபடுகிறார்களா ?

* இரட்டை தம்ளருக்கும் 'பிராமணர்களுக்கும்' ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?

பிறகு ஏன் சாதிக் கொடுமைகள் குறித்து சாடுதலில் பார்பனர்களை இழுக்கிறீர்கள் என்று.

பொதுச் சமூகத்தில் சாதிக் கொடுமை என்பது சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவில் நடக்கிறது. பிற்பட்ட சாதியினர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் தலித்துகளைத் தள்ளி வைப்பது பெரும்பான்மை எனும் பெயரில் பிற்பட்ட சாதியினர் செய்யும் வன்கொடுமை. சிறு நகரங்களில் தீண்டாமைச் சுவர், இரட்டை தம்ளர் முறைகளை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமை பெரும்பாலும் அந்த கிராமத்தினரின் பெரும்பான்மையினர் சாதியினரால் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சாதிக்காரர்களுமே அடக்கம். இதையெல்லாம் பாப்பான் செய்கிறானா ? அவனை ஏன் இதில் தேவை இன்றி இழுக்கிறீர்கள் என்பதாக பொதுப் புத்திக் குற்றச் சாட்டு எழு(து)வது வாடிக்கை தான். நினைத்துப் பார்த்தால் சொல்வது ஞாயம் தானே... !. பார்பனர்கள் எல்லோருமே படித்துவிட்டு நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள், 'அவாள் உண்டு, அவா வேலை உண்டுன்னு இருக்கா' அவாளை ஏன் இழுக்கிறேள்...?', என்று நினைக்கத் தோன்றும்.

கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு பார்பனர்கள் காரணமில்லை, அவர்கள் என்றோ அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டார்கள். 'பெருங்காயம் இருந்த டப்பா வாசனைப் போகாது' என்பது போல், பார்பனர்கள் உயரடுக்கில் அமர்ந்து கொண்ட வருண அடுக்கு முற்றிலும் சரிய இன்னும் கூட ஒரு நூற்றாண்டு பிடிக்கும், ஆனால் சாதி எதிர்ப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் 50 ஆண்டுகளிலும் கூட சாதிப் பகைமைகள் ஒழியலாம். பிறப்பு வழியாகப் புகுத்தப்பட்ட ஒன்றை மனிதர்கள் அனைவருக்குமே ஞாபகமறதி என்ற நோய் தாக்கி தாம் எந்த சாதி என்பது கூட மறந்துவிட்டது என்பது ஏற்பட்டால் சாதி உணர்வு முற்றிலும் மறையலாம்.

இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா... என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.

பார்பனர்கள் மிகப் பெரிய அளவிலான தீண்டாமைகளில் தொடர்பில்லாமல் இருக்க அவர்களின் அங்குள்ள எண்ணிக்கை தான் அடிப்படையே அன்றி பிற சாதியினரைப் போல் குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.

பாப்பான் தீண்டாமையை விட்டுவிட்டான், பார்பனர்கள் செய்வது இல்லை, பிராமணர் தீண்டாமையோ, வன்கொடுமையோ செய்வதில்லை போன்றவை பொது புத்தி சார்ந்த புரிதல்கள் மற்றும் பரப்புதல்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாக ஒரு சாரரை ஒதுக்குவதைப் போலவே, ஒட்டுமொத்தமாக பார்பனர் அல்லாத அனைத்து சாதியினரையும் புறக்கணிப்பதன் பெயர் என்ன ?


தாயாரின் சாதிய மனநிலையால் பார்பனர்களுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விட்ட பார்பனரின் மோசமான அனுபவம் ஆங்கிலத்தில் To-Let:Brahmins Only « Maami's Weblog

63 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பார்ப்பான் தீண்டாமை, வன்கொடுமையை விட்டானோ இல்லையோ, எதற்கெடுத்தாலும் பார்ப்பான்,பார்ப்பனீயம் என்று எங்கேயோ கையைக் காட்டிக் கொண்டு நிற்கிற வேலையை நீங்கள் நிறுத்தப் போவதில்லை!

பிராமின்ஸ் ஒன்லி டூலெட் போர்டுகள் இருக்கட்டும்!

சென்னையில் வாடகைக்கு வீடு பார்க்க வருகிற பாச்சிலர்களிடம், நீ இங்கே குடி வந்து தற்கொலை பண்ணிக் கொள்ள மாட்டாய் என்று என்ன நிச்சயம் என்று கேட்கிற வீட்டுக் காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

பார்ப்பான் என்றாலே பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு பார்ப்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வீடு வாடகைக்குக் கொடுப்பதில், முதல் பிரச்சினையே, இந்த நபருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, அப்புறம் வம்புதும்பு இல்லாமல் கிளப்பி விட முடியுமா என்று பார்ப்பதாகத் தான் இருக்கிறது.

புலி வருது புலி வருது என்று நீங்கள் பார்க்கிற இடமெல்லாம் பார்ப்பான் வருகிற மாதிரியே மிரள்வது எதற்காக? உங்களுக்கே இது அலுத்துப் போகவில்லை?!

கோவி.கண்ணன் சொன்னது…

//முதல் பிரச்சினையே, இந்த நபருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, அப்புறம் வம்புதும்பு இல்லாமல் கிளப்பி விட முடியுமா என்று பார்ப்பதாகத் தான் இருக்கிறது.
//

இஃகி இஃகி, வாடகைக்கு வருகிறவன் பார்பான் என்றால் இதெல்லாம் உத்திரவாதம் என்று ஏதேனும் இருக்கா சார்.

ராஜவம்சம் சொன்னது…

வெறும் 2%உள்ள பிராமனுக்கு எப்படி 98%
பயந்தது

இது பிராமணர்கலலையே பரப்பபட்ட மாயயோ

இல்லை அவர்களின் ராஜதந்திரமா

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...

வெறும் 2%உள்ள பிராமனுக்கு எப்படி 98%
பயந்தது

இது பிராமணர்கலலையே பரப்பபட்ட மாயயோ

இல்லை அவர்களின் ராஜதந்திரமா//

ஒரு கட்சிக்கு ஒரு தலைவர், அவருக்கு தொண்டர்கள் அஞ்சுவாங்க. நாங்க தான் சமூகத்தின் உயர்ந்த சாதின்னு சொன்னதன் விளைவு. சாணக்கியத்தனம் என்று அவர்களே அப்படித்தான் சொல்லுவார்கள்

ரவி சொன்னது…

நான் வெஜ் வாசம் பிடிக்காதவர்கள் இருக்கலாம்.

யாசவி சொன்னது…

கோவி கண்ணன்,

இங்கே நீங்கள் சொல்வதில் நான் மாறுபடுகிறேன்.

மற்ற சாதியினர் விளம்பரத்தில் போடுவதில்லையே ஒன்றி அவர்களும் வீடு வாடகை விடுவதில் ஓரளவு சாதி பார்க்கிறார்கள்.

ஒரு முறை மதுரையில் எனக்கு நடந்த அனுபவம். நான் சாதிப்பெயரையோ சாதியையோ சொல்லமாட்டேன் என லட்சியத்துடன் இருந்தேன். ஆனால் அந்த பெரியவர் சாதி தெரிந்தால்தான் வாடகைக்கு கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்றார்.

அவர்கள் டிக்‌ஷனரியில் அவர்கள் சாதியை விட உயர்ந்தது அல்லது சமமான சாதிக்காரர்களுக்கே கொடுக்கிறார்கள்.

இது எல்லோரையும் குறிப்பிடுவது அல்ல. அனால் நிறைய பேர் இவ்வாறு இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...

நான் வெஜ் வாசம் பிடிக்காதவர்கள் இருக்கலாம்.//

சென்னையில் உள்வீடு வாடகைக்கு விடுவது குறைவு. வாடகைக்கு விடுவது மேல்மாடி அல்லது இணைந்த தனித்தனி வீடுகள் தான். ஓனர் எங்கோ இருந்து கொண்டு சொந்தமான பிறவீடுகளை வாடகைக்கு விடுவதும் உண்டு

சென்னைப் போன்ற வீடுகள் நெருக்கமான நகரங்களில் பக்கத்து வீட்டில் சமைப்பது கூட வாடை அடிக்கவே செய்யும். உணவு கடையில் போய் சாப்பிடும் அடிக்காதவாசம், எங்கோ இருந்து கொண்டு வீட்டை வாடகைக்கு விடும் போது அடிக்குமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//யாசவி said...

கோவி கண்ணன்,

இங்கே நீங்கள் சொல்வதில் நான் மாறுபடுகிறேன்.

மற்ற சாதியினர் விளம்பரத்தில் போடுவதில்லையே ஒன்றி அவர்களும் வீடு வாடகை விடுவதில் ஓரளவு சாதி பார்க்கிறார்கள்.

ஒரு முறை மதுரையில் எனக்கு நடந்த அனுபவம். நான் சாதிப்பெயரையோ சாதியையோ சொல்லமாட்டேன் என லட்சியத்துடன் இருந்தேன். ஆனால் அந்த பெரியவர் சாதி தெரிந்தால்தான் வாடகைக்கு கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்றார்.

அவர்கள் டிக்‌ஷனரியில் அவர்கள் சாதியை விட உயர்ந்தது அல்லது சமமான சாதிக்காரர்களுக்கே கொடுக்கிறார்கள்.

இது எல்லோரையும் குறிப்பிடுவது அல்ல. அனால் நிறைய பேர் இவ்வாறு இருக்கிறார்கள்.//

வாடகைக்கு விடுவதிலும் கூட சாதி பார்ப்பது கொடுமைதான்.

சொந்த சாதிக்காரன் எவனுக்கும் எவனும் ஓசியில் வாடகை வீடு கொடுப்பதில்லை. :)

வால்பையன் சொன்னது…

பார்பன கண்டுபிடிபான வர்ணாசிரம அடுக்குகளில் அமர்ந்து கொள்பவர்கள் அனைவரும் பார்பனீயர்கள் தான் என்று கல்வெட்டு அருமையாக சொல்லுவார், அதாவது பார்பனீயம் பிறப்பால் மட்டும் வருவதில்லை, நம்ம அருள் கூட அவரது பார்பனீய எண்ணத்தை அங்கே கொட்டினார்!

இரட்டை குவளைக்கு சமமானது தான் பிராமின்ஸ் ஒன்லி என்று போர்டு மாட்டுதல்!, அவை பார்பனீய சிந்தனையை தான் காட்டுகிறது என எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்!

