பின்பற்றுபவர்கள்

24 செப்டம்பர், 2009

உ.போ.ஒ ஒன்பது ஓட்டைகள் !

1. காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்தி இருந்தாலே அதை மட்டும் சொல்லிவிட்டு மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம், 4 கருப்புப் பைகள் மீச்சம் ஆகி இருக்கும். திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் என்பதைத் தவிர வேறு எங்கும் மீதம் நான்கு இடங்களில் குண்டு வைத்தக் காட்சியைப் பயன்படுத்த வில்லை

2. ட்ரெயினில் குண்டு வைக்கும் போது கமலைப் பார்க்கும் கமாண்டர், பின்னர் கம்யூட்டர் உதவியுடன் வரையப்பட்ட கமல் முகத்தைப் பார்க்காதது போலவே காட்டி இருப்பதும், பார்வையாளர்களை ஏமாற்றிய காட்சி, அந்த படம் வரையப்பட்ட பிறகு அந்த கமாண்டர் மற்றர்வர்கள் பார்த்தைப் போலவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.

3. கமாண்டர் பார்த்திருந்தால் என் மனைவி பயணம் செய்யும் ரயிலிலும் குண்டு இருக்கிறது அதை நிறுத்தி சோதியுங்கள் என்று திரையில் காட்டி இருந்தால் அந்த லாஜிக் ஓட்டை மேலும் பெரிய ஓட்டையாகி, ரயில் பையில் ஒண்ணும் இல்லை, காவல் நிலையம் ஒரு இடத்தில் மட்டும் தான் குண்டு வைத்திருந்தது உண்மை மற்றவை வெறும் மிரட்டல் என்பது கமிசனருக்கு தெரிய வந்திருக்கும்.

4. பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் புதன் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள், கமல் படத்தில் ஒரு பாஃயாக இருந்தால் தக்காளியுடன் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கி இருக்க வேண்டும், இறைச்சி மாலைவரை தாங்குமா என்பது மற்றொரு கேள்வி

5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது

6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது

7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது

8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்

9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது

மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)

76 கருத்துகள்:

மதிபாலா சொன்னது…

ஹஹா....


மஹா ஆராய்ச்சியா இருக்கே.

மதிபாலா சொன்னது…

கமல் படத்தில் ஒரு பாஃயாக இருந்தால் தக்காளியுடன் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கி இருக்க வேண்டும், இறைச்சி மாலைவரை தாங்குமா என்பது மற்றொரு கேள்வி//


சபாஷ் சரியான கேள்வி.


நல்லாத்தான் அக்கு வேறா , ஆணி வேறா ஆராச்சி பண்றீங்கோ.

ப்ரிட்ஜ்ல வெச்சா கெடாதே? இறைச்சி.!

சென்ஷி சொன்னது…

:-)

சரியாகச் சொல்லியிருக்கீங்க கோவிஜி. நீங்க குறிப்பிட்ட எதுவுமே ஹிந்திப்படத்துல பார்க்கக் கிடைக்காது. அது மாத்திரமில்லாம நஸ்ருதீன் ஷா வயசான தோற்றத்தில் வர்றதால அந்த குரல் மேட்டரும் அதுல செட் ஆகிடும்!

சென்ஷி சொன்னது…

கோவிஜியிடமிருந்து உபோஒ பற்றிய வெற்றிகரமான 3 வது பதிவு ;-)

விஜய் ஆனந்த் சொன்னது…

// பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் வியாழக் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள் //

திருத்தம்...

அது வியாழக்கிழமை இல்ல...புதன் கிழமை...

எப்புடீ!!!

விஜய் ஆனந்த் சொன்னது…

// காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது //

குரலை வைத்து, வயதைக்கண்டுபிடிக்கும் கோவியாரின் திறமையை யாம் மெச்சினோம்!!!

விஜய் ஆனந்த் சொன்னது…

// விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது //

இது என்னங்காணும் காலக்கொடும...
விடியோ கேம் விளையாட்டு அடிமை ஐஐடி-ல படிக்கப்படாதா...இல்ல பாதில நிக்கத்தான்படாதா???

தவிரவும், மொகத்த வச்சு விடியோ கேம் விளையாட்டு அடிமை, கில்லி கோலி விளையாட்டு அடிமை, கம்ப்யூட்டர் அடிமை, காஞ்ச மாங்கா அடிமைன்னெல்லாம் எப்படீண்ணா கண்டுபிடிக்கறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
// பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் வியாழக் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள் //

திருத்தம்...

அது வியாழக்கிழமை இல்ல...புதன் கிழமை...

எப்புடீ!!!
//

இப்ப பேரு மாத்திட்டிங்களா ? நானும் மாற்றிட்டேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ப்ரிட்ஜ்ல வெச்சா கெடாதே? இறைச்சி.!

12:20 PM, September 24, 2009
//

மொட்ட மாடியில ப்ரிட்ஜ் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
கோவிஜியிடமிருந்து உபோஒ பற்றிய வெற்றிகரமான 3 வது பதிவு ;-)
//

இது குறைவு தசவாதாரத்துக்கு 7 பதிவிட்டதாக நினைவு

குசும்பன் சொன்னது…

//காமன் மேன்//

காமன் மேன் காமன் மேன் என்று சொல்றீங்க அவரு ஆரு? கையில் கரும்போட காம அம்பை விடுவாரே அவரா?

சென்ஷி சொன்னது…

//"உ.போ.ஒ ஒன்பது ஓட்டைகள் !"//

ப்ச்.. கமல் டைட்டில்ல என்னைப்போல் ஒருவன்னு வச்சிருந்தா எண்பது ஓட்டைகள் கண்டுபிடிச்சிருக்கலாம் :)

குசும்பன் சொன்னது…

//மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.//

கமிஷ்னர் ஆபிஸ் கதவில் ஒரு ஓட்டை இருந்துச்சுங்க!


பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுக்கிட்டு நின்ன போலீஸ் பாக்கெட்டி ஓட்டை இருந்துச்சுங்க!

சென்ஷி சொன்னது…

//மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம்,//

காமன் மேனை பொய் சொல்லத் தூண்டும் கோவிஜியின் அராஜகத்தை கண்டிக்கிறோம்!

சென்ஷி சொன்னது…

////மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.//

மொபைல் சார்ஜ் போடற இடத்துல ஒரு ஓட்டை இருக்குதுங்க..

