இரண்டாம் முறை தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு என்பது மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு, ஏதாவது மாறுபட்டு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஓரளவு எழுதிய அனைத்து இடுகைகளும் எனக்கு மன நிறைவைத் தந்தது, மூன்றே மூன்று இடுகைகளுக்கான தகவல்களை மட்டுமே முன்கூட்டித் திரட்டி இருந்தேன், மற்றபடி அனைத்து இடுகைகளும் அன்றன்றே எழுதி வெளியிட்டவையே, இடையில் நான் உணர்ந்த நில அதிர்வு பற்றிய தகவலை என்னுடைய மற்றொரு பதிவில் வெளியிட்டேன், நில அதிர்வு நடந்த ஐந்தாம் நிமிடம் மற்ற ஊடங்களில் வெளிவருவதற்கு முன்பே நில அதிர்வை அறியும் USGS வெப்பதளத்தில் அதிர்வு அளவை மட்டும் சரி பார்த்துவிட்டு உடனேயே நில அதிர்வின் தகவலையும் சுனாமி விழிப்புணர்வு குறித்து பதிவுலகம் அறியச் செய்தது சென்றவாரத்தில் நட்சத்திரப் பதிவுகளைத் தாண்டி எனக்கு மனநிறைவைத் தந்தது, வலைப்பதிவுகளில் பலம் அது தான்,. வெளியே எந்த ஒரு ஊட்கத்திலும் இது போன்ற எச்சரிக்கைக் குறித்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிடமுடியாது, அதை நாம் ஊடகப் பொறுப்புணர்வு என்று வகைப்படுத்தாவிட்டாலும், அவர்கள் கொடுக்கும் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று, நடக்காத ஒன்று என்று தெரியும் பொழுது ஊடகத்தின் பெயர் கெட்டுவிடும், அதனால் இது போன்ற உடனேயே எச்சரிக்கைச் செய்ய வேண்டிய தகவல்களுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கும், மேலிடத்து அனுமதிக்கும் காத்திருப்பர், நமக்கு (வலைப்பதிவர்களுக்கு) அது போன்ற தடைகள் எதுவும் இல்லாததால், நாம் நேரிடையாக அறிந்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிட முடியும்.
நட்சத்திர வாரத்தில் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே 'வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை' யில் வந்து போனது, ஒரே நாளில் எழுதிய மூன்று இடுகைகள் கூட அவ்வாறு அதிகம் பார்வையிடப்பட்ட பட்டியலில் இருந்தாலும், தமிழ்மண திரட்டி வரையறையின் படி ஒருநாளில் ஒருவரின் ஒரு இடுகை மட்டுமே முகப்பில் காட்டப்படும் என்பதால் மற்ற இடுகைகள் முகப்புப் பக்கத்தில் வரவில்லை, ஆனால் தமிழ்மணத்தின் தனிப்பக்கமான மற்றொரு 'இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்' பகுதியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனது இடுகைத் தலைப்பும் உட்பொருளும் படிப்பவர்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.
மேலும் எழுதிய சில இடுகைகளை, 'திகட்டும்' என்பதால் நான் வெளியிடவில்லை, அதை நான் பிறகு மற்றொரு நாள் வெளியிடுவேன்.
