இராமகிருஷ்ண பரமகம்சரின் சாமியார் தன்மை பற்றி இராமகிருஷ்ண மடாலயங்களில் ஒரு தகவல் சொல்வதுண்டு, அதாவது அவர் காசுகளை கையினால் தொடுவதில்லையாம், வெற ? காலால் தொடுவாரான்னு கேட்காதிங்க, ஆதாவது ரிசிகள், ஞானிகள் சாமியார்கள் ஆகியோருக்கு பொருளாசைகளோ வேறெந்த ஆசைகளோ அறவே இருக்காதாம், மீறி காசுகளைத் தொட்டால் என்ன ஆகும் ? இராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தனது குருவை சோதிக்க நினைத்தாராம், காசை இவர் கையில் தான் வாங்கமாட்டார், பேசாமல் காசை அவர் தூங்கும் பொழுது தலைக்கு அடியில் (தலையாணை வைச்சிருந்தாரான்னு கேட்காதிங்க) இருக்கும் படி படுக்கை விரிப்புக்கு அடியில் வைக்க, இராமகிருஷ்ணர் படுக்கைக்கு வந்து தலையை சாய்க்க, தலையே வெடித்து விட்டது போல் துடி துடித்தாராம், தன் செய்த (சூழ்ச்சி) சோதனையைச் சொல்லி 'குருவே என்னை மன்னிக்க வேண்டும்' என்று சீடர் சொல்ல, இனிமேல் அவ்வாறு செய்யாதே என்று இராமகிருஷ்ணர் சீடரை மன்னித்ததாகவும், சீடர் தெரியாமல் தவறு இழைத்து விட்டோடும் என்று மிகவும் மனம் வருந்தியதாகவும் ஒரு குட்டிக் கதையாக இராமகிருஷ்ணர் மடத்தினர் சொல்வதுண்டு.
காசு என்பது ஒரு உலோகம், அவை பண்டமாற்றுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து அந்தந்த உலோகத்தின் அடிப்படை மதிப்பு சொற்பமே, செப்புகாசு, பித்தளை காசு ஆகிய செய்யப்படும் உலோகத்தின் மதிப்பைவிட அதில் பொறிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு எப்போதும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு உலோகம் தலைக்கு அடியில் இருந்ததற்காக இராமகிருஷ்ணர் பதறினார், துடித்தார், துன்பம் அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லை மீறிய கட்டுக்கதை என்பது தவிர்த்து அவற்றில் உண்மை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை, செம்புகளும் பித்தளைகளும் பாத்திரங்களாக பழங்கிய காலத்தில் அவை காசுகளாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும், எனவே குடிக்க செப்புக் குவளையை கையில் எடுக்கும் பொழுது ஏற்படாத அதிர்வலைகள் செம்பு காசால் ஏற்பட்டது என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் அந்தக் கதையை சாமியார்கள் காசு பணத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்காக சொல்லப்படும் சற்று மிகைப்படுத்தப்பட்ட கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.
நாமலும் கொஞ்ச கொஞ்சமாக சாமியார் ஆகிக் கொண்டு இருக்கிறோம், அச்சடித்த பணமும், காசுகளும் நமது பணப் பைகளின் செலவு இருப்பாக திணித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது, எல்லாவற்றிற்குமே அட்டையின் (Card) வந்துவிட்டது, ரொக்க அட்டை (debit) மற்றும் கடனட்டைகளை (credit) கையில் வைத்திருந்தாலே போதும், எங்கும் சென்று வந்துவிடலாம், பணம் களவு போகும் பயம் இருக்காது. பொட்டிக்கடைகளில் சிறிய அளவில் எதுவும் வாங்குவதற்கான தேவை என்பது தவிர்த்து பாக்கெட்டில் பணத்தை திணித்துக் கொண்டு வைத்திருக்கும் வழக்கம் படிப்படியாக குறைகிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு 50 வெள்ளிகளை மேல் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிலைமை தற்பொழுது 20 வெள்ளிகளாக சுருங்கியுள்ளது, காரணம் எல்லாவித கட்டணங்களுமே அட்டைகளால் நிறைவேற தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்திற்கு சென்று வரிசையில் நிற்பதுவும் குறைந்துள்ளது.