சென்ஷி சொன்னது…

//திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் //

ஐ லைக் திஸ் :)

சென்ஷி சொன்னது…

//அந்த படம் வரையப்பட்ட பிறகு அந்த கமாண்டர் மற்றர்வர்கள் பார்த்தைப் போலவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.//

அப்போ அந்த படத்துல ஏதும் நுண்ணரசியல் குறியீடு கண்டுபிடிச்சுருப்பாரா :)

குசும்பன் சொன்னது…

//வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே//

வேட்டைக்காரன் வந்தால் மட்டும் பொழுது போய்விடுமா? அது என்ன பொழுதுபோக்கு படமா? அது உலகபடம் அதை அடுத்த மாதம் முதல் ஞாயிறு அன்று கிழக்கு மொட்டை மாடியில் போட பேச்சு வார்த்தை நடக்கிறது தலைமை பைத்தியகாரன். இப்படி விஜய் படத்தை பொழுது போக்கு அம்சத்தில் சேர்பதை விஜய் கொலைவெறி ரசிகர்கள் சார்பில் கண்டிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

குசும்பன்,

மொட்டை மாடியை ஞாபகப்படுத்தாதிங்க, என்னை யாரோ 'பாவி.கண்ணன்...பாவி.கண்ணன்' என்று கூப்பிடுவது போல் இருக்கு.
:)

சென்ஷி சொன்னது…

//
மொட்டை மாடியை ஞாபகப்படுத்தாதிங்க, என்னை யாரோ 'பாவி.கண்ணன்...பாவி.கண்ணன்' என்று கூப்பிடுவது போல் இருக்கு.
:)//

அப்போ படத்துல உபயோகப்படுத்துன மொட்டை மாடி அந்த மாடிதானா :)

சென்ஷி சொன்னது…

//
வேட்டைக்காரன் வந்தால் மட்டும் பொழுது போய்விடுமா? அது என்ன பொழுதுபோக்கு படமா? அது உலகபடம் அதை அடுத்த மாதம் முதல் ஞாயிறு அன்று கிழக்கு மொட்டை மாடியில் போட பேச்சு வார்த்தை நடக்கிறது தலைமை பைத்தியகாரன்/

அதுக்கு முதல் ஞாயிறுல உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகன்னு டிவியில வந்துடுமா குசும்ப்ஸ்

குசும்பன் சொன்னது…

கைதிகளை அழைத்து செல்லும் கண்டெயினரில் பல ஓட்டைகள் இருந்து அதன் வழியா வெளிச்சம் வந்துக்கொண்டு இருந்தது!

சென்ஷி சொன்னது…

/காவல் நிலையம் ஒரு இடத்தில் மட்டும் தான் குண்டு வைத்திருந்தது உண்மை மற்றவை வெறும் மிரட்டல் என்பது கமிசனருக்கு தெரிய வந்திருக்கும்.
//

போலிஸ் உணர்ந்து கொள்ள இது சாதா மிரட்டல் அல்ல..அல்ல..அல்ல..

அதையும் தாண்டி புனிதமானது :)

சென்ஷி சொன்னது…

//5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது//

வயசான பொண்ணாப்பார்த்து கல்யாணம் செஞ்சிருப்பாரோ :)

சென்ஷி சொன்னது…

//6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது/

இடை நிறுத்துனாங்களா இல்லையே தரையிலதான் நிறுத்தி வச்சிருந்தாங்க

குசும்பன் சொன்னது…

சென்ஷி said...
//திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் //

ஐ லைக் திஸ் :)

மாப்பி நீ லைக் பன்னுற என்றால் அது ப்ளூ பிலிமாகதான் இருக்கும் ஏன்னா உனக்கு பிடிச்ச கலர் ப்ளூதானே?:)))

சென்ஷி சொன்னது…

//அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் புதன் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள்,//

ஆனா ஆதி மாத்திரம் டெய்லி வீட்டுக்கு தக்காளி வாங்கப்போறதா எழுதறாரே :)

சென்ஷி சொன்னது…

//
மாப்பி நீ லைக் பன்னுற என்றால் அது ப்ளூ பிலிமாகதான் இருக்கும் ஏன்னா உனக்கு பிடிச்ச கலர் ப்ளூதானே?:)))//

இப்படி பச்சை பச்சையா பேசாதே தம்பி.. அப்புறம் இது மஞ்சள் பதிவான்னு கேக்கப்போறாங்க :)

சென்ஷி சொன்னது…

/7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது//

மூணு நிமிசத்துல காலித்திடல்ல கொண்டு போய் வுடறதுக்கு அது என்ன ஒன் பாத்ரூம்னு நெனச்சீங்களா.. பாம் சார் பாம் :)

குசும்பன் சொன்னது…

//ஆனா ஆதி மாத்திரம் டெய்லி வீட்டுக்கு தக்காளி வாங்கப்போறதா எழுதறாரே :)//

அவரு ரிட்டையர்ட் ஆள் தான் உனக்கு தெரியாதா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

படத்து காட்சிகளை இன்னும் மறக்கலையா!?

மறப்போம், மன்னிப்போம்!


நாங்களெல்லாம் மறந்துட்டு நிம்மதியா இருக்குறோம்.

நீங்க இப்படி நிம்மதியில்லாம இருந்தா எப்படி!?

போலி சுக்குள் இருக்கும் ஓட்டைகளை எடுத்தியம்பிய விதம் அருமை!

அப்பறம் போலிகளை இடம் பார்த்து சுட்டிக் காட்டியமை நன்று!

படத்தில்,
சை... பர் கிரைம் முன்னேற்றம் பத்தாது என்பதை அறிந்து ... சை.....! வருந்துகிறோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆனா ஒன்னு,

நம்ம விஜய் ஆனந்த் பாவம்!

அது மட்டும் தான் இப்ப சொல்லுவேன்

:P

கோவி.கண்ணன் சொன்னது…

குசும்பன், சென்ஷி இன்னிக்கு இங்கு டெண்ட் அடித்தது போல் இருக்கு.

வாழ்த்துகள் பாராட்டுகள் மற்றும் நன்றி !

ஜோ/Joe சொன்னது…

இது என்ன ரகமான பதிவு-ன்னு புரியல்ல ..ஸப்பா ..முடியல்ல :)

Sanjai Gandhi சொன்னது…

//விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது//

ஐஐடில படிக்க மூஞ்சி தான் க்வாலிபிகேஷனா சாமி? அந்த மூஞ்சி ஐஐடில படிக்கக் கூடாதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஐஐடில படிக்க மூஞ்சி தான் க்வாலிபிகேஷனா சாமி? அந்த மூஞ்சி ஐஐடில படிக்கக் கூடாதா?