வாழ்த்து மற்றும் கருத்துரை விட்டுச் சென்ற பதிவர் அன்பர்கள்
Robin, புதுகை.அப்துல்லா, kari kalan,பிரியமுடன் பிரபு, ராமலக்ஷ்மி, மோகன் குமார், கபிலன், ரவிச்சந்திரன், என். உலகநாதன், முனைவர் பரமசிவம், துளசி கோபால், T.V.ராதாகிருஷ்ணன், தேவன் மாயம்,தமிழ்சேட்டுபையன், தனிமரம், சேலம் தேவா, அம்பலத்தார், புதுகை.அப்துல்லா, ராஜ நடராஜன், thequickfox, குமரன் (Kumaran), nigalkalathil siva, Amudhavan, ஆ.ஞானசேகரன், நண்டு @நொரண்டு -ஈரோடு, ILA(@)இளா, கிரி, SathyaPriyan, சுவனப்பிரியன், நட்புடன் ஜமால், இராம.கி, தருமி, சிவபாலன்,Vinoth Kumar, வவ்வால், ராஜ நடராஜன், அறிவன்#11802717200764379909, Vairai Sathish, அன்பை தேடி,,,அன்பு, நம்பள்கி!, கல்வெட்டு, சார்வாகன், தறுதலை, renga, மாதேவி, Jawahar,மௌனகுரு, jaisankar jaganathan,புலவர் சா இராமாநுசம், கிளியனூர் இஸ்மத், அமர பாரதி, renga, அன்பு ஆமீரா, BADRINATH, Krishna Moorthy S, முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ், guna thamizh, கிரி, Karthik Vasudhevan, koodal bala, விழித்துக்கொள், அப்பாதுரை, இராஜராஜேஸ்வரி, வே.சுப்ரமணியன், எல் கே, Ramachandranwrites, பழனி.கந்தசாமி, பனிமலர், O.R.B Raja, ரமேஷ் வெங்கடபதி, மாயன்:அகமும் புறமும், Anonymous, தமிழ் ஓவியா, smart, kamalakkannan, Chilled Beers, Gaana Kabali மற்றும் ganabathy
- இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், பெரும்பாலான பதிவுகள் அன்றன்றே எழுதி வெளியிட்டச் சூழலில் பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழிய முடியவில்லை.
மேலும் எனக்கு அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குறுந்தகவலால் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இடுகைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(நட்சத்திர வார இடுகைகளை வாசித்தவர்கள் எண்ணிக்கை : 8,771)
நட்சத்திர பதிவர் வாய்ப்பு நாம் கேட்டுவாங்குவதில்லை, அதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுக்கிறார்கள் என்று பொருளும் இல்லை, நன்றாக எழுதிக் கொண்டு வந்தால் தமிழ்மண நிர்வாகிகளின் கவனத்திற்கு செல்லும், அல்லது தமிழ்மணம் நிர்வாகிகளை அறிந்தவர்கள் நன்றாக எழுதும் பதிவர்களின் பெயர்களை பரிந்துரைப்பார்கள். அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அதை மட்டுமே அல்லது பிரச்சார உத்தியில் எழுதுபவர்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்காது என்றே நினைக்கிறேன், இவை எனது அவதனிப்பின் மூலமாக அறிந்துள்ள தனிப்பட்ட கருத்து,
திரும்பப் படித்துப் பார்க்கும் நேரமின்மையால் நட்சத்திர இடுகைகளாக எழுதியவற்றின் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க முடியவில்லை. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிர்வாகக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்துவரும் இந்தவார நட்சத்திரப் பதிவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.
32 கருத்துகள்:
பாராட்டுக்கள்.
பொதுவாக நல்ல வாரமாக இருந்தது கோவியாரே!
ஒரு சில இடுகைகளில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தது என்பது உண்மை என்றாலும் நீங்கள் நம்பும் விஷயங்களை ஆணித்தரமா எழுதுனதைப் பாராட்டத்தான் வேணும்:-))))
என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச இடுகை அண்டார்ட்டிகா சமாச்சாரம்:-)))))
//பழனி.கந்தசாமி கூறியது...
பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி ஐயா
//துளசி கோபால் கூறியது...
பொதுவாக நல்ல வாரமாக இருந்தது கோவியாரே!