பேரங்காடி, தொடர்வண்டி நிலையம், பெரிய / நடுத்தர உணவகங்கள், பேருந்துகள் ஆகியவற்றிற்கும் அட்டைகளே பயன்படுவதால், அவற்றில் போதுமான தொகையை நிரப்பி வைத்துவிட்டால் வாரம், திங்கள் முழுவதும் அவற்றை பயன்படுத்த முடிகிறது. சில்லரைகளை (பத்துவெள்ளி, 20 வெள்ளி) கடனாக கேட்பவர்களுக்கும் கையில் போதிய இருப்பு இல்லை என்று கைவிரிக்க முடிகிறது (அவங்க வங்கி எண்ணுக்கு மாற்றிவிடச் சொல்லி கேட்காதவரையில் எளிதாக சமாளிக்கலாம்),
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.
தற்பொழுது அட்டைகளுக்கு மறை எண்களை அடிக்க வேண்டி இருக்கிறது, அதிலும் மாற்றமாக Visa Pay Wave விசிறிவிட்டு சென்றுவிடலாம், மறை எண்ணும் கையெழுத்தும் தேவை இல்லை, அட்டை வேறு யாரிடமும் மாட்டினால் ? ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் செல்பேசிக்கு குறும் தகவல் வந்துவிடும், எனவே வங்கிக்கு தெரிவித்து உடனடியாக கண்டுபிடித்து அட்டையை முடக்க முடியும், உடனடியாக செயல்பட்டு எந்த கடையில் எந்த நபர் அந்த அட்டையை பயன்படுத்தி இருக்க முடியும் என்பதை கேமரா கண்காணிப்பு அந்த நபர் வெளி ஏறும் முன்பு கண்டுபிடித்துவிடுவார்கள்.
அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும் வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.
கேஷ்லெஸ் (தாள் பணமற்ற) பரிமாற்றத்தினால் நல்ல பயனுண்டு, அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சடிக்கத் தேவை இல்லை, வீட்டில் பெரிய அளவில் பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லை, என்ன ஒன்று ? ஊதிய பணமோ, வியாபார ஈட்டலோ வங்கிக்கு வரும், வங்கியில் இருந்தே போகும் நாம் அவற்றை எண்ணால் பார்க்க முடியும் கண்ணால் பார்க்க முடியாது. அப்பறம் என்ன காசு பணத்தை கையினால் தொடவில்லை என்றால் நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ?
இதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு தெரிந்த (சென்னை) போக்குவரத்து காவலர் ஒருவர் பணத்தை கையால் தொடுவதில்லை என்றார், அவ்வளவு நேர்மையான பண்பாளரா ? என்று கேட்டேன், மறுத்த நண்பர் இல்லை இல்லை அவர் எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்காரரை வாங்கி வைத்துக்கச் சொல்லி அவர் மூலம் தனது வங்கியில் போடச் சொல்லிவிடுவாராம். கடைசி பத்தி தென்கச்சி கோ சுவாமிநாதனை நினைத்து எழுதினேன், அப்படித்தான் கொஞ்சம் கடியான நகைச்சுவையுடன் இன்று ஒரு தகவலை அவர் முடிப்பார்.
13 கருத்துகள்:
/// நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ? ///
நல்லது... நன்றி...
//அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும் வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.//
சரியாக சொன்னீர்கள்...
விரைவில் நிகழப்போகும் செயல்தான். இப்போது கூட படித்துக் கையெழுத்துப்போடத் தெரிந்திருந்தாலும், கையெழுத்துப்போட முடியாத நிலையில் இருந்தால் இடக்கைப் பெருவிரல் ரேகைதான் கை கொடுக்கின்றது. ராஜீவ் காந்தி துர்மரணத்தில் தப்பிப் பிழைத்த ஒரே நபர், தா.பாண்டியன் MA.B.L. பாராளுமன்ற வருகைப்பதிவேட்டில் கைநாட்டு வைத்த ஒரே எம்.பி.யும் அவர்தான்.
