பின்பற்றுபவர்கள்

11 ஜனவரி, 2011

ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம் அதில் 35 கீழ்முந்திரிகள் !

தலைப்பு தாறுமாறாக புரியாத மொழியில் இல்லை, தமிழ் எண்ணியல் முறைகள் பற்றி ஒரு சிலராவது அறிந்திருப்பீர்கள்.

நேற்றைய கூகுள் பஸ்ஸில் சுல்தான் ஐயா கூகுள் பஸ்ஸில் அந்த தகவலை விட்டிருந்தார். தமிழில் ஒரு கோடிக்குமேல் எண்ணுவதற்கு குறியீட்டு எண்கள் இல்லையா ? என்போர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். ஆங்கிலத்தில் கூட சில்லியன் வரை தான் எண்ண முடியும், அதன் பிறகு அதனை மடங்குகளாக எண்ணிக் கொள்ள வேண்டும். இந்த தமிழ் எண்களால் ஆனப் பயன் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசிற்கு ஏற்பட்ட நட்டம் 'ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி' என்று லட்சம் மடங்காகச் சொல்லப்படுவது எளிதாக 'ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம்' சொல்லிவிடலாம்.


தமிழ் எண்கள்

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

தமிழ் எண்களில் ஆர்வம் உள்ளவர்கள், ஸ்பெக்ட்ரம் பேரத்தில் நீரா ராடியா பெற்றுக் கொண்ட 60 கோடி (சர்வீஸ் சார்ஜ்) என்கிற தொகை 'ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பத்தின்' எந்தப் பகுப்பு (டிவிசன்) மற்றும் விழுக்காடில் வருகிறது என்பதை தமிழின் இறங்கு முக எண்ணை வைத்துச் சொன்னால் நான் எனது தமிழ் கணக்கு அறிவை வளர்த்துக் கொள்வேன். கணிணி மற்றும் மின்னணு கணி பயன்படுத்திப் பார்த்தேன் என்னால் சரியான இறங்கும எண்ணை கொண்டுவர முடியவில்லை.

உலகப் பெரும் ஊழலை ஒற்றை எண்களில் (1.75 கற்பம் - கப்பம் இல்லை) சொல்லும் அளவுக்கு தமிழில் எண்கள் இருப்பது தமிழுக்குப் பெருமையா ?

இல்லை.....

அந்த அளவுக்கும் ஊழல் செய்வது தமிழனுக்குப் பெருமையா ?


************

ராடியா பெற்றுக் கொண்ட பேரத் தொகையை கீழ்கண்டவாறு வலைப்பதிவு நண்பர் வெண்பூ குறிப்பிட்டு இருந்தார்.

மொத்த‌ம் 1,75,000 கோடி
ராடியா ப‌ங்கு 60 கோடி

அதாவ‌து ஒன்றில் 0.0003428571 ப‌ங்கு

இதை த‌மிழில் சொல்வ‌த‌ற்கு கீழ்முந்திரி (1 / 102400) உப‌யோக‌மாகும். அத‌ன் ம‌திப்பு 0.000009765625. இதை 35ஆல் பெருக்க‌ 0.000341796875 வ‌ருகிற‌து. இது ஏற‌த்தாழ‌ ராடியா ப‌ங்கிற்கு ஒத்து வ‌ருவ‌தால், மொத்த‌ தொகையில் அவ‌ர‌து ப‌ங்கு "35 கீழ்முந்திரிக‌ள்" என்று சொல்ல‌லாம்.

அதாவது ஸ்பெக்டரம் பணத்தில் ராடிய பெற்றுக் கொண்ட பங்கு மொத்தப் பணத்தில்

35கீழ்முந்திரிகள்.

4:24 PM, January 11, 2011

*******

ராசாவால் ஏற்பட்ட அரசு பண நட்டம் அல்லது வருமான இழப்பு அல்லது ஊழல்

ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம்

அந்த தொகையில் ராடியாவிற்கு கிடைத்த கையூட்டின் (கமிசன்) பங்கு

35 கீழ்முந்திரிகள்.

16 கருத்துகள்:

Test சொன்னது…

தலைப்ப பார்த்துட்டு எதோ கோவிலைப் பற்றி சொல்ல போறார் நினைச்சேன். பட் உங்கள் தமிழ் ஆர்வமும், கணக்கு ஆர்வமும் பார்க்கும் போது வியக்க வைக்கிறது, கடைசி வரியை படிக்கும் போது சிரிப்பு வருகிறது :)

நெல்லி. மூர்த்தி சொன்னது…

ஆகா... என்ன அற்புதம்! ஒரு புறம் தமிழில் உள்ள எண்களையும் குறிப்பிட்டுவிட்டீர்கள் மறுபுறம் ஊழலையும் சாடியுள்ளீர்கள். போதாக்குறைக்கு எங்கள் தமிழ் கணித அறிவையும் ஊட்டுவதற்கு புதிராகவும் வினவியுள்ளீர்கள்! விரைவில் வருகிறோம் விடையோடு

குழலி / Kuzhali சொன்னது…

New units for communicating large figures:

Rs 1,000 crores= 1 Radia
Rs. 10,000 crores= 1 Kalmadi
Rs 1,00,000 crores= 1 Raja

தருமியின் பஸ்ஸிலிருந்து சுட்டது :-)

Jawahar சொன்னது…

பாத்தீங்களா, தமிழன் பண்ண சாதனை உங்களைத் தமிழ்ல புது ஹாரிஸான்களைத் தொட வெச்சிருக்கு!