ஒரு சில இடுகைகளில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தது என்பது உண்மை என்றாலும் நீங்கள் நம்பும் விஷயங்களை ஆணித்தரமா எழுதுனதைப் பாராட்டத்தான் வேணும்:-))))
என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச இடுகை அண்டார்ட்டிகா சமாச்சாரம்:-)))))//
நன்றி அம்மா,
நான் எழுதியதில் எனக்கு அண்டார்டிக்கா பற்றி எழுதியதே மிகவும் பிடித்திருந்தது, அதற்கான தகவல் திரட்டிற்காகப் படிக்கும் பொழுது அங்கு பயணம் செய்தது போன்ற உணர்வு, இயற்கை மீதான பெருவியப்பு இவையெல்லாம் வியப்பூட்டியது, உங்களுக்கு வாய்ப்பிருக்கு அண்டார்டிக்கா மீது பறந்து பார்க்க, 2000 ஆஸி வெள்ளிக்கு விமானத்தில் சுற்றிக் காட்டுகிறார்களாம். ஹாய்யா ஒரு டூர் போய்டுவாங்க
:)
அன்புள்ள கோவி.கண்ணன்,
இந்தவாரம் முழுமையும் மிகுந்த நேரம் செலவழித்து சிறப்பான பல இடுகைகளைத்தந்து தமிழ்மணம் நட்சத்திரப்பகுதியைச் சிறப்பித்தீர்கள்.
தமிழ்மணத்தின் தொடர்ந்த வெற்றி உங்களைப் போன்ற பதிவர்களின் கையில்தான் இருக்கிறது.
தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழுத வாழ்த்துகள்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
மூன்றாம் முறைக்கு இதைவிடவும் இன்னும் சிறப்பாக எழுதி விடுங்கள்
வாசிப்பதோடு சிந்திக்கத்தூண்டிய பதிவுகள் தந்தீர்கள் முக்கியம் நில நடுக்கம் அறிந்து கொண்டேன் .வாழ்த்துக்கள் கோவியரே சிறப்பாக இருந்தது இந்தவாரம்.
well takeoff and good landing :)
திரு.அப்துல்லா சொன்னதை வழி மொழிகிறேன். எழுத ஆரம்பித்துப் பறப்பது கூட எளிது! ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தொட்டுக் கொண்டுவந்து சேர்ப்பது கடினம். தமிழ்மண நட்சத்திர வாரமாக இருந்தாலும், மற்ற வாரங்களாக இருந்தாலும் அந்த வகையில் உங்களுடைய முத்திரை தனித்தே இருக்கிறது. வாழ்த்துக்கள்!
தமிழ்மணம் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டது.
ஆறு தலைமுறை தவிர்த்திருக்கலாம். பனிப்பிரதேசம் அண்டார்டிகா பற்றிய இடுகை நன்றாக இருக்கிறது.
தமிழ்மண நட்சத்திரமாக நல்ல இடுகைகளை தந்ததற்காக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
// -/சுடலை மாடன்/- கூறியது...
அன்புள்ள கோவி.கண்ணன்,
இந்தவாரம் முழுமையும் மிகுந்த நேரம் செலவழித்து சிறப்பான பல இடுகைகளைத்தந்து தமிழ்மணம் நட்சத்திரப்பகுதியைச் சிறப்பித்தீர்கள்.
தமிழ்மணத்தின் தொடர்ந்த வெற்றி உங்களைப் போன்ற பதிவர்களின் கையில்தான் இருக்கிறது.
தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழுத வாழ்த்துகள்.
நன்றி - சொ.சங்கரபாண்டி//
பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கரபாண்டி அண்ணன். மனம் நிறைவாக இருக்கிறது
// தருமி கூறியது...
மூன்றாம் முறைக்கு இதைவிடவும் இன்னும் சிறப்பாக எழுதி விடுங்கள்//
வயது ஏற அனுபவம் கூடும், வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவோம்.
நன்றி ஐயா
//தனிமரம் கூறியது...
வாசிப்பதோடு சிந்திக்கத்தூண்டிய பதிவுகள் தந்தீர்கள் முக்கியம் நில நடுக்கம் அறிந்து கொண்டேன் .வாழ்த்துக்கள் கோவியரே சிறப்பாக இருந்தது இந்தவாரம்.//
மிக்க நன்றி முந்தையவார நட்சத்திரப் பதிவரே.
//புதுகை.அப்துல்லா கூறியது...
well takeoff and good landing :)//
:) தொடர்ந்து ஆதரவளித்து, பிறரின் சில பின்னூட்டங்களுக்கு பதிலும் போட்டுள்ளீர்கள் மிக்க நன்றி அப்துல்லா
//Krishna Moorthy S கூறியது...