சரிதான்..சிங்கப்பூரில் நான் இருந்த வரையில் காசே தொடவில்லை.என் நண்பன் தான் எல்லாம் கார்டு மூலம் பார்த்துக்கொண்டான்.
ஒரு டின் பீர் வாங்கினாலும், பஸ்ஸிலோ டிரையின்லோ செல்லும் போது கூட அட்டை தான்.சில்லறை என்பதே இல்லை.
உண்டியல் இல்லாத கோயில்கள் உண்டா, படையால் வைக்காத சாமி உண்டா, தட்சணை வாங்காத ( பணம், மது, மாது என ) சாமியார் உண்டா..! பொருளாதாரம் சார்ந்த சமூகம் உருவாகிய நிமித்தம் மதங்கள், கடவுள், கடவுளரின் மாமாக்கள் கூட உருவாகி விட்டனர். இன்றைய உலகில் காகித காசுக்கள் முடங்கி காணாக் காசுக்கள் இடம் பெறுகின்றன. அட்டையில் வந்து அட்டையில் போய் விடும் காணாப் பணத்தால் நல்ல விடயங்கள் பல உண்டு. ஆனால் அட்டையைச் சுட்டு காணாப் பணத்தை கபளீகரம் செய்யவும் கள்ள மட்டைக் குழுக்களும் உண்டு, மறவாதீர்..! அவ் வேலைகளை அதிகம் செய்வதில் தெற்காசியர்கள் பலே கில்லாடிகள்.
அட்டை முறை இந்தியாவில் வருவது நல்லது. அப்படியாவது பொலிஸ் மற்றும் அரச அலுவகத்தில் இலஞ்சம் வாங்குவது ஒழியும்.பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லாம அட்டைகளிலே பணத்தை கொண்டு திரிவதில் உங்க சிங்கபூர் தான் முன்னணியிலிருப்தா சொல்லுறாங்க. நண்பர் ஒருவர் சொன்னார் சிங்கபூர் மணிபார்ஸ்சுகளுக்கு பைசாக்கள் வைப்பதற்கு இடமே இல்லை, பண நோட்டுக்கள் மட்டும் தான் வைப்பதற்கு இடம் உள்ளது என்று. நமக்கு சில்லறைகளினாலே மணிபார்ஸ் வீங்கி போய் உள்ளது.
//ஆனால் அட்டையைச் சுட்டு காணாப் பணத்தை கபளீகரம் செய்யவும் கள்ள மட்டைக் குழுக்களும் உண்டு மறவாதீர்..! அவ் வேலைகளை அதிகம் செய்வதில் தெற்காசியர்கள் பலே கில்லாடிகள்.//
அந்த மோசடிகளை என்னவென்று சொல்வது சகோ!சமீபத்திலே கனடாவிலிருந்து தமிழகம் வந்து தங்கியிருந்து பணத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்த தெற்காசிய கள்ள மட்டைக் குழு வெற்றிகரமா கைது செய்யபட்டுள்ளது.
//நாமலும் சாமியார் தான்!//
கோவியாரே! அருமை.
ஆனாலும் பாவம் நீங்க, இப்போ தான் பழைய காலத்து சாமியாரா ஆயிருகீங்க.
இந்த காலத்து சாமியாராக இதெல்லாம் தேவையில்லை. Swiss Bank Account, Rape, கொள்ளை, கொலை, இதெல்லாம் தான் Qualification.
http://www.youtube.com/watch?v=4NgFLwaz4DY
ஏன் மேலே இருக்கிற யு டுப் இணைப்புலே இருக்கிறே மாதிரி பிச்சைக்கரர்களும் மொபைல் கார்டு வைபிங் மிசின் கையிலே வச்சிக்கிட்டு நடக்குறே காலம் வரும் .
nalla irukku
nalla irukku
அன்பு நண்பர் கோவி.கண்ணன் அவர்களே ?