கிருஷ்ணமூர்த்தி சார்,
அவரா கூப்பிடாட்டி கூட நீங்களா வந்து பெருங்காய வாசம் அடிக்குதா பாருங்கிறிங்களே! என்னமோ போங்க சார்!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/இஃகி இஃகி, வாடகைக்கு வருகிறவன் பார்பான் என்றால் இதெல்லாம் உத்திரவாதம் என்று ஏதேனும் இருக்கா சார்./

பார்ப்பான் என்று மட்டுமில்லை, இங்கே எவருக்குமே எந்த உத்தரவாதமும் இங்கில்லை! எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டது காலமும் இதில் அடக்கம் என்று உணல் பதிவின் தொடக்கத்தில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் படிப்பதே இல்லையா, என்ன!

இப்போது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது கூட, உரசிப் பார்த்து உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே, கால காலமாக எவருடைய வார்த்தைகளையோ இரவல் வாங்கித் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதாக மட்டுமே இருக்கிறது!

தமிழ் அமுதன் சொன்னது…

///குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.///


உண்மைதான்..!

அதே சமயம் ’’முஸ்லிம் ஒன்லி’’ விளம்பரங்களும் அதிகம் காணப்படதான் செய்கிறது..!

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது கூட, உரசிப் பார்த்து உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே//

கூகுள் தேடலில் ஒரு பக்கத்தை மட்டும் தான் இங்கே படமாகப் போட்டு இருக்கிறேன். கூகுளில் காசு கொடுத்து விளம்பரம் போட்டு அதை ஏற்றும் அளவுக்கு என்னிடம் பணவசதி இல்லை என்பதால் தகவல் உண்மை என்று மறுபடியும் கூறிக் கொள்கிறேன்.

நான் தேடிய அதே சொற்களைத் தேடி நீங்க வேண்டுமானால் அதில் இருக்கும் எண்களுக்கு அழைத்து 'அப்படியா ...?'ன்னு கேட்டுப்பாருங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்ப்பான் என்று மட்டுமில்லை, இங்கே எவருக்குமே எந்த உத்தரவாதமும் இங்கில்லை! //

ஆனால் நீங்க தானே சார், அப்படி 'பிராமின்ஸ் ஒன்லி' என்று போடுவதற்கு காரணம் "வீடு வாடகைக்குக் கொடுப்பதில், முதல் பிரச்சினையே, இந்த நபருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, அப்புறம் வம்புதும்பு இல்லாமல் கிளப்பி விட முடியுமா என்று பார்ப்பதாகத் தான் இருக்கிறது." - முதல் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிங்க.

வால்பையன் சொன்னது…

//அதே சமயம் ’’முஸ்லிம் ஒன்லி’’ விளம்பரங்களும் அதிகம் காணப்படதான் செய்கிறது..! //

அதுவும் பார்பனீயம் தான், முஸ்லீம்களுக்கு வீடு தர மாட்டேன் என்பதும் பார்பனீயம் தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//இரட்டை குவளைக்கு சமமானது தான் பிராமின்ஸ் ஒன்லி என்று போர்டு மாட்டுதல்!, அவை பார்பனீய சிந்தனையை தான் காட்டுகிறது என எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்!//

நன்றி தல

KANTHANAAR சொன்னது…

அ்பபடி சொல்ல முடியாது... டெல்லியில் தமிழனுக்கு உடனே வாடகை விட்டுவிடுவதாக கேள்வி ... காரணம் தகராறு செய்ய மாட்டான் .. உடனே காலி பண்ணி விடுவான் போன்ற விசயங்களுக்காக இருக்கலாம் ..

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

வால்ஸ்!

ஏற்கெனெவே சொன்னது தான்!

நான் வெருங்காயமோ, பெருங்காயமோ குறைந்தபட்சம் வெங்காயமோ கூட இல்லை! அதனால், எந்த விதமான லேபிளுக்குள்ளும் என்னை அடக்கி வைத்துக் கொள்வதில்லை.

எந்த ஒரு விஷயத்தையும் அதனதன் தரத்தில் பார்த்துக் கருத்தைச் சொல்வது தான்!

அர்த்தமிருக்கிறதோ இல்லையோ நீங்கள், கோவி போன்ற பதிவர்கள் தொடர்ந்து ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு எழுதும்போது வேறென்ன செய்வதாம்?

சேக்காளி ராஜனிடம் கேட்டிருந்தால் விரலைச் சூப்பிக் கொண்டிருக்கலாமே என்று ஆலோசனை சொல்லியிருப்பாரோ என்னவோ, எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன்! அவ்வளவே!

Radhakrishnan சொன்னது…

என்ன என்னவோ பிரச்சினைகள்... எல்லாம் மாறட்டும்.

Kesavan சொன்னது…

//முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. //

இன்றைய கால கட்டத்தில் பார்பனர்கள் மாமிச உணவு உண்கிறார்கள இல்லையா என்பது பற்றி பேச வரவில்லை . அப்படியே அவர்கள் அந்த உணவை உண்டாலும் வெளியில் உள்ள உணவகங்களில் தான் உண்கிறார்கள். யாரும் வீட்டில் சமைத்து உண்பதில்லை . பிரமன்ர்களுடைய வீட்டில் அசைவ உணவு தயாரிப்பதை தவிர்க்க மட்டுமே இவ்வாறு விளம்பரம் செய்ய படுகிறது. பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் செய்வது பிரமணர்கள் மட்டும் அல்ல. எல்லா வித பிரிவினரும் இந்த மாதிரி விளம்பரம் கொடுகிறார்கள் என்பது நீங்களே அறிந்திருப்பீர்கள்.

mraja1961 சொன்னது…

//ராஜவம்சம் said...

வெறும் 2%உள்ள பிராமனுக்கு எப்படி 98%
பயந்தது//
98% என்பது பால் 2% என்பது விஷம். பாலில் கொஞ்சம் விஷம் சேர்த்தாலே பாலின் தன்மை மாறிவிடும் அதான்சார் பயம். எப்படி?

மகாராஜா

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Kesavan said...

//முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. //

இன்றைய கால கட்டத்தில் பார்பனர்கள் மாமிச உணவு உண்கிறார்கள இல்லையா என்பது பற்றி பேச வரவில்லை . அப்படியே அவர்கள் அந்த உணவை உண்டாலும் வெளியில் உள்ள உணவகங்களில் தான் உண்கிறார்கள். யாரும் வீட்டில் சமைத்து உண்பதில்லை . பிரமன்ர்களுடைய வீட்டில் அசைவ உணவு தயாரிப்பதை தவிர்க்க மட்டுமே இவ்வாறு விளம்பரம் செய்ய படுகிறது. பிராமின்ஸ் ஒன்லி என்று விளம்பரம் செய்வது பிரமணர்கள் மட்டும் அல்ல. எல்லா வித பிரிவினரும் இந்த மாதிரி விளம்பரம் கொடுகிறார்கள் என்பது நீங்களே அறிந்திருப்பீர்கள்.//

உங்கப் பொதுப் புத்தியில் பார்பனர்கள் அல்லாதவர்களில் சைவக் குடும்பமே இல்லையா ? அல்லது பார்பனர்கள் அனைவரும் சைவர்களா ?

அப்படியே சைவக் குடும்பம் தான் வேண்டும் என்றால் 'வெஜிடேரியன் ஒன்லி' என்று போடலாமே சார். வீட்டில் சமைக்காமல் அசைவத்தை பார்சல் வாங்கிவந்து தின்றால் வீட்டில் குடியிருப்பவர் பார்பனர் என்றாலும் வீட்டு உரிமையாளரான பார்பனர் வீட்டைக் காலிப் பண்ணிடச் சொல்லிவிடுவாரா ?

கல்வெட்டு சொன்னது…

.

கோவி,
வர்ணம் என்பது அடிப்படை புற்று நோய். மற்றவை எல்லாம் வெளியில் தெரியும் பல்வேறுபட்ட சிம்டம்கள். ரூட் சாஉச் அழிக்காமல் ச்மிடம்களைச் சாடிப் பயன் இல்லை.

அய்யார் அய்யங்கார்கள்தான் வர்ணம் சொல்லித் தரும் வேதத்தின் காவலர்கள். காஞ்சிப்பெரியவா திரு. சந்திரசேகரன் போன்றவர்கள் வர்ணம் நல்லது அவை காக்கப்படவேண்டும் என்று சொல்லித் திரிபவர்கள்.

இணையத்தில் தங்களை அய்யர் அய்யங்கார்களாக இந்துக்களாக காட்டிக் கொள்ளும் எத்தனைபேர் வர்ணம் போதிக்கும் வேதங்களை கீதையை தீயில் போட்டு கொளுத்தத்தயார்?

அப்படிச் செய்து , வெளிப்படையாய் தெர்ரியும் குடுமி, பூணூல் போன்ற சாதி அடையாளங்களை, சம்பிரதாயங்களை விட்டால் அவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்று சொல்லலாம்.

தனக்குமேல் ஒருவனை ஏற்றுக்கொள்ளும் அடிமைத்தனமும், தனக்கு கீழே ஒருவனை அமர்த்திக் கொள்ளும் ஆண்டைத் தனமும் வர்ணத்தால் வருவது.

இதைச் செய்ய்யும் எல்லாரும் பார்ப்பனர்களே.

கேவலமான வேதத்தை இன்னும் அடைகாப்பதால் மேல் அடுக்கில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் அய்யர் அய்யங்கார்கள் இந்தக் கொடுமைக்கு நேரடிப் பொறுப்பு இல்லாவிட்டாலும் தார்மீகப் பொறுப்பு உள்ளது.


***

சைவம் பற்றியும் பார்ப்பனீயம் பற்றியும் கரிகரன் என்பவருடன் நடந்த உரையாடல் பருக்கு உதவும்.

சனாதான தருமத்தை பிராச்சாரம் செய்பவர்களை பார்ப்பு என்று அழைப்பது தவறா..?
http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_20.html

கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html


.

kavirimainthan சொன்னது…

கண்ணன்,

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்
- உங்கள் எழுத்துக்கள் ஒரு தலப்பட்சமாக
போய்க்கொண்டிருப்பது - நீங்கள் விதண்டாவாதம் செய்துகொண்டு இருப்பது
உங்களுக்கே புரியலாம் !

தந்தை பெரியாரின் உழைப்புக்கு பலனே
இல்லாதது போல் நீங்கள் எழுதிக்கொண்டு
இருக்கிறீர்கள்.

பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன்னர்
பார்த்த சமுதாயம் அல்ல இனறு நாம் வாழும்
சமுதாயம். நிறைய பேர் மாறி விட்டார்கள்.
சமுதாயம் ந்றைய மாறி விட்டது.

பெரியார் அன்று தேவை
கருதி சொன்னதை நீங்கள் இன்று தேவை
இல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே
நான் கருதுகிறேன்.