திரு.அப்துல்லா சொன்னதை வழி மொழிகிறேன். எழுத ஆரம்பித்துப் பறப்பது கூட எளிது! ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தொட்டுக் கொண்டுவந்து சேர்ப்பது கடினம். தமிழ்மண நட்சத்திர வாரமாக இருந்தாலும், மற்ற வாரங்களாக இருந்தாலும் அந்த வகையில் உங்களுடைய முத்திரை தனித்தே இருக்கிறது. வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி கி.மூ ஐயா. மனம் திறந்தப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி
//ல்தான் கூறியது...
தமிழ்மணம் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டது.
ஆறு தலைமுறை தவிர்த்திருக்கலாம்.
யாராவது இதைப் பேசித்தான் ஆகனும். தலைமுறைப் பெருமைகளின் பெண்களின் பங்கு ஒதுக்கப்படுகிறது. ஒரே பெண்ணாகப் பிறப்பவர்களுக்கு தலைமுறை காணாமல் போய்விடுமா என்ன ?
:)
//பனிப்பிரதேசம் அண்டார்டிகா பற்றிய இடுகை நன்றாக இருக்கிறது.
தமிழ்மண நட்சத்திரமாக நல்ல இடுகைகளை தந்ததற்காக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சுல்தான் ஐயா
தொடர்ந்து கொண்டிருந்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!
கோவி,
நட்சத்திர வார பதிவுகளை விரும்பி படித்தேன். துளசி டீச்சர் கூறியதை போல அன்டார்டிகா பதிவு மிகவும் அருமை.
அன்டார்டிக்காவிற்கு அடியில் பல நூறு வருடங்களுக்கு தேவையான எண்ணை இருக்கிறது என்றும் அதனாலேயே அதனை பூதம் காப்பது போல பல வளரும் நாடுகள் காத்து வருகின்றன என்றும் ஒரு கூற்று உண்டு. உண்மையோ பொய்யோ நமக்கு தெரியாது.
நான் நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்த போது அங்கே க்ரைஸ்ட் சர்ச்சில் அன்டார்டிக் சென்டர் என்ற இடத்தில் இருந்து விமானப் பயணம் செய்யலாம் என்பதை அறிந்தோம். ஆனால் அதற்கும் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா மூன்று நாட்டின் ஒப்புதலும் வேண்டும் என்பது எங்களுக்கு வியப்பாக இருந்தது.
நம்பிக்கைகளின் அடிப்படையில் உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், மாற்றுக் கருத்துக்களை நாகரீகமாக எடுத்து சொல்லும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனது பெயரையும் பதிவில் சேர்த்ததற்கு எனது நன்றிகள்.
பலரும் கூறியது போல மூன்றாம் முறையும் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள்.
நன்றி,
சத்யப்ரியன்.
சத்யப்ரியன்,
ஆஹா..... கிறைஸ்ட்சர்ச் வரை வந்துட்டு ஒரு குரல் விடாமப் போயிட்டீங்களே:(
டீச்சர் மறந்து விட்டீர்களா? உங்களிடமிருந்து தானே க்ரைஸ்ட் சர்ச், க்ரே மவுத் மற்றும் குவீன்ஸ்டவுன் பற்றிய பல தகவல்களை பெற்றேன்.
நான் ரிட்ஜஸ் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். உங்கள் தொலை பேசி எண் எனது மின்னஞ்சலில் இருந்தது. ரிட்ஜஸ் ஹோட்டலில் நாங்கள் தங்கி இருந்த நேரத்தில் இணையம் வேலை செய்யவில்லை. வெளியில் சென்று பார்க்கவும் நேரம் இல்லை. அதனால் தொலை பேச இயலவில்லை.
அமெரிக்கா திரும்பிய உடன் அதற்கு வருத்தம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினேன். நீங்களும் என்னை திட்டினீர்கள்.
இது நடந்தது 2008 ஆம் ஆண்டு. நாட்கள் வேகமாக ஓடுகின்றன.
