பின்பற்றுபவர்கள்

8 ஆகஸ்ட், 2006

பல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்டணம் !

பாலச்சந்தர் கனேசன் ... குமுதம் கட்டணத் தளமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார் ... ஏறக்குறைய அனைத்து இணைய செய்த்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் கட்டண தளமாகிவிட்டது... ஓசி பேப்பர் படிக்கும் என்போன்றவர்களுக்கு தலையில் பலத்த இடி ...! குமுதம் அரசு பதில்கள் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராதவர்களில் நானும் ஒருவன் :)

நம் தமிழ் செய்தி நிறுவணங்கள் சில வழிமுறைகளை கையாளலாம்... இதன் மூலம் கட்டணத்தளமாக இருந்தாலும் பலர் சென்று படிப்பதற்கு பயனுறும். அதாவது எதாவது பொது நிறுவணங்கள் மூலம் (like paypal) கட்டணம் வசூலித்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் பத்திரைக்களுக்கும், அதன் சந்தா தாரர்களுக்கும் எல்லா பத்திரிக்கைகளும் படிப்பதற்கு ஏதுவாக மாற்றப்பட முடியும்.

இதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுதில்லை. எல்லா பத்திரிக்கைளுக்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். கட்டணம் என்றால் வாடிக்கையாளர்களை இழக்கும் பத்திரிகைகளும் பயன்பெறுவர். போட்டியும் நல்ல ஆக்கங்களும் இதன் மூலம் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

ஹிட்டு கணக்கை வைத்து அந்த பொது நிறுவணம் கட்டணங்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுக்கலாம். இதன் மூலம் சிறந்த பத்திரைக்கைக்கு அதன் பலன் நிச்சயம் போய் சேரும். வாசகர்களும் ஒரே பத்திரிக்கையை விதியே என்று படித்துக் கொண்டிருக்காமல் பல் சுவை செய்திக்களையும் படிக்கும் வாய்ப்பாக இருக்கும்.

இதற்கு பத்திரிக்கைகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கட்டண இணைய தளங்கள் கட்டண கழிவறை போன்று தேவையானவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு மற்றவர்கள் அங்கு செல்வதற்கான சூழலே இல்லாமல் போய்விடும். செய்வார்களா நம் பத்திரிக்கையாளர்கள் ?

24 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல ஐடியா !!

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
நல்ல ஐடியா !!
//
ஆமாங்க பொன்ஸ் ... ரொம்ப நாளாகவே இதுபற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன் இன்றைக்குத் தான் கூடி வந்தது ... இன்னும் நிறைய ஐடியா இருக்கு ... :)

பெயரில்லா சொன்னது…

மேற்கண்ட இணையதளம் பல்வேறு நாட்டு செய்திதாள்களை பார்க்கும் வசதியை தருகிறது.

இந்த தளம் கணிப்பொறி வல்லுனர்களுக்கு பல்வேறு புத்தகங்களை இணையத்தில் பார்க்கும் வசதியை தருகிறது.

இந்த தளம் நான் முன்னர் பதிவில் குறிப்பிட்டது போல பல்வேறு புத்தகங்களை பார்க்கும் வசதியை தருகிறது.

நீங்கள் சொல்கின்ற யோசனைக்கு முன்மாதிரியானவை இவை. ஆனால் பத்திரிக்கைகள் இந்த மாதிரியான ஷேர்ட் சர்வீசஸ் ஏற்று கொள்ளுமா என்பது தான் சந்தேகமே. விகடன் படிக்கிற பலர் குமுதம் படிப்பவர்களாகவோ அல்லது குங்குமம் படிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். ஷேர்ட் சர்வீசசில் ஒர் வெற்றி கரமான ஃபார்முலா(அது நீங்கள் சொல்கின்ற ஹிட் கவுண்டர் போல எளிமையாக இருக்காது) கொணர்ந்து விட்டால் இந்த யோசனை பெரும் வெற்றி அடையலாம்

பெயரில்லா சொன்னது…

Press Display
மேற்கண்ட இணையதளம் பல்வேறு நாட்டு செய்திதாள்களை பார்க்கும் வசதியை தருகிறது.
InformIT
இந்த தளம் கணிப்பொறி வல்லுனர்களுக்கு பல்வேறு புத்தகங்களை இணையத்தில் பார்க்கும் வசதியை தருகிறது.
EBRARY
இந்த தளம் நான் முன்னர் பதிவில் குறிப்பிட்டது போல பல்வேறு புத்தகங்களை பார்க்கும் வசதியை தருகிறது.