இன்றைய நிலையில் பார்ப்பனர்கள்
செத்த பாம்பு நிலையில் இருப்பவர்கள்.

நாம் அடிக்க வேண்டிய பாம்புகள் -
பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும்,
மதுரைக்கு தெற்கேயும் உள்ளன.
நாம் உண்மையிலேயே பெரியாரை
பின்பற்றுபவர்களாக இருந்தால் நாம்
தாக்க வேண்டிய இடங்கள் இருப்பது
மதுரைக்கு தெற்கே தான்.

அதைக்குறி வைப்போம். எதிரியைத் தான்
தாக்க வேண்டும். சரணடைந்து, செயலற்று
இருப்பவரை அல்ல !

பதிலுக்கு பதில் எழுத வேண்டும் என்ற
நோக்கத்தில் அல்லாமல் இதை நீங்கள்
வேறுபட்ட, மாறுபட்ட கோணத்தில்
அணுகினால் மகிழ்வேன்.

அன்புடன் - காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

கல்வெட்டு அண்ணா,

மேலே செத்த பாம்பு என்று குறிப்பிட்டுள்ள பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுங்க.

:)

kavirimainthan சொன்னது…

கண்ணன்,

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்
- உங்கள் எழுத்துக்கள் ஒரு தலப்பட்சமாக
போய்க்கொண்டிருப்பது - நீங்கள் விதண்டாவாதம் செய்துகொண்டு இருப்பது
உங்களுக்கே புரியலாம் !

தந்தை பெரியாரின் உழைப்புக்கு பலனே
இல்லாதது போல் நீங்கள் எழுதிக்கொண்டு
இருக்கிறீர்கள்.

பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன்னர்
பார்த்த சமுதாயம் அல்ல இனறு நாம் வாழும்
சமுதாயம். நிறைய பேர் மாறி விட்டார்கள்.
சமுதாயம் ந்றைய மாறி விட்டது.

பெரியார் அன்று தேவை
கருதி சொன்னதை நீங்கள் இன்று தேவை
இல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பதாகவே
நான் கருதுகிறேன்.

இன்றைய நிலையில் பார்ப்பனர்கள்
செத்த பாம்பு நிலையில் இருப்பவர்கள்.

நாம் அடிக்க வேண்டிய பாம்புகள் -
பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும்,
மதுரைக்கு தெற்கேயும் உள்ளன.
நாம் உண்மையிலேயே பெரியாரை
பின்பற்றுபவர்களாக இருந்தால் நாம்
தாக்க வேண்டிய இடங்கள் இருப்பது
மதுரைக்கு தெற்கே தான்.

அதைக்குறி வைப்போம். எதிரியைத் தான்
தாக்க வேண்டும். சரணடைந்து, செயலற்று
இருப்பவரை அல்ல !

பதிலுக்கு பதில் எழுத வேண்டும் என்ற
நோக்கத்தில் அல்லாமல் இதை நீங்கள்
வேறுபட்ட, மாறுபட்ட கோணத்தில்
அணுகினால் மகிழ்வேன்.

அன்புடன் - காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/நாம் அடிக்க வேண்டிய பாம்புகள் -
பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும்,
மதுரைக்கு தெற்கேயும் உள்ளன.
நாம் உண்மையிலேயே பெரியாரை
பின்பற்றுபவர்களாக இருந்தால் நாம்
தாக்க வேண்டிய இடங்கள் இருப்பது
மதுரைக்கு தெற்கே தான்./

செத்தபாம்பு கண்ணில் பட்டதற்கே இன்னொருவரை விட்டு விளக்கம் சொல்லச் சொல்லும் கோவி கண்ணன், உயிருள்ள பாம்புகளைக் குறித்துப் பேசுவதற்கு இன்னும் எத்தனைபேரை துணைக்கு அழைப்பார்?

சரியான பதில் இதில் ஏதோ ஒன்று எல்லாம் உங்கள் சாய்ஸ் தான்!

1....0 (பூஜ்யம்)

2....10

3....100 அல்லது

4..... அடுத்த பதிவுக்குத் தாவி, இதே மாதிரி வேறொன்றை இதே பாணியில் எழுதுவது!

கல்வெட்டு சொன்னது…

.

//

கோவி.கண்ணன் ....

மேலே செத்த பாம்பு என்று குறிப்பிட்டுள்ள பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுங்க.
//
காவிரிமைந்தன் ...
// இன்றைய நிலையில் பார்ப்பனர்கள்
செத்த பாம்பு நிலையில் இருப்பவர்கள். //காவிரிமைந்தன்,

"பார்ப்பனர்கள்" என்றால் யார் என்பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

1. "பார்ப்பனர்" என்பது சாதி அல்ல.
அய்யர் அய்யங்கார் என்பதும் நாடார்,வெள்ளார்... இன்னபிற வகைகள்தான் சாதிகள்.

2. அதுபோல தலித் என்பது சாதி அல்ல அது ஒரு அரசியல் அடையாளம். பறையர், சக்கிலியர், அருந்ததியினர் ...என்று எல்லாம் இந்த அரசியல் அடையாளத்தில் அடங்கும்.

3. முக்குலத்தோர் என்பது சாதி அல்ல. அது ஒரு குழு அடையாளம். தேவர் , மறவர் , அகமுடையர் என்ற சாதிகள் இதில் அடங்கும்.

4. பார்ப்பனர் / பார்ப்பனீயம் என்பதை நீங்கள் சாதியாகப் பார்த்தால் , தயவு செய்து அய்யார் அய்யங்கார் களை மட்டும் ஏன் இந்தக் குறியீட்டுக்குள் பொறுத்திப் பார்கிறீர்கள் என்று சொல்லவும்.

5.
தனக்குமேல் ஒருவனை ஏற்றுக்கொள்ளும் அடிமைத்தனமும், தனக்கு கீழே ஒருவனை அமர்த்திக் கொள்ளும் ஆண்டைத் தனமும் வர்ணத்தால் வருவது. அதுதான் பார்ப்பனீயம்.


6. அதைச் செய்பவர் சிக்காக்கோவில் வாழும் சிங்யாங்க்யுங்காக இருந்தாலும் அவரின் செயல் பார்ப்பனீயம்.

7.உலக மக்களுக்கு இந்து வர்ணாசிரம தர்மம் கொடுத்துள்ள கொடையான பார்ப்பனீயம் பற்றிப் பேசினால் அதை அய்யார் அய்யங்கார் என்ற சாதிகளுடன் மட்டும் ஏன் பொறுத்திப் பார்க்கிறீர்கள்?

8. ரேசிசம் என்றால் அது வெள்ளை இன மக்கள் கறுப்பின மக்களிடம் காட்டும் குரோதம் மட்டும் இல்லை. கறுப்பின மக்கள் பிரவுன் நிற மக்களிடம் குரோதம் காட்டினாலும் இதே சொல்தான்.** நிறத்தால் குரோதம் -> ரேசிசம்
** பிறப்பால் தீண்டாமை -> பார்ப்பனிசம்*****

வர்ணப் பாம்பு பாம்பு செத்தது என்று கருதினால்....
வர்ணம் சொல்லும் வேதததை எரித்து அழிப்புவிழாவை வருடம்தோறும் இந்துக்கள் கொண்டாட வேண்டும்.

எங்கே காஞ்சிமடத்தலைவரை வைத்து "வர்ணம் தவறு அதைச் சொல்லும் எல்லா வேதங்களும் சாக்கடை என்று முன் மொழிய வைத்து விழாவைத் தொடங்குங்கள்.

Indian சொன்னது…

//பார்ப்பான் தீண்டாமை, வன்கொடுமையை விட்டானோ இல்லையோ, எதற்கெடுத்தாலும் பார்ப்பான்,பார்ப்பனீயம் என்று எங்கேயோ கையைக் காட்டிக் கொண்டு நிற்கிற வேலையை நீங்கள் நிறுத்தப் போவதில்லை!//

ஐயா, தங்களின் மேலான பார்வைக்கு...

Arrested, Muthalik bats for BJP, he shared stage with political bigwigs day after attack

With public outrage mounting over the attack on girls in a Mangalore pub, the Karnataka police today arrested Pramod Muthalik, president of the right wing Sri Rama Sene which claimed responsibility for the attack, along with other key leaders including vice-president Prasad Attavar, deputy convenor Subhash Padil. The BJP and Sangh Parivar sought to distance themselves from the Sri Rama Sene but Muthalik, always at the centrestage of politics, told reporters in Belgaum before his arrest that “the Congress is trying to politicise the situation to give the BJP a bad name” ahead of the Lok Sabha elections.

Last Sunday, he addressed the Bahubhashik Brahmin Mahaadhiveshan (multi-lingual Brahmin meet) in Pune that was attended, among others, by Delhi Chief Minister Sheila Dikshit, Swami Ramdev, Suresh Prabhu and three Shankaracharyas. Muthalik spoke on why Brahmins should not marry outside the community fold.

Indian சொன்னது…

....continued

On one hand Muthalik talked of an inner voice, and on the other he was ready to stage an attack similar to the one on M.F. Husain's exhibition in 2008.

Reporter: You know… like M.F. Husain and others' exhibitions.
Muthalik: Yes yes yes.
Reporter: I want a similar protest (at my exhibition). In Shivaji Nagar (Bangalore) or in Mangalore. At any place in their (Muslims') area.
Muthalik: What kind of support do you exactly want?

Muthalik even suggested areas where the riots could easily be arranged.

Muthalik: It can be done in Mangalore… Bangalore.

We even suggested that the vandalism could be triggered in Muslim-dominated areas and got a confident reply.

Muthalik: Yes we can do that.

Wily enough not to arrange the dirty work himself, Muthalik directed us to contact Attavar. He gave us a contact number.

Muthalik: In Mangalore, we have Prasad Attavar.
Reporter: Is he in (jail) or out?
Muthalik: No, he is out.

For arranging the riot in Bangalore, we were asked to contact Bhavani.

Reporter: You mean Vasant ji?
Muthalik: Yes, he has a warrant against him.
Reporter: His mobile is switched off.
Muthalik: He is underground.
Reporter: So will you talk to him?
Muthalik: Oh yes. After talking to him, the three of us will plan how to do it. We will definitely do it.
Reporter: Sir, do you want the payment in cash or cheque?
Muthalik: Let' see. Let me talk to him.

On the question of money, Muthalik was not ready to commit to a figure.

Reporter 2: Are you okay with Rs 60 lakh?
Muthalik: Who told you this?
Reporter 2: I had talks with Vasant ji.
Muthalik: Yes yes.
Reporter 2: So I thought…
Muthalik: I can't confirm the money. This is their (Muthalik's aides) job, they will do it.

