பின்பற்றுபவர்கள்

9 ஏப்ரல், 2012

* எதிர் கிருமி (Anti-Virus) மென்பொருள் இல்லாமல் கணிணிகளை இயக்க முடியுமா ?

உங்களில் பலர் மென்பொருள் துறையில் அன்றி அல்லது வேலை செய்யும் துறையில் கணிணியில் வேலை செய்யாமல் தனி உடைமையாக வீட்டினுள் கணிணி வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள், அதை இயக்கும் அல்லது பயன்படுத்தும் அளவுக்கு திறன் பெற்றவர்களாக இருப்பீர்கள்.  பொதுவாக இவ்வாறு தனிப்பட்ட முறையில் கணிணி பயன்படுத்டுபவர்களுக்கு பயன்படுத்துவதில் அச்சம் இருக்கவே செய்யும், அதில் சிலர் வீட்டில் யாரையும் தொடவும் விடமாட்டார்கள், காரணம் எதோ ஒரு காரணத்தினால் இயங்காமல் போனால் கணிணி பயன்படுத்துவது தடையாகிவிடும் என்கிற அச்சம் தான், பொதுவாக இந்த அச்சம் தேவையற்றது, தெரியாமல் விசைப்பலகையில் ஒரு விசையை அமுக்குவதால் கணிணி செயல்படாமல் போகும் என்ற அளவுக்கெல்லாம் இயங்கு மென் பெருள் (Operating System) அமைக்கப்பட்டிருக்காது, எல்லோரும் பயன்படுத்தும் வகையில் தான் அமைத்திருப்பார்கள், முதன் முதலில் பயன்படுத்தும் போது கண்ணைக் கட்டி விட்டிருப்பதைப் போல் இருந்தாலும், நாளடைவில் நாம் அதில் பயன்படுத்தும் எழுதிகளையும் (வேர்ட் ப்ராசசர்), அட்டவணைகளையும் (எக்ஸெல்), மற்றும் இணைய உலவிகள் (இண்டெர் நெட் எக்ஸ்ப்ளோரர்)  பயன்படுத்தத் தெரிவதால் பின்னர் அந்த அச்சம் போய்விடும்.

கணிணி வைரஸ் என்பது இயங்குதளத்தின் நுட்பத்தை குறுக்குவழியாக பயன்படுத்தி கணிணியை முடக்கும் ஒரு மென் பொருள் தான், இணைய பயன்பாடு இல்லாத காலங்களிலேயே இவைகள் சேமிப்பு தட்டுகளின் (ப்ளாப்பி டிஸ்க்) மூலம் வேக மாகப் பரவின, தற்பொழுது இணையம் வழியாக பரவுகின்றன, வைரஸ் எழுதிவிடுபவர்கள் முன்பு போல் நோக்கமின்றி ஒரு அரைகூவலாக எழுதி விட்டு வேடிக்கைப் பார்ப்பது போல் தற்பொழுது செய்வதில்லை, பெரும்பாலும் வியாபாரம் தொடர்பில் அவை எழுதப்பட்டு உங்கள் கணிணிக்கு அனுப்பப்பட்டு மிகப் பெரிய அளவில் மின் அஞ்சல்களை அனுப்புவம் அந்த மின் அஞ்சலை படிப்பவர்களிடம் பொருள்களை விற்பனை செய்யும் தந்திரமாக அவை செயல்படுகின்றன, இவற்றை மால்வேர் என்பர். இணையம் வழியாக பரவுபவை பெரும்பாலும் இந்த வகை வைரஸ்களே, இவை கணிணீயில் செயல்படும் போது கணிணி மையச் சில்லின் (CPU) மொத்தத் திறனையும் எடுத்துக் கொள்வதால் இயல்பாக நாம் பயன்படுத்தும் கணிணி வேகம் குறைந்துவிடும் அல்லது செயல்பாடு முடக்கப்படும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆண்டி வைரஸ் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். அதை விற்பனை செய்யும் நிறுவனமும் பெருந்த லாபம் அடைகிறது, 90 விழுக்காட்டு வைரஸ்கள் ஆண்டிவைரஸ் நிறுவனங்களால் இணைய வெளியில் அனுப்பப்படுகின்றவை, ஏவுகணை தாக்குதலை ஏவுகணைத் தாக்குதலால் முறையடிப்பது போல் மற்ற ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் அதற்கான தற்காப்பு மென் பொருளை அமைக்கும், உருவாக்கியவர்களே கூட ஆண்டி வைரஸ் மென்பொருளையும் விற்பார்கள், இவையெல்லாம் தொழில் நுட்ப அறிவுத்திறனை குறுக்குவழியில் பயன்படுத்துவது ஆகும், போட்டித்தன்மை மிக்க உலகில் இவை எதிர்பார்த்தது மற்றும் இயல்பானது தான்.