நீங்கள் சொல்கின்ற யோசனைக்கு முன்மாதிரியானவை இவை. ஆனால் பத்திரிக்கைகள் இந்த மாதிரியான ஷேர்ட் சர்வீசஸ் ஏற்று கொள்ளுமா என்பது தான் சந்தேகமே. விகடன் படிக்கிற பலர் குமுதம் படிப்பவர்களாகவோ அல்லது குங்குமம் படிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். ஷேர்ட் சர்வீசசில் ஒர் வெற்றி கரமான ஃபார்முலா(அது நீங்கள் சொல்கின்ற ஹிட் கவுண்டர் போல எளிமையாக இருக்காது) கொணர்ந்து விட்டால் இந்த யோசனை பெரும் வெற்றி அடையலாம்

பெயரில்லா சொன்னது…

நல்ல ஐடியாவா தான் இருக்கு இது நடைமுறைக்கு வந்தா நல்லா தான் இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//விகடன் படிக்கிற பலர் குமுதம் படிப்பவர்களாகவோ அல்லது குங்குமம் படிப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.// பா. கணேசன் ... அப்படியெல்லாம் இல்லிங்க ... ஓவ்வொரு பத்திர்க்கையில் சில நல்ல விசயங்கள் இருக்கிறது ... குமுதம் ... சுஜாதா பதில்கள், வாலி கவிதைகள், குங்குமம் ... ஜோக்ஸ் ... ஆனந்த விகடன் சிறுகதை ... அனுஅக்கா ஆண்டி ,, ஜுவி கழுகார் ... நக்கீரன் சங்கர்லால், திரைக் கூத்து இது போல சில விருப்பமான விசயங்கள் எல்லா பத்திரிகளிலும் இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
நல்ல ஐடியாவா தான் இருக்கு இது நடைமுறைக்கு வந்தா நல்லா தான் இருக்கும்
//
ஆமாங்க குமரன் வாசகர்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும் ... பாக்கெட்டு காலியாகமலும் பணம் உபயோகமாகவும் இருக்கும் :)

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்

இதே யோசனையை 4 வருடங்களுக்கு முன் முதுசொம் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கண்ணன் அவர்களிடம் கூறினேன். அவரும் இதனை நல்ல யோசனை என ஏற்றுக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளில் இறங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழ் இணையதள அமைப்பாளர்களை ஒருங்கிணைப்பது மலைப்பான காரியமாகத் தோன்றியதால் அப்போது விட்டுவிட்டேன்.

ஆனால் இன்று நின்று நிலைத்திருப்பது ஒரு சில தளங்களே ஆதலால் சாத்தியமெனவே தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

nalla idea....kovi...

கோவி.கண்ணன் சொன்னது…

//நிலா said...

நிலா ... இதைச் செய்வதற்கு சரியானவர் நீங்கள் தான் என்று தெரிகிறது ... உங்களுக்கு இதைப்பற்றிய நல்ல தெளிவும் இருக்கும் என்று நினைப்பதால் .. நீங்கள் முயற்ச்சி செய்யது ... பிள்ளையார் சுழியைப் போடுங்கள். வாழ்த்துக்கள் !

பெயரில்லா சொன்னது…

நல்ல ஐடியா. ஆனால் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமே?

பெயரில்லா சொன்னது…

GK,

நல்ல யோசனை.

அதில் விளம்பரங்கள் சற்று குறைவாக இருக்க வேண்டும்.

Pop up Window இருகக் கூடாது..

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
GK,
நல்ல யோசனை.
அதில் விளம்பரங்கள் சற்று குறைவாக இருக்க வேண்டும்.
Pop up Window இருகக் கூடாது.. //
ஆமாம் சிபா...
நல்ல யோசனை ...
Pop up Window எனக்கும் அலர்ஜிதான் .. pop up blocker இருந்தும் எப்படியோ எதாவது வந்து விழுகிறது :)

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் பலே ஆளா இருக்கிங்க போல, இன்றுதான் ஜீ.வி.யில் படித்தேன் :-) ஹா ஹா... அதெப்படி சிங்கப்பூரிலிருந்து கொண்டு ஊரில் இத்தனை வேலை செய்கின்றீர் :-)

பெயரில்லா சொன்னது…

அடேடே பதிவே போட்டிருக்கிங்க போல, நான் கொஞ்சம் லேட் போல, இரண்டு வாரமாக இணையம் பக்கம் மேயவில்லை அதான் தாமதமாக இருக்கிறேன் போல

கோவி.கண்ணன் சொன்னது…

//குழலி / Kuzhali said...
அடேடே பதிவே போட்டிருக்கிங்க போல, நான் கொஞ்சம் லேட் போல, இரண்டு வாரமாக இணையம் பக்கம் மேயவில்லை அதான் தாமதமாக இருக்கிறேன் போல
//
குழலி அவர்களே ...!
பதிவு போடவில்லை என்றால் என்னோட புரைபைலை பார்த்து கோவி.கண்ணனை தேடி போலிஸ் சிங்கப்பூர் வந்தாலும் வந்துடும் ...:)

பெயரில்லா சொன்னது…

அப்பப்ப உங்க மூளையும் வேலை செய்யுது..