சத்யப்ரியன்,
அப்போ வந்ததுதானா? மீண்டும் வந்தீங்களோன்னு நினைச்சேன்.
அடுத்தமுறை வந்தால்......
ஐயா கோவியாரே வாழ்த்துக்கள்,
மிகவும் நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள்
இருப்பினும் நீங்கள் பூதை மதத்தை பற்றி ஏதும் எழுதவில்லை எனக்கு அதான் ஒரு சின்ன வருத்தம் :(
கோவிக்கு, நீங்கள் "நன்றாக எழுதுகிறீர்கள்" என்று சொல்வது ஒரு புகழ்ச்சி. தமிழ் நன்கு தெரிந்த எவனும் அப்படி எழுதுவான்! அது பெரிய விஷயம் அல்ல! அல்லவே அல்ல!!
ஆனால், எழுதுவதை நன்றாக எழுதுகிறீர்கள் -- meaning; no compromises in your thoughts.
என்னைப் பொருத்தவரை, இப்படி எழுதுவது அதாவது, தைரியமாக உங்கள்,"Freedom of Speech and Expression" வெளிப்படும் படி எழுதுவது தான் "நன்றாக எழுதுவது," -- என் அகாராதியில்...
அதை நீங்கள், நன்றாக திறம்பட செய்கிறீர்கள். தொடரட்டும்...
பின் குறிப்பு: நான் ஒரு பக்கம் கூகிள் "Transliteration" மூலம் தமிழில் தட்டச்சு செய்வதற்குள், மூச்சு முட்டி விடுகிறது; மேலும் நாக்கும் தொங்கிவிடுகிறது! நீங்கள் எப்படி தட்டச்சு செய்கிறீர்கள் என்று சொன்னால் நல்லது.
இதற்க்கு பதில் முக்கியம்: ஏனென்றால், நானும் தமிழுக்கு சேவை செய்யலாம் என்று இருக்கிறேன்!
//பின் குறிப்பு: நான் ஒரு பக்கம் கூகிள் "Transliteration" மூலம் தமிழில் தட்டச்சு செய்வதற்குள், மூச்சு முட்டி விடுகிறது; மேலும் நாக்கும் தொங்கிவிடுகிறது! நீங்கள் எப்படி தட்டச்சு செய்கிறீர்கள் என்று சொன்னால் நல்லது.
இதற்க்கு பதில் முக்கியம்: ஏனென்றால், நானும் தமிழுக்கு சேவை செய்யலாம் என்று இருக்கிறேன்!//
நம்பள்கி சேட்டு பாய்,
பாராட்டுக்கு மிக்க நன்றி,
http://www.thamizha.com/projectrelease/ekalappai-301
இங்கு சென்று மென்பொருளை தரவிரக்கம் செய்து கணிணியில் நிறுவிவிட்டு அதில் Phonetic தெரிவு செய்து தட்டச்சவும். விரைவாக தட்டச்சலாம்.
//R.Puratchimani கூறியது...
ஐயா கோவியாரே வாழ்த்துக்கள்,
மிகவும் நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள்
இருப்பினும் நீங்கள் பூதை மதத்தை பற்றி ஏதும் எழுதவில்லை எனக்கு அதான் ஒரு சின்ன வருத்தம் :(//
நட்சத்திர பதிவெல்லாம் பூனையாரின் ஆசியால் எழுதப்பட்டவை, பாருங்க பதிவின் மேலேயே இருந்து அருள்பாலிக்கிறார்
//ராமலக்ஷ்மி கூறியது...
தொடர்ந்து கொண்டிருந்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!//
மிக்க நன்றி ராமலக்ஷ்மி
//நம்பிக்கைகளின் அடிப்படையில் உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், மாற்றுக் கருத்துக்களை நாகரீகமாக எடுத்து சொல்லும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனது பெயரையும் பதிவில் சேர்த்ததற்கு எனது நன்றிகள்.//
சத்யபிரியன் தங்களது பின்னூட்டம் நெகிழ்ச்சியாக இருக்கிறது, சக தமிழர்களை மதிக்காமல் வேறு யாரை மதிக்கப் போகிறோம்.