கணிணி வைரஸ்கள் பற்றி அறியாதவர்கள் இந்த மென் பொருளை வாங்கிப் பயன்படுத்துவது தேவை என்ற அளவில் தான் நிலைமை உள்ளது, அதுவும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் மற்றொரு பக்கம். ஆனாலும் கணிணியின் செயல் கட்டுப்பாடுகளை நாம் மாற்றி அமைப்பதன் மூலம் இத்தகைய மென்பொருள் இல்லாமலேயே நாம் கணிணியை இணையங்களிலும் கூட பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸிபி மற்றும் அதற்குப் பிறகான மைக்ரோசாப்ட் இயங்குதள மென்பொருளில் (Operating System) அட்மின் பயனர் (administrator account) கணக்கு ஒன்று இயங்குதள மென்பொருளை அமைக்கும் போதே அமைந்துவிடும், விண்டோஸ் மென்பொருளை நிறுவும் போது அட்மின் பெயருக்கான கடவுச் சொல்லை தெரிவு செய்யச் சொல்லிக் கேட்கும், அதை வெற்றாக (empty) விடாமல் 8 எழுத்துகளுக்கும் மேலான எண்ணிக்கையில் கடவுச் சொல்லை பொறுத்திக் கொள்ளுங்கள், அது தவிர முதல் பயனர் உள்ளிட்ட 5 பயனர்கள் பெயரை பின்னர் கேட்கும், அதில் பெரும்பாலும் முதல் பயனர் கணக்கில் தங்கள் பெயரை அல்லது இல்லத்தில் உள்ளவர்கள் பெயரையோ கொடுப்பார்கள், இந்த முதல் பயனர் கணக்கும் அட்மின் பயனர் கணக்கும் Installation Rights எனப்படும் மென்பொருள் நிறுவிக் கொள்ளும் admin உரிமை பெற்றிருக்கும், நீங்கள் அட்மின் பயனர் கணக்கு பயன்படுத்தாவிட்டாலும் முதன் முதலாக அமைக்கும் பயனர் கணக்கு அட்மின் உரிமையுடன் தான் இருக்கும். அதை பயன்படுத்தி கணிணியை இயக்காமல் புதிதாக ஒரு பயனர் கணக்கைத் துவங்கி அதில் 'Change Account Type' என்பதை தெரிவு செய்து 'Limited' என்று மாற்றிக் கொண்டு அந்தக் கணக்கை பயன்படுத்துங்கள்.