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் Alex said...
அப்பப்ப உங்க மூளையும் வேலை செய்யுது..

:)
//
இது நல்லா இருக்கே ... குமுதம் அரசு பதில்கள் படிக்கிறவங்களுக்கு மூளையில்லை என்று யார் சொன்னது ?
:))

பெயரில்லா சொன்னது…

அய்யா ஜி.கே எத்தனை நாளா இந்த இடி ஐடியா எதோ விகடனோட சேத்து குமுதத்தை மட்டும் காசு கொடுத்து படிக்கலாம்னு பாத்தா எல்லாருக்குமா ஐடியா குடுக்கிறீர் ?:))

பெயரில்லா சொன்னது…

ஜி.கே விகடன் இணையத்தில் படிக்கிறீர்களா? ஒரே ஒரு ஃப்ளாஷ் பாப் அப் மட்டுமே மிக நல்ல வடிவமைப்பு, குமுதம் இலவசமாக பாப் அப் இன்றி ஆ.விக்கு 900 ரூபாய் பாப்போம் குமுதம் எவ்வளவுன்னு

கோவி.கண்ணன் சொன்னது…

///மகேந்திரன்.பெ said...
அய்யா ஜி.கே எத்தனை நாளா இந்த இடி ஐடியா எதோ விகடனோட சேத்து குமுதத்தை மட்டும் காசு கொடுத்து படிக்கலாம்னு பாத்தா எல்லாருக்குமா ஐடியா குடுக்கிறீர் ?:))

August 10, 2006 11:06 PM
//
ஏதோ நம்பளால முடிஞ்ச ஒரு ரோசனை ! :)

//மகேந்திரன்.பெ said...
ஜி.கே விகடன் இணையத்தில் படிக்கிறீர்களா? ஒரே ஒரு ஃப்ளாஷ் பாப் அப் மட்டுமே மிக நல்ல வடிவமைப்பு, குமுதம் இலவசமாக பாப் அப் இன்றி ஆ.விக்கு 900 ரூபாய் பாப்போம் குமுதம் எவ்வளவுன்னு //

காசு கேட்டவுடனே ஓடிட்டோம்ல ... பார்போம் நம்ப ஐடியாவை செயல்படுத்துகிறார்களா என்று ... !
:)

பெயரில்லா சொன்னது…

//காசு கேட்டவுடனே ஓடிட்டோம்ல ... //

அதென்ன ஓடிட்டோமில்ல ? நான் ஒன்னும் ஓட்லிங்க ஐ.சி.ஐ.சி.ஐ கார்ட்காரன கேட்டு பாருங்க நம்ம ட்ரான்செக்ஷன் கணக்க சொல்லுவான் :))

துபாய் வந்தும் என்ன ஒரு நாட்டுப் பற்று ஐ.சி.ஐ.சி.ஐ :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
அதென்ன ஓடிட்டோமில்ல ? நான் ஒன்னும் ஓட்லிங்க ஐ.சி.ஐ.சி.ஐ கார்ட்காரன கேட்டு பாருங்க நம்ம ட்ரான்செக்ஷன் கணக்க சொல்லுவான் :))

துபாய் வந்தும் என்ன ஒரு நாட்டுப் பற்று ஐ.சி.ஐ.சி.ஐ :))) //

மகி... !
கிரிடிட் கார்டு வச்சிக்கக் கூடாதுன்னு வாழ்க்கை லட்சியாமாக வெச்சிருக்கோம்ல ... அதான் ஓடிட்டேன்னு சொன்னேன் !

நமக்கு ஏற்கனவே கை அறிப்பு... கிரிடிட்கார்டு ரணமாக்கிடுமில்ல ... பயம்தேன் ... :) நாட்டுப் பற்றாவது ஒன்னாவது யாருக்க்கு வேணும் அது ... ஹஹ் ஹா ... :)

பெயரில்லா சொன்னது…

சிங்கையில் இருந்தும் பணத்தை சிந்தாமல் செலவழிக்கும் ஜி.கே நீவிர் வாழ்க ...... ஆமா சிங்கப்பூர்ல கிரடிட் கார்டு இல்லன்னா போலீஸ் புடிக்காது ?:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்