Indian சொன்னது…

////ராஜவம்சம் said...

வெறும் 2%உள்ள பிராமனுக்கு எப்படி 98%
பயந்தது//
98% என்பது பால் 2% என்பது விஷம். பாலில் கொஞ்சம் விஷம் சேர்த்தாலே பாலின் தன்மை மாறிவிடும் அதான்சார் பயம். எப்படி?

மகாராஜா//

Need more proof?

'Sri Ram Sene ready to riot for money'

Sri Ram Sene chief Pramod Muthalik is willing to unleash violence on the streets of the country and stage riots in return for money, a Headlines Today-Tehelka joint investigation has revealed.

Muthalik, whose outfit had attacked a pub in Mangalore in January 2009 and beaten up women in the name of protecting Indian culture, has been caught on camera saying that he is ready to arrange any violent protest anywhere as long as he is suitably paid.

To expose the Sene, our investigation team first met Muthalik. Posing as an aspiring artist, our reporter discussed a plan to hold an exhibition that Muthalik's goons would vandalise, thereby lending the artist immediate publicity.

For over a month, our dummy artist met some of the Sene's top leaders to discuss the deal. Far from being shocked, Muthalik even agreed that the art exhibition should be held in a Muslim-dominated area so that the impact was maximum.

Here are excerpts from the conversations.

Reporter: I want popularity as it will help my business. Tell me how much it (the protest) will cost and how many people will be required… I will not file a police complaint as this will be done as per our understanding… Sir, I shall pay whatever advance you want.
Muthalik: This can be organised in Mangalore… In Bangalore.

Not only was the Sene chief ready to do the job, he even agreed to arrange it in the Karnataka capital.

Reporter: Sir, let me know for sure. Or else, I can come after a few days. Let me know the total expense and I shall arrange it.
Muthalik: What I am saying is that our president there…
Reporter: In Bangalore?
Muthalik: Yes in Bangalore… He (Vasant Kumar Bhavani) is very powerful. Have you been introduced to him?
Reporter: Last time I knew it was Patil sahib.
Muthalik: He (Bhavani) is very strong.

With Muthalik agreeing to stage the violence, all that remained was the fixing of the price. For this we were told to contact Muthalik's trusted lieutenants - Prasad Attavar, the Sene's national vice-president, and Vasant Kumar Bhavani, the head of the Bangalore unit.

Attavar met us four times, and only once as a free man. He was arrested soon after our first meeting, but that was no hindrance. Attavar's clout was such that we could freely meet him inside jail compounds and discuss the plan.

Reporter 2: We will pay you Rs 15 lakh.
Attavar: Yes?
Reporter 2: Rs 15 lakh.
Attavar: No let me calculate that…

We met Attavar twice at Mangalore jail and once inside the high-security Bellary jail. He promised us an attack similar to the one staged in the Mangalore pub in 2009.

Attavar: I will tell you how much money I want.
Reporter 2: How many men will you deploy?
Attavar: Fifty.
Reporter 2: So there will be 50 people indulging in arson?
Attavar: Yes of course. Just like that (Mangalore) pub case.

But the most practical riot-arranger was Bhavani. He not only suggested the location but also the timing of the attack. And most chillingly, he told us who the chief guest at the event should be.

Bhavani: Should we call Mumtaz Ali?
Reporter: Who?
Bhavani: Mumtaz Ali Khan.
Reporter: Who is he?
Bhavani: He is the (Karnataka) waqf board minister.

While Muthalik had no qualms about letting loose his goons, he wanted to be sure his image wasn't tarnished.

Muthalik: I can't get directly involved. I have an image in the society - that of being a man of principles and a Hindutva supporter. I don't want one incident to spoil that.
Reporter: But nobody would come to know…
Muthalik: All that is fine, but my inner voice tells me I am doing something wrong.

Matra சொன்னது…

To "Indian".

Atleast this Muthalik is doing for money and not because his scriptures say so.

Read the link. Why only blame the Islamists.

http://www.skepticsannotatedbible.com/cruelty/long.html

கோவி.கண்ணன் சொன்னது…

// Matra said...

To "Indian".

Atleast this Muthalik is doing for money and not because his scriptures say so.

Read the link. Why only blame the Islamists.

http://www.skepticsannotatedbible.com/cruelty/long.html//

அப்படி என்றால் பேரைக் கெடுத்தக் குற்றத்திற்காக இந்துத்துவாக்கள் முத்தாலிக்கை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடிக்கலாமே.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இந்தியன் மட்டும் கோவி கண்ணன்,

முத்தாலிக் அல்லது காஞ்சி மடம் அல்லது நீங்கள் சொல்கிற இந்துத்வா காவலர்கள் யாருமே ஒட்டு மொத்த இந்துக்களைப் பிரதிநிதிப் படுத்துகிற அல்ளது பேச்சாளர்கள் அல்ல. அப்படி நினைக்கிற உங்களுடைய லாஜிக் மிகவும் விநோதமாக இருக்கிறது.

/செருப்பாலடிக்கலாமே/

கல்லாலடித்துக் கொள்வது,கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று காட்டுமிரண்டித்தனமாக நடந்துகொள்வது எல்லாம் ஆப்ரஹாமைட் மதங்களில் மட்டுமே மதக்கடமையாகவும், அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பிரியமானதாகவும் போதிக்கப் பட்டு வருகிறது. இங்கே சகித்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் போவதால் தான், உங்களை மாதிரி நிறையப் பேர் தொடர்ந்து எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்க முடிகிறது.

சகித்துக் கொள்ள முடியாத சில கிறுக்குத்தனங்கள் முத்தாலிக் மாதிரி, கர சேவகர்கள் மாதிரிக் கொஞ்சம் வருகிறதென்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?

dondu(#11168674346665545885) சொன்னது…

பார்ப்பனர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடுவது என்பது சம்பந்தப்பட்ட வீட்டு சொந்தக்காரரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வந்த முடிவு. அது சரியா தவறா என பேச யாருக்குமே உரிமை இல்லை.

சில குறிப்பிட்ட சாதிகளுக்கு வீடு தருவதில்லை எனக் கூறுபவர்கள் எல்லா சாதியிலுமே இருக்கிறார்கள். அப்படியெல்லாம் போர்ட் போடாவிட்டாலும் கிட்டிமுட்டி போகும்போது கடைசி நிமிடத்தில் கூறி விடுகிறார்கள். இது ஒன்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றம் இல்லை.

ஆனால் டீக்கடைகளில் இரட்டைக் குவளை வைப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றம். இதையும் வீடை வாடகைக்கு விடுவது பற்றியும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

வணிக நிறுவனங்களில் இம்மாதிரி நடந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. பிடிபட்டால் தண்டனை உண்டு.

ஆகவே நீங்கள் கொடுக்கும் இரு கேஸ்களுமே (வாடகை மற்றும் இரட்டைக் குவளை விவகாரங்கள்) ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்கன அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

பார்ப்பனர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடுவது என்பது சம்பந்தப்பட்ட வீட்டு சொந்தக்காரரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வந்த முடிவு. அது சரியா தவறா என பேச யாருக்குமே உரிமை இல்லை.

சில குறிப்பிட்ட சாதிகளுக்கு வீடு தருவதில்லை எனக் கூறுபவர்கள் எல்லா சாதியிலுமே இருக்கிறார்கள். அப்படியெல்லாம் போர்ட் போடாவிட்டாலும் கிட்டிமுட்டி போகும்போது கடைசி நிமிடத்தில் கூறி விடுகிறார்கள். இது ஒன்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றம் இல்லை.

ஆனால் டீக்கடைகளில் இரட்டைக் குவளை வைப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றம். இதையும் வீடை வாடகைக்கு விடுவது பற்றியும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.
வணிக நிறுவனங்களில் இம்மாதிரி நடந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. பிடிபட்டால் தண்டனை உண்டு.

ஆகவே நீங்கள் கொடுக்கும் இரு கேஸ்களுமே (வாடகை மற்றும் இரட்டைக் குவளை விவகாரங்கள்) ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்கன அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

வாடகை/விற்பனை என்று வந்துவிட்டாலே சாதி பார்பது என்று வந்துவிட்டால் எல்லா எழவும் ஒன்று தான்.

ப்ராமனாள் ஒன்லி, வெள்ளைக்காரன் ஒன்லி என்று போடுவது பிறரை புறக்கணிப்பது தான். ரட்டை டம்ளர் நாய்களாவது உள்ளே வர அனுமதித்கிறது என்பதால் ரட்டை தம்ளரை விட பார்பனர் ஒன்லி போர்டுகள் பார்பன சாதிவெறியின் உச்சம் என்று சொல்வது சரி என்று நினைக்கிறேன்.

சாதி துவேசம் என்பதில் புறக்கணிப்பு, தனிக் குவளை அவமானம் எல்லாம் ஒன்று தான்.

பின்கட்டுவழியாக வரச் சொல்லுவது, காசுகளை கையில் தூக்கிப் போடச் சொல்லுவது, இதைப் பார்பனர்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

டோண்டு இராகவன் ஐயங்காருக்கு பார்பனர் செய்வது பழக்க வழக்கமென்றும், பிறர் செய்வது தான் சமூகக் குற்றம் என்று தெரிவது ஒன்றும் வியப்பு இல்லை.

இரட்டை குவளை முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை 'பிராமனாள் ஒன்லி' போர்டுகளுக்கு ஆதரவளிக்கும் பார்பனர்கள் சொல்வதற்கு தகுதி எதுவும் இல்லை என்பதைச் சுட்டவே எழுதினேன். மற்றபடி சாதிவெறியர்கள் எவராக இருந்தாலும் இரட்டை குவளை முறை உட்பட அனைத்திற்கும் காயடிப்பதற்கு 100 விழுக்காடு ஆதரவானவன்.

