கேள்வி: சுயப்புணர்ச்சி – வேதாகமத்தின்படி இது பாவமா?
பதில்: வேதாகமம் (மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின் கதை. தரையிலே “தன் வித்தை விழவிடுவது” பாவம் என்று சிலர் இந்தப் பகுதியின் விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல. “வித்தை தரையில் விழவிட்டதற்காக” கர்த்தர் ஓனானைத் கண்டிக்கவில்லை, மாறாக, தன் சகோதரனுக்கு சந்த்தியை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்கே கர்த்தர் அவ்வாறு செய்தார். இந்த பகுதி சுயப்புண்ர்ச்சியைப் பற்றியதில்லை மாறாக ஒரு குடும்ப கடமையை நிறைவேற்றுவதைப் பற்றியதே. சுயப்புணர்ச்சி பாவம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இரண்டாவது பகுதி மத்தேயு 5:27-30. இச்சைச் சிந்தனைகளை கொண்டிருப்பதற்கு எதிராக இயேசு பேசிவிட்டு பின்பு “உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதை தறித்து எறிந்துபோடு” என்கிறார். இந்தப் பகுதிக்கும் சுயப்புணர்ச்சிக்கும் இடையில் இணை இருந்தாலும் இயேசு சுயப்புணர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறார் என்று கூறுவதற்கில்லை.
சுயப்புணர்ச்சி பாவம் என்று வேதாகமம் வெளிப்படையாக எங்கும் சொல்லவில்லையானாலும், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் செயல்கள் பாவமா என்பதைப் பற்றியும் ஒரு கேள்வியுமில்லை? இச்சையான சிந்தனை, பாலுணர்வுத் தூண்டல்கள் மற்றும் அல்லது நிர்வாண உடலுறவுக் படங்கள் போன்றவைகள்தான் அதிகமாக சுயப்புணர்ச்சிக்கு இட்டுச் செல்வன. இந்த பிரச்சினைகளையே சரி செய்ய வேண்டியிருக்கிறது. இச்சையினால் வரும் பாவங்களையும், ஒழுக்கந்தவறிய சிந்தனைகளையும், ஆடை நிர்வாண உடலுறவுக் காட்சிகள் ஆகியவற்றை கைவிடமுடியுமானால் சுயப்புணர்ச்சி ஒர் பிரச்சினையே இல்லை. மனிதர்கள் பலரும் சுயப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட குற்ற உணர்வுடனே போராடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில், சுயப்புணர்ச்சிக்கு இட்டுச்செல்லும் விஷயங்களே அதிகமாக மனந்திரும்ப வேண்டியவைகளாக இருக்கின்றன.
சுயப்புணர்ச்சி பிரச்சினை பற்றி நோக்க சில வேதாகமக் கோட்பாடுகள் உண்டு. “வேசித்தனமும் மற்றெந்த அசுத்தமும் ஆகிய பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவும்கூடாது” என்று எபேசியர் 5:3 அறிவிக்கிறது. இந்த கடினமான சோதனைக்கு சுயப்புணர்ச்சி எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை. “ஆகையால் புசித்தாலும், குடித்தாலும், என்னத்தைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர்10:31) என்று வேதாகமம் கூறுகிறது. எந்த காரியத்தில் கர்த்தருக்கு மகிமை கொடுக்கமுடியாதோ அதைச் செய்யக்கூடாது. ஆகவே ஒரு காரியம் தேவனுக்குப் பிரியமானது என்று முழுமையாக ஒப்புக்கொள்ள ஒரு மனிதருக்கு முடியாத பட்சத்தில் அந்தக் காரியம் பாவமே: “விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே” (ரோமர் 14:23). மேலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது நம் உடல் கர்த்தரால் மீட்கப்பட்டதும் அவருக்குச் சொந்தமானதுமாகும். “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரிந்தியர் 6:19-20). இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய உடலை வைத்து என்ன செய்கிறோம் என்பதின் மேல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். இந்தக் கோட்பாடுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, சுயப்புணர்ச்சி பாவம் என்ற முடிவு வேதாகமப்படி சரிதான். தெளிவாகவே, சுயப்புணர்ச்சி கர்த்தருக்கு மகிமையை கொண்டு வருவதில்லை; ஒழுக்கந்தவறுகிறது போன்ற தோற்றத்தை அது தவிர்ப்பதுமில்லை, நம் உடல் கர்த்தருக்குச் சொந்தமானது என்ற சோதனையையும் இது தாண்டுவதில்லை.
