பின்பற்றுபவர்கள்

20 ஏப்ரல், 2012

பேரண்டம் பற்றிய வியப்பான தகவல்கள்


பேரண்டம் பற்றி பல வியப்பான தகவல்களை அறிவியல் உலகம் தந்துள்ளது, அவை ஆய்வுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றை உண்மை என்று அறிவியலாளர்கள் அடித்துக் கூறவில்லை, மாறாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்தவை என்றே சொல்கிறார்கள்.

நாம் பெருவெடிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம், பெருவெடிப்பின் மையம் எங்கே ?

பேரண்டத்தில் மையம் என்பதே கிடையாது, பேரண்டத்தில் எல்லை விளிம்புகள் என்றும் எதுவும் இல்லாத நிலையில் பேரண்டத்தின் மையம் என்று இதுவரை எதுவும் இல்லை. விளிம்புகள் அற்ற நிலையில் பேரண்டம் வளைவானது, உதாரணத்திற்கு மில்லியன் ஒளி ஆண்டுகள் நம்மால் பேரண்டத்தின் ஊடாக அதன் வெற்றிடத்தில் பயணம் செய்தால் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர முடியும். பேரண்டத்திற்கு மையமோ, எல்லையோ கிடையாது

பேரண்டத்தில் பெருவெடிப்பு எங்கே நடக்கும் ?

பேரண்டத்தில் பெருவெடிப்பு பேரண்டத்தின் வெற்றிடத்தில் நடந்து, வெற்றிடத்தில் விரியும் என்பது தவறான கூற்று. காலத் துவக்குமும், வெற்றிடமும், வெளித்திரள்களும் (கேலக்ஸிகள்) பெருவெடிப்பினால் நிகழ்ந்தவை. பெருவெடிப்பிற்கு முன்பு அளவிட முடியாத திணிவும், அளவிட முடியாத வெப்பமும் உள்ள பொருளாகத்தான் பேரண்டம் இருந்தது. அதனுள் ஏற்பட்ட அளவிடமுடியாத அழுத்தத்தினால் பின்னர் வெடித்து சிதறி வெளித் திரள்களையும், வின்மீன்களையும் உருவாக்கி இன்றளவும் (வெற்றிடங்களை விரித்து) விரிந்தே வருயுறது.

பூமியும் பேரண்டத்தின் ஊடாக விரிவடைகிறதா ?

வெளித்திரள்களும், வின்மீன்களும் உருவாகியது பெருவெடிப்பின் விளைவிகள், அதன் பிறகு வின்மீன்களோ அல்லது வெளித்திரள்களோ அல்லது நம் பூமியோ விரிவடைவதில்லை, பேரண்டவிரிவாக்கம் என்பதில் வெளித்திரள்களுக்கு இடையேயான இடைவெளிகள் (வெற்றிடங்கள்) விரிவடைகிறது, வெளித்திரள் (உதாரணத்திற்கு நாம் பால்வெளித் திரள் - மில்கிவே) அதனுள் இருக்கும் வின்மீன்களை இழுப்பு விசையால் அதனுள்ளேயே வைத்திருப்பதால் அவற்றினுள் விரிவாக்கம் ஏற்படுவது கிடையாது, இது பூமிக்கும் சூரியனுக்கும் பொருந்தும், சூரியன் எரிபொருள் அனைத்தையும் எரித்து அளவில் பெரிதாகிவருவது வேறு. 

பேரண்டத்தின் வெளியே என்ன இருக்கிறது ?

வெளி அல்லது ஸ்பேஸ் அல்லது வெற்றிடம் என்பவை பெருவெடிப்பினால் ஏற்பட்டவையே, பெருவெடிப்பிற்கு முன்பு வெளி என்பதே இல்லை, எனவே பேரண்டத்திற்கு வெளியே என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அது மற்ற பேரண்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும் (பேரண்டங்களைப் போன்று எல்லையற்ற எண்ணிக்கையில் பேரண்டங்களும் இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்)

பேரண்டத்திற்கு முன்பு என்ன இருந்தது ?