என்னை திட்டிவரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்லும் முன் ஒரு நிமிடமாவது என்பதிவை நேரம் செலவு செய்து படித்துவிட்டு தானே திட்டுகிறார் என்பதை உணர்ந்து சற்று நிதானமாகத்தான் பதில் சொல்வதுண்டு
கோவி,
நட்சத்திர வாரத்தில் நன்றாக எழுதினிங்க என சொன்னால் அப்போ மற்ற நாட்களில் நன்றாக எழுதலைனு ஆகிடும்ல, எப்போவும் நன்றாக எழுதுவீங்க ,அது நட்சத்திர வாரத்தில் "காலம்" தவறாமல் தினமும் ஒரு பதிவாச்சும் கிடைச்சது.
நில நடுக்கம்,சுனாமி பதிவு டைமிங்ல அசத்தினிங்க, குறுகிய நேரத்தில் விரிவான தகவல்கள்.
அனைத்துப்பதிவுகளும் சிறப்பாக இருந்தது. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!
வவ்வால் முகம் தெரியாத நண்பர்கள் மீது அன்பு வைக்க முடியாமா ? என்ற கேள்வியை யாராவது என்னிடம் கேட்டால் முடியும் அந்த நண்பர்கள் பெயர் வவ்வால், கல்வெட்டுன்னு உடனடி பதில் நாக்கில் உட்கார்ந்திருக்கு.
:)
கோவி,
நன்றி!
கொஞ்ச காலமாக பதிவுலகில் இருந்தாலும் பெரும்பாலோர் ஒரு அனானியாகவே என்னைக்கருதுவது வழக்கம், அபூர்வமாக ஒரு சிலர் தான் நட்பு பாராட்டுவார்கள் ,நீங்கள் ஒரு படி மேலே சென்றுவிட்டீர்கள் அன்பும் காட்டுவேன் என மிக்க நன்றி.அதுவும் இல்லாமல் நான் கொஞ்சம் டமாரப்பார்ட்டி நினைப்பதை சொல்லிவிடுவேன் ,அவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்க மாட்டேன், அதையும் பொறுத்துக்கொண்டு இப்படி நீங்கள் சொல்ல ஒரு நேர்மை வேண்டும்,அது நிறையவே உங்களிடம் இருக்கிறது.
முகம் தெரிந்தால் தான் நட்பு வரும் என்பது போன்ற சம்பிரதாயங்களை எனக்கு பிடிப்பதில்லை, உங்களுக்கும் அதே போன்ற எண்ணம் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.கல்வெட்டு எனக்கு ஒரு முன்னோடி எனக்கூறலாம், ஆனால் இப்போ பின்னூட்டக்கடமை மட்டுமே செய்கிறார் பதிவுகள் காணவில்லை, பணிச்சுமையாக இருக்கலாம்.
வவ்வால்,
எனக்கும் உங்களுக்கும், எனக்கும் கல்வெட்டிற்கும் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன், அப்படியே சிலவற்றில் இருந்தாலும் கூட நீங்கள் இருவரும் சொல்லும் மாறுபட்டக் கருத்துகள் எனக்கு சிந்தித்துப் பார்க்க ஏற்பாகத் தான் இதுவரை இருக்கிறது.
முன்பு குமரன் கூட 'வவ்வாலும் கோவி.கண்ணனும் ஒருவராக இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. மூன்று மாதங்களாக வெளி உலகத்திற்கும் என்க்கும் எந்த தொடர்பு இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கின்றேன். எதிர்பாராத விதமாக உள்ளே வந்தால் இன்ப அதிர்ச்சி. நான் பார்த்த வரைக்கும் உங்கள் கட்டுரைகளை என் மதிப்பீடு என்ற பார்வையில் எழுதக் கிடைத்த வாய்ப்பில் முடிந்த வரைக்கும் மனதில் பட்டதை சமரச்ம் இல்லாமல் குறிப்பாக அரசியல் குறித்த கட்டுரைகளில் தெளிவாக சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறீர்கள்.
நல்வாழ்த்துகள்.
கருத்துரையிடுக