நம்மிடையே இன்று ராம கிருஷ்ணர் இல்லை. அவரது வாழ்க்கை வரலாறை பார்க்கப் போனால் வறுமையில் பிறந்து வறுமையிலேயே உழன்று இருந்திருக்கிறார்.
எவ்வாறு ஆன்மிகம் ஞானிகள் பெயர்கள் , வரலாறு போன்றவற்றை கண்டு உங்கள் உள்ளம் கட்டுக் கதை என்று துடிக்கிறதோ அதே போல காசு என்ற செப்பு உலோகமாக இருந்தாலும் அது கைக்கு வந்தால் மனம் படுகின்ற பாடு இருக்கிறதோ அந்த நிலை தனக்கு அந்த நிலை வேண்டாம் என்று இறை சிந்தனையில் தன் மனதை நிலை நிறுத்தியிருக்கிற அவருக்கு இருந்திருக்கலாம்.
நேதாஜி, காந்தி, நேரு, ராஜாஜி, வினோபாவே , மாக்ஸ் முல்லர், பாரதி போன்றவர்கள் பாராட்டி மகிழ்ந்த உன்னதமான வாழ்க்கை வாழ்ந்த விவேகானந்தர் போன்ற உன்னதமான சீடர்களை உலகிற்கு அளித்தவர் ராம கிருஷ்ணர்.
அவரின் மேல் ஈர்ப்பு கொண்டவர்கள் அவரின் வரலாறை நம்புகிறார்கள்
மற்றும் அதன் வழி நடக்கிறார்கள்.
அவர் முதல் பிச்சையாக ஒரு தாழ்ந்த இனத்தை சார்ந்த பெண்ணிடம் இருந்து பிச்சை ஏற்றார்.
அவரின் தலை முறையைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார்.
வேற்று இனத்தை சார்ந்த தன் சீடர்கள் சாப்பிட்ட மிச்சத்தை அவர் சாப்பிட்டார்.
ஊடகங்களில் பிரபலமாக இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று எந்த துறையில் தனக்கு அறிவு உள்ளதோ அதை ஊடகத்தில் வெளிப்படுத்துவது
மற்றொன்று சமுதாய பிரபலங்களை, நம்பிக்கைகளை கேலி செய்வது ,விமர்சனம் செய்வது என்ற காரியத்தை செய்வதன் மூலம் ஊடகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது .
எல்லாத்துறைகளை போல ஆன்மீகத்திலும் தவறானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உண்மையில் கடவுளையும், அதன் சார்பானவர்களையும் விமர்சிப்பதற்கு பதிலாக கடவுளுக்கான தேவையை ஒழித்து விடலாம் .
நோயின்மை, வறுமையின்மை , மன நிம்மதி , அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றை செய்தாலே மக்களிடம் கடவுளுக்கான , சாமியார்களுக்கான தேவைகளை ஒழித்து விடலாம்.
நீங்கள் சிங்கப்பூர் என்ற பொருளாதரத்தில் முன்னேறிய நாட்டில் வசிக்கிறீர்கள். உங்கள் சம்பளத்தை மேற்கண்ட குறிக்கோளுக்காக அர்ப்பணித்து செயலில் இறங்குங்கள். ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு செயல் மிகவும் சிறந்தது
அடுத்த கட்டுரைக்கு சர்ச்சையான தலைப்பை யோசிப்பதற்கு முன்பாக , அந்த விஷயத்திற்கு உங்களால் என்ன தீர்வு காண முடியும் அல்லது அதற்க்காக வீதிக்கு வந்து போராட முடியுமா மற்றும் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
சமூகத்தில் சவால்களை சந்தித்த தலைவர்கள் எல்லாம் முதலில் தனியாகத்தான் இருந்தார்கள்.
பின்புதான் அவர்களுக்கு பின்னர் அனைவரும் வந்தார்கள்.
