பின்பற்றுபவர்கள்

25 மார்ச், 2007

இந்திய அணிக்காக இன்னுமொரு யாகம் செய்யலாம்

இந்தியா ஒலக கோப்பையை வெல்ல வேண்டும், இல்லையென்றால் 2000 கோடி நட்டமாம். ஏற்கனவே செஞ்ச யாகத்துல என்ன கொறை(யுது)ன்னு தெரியல. இப்பவும் சரியா செஞ்சுட்டா நமக்குதான் கோப்பை. இல்லையின்னா வீரர்கள வச்சு வெளம்பரம் எடுத்துவங்க உலக அளவுல கோப்பையை வச்சு பிச்ச எடுக்கிற நெலமைக்கு வந்துடுவாங்கலாம்.

கடைசியாக ஒரு சான்ஸ் இருக்காம், இந்திய அணிகிட்ட தோத்த பெர்முடாவும், இந்திய அணிக்கிட்ட ஜெயச்ச பங்களா தேசும் நாளைக்கு மோதுறாங்களாம். இதுல பங்களா தோத்தால் இந்தியா 8 க்கு போகும் இல்லாட்டி வீட்டுக்கு போகுமாம்.

அதுனால இரவோடு இரவாக பெர்முடா ஜெயிக்கனும்னு 'சரியான' ஒரு யாகம் வளர்த்தா ஜெயிக்க சான்ஸ் இருக்காம்.

பழசெல்லாம் ஞாபகம் வருது

படத்தில் தினமலர் 14000 ரன்கள் எடுத்தாரென்று ஹலைட் பண்ணி இருக்கிறது படிக்க தவறாதீர்கள். இது புகழ்ச்சியா இகழ்ச்சியான்னு ஒன்னும் புரியல. பாலிட்டிக்ஸ் தெரிஞ்சவங்கதான் சொல்லனும். :)

4 கருத்துகள்:

VSK சொன்னது…

இதுவும் கூட புகழ்ச்சியா இல்லை வீட்டுல சேனல் வாங்கினவங்களோட புலம்பலான்னு தெரியலை கோவியாரே!!

:))

நாளைக்கு பங்களாதேஷ் 56 ஆல் அவுட்!

நீங்க வேணும்னா பாருங்க!

நம்ம குண்டு மன்னன் லிவராக் பந்து வீச்சுல திணறப் போறாங்க பாருங்க!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

(வி)எஸ்கே ஐயா,
எங்கேயொ பார்டின்னு சொன்னிங்களே ? உங்க கண்ணுல படாதுன்னு நெனச்சேனே !

சுத்தி சுத்தி அடிக்கிறாங்கப்பா,(ஆஸ்திரேலியாவும், தெ.ஆப்ரிக்காவும்)
:))))))))

VSK சொன்னது…

அதெல்லாம் டயத்துக்கு வந்திருவோம்ல!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
அதெல்லாம் டயத்துக்கு வந்திருவோம்ல!
:))
//

மறுவருகைக்கும் நன்றி !
விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்க !
:)))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்