வெளியும், காலமும் பெருவெடிப்பின் விளைவுகள் என்றே நம்பப்படுகிறது, அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதற்கு ஏற்கதக்க விடைகள் அற்ற சூழலில் பெருவெடிப்பு - விரிவாக்கம் - சுருக்கம் என்பவை மாற்றி மாறி நிகழ்ந்தவை என்று நம்பப்படுகிறது, அல்லது நமது பேரண்ட பெருவெடிப்பு வேறு பேரண்டங்களின் ஒன்றில் நடந்த பெருவெடிப்பின் விரிவாக்கத்தில் நிகழ்ந்தவையா என்றும் அறிய முடியவில்லை.

இறுதியாக ஒரு நல்ல கேள்வி, பேரண்டம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தவை என்று நம்பம்படும் பொழுது, நமது பேரண்டத்தினுள் இருக்கும் பல்வேறு கேலக்ஸிகளின் இடைவெளிகள் எப்படி 14 பில்லியன் ஒளியாண்டைவிடத் தொலைவானதாக இருக்க முடியும் ? நமக்குத்தான் தெரியுமே ஒளியைவிட வேகமாக பயணிக்கும் பொருள்கள் எதுவும் கிடையாது, பின்னர் எப்படி இந்த கேலக்ஸிகள் ஒளியைவிட வேகமாக நகர்ந்து அல்லது அவற்றின் இடைவெளிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

திரள்களுக்கு இடையேயான வெற்றிட(வெளி) விரிவாக்கம் என்பது ஒளியை விட வேகமாக விரிவடைகிறது எவ்வளவு வேகம் என்பது சரியாக கணக்கிடப்படவில்லை, தவிர பெருவெடிப்பின் முன்பு உள் திணிவுகளின் இடையேயான தொலைவும், பெருவெடிப்பின் முன்பான வடிவமும் நமக்குத் தெரியாத நிலையில், பெருவெடிப்பிற்கும் பின்னர் வெளித் திரள்கள் (கேலகிஸிகளின் இடைவெளி) ஒளியைவிட வேகமாக பயணிக்கக் கூடிய தொலைவை அடைந்திருப்பதாக நாம் ஒளி வேகத்துனுடனும் பெருவெடிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படும் 14 பில்லியன் ஆண்டுகளையும் ஒப்பிட பெருவெடிப்பின் வெற்றிட விரிவாக்க வேகம் ஒளியைவிட விரைவானது என்பது ஒப்புக் கொள்ளத் தக்கதாகும், கேலக்ஸிகளுக்கு இடையேயான இடைவெளி விரிவாக்க விரைவு என்பது அருகில் இருக்கும் கேலக்ஸிகள் நமக்கு மெதுவாக விரிவடைவதாகவும் தொலைவில் இருப்பவை வேகமாக செல்வதாகவும் தெரிவதால் பெருவெடிப்பின் அண்மையில், அதாவது 2 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸி 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவை அடைந்திருந்தால் நமது கேலக்ஸிக்கும் நமது கேலக்ஸியை விட்டு விலகிச் செல்லும் மற்றோரு கேலக்ஸிக்கும் இடையேயான தொலைவு ஏற்கனவே இரு மடங்காகி இருக்கும் நிலையிலும் ( 4 பில்லியன் ஒளி ஆண்டுகாக இருக்க) அடுத்த 12 பில்லியன் ஆண்டுகளில் அவை நகரும் (திசை - நோக்கி அல்லது விலகி) 24 பில்லியன் ஒளி ஆண்டைக்காட்டிலும் தொலைவில் தான் இருக்க வாய்ப்புள்ளது. தவிர இந்த வேகத்தை நம்மால் (நமது கேலக்ஸியால்) உணரமுடியாது, ஏனெனில் அதற்கு வெளியே உள்ள வெற்றிடம் தான் விரிவாக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு ஒரு ஊதாத பலூனில் சுற்றிலும் புள்ளிகள் வைத்து அதை ஊத, பலூன் விரிய விரிய ஒரு பக்கத்தில் உள்ள புள்ளிக்களுக்கு இடையான தொலைவும், நகர்வும் அங்கிருந்து பார்க்க மறுபக்கத்தில் உள்ள புள்ளிகளின் தொலை மிகுதியாகவும், நகர்வும் விரைவாகவே இருக்கும்.