நன்றி : http://www.gotquestions.org/Tamil/Tamil-masturbation-sin.html
அருஞ்சொற்பொருள்
சுயப்புணர்ச்சி - ஓரின சேர்கை அல்லது ஓரின பாலியல் விருப்பம்
வித்தை - விந்து அல்லது ஆண் உயிரணு திரவம்
வேசித்தனம் - பாலியல் தொழில்
இச்சை - விருப்பம்
சரீரம் - உடல்
ஆவியினாலும் - உயிரினாலும்
விசுவாசம் - மேலான அன்பு
மகிமை - பெருமைபடுத்துதல்
இந்த கேள்வி பதில் என்ன சொல்கிறது ?
ஓரின சேர்க்கை கிறித்துவத்தில் நேரடியாக கண்டிக்கப்படவில்லை, தவிர பாலியல் தொழில் உள்ளிட்ட பிற ஒழுக்கக் கேடுகள் போன்றே அவை கருதப்படும் என்கிறது, மற்றும் இவை பழைய ஏற்பாட்டின் படியான விளக்கங்களாகும்.
*******
என்ன கொடுமை சார், நான் இதைப்படிக்கும் போது ஓரின சேர்க்கைப் பற்றியதோ என்று நினைத்தேன், பின்பு பார்த்தால் அது சுய இன்பம் என்னும் கைப்பழக்கம் குறித்த கேள்வி பதில் விளக்கமாம். எத்தினி பேர் அதைச் செய்யும் போது பாவம் என்று கருதுகிறீர்கள் ?
அருஞ்சொற்பொருள்
சுயப்புணர்ச்சி - கைப்பழக்கம்
பின்குறிப்பு : கிறிஸ்துவம் என்னை ஈர்க்கிறது, ஏசு கிறிஸ்துவின் போதனைகளில் நான் ஈர்க்கப்பட்டுவிடுவேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது, நான் கிறிஸ்துவத்திற்கு மாறினால் எனக்கு உடல் சேதம் எதுவும் தேவைப்படாது, அதாவது காது குத்துதல் உள்ளிட்ட என்று புரிந்து கொள்ளவும், மேலும் பிடிக்கவில்லை என்று வெளி ஏறினாலும் தேடி வந்து உதைக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கிறிஸ்துவ மதத்தின் மீதான என் பற்றுதல் பள்ளிக் காலத்தில் சனிக்கிழமை வேத பாட வகுப்புகளுக்கு செல்வதில் இருந்து துவங்கி விட்டதாக நினைக்கிறேன், ஏசு கிறிஸ்து இன்னும் என்னை நாடவில்லை என்பதால் இன்னும் தயங்கிக் கொண்டே இருக்கிறேன்.
நான் ஏன் கிறிஸ்துவத்தை விளம்பரம் செய்யக் கூடாது ? மிசனெறிகள் பொருள் உதவி செய்தால் அதுவும் எனக்கு வேண்டாம், ஏதாவது ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு பணமாக அனுப்பி வைத்துவிட்டு அதன் பற்றுச் சீட்டை எனக்கு அனுப்பினாலே போதும் நான் திங்களுக்கு 30 பதிவுகளை கிறிஸ்துவ மதம் வளர்க்க எழுதுவேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் மதங்களை விளம்பரப்படுத்த தடையேதும் இல்லை அவை பிற மதங்களை தூற்றாவிடில் என்கிற புரிந்துணர்வு வாசகர்களிடையே உள்ளது.