சைபரைக் கண்டு பிடிச்ச தமிழன் அதுக்கு எதிர்முனையையும் கண்டுபிடிச்சிடுவான்!!

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

ராடியா பெற்றுக் கொண்ட பேரத் தொகையை கீழ்கண்டவாறு வலைப்பதிவு நண்பர் வெண்பூ (மின் அஞ்சலில்) குறிப்பிட்டு இருந்தார்.

மொத்த‌ம் 1,75,000 கோடி
ராடியா ப‌ங்கு 60 கோடி

அதாவ‌து ஒன்றில் 0.0003428571 ப‌ங்கு

இதை த‌மிழில் சொல்வ‌த‌ற்கு கீழ்முந்திரி (1 / 102400) உப‌யோக‌மாகும். அத‌ன் ம‌திப்பு 0.000009765625. இதை 35ஆல் பெருக்க‌ 0.000341796875 வ‌ருகிற‌து. இது ஏற‌த்தாழ‌ ராடியா ப‌ங்கிற்கு ஒத்து வ‌ருவ‌தால், மொத்த‌ தொகையில் அவ‌ர‌து ப‌ங்கு "35 கீழ்முந்திரிக‌ள்" என்று சொல்ல‌லாம்.

அதாவது ஸ்பெக்டரம் பணத்தில் ராடிய பெற்றுக் கொண்ட பங்கு மொத்தப் பணத்தில்

35 கீழ்முந்திரிகள்.

******
நன்றி வெண்பூ

arasan சொன்னது…

அசத்தல் ... நிறையா விடயங்களை தெரிந்து கொண்டேன்

தமிழ் சொன்னது…

அருமை

தமிழை இரசித்தேன்

உங்களின் இடுகையையும் தான்

கையேடு சொன்னது…

இந்த அளவுகளைத் தாங்க தேடிகிட்டிருந்தேன் ஒரு உரையாடலுக்காக.. ஏற்கனவே ஈழத்தவர் ஒருவரது இடுகையில் பார்த்தேன் தொலைத்துவிட்டேன்.. இப்போ சேமித்து வைத்துக்கொள்கிறேன்.

நன்றி

Unknown சொன்னது…

பத்தின் மடங்கிகளை பத்தாகத்தானே சொல்ல வேண்டும்.
(எ.கா.) 50,72,43,124=ஐம்பது கோடியே எழுபத்திரண்டு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நூற்று இருபத்து நான்கு. இதில் பத்தின் மடங்கிகளை சொல்லப்படும் விதம் கவனிக்க.
எனில் 'ஏழு கணத்து' என்பது 'எழுபது கணத்து' என்று வாராதா?

ராவணன் சொன்னது…

மேல் முந்திரி இல்லாத மொழியை எனக்குப் பிடிக்காது!

முந்திரி கீழதான் இருக்குமா? மேல இருக்காதா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//நிகர்புதம் –
கும்பம் -
கணம் -
கற்பம் -
நிகற்பம் -
பதுமம் -
சங்கம் -
வெல்லம் -
அன்னியம் -
அர்த்தம் -
பரார்த்தம் —
பூரியம் -
முக்கோடி - மஹாயுகம்//

கோவி.கண்ணன்!
இவை யாவும் தமிழ்ச் சொற்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன்!
இவை யாவும் தமிழ்ச் சொற்களா?

8:52 AM, January 12, 2011//


யோகன் அண்ணா,

நாம் வடசொற்கள் என்று நினைத்துவருவதில் பல தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்று மீண்டும் தமிழுக்கு மறுத்திரிப்பில் வந்திருக்கிறது.

திகழ்தி (தமிழ்) > திதி(வடமொழி > திகதி(தமிழ்) > தேதி(தமிழ்)Da-te என்கிற ஆங்கிலச் சொல்லுக்கும் இதுவே மூலம்.

சொற்கள் புழகத்தில் இருக்கும் போது தான் அவற்றின் பொருள் தெரியவரும். அதாவது கேள்விப்பட்டிருக்காதச் சொல் தமிழ் சொல்லாக இருக்கமுடியாது என்று சொல்லவும் முடியாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தச் சொற்கள் புழகத்தில் இல்லாததால் இவை தமிழ் சொற்கள் இல்லை என்று கூறவிடமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பத்தின் மடங்கிகளை பத்தாகத்தானே சொல்ல வேண்டும்.
(எ.கா.) 50,72,43,124=ஐம்பது கோடியே எழுபத்திரண்டு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நூற்று இருபத்து நான்கு. இதில் பத்தின் மடங்கிகளை சொல்லப்படும் விதம் கவனிக்க.
எனில் 'ஏழு கணத்து' என்பது 'எழுபது கணத்து' என்று வாராதா?
11:06 PM, January 11, 2011//

எண்ணிக்கை பெரிதாக இருப்பதால் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு :)

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிழில் கணிதமா? அய்யாசாமி ஜூட்...


ஆனா நல்ல முயற்சி. எல்லாருக்கும் தெரியனும் .

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிழ் கலைகளில் வட மொழியின் உருவம் தெரிவது புதிது அல்ல. நிறைய தமிழ் சொற்களும் வட மொழி சொற்களும் கூட ஒரே ஒலி, பொருள் வடிவங்கள் கொண்டுள்ளனவே! வட மொழி இல்லாமல் தமிழ் எழுத வேண்டும் என்ற கோட்பாடு வரும் முன்னர் தமிழில் வட மொழியின் இடம் சற்று அதிகம் தான். அதுவே பிற துறை சார்ந்த கலைகளிலும் உள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

விளக்கத்துக்கு நன்றி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்