பேரண்ட விரிவாக்கத்தின் வினாடிக்கான அளவு என்ன ?

parsec என்ற வானவியல் அளவீடுகளில் கேலக்ஸிகளின் தொலைவுகள் அளக்கப்படுகிறது, ஒரு parsec =  3.26 ஒளி ஆண்டுகள், அதாவது 31 டிரில்லியன் கிமீ தொலைவு, நமது கேலக்ஸிக்கும் பக்கத்து கேலக்ஸிக்குமான தொலைவு 1 parsec இருந்தால் அவற்றின் இடைவெளி விரிவாக்கம் வினாடிக்கு 74 கிமீ. நமக்கு 2 parsec தொலைவில் இருப்பவை அதே வினாடி நேரத்தில் 144 கிமி தொலைவுக்கு நகர்ந்திருக்கும். இந்த நகர்வுக் கணக்கை வைத்து தான் அவை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அருகில் இருந்ததாகவோ அல்லது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

பேரண்டத்தில் இருக்கும் கேலக்ஸிகள் எத்தனை ?

தற்பொழுது அளவிடப்பட்ட பேரண்டத்தின் விரிவு 93 பில்லியன் ஒளி ஆண்டைக் கொண்டது, இதை அவதனிக்கப்பட்ட பேரண்ட (observable universe). விட்டத் தொலைவு என்கிறார்கள். அதற்கும் கூடுதலாகவே இருக்கலாமாம். நமக்கு தொலை நோக்கியால் பாக்க முடிந்த அளவில் உள்ள பேரண்டத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளவை 80 பில்லியன் கேலக்ஸிகள், ஒவ்வொன்றிலும் 100 - 200 பில்லியன் வின்மீன்கள், ஒவ்வொரு வின்மீனுக்கு குறைந்தது ஒரு கோள், அந்த கோள்களுக்கு துணைக் கோள் என்று மிகப் பெரிய பில்லியன் எண்ணிக்கையினுள் இருக்கிறது

கேலக்ஸிகளுக்கு இடையான தொலைவு எப்படி கணக்கிடப்படுகிறது ?

ஒரு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை ஒரு ஒளி ஆண்டு பயணித்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் பலரிடம் உண்டு,  அது தவறு. ஒளி ஆண்டுகளின் கணக்கு ஒரு கேலக்ஸின் உள்ள வின்மீண்களின் ஒளி அடர்த்தியை வைத்தே கணக்கிடப்படுகிறது, ஒளி அடர்வு பயணம் தொலைவுக்கு ஏற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் குறிப்பிட்ட ஒளி அடர்த்தி கொண்டவை குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் என்ற கணக்கில் அவை அளவிடப் படுகிறது, ஒரே ஒளி அளவைக் கொண்ட அருகில் இருக்கும் மெழுகுவர்த்திக்கும் தொலைவில் இருக்கும் மொழுகுவர்த்தியும் நமக்கு ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுப்பது இல்லை. அவற்றின் ஒளி ஆண்டு அளவுகள் வின்மீன் அல்லது கேலக்ஸி அவற்றின் தொலைவுகளைச் சொன்னாலும் அவை அங்கேயே தற்போதும் நிலை கொண்டு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இன்று ஒரு கேலக்ஸி 10 பில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் உருவானால் அதன் வெளிச்சம் பூமியை எட்டி நம் கண்டுபிடிப்பிற்குள் அவை வர அதே 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும், எனவே நாம் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கும் கேலஸிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கும் தற்போதைய தொலைவு நமக்கு தெரியாது. நம்மிடம் இருக்கும் ஆகப் பெரிய தொலைவு அளவீடு ஒளி ஆண்டு தான்.


நாம் இருக்கும் மில்கிவே கேலெக்ஸியின் அளவும் பரப்பளவும் என்ன ?

ஸ்பைரல் வட்ட வடிவத்தில் இருக்கும் மில்கிவே கேலக்ஸியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவு, அதன் தடிமன் 1000 ஒளி ஆண்டுகள். பேரண்டத்தில் இருக்கும் பெரிய கேலக்ஸிகளில் மில்கிவேயும் உண்டு,  மில்கிவே வினாடிக்கு 552 - 630 கிமீ வேகத்தில் ஒட்டு மொத்தமாக நகர்கிறது.