கோமியம், (மனித) சிறுநீர் ஆகிய இரண்டுமே கழிவு என்ற பதத்தில் ஒன்று தான். இதில் கோமியம் குடிக்கிறவா தீர்த்தம் சாப்பிடுவதாக்ச் சொல்வது அபத்தம் இல்லியோ ? இங்க கோமியம் பார்பனர்களின் வீடு, இரட்டைக் குவளை மனித சிறுநீர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் டீக்கடைகளில் இரட்டைக் குவளை வைப்பது சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றம். இதையும் வீடை வாடகைக்கு விடுவது பற்றியும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.
வணிக நிறுவனங்களில் இம்மாதிரி நடந்து கொள்வதற்கு அனுமதி இல்லை. பிடிபட்டால் தண்டனை உண்டு.//

ஒரு செயல் குற்றமா இல்லையா என்பது சட்டத்தின் அள்வுகோள் இல்லை. சாட்சியத் தன்மையின் அளவு கோள் தான். சாட்சி இல்லாமல் கொலை செய்தால் நீங்கள் குற்றவாளியே இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துவிடும். ஆகவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் நன்முயற்சியால் இரட்டை குவளை முறை என்பது சமூகக் குற்றம் என்பதாக சட்டம் இயற்றப்பட்டது. அதே சமூக ஆர்வலர்களின் கண்களில் பார்பன (வாடகை) வீடுகளில் தொங்கும் 'பார்பனர் ஒன்லி' போர்டுகள் பற்றி சிந்தனை எழுந்து நீதிமன்றம் சென்றால் பார்பனர்களின் இந்த இழிசெயலும் சட்டப்படி குற்றமாகும். இன்னும் அது நடக்கவில்லை, மற்றபடி 'தீண்டாமை கொடுமை' என்ற வகையில் என் வீட்டு வாசப்படி பார்பனர்கள் அல்லாதவர்களுக்கு கிடையாது என்பதும், என் வீட்டுக்கு வந்தால் நீ குறிப்பிட்ட இடத்தில் தான் உட்காரனும் (இரட்டை குவளை) என்று சொல்வதும் ஒன்று தான்.

சொந்தசாதி சார்பில் சப்பைக் கட்டும் உங்கள் கருத்துகளை நான் நிராகரிக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்லாலடித்துக் கொள்வது,கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று காட்டுமிரண்டித்தனமாக நடந்துகொள்வது எல்லாம் ஆப்ரஹாமைட் மதங்களில் மட்டுமே மதக்கடமையாகவும், அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பிரியமானதாகவும் போதிக்கப் பட்டு வருகிறது. இங்கே சகித்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் போவதால் தான், உங்களை மாதிரி நிறையப் பேர் தொடர்ந்து எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்க முடிகிறது. சகித்துக் கொள்ள முடியாத சில கிறுக்குத்தனங்கள் முத்தாலிக் மாதிரி, கர சேவகர்கள் மாதிரிக் கொஞ்சம் வருகிறதென்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?////

உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பூனை அவ்வப்போது எழுந்து பாலும் முட்டையும் குடிச்சுட்டு தூங்குவது போல் உங்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். ஜீப்போடு(ஒரிசா பாதிரி, குழந்தைகளுடன்) எரிப்பு, கோத்ரா ரயில் மற்றும் மலேக்கான் குண்டு வைப்பு வைபவங்களையெல்லாம் நடத்த்தியது அவதார் படத்தில் வரும் ஏலியன்களா ?

முதலிக் போன்று வெளிச்சத்துக்கு வந்த வெறியர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது தான் உங்கள் ஆதங்கமா ?

இங்கே பேச்சு என்பது இந்துவெறியாட பணம் பேரம் பேசியவனைப் பற்றி, இதில் ஏன் இஸ்லாமியர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்களும் இந்துத்துவா குமபலில் ஒருவர் என்றால் உங்களுடன் விவாதம் நடத்துவது வீன். இதைத்தான் மேலே பூனை என்று குறிப்பிட்டேன் (உறுத்தாத பட்சத்தில்) மன்னிக்கவும்.
:(

dondu(#11168674346665545885) சொன்னது…

//ஒரு செயல் குற்றமா இல்லையா என்பது சட்டத்தின் அள்வுகோள் இல்லை. சாட்சியத் தன்மையின் அளவு கோள் தான்.//
வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பது சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவேயில்லை. அது குற்றமே அல்ல.

சாட்சியம் இருந்து நிரூபித்தாலும் கேசே கோர்ட்டுக்கு வரவியலாது. ஆனால் இரட்டைக் குவளைக் கொடுமை டீஃபால்ட்டாக சட்டப்படி குற்றம். இரண்டையும் எப்படி ஒரே தராசில் வைத்து பார்க்கவியலும்?

மற்ற சாதியினர் கூடத்தான் வாடகைக்கு வருபவரின் சாதியை கேட்டு அதன்படித்தான் முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி ஒரு எதிர்வினையும் காணோமே. அதை பற்றி ஏன் இந்தக் கள்ள மௌனம்?

வன்கொடுமை என்பதே வேறு ரேஞ்சில் இருக்கிறது.

தலித்துகள் செருப்பே போட்டுக் கொள்ளக்கூடாது, சில குறிப்பிட்ட தெருக்களில் சைக்கிளை உருட்டித்தான் செல்ல வேண்டும், பொதுக்கிணறுக்கு வந்து தண்ணீர் எடுக்கலாகாது, தங்கள் குழந்தைகளுக்கு பெயர் கூட மண்ணாங்கட்டி, முனியன் என்றெல்லாம்தான் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, யாராவது செத்தால் அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தப்படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகியவைதான். அவற்றைத் தவிர்க்கவே இயலாது. அவ்வாறு செய்யும் வன்னியர்/முதலியார்/தேவர்/பிள்ளைமார் சாதி வெறியர்களின் வன்கொடுமைகள் எல்லாம் இருக்க, இங்கு வந்து பார்ப்பனர் வாடகைக்கு ஆள் தேர்ந்தெடுக்கும் முறையை மெனக்கெட்டு கொண்டு வந்து அவற்றுக்கு ஈடாக பார்க்க வைக்க எண்ணுவது உங்களது பார்ப்பன வெறுப்பைத்தான் காட்டுகிறது.

மறுபடியும் கூறுவேன். எந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கும் தன் வீட்டை யாருக்கு வாடகைக்குத் தருவது என்று முடிவு செய்ய முழு உரிமையும் உண்டு. அதைத்தான் அவர்கள் - எந்த சாதியினராக இருந்தாலும் - கடைபிடிக்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//வீட்டை யாருக்கு வாடகைக்கு விடுவது என்பது சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவேயில்லை. அது குற்றமே அல்ல.

சாட்சியம் இருந்து நிரூபித்தாலும் கேசே கோர்ட்டுக்கு வரவியலாது. ஆனால் இரட்டைக் குவளைக் கொடுமை டீஃபால்ட்டாக சட்டப்படி குற்றம். இரண்டையும் எப்படி ஒரே தராசில் வைத்து பார்க்கவியலும்?//

சட்டம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட இவை எல்லாம் குற்றம் என்ற வகைப்படுத்தலில் மட்டுமே குற்றம் என்பது இல்லை. சட்டத்தின் கண்களுக்கு சென்றவை செல்லாதவை என்று மட்டுமே சொல்ல முடியும்.
குற்றம் செய்தவன் என்றாலும் கோர்ட் நிருபனம் செய்தால் மட்டுமே குற்றவாளி என்று கருதப்படவேண்டும் என்பது நடைமுறை. ஆகவே 100 கொலை செய்தாலும், கொலையாளிக்கு நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தண்டனைக் கிடைத்தால் மட்டுமே அவன் குற்றவாளி என்பது சமூகவியல் சட்டம். இதனடிப்படையில் 100 கொலை செய்த ஒருவன் குற்றவாளி இல்லை என்று பொதுப் புத்திப் பார்வையால் சொல்லிவிட முடியுமா ? ஆனாலும் அப்படித்தானே சொல்கிறோம்.

//மற்ற சாதியினர் கூடத்தான் வாடகைக்கு வருபவரின் சாதியை கேட்டு அதன்படித்தான் முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி ஒரு எதிர்வினையும் காணோமே. அதை பற்றி ஏன் இந்தக் கள்ள மௌனம்?//

நான் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன் 'செட்டியார் ஒன்லி', 'பிள்ளைமார் ஒன்லி' என்று எங்கும் போர்டுகள் பார்க்கவில்லை, நீங்கள் பார்த்திருந்தால் படம் பிடித்துப் போடுங்கள். நீங்கள் சொல்வது படி பார்த்தால் கூட சென்னையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் சொந்த வீட்டில் தான் வசிக்கிறார்கள், அல்லது அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களின் வாடகைவீட்டில் வசிக்கிறார்கள் என்று சொல்லலாமா ?
நான் சென்னையில் 10 ஆண்டுகள் வாடகை வீடுகளில் தான் வசித்தேன்.
'பிராமின்ஸ் ஒன்லி' போர்டு போடாதவர்களின் வீட்டில் தான் வசித்தேன். எனக்கு அவர்களின் சாதி தெரியாது. இங்கே நான் சொல்லி இருப்பது போர்டு மாட்டும் பார்பனர்கள் பற்றி தான். போர்டு மாட்டாத பார்பனர்கள் உட்பட பிற சாதியினர் குறித்து அல்ல. இதுல கள்ள மவுனமும் இல்லை ஒரு எழவும் இல்லை. சென்னையில் என் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் என்ன சாதி என்று தெரியாது, ஆனால் இந்து அல்ல என்பதை அவர் பெயரை வைத்துத் தெரிந்து கொண்டேன். வாடகை சரியாக வந்து சேருது, வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். எனக்கு அது போதும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வன்கொடுமை என்பதே வேறு ரேஞ்சில் இருக்கிறது.//

கிள்ளி எடுத்து சாப்பிட்டாலும் அள்ளிச் சாப்பிட்டாலும் மலம் மலம் தான். அங்கு வாழும் பெரும்பான்மை பொருத்து ரேஞ்சு மாறும், அவற்றிற்கு சாட்சிதான் பழைய அக்ரகாரங்கள்.

//தலித்துகள் செருப்பே போட்டுக் கொள்ளக்கூடாது சில குறிப்பிட்ட தெருக்களில் சைக்கிளை உருட்டித்தான் செல்ல வேண்டும், பொதுக்கிணறுக்கு வந்து தண்ணீர் எடுக்கலாகாது,//

இவையெல்லாம் ஒருகாலத்தில் அக்கிரகார அக்கிரமங்களாக இன்றும் தொடர்கிறது. பார்பனர்களால் அவை நடத்தபடவில்லை என்பதற்கு பார்பனர்கள் அங்கு வசிக்காமல் இடம் பெயர்ந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. அவைதான் நகரத்து நவீன தீண்டாமைகளாக 'என் வீட்டுக்குள் நுழைய வேறு சாதிக்காரனுக்கு அனுமதி இல்லை' என்பதாக 'பிராமின்ஸ் ஒன்லி' போர்டுகளாக தொடர்கிறது.

