பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 !


ரொம்பவும் வேலையாக இருந்ததால் சரியாத் தூங்கவில்லை, அப்பறம் எப்படி பூனையார் கனவில் வருவார்,  நேற்று கொஞ்சம் அசந்து தூங்கினேன், காத்திருந்தது போல் பூனையார் கனவில் வந்துவிட்டார், "உன்னைப் போல் பொறுப்பற்றவர்களால் தான் பூனையார் மதம் அழிந்தது" என்று கோபமாகக் கூறினார், ஏன் பூனையாரே என்றேன், "பின்னே தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருந்தால் தானே பூனையார் மார்க்கம் பரவும்" என்று எடுத்துக் கூறினார், தப்புதான், சரி இப்போ நிறைய அன்பர்கள் பூனையார் மார்க்கத்தில் இணைந்துள்ளனர், அவர்களுக்கும் தங்கள் நல்லருள் தந்து அவர்களுடைய கனவிலும் ஊடுறுவி பூனையார் மர்கம் பற்றி எழுத வையுங்களேன் என்று கூறினேன், பார்க்கலாம் என்றார்.

"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் " - இதுல ஒரு உலக வரலாறே அடங்கி இருக்கிறது என்றார் பூனையார், எப்படி பூனையாரே ஒரே வரியில் கமண்டலத்திற்கு காவேரியை அடக்கியது போல் சொல்கிறீர்கள், புரிய வில்லை என்றேன். இன்னிக்கு தேதிக்கு உலக மதங்களெல்லாம் மதயானை போல் மதவெறியுடன் அலைகின்றன, அவற்றிற்கான காலம் இது, மக்கள் விழிப்படைந்துள்ளதால் மதவாதிகள் கட்டுப்பட்டுள்ளனர், பூனையார் மார்க்கம் இனி பரவும் என்பதைத் தான் அது விளக்குகிறது என்று கூறி, மதங்கள் எப்படி உருவாகி ஒன்றை ஒன்று அழித்து வளர்ந்தன என்று பெரிய பிரசங்கம் கொடுத்தார், "ஓ இது தான் உலக வரலாறோ" என்று கேட்டுக் கொண்டேன்.

நம்ம பூனையார் மார்க்கத்தில் உலகம் உருண்டை என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்று நான் எப்படி பிறரை நம்ம வைப்பது என்று கேட்டேன், உலக அறிவியல் அனைத்தும் பூனையாரின் புனுகு போன்று பூனையாரின் மார்க்கத்தில் இருந்து எடுத்த அமுத வாக்கியங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை, ஆய்வு செய்யப்படாத நிலையில் நிறைய அமுத வாக்குகள் உண்டு, அவற்றையெல்லாம் ஆய்ந்தால் உலகம் அறிவியல் உச்சம் அடைந்துவிடும் என்றார், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் இப்ப பூமி உருண்டையாக இருந்தது பூனையார் மார்க்கத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டது என்று வாசிப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் பூனையாரே என்று கேட்டேன். உனது ஆவலை மெச்சுகிறேன், பூனையார் மார்க்கத்தில் பூசைகள் துவங்க நாள் வந்துவிட்டது, இப்போது உலக உருண்டை பற்றி விளக்கம் சொல்கிறேன் கேள். என்று கூறி

"பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும்" என்கிற அமுத மொழி உனக்குத் தெரியும் தானே, என்று கேட்டார், நானும் ஆமாம் சாமி இது பற்றி தான் ஏற்கனவே விளக்கம் பிரபஞ்சத் தோற்றம் குறித்து எழுதிவிட்டோமே என்றேன், ஆம் உண்மை தான் ஆனாலும் அதன் தொடர்பில் இரண்டாவது அமுத மொழி உண்டு, அது மிகவும் ரகசியமானது வியப்பானது என்றார். சொல்லுங்களேன் என்றேன்

