பின்பற்றுபவர்கள்

13 மே, 2007

சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !

ஆழமான தூக்கம்... தூக்கத்தில் கனவு ... ஆழமான தூக்கத்தில் கனவு வருமா ? எனக்கு வந்தது ... தங்க அணிகலன்கள் அணிந்த மனிதர்கள் ... இல்லை இல்லை ... அரசர்கள் ... ம் அதுவும் இல்லை ஒருவர் கையில் வேல் இருந்தது ... ஒருவர் பாம்பை அணிந்திருந்தார்.... ஒருவர் கையில் சக்கரம் ... ஆ புரிந்துவிட்டது ... நான் மேல் உலகத்திற்கு வந்திருக்கின்றேன். நான் பார்த்தது முருகன், பரமசிவன் மற்றும் விஷ்ணு ... ஆளுக்கு இரு மனைவிகளுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். சிலர் ஆடிக் கொண்டிருந்தனர் ... வாத்திய இசைகள் ஒலித்துக் கொண்டு இருந்தனர்.

இவங்கெளெல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை போல இருக்கிறது அங்கு நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார் இந்திரன். பிரம்மா சரஸ்வதி தம்பதிகள் சகிதமாக ஆடல்பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தனர். நம்ம நித்ய ரிசி நாரதரும் அழகிகளின் ஆடல் பாடல்களைப் பார்த்து மெய்மறந்து நின்றார். இசை புரிந்தது ... பாடல் ஓரிரு சொற்கள் புரிந்தன ... முழுவதுமாக புரியவில்லை. எனக்கு பக்கத்தில் என்னைப் போல நின்ற ஒரு மானிடரிடம் விசாரித்தேன்... என்ன சாமி பாடுறாங்க ... ஒன்னும் புரியல ... ஓ அதுவா 'இது தேவ லோகம்....இங்கு பேசுவது, பாடுவது எல்லாமே தேவ பாசை ... நேக்கு புரியறது என்றார்.
எங்க ஊர் முருகன் இருக்காரே அவரும் புரியாத பாசைத்தான் பேசுகிறார் என்றேன்... ஆமாம் இங்கே எல்லோரும் ஒரே பாசைதான் பேசுவார்கள்...'நீங்க சொல்றவர் எப்பவோ தேவை பாசைக்கு மாறிட்டார்' என்றார்.


அதன் பிறகு தலையில் கொம்பு வைத்தவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்றார்... அதே புரியாத பாசையில் சித்திர குப்தனுடன் எமதர்மராஜன் என்னைப் பற்றி கணக்கு வழக்குகளை விசாரித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை என்னைக் கைக் காட்டி பேசுவதன் மூலம் அறிந்து கொண்டேன். அங்கேயும் கூடவே அழைத்துவரப்பட்ட மானிடரிடம் கேட்டேன் ... என்ன சாமி சொல்றாங்கே இவிங்க ? '' இது எமதர்ம சபை...உன்னைபற்றி விசாரித்ததில் ... நீ நல்லவன் என்று தெரிந்ததாம் ... அதனால் உன்னை சொர்கம் அழைத்துச் செல்லப் போகிறார்களாம்... ஆனாலும் ஒரு சிக்கல் ! பயந்தபடி கேட்டேன் 'என்ன சாமி சிக்கல் ?' சொன்னார் எல்லாம் சரியாக இருக்கு 'நீ சொர்கம் போனால் அங்கு இருப்பவர்கள் உன்னிடம் பேசவோ, நீ அவர்களிடம் பேசவோ முடியாது அல்லவா ?'

'ம்' - சொல்லுங்க

'அதனால் உனக்கு தேவ பாசை தெரியலங்கிறதால...'