3:58 PM, September 24, 2009//

:)

நானும் திருப்பிக் கேட்கலாமா ? ஐஐடியில் அந்த மூஞ்சு போல் தான் எல்லாம் படிக்கிறார்களா ?

Sanjai Gandhi சொன்னது…

//நானும் திருப்பிக் கேட்கலாமா ? ஐஐடியில் அந்த மூஞ்சு போல் தான் எல்லாம் படிக்கிறார்களா ? //

அதுக்காக அங்க படிக்கிற எல்லாரையும் கூட்டிட்டு வர முடியுமா? இருக்கிற 1000 மூஞ்சில வந்த மூஞ்சி அந்த மூஞ்சி. அவ்ளோ தானே..விடியோகேம் அடிமை மூஞ்சி ஐஐடில இல்லைங்கற மாதிரி சொல்லிட்டு என்ன மேன் எதிர் கேள்வி?

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi said...

//நானும் திருப்பிக் கேட்கலாமா ? ஐஐடியில் அந்த மூஞ்சு போல் தான் எல்லாம் படிக்கிறார்களா ? //

அதுக்காக அங்க படிக்கிற எல்லாரையும் கூட்டிட்டு வர முடியுமா? இருக்கிற 1000 மூஞ்சில வந்த மூஞ்சி அந்த மூஞ்சி. அவ்ளோ தானே..விடியோகேம் அடிமை மூஞ்சி ஐஐடில இல்லைங்கற மாதிரி சொல்லிட்டு என்ன மேன் எதிர் கேள்வி?//

எவ்வளவோ மூஞ்சிகள் இருக்க போயும் போயும் வீடியோ கேம் அடிமை முகத்தையா ஐஐடி மாணவனாக காண்பிப்பது. அறிவு சீவிகளுக்கான முகத் தேடலோ, முடியல
:)

Sanjai Gandhi சொன்னது…

வேற மொழியில எடுக்கும் போது உங்களை சிபாரிசு பண்ணவா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...

வேற மொழியில எடுக்கும் போது உங்களை சிபாரிசு பண்ணவா? :)//

வேறு யாராவது 35 வயதிற்குள் உள்ள இளைஞர்களுக்கு கொடுக்கவும்.
:)

Sanjai Gandhi சொன்னது…

//வேறு யாராவது 35 வயதிற்குள் உள்ள இளைஞர்களுக்கு கொடுக்கவும்.

:)
//

இந்த அடிபப்டையில் தான் சொன்னேன். உங்களுக்கு 35 வயசு முடிஞ்சிடிச்சா? கல்யாணம் கூட ஆகலைனு குசும்பன் சொன்னாரே..:(

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...

//வேறு யாராவது 35 வயதிற்குள் உள்ள இளைஞர்களுக்கு கொடுக்கவும்.

:)
//

இந்த அடிபப்டையில் தான் சொன்னேன். உங்களுக்கு 35 வயசு முடிஞ்சிடிச்சா? கல்யாணம் கூட ஆகலைனு குசும்பன் சொன்னாரே..:(//

அவதூறு அவதூறு, கோவி.கண்ணன் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்ற முயற்சின்னு இதையெல்லாம் படிச்சுட்டு யாரும் கிளப்பி விடப் போறாங்க.


இந்தப் இணைப்பை படிங்க
:)

அக்னி பார்வை சொன்னது…

aiyo saami thaangala

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி 1
---------------------------------------

கமல்: திரு கோவி கண்ணன்
மோகன்லால்: திரு டோண்டு
லக்ஷ்மி : திரு வால்பையன்
ஏட்டு ஏகாம்பரம்: திரு ஸ்டார் ஜன்
Trainee ஏட்டு : திரு சதீஷ்

போலீஸ் கமிசனர் ஆபீஸில் தொலைபேசி ஒலிக்கிறது.
அந்த பக்கம் கோவி அண்ணன் - " நான் உங்களைபோல இல்லாத ஒருவன் பேசறேன், கமிசனற லைனுல வரச்சொல்லுங்க"

ஸ்டார் : யோவ் யாருயா நீ, எதா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு.

கோ க : நாந்தான் எழுத்தது புயல் எழுத்தரசன்

ஸ்டார்: அண்ணே நீங்களோ... உங்கள யாருமே பார்த்ததில்லீங்க....நான்கூட...அனா உங்க எழுத்த எல்லாம் படிச்சிருக்கேன், நேத்துகூட, அமாவாச இருட்டுல, எங்க வீட்டு பரணில உக்காந்து, கரண்டு போன நேரமா பார்த்து கும்மிருட்டுல படிச்சேன்....நீங்க எங்கயோ போய்ட்டீங்க ஐயா......என்ன ஜோரா இருக்கு உங்க ஸ்டைல்.......

கோ க: No silly feelings...அதெல்லாம் அப்பொறம்...முதல்ல தலைமை காவலர கூபிடுங்க!

டோண்டு: ஹலோ யாரப்பா அது?

கோ க: நாந்தான் எழுத்துபுயல் பேசறேன்?

டோண்டு: யாரையா நீர். இப்போதான் சுனாமி புயல் ஒன்னு வந்தது...நீ வேற புதுசா கிளம்பியிருக்க.....உண்மையா நீ யாருன்னு சொல்லு இல்லாட்டி நான் நாளைக்கு ப்லோகுல இதப்பத்தி ஒரு கேள்வி பதில் எழுதி நாலு பக்கத்துக்கு அரைப்பேன்...

கோ க: நானா யாரா? நான் உன்னைப்போல ஒருவன்! நீங்க வாரத்துக்கு நாலு ப்லோகுன்னா, நான் ஒரு நாளைக்கு நாலு எழுதறவன்! சொல்லுறத செரியா கேட்டுக்கோ, மட்ராசுல ஒரு பத்து எடத்துல நான் எழுதினா கட்டுரைகளை xerox காப்பி போட்டு இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எல்லோர் கையில் கிடைக்கிராமாதிரி பண்ணப்போறேன்! அத்த படிச்சு குறைஞ்சது ஒரு நூறு பேராவது தற்கொலை பண்ணிப்பானுங்க! ஒரு ஆயிரம் பேரு பயித்தியமா ஆயிடுவானுங்க, ஒரு பத்தாயிரம் பேரு ஆசுபத்திரியில படுப்பானுங்க! இது நடக்க கூடாதுன்னா நான் சொல்லுற படி நீங்க செய்யணும்! என்ன புரியுதா!

லைன் கட் ஆனது!