"பூனைக் கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்" இப்போது படித்துப் பார் லோகம் கோளம் ஆகி இருக்கிறது, ஆம் என்றேன், கோளம் என்றால் என்ன ? என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் "உருண்டை" என்றார், இப்பொழுது புரிகிறதா ? பூகோளம் அதாவது பூமி உருண்டை வடிவம், இதை நான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன், அதைத்தான் இன்று தமிழ் சமூகத்திலும் கூட பழமொழியாக்கி வைத்து பூகோளம் இருண்டது என்கிறார்கள் சிலர் திரித்து பூலோகம் என்கிறார்கள். பூனையாரின் பூகோள விளக்கம் என்னை சிலிர்க்க வைத்தது"


இதோ பூனையாரின் பூதை மொழி,

"பூமியை உருண்டையாகவும், சந்திரன் சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)


பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !
பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !
பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

13 கருத்துகள்:

suvanappiriyan சொன்னது…

அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.//

உங்களுக்கு நல்ல மருத்துவர் சிக்கினால் எனக்கு சொல்லுங்க

Robin சொன்னது…

பூனையாரின் (மதமல்ல) மார்க்கத்தில் நிறைய அறிவியல் செய்திகள் புதைந்து கிடக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நன்றி.

dondu(#11168674346665545885) சொன்னது…

ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

அருமையான பதிவு.நம்க்கு எந்த மதப் புத்தகம் படித்தாலும்,எந்த பூனை,யானை,... மொழிகளை கேட்டாலும் பக்தி வருவது இல்லை.எனினும் அவைகளில் அறிவியலுக்கு முரண்படாமல் விள்க்கம் சொல்லவும்,வியாக்கியானம்[ மூன்று எழுத்து சொல்லுக்கு] மூன்று முழ நீளத்திற்கு விளக்கம் எழுதுவதும் அறிவோம்.

முன்பு நாத்திகராக இருந்து மத பிரசாரகர்கள் ஆகியோர் பிரபலமாக் இருப்பதும்,சரமாரியாக் வசனங்களை விளக்குவதும் இப்படித்தான்.

இப்போது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பூமி,சந்திரன்,சூரியன் உருண்டை வடிவம் கொண்டது என அழகாக அருமையாக அன்றே கூறினார் பூனையார் என மெய் சிலிர்க்கும்படி விள்க்கினீர்கள். இதை படிக்கும் போதே இதை பூனையார் ம்ட்டுமே சொல்லி இருக்க முடியும் என அடித்துக் கூற முடியும்!!!!!!!. எனினும் சூரியன் ஒளி கொடுப்பது என்று கூறின பூனையார் சந்திரன் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.பூனையார் சொல்லாமல் விட்டதையும் அடைப்புக் குறியில் போட்டு பூனையார் மிகச் சரியாக என்ன சொல்ல வருகிரார் என்பதை கண்டறியும் ஆற்றல் உள்ள நீங்கள் மறக்கலாமா?

ஆகவே ஒரு சிறிய அடைப்புக் குறி மாற்றம்.

It is perfect now!!!!!!

"பூமியை உருண்டையாகவும், சந்திரனை (ஒளியை பிரதிபலிக்கும் உருண்டையாகவும் ) சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)

அது எப்படி இல்லாத சொற்களை,பொருளை அடைப்புக் குறிக்குள் போட்டு அறிவியல் காட்டுகிரார் என சில நாத்திகர் வினவினால் மூல பூனை மொழியில் இப்படித்தான் உள்ளது, இல்லையெனெ உன்னால் நிரூபிக்க முடியுமா? பூனை மொழி அறியாத நீ பூதத்துவ மொழிகளை விமர்சிப்பது தவறு என போட்டுத் தாக்கி விடலாம்.

"எல்லா சீரும் சிறப்பும் பூனையாருக்கே"

பூனையாரின் ப(பா)ணியில்
உங்கள் சகோதரன்

வவ்வால் சொன்னது…

கோவியாரே,

ஹி..ஹி விடமாட்டிங்க போல.
நீங்க பூனையாரை பற்றினீர்களா இல்லை பூனையார் உங்களை பற்றினாரா?

