இந்தியாவில் ஆங்கிலம் நுழைந்ததால் எல்லாம் கெட்டுவிட்டது என்று பழைய பல்லவியை மறுபதிப்பு (ரீமேக்) செய்துள்ளது பாஜக,
"ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது" - ராஜ்நாத்சிங்
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/20/india-row-erupts-over-rajnath-singh-anti-english-remarks-179514.html
ஆங்கிலத்தில் இருந்து அறிவை மட்டும் பெற்றுக் கொள்ளலாமாம், ஆங்கிலம் படிக்காமல் அறிவை மட்டும் எப்படி பெறுவது என்பதை அந்த மேதை விளக்கவில்லை, அவரது கவலையெல்லாம் சமஸ்கிரதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் மட்டும் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அதற்குக் காரணமாக ஆங்கிலத்தை கூறி உள்ளார், இந்த 14 ஆயிரம் என்பது ஆண்டு 2001 கணக்கெடுக்கின்படி வரும் எண்ணிக்கை என்பதை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது, இடைப்பட்ட 13 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தான் வாய்ப்பே அன்றி கூடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதும் இல்லை. மொழி வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் மக்கள் தொகை உயர்வு என்பதைத் தாண்டி, அதை படித்தால் பயனுண்டு என்று படிப்பவர் இருந்தால் மட்டுமே வாய்ப்புள்ளது.
எந்த மொழியும் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றால் அது அழிவதன் துவக்கத்தில் பயணம் செய்யும், இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல் அப்பன் மகன் பேரை ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே தற்பொழுது ஒருவரை பெயரை வைத்து தமிழர் என்று அறிய முடிகிறது, இன்னும் 40 ஆண்டுகளில் அதுவும் கடினம், கருப்பையா ரமேஷ், தந்தை பெயர் கருப்பையா, மகன் பெயர் ரமேஷ், ரமேஷுக்கு தமிழ் பெயர்கள் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளுக்கும் எதோ ஒரு மொழியில் உதாரணத்திற்கு ஞானேஷ் என்று பெயர் வைக்க, முகத்தை பார்க்காமல் 'ரமேஷ் ஞானேஷ் 'என்ற பெயரை நாம் பட்டியலில் படித்தால் எந்த மாநிலத்துக்காரர் என்றும் தெரியாது, ஒருவேளை முகத்தைப் பார்த்தாலும், பேசாவிட்டால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எண்டு கண்டுப்பிடிப்பதும் கடினம். நான் பொதுவாக வழியுறுத்துவது, தமிழிலும் அழகான எளிமையான பெயர்களை உருவாக்கலாம், இருக்கிறது, அவற்றை பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுவதால் தமிழை இன்னும் ஒரு 80 ஆண்டுகளுக்கு (சராசரி வாழ்நாள்) 'பெயரளவில்' ஆவது புழக்கத்தில் வைக்கக் உங்களால் செய்யப் படக் கூடிய சிறு துரும்பு.
நான் சமஸ்கிரத்திற்கோ வேறெந்த மொழிக்கோ எதிரானவன் இல்லை, எனக்கு எல்லா மொழிகளும் பிடித்தமானவையே, நான் மொழிகளை விரும்பிப் படிப்பதை பொழுதுபோக்காகவும் வைத்துள்ளேன், ஒரு மொழியை அறிவதன் மூலம் அம்மொழி பேசுபவர்களைப் பற்றி அவர்களது பண்பாடுகளை அறிய முடியும் என்பது நான் மொழிகளை படிப்பதன் மூலம் நேரிடையாக அறிந்து கொண்ட ஒன்று. மொழி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் என்று கூறுபவர்களை நான் எப்போதும் புறம் தள்ளுவேன், முடிந்தால் அது அவ்வாறு இல்லை என்றே கொஞ்சம் விளக்கிச் சொல்வேன், மொழிகள் என்பது அறிவுக் கருவூலங்கள், அவை பண்பாடுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும், ஒரு மொழி அழியும் பொழுது அவற்றை பேசியவர்களின் பண்பாடு மற்றும் கலை ஆகியவையும் சேர்ந்தே அழியும், ஒரு மொழியின் ஆளுமை மற்றொரு மொழியினரின் பண்பாடுகளை எவ்வாறு அழிக்கும் ?