மில்கிவே கேலக்ஸியின் வயது என்ன ? 

12.6 பில்லியன் ஆண்டுகள், இது பெருவெடிப்பு நிகழ்ந்தததாக கணக்கிடப்பட்டுள்ள 13.7 பில்லின் ஆண்டுகளுக்கு பின்னர் 1.1 பில்லியன் ஆண்டுகளில் மில்கிவே உருவாகி இருக்குமாம். அதிலிருக்கும் நம் சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. நமது சூரியனின் எரிபொருள் முழுதும் தீர இன்னும் 5.5 மில்லியன் (55 லட்சம் ) ஆண்டுகள் உள்ளனவாம்

மில்கிவே கேலக்ஸியில் இருக்கும் வின்மீன்களின் எண்ணிக்கை எத்தனை ? 

200 பில்லியன் வின்மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, நமது சூரியனும் ஒரு வின்மீன் தான் அதற்குள் கோள்கள், அந்த கோள்களில் சிலவற்றிற்கு சந்திரனைப் போன்று துணைக் கோள்கள்.

மில்கிவேயில் சூரியன் இருக்கும் இடம் எங்கே ?

மில்கிவேயின் மையத்தில் இருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில். மில்கிவேயின் மேல் எல்லைக்கு கீழே அதன் தடிமனுள் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது

மில்கிவேயில் சூரியனின் நகர்வு வேகம் எவ்வளவு ?

நொடிக்கு 250 கிமீ / நிமிடத்திற்கு 15,000 கிமீ / மணிக்கு 9 லட்சம் கிமீ, மில்கிவேயின் மையத்தை ஒரு முறை வளம் வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் 220 மில்லியன் ஆண்டுகள். 




கூகுள் + ல் தற்பொழுது பேரண்டம், மில்கிவே, சூரியன், நிலவு மற்றும் பிற கோள்களின் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்,

***************

பேரண்டம் பற்றி படிக்க படிக்க வியப்பின் எல்லைக் கடந்து வியப்படைய முடிகிறது, ஆறு நாளில் (பால்வெளித்திரளை ஒப்பிட) தம்மாத்தோண்டு பூமியைப் படைத்தார் கடவுள் என்றால் மற்ற கோள்களையும் சூரியனையும், பால்வெளித்திரளையும் அதில் இருக்கும் வின்மீன்களையும், மற்ற வெளித்திரள்களையும் அதில் இருக்கும் வின்மீன்களையும் படைக்க எத்தனை நாள் எடுத்திருப்பார் ? நாளா ? அவரோட படைப்புகள் துவங்கி எத்தனை பில்லியன் களின் பில்லியன் ஒளி ஆண்டுகளாக நடக்கிறது ? கடவுளுக்கே வெளிச்சம். கடவுளின் 'ஆகுக' என்ற சொல் ஒளி வேகத்தில் பயணித்தாலும் பேரண்டத்தின் அடுத்த பக்க விளிம்பிற்குச் செல்ல எத்தனை ஒளி ஆண்டுகள் எடுக்குமோ ?

பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன்.

பேரண்டம் பற்றி நமக்கு தகவல்கள் தெரிய தெரிய கடவுள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி, கடவுள் என்பது ஒரு  சூனியக்காரன், கோபக்காரன், மந்திரவாதி, மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம் மத நம்பிக்கையாக்கி சுறுக்கி  வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது 

8 கருத்துகள்:

வேகநரி சொன்னது…

இப்படியெல்லாம் மதவாதி அல்லாதோர் அறிவியல் கட்டுரைகள் எழுதுவது மிக நல்லது. எல்லோரும் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்,ஏமாற கூடாது என்ற நல்நோக்கமே இருக்கும். ஏமாற்றி ஆக்கிரமிக்கும் நோக்கம் இருக்காது.
//கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி கடவுள் என்பது ஒரு சூனியக்காரன் கோபக்காரன் மந்திரவாதி மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம்..//
சரியா சொன்னிங்கள். சுனாமியை வைத்து ஏக இறைவன் மிரட்டல்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அல் குய்டா தாக்கியழித்த செப்டம்பர் 11 இரட்டை கோபுர தகர்ப்பை பற்றிய குறிப்பு குரானில் இருக்கிறதாம். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. பர்ர்த்து மகிழுங்கள்.
http://ariviyalputhaiyalalquran.blogspot.de/2012/04/11.html

சார்வாகன் சொன்னது…

அருமையான பதிவு சகோ

பேரண்டம் என்னும் சொல் பிரபஞ்சத்தை குறிக்கப் பயன்படுத்துவது அருமை.