'!????'
'பூமிக்கு உன்னை திரும்பவும் அனுப்பி.... நீயாகவே தேவ பாசை கற்றவுடன் பிறகு உன்னை அழைத்துவந்து சொர்கத்தில் விடுவார்களாம்...இல்லாவிடில் நீ மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பாயாம்... எப்பொழுது உனக்கு தேவ பாசை தெரிகிறதோ அப்போது தான் உனக்கு இங்கே சொர்கம்'

'அடப்பாவமே ...கைக்கு எட்டினது வாயிக்கு எட்டாமல் ஆச்சே'

நினைத்துக் கொண்டிருக்கும் போதே...முதுகு தண்டு சில்லிட்டது...உடலெல்லாம் குளிர்

விழித்துக் கொண்டேன்... நான் கண்டது கனவா ?... பக்கத்தில் படுத்திருந்த குழந்தை படுக்கையை நினைத்த ஈரம் ... என் உடையை நினைத்து ... உடம்பு நினைந்து இருந்தது

ஆனாலும் கனவின் தாக்கம் நீங்கவில்லை...!

நாளைக்கே நூலகத்திற்கு சென்று அந்த புத்தகத்தை எடுக்க வேண்டும்.

'30 நாட்களில் சமஸ்கிரதம் அறிந்து கொள்ளுங்கள்' - பாலாஜி பப்ளிகேசன்.

:)))))))

15 கருத்துகள்:

ALIF AHAMED சொன்னது…

"சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !"


கத்துக்காம இங்கயே இருந்துடலாமுனு நினைக்காதிங்க...

ஹி ஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//கத்துக்காம இங்கயே இருந்துடலாமுனு நினைக்காதிங்க...

ஹி ஹி //

கத்துக்காம சொர்கம் போக முயற்சி பண்ணியதால் போனதால் தான் திரும்பவும் பிறந்து இருக்கிறேன் என நினைக்கிறேன்.

:))

VSK சொன்னது…

ஆக, எப்படியோ 30 நாளில் ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொண்டு, இம்முறை சொர்க்கம் போக முடிவு செய்து விட்டீர்கள்!

மகிழ்ச்சி!
:))

Machi சொன்னது…

\\எங்க ஊர் முருகன் இருக்காரே அவரும் புரியாத பாசைத்தான் பேசுகிறார் என்றேன்... ஆமாம் இங்கே எல்லோரும் ஒரே பாசைதான் பேசுவார்கள்...'நீங்க சொல்றவர் எப்பவோ தேவை பாசைக்கு மாறிட்டார்' என்றார் \\

அவரு பேரை கூட மாத்தியாச்சு ;-))

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
ஆக, எப்படியோ 30 நாளில் ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொண்டு, இம்முறை சொர்க்கம் போக முடிவு செய்து விட்டீர்கள்!

மகிழ்ச்சி!
:))
//


எஸ்கே ஐயா,

சொர்கம் - நரகம் என்ற அரத பழசு கான்செப்ட் அதில் பேசப்படுவது தேவபாசை என்று மில்லினிய காலத்திலும் வலியுறுத்தும் பொய் ! - இதைப் பற்றி கடுகளவு கேள்விகளோ, பதிலோ சொல்லாது என்னை தேவ பாசை படிக்கச் சொல்லும் உங்கள் ஆன்மிக லக்ஷணம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

எழுத்துப் பிழை குறித்து வரும் அக்கரை மற்றும் மொக்கைப் பின்னூட்டங்களுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

//ஆளுக்கு இரு மனைவிகளுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். சிலர் ஆடிக் கொண்டிருந்தனர் ... //

uh oh!! ரெண்டு மனைவிகள் (OR -மனைவி + துணைவி) பகுத்த்றிவு பகலவர்கள் மட்டும் தான் "வைத்து" கொள்ளலாம்னு ஏதாவது ரூல் இருக்கோ? (உ.ம்.: மு.க; ஈ.வே.ரா)

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
uh oh!! ரெண்டு மனைவிகள் (OR -மனைவி + துணைவி) பகுத்த்றிவு பகலவர்கள் மட்டும் தான் "வைத்து" கொள்ளலாம்னு ஏதாவது ரூல் இருக்கோ? (உ.ம்.: மு.க; ஈ.வே.ரா) //

அப்போ ஈ.வெ.ரா; மு.க எல்லோரும் கடவுளுக்கு சமம் என்று சொல்ல வருகிறீர்களா ?
:)))))))

பெயரில்லா சொன்னது…

அந்த "மொக்கை" பின்னூட்டங்களைப் போட்டு உங்க லட்சணத்தை காமிக்க வேண்டியது தானே!