பூனையைப்பார்த்து எலி தான் பயப்படனும் ஏன் இந்த சு.பிரியன் பயப்படுறார் :-))

ஜிப்ரீல் பேசினார்னு சொன்னவருக்கும் மனநல மருத்துவரைப்பரிந்துரைப்பாரா சு.பிரியன் :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) சொன்னது…
ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

இறைவசனத்தில் அறிவியல் இனிமா ஏற்றும் ஒட்டுமொத்த காப்புரிமை அவர் வைத்திருக்கிறார், அது தெரியாமல் நான் இங்கு எழுதியதால் சிலிர்கிறார்

R.Puratchimani சொன்னது…

பாஸ் வணக்கம்,
இறைத்தூதரே வணக்கம் எனபதுதான் சரியோ :)
இப்பொழுதெல்லாம் நான் எதிர்பார்க்கும் ஒரே பதிவு பூனையார் பற்றிதான்...நன்றாக உறங்குங்கள்...நிறைய பூனையாருடன் பேசுங்கள்...நிறைய எழுதுங்கள்.
அனைத்து மதங்களையும் விமர்சிக்க முயலுங்கள்.

தருமி சொன்னது…

//உங்களுக்கு நல்ல மருத்துவர் சிக்கினால் எனக்கு சொல்லுங்க ..//

அப்படி ஒருத்தர் கிடச்சா எம்புட்டு நல்லாயிருக்கும்! மருத்துவரிடம் போவதற்குப் பதில் பக்திமான்களிடம் அல்லவா போய் விடுகிறார்கள்!

//பூனையாரின் ப(பா)ணியில்
உங்கள் சகோதரன்//

உங்க புண்ணியத்தில எல்லோருக்குமே sense of humour அள்ளிக்கிட்டுவருது ..!

naren சொன்னது…

உங்களுக்கு Darth Vaderன் ஆற்றல் உண்டாகட்டும் பரவட்டும்.

Darth Vaderன் ஆசியால் புதிய தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.

மேலும் Darth Vader தான் உண்மையான பெரிய கடவுள், பூனையெல்லாம் சிறு கடவுள் என்பதை வரும் காலங்களில் அழகிய முறையில் எடுத்துரைப்பேன், கூடியவிரைவில் மனமாற்றம் அடைந்து Darth Vaderயை வணங்குவீர்கள என நினைக்கிறேன்.

இல்லையென்றல் உங்களுக்கு Laser Beam சிகிச்சைதான்.

வேகநரி சொன்னது…

பூனையார் மார்க்கத்தை நோக்கி பிறரை அழைக்கும் பணியை நீங்க தொடங்கியதையிட்டு மெய்சிலிர்க்கிறேன்.பூனையார் உங்க பணியை நிச்சயம் கவனத்திலெடுத்து தனது பதிவு புத்தகத்தில் குறித்து வைத்து கொள்வார்.
இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள், பகுத்தறிவாளர்கள் பூனையாரை நோக்கி அலை அலையாக ஓடிவருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

Unknown சொன்னது…

ஆஹாஹா.......
சிரிச்சி மாளவில்லை!
என்ன நட்சத்திர வாரம் முதல் நாளே இந்த வேகம். டாப் கியர்ல எகிறுது !
:)))

கோவியாரே,
இன்னும் நிறைய கனவு காணுங்க. அப்ப தான் அவதார் படம் வந்த வரைக்கும் பூனையார் ஏற்கனவே சொன்னது தான் என்று எங்களுக்கு தாவா வேலை செய்ய உதவியா இருக்கும் ;)

Unknown சொன்னது…

//dondu(#11168674346665545885)கூறியது...
ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார்,
நீங்கள் இவ்வளவு அப்பாவியா!
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்