பின்பற்றுபவர்கள்

4 ஜூன், 2009

செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக)

அலுவலகம் முடிந்து வந்து வீட்டினுள் நுழைந்து உடைமாற்றிவிட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய வாரத்தின் அமுதம் வார இதழைப் புரட்டினேன்.

அமுதம் வார இதழின் வழக்கமான கடிதம் டீபாயில் இருந்தது, உள்ளிருந்து கையில் காப்பியுடன் வந்தவள்,

"வந்ததும் வாராமல் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து......இத்தோடு 99 கதை எழுதியதாகச் சொல்றிங்க, ஒரு கதையும் அமுதம் வார இதழில் வந்தபாடு இல்லை"

இளைத்துக் கிடந்த இரண்டு கொயர் நோட்டையும், அமுதம் கதையை திருப்பி அனுப்பிய தகவல் கடிதத்தையும் ஏளனமாகப் பார்த்தபடி என்னை நக்கல் அடித்துக் கொண்டிருந்தாள் மனைவி

"அமுதம் இல்லாட்டி எதோ ஒண்ணு, என்னிக்காவது ஒரு நாள் வரும்... நீ பார்க்கத் தானே போறே"

"ம் கும்... கதை கிதைன்னு எழுதறத்துக்குப் பதில் சும்மா இருங்கன்னு சொன்னாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டிங்க... அதனால் தான் நான் கண்டுக்காமல் இருக்கேன்" - வெட்கப்பட்டாள்

"என்னோட இலக்கிய ஆர்வத்தை ரொம்பதான் சீண்டுறே..." இடுப்பைக் கிள்ள மேலும் வெட்கப்பட்டு விலகினாள்

"சரி காப்பி ஆறிடப் போறது எடுத்துக் குடிங்க" என்று கூறிவிட்டு அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள்

காப்பியை உறிஞ்சிக் கொண்டே வார இதழைப் புரட்டினேன்.

"வயிற்றுக்காக....." என்ற தலைப்பில் சிறுகதை வாசிக்கத் தொடங்கினேன்.

'வாழாவெட்டி' பற்றிய கதை......

'நமக்குத் தோன்றுவது போலவே பலருக்கும் தோன்றுமோ....பாத்திரத்தின் பெயர்களும்,
வட்டாரவழக்கு மொழி நடையும் சேர்ந்து இப்படி எழுத முடியுமா ?.......நம்மால் இப்படியெல்லாம் எழுத முடியாதோ' நினைத்துக் கொண்டேன்

"புகுந்த வீட்டின் கொடுமை....பிறந்த வீட்டின் வறுமை துறத்த தன் இரண்டு குழந்தைகளின் வயிற்றுப் பசிபோக்க வேற்று ஆடவனுடன் இருட்டிற்குள் நுழைந்தாள்" என்று முடிந்திருந்தது சிறுகதை

தீர்வு விபச்சாரம் ? நவீன இலக்கியம், எதார்த்தம் என்ற பெயரில் ......ச்சே என்ன கண்றாவிக் கதை இது ?

பெருமூச்சு விட்டு புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு,

'நம்ம கதையில் "இரண்டுக் குழந்தைகளின் பசிக்காக சித்தாள் வேலையில் சேர்ந்து சும்மாடு சுமந்தாள்" என்றெல்லாவா முடித்தோம், நாமளும் இதே போலத்தான் யோசிக்கொறோம் ஆனால் ஒருவேளை கதையின் முடிவு சாதாரணமாகவே இருக்கக் கூடாதா ?

******

அங்கே அமுதம் அலுவலத்தில்,

ஆசிரியர் உதவியாளரைக் கூப்பிட்டு "இந்தவாரம் வந்திருக்கக் கதைகளில் தேறுவதை 'பைரவனிடம்' கொடுத்து கோவை மாவட்ட வழக்கில் எழுதித்தரச் சொல்லு... புரட்சிப் புதுமைன்னு அவரும் முடிவுகளை நல்லா மாற்றி எழுதுவார்... 'வயிற்றுக்காக' போனவாரக் கதையை மாற்றி எழுதித்தந்த 'கண்ணாயிரம்' கிடைச்ச பாராட்டுக் கடிதங்களைப் பார்த்த பிறகு இன்னும் நிறைய பணம் கேட்டான், கம்பெனிக்கு கட்டுப்படியாகாது ... இந்தவாரம் பைரவன் எழுதட்டும்"



போட்டி இணைப்பு

27 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

ஆஹா.. கோவியண்ணா..

கதையை கடைசியில இப்படி கவுத்துட்டீங்க :-))

எல்லாமே எதிர்வினையோட பலன்தானா :-)))

சென்ஷி சொன்னது…

சொல்ல மறந்துட்டேன்..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

நாடோடி இலக்கியன் சொன்னது…

ட்விஸ்ட் அருமை.

வெ பெ வா..!

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கலக்குங்க.