டோண்டு : என்ன கொடுமை இது.....எவனோ ஒரு சுப்பன் குப்பநேல்லாம் கோவி அண்ணன் ரேஞ்சுக்கு பேசுறான்! அவரு மட்டும்தான் எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரியெல்லாம் கண்டபடி எழுதுவார்! அவர உட்டா நானு! எங்களையே எவனோ மிஞ்சுரான்னா ஏதோ சுப்பனோ குப்பநோதான் இருக்கணும்! கண்டுக்காம உடவேண்டியதுதான்!

மறுபடியும் தொலைபேசி அடிக்கிறது:

கோ க: தலைமை காவலரே, நான் யாருன்னு இப்போ கேளுங்க.(Neutrons, Protons, Electrons, Positrons போன்றவைப்பற்றி ஒரு பத்து நிமிடம் கோ க அவர்கள் போட்டு வெளுத்து வாங்குகிறார்)

இதை கேட்ட டோண்டு ஆடிப்போய் பேசவே முடியாமல் நிற்கிறார்!

கோ க: என்ன காவலரே....இப்போ புரியுதா நான் சுப்பனோ குப்பனோ இல்லை என்று! நான் உண்மையில் உங்களைபோல ஒருவன் இல்லை, உங்களை எல்லாம் மிஞ்சிய ஒருவன்....சாம்பிள் ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க....உங்க A3 காவல் நிலையத்தில் ஒரு பச்ச கலர் அட்டப்போட்ட நோட்டுபுக்கு இருக்கு பாருங்க, அதுவும் ஏட்டு சதீஷு தம்பி மேஜைமேல! அது நான் எழுதிய கட்டுரையின் ஒரு சாம்பிள்! சும்மா நாலே நாலு பதிவுதான்! அத்த யாராவது படிச்சு மயங்கி சாய்வதற்குள் எடுத்துருங்க! இல்லாட்டி அந்த போலீஸ் நிலையமே காலி!

டோண்டு ஆடிபோய் ஏட்டு ஸ்டார் ஜன் அண்ணனை அனுப்புகிறார், அந்த புத்தகத்தை கைப்பற்ற.......

காட்சி ஒன்று நிறைவு...................................

அடுத்த காட்சி சில மணிநேரங்களில்....................

Sanjai Gandhi சொன்னது…

//கோ க: No silly feelings.//

இதுக்கு “ நோ சில்லியா ஃபீல் பண்றார்”னு சொன்னென் அப்டின்னு கோவியார் சொல்லிடப் போறார் நோ. :))

வெல்கம் பேக்.. நீங்க இல்லாம கோவியார் ப்ளாக் ரொம்ப டல்லடிக்கிது..:))

கிரி சொன்னது…

// SanjaiGandhi said...
//கோ க: No silly feelings.//

இதுக்கு “ நோ சில்லியா ஃபீல் பண்றார்”னு சொன்னென் அப்டின்னு கோவியார் சொல்லிடப் போறார் நோ. :))

வெல்கம் பேக்.. நீங்க இல்லாம கோவியார் ப்ளாக் ரொம்ப டல்லடிக்கிது..:))//

:-)))))

வழிமொழிகிறேன் வெல்கம் பேக் :-)

Prathap Kumar S. சொன்னது…

//(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)//

என்னது வேட்டைக்காரன் ஓட்டைகளை பதிவாப்போடபோறீங்களா??? நான் அதற்காக ஒரு பிளாகே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...

பீர் | Peer சொன்னது…

//குசும்பன்


கைதிகளை அழைத்து செல்லும் கண்டெயினரில் பல ஓட்டைகள் இருந்து அதன் வழியா வெளிச்சம் வந்துக்கொண்டு இருந்தது!//

கண்டைனர் சொன்னதும்தான் ஞாபகம் வருது...

உள்ள தெரிகின்ற ஓட்டை வெளியே தெரியாது.

கண்டைனர் சர்வதேச எண், நான்கு ஆங்கில எழுத்துக்களும் 7 எண்களும் இருக்கும். "MWMU 6410543" இது மாதிரி.
இதில் மூன்று ஆங்கில எழுத்துக்களும் 5 எண்களும் மட்டுமே இருக்கும்.

பீர் | Peer சொன்னது…

மத்தபடி அந்த பேக் மேட்டருக்கு நான் ரைட்ஸ் வாங்கியிருக்கேன். :)

பீர் | Peer சொன்னது…

நீங்க வைச்சிருக்கிற டைட்டில்ல ஏதாவது நுண்ணரசியல் கண்டுபிடிக்கலாமா?

அறிவிலி சொன்னது…

NO சூப்பர்....

ROTFL

@கோவியார் - பதிவு சூப்பர். படம் காட்டற ப்ரொஜெக்டருக்கு முன்னாடியும் ஓட்டை இருந்துது.

குசும்பன், சென்ஷி கும்மியும் அருமை.

பீர் | Peer சொன்னது…

//சென்ஷி said...
.. மொபைல் சார்ஜ் போடற இடத்துல ஒரு ஓட்டை இருக்குதுங்க..//

LOL... சென்ஷி, இதுமாதிரி பதில்கள் குசும்பன் எழுதிதான் படிச்சிருக்கேன். :))

சிங்கக்குட்டி சொன்னது…

ஐய்யோ...நான் இன்னும் படம் பாக்கல அதுனால ஒன்னுமே புரியல...ஆனா நல்ல ஒரு காமிடி படத்த பார்க்கபோற ஆர்வம் மட்டும் கூடுது...:-))
யாராவது லிங்க் கொடுங்கப்பா....

ARV Loshan சொன்னது…

நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி.. நடத்துங்க.. ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல..;)

ARV Loshan சொன்னது…

ஆனால் அந்த ட்ரெயின் bomb விஷயம் உறுத்தல் தான்.

வால்பையன் சொன்னது…

இது இன்னும் முடியலையா!?

Karthikeyan G சொன்னது…

Mr No, Too good, Where is next part?

வஜ்ரா சொன்னது…

காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்தி இருந்தாலே அதை மட்டும் சொல்லிவிட்டு மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம், 4 கருப்புப் பைகள் மீச்சம் ஆகி இருக்கும். திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் என்பதைத் தவிர வேறு எங்கும் மீதம் நான்கு இடங்களில் குண்டு வைத்தக் காட்சியைப் பயன்படுத்த வில்லை

இந்தி ஒரிஜினலில் நசீருத்தீன் ஷா அதைத்தான் செய்வார்


5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது

குரலில் வயது தெரியாது.

6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது

இதில் எந்த லாஜிக் ஓட்டையும் இல்லை.

7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது

மூன்று நிமிடத்திற்குள் காலி இடத்திற்குச் செல்ல முடியுமா சென்னையில் ?