உண்மையானவரும் ஆண்டவருமான ஏசு கிறிஸ்து என்னை விரைவில் நாடுவாராக, அதற்கு உங்கள் பிரார்தனைகள் தேவை. மேலும் மேலும் கிறிஸ்துவம் பதிவுகள் வழியாக பரப்ப, தமிழ்மணம் திரட்டியின் மகுடத்தைக் கைப்பற்ற வேண்டும், ஏற்கனவே துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் மகுடாதிபதிகளை வீழ்த்தி இந்தப் பதிவை தமிழ் மணத்தில் மகுடம் ஏற்ற விரும்பினால் அதற்கு 38 - 40 வாக்குகள் தேவைப்படுகிறது. ஏசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட பதிவர் ராபின் உள்ளிட்டவர்கள் போலி ஐடிகளையாவது உருவாக்கி இந்தப் பதிவை மகுடம் ஏறறி திரட்டியை நாறடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
அதுக்கு முதல்ல தமிழ்மணத்தில இணைக்கனும்., அதச் செய்ங்க....:)
எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கோ போய் எப்படியோ முடித்துள்ளீர்கள். கடைசியில் கிறித்துவத்திற்கு பணம் வாங்காமல் சேவை செய்கிறேன் என்பது அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.என்ன நடக்கிறது? இருந்தாலும் கமெண்ட்டுன்னு வந்ததுக்கு ஒருவிஷயம் எனது பதிவில் இருந்து //ஆனால் ஆணிடம் உள்ள விந்து, சரியான வெளிப்பாடு இல்லாத பட்சத்தில் ஆணுக்கே பலவிதமான மனோவியல் பிரச்னைகளை உருவாக்கி, சில சமயங்களில் எமனாக கூட மாறிவிடுகிறது. விந்து, அதிகமாக பைகளில் இருந்தால் சமூக அக்கறை குறைவாக உள்ளவர்களிடமும், பிரம்மச்சாரியத்தை முறையாகக் கையாளத் தெரியாதவர்களிடமும் மிருக புத்தியையும், முரட்டுத் தைரியத்தையும் கொடுக்கிறது. சிலசமயங்களில் வேலைக்காரிகள், கிழவிகள் அழகாகத் தெரிவதும், பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம் செய்து அடி உதை வாங்குவதும் இதானால்தான்//..பதவி இழப்பதும் அதனால்தான்.
http://chandroosblog.blogspot.in/2011/10/16.html
//நிகழ்காலத்தில் சிவா said...
அதுக்கு முதல்ல தமிழ்மணத்தில இணைக்கனும்., அதச் செய்ங்க....:)//
என்னது இன்னும் இணையலையா ?
:)
// கடைசியில் கிறித்துவத்திற்கு பணம் வாங்காமல் சேவை செய்கிறேன் என்பது அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது//
சத்தியமாக பணமெல்லாம் வாங்கவில்லை சார், யாருமே கிறிஸ்துவ மதத்தின் அருமை பெருமைகளை எழுதுவதில்லை, அதனால் தான் அவர்களுக்கு நான் உதவி செய்யலாம்மான்னு யோசிக்கிறேன்.
ரோமர் 1 : 27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
//ஏசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட பதிவர் ராபின் உள்ளிட்டவர்கள் போலி ஐடிகளையாவது உருவாக்கி இந்தப் பதிவை மகுடம் ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்//
ஒரிஜினல் ஐ.டியில் கூட ஓட்டுப்போட முடியவில்லை.
முதலில் ஓட்டுப்பட்டையை சரி செய்யுங்கள்.
//ஒரிஜினல் ஐ.டியில் கூட ஓட்டுப்போட முடியவில்லை.
முதலில் ஓட்டுப்பட்டையை சரி செய்யுங்கள்.//
ஓட்டுப்பட்டை எனக்கு சரியாக வேலை செய்கிறதே
//ஓட்டுப்பட்டை எனக்கு சரியாக வேலை செய்கிறதே// ஓட்டுபட்டையில் Submit to Tamilmanam என்று வருகிறது.
இராபின், மேலே சிவாவும் குறிப்பிட்டு இருக்கிறார், எனக்கு ஓட்டுப் பட்டை தெரிகிறது, அதற்கு மேல் சரி செய்யத் தெரியவில்லை, தமிழ்மணத்தில் இணைத்துள்ளதால் தான் அதில் உங்களால் இடுகையில் பார்க்க முடிகிறது.
யாராவது 'மை' போட்டு இருப்பாங்களா ? முட்டை மந்திரிச்சு வச்சிருப்பாங்களான்னு சந்தேகமாக இருக்கு.