இந்த கதையை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே... :)

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல டுவிஸ்ட். வெற்றி பெற வாழ்த்துக்கள்

பதி சொன்னது…

நல்லா இருக்கு !!!!!!!

Rajaraman சொன்னது…

சாதாரணமாக ஆரம்பித்து டக்கென்று வித்தியாசமான முடிச்சோடு முடித்தது அருமை. போட்டியில் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Venkatesh Kumaravel சொன்னது…

வாழ்த்துகள்! கோதாவுல வரிசையா பெரிய தலைகள் எல்லாரும் இறங்குறீங்க போல!

அன்புடன் அருணா சொன்னது…

அச்சச்சோ! இப்பிடில்லாம் கூடவா செய்வாங்க???

நையாண்டி நைனா சொன்னது…

ம்ம்ம்ம்... இப்படிதான் நடக்குதா அங்கே....

வாழ்த்துக்கள்....

தொடர்பவன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Athisha சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே.. ஆளாளுக்கு இப்படி சிக்ஸரா அடிச்சா நாங்கல்லாம் என்னதான் செய்யறது அவ்வ்வ்வஃ

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

இப்படி கம்பெனி சீக்ரட்டை வெளியில் சொன்னால் எப்படி பொழப்பு நடத்துறது.... இதை வன்மையாக கண்டிக்கிறேன்

வாழ்த்துக்கள் :)

வேத்தியன் சொன்னது…

மிகவும் ரசித்தேன்...

கடைசியில் அருமை...

நன்றி...

நசரேயன் சொன்னது…

முடிவை எதிர் பார்க்கவில்லை, நல்லா இருக்கு

வெண்பூ சொன்னது…

அருமையான கதை கோவி.. எதிர்பாராத முடிவு.. கடுமையான போட்டிதான் போல..

என்ன கதை எழுதறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. இந்த மாதிரி சூப்பர் கதைகளா படிக்குறப்ப கம்முன்னு பைத்தியக்காரன்ட பேசி நானும் நடுவர் ஆகிடலாம்னு பாக்குறேன்..ஹி..ஹி..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல கதை கோவியாரே!
வெற்றிபெற வாழ்த்துகள்!!

கோவி.கண்ணன் சொன்னது…

வெண்பூ மற்றும் அதிஷா,

கலாய்ப்பது பற்றி கதை எழுதுங்க. பாவம் என்னைய விட்டுடுங்க !

:)

அது சரி(18185106603874041862) சொன்னது…

முடிவு நல்ல ட்விஸ்ட்...:0)))

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன்

TBCD சொன்னது…

நல்ல திருப்பம்...ஒடிச்சி திருப்புறதுக்குள்ளே மூச்சு வாங்கிடுச்சி !

Sundar சுந்தர் சொன்னது…

ரொம்ப பொருத்தம்! பரிசு பெற வாழ்த்துக்கள்!

கோபிநாத் சொன்னது…

கடைசியில நச்சுன்னு முடிச்சிட்டிங்க..கதை சூப்பரு ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

Mahesh சொன்னது…

நல்ல கதை with அட்டகாசமான ட்விஸ்ட் !!!

ஆமா...வாரைதழ் பேரு அமுதமா? எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இருக்கே :)))))))))))))))))))))))))

Mahesh சொன்னது…

நம்ம கதையைப் படிச்சுட்டியளா? நாங்க பரிசே வாங்கியாச்சு !!

Radhakrishnan சொன்னது…

மிகவும் வித்தியாசமான, ஒரு எழுத்தாளனின் ஏக்கத்தையும் கதையெனில் அதற்கான வரைமுறைகள் எழுதப்படாமல் வகுத்து வைக்கப்பட்டு இருக்கிறதெனவும் சொல்லும் அழகிய கதை.

ஒரு கதையை, படிப்பவரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதப்படும் கதைகளே மிகச்சிறந்த கதைகள் என பெரும்பாலான எழுத்தாளர்கள் மனதிலும், வாசகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று. சித்தாள் சும்மாடு சுமந்தாளில் ஒரு தாக்கம் ஏற்படாது, அதே வேளையில் வேறு ஆடவனுடன் நுழைந்தாள் என எழுதும்போது பெரும்பாலான வாசகர்களுக்குச் சமுதாயத்தின் மேல் கோபம் வருமாறு செய்துவிடுகிறது. ஆனால் உண்மையிலே கதையைப் படித்துவிட்டு 'உச்' கொட்டிவிட்டுப் போவதுதானே அனைவரின் வாடிக்கை.

கதை அருமையாக இருக்கிறது ஐயா. மிக்க நன்றி.

குடுகுடுப்பை சொன்னது…

நல்லா இருக்கு பெரியவரே, ஒரே வருத்தம் என்னன்னா ரவி உங்க கதைக்கு மார்க் போட முடியாம தடா போட்டுட்டாங்களென்னுதான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்