8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்

கைதிகள் யாரென்று முடிவு செய்த கமலுக்கு அவர்கள் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது

ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி VOIP. அதைவைத்து ஐ.பி எண்ணைக்கண்டு பிடித்துவிட முடியும். எந்த விண்டோ பீரியடும் தேவையில்லை செல்ஃபோன் போல்.

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 2
---------------------------------------------------------

அண்ணன் ஸ்டார் ஜன் A3 காவல் நிலையத்திற்கு செல்கிறார்! அங்கே ஒருவர் மட்டுமே இருக்கிறார், அதுவும் தூங்கிக்கொண்டு!

அரை டிரௌசெர் மட்டுமே போட்டு தூங்கும் ஒரு சின்ன பையனை தட்டி எழுப்பிகிறார் ஸ்டார் அண்ணன்!
ஸ்டார்: தம்பி தம்பி, யாரப்பா நீ, இங்க இருக்கிற ஏட்டுஓட பையானா, சும்மா போலீஸ் டிரெஸ்ஸ அப்பா வாங்கிகொடுத்து விளையாட வந்தியா!

சதீஷு: ஐயோ, நாந்தாங்க இங்க ஏட்டு, அரை டிரௌசர் போட்டு போட்டு பழகினாதால உடனே மாத்த முடியலா! வெரல் போடுற பழகத்தையே போன மாசம்தான் சார் உட்டேன்! எப்படியும் அடுத்த மாசம் கண்டிப்பா முழு பாண்டு போடுறேன் சார்!

ஸ்டார்: அது கடக்கட்டும், உன்னோட மேசையில பச்ச அட்ட போட்ட புத்தகம் ஏதாவது இருக்கா?

சதீஷு: இருக்கு சார், தோ பாருங்க!

ஸ்டார்: ஐயோ நல்ல வேளை அத்த நீ தொறந்து படிக்கலையே.....

சதீஷு: அட நீங்க ஒண்ணு, கைவீசம்மா கைவீசே போன வருஷம்தான் முடிச்சேன், இந்த மாதிரி புத்தகம் சமாச்சாரம் எல்லாம் எனக்கு புரியாது சார்! அனா நானும் அத பிரிச்சி பாத்து அதுல ஏதாவது பொம்ம இருக்கான்னு பாத்தேன், ஒண்ணுமே இல்லை, அம்புலிமாமா அளவு கூட இல்லை. அதான், நானே ரெண்டு கலர் பென்சில்ல எடுத்து பாப்பா படம், மாமா படம் எல்லாம் வரைந்தேன்! இங்க பாருங்க சார் ஓரத்துல, ரெட்ட ஜட அக்கா படம் ஜோரா இல்ல!

ஸ்டார்: கவலை படாத தம்பி நானும் ஒன்ன மாதிரிதான், நீ பென்சில்லில கிறுக்கிற வயசு பத்தாம, நான் கணினில கிறுக்கிறேன் வயசாகியும். நானும் நீதான்! அது சரி, இனிமேலாவது விஜயத்த, சாரி விஷியத்த ஜாகிரதையா ஹாண்டில் பண்ண தெரிஞ்சிக்க!

சதீஷு: என்ன விஜயா, அண்ணே ஒன்னு கேட்டுக்கோங்க, என்ன பத்தி என்ன வேனும்முனாலும் திட்டுங்க, அனால் தளபதியப்பத்தி ஒரு வார்த்த சொன்னீங்கன்னா நடக்குதே வேற....உங்க முஞ்சில கரியப்பூசுவேன்.......

ஸ்டார்: தம்பி தம்பி.....நான் சொன்னது விஜய் இல்லப்பா, விஷயம்!

சதீஷு: அதானே பார்த்தேன்.....நான் ராத்திரில வாயில வெரல் போடலேன்னாலும் பரவாஇல்லை, மத்தியானம் இன்ஸ்பெக்டர்க்கு தெரியாமல் கோலி ஆடாட்டாலும் பரவாயில்லை, காலைய்ல எழுந்தவுடனே பல் தேக்காம அம்மா கிட்ட உதை வாங்கினாலும் பரவாஇல்லை, ஆனா விஜயை பற்றி சொன்னா பொங்கி எழுந்துருவேன்.........Mind it.........

ஸ்டார் பச்ச அட்ட புத்தகத்தை எடுத்து கிழித்து போட்டுவிட்டு ஓடுகிறார்!!!!!

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - part 3
----------------------------------------------------

ஸ்டார் : டோண்டு சார், கண்டுபிடிச்சி கிழிச்ச்டேன் சார்! எனக்கு பதக்கம் எதனாச்சும் தருவீங்களா!

டோண்டு: யோவ், after all, ஒரு புத்தகத்த தானே கண்டுபிடிச்சி கிழிச்சிருக்க, எதுக்கு இப்படி குதிக்கிற? சரி சரி நாளைக்கு உன்னோட பேருல, A3 police station பஞ்சாமிர்தம் அப்படின்னு ஒரு பதிவு போடுறேன்!

போன் அடிக்கிறது! டோண்டு எடுக்கிறார். மறுமுனையில் கோவி அண்ணன்:

இப்போ புரிஞ்சிதா சார் நான் சொன்னது உண்மையின்னு! போ போயீ, யாரையாவது பெரியவங்கள வந்து பேசச்சொல்லு!

டோண்டு chief secretary ஐ அழைக்கிறார்! வால் பையன் வருகிறார்!

என்ன டோண்டு சார், உங்களால முடியில்லேன்னு எங்கள வர சொன்னீங்களா?

டோண்டு: என்ன என்னால முடியலையா! எவ்வளவு கேள்வி பதில் எழுதி இருக்கேன், இப்போ பாருங்க நம்ம அடிய!

வால் : ஒண்ண முதலில புரிஞ்சிக்கோங்க, நான் அறிவாளி அப்படின்னு நானே சொல்லக்கூடாது! அதாவது நீங்க சொல்லக்கூடாது! நான் சொல்லலாம், நான் அறிவாளின்னு! ஏன் என்றால் நான் ஒரு அறிவாளி! அதனால காசிக்கு பொய் தண்ணீர் குடிச்சாலும் கஷ்டத்த மறக்க வெந்நீர் வேணும்!

டோண்டு: புரியலையே!!!!!

வால்: உங்களுக்கு பஞ்சாமிர்தம்தான் புரியும், இதெல்லாம் புரியாது, ஏன்னா அது பழத்த பிழிந்து பண்ணுவது! இந்த நிஜத்தை உறிஞ்சு பின்னுவது! இப்போ.......?

டோண்டு: இன்னும் புரியலையே........

வால்: செரியா சொல்லுங்க

டோண்டு: ஹூ ஹூம் ........