//தங்கள் குழந்தைகளுக்கு பெயர் கூட மண்ணாங்கட்டி, முனியன் என்றெல்லாம்தான் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, //

இப்படியெல்லாம் யாரும் கட்டாயப்படுதுவது கிடையாது. எஸ்வீசேகர் நாடகங்களில் ஒருவேளை இப்படியான அபத்தங்கள் தொடர்கிறதோ என்னவோ, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி ஆகிய பெயர்களைப் போல் பழைய பெயர்களான பார்பனப் பெயர்கள், குஞ்சிதபாதம், அபிதகுஜலாம்பாள் ஆகியவற்றையும் யாரும் வைக்கக் கட்டாயப்படுத்துவதில்லை என்பதால் அவை மறைந்துவிட்டன என்று கூறுவீர்களா ?

//யாராவது செத்தால் அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தப்படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகியவைதான். அவற்றைத் தவிர்க்கவே இயலாது. அவ்வாறு செய்யும் வன்னியர்/முதலியார்/தேவர்/பிள்ளைமார் சாதி வெறியர்களின் வன்கொடுமைகள் எல்லாம் இருக்க,//

இந்த எல்லா எழவையும் அடியேன் கண்டித்துவருகிறேன். நான் டோண்டு இராகவன் இல்லை, இவற்றிற்கு சப்பைக் கட்ட.

//இங்கு வந்து பார்ப்பனர் வாடகைக்கு ஆள் தேர்ந்தெடுக்கும் முறையை மெனக்கெட்டு கொண்டு வந்து அவற்றுக்கு ஈடாக பார்க்க வைக்க எண்ணுவது உங்களது பார்ப்பன வெறுப்பைத்தான் காட்டுகிறது.//

நகரத்து நவீனத் தீண்டாமைகள் பேசப்படாதவைகளாக இருக்கின்றன, இவற்றையெல்லாம் கண்டிக்கத் துப்பு இல்லாதவர்கள் பிற கொடுமைகளை மட்டும் கண்டிப்பது தன் முதுகு அழுக்கை புணுகு என்று புழுகி மொழுகி மறைப்பதாகும் என்பது என் குற்றச் சாட்டு.

//மறுபடியும் கூறுவேன். எந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கும் தன் வீட்டை யாருக்கு வாடகைக்குத் தருவது என்று முடிவு செய்ய முழு உரிமையும் உண்டு. அதைத்தான் அவர்கள் - எந்த சாதியினராக இருந்தாலும் - கடைபிடிக்கின்றனர்.//

இதே ஞாயம் தான் இரட்டை குவளை வைத்திருக்கிறவனும் சொல்கிறான். என் கடைக்கு டீ குடிக்க நான் எவனையும் அழைக்கவில்லை, வந்தால் என்னால் இப்படித்தான் நடத்த முடியும் என்று. அதற்கும்/அவனுக்கும் எதிராக சட்டம் இருக்கிறது என்பதால் அவன் குற்றவாளிங்கிறேள், மாமாக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் இல்லாததால் அதை உரிமை என்கிறேள்.

ஒரு செட்டியார் காய்கறிகடை திறந்து வைத்துவிட்டு 'பார்பனர்களுக்கு விற்கப்பது கிடையாது' என்று போர்டு போட்டால் அது புறக்கணிப்பு தானே சார். அதை அவர் விருப்பம், ஞாயம் என்பீரோ. தினமலருக்கு / துக்ளக்கிற்கு கடிதம் எழுதமாட்டீர்கள் ?

பாய்களின் கறிக்கடைகளில் கூட 'பார்பனர்களுக்கு விற்பது கிடையாது' என்று போர்டுகள் கிடையாது.

dondu(#11168674346665545885) சொன்னது…

//மாமாக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் இல்லாததால் அதை உரிமை என்கிறேள்.//
மாமாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, மற்ற சாதிகளைச் சேர்ந்த இதே மாதிரி பாகுபாடு பார்க்கும் வீட்டுக்காரர்களுக்கும் கூடத்தான் எதிராக இல்லை.

//ஒரு செட்டியார் காய்கறிகடை திறந்து வைத்துவிட்டு 'பார்பனர்களுக்கு விற்பது கிடையாது' என்று போர்டு போட்டால் அது புறக்கணிப்பு தானே சார்.//
அவ்வாறு செய்தால் அதுவும் வணிகச் சட்டப்படி குற்றமே.

வணிக நிறுவனங்களை தனிப்பட்டவர் வீடுகளையும் போட்டு குழப்பிக் கொள்வது நீங்கள்தான்.

இதுதான் இப்பதிவில் எனது கடைசி பின்னூட்டம். செஸ் ஆட்டத்தில் ஸ்டேல்மேட் என்ற நிலை வந்தால் ஆட்டம் மேற்கொண்டு கண்டியூ செய்யவியலாது, அதுபோலத்தான் நீங்கள் என்னையோ நான் உங்களையோ கன்வின்ஸ் செய்ய முடியாது.

பை தி வே உங்கள் சென்னை வீட்டை வாடகைக்குத்தானே விட்டுள்ளீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அவ்வாறு செய்தால் அதுவும் வணிகச் சட்டப்படி குற்றமே.
//வணிக நிறுவனங்களை தனிப்பட்டவர் வீடுகளையும் போட்டு குழப்பிக் கொள்வது நீங்கள்தான்.////

வாடகைக்குவிடும், விற்பனை செய்யும் இவை எல்லாமே வணிக நோக்கம் தானே சார். பணப் பரிமாற்றம் எப்படி நடந்தாலும் அதன் பெயர் வணிகம்.

நான் குழப்பவில்லை, நீங்கள் தான் சப்பைக் கட்டாகக் கூறுகிறீர்கள். Renting House(s) also Business.

ஒரு செட்டியார் திருமண மண்டபம் திறந்து 'பார்பனர்களின் திருமணத்திற்கு கிடையாது' என்று சொன்னாலும் என் பதில் இதே தான். அதுவும் வாடகைக்கு விடும் பிஸ்னஸ் தான்.

//இதுதான் இப்பதிவில் எனது கடைசி பின்னூட்டம். செஸ் ஆட்டத்தில் ஸ்டேல்மேட் என்ற நிலை வந்தால் ஆட்டம் மேற்கொண்டு கண்டியூ செய்யவியலாது, அதுபோலத்தான் நீங்கள் என்னையோ நான் உங்களையோ கன்வின்ஸ் செய்ய முடியாது.
//

இதில் உங்களால் சப்பைக் கட்டுகளையும், குழப்படியையும் தவிர்த்து உங்களுக்கு பதில் சொல்ல வழியில்லை என்று தெரிவதால் நான் அதை வரவேற்கிறேன்.

நீங்கள் மேலே என் நண்பர்/தம்பி கேசவனைப் போல 'மாமிசம் சாப்பிடாதவர்கள் வேண்டாம்' என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு சப்பைக் கட்ட முயற்சிக்கவில்லை, அப்படிச் சொல்லி இருந்தால் 'வெஜிடேரியன் ஒன்லி' என்று சொல்லி இருக்கலாமே என்று நான் கூறுவேன். சோ.....'பிராமன்ஸ் ஒன்லி' என்பது 100 விழுக்காடு பார்பனர்களால் நடத்தப்படும் சுயசாதி மோகம், பிறச்சாதி பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பு, சாதிதுவேசம் என்ற வகையில் அடங்கும் மற்றொரு நவீன நகரத்து தீண்டாமை. இதற்கு உரிமை என்று முலாம் பூசும் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு ஏற்புடையது அல்ல. இருந்தாலும் உங்கள் கருத்து என்ற அளவில் அதை ஒரு கருத்தாக கொள்கிறேன்.

//பை தி வே உங்கள் சென்னை வீட்டை வாடகைக்குத்தானே விட்டுள்ளீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஆமாம், போர்டுகள் எதுவும் இல்லாமல்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பூனை அவ்வப்போது எழுந்து பாலும் முட்டையும் குடிச்சுட்டு தூங்குவது போல் உங்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்/

பிரச்சினையே இப்படி நீங்களாகவே முன்கூட்டி ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதற்கப்புறம் அதற்குச் சாதகமாகவே வாதங்களை நீட்டிக் கொண்டு போவதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது கோவி கண்ணன்!

இந்துத்துவம் என்று நீங்கள் கற்பிக்கும் அர்த்தம் ஒன்றாகவும், இந்த மண்ணில்பரந்துவிரிந்த ஞான மரபை நான் புரிந்துகொண்டது வேறாகவும் இருக்கிறது. ஒரு மதவாதியாக, மதம்பிடித்துத்தனக்கும் பிறருக்கும் கேடு விளைவிக்கிற போக்கை நான் எப்போதுமே ஆதரித்ததுமில்லை. நான் மதவாதியுமில்லை. மதவாதியாக இருப்பது வேறு, சில அடிப்படைத் தத்துவங்களை ஏற்றுக் கொள்கிற நிலை வேறு.

ஹிந்து தர்மம் எப்போதுமே வன்முறையை, வலுக்கட்டாயமாகக் கருத்தைத் திணிப்பதில் இறங்கியதே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை அது. வேற்றுமைகள் எல்லாமே ஒரு பொதுவான ஒற்றுமைக்கு இட்டுச் செல்வதைத்தெளிவாகப் புரிந்து கொண்ட செழுமையான பண்பாடும், மரபும் உடையது. இப்படிச் சொல்லும்போது, ஒவ்வொரு நம்பிக்கையும் ஆரம்ப நிலைகளில் மிகவும் நல்ல எண்ணத்தோடு தான் தொடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறவன்.

ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்ற கொடூரமான போதனையை இன்றைக்கும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இயல்பைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும்! அதே நேரம், அங்கேயும் அன்பை விதைத்த, நல்ல எண்ணங்களுடன் தொண்டு செய்த நிறையப் பேரை நான் அறிவேன். சுஃபி ஞானியர் பலரைத் தேடிப் படித்ததும், சுஃபி கவிஞன் ரூமியின் கவிதைகளை மொழியாக்கம் செய்து எனது பதிவில் இடுகைகளாக எழுதியிருப்பதும் என்னுடைய பதிவுகளில் எல்லோரும் காணக் கிடைப்பது தான்.. பழைய பதிவுகளைத் தேடிப் படித்திருந்தீர்களானால், என்னுடைய பிரார்த்தனைகளுள் ஒன்றாக Lead Kindly Light என்ற கிறித்தவப் பிரார்த்தனையும், God grant me the serenity முதலானவையும் இருப்பதைப் பார்த்திருக்க முடியும். நல்லவைகளைத் தேடிப் படிக்கிற ஏற்றுக் கொள்கிற இயல்பை இறைவன் எனக்கு சிறுவயதிலிருந்தே அருளியிருக்கிறான்.