சமுதாய நன்மைக்கு கருத்து சொல்வதை விட உங்களை செயல் அளவில் உலகத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
உலகம் உங்களை வாழ்த்தும் .
உங்களுக்கு வெற்றி உண்டாக வாழ்த்துக்கள்.
நீங்கள் உண்மையிலேயே ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் இந்த மறுமொழியை பிரசுரம் செய்யுங்கள்.
//எவ்வாறு ஆன்மிகம் ஞானிகள் பெயர்கள் , வரலாறு போன்றவற்றை கண்டு உங்கள் உள்ளம் கட்டுக் கதை என்று துடிக்கிறதோ அதே போல காசு என்ற செப்பு உலோகமாக இருந்தாலும் அது கைக்கு வந்தால் மனம் படுகின்ற பாடு இருக்கிறதோ அந்த நிலை தனக்கு அந்த நிலை வேண்டாம் என்று இறை சிந்தனையில் தன் மனதை நிலை நிறுத்தியிருக்கிற அவருக்கு இருந்திருக்கலாம். //
ஐயா, இராமகிருஷ்ணர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம், அவருடைய வரலாற்றை எழுதியவர்கள் அதிகமாகவே புனித முலாம் பூச முயன்றிருக்கிறார்கள் என்பதே நான் சொல்லவருவது, காசு பணமின்றி உணவு பொருள் வாங்குவதற்கான வழி எதுவும் இல்லை. உணவுக்கு பணத்துக்குமான வேறுபாடு அச்சடிக்கப்பட்டது, சாப்பிட்டால் செறிக்காது என்பது மட்டுமே, காசு கொடுத்து வாங்கும் பொருளை உண்ணுவதால் எந்த கெடுதலும் ஏற்படாத போது பணத்தை தொடுவதால் துடித்தார், துவண்டார் என்பதெல்லாம் அதீத கற்பனையே. இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன், அதில் மாற்றமே இல்லை, உங்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் இராமகிருஷ்ணரின் சீடர் விவேகநந்தர் அமெரிக்க பயணம் முடித்து வெறுங்கையுடன் தான் திரும்பினார் என்று உங்களால் சொல்ல முடியுமா ? பணத்தை தீண்டுவது பாவம் என்பதை விவேகநந்தர் ஏன் கற்றுக் கொள்ளவில்லை ? கல்கத்தாவில் இருக்கும் இராமகிருஷ்ண மடம் செங்கல்லால் கட்டப்படவில்லையா ? அதற்கான பணமெல்லாம் ஏது, அது ஆகாயத்தில் இருந்து வந்து அங்கு இறங்கியதா ?
//அவரின் தலை முறையைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார்.
வேற்று இனத்தை சார்ந்த தன் சீடர்கள் சாப்பிட்ட மிச்சத்தை அவர் சாப்பிட்டார்.//
இது ஒரு தவறான முன்னுதாரணம், இதை செய்ததற்காக இராமகிருஷ்ணர் போற்றப்பட வேண்டும் என்பதை நான் கடுமையாகவே எதிர்க்கிறேன், மனிதனின் மலத்தை மனிதனே தலையில் சுமப்பது அவலம் என்பதால் தான் அதனை ஒழித்துள்ளனர், இராமகிருஷ்ணருக்கு கழிவிடத்தை தூய்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது நல்லது, அதை தூய்மை படுத்த எத்தனையோ எளிய வழிகள் இருக்கும் பொழுது தலை முடியால் சுத்தம் செய்தார் என்று கூறுவது அருவெறுப்பான செயல், மிச்சத்தை சாப்பிட்டார் எச்சத்தை சாப்பிட்டார் என்பதெல்லாம் தேவையற்ற செயல், இவர் இவ்வாறு செய்ததால் தான் மிச்சம், எச்சம் எல்லாம் புனிதம் என்றும் சாமியார்கள் காலை கழுவதும் முத்தமிடுவதும் மோச்சம் என்றும் பலர் எண்ணி அவ்வாறு செய்கின்றனர், இராமகிருஷ்ணரின் செயல் அறிவுடையது என்றால் அவர் ஏழை எளியோர்களுக்கு கொடுத்துவிட்டு இவரும் உண்டு வந்திருக்க வேண்டும். எச்சத்தை சாப்பிடும் குரவர்களையோ, மலம் சுமக்கும் மகளிரையோ பொது சனம் புனிதர்கள் என்று பார்க்காத பொழுது அதை செய்த சாமியார் புனித தன்மை வாய்ந்தவர் என்று வாய்கூசாமல் போற்றுவது தவறான ஒரு செயலை அங்கீகாரம் செய்வது போல், தவறான பழக்க வழக்கங்களையும் நாம் ஏற்றுக் கொண்டு அதை சந்ததியினரிடம் திணிக்கிறோம்.