வால்: அப்பா....நல்லது.....

டோண்டு: பரவாஇல்லை, எட்டு மணிக்கு எங்கே பிராமணன் வருது, அதுல ஏதாவது சொல்லுறாங்களான்னு பார்த்து புரிஞ்சிக்கறேன்!

சரி வால் சார், விஷியத்திற்கு வருவோம். அனானி ஒருத்தர் பல இடத்துல வெடிகுண்டோட பயங்கரமாக ஒண்ண வெச்சு நம்ம நகர மக்களை காலி பண்ணுவேன்னு மிரட்டுகிறார்! அவரு உங்களமாதிரி பெரியா அறிவாளிக்கூடதான் பேசுவாராம்! அதான் உங்க Pune ஐ கூப்பிட்டேன், அனா நீங்க வந்துடீங்க. பரவாயில்லை! உங்க Pune அளவுக்கு இல்லைன்னாலும் நீங்க சமாளிப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன்!

வால்: கவலையை உடுங்க...கடவுள் இல்லை என்பது என்கருத்து. அது ஏதோ நினைவின் மறுபக்கத்தில் இருக்கும் மருப்பின் திரிப்பு!

டோண்டு: வால் சார், இது சுவாமி ஓம்கார் சமாசாரம் இல்லை, இது தேச பாதுகாப்பு சமாச்சாரம்...நம்மளோட கருத்து மோதலை அப்புறமா வெச்சுக்கலாம்! நான் நாலு பதிவு போடுறேன், நீங்க நாலு போடுங்க அனா எல்லா கேள்வியையும் நானேதான் கேட்பேன்! OK

வால்: OK OK.... நாந்தான் அறிவாளின்னு ஒத்துகுட்டா சரி!

டோண்டு: அப்படி எங்க சார் நான் சொன்னேன்! நாந்தான கேள்வியாளி நீங்க பதிலாளி! அதாவது நான் பஞ்சாமிர்தம் நீங்க நங்கநல்லூறு!

இப்படி போய்க்கொண்டிருக்கும் இந்த வாக்குவாதத்தை குலைத்து தொலைபேசி மணி அடிக்கிறது!

டோண்டு: சார், அவராகத்தான் இருக்கும்.....கொஞ்சம் இருங்க....ஹலோ.....யாரு....அட நம்ம மயிலாப்பூர் மங்கள சாஸ்திரியா......என்ன உங்களுக்கு ஒரு கேள்வியா...கேளுங்க......என்ன...போக்ரான் அணுகுண்டு, மான் மார்க்கா, குயில் மர்க்காவா? யோவ் போன முதல்ல வெய்யா!

மறுபடியும் போன் அடிக்கிறது, டோண்டு எடுக்கிறார்!

Sampath சொன்னது…

//போக்ரான் அணுகுண்டு, மான் மார்க்கா, குயில் மர்க்காவா? //

:) :) .. too good ..

கோவி.கண்ணன் சொன்னது…

மிஸ்டர் எவNo,

என் பதிவு பின்னூட்டத்தை பதிவு எழுதப் பயன்படுத்தாமல் தனிப்பதிவை தொடங்கு ஓய்.
:)

பித்தனின் வாக்கு சொன்னது…

எப்பிடி இப்படி எல்லாம் மொட்ட மாடியில ரிசர்வ் பண்ணி யோசிப்பிங்களா. நல்லா இருக்கு தல.

வால்பையன் சொன்னது…

No!

பட்டய கிளப்புறிங்க!
அப்படியே டாப் கீர்ல போய்கிட்டே இருங்க!

Sanjai Gandhi சொன்னது…

அண்ணா.. நோ அண்ணா.. ப்ளீஸ்னா.. எல்லாம் எழுதி எனக்கு அனுப்புங்கண்ணா.. உங்க பேர் போட்டு என் ப்ளாக்ல போட்டுக்கிறேன்.. நானெல்லாம் சொந்தமா இப்டி எழுதவே முடியாதுங்க்ணா.. :))

பின்றேள் போங்கோ.. :))

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி 4
------------------------------------------------------

தொலைபேசியை எடுக்கிறார் டோண்டு. மறுமுனையில் ஒரு அழுகை சத்தம்.......

டோண்டு அவர்கள் எரிச்சலாகி, ஸ்டார், கொஞ்சம் என்னன்னு பாருங்க என்கிறார்!

ஸ்டார் சிறிது நேரம் பேசிவிட்டு டோண்டுவிடம் : சார், நம்ம A3 station இன்ஸ்பெக்டர் பேசறார்.

டோண்டு: என்னவாம், அதான் அந்த புத்தகத்த நீங்க கிழிச்சி போட்டுட்டீங்களே, வேற என்னவாம். ரொம்ப தொந்தரவு பண்ணால் நானே ஒரு பச்ச அட்டை புத்தகம் எழுதி அனுப்புவேன்னு சொல்லு!

ஸ்டார்: அது இல்லை சார், நம்ம Trainee ஏட்டு சதீஷு பற்றிதான், அவரு ஒரு கோலி குண்ட முழுங்கிட்டாராம், தொண்டையில மாட்டிக்கிச்சாம். இன்ஸ்பெக்டர் என்ன செய்யலாமுன்னு கேக்கறாரு!

டோண்டு: யோவ், நல்ல ஆளுப்பா இவங்க. கோலி குண்ட ஏம்ப்பா அவரு முழுங்கினாறு?

ஸ்டார்: மத்தியானம் இன்ஸ்பெக்டர் இல்லாதபோது கோலி வளயாடுவாரம் அவரு! போன இன்ஸ்பெக்டர் திடீருன்னு வந்த உடனே கப்புன்னு ஒரு கோலிய வாயில போட்டு மறைக்க போயி இப்படி ஆயிடிச்சு!

டோண்டு: என்ன டெய்லி ஸ்டேஷன்இல கோலி ஆடுவாரா? என்ன கொடுமைடா இது! அதான் அப்பவே சொன்னேன், சின்ன பசங்களெல்லாம் இங்க உடவே கூடாதுன்னு! சரி சரி அவரு தலைய குனிய வச்சு மூக்க ரெண்டும் மூடி, கழுத்துல ஒரு தட்டு தட்டி மூச்ச அழுத்தி விடச்சொல்லுங்க! கோலி வெளிய வந்துரும்!

ஸ்டார்: அது முடியாது சார்

டோண்டு: ஏம்பா

ஸ்டார்: அவரு மூக்குல ஒரு பலப்பத சொரிகிகிட்டாராம்!

டோண்டு: என்னது மூக்குல பலப்பமா???