மதங்களின் தேவை முடிந்துவிட்டது, இனிமேல் ஆன்மீகச் சிந்தனை ஒன்றே மனிதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்ற ஸ்ரீ அரவிந்த அன்னையின் கூற்றை தொடர்ந்து எனது பல பதிவுகளில் எழுதி வருவதும் கொஞ்சம் பொறுமையாகப் பார்த்தால் தெரிந்திருக்குமே!

எனக்குள்ளும் சரி, உங்களுக்குள்ளும் சரி ஒளிந்திருப்பது பூனைக் குட்டியாக இருந்துவிட்டால் கூடப் பரவாயில்லை! பெரிய சேதம் வராது.ஆனால், பழக்கங்களின் அடிமையாகவே, மனித வடிவில் மிருகத்தன்மையோடு இருந்துவிடுவது தான் மிகவும் ஆபத்தானது.

Kannan சொன்னது…

ஒரு வேலை பிராமிணர்கள் வாடகை வீட்டை "வாடகை" வீடாக மட்டுமே கருதுவதனாலும் மற்றவர்கள் வாடகை வீட்டை "சொந்த" வீடாக கருதுவதனாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்ற கொடூரமான போதனையை இன்றைக்கும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இயல்பைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும்! அதே நேரம்,//

போர் செய்வதே அறம், தருமம் எனப்படும் போர்களத்தில் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் கீதையை புனித நூலாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இப்படிப் பேசுவது சரியான நகை முரண்.

எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி என்கிற போதனைகள் இருக்கும் அவ்வளவு தான், உங்களுக்கு தெரிந்தது உங்களைச் சார்ந்த மதத்தின் புனிதத் தன்மையும் பிற மதத்தின் அழுக்குகளும் மட்டும் தான்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி என்கிற போதனைகள் இருக்கும் அவ்வளவு தான், உங்களுக்கு தெரிந்தது/

இந்த இடத்தில் இருந்து தான் பிறழ ஆரம்பிக்கிறீர்கள் என்பது புரிகிறதா, கோவி.கண்ணன்!

எந்த ஒரு மத நம்பிக்கையும், அதன் ஆரம்ப காலங்களில், அன்பையும் சமாதானத்தையும் போதிக்கிற நல்லெண்ணங்களோடு தான் தோன்றுகிறது. காலப் போக்கில் வெறும் சடங்குகளாக, அல்லது வெறும் வசனங்களாகக் குறுகித் திரிந்து, முந்தைய நோக்கத்திற்கு எதிரானதாகவே மாறிவிடுகிறது.

நிறுவனப்படுத்தப்படும் எதுவானாலும், அதன் கதி, பரிணாமம் இது தான்! இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, மதம், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவன் என்ற வகையில், உங்களுடைய வாதம், அதில் இருக்கும் முரண்பாடுகளையும் கவனிக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இது தான் உலகம், இதுதான் ஞானம்,பகுத்தறிவு என்று என்னை எப்படிக் குறுக்கிக் கொள்ளவில்லையோ,அதே மாதிரித் திறந்த மனதுடன் விவாதத்தைத் தொடர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் விதண்டாவாதமாகக் குறுகி மனவருத்தங்கள் தான் மிஞ்சும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த ஒரு மத நம்பிக்கையும், அதன் ஆரம்ப காலங்களில், அன்பையும் சமாதானத்தையும் போதிக்கிற நல்லெண்ணங்களோடு தான் தோன்றுகிறது. காலப் போக்கில் வெறும் சடங்குகளாக, அல்லது வெறும் வசனங்களாகக் குறுகித் திரிந்து, முந்தைய நோக்கத்திற்கு எதிரானதாகவே மாறிவிடுகிறது.//

திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா,

இதே பதிவில் உங்கள் முந்தைய பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள், இந்து மதம் மட்டும் அமைதியை போதிப்பதாகவும், அடுத்த மதங்கள் கத்தி கப்படா என்று அலைவதாகவும், கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று எழுதி இருக்கிறீர்கள், அதை மறுத்து தான் நான் பகவத் கீதையே போர் செய்யத் தூண்டும் நூல் தானே என்றேன்.

//நிறுவனப்படுத்தப்படும் எதுவானாலும், அதன் கதி, பரிணாமம் இது தான்! இதை நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, மதம், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவன் என்ற வகையில், உங்களுடைய வாதம், அதில் இருக்கும் முரண்பாடுகளையும் கவனிக்கிறேன்.//

நான் முரண்பாடுகளாகப் பேசுவதில்லை.
எந்த ஒரு கொள்கையும் தேவையைப் பொருத்து ஏற்படும் தேவை இல்லை என்றால் அழியும் என்பதை நான் அவ்வப்போது சொல்லிவருவது உண்டு, நீங்கள் தான் "இந்துத்துவம் என்று நீங்கள் கற்பிக்கும் அர்த்தம் ஒன்றாகவும், இந்த மண்ணில்பரந்துவிரிந்த ஞான மரபை நான் புரிந்துகொண்டது வேறாகவும் இருக்கிறது." - என்னமோ நான் இந்துத்துவத்தை கற்பிப்பது போலவும் இந்து மதம் ஞான இடிதாங்கியாக உள்ளது போல எழுதி இருக்கிறீர்கள். இந்து மதம் ஞானத் தாங்கி என்றால் அதைத் தாங்கிக் கொண்டு இருப்பவர் யார் ? தன்னைத் தானே தாங்கிக் கொண்டு தாக்கு பிடிகிறதா ? எதோ ஒரு சாமியார் அல்லது மடத்து தலைமை சாமியார்களின் கைகளில் தானே இவை இருக்கின்றன.

//எனக்குத் தெரிந்த இது தான் உலகம், இதுதான் ஞானம்,பகுத்தறிவு என்று என்னை எப்படிக் குறுக்கிக் கொள்ளவில்லையோ,அதே மாதிரித் திறந்த மனதுடன் விவாதத்தைத் தொடர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.//

இந்து மதம், ஞானமரபு என்றெல்லாம் (ஜெமோ பதிவின் சாரத்தைமட்டுமே) வைத்துக் கொண்டு நீங்கள் குறுக்கிக் கொள்ளவில்லை என்று சொல்வதும் நகைமுரணே.


// இல்லையென்றால் விதண்டாவாதமாகக் குறுகி மனவருத்தங்கள் தான் மிஞ்சும்!//

மனவருத்தமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை, உங்களுக்கான பதில் உங்கள் கருத்துக்கான பதில், நீங்கள் எவ்வளவு அழுத்தமாக வாதம் வைக்கிறீர்களோ, அதைவிட அழுத்தத்தில் என்னுடைய பதில் வரும். அவ்வளவு தான். இவற்றில் நான் நமது தனிப்பட்ட நட்பை அளவுகோளாக்கிக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

திறந்த மனதுடன் பேசுவதால் தான் உங்கள் கருத்துகளில் பார்பனிய வாசனை அடித்தால் அதை நேரடியாகவே தாக்குகிறேன். நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று நினைத்துப் பார்த்தால் நம்க்குள் விவாதமே வராது.

அதையும் மீறி வருத்தப்பட்டால் பட்டுக்கொள்ளுங்கள். :)

எதிர்கருத்துக்களைச் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எதிரி ஆக்கிடாதிங்க.

மணிகண்டன் சொன்னது…

//எதிர்கருத்துக்களைச் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் எதிரி ஆக்கிடாதிங்க//

நீரு கருத்து சொன்னாலே எல்லாம் தலை தெறிச்சி ஓடும்போது எப்படிய்யா உம்மை எதிரியா பார்ப்பாங்க :)-

Indian சொன்னது…

//இந்தியன் மட்டும் கோவி கண்ணன்,

முத்தாலிக் அல்லது காஞ்சி மடம் அல்லது நீங்கள் சொல்கிற இந்துத்வா காவலர்கள் யாருமே ஒட்டு மொத்த இந்துக்களைப் பிரதிநிதிப் படுத்துகிற அல்ளது பேச்சாளர்கள் அல்ல. அப்படி நினைக்கிற உங்களுடைய லாஜிக் மிகவும் விநோதமாக இருக்கிறது.//


இதே கருத்துக்களைத்தான் இஸ்லாமியரும், கிறித்தவர்களும் சொல்கிறார்கள்.

யாரோ சிலர் செய்யும் செயலுக்கு எங்கள் மதத்தை குற்றம் சொல்லாதீர்கள் என்று.

//
கல்லாலடித்துக் கொள்வது,கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று காட்டுமிரண்டித்தனமாக நடந்துகொள்வது எல்லாம் ஆப்ரஹாமைட் மதங்களில் மட்டுமே மதக்கடமையாகவும், அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பிரியமானதாகவும் போதிக்கப் பட்டு வருகிறது. இங்கே சகித்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் போவதால் தான், உங்களை மாதிரி நிறையப் பேர் தொடர்ந்து எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்க முடிகிறது.

சகித்துக் கொள்ள முடியாத சில கிறுக்குத்தனங்கள் முத்தாலிக் மாதிரி, கர சேவகர்கள் மாதிரிக் கொஞ்சம் வருகிறதென்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?//

இந்து மதத்தில் சிலர் மாத்திரமே
கிறுக்கர்களாக இருக்கிறார்கள்.

மற்ற மதங்களில் மதமே தன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரையும் கிறுக்குத்தனமாக செயல்படச் சொல்கிறதா?

மாமியார் ஒடச்சா மண்குடம். மருமகள் ஒடச்சா பொன் குடமா?

இது இந்து மத ஆதரவாளர்களுக்கும், எந்த மத ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.

ரவி சொன்னது…

/// யாரும் வீட்டில் சமைத்து உண்பதில்லை . ///

மிஸ்டர் கேசவன். காபி வித் அணு என்ற லேடி உம்மவா தானே ? கடந்தவாரம் ஜேப்பனீஸ் சூசி பிஷ் பச்சையாக தின்றதை பார்த்தேன். ப்ரொக்க்ராம் பெயர் என் சமயலறையில்.

ரவி சொன்னது…

//அப்படிச் செய்து , வெளிப்படையாய் தெர்ரியும் குடுமி, பூணூல் போன்ற சாதி அடையாளங்களை, சம்பிரதாயங்களை விட்டால் அவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்று சொல்லலாம்.///

மத சம்பிரதாயம் குடுமி பூணூல் அவா இவா போன்ற பாசை ஆகியவை அவர்கள் தனிப்பட்ட விஷயம் கல்வெட்டு. சிங் கூட டர்பன் அணிந்துள்ளது போல. அதனை லூஸ்ல விட்டுவிட்டு, வருணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்களை மட்டும் கலாய்க்கலாமே ?