Limited User கணக்கை நுழைவு (Login) கணக்காகப் பயன்படும் பொழுது எந்த ஒரு மென் பொருளையும் புதிதாக நிறுவ முடியாது, பெரும்பாலும் கணிணி வைரஸ் அல்லது மால்வேர்கள் அட்மின் உரிமை உள்ள கணக்கின் வழியாக நுழையும் பொழுது வைரஸ் அல்லது மால்வேர் மென்பொருள்களை அந்த அட்மின் உரிமை மூலமாக நிறுவிடுகின்றன  Limited User ஆகப் பயன்படுத்தும் போது அவற்றால் செயல்படமுடியாது, ஒரு சில மால்வேர்கள் தனிப்பட்ட பயனராக இங்கும் நுழையும், அதை அகற்றுவது மிக எளிது தேவையான கோப்புகளை / படங்களை சேமித்துவிட்டு, அந்த  Limited User கணக்கை மொத்தமாக நீக்கிவிட்டால் அந்த மால்வேரும் அழிந்துவிடும், பிறகு பழைய படி அதே பயனர் கணக்கை அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.






விண்டோஸ் Firewall ன்னும் தடுப்பு சுவரை 'ON' செய்வதன் மூலம் மால்வேர்கள் நுழைவதையும் தடுத்துவிடலாம். விண்டோஸ் Firewall ஐ அட்மின் கணக்கின் வழியாகத்தான் ON/OFF செய்ய முடியும், Limited User பயன்படுத்திவரும் பொழுது புதிய மென் பொருளை கணிணியில் சேர்க்க வேண்டுமெனில் Logout செய்துவிட்டு அட்மின் உரிமை உள்ள கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மென் பொருளை அமைத்துவிட்டு Logout செய்துவிட்டு மீண்டும் Limited User  கணக்கின் வழியாக நுழைந்து புதிய மென் பொருள் அமைக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கணிணி வைரஸ்கள் உள்ளே நுழைந்தாலும் தானாக செயல்படும் ஆற்றல் வெகுவாக குறைக்கப்படுவதுடன் ஆண்டி வைரஸ் மென்பொருள் இன்றியே கணிணியை பயன்படுத்த முடியும்

கணிணி வைரஸ் மற்றும் மால்வேர்கள் கணிணியினுள் செல்லாமல் இருக்க பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை :

  • தேவையற்ற அல்லது அனைத்து Tool Bar களையும் இணைய உலவியில் இருந்து நீக்குங்கள்
  • பொதுவாக ஆபாச இணையத் தளங்கிலிருந்து தான் மால்வேர் மற்றும் வைரஸ்கள் பரவுகின்றன, அவற்றிற்கு தெரியாமல் அல்லது தெரிந்தே சென்றால் எதாவது pop-up விண்டோஸ் வந்து OK, Yes எதாவது கேட்டால் உடனேயே மூடிவிடுங்கள், அப்படி மூடமுடியாமல் போனால் Task Manager (ctrl+alt+del, then select Star Task Manager, under Process, Select the Browser Name then Kill Process Tree ) வழியாக அந்த உலவியின் செயல்பாட்டை நிறுத்திவிடுங்கள். \
  • உலவிகளின் Plug-in வகைகளில் தேவையற்றதன் செயல்பாடுகளை (Disable) நிறுத்திவிடுங்கள்


IE Plug-in



  • உலவியின் Cookies' களை அடிக்கடி அழித்துவிடுங்கள் (Clean)
மேலே சுட்டியுள்ளபடி Limited User பயன்படுத்துவதில் ஏதேனும் ஐயம் இருந்தால் தெரியப்படுத்தவும். விண்டோஸ் XP க்கு என்று எடுத்துக்காடுகள் கொடுத்திருந்தாலும் விண்டோஸ் 7 மற்றும் 8 ஆகியவைகளிலும் இதே முறைகள் தான் பின்பற்றப்படுகின்றன.

மற்றொரு பதிவில் admin user கடவுச் சொல் மறந்துவிட்டால் அல்லது செயல்படாவிட்டால் கணிணி தகவல்களை எப்படி மீட்டெடுப்பது என்று பார்ப்போம்.

12 கருத்துகள்:

Unknown சொன்னது…

JI... we can try free anti virus also na...

வவ்வால் சொன்னது…

கோவி,

நட்சத்திர வாழ்த்துகள்.