டோண்டு மயங்கி சாய்கிறார், அண்ணன் வாழ் தாங்கி பிடித்து அசுவாசப்படுத்துகிறார்!

மீண்டும் தொலைபேசி அடிக்கிறது!

இந்த முறை வால் தொலைபேசியை எடுக்கிறார்!

மறுமுனையில் ஒரு குரல்: மாமா மாமா..........

வால்: மாமாவா? யாருங்க அது

குரல்: நாந்தான் மாமா, சதீஷு!

வால்: யோவ், நான் chief secretary வால் பேசறேன், உங்க மாமா இல்லை!

சதீஷு: சாரி சார், மீசை வெச்ச எல்லோரையும் மாமான்னுதான் கூபிடநூன்னு எங்க வீட்டுல சொன்னாங்க. அதான்! மன்னிச்சிக்கோங்க! விஷியம் என்னன்னா, கோலி குண்டு வெளிய வந்திரிச்சு சார், அப்பொறம் கூடவே மூக்கில இருக்கிற பலப்பமும் விழுந்திருச்சு! வேற ஒன்னும் செய்யலை, என்னோட அர்ணா கயிறை எடுத்து மூக்கு உள்ளார உட்டு, வாய் வழியாய் எடுத்தேன், எல்லாமே வந்திடுச்சு! என்ன அத பாத்த இன்ஸ்பெக்டர் இப்போதான் மயங்கி கீழ விழுந்தாரு! டோண்டு சார் இன்ஸ்பெக்டர் எங்கேன்னு கேப்பாருன்னுதான், அதான் நானே போன் போட்டேன்! OK வா.......

வால் அண்ணனும் மயங்கி விழுகிறார்!

மறுபடியும் தொலைபேசி அடிக்கிறது!!!

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 5
---------------------------------------------------------

டோண்டு சார் மயக்கம் தெளிந்து இந்த முறை போன்ஐ எடுக்கிறார்!

கோ க: என்ன சார். சரியான ஆளை கூப்பிட சொன்னேனே, வந்துட்டாரா!

டோண்டு : அனானி அவர்களே , அதுக்கு முன்னால ஒரு உதவி பண்ண முடியுமா?

கோ க: என்ன உதவியா???? என்ன வெச்சு நீங்க காமெடி கீமடி பண்ணலையே!

டோண்டு: சார் உண்மையாதான் சொல்லுறேன், உங்க உதவி கண்டிப்பா எனக்கு வேணும்!

கோ க: சரி கேளுங்க!

டோண்டு: அந்த பச்ச அட்ட புத்தகம் ஒரு அஞ்சு எனக்கு அனுப்புங்களேன், படிச்சிட்டு நிம்மதியா சொர்கத்துக்கு போறேன்! இங்க நடக்கிற torture இக்கு உங்க torture எவ்வளவோ பரவாஇல்லை!

கோவி கண்ணன் அண்ணன் இந்த முறை மயங்கி விழுகிறார்!

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி 6
----------------------------------------------------

டோண்டு: ஹலோ ஹலோ ....என்ன நம்ம அனானி தீவிரவாதி பேசாமலே இருக்காரு? ஒரு வேளை, அவரு எழுதியத அவரே படிச்சு மயங்கி கீழ விழுந்துட்டாரா? ஹலோ ....ஹலோ.....சார்....ஐயா.......பாவா........நைனா....எந்த சாரோ ........... உங்க பொக்கிஷத்த எல்லாம் எங்க வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு போங்க சார்.......புண்ணியமாக போகும்.........நெய்வேலீல இன்னைக்கு மழைநால கரிஎடுக்க முடியலையாம், நீங்க எழுதின பேப்பரு எல்லாம் இருந்தா இன்னைக்கு ஒரு நாளு கொளுத்தி கரண்டு உற்பத்தியாவது சர்கார் செய்யும்...கொஞ்சம் மனசு வைங்க சார்.......

கோவி அண்ணன் மயக்கம் தெளிந்து மறுபடியும் : commisioner சார், அவ்வளவு easy ஆக நான் போயிட மாட்டேன். உலகத்துல எவ்வளவு விஷியம் இருக்கு நான் எழுத! சும்மா உட்டுரோவோமா???? கொறஞ்சது ஒரு ஆயிரம் பேராவது ICU வில தள்ளாம போறதில்லேன்னு சபதம் எடுத்திருக்கிறேன்....so சொல்லுறத இப்போ கவனமாக கேளுங்க!

இன்னைக்கு ராவுக்குள்ள சென்னை கன்னிமாரா நூலகம், Madras University நூலகம், Anna University நூலகம், chennai மாவட்ட மத்திய நூலகம், Landmark, Book point, இங்க இருக்கிற எல்லா புத்தகங்களையும் நாலு பெரிய trailer லாரியில அடச்சு நான் சொல்லுற எடத்துக்கு அனுப்பனும்!

இது நடக்கலைன்னா நான் சொன்னத செய்ய வேண்டிவரும்!

லைன் கட்டானது.........இந்த வினோத Ransom ஐ கேட்டு டோண்டு யோசிக்கிறார்! வாழ் அண்ணனுக்கும் தெரியப்படுத்தி இருவரும் யோசிக்கிறார்கள்!

வால்: இருந்தாலும் சார், இந்த ஆளு பெரிய ஆளுதான்! என்னே அறிவுப்பசி பாருங்க! கிட்டத்தட்ட மட்ராசுல இருக்கிறரா அத்தனை புத்தகங்களையும் இவர் வேண்டும் என்று சொல்லுறாருன்னா, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கணும்!

இதை ஒட்டுகேட்டு கொண்டு இருக்கும் ஸ்டார் ஜன் தரை தாரையாக கண்ணீர் வடிக்கிறார்........."எழுத்துபுயல் எங்கேயோ போயிட்டாருங்க.. .....எங்கேயோ......எங்கேயோ.....ஆகா....என்னே அவர் அறிவு....என்னே அவர் துணிவு.........."

அதைப்பார்த்து கடுப்பான டோண்டு: ஸ்டாரு, நீங்களும் இப்போ எங்கேயோ போகப்போறிங்க....ஏம்பா ரைட்டரு, ஆண்டிப்பட்டிக்கு ஒரு transfer order போடப்பா, ஸ்டார் ஜன் ரொம்ப ஆசப்படராறு!

ஸ்டார் ஜன் துண்டைக்காணும் துணியை காணும் என்று ஓடுகிறார்!