காலக்ஸி= வெளித்திரள்

நட்சத்திரம்=விண்மீன்கள்

மிக்க நன்றி எழுதும் போது அவசியம் பயன்படுத்துகிறேன்.
&&&&&&&&&&
பெரு விரிவாக்க கொள்கையின் சிக்கல்கள் அல்லது எல்லைகள்

1.ஒளியின் வேகத்தை விட பேரண்டம் அதிக வேகத்தில் விரிவடைவது.விரிவடையும் வேகம் அதிகரித்தல்.

2.கருப்பு பொருள்&கருப்பு ஆற்ற‌ல்[dark matter &dark energy] பற்றி விளக்க இயலாமை

3பேரண்டத்தின் வடிவம் தட்டையாக இருத்தல்.

http://map.gsfc.nasa.gov/universe/bb_cosmo.html


நன்றி

ADMIN சொன்னது…

விஞ்ஞானத் தகவல்களை வெளிப்படையாக, எளிமையாக பகிர்ந்திருப்பதோடு, மனிதர்களின் கயமைத் தனத்தையும்

*** கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி, கடவுள் என்பது ஒரு சூனியக்காரன், கோபக்காரன், மந்திரவாதி, மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம் மத நம்பிக்கையாக்கி சுறுக்கி வைத்திருக்கிறார்கள்***

என்ற வரிகளில் குறிப்பிட்டிருப்பது ரசிக்ககூடியதாகவும், உண்மையை வெளிப்படுத்தியதாகவும் இருக்கிறது. பகிர்வினிக்கு நன்றி திரு. கோவி. கண்ணன் அவர்களே...!!

R.Puratchimani சொன்னது…

//பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன். //

:) :)

நீங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் எப்படி இப்படிப்பட்ட பிரமாண்ட கால அளவினை பற்றி கூறினார்கள் என்று. பல அறியவியல் அறிஞர்கள் இந்த பிரம்மனின் ஆண்டு கணக்கை கேட்டு வாய் பிளந்து நின்றனர் என்பதே உண்மை. இதை பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இதில் ஆதாரம், அத்தாட்சி, நற்சான்று எல்லாம் உண்டு :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அறிவியல் பதிப்பு நல்லது தொடரட்டும்...

//இறுதியாக ஒரு நல்ல கேள்வி, பேரண்டம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தவை என்று நம்பம்படும் பொழுது, நமது பேரண்டத்தினுள் இருக்கும் பல்வேறு கேலக்ஸிகளின் இடைவெளிகள் எப்படி 14 பில்லியன் ஒளியாண்டைவிடத் தொலைவானதாக இருக்க முடியும் ? நமக்குத்தான் தெரியுமே ஒளியைவிட வேகமாக பயணிக்கும் பொருள்கள் எதுவும் கிடையாது, பின்னர் எப்படி இந்த கேலக்ஸிகள் ஒளியைவிட வேகமாக நகர்ந்து அல்லது அவற்றின் இடைவெளிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் ?//

நல்ல கேள்வி பதிலும் உங்களுக்குள்ளே!

khaleel சொன்னது…

சிறப்பான பதிவு. பேரன்டத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. நாம் எவ்வளவு சிறியவர்கள். ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு.

//பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன். //

நல்ல நகைசுவை.

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

அருமையான பதிவு சகோ. எவ்வ்வ்வளவு பெரிய ஒரு இடத்தில், எவ்வளவு சிறிய ஒரு கோளில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணும் போது வியப்பு வருகிறது.

ஆனாலும் இரண்டு அடி நிலத்திற்காக பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்?

Unknown சொன்னது…

அுைா ிு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்