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த "மொக்கை" பின்னூட்டங்களைப் போட்டு உங்க லட்சணத்தை காமிக்க வேண்டியது தானே!

12:58 PM, May 13, 2007
//

அனானிகளுக்கு முக (பெயர்) லக்சணம் தெரிந்தால் போட எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

- கோவையில் இருந்து கோபாலன் என்று ஒரு பெயராவது போட்டால் நான் போடலாம்..; வெறும் சீண்டலுக்காக போடப்படும் அனானி பின்னூட்டங்களுக்கு 'நோ' முயற்சிப்பது வீன் !
:))))))

நாகை சிவா சொன்னது…

பரவாயில்லையே, அப்ப நான் மறுபடி மறுபடியும் இப்பூலகில் பிறப்பேன் என்று சொல்லுறீங்க... நல்ல விசயம் தானே!

கோவி.கண்ணன் சொன்னது…

//குறும்பன் said...
\\எங்க ஊர் முருகன் இருக்காரே அவரும் புரியாத பாசைத்தான் பேசுகிறார் என்றேன்... ஆமாம் இங்கே எல்லோரும் ஒரே பாசைதான் பேசுவார்கள்...'நீங்க சொல்றவர் எப்பவோ தேவை பாசைக்கு மாறிட்டார்' என்றார் \\

அவரு பேரை கூட மாத்தியாச்சு ;-))
//

ஆமாங்க ஷன்முகனாம் - நம்ம குப்பனுக்கும் சுப்பனுக்கும் இது தெரியாமல் தமிழில் தான் முருகனைப் பாடுவேன் என்று அடம்பிடிக்கிறார்கள்.
:)))

VSK சொன்னது…

//ஆனாலும் கனவின் தாக்கம் நீங்கவில்லை...!

நாளைக்கே நூலகத்திற்கு சென்று அந்த புத்தகத்தை எடுக்க வேண்டும்.

'30 நாட்களில் சமஸ்கிரதம் அறிந்து கொள்ளுங்கள்' - பாலாஜி பப்ளிகேசன்.//

இதைச் சொன்னது நானில்லை.

கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றீர்கள்.
மகிழ்ச்சி எனச் சொன்னேன்.

எய்தவன் இருக்க அம்பை நோகவேண்டாம் நண்பரே!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா,

நீங்கள் மட்டுமல்ல...பிற மதத்துக்கு மக்களும் சமஸ்கிரதம் அறியும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பாங்க !
:)))

அடுத்தும் ஒரு படி இருக்கு...!

சமஸ்கிரதம் மட்டும் தெரிந்தால் போதாது... சூத்திரனுக்கு சொர்கம் இல்லை என்று மனு சொல்லி இருக்கு...சூத்திரனாக பிறக்காமல் எப்பொழுது பிறப்பு அமைகிறதோ அப்பொழுது தான் சொர்கம் !
:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//எய்தவன் இருக்க அம்பை நோகவேண்டாம் நண்பரே!
:)) //

அம்பு எப்போதும் வம்பு செய்யும் அம்பாகவே இருக்கிறது...!

அடுத்தும் ஒரு படி நிலை இருக்கு ...நாகை சிவாவுக்கு மறுமொழி இட்டு இருக்கிறேன்...அதுக்கு சான்ஸ் இருக்கான்னு பாருங்க !

:)))

அடுத்த பிறவியில் உங்களை நான் சந்திக்க முடியாத பாவி ஆகிவிடுவேனோ ?
:)))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்