பின்பற்றுபவர்கள்

2 ஜூலை, 2009

அருக்காணிகளும் அவாளும் எஸ்விசேகரும் !

பார்பனர் எஸ்விசேகர் ஒ.பன்னீர் செல்வம், சட்டசபையில் 'அவா .., அவா' ன்னு பிராமணாள் பாஷை பேசி பிராமணர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

சாதியைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டுமென்றால் தாரளமாகச் செய்யலாம், சாதி அபிமாணிகள் தங்கள் சாதியைச் சொல்லிக் கொள்ளத் தடையே இல்லை. ஆனால் 'நான் பிராமணன்' என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதற்கு எதிரிவினையான ஏச்சுக்களும் பேச்சுக்களும் வரத்தான் செய்யும், எஸ்விசேகர் அண்ட் பார்பன சமுதாயம் தங்களை 'பிராமணர்கள்' என்றால் அவர்கள் அல்லாதோர் சூத்திரர்களா ? இந்துமதத்தை நம்புபவர்கள், வேதங்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஒருகாலமும் பார்பனர்கள் தங்களைத் தானே பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதை விரும்புவதில்லை, மேலும் பிராமணன் என்று சொல்வது பிறப்பின் அடிப்படைக் கிடையாது. செயலாலும் ஒழுக்கத்தாலும் ஒருவன் பிரமணனனா இல்லையா என்று தீர்மாணிக்கப்படுகிறது என்கிற வியாக்யானம் பேசுவர்களை நோக்கி இந்துக்கள், 'பிறப்பின் அடிப்படையில் பார்பனர்களை ஏன் பிராமணர்கள் என்று சொல்ல வேண்டும் ? கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவ்வாறு அழைத்துக் கொள்ளும் பார்பனர்களது கடமை. பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது தவறு. பிறப்பு அடிப்படை பார்பனர்களுக்கு எந்த தகுதியின் அடிப்படையில் பிராமணர் பட்டம் வழங்கப்படுகிறது ? உபநயனம் வெறும் சாதிச் சடங்குதான். அதை ஆசாரியார்களும், பத்தர்களும் கூட போட்டுக் கொள்கிறார்கள்.

பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டாலும் பொதுமக்கள் பார்பனர்களை பிராமணர்கள் என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஊரில் ஒருவன் நெற்றியில் 'நான் தான் நல்லவன்' என்று எழுதிக்கொண்டு திரிந்தால் மற்றவனை மறைமுகமாக மோசமாக விளம்பரப்படுத்துகிறான் என்றே பொருள். இந்து மதப் படி பிராமணன் என்பது சாதிப் பிரிவு கிடையாது, பார்பனர்கள் சாதி பற்றுக் கொண்டால் தங்களைப் பார்பனர் என்று சாதிப் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்வதில் யாருக்கும் நட்டம் இல்லை

***

சரி விசயத்து வருகிறேன். ஓ பன்னீர் செல்வம் அவாள் பாஷை பேசி 'பார்பனர்களை' அவமானப்படுத்துகிறார் என்று கூறும் முன், நகைச்சுவை என்ற பெயரில் தான் எழுதும் நாடகங்களில் 'கிராமத்தினரைப் பற்றி கிண்டல் அடித்தை நினைத்துப் பார்த்தார் ? , அவர் எழுதிய 'அமெரிக்காவில் அருக்காணி' நாடகங்களைக் கேட்டுப் பாருங்கள், நகைச்சுவை என்ற பெயரில் கிராமத்தினரை மிக மோசமாக கிண்டல் அடித்திருப்பது தெரியும். நமக்குத் தெரிந்து அமெரிக்கச் செல்லும் அருக்காணிகள் அருக்காணிக்களாகவே திரும்பிவருகிறார்கள். ஆனால் அங்கே டூ பீஸ் உடையில் உலாத்தும் இந்தியர்களில் எத்தனை பேர் அருக்காணிகள் ?

அடுத்தவனைக் கை நீட்டிக் குற்றம் சொல்லும் முன் தன்னைப் பார்த்துக் கொள், அண்ணா அன்று சொன்னார்...எஸ்விசேகர் போன்ற முற்போக்கு வேடமிடும் பார்பனர்களுக்கு பொருந்தும்.

20 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

துபாய் ராஜா சொன்னது…

"அடுத்தவனைக் கை நீட்டிக் குற்றம் சொல்லும் முன் தன்னைப் பார்த்துக் கொள், அண்ணா அன்று சொன்னார்...எஸ்விசேகர் போன்ற முற்போக்கு வேடமிடும் பார்பனர்களுக்கு பொருந்தும்."

அண்ணா இன்னா சொன்னார்ன்னு அவர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பை ஆரம்பித்தவர்களுக்கே தெரியாதபோது,எஸ்.வி.சேகர்ல்லாம் எம்மாத்திரம்.