நல்ல விஷயம் சொல்லி இருக்கிங்க, ஆனால் இக்காலத்தில் இதெல்லாம் செல்லுபடியாகது.

கொசு விரட்டி இருந்தாலும் கொசு கடிக்கும், இல்லைனாலும் கொசுக்கடிக்கும், கொசுக்களின் எண்ணிக்கை வேண்டுமானால் கூட குறையலாம் :-))

அப்படித்தான் நீங்க சொல்லி இருக்கும் அட்மின், லிமிட்டட் யூசர் கணக்கு எல்லாம்.

//ஒரு சில மால்வேர்கள் தனிப்பட்ட பயனராக இங்கும் நுழையும்,//

இது எப்படி நுழையும் என்று விளங்கிக்கொண்டால் எல்லாம் புரிந்து விடும். நீங்கள் இப்பகுதியை விளக்காமல் நுழையும் என்று ஒரே வாக்கியத்தில் கடந்து விட்டீர்களே.

ராஜ நடராஜன் சொன்னது…

யாரு கோவியின் தளத்தை ஹேக் செய்தது:)

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்வால்! கடிக்கிற கொசுவுக்கு ஊசி போட்டுக்கிற மாதிரி.நீங்க ஏன் ஸ்டெதாஸ் வச்சுப்பார்க்காமலே டாக்டர் ஊசி போட்டுட்டாருன்னு கூவுறீங்க:)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பயனுள்ள தகவல்...

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,நட்சத்திர வாரத்திற்கான வாழ்த்துக்கள்...

பல சமயங்களில் தமிழார்வலர்களிடம் மிக நேரடியான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பார்க்கிறேன்..உங்கள் பதிவின் தலைப்பும் அவ்விதத்தில் வருகிறது...
எதிர் கிருமி என்பதை விட கிருமித்தடை மென்பொருள் என்பது சரியான சொல்லாக்கம் என்பது என் கருத்து.

நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு நண்பா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்கள்.

வவ்வால் சொன்னது…

ராஜ்,

அது சரி, அட்ரெஸ் கேட்க வந்தவனைக்கூட புடிச்சு ஊசிப்போட்டா :-)) நீங்க மருந்து விற்பனை பிரதிநிதிப்போலவே பேசுறிங்க :-))

மூக்கு இருக்கிறவரைக்கும் ஜலதோஷம் இருக்கும் அது போல என்ன செய்தாலும் வைரஸ் வந்துடும், குறைவான அளவுக்கு பாதிப்பு வருவது போல தான் செய்ய முடியும்.

வைரஸ்னு இல்லை உபத்திரவம் செய்யும் சில மால்வேர்கள்,ஆட்வேர்கள் இம்சை அளிப்பதை நாம என்ன பாதுகாப்பு போட்டாலும் வந்துடும். நல்ல உலாவி, இணையத்தினை பயன்ப்படுத்தும் முறைகள் தான் தடுக்கும்.

எக்ஸ்ப்லோரர் வைத்திருந்தால் என்ன பாதுகாப்பு செய்தாலும் தொல்லைகள் வந்து ஒட்டிக்கும் ,முக்கியமா ஹோம் பேஜ் ஹைஜாக்கர் என்ற ஆட்வேர்/மால்வேர் , ஒபெரா, பையர் ஃபாக்ஸ், குரோம் போன்றவையே நல்ல பாதுகாப்பு தரும்.

அதுக்கு தான் கொசுக்கடி சொன்னேன், என்ன சொல்றாங்கனே புரியாமல் ஊசி எடுத்து வாங்க :-))

ILA (a) இளா சொன்னது…

Dont use Browsers, external Storages will eliminate all the "wares" :)

ANBUTHIL சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்!நம்ம கச்சேரியை இங்கே வைத்தால் கோவி கோவிச்சுக்குவார்.

வந்தேன்! கண்டேன் கொசு ஊசி:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்