//நோயின்மை, வறுமையின்மை , மன நிம்மதி , அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றை செய்தாலே மக்களிடம் கடவுளுக்கான , சாமியார்களுக்கான தேவைகளை ஒழித்து விடலாம். //
எனது வலைப்பக்கதில் வள்ளலார் படம் எப்போதுமே உள்ளது, பசிப்பிணி பற்றி அவர் பேசிய அளவுக்கு செயலாற்றிய அளவுக்கும் வேறு யாருமே கிடையாது.
//அடுத்த கட்டுரைக்கு சர்ச்சையான தலைப்பை யோசிப்பதற்கு முன்பாக , அந்த விஷயத்திற்கு உங்களால் என்ன தீர்வு காண முடியும் அல்லது அதற்க்காக வீதிக்கு வந்து போராட முடியுமா மற்றும் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். //
தலைப்பிலும் இடுகையிலும் உள்ள தகவல் சாரம் அச்சடித்த நோட்டு புழக்கம் குறைந்துவருவது இன்றை அறிவியல் வளர்ச்சியை ஒட்டியது என்பதே. அதன் நன்மைகளை எடுத்துக்கூறியுள்ளேன். இதில் தீர்வு காண ஒன்றுமே இல்லை. மேம்போக்காக படித்துவிட்டு கருத்துரைக்கு முன் எண்ணிப்பார்க்கவும்.
//நீங்கள் சிங்கப்பூர் என்ற பொருளாதரத்தில் முன்னேறிய நாட்டில் வசிக்கிறீர்கள். உங்கள் சம்பளத்தை மேற்கண்ட குறிக்கோளுக்காக அர்ப்பணித்து செயலில் இறங்குங்கள். ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு செயல் மிகவும் சிறந்தது. சமுதாய நன்மைக்கு கருத்து சொல்வதை விட உங்களை செயல் அளவில் உலகத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். //
உங்கள் அக்கரைக்கு நன்றி, அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது தான் உலகிலேயே மிகவும் எளிதான செயலாம்.
//நீங்கள் உண்மையிலேயே ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் இந்த மறுமொழியை பிரசுரம் செய்யுங்கள். //
என்னைப் பற்றி ஆபாசமாக திட்டுபவனின் பின்னூட்டம் கூட அதுவாகவே வெளியாகும், இடுகையில் எந்த மட்டுறுத்தலும் இல்லை. எனவே கருத்து சுதந்திரம் பற்றிய உங்களது பாடம் எனக்கு தேவையற்றதே.
சாமியார்களால் எதாவது நன்மை ஏற்பட்டு உள்ளதா ? நன்றாக இருப்பவனின் மனதையும் கலக்கி குழப்பி விடுகின்றனர். அறிவியலால் மட்டுமே நன்மைகள் ஏற்பட்டுள்ளன.
சாமியார்களுக்கு எதோ சக்தி உண்டு என்று வெள்ளை மனதுடன் நினைகின்றனர் படித்தவரும். அறிவியல் துணையால் சில வித்தைகள் செய்ய தெரிவதே இவர்களின் தகுதி. இவர்கள் வெறும் ஏமாற்று மட்டுமே.
கருத்துரையிடுக