வாக்களிப்பவர்கள் இங்கே அழுத்தவும்
இவ்வளவு காலம் மனிதனாக இருந்தீர்கள். இனியும் அப்படியே இருங்கள். மதவாதியாகி - பிறரோடு போட்டி போட்டு கொண்டு, உங்கள் பங்குக்கு - தமிழ்மணத்தையும், இந்த சமூகத்தையும் பாழாக்கி விடவேண்டாம்.
ஒரு கோஷ்டி திரட்டிகள் வேண்டாம் என்று தமிழ் பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி சென்றுவிட்டார்கள்.
ஒரு கூட்டத்தினர் இப்போது திரட்டிகள் மகுடத்தை பிடித்து, அந்த அக்கப்போர் இன்னும் முடிந்தப் பாடில்லை.
இந்தநிலையில் இன்னொரு சமூகத்தை கூவி அழைத்து ஜோதியில் ஐக்கியமாக்க சொன்னால்..., தாங்காதுடா சாமியோவ்வ்வ்...
அருமையான புகழ்ச்சி பதிவு!!!
சரி ஏதோ ஒரு மத புத்தக மதத்தை விளம்பரம் செய்ய முடிவெடுத்து விட்டீர்க்கள்.நல்லது நாம் சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.
1.மத புத்தக்த்தில் அனைத்துக்கும் தீர்வு உண்டு.இதனை இப்படி செய்யலாமா என்று கேள்வி கேட்கும் கூட்டம் இருந்தால் நீங்கள் சொல்வது அனைத்தையும் அப்படியே ஏற்பார்கள்.[பின்னூட்டத்தின் படி மட்டுமே,உண்மையில் எப்படியோ]
2.அறிவியல்,அவியல்,பொரியல்..ல் அனைத்தும் இதில் உண்டு.இதற்கு எபடி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.இதற்க்காக சொல்லப்ப்டும் பொய்,ஏமாற்று வேலைகளுக்கு அனுமதி உண்டு.ஆகவே போட்டுத் தாக்குங்கள்.இதுதான் மத புத்தகத்திற்கு நிரூபணம்[ஹி ஹி வேறு எதுவுமே சான்று இல்லை!]
3.நாட்டில் மதம் பரப்பி மத ரீதியான் சட்டம் கொண்டு வந்தால் நம் நாடு ஒழுக்கத்தில் சிறந்து குற்றங்கள் குறைந்து விடும் என்று கூறுங்கள்.சரி மத ஆட்சி நடக்கும் நாடுகள் அப்ப்டி தெரியவில்லையே என்றால் அவர்கள் சரியாக் பின்பற்றவில்லை என ப்ளேட்டை திருப்பி போட வேண்டும்.
4.சரி இதே போல் நம் நாட்டில் வாழும் பெரும்பான்மையினர் மத ரீதியான் ஆட்சி,பொது சட்டம் கொண்டு வருவோம் என்றால் எதிர்க்க வேண்டும்.நம் மதமும் அவர்கள் மதமும் ஒன்றா?
5.ஏதேனும் ஒரு மத ஆட்சி நடக்கும் நாட்டை,ஆளுபவர்களை புகழுதல் மிக நல்லது.அமெரிக்கா அல்லது ஏதோ ஒரு நாட்டை தேர்ந்தெடுத்து என்ன, எதை செய்தாலும் புகழுங்கள்.இஸ்ரேல் நாட்டை புகழ்தல் மிக சிற்ப்பாக் இருக்கும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு,தீர்க்க தரிசனத்தின் படி அமைக்கப்பட்டு , பாதுகாக்கப் படும் நாடு.எத்தனை பேர் சேர்ந்து மோதினாலும் கடவுளின் துணையோடு எதிரிகளை ஓட ஓட முறியடித்து விரட்டினார்கள்.இது எப்படி நடக்க முடியும்?
பிறகு ஓட்டுப் போடுதல்,இத்தியாதி விவரங்களை அனைவருமே பார்த்து இருப்பதால் முதலில் இவை போதும்.கிறித்தவ நம்பிக்கை இல்லையென்றாலும்
என் பதிவுகளுக்கு ஓட்டு போடுவது என்ற உடன்படிக்கைக்கு வந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டு போடுவேன்.
வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!!!!!!!
சார்வாகன் கிறிஸ்துவத்தை புகழ துவங்கி ஆச்சு, ஆனால் பழைய ஏற்பாட்டை எடுப்பதா புதிய ஏற்பாட்டை எடுப்பதான்னு ஒரே குழப்பமாக இருக்கு.
:)
கவிஞர் கண்ணதாசன் மாதிரி நாமும் குட்டைய குழப்புவுமே.
// tamil-man. said...
இவ்வளவு காலம் மனிதனாக இருந்தீர்கள். இனியும் அப்படியே இருங்கள். மதவாதியாகி - பிறரோடு போட்டி போட்டு கொண்டு, உங்கள் பங்குக்கு - தமிழ்மணத்தையும், இந்த சமூகத்தையும் பாழாக்கி விடவேண்டாம்.//
:) ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
//ஒரிஜினல் ஐ.டியில் கூட ஓட்டுப்போட முடியவில்லை.
முதலில் ஓட்டுப்பட்டையை சரி செய்யுங்கள்.//
//யாராவது 'மை' போட்டு இருப்பாங்களா ? முட்டை மந்திரிச்சு வச்சிருப்பாங்களான்னு சந்தேகமாக இருக்கு.//
:-))))))))))))))))))))))))))))))))
திரு கோவிக் கண்ணன்!
வயித்தெறிச்சல், பொறாமை என்று சில வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்தம் என்று விஷயம் தெரிந்த நீங்க விளக்குனீங்கன்னா கொஞ்சம் நல்லாருக்கும். விரிவாக இருந்தால் ஒரு பதிவாகவே கூட போடலாம். எப்படி வசதி! :-)
வணக்கம் சகோ,
நல்லதோர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.
பதிவின் கீழே செம கடி ஒன்றையும் கொடுத்திருக்கிறீங்க.
ஓரினச் சேர்க்கை பற்றிய வேதாகமத் தகவல்கள் புதியவையாக இருக்கிறது. நான் இதுவரை அந்த தகவல்களை அறியவில்லை.
எனது அனுபவ அறிவிற்கு எட்டியவரை, கிறித்துவ மதத்தினரோ, இந்துக்களோ தமது மதம் ஓரினச் சேர்க்கையினை கண்டிக்கிறது என்று சொல்லி மனித உணர்வுகளை அடக்கி வைக்க முயற்சி செய்வதில்லை!
பொல்லாங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டுவிடுங்கள் என்று ஒரு வசனம் பைபிளில் உள்ளது. எனவே ஓரினச் சேர்க்கை தவறுதான்.
புனித கோவி,
இனிமே எல்லாம் அப்படித்தான் :-))
ஓரின சேர்க்கை என்பது தவறு, ஆனால் ஓரினச்சேர்க்கை செய்வது தவறில்லை!
ஹி..ஹி ஆண், பெண் என்பது எல்லாமே மனித இனம் தானே. அப்போ ஆணும்,பெண்ணும் உறவு கொள்வதும் ஓரினச்சேர்க்கை தானே.மாற்றின சேர்க்கை செய்யனும்னா மிருகத்தோட தான் கலவி செய்யனும் :-))
ஆணென்ன பெண்னென்ன ,நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான் என்று சூப்பர் ஸ்டார் பாடி இருக்கார் :-))
எனவே ஆண்-ஆண் ,பெண்-பெண் என உறவுக்கொண்டால் அதுக்கு பெயர் ஒருபால் (ஒருபாலின)சேர்க்கை!
அகராதி:
செக்ஸ்=பாலினம்
இன்டர் கோர்ஸ், காப்புலேஷன் = உடலுறவு
ஹி..ஹி... நாங்களும் அகராதி எல்லாம் வச்சு இருக்கோம்ல!
//ஆனால் பழைய ஏற்பாட்டை எடுப்பதா புதிய ஏற்பாட்டை எடுப்பதான்னு ஒரே குழப்பமாக இருக்கு.//
வணக்கம் சகோ!!!!!!!