கிரி சொன்னது…

ஹா ஹா ஹா "No" கலக்கல் :-))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாஞ்சில் பிரதாப்


//(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)//

என்னது வேட்டைக்காரன் ஓட்டைகளை பதிவாப்போடபோறீங்களா??? நான் அதற்காக ஒரு பிளாகே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...//

இப்பவே பீதியைக் கிளப்பினால் எப்படி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பறம் போலிகளை இடம் பார்த்து சுட்டிக் காட்டியமை நன்று!
//

:) மைனர் குஞ்சு கதை மாதிரி சொல்றேள்

கோவி.கண்ணன் சொன்னது…

//LOSHAN said...
நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி.. நடத்துங்க.. ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல..;)//

லோசன்,
நான் எதுவும் பதிவுகள் எழுத திணறும் நேரத்தில் இது போல் மொக்கைகள் போடப்படும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
நீங்க வைச்சிருக்கிற டைட்டில்ல ஏதாவது நுண்ணரசியல் கண்டுபிடிக்கலாமா?
//

தலைப்பில் ஓட்டைகள் இருக்கு, அதுலயும் வேறென்ன ஓட்டை ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வஜ்ரா said...

//5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது

குரலில் வயது தெரியாது.//

குரலில் வயது தெரியாது ஆனால் குரலால் வயதானவர்கள் என்பது தெரியும். இப்பெல்லாம் எஸ்.ஜானகி அம்மா பாடினால் கேட்க்க முடிவதில்லை


//6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது

இதில் எந்த லாஜிக் ஓட்டையும் இல்லை.//

அவரை திருதிருன்னு முழிக்க வைத்தார்கள். எத்தனை ஐஐடி மாணவர்கள் அப்படி விழிக்கிறார்கள் ?

//மூன்று நிமிடத்திற்குள் காலி இடத்திற்குச் செல்ல முடியுமா சென்னையில் ?//

நெருக்கமான இடமாவும் படத்தில் காட்டப்படல//கைதிகள் யாரென்று முடிவு செய்த கமலுக்கு அவர்கள் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.//

படத்துல் அவரு கைதிகளின் முகத்தைப் பார்க்கவில்லை, ஸ்பீகர் போன் தானே பேசுபவர்களிடம் இருக்க வேண்டுமென்பார்

//

ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி VOIP. அதைவைத்து ஐ.பி எண்ணைக்கண்டு பிடித்துவிட முடியும். எந்த விண்டோ பீரியடும் தேவையில்லை செல்ஃபோன் போல்.
//

ரிமொட் டெஸ்க்டாப், விபிஎன் வழியாக வெவ்வேறு நாடுகளின் ஐபி களிலிருந்து பேசமுடியும்

வஜ்ரா,
நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி

NO சொன்னது…

உன்னைப்போல் ஒருவன் - பகுதி 7
-------------------------------------------------

டோண்டு: வால், ஒன்னு செய்யலாம், நம்ம crack squad ஒண்ணு இருக்கு, இந்த மாதிரி emergency நிலமைக்காகவே வெச்சிருக்கேன், அவங்கள அனுப்பி, யாரு சென்னைல, அதிக பேப்பரு வாங்கி xerox copy போட்டாங்கன்னு தேடுவோம். சைடுல நம்ம negotiations உடாம செய்வோம், எப்படியும் பிடிச்சுடலாம்!

வால்: அத்த உட என்கிட்டே வேற ஐடியா இருக்கு! எனகென்னமோ, இந்த ஆளு சரியான விளம்பர பிரியரா இருப்பாரோன்னு தோணுது, நம்ம ரெண்டு பேரு மாதிரியும். அவரும் கண்டபடி எழுதி தள்ளி இதுதான் காவியம் அப்படின்னு நினைக்கிறாரு, நாமும் அதே ரேஞ்சுதான், இருந்தாலும் இந்த அண்ணன் விளம்பர பிரியர் என்பதைத்தாண்டி விளம்பர வெறியராக தெரியுது! நாம ராத்திரி கனவுல வந்ததைதான் எழுதிகிறோம், இவரோ, ராத்திரி, பகல், இப்படின்னு கண்ட நேரமும் எதை எழுதலாம் என்று யோசிச்சி, கடைசில வாய்க்கு வந்தத கிறுக்கி தள்ளி தான் ஒரு பெரிய மேதை என்பதை யாருக்கோ prove செய்ய நினைக்கிராருன்னு தோணுது! அதனால இவரு இந்த நேரத்துல பல பேருகிட்ட இதைப்பத்தி பேசியருக்கலாம். அத வெச்சு இந்த ஆளோட உருவத்த வரைந்தால் யாரென்று கண்டு பிடுத்துவிடலாம்!
எப்படி என் idea!!!! (வால் அவர்கள் ஒரு கண்ணாடி முன்ன போய் நின்று அவரின் உருவத்தைப்பார்த்தே சொல்லுகிறார் - மச்சான் நீ மேதடா...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற...அறிவாளிடா நீ .......எங்கேயோ இருக்கவேண்டியவன்....இங்க வந்து இந்த டோண்டு சார் கிட்ட மாடிக்கிட்டையே.........என்று புலம்புகிறார்)

டோண்டு (சற்று கடுப்புடன்) : அது எப்படி வாலு பேசறத வெச்சு ஒருத்துரோட உருவம் மற்றும் வயசு தெரியும்????? logic இடிக்குதே? பல மொழி பேச்சு என்பது 1962 இல நான் அராய்ச்சி செய்த விஷியம்.. அதுல நான் கண்டுபிடிச்ச விஷயம் ஒண்ணு இருக்கு......அத நான் சொல்ல ஆரம்பித்தேன் என்றால்.........

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது தொலைபேசியில் கோ க வருகிறார்: ஹலோ ...... நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரியுது, நான் யாருன்னு கண்டு பிடிக்கதான try பண்ணுறீங்க.....அதெல்லாம் எப்படி முடியும்? இதையெல்லாம் நிறுத்தவில்லை என்றால் நான் சொன்னத செய்வேன்! அப்புறம் வருத்தபடுவீங்க!

டோண்டு: அனானி அவர்களே...அவசரப்பட்டு நீங்க எதுவும் செய்துடாதீங்க.....உங்களுக்கு வேண்டியத நாங்க செய்யுறோம்...

கோ க: பயம் இருக்கட்டும்......இன்னும் கொஞ்சம் நேரத்துல கூபிடுறேன்......அன்டர்டிகாவில பனி உருகுதாம்...அத பத்தி அறைப்பக்கம் இப்போ நான் எழுதணும்.......மறுபடியும் வருவேன்

ஆளவந்தான் சொன்னது…

//
மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
//
பதிவிலிருந்தா??..படத்திலிருந்தா??? :)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்