பித்தனின் வாக்கு சொன்னது…

As per my knowledge they let their house to brahmins only for not cooking non veg and clean purpose.
In my chennai house also letting to non vegitarians only. And also a conditions we let home maxmimum 4 persons family only. this is only for convienint and clean. but your point of view also correct to some extent. Some times brahmins speaking like this, mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...

As per my knowledge they let their house to brahmins only for not cooking non veg and clean purpose.
In my chennai house also letting to non vegitarians only. And also a conditions we let home maxmimum 4 persons family only. this is only for convienint and clean. but your point of view also correct to some extent. Some times brahmins speaking like this, mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.//

எதற்கு இந்த சப்பைக் கட்டு ?

எனக்கு தெரிந்து அனைத்துப் பார்பனர்களும் சைவம் கிடையாது, பார்பனர்களில் சைவர்கள் உண்டு, வீட்டு உரிமையாளர் தம் வீடுகளில் எதை சமைக்கலாம் என்பதைக் கூட முடிவு செய்து வாடகைக்கு விடுகிறார் என்பதைக் கூட ஞாயம் என்றுக் கொண்டால் 'டு லெட் பார் வெஜிடேரியன் ஒன்லி' என்று போடலாமே சார்.

தோல் பொருள்களெல்லாம் சைவமாக மாறிவிட்டதா ? தோல் பொருள்கள் பயன்படுத்தாத பார்பனர்கள் யார் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//mathhtavalukku kudi vitta, ava kanda karumathaiyum smaiththu saappiduva, enru posuvathai kettu ullan.//

மத்தவங்களை ஏன் சாமி சொல்றேள், நீங்களே அசைவம் சாப்பிடுவதை 'பிணம் திண்ணுபவர்கள்' என்று தானே பதிவில் எழுதினீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு has left a new comment on your post "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !":

In this article has proved one thing. //

என் பதிவில் நான் என்ன எழுதுகிறேன் என்று முத்திரைக் குத்தி உங்களை நான் தீர்ப்பு எழுதச் சொல்லவில்லை. உங்கள் மட்டமான விமர்சனத்தை நான் நிராகரிக்கிறேன்.

Kesavan சொன்னது…

// 'டு லெட் பார் வெஜிடேரியன் ஒன்லி' என்று போடலாமே சார்.//

அப்பறம் நீங்க கேப்பீங்க பிரமனால் அசைவம் சாபிடுவதில்லையா. என் இப்படி போட வேண்டும் என்று சொல்வீர்கள் . உங்கள் பிதற்றலை பார்த்தால் பார்த்திபன் , வடிவேலு நகைச்சுவை மட்டுமே ஞாபகம் வருகிறது . ஆமாம் matrimonial எல்லாரும் அவரவர் ஜாதிகளை குறிப்பிட்டு அந்த ஜாதியில் தான் பையன் / பொண்ணு வேண்டும் என்று சொல்கிறார்களே . என்ன பண்ணுவது சிலருக்கு செலெக்டிவ் அம்னிஷியா இருக்கும் போல் இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வது பிரமணர்கள அல்லது மற்றவர்களா என்று தெரிய வில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம் matrimonial எல்லாரும் அவரவர் ஜாதிகளை குறிப்பிட்டு அந்த ஜாதியில் தான் பையன் / பொண்ணு வேண்டும் என்று சொல்கிறார்களே . என்ன பண்ணுவது சிலருக்கு செலெக்டிவ் அம்னிஷியா இருக்கும் போல் இருக்கிறது//

இந்த அமினிசியா, கிமினிசியா இவையெல்லாம் பார்பனிய வருணாசிரம வழி வகுத்துக் கொண்ட சாதித் தீமையினால் விளைவது என்று தொடர்ந்து கூவி வருகிறோம், உம்ம காதில் தான் விழுவதில்லை.

எல்லாத்துக்கு சாதி வேண்டுமென்றால் பார்பனர் நடத்தும் ஓட்டலிலும் 'பிரமனாள் ஒன்லி அலவுடுன்னு' போடலாமே சார். விற்பனை காத்துவாங்கும்.

பார்பான் திருமணத்திற்கு மண்டபம் கொடுக்கமாட்டேன் என்று திருமணம் மண்டப சொந்தக்காரன் சொன்னால் விட்டுவிடுவேளா ? மந்திரம் ஓதுரவாளுக்கே இல்லையா ? ன்னு கேட்கமாட்டேளா ?

அப்படியே வீட்டை சைவம் சாப்பிடும் பார்பனருக்குத்தான் விடுறா என்று வைத்துக் கொண்டாலும் வீட்டு ஓனரான பார்பனர் வீட்டுக்குள்ளே போய் அவ அசைவம் சமைத்துச் சாப்பிடுறாளா ? இல்ல பார்சலாக மட்டும் வாங்கிவந்து திங்கிறாளான்னு பார்க்கப் போறாளா ?


// மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வது பிரமணர்கள அல்லது மற்றவர்களா என்று தெரிய வில்லை//

பார்பனர் கேட்கமாட்டார், ஏனென்றால் ஊருக்கு நாலுபேர் மாவட்டத்துக்கு 40 பேர் மட்டும் தான்னு தெரிந்துவிடும்.

Kesavan சொன்னது…

மற்ற ஜாதியில் உள்ள சில பேறும் என் பார்பனர்களுக்கு என்று சொல்கிறார்கள் . அவர்கள் ஜாதியில் உள்ள மக்களுக்கு கொடுக்காமல் அவர்களும் பிராமின்ஸ் ஒன்லி என்று வாடகை விடுவது உங்களுக்கு தெரிந்திருக்குமோ இல்லையோ. நான் உள்ள பகுதியில் உள்ள முஸ்லீம் நண்பர் அவர் கட்டிய வீட்டை பிராமணர்கள் மட்டும் என்று சொல்கிறார்.

//பார்பனர் கேட்கமாட்டார், ஏனென்றால் ஊருக்கு நாலுபேர் மாவட்டத்துக்கு 40 பேர் மட்டும் தான்னு தெரிந்துவிடும் //

பாவம் என்ன பண்ணுவது. உங்களால் இந்த 40 பேரை மாட்டும் தான் திட்ட முடியும். அப்படி என்றால் பிராமணர்கள் சிறுபான்மையினரா. இந்த 40 பேரை பாத்து எவ்வளவு நாள் தான் கூவிகொண்டிருக்க போகிறீர்கள் என்று தெரிய வில்லை

நான் கிட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லாமல் பதிலை திரிக்க வேண்டாம். அப்பறம் எதுக்குங்க மக்கள் தொகை கணகெடுபுல ஜாதியை சேக்க சொல்றீங்க. எல்லாத்துலயும் பிராமணர் சொல்றான்னு சொல்றீங்க , இங்க யாரு சொல்றதுன்னு தான் தெரியலை . அதை விட்டுட்டு பிரமனால் நாற்பது பேரு வெங்காயம் கத்திரிக்கா பூண்டு சொல்லாதீங்க

கல்வெட்டு சொன்னது…

//செந்தழல் இரவி...

மத சம்பிரதாயம் குடுமி பூணூல் அவா இவா போன்ற பாசை ஆகியவை அவர்கள் தனிப்பட்ட விஷயம் கல்வெட்டு. சிங் கூட டர்பன் அணிந்துள்ளது போல. அதனை லூஸ்ல விட்டுவிட்டு, வருணாசிரம தர்மத்தை கடைப்பிடிப்பவர்களை மட்டும் கலாய்க்கலாமே ?//


அப்படி இல்லை இரவி.

வருணாசிரம தர்மம் என்பதே பிறப்பின் வழி வரும் வர்ண நம்பிக்கை.

குடுமி பூணூல் .. இவை அப்பட்டமான சாதி அடையாளங்கள்.

டர்பன் அணிவதும், அகலவாக்கில் பட்டை, நீளவாக்கில் கோடு , தொப்பி , கழுத்தில் சிலுவை .....எல்லாம் மத அடையாளங்களே.

இவர்கள் வெளிப்படையாக எப்படி தங்களின் மத அடையாளங்களை தெரிந்தே வெளிப்படுத்துகிறார்களோ அதுபோல குடுமி பூணூல் போன்ற அடையாளங்கள் தெரிந்தே / விரும்பியே வெளிக்காட்டிக் கொள்ளும் சாதிய அடையாள‌ங்கள்.

சாதியை இப்படி வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல இவர்கள் சாதி ஏணியில் துண்டை முதலில் போட்டு இடம் பிடித்து இன்னும் காஞ்சி மடங்களின் மூலம் வர்ணம் காக்க நினைப்பவர்கள்.

இதை விமர்சிக்காமல் எப்படி வர்ணத்தைக் கடந்துபோவது ? உண்மையில் தெரியவில்லை இரவி. :-(((

ராஜ நடராஜன் சொன்னது…

கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்னை வேர்ட் பிரஸ் மாமி வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பி விட்டீர்களே:)

நோண்டிப்பார்த்தால் வர்ணாசிரமத்தின் வேரில் உங்கள் தலைப்பு பொருந்தி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.ஆனாலும் இரண்டையும் தனித்தனியான கண்ணோட்டத்தில் விவாதிப்பதே தற்போதைக்கான மாற்றத்திற்கும் புரிதலுக்கும் வழி வகுக்கும்.

இரட்டைக்குவளை நிலையிலிருந்து பிராமின்ஸ் ஒன்லி வரை சாதியம் பரிணாம வளர்ச்சி அடைந்த அறிகுறியே தென்படுகிறது உங்கள் தலைப்பு.ஆனால் இரண்டும் வெவ்வேறு மனித மேலாதிக்க மனோபாவங்களைக் கொண்டதென்பதால் இரண்டையும் ஒன்றாக இணைப்பது சரியாகப் படவில்லை.

(உங்களுக்கு இட்ட பின்னூட்டத்தை வெட்டி ஒட்டிக் கொள்கிறேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் இரண்டும் வெவ்வேறு மனித மேலாதிக்க மனோபாவங்களைக் கொண்டதென்பதால் இரண்டையும் ஒன்றாக இணைப்பது சரியாகப் படவில்லை.//

சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும், சமூகத்திலிருந்து ஒதுங்கிப் போவதும் ஒன்று தான். இரண்டுமே சுற்றிவாழும் மனித இனத்தை நேசிக்காத தன்மையே

Venkat சொன்னது…

தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் - ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் -- மாபெரும் பேரணி.
ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 - 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் - அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.

Unknown சொன்னது…

சைவம் உண்ணும் பார்ப்பனர் அல்லாத,சில சமூகத்தினரை கூற முடியுமா...!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்