பழைய ஏற்பாடோ,புதிய ஏற்பாடோ வில்லங்கம் இல்லாத வசனம் ஒரு 20 தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.அனைத்தும் இப்போதைய கால்த்திற்கு ஏற்படி இருப்பது மிக முக்கியம்.இதனை ஒட்டி என்ன தோணுகிறதோ சொல்லலாம்,பல கிறித்த்வ பாதிரிகள் அக்கினோ வில் இருந்து வில்லியம் பாலே வரைக்கும் கடவுளின் இருப்பு, நிரூபணம் பற்றி தத்துவ மழை பொழிந்து இருக்கிறார்கள்.[இவைதான் பதிவுலகில் வேறு மதம் பெயரில் வலம் வருகின்றன என்பதும் குறிப்பிட தக்க விடயம்].
எடுத்துக்காட்டாக ஒன்று
"க்டவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத்தால் கடவுள் உண்டு"
http://en.wikipedia.org/wiki/Natural_theology
http://en.wikipedia.org/wiki/Existence_of_God
இம்மாதிரி பொத்தாம் பொதுவான் விடயம் பேசி நடுவில் நைசா மத புத்தக வசனம் எடுத்து விட்டு அதுதான் இது என்று கூற வேண்டும்.
சரி வில்லங்கமான் வசனம் காட்டி என்ன என்று சில விவரமில்லாத விஷமி நாத்திகர்கள் வினவுவார்கள்.இதை சமளிப்பதில்தான் உங்கள் திற்மையே வெளிப்படும்.இது அப்போது ,குறிபிட்ட காரியத்திற்காக் மட்டும் ,அதற்கு மாற்று இங்கே ,அது அப்போ இது இப்போ என்று போட்டு தாக்க வேண்டும்.
மூல மொழியில் அப்படி இல்லை என்றும் சம்யத்திற்கு கூறலாம்.அதிகமாக் விவாதம் செய்தால் அவர்கள் இந்துத்வா ஆட்களே என்று கூறிவிடலாம்.பிறகு அவர்கள் சொல்வது எடுபடாது!!!!!!!!!!!
வரலாற்று விடயங்களை விவாதிக்க கூடாது,ஆதாரம் கேட்கும் ஆசாமிகள் அபத்தானவர்கள் விலக்குங்கள்.
இன்னும் விள்ம்பரம் செய்ய செய்ய அனுபவம் கூடும் .பதிவுலக் விள்மபர பிரச்சார திலகம் ஆகிவிடுவீர்கள்.!!!!!!!!!!
வாழ்த்துக்கள்
நானும் தமிழ்மணத்தில் இஸ்லாமிய பிரசார பதிவுகளை படித்து இஸ்லாமி மதத்தை தழுவயிருந்த நேரத்தில் இப்படியொரு பதிவு போட்டு குழப்பிட்டிங்களே!
பூனையாரை த்ராட்டிலில் விட்டு விட்டு தாங்கள் கிருத்தவத்துக்கு மாற முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி துரோகியாக முயன்றால் பூனைகள் உங்களைப் பிராண்டும் என்பது நமது மதப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. பூனைக்கு இப்படித் துணை வைப்பது சரியா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
சார் என்ன பதிவு இது :)
இது காமெடியா? சும்மாவா?
எனக்கும் ஏசுவை பிடிக்கும். அடுத்த பைபிள் படிக்கலாம் என்று இருந்தேன். பார்ப்போம் :)
//திரு கோவிக் கண்ணன்!
வயித்தெறிச்சல், பொறாமை என்று சில வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்தம் என்று விஷயம் தெரிந்த நீங்க விளக்குனீங்கன்னா கொஞ்சம் நல்லாருக்கும். விரிவாக இருந்தால் ஒரு பதிவாகவே கூட போடலாம். எப்படி வசதி! :-) //
எனக்கென்ன வயிற்றெரிச்சல்? உங்க மதம் சார்ந்த தீவிரவாதிகளால் முகம் சிதைக்கப்பட்ட உங்க மதத்தை சரி செய்ய நீங்க முயற்சி எடுக்கிறிங்க, அதைப் பார்த்து நான் ஏன் பொறாமைப் படப் போகிறேன்? சேதமடைந்த வீட்டை சொந்தக்காரர்கள் தான் சரி செய்யனும் என்கிற புரிந்துணர்வு கூட எனக்கில்லையா என்ன ?
கருத்துரையிடுக