வால்பையன் சொன்னது…

அவா அவா அழுக்க முதல்ல சுத்தம் பண்ணிண்டு பிறகு மத்தவா பத்தி பேசுனும்னு சொல்றேள் சரியா!

அப்பாவி முரு சொன்னது…

பாவம் அந்த மனிசன்.,

இருப்பை நிலைக்காட்ட ஏதேதோ பேசுறாரு அதைப் போய்கிட்டு பெரிசாக்கிக்கிட்டு.
அது காமடி பீஸு...

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
:-)))
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணா இன்னா சொன்னார்ன்னு அவர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பை ஆரம்பித்தவர்களுக்கே தெரியாதபோது,எஸ்.வி.சேகர்ல்லாம் எம்மாத்திரம்.//

அவங்க சாயம் தான் வெளுத்துக் கொண்டு வருகிறதே. இது பார்பனரின் சாதி 'உயர்வை' பிறர் மதிக்கவில்லை என்று குமுறும், கொதிக்கும் எஸ்விசேகருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அவா அவா அழுக்க முதல்ல சுத்தம் பண்ணிண்டு பிறகு மத்தவா பத்தி பேசுனும்னு சொல்றேள் சரியா!
//

அவா அவா ஆத்தை சுத்தம் பண்ணிண்டா மத்தவா கொளத்தை தூர்வாறிடுவா ன்னு சொல்ல வர்றிங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...
பாவம் அந்த மனிசன்.,

இருப்பை நிலைக்காட்ட ஏதேதோ பேசுறாரு அதைப் போய்கிட்டு பெரிசாக்கிக்கிட்டு.
அது காமடி பீஸு...
//

காமடி டைம் சட்ட சபையில் நடத்துறார்

பீர் | Peer சொன்னது…

ஒநானும் சுமார் ஒரு வருடம் முன்பு குவைத்தில் இவருடைய நாடகத்தைப் பார்க்க நேர்ந்து, ஏண்டா இங்கு வந்தோம் என்றானது.
நாடகக் கதையை விட்டு விட்டு முழுக்க முழுக்க அம்மா புராணம் தான். ஆனால் இப்போது...

முரு சொல்வது போல, இருப்பை காண்பிப்பதற்கான உளறல் மட்டுமே.

mylaporemla@gmail.com இது அவரது மின்மடல் முகவரியாம், இதிலிருந்தே தெரியவில்லையா?

priyamudanprabu சொன்னது…

பாவம் அந்த மனிசன்.,

இருப்பை நிலைக்காட்ட ஏதேதோ பேசுறாரு அதைப் போய்கிட்டு பெரிசாக்கிக்கிட்டு.
அது காமடி பீஸு...///


அதே அதே

கிடுகுவேலி சொன்னது…

ம்ம்ம்ம்....!

மகேஷ் : ரசிகன் சொன்னது…

கஷ்டம்!!!

சீமாச்சு.. சொன்னது…

//நமக்குத் தெரிந்து அமெரிக்கச் செல்லும் அருக்காணிகள் அருக்காணிக்களாகவே திரும்பிவருகிறார்கள். ஆனால் அங்கே டூ பீஸ் உடையில் உலாத்தும் இந்தியர்களில் எத்தனை பேர் அருக்காணிகள் ?
//
நல்ல அவதானிப்பு.. வாழ்த்துக்கள் !!

எஸ்.வீ. சேகர் நாடகங்கள் வெறும் துணுக்குத் தோரணங்கள்.. சிரிப்புக்காக மட்டுமே சொல்லப்படும் விஷயங்களை அப்படியே விட்டு விடுவதுதான் சரி..

அப்புறம் இந்தியா ட்ரிப் எப்படியிருந்தது? முடி வெட்டிக் கொண்டீர்களா? 1000 ரூபாய் கொடுத்தா?

நர்சிம் சொன்னது…

பளீர் பொளேர்..

நையாண்டி நைனா சொன்னது…

இதுக்கு பேருதாண்ணே கோவியார் குத்து...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஓ!
இந்த கழுக்காணி மேட்டரா?
ஊரை கிண்டல் பண்ணி காமெடி மட்டும் அமைத்துக் கொள்ளலாமோ?

மணிகண்டன் சொன்னது…

Nice post.

சட்டசபைக்கும் நாடக சபைக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாதுன்னு குறிப்பால உணர்த்தி இருக்கீங்க :)-

பார்ப்பனர்கள் - பிராமணர்கள் வித்தியாசம் எனக்கு இப்ப தான் தெரியும். இத்தனை நாள் தெரியாது.

டூ பீஸ் போடறது ஒரு தப்பா :)- நான் அந்த நாடகம் கேட்டது கிடையாது. அதுனால ஒருவேளை நீங்க சொல்லவந்தது புரியாம இருக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

முகவை மைந்தன் சொன்னது…

நச்!

rajamelaiyur சொன்னது…

correct very correct

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்