நாம் வேட்டிக் கட்டுவதை கைவிட்டு பேண்டுக்கு மாறி ஒரு 50 ஆண்டு காலம் ஆகி இருக்குமா ? நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன ? ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா ? இப்போது பண்டிக்கைக்கும், திருமணத்திற்கும் வேட்டிக்கட்டும் பழக்கம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் நீடித்தாலே பெரிது, என்னுடைய நண்பர் ஒருவர் வேட்டிக்கட்ட வெட்கப்பட்டு, அதை வேட்டிக்கட்டத் தெரியாது என்று காரணமாகக் கூறி மணமேடையில் பேண்ட் அணிந்தே தாலி கட்டினார், பண்பாடு கலாச்சாரம் குறிப்பாக அதிக விலையிலானது என்பதால் பெண்கள் விடப்பிடியாக பட்டுப்புடவை கட்டிவருவது ஆறுதல். அதுவும் இல்லம் சார்ந்த விழாக்களில் மட்டும் தான், எப்போதாவது அலுவலகத்திற்கும் கட்டிச் செல்கிறார்கள், ஆனால் இன்றைய சூழலில் நாம் வேட்டிக்கட்டி பொது நிறுவனம் எதற்குள்ளும் வேலைபார்க்க சென்றுவிட முடியாது. வேட்டிப் போச்சு. ஆங்கிலம் அலுவலக மொழியாகும் பொழுது அதற்கான ஆடைகளும் மாறிவிடுகிறது, நமது அடையாளம் பிட்சா, பர்கர்னு கொஞ்சம் கொஞ்சமாக பிறவற்றிலும் இப்படித்தான் மாறிப் போகும்.
இன்றைய கல்வி மற்றும் பொருளாதார சூழலில் ஆங்கிலம் படிப்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது, எல்லாவற்றையும் தமிழிலேயே படித்தால் நமக்கு வேலையும் கிடைக்காது, குறைந்த அளவாக தமிழர்களிடையே தொடர்பு மொழியாக தொடர்ந்து பேச ஒரு வாய்ப்பு என்ற அளவில் 10 ஆம் வகுப்பவரையிலாவது தமிழை படிப்பது மொழி அழிவை தடுக்க நாம் செய்யும் கைமாறு, அதைத் தவிர்த்து தமிழை தொடர்ந்து படித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை, ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம், அதற்கும் தமிழை கல்லூரிப்படிப்பாகத்தான் படிக்க வேண்டும் என்பதுமில்லை. ஏனென்றால் நமது வேலை வாய்ப்புகள் என்பவை தமிழ் சார்ந்தவை இல்லை, இதை புரிந்து கொள்ள மறுப்பவர் வைக்கும் வாதங்கள் எவையும் ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பவை அவற்றை பேசுபவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கி வெளிநாட்டினருக்கும் அந்த வாய்ப்புகளை வசதியாக்கி தந்தால் அந்த மொழியின் மீது பிற மொழிப் பேசுபவர்களுக்கு நாட்டம் ஏற்படும், உதாரணத்திற்கும் சீனாவில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பொது மொழியான மேன்டரின் பேசப்படுகிறது, சீனா தற்பொழுது பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கதவையும் திறந்து விட்டுள்ளது, சீனாவில் வர்தக தொடர்பு அல்லது தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்று நினைக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் தனது அலுவலர்களை சீன மொழியை படிக்கக் கோறும், அவ்வாறு இல்லை என்றால் அங்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பேச வாய் இருந்தாலும் சொல் இருக்காது, சீனாவில் வேலை செய்யும் பெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், சீனா இன்னும் வல்லரசாகி அண்டை நாடுகளை ஆளுமைக்குள் கொண்டு வந்து அந்த அந்த பகுதிகளின் அலுவல் மொழியாக சீனமொழியை அறிவித்துவிட்டால் வேறு வழியின்றி சீன மொழியை அடிமைபட்ட நாடுகளும் அரசிடம் வேலை செய்ய கற்றுக் கொள்வர், இதைத் தான் வெள்ளைக்காரன் அன்று செய்தான் ஆங்கிலம் காமன்வெல்த் நாடுகளின் தொடர்பு மொழியானது, ஒருவேளை உலகப் போரில் ஜப்பான் காரன் வெற்றிபெற்றிருந்தால் நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஜப்பான் மொழியில் படித்து வேலைபார்ப்போம், மொழி பரவுவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.
இந்த புரிதலின்றி பலர் ஆங்கிலம் போல் தமிழும் பல மொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டால் தமிழ் வளர்ச்சி பெரும் என்று அறியாமையால் நம்புகிறார்கள், பல மொழியில் கடன் வாங்கி தமிழில் வைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு ? குறைந்தது தமிழ் மொழியாவது தன்மை மாறாமல் இருக்கும், நான் எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்துவிட்டேன்.
ஆங்கிலத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லாததால் பிறமொழியில் அவை கடன்வாங்கி அகராதியை நிரப்பிக் கொண்டே வரும், ஏனென்றால் ஆங்கிலத்தின் மூலம் பரவலான அறிவை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள், 2 மில்லியன் சொற்கள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்கு அவற்றில் பாதி அளவு அகராதியை புரட்டாமல் தெரியுமா என்பதே ஐயம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த சொற்களுக்கு ஆங்கிலம் நிறையவே கடன்வாங்கியுள்ளது. ஒரு நூல் ஆங்கிலத்தில் முழுமையடைய ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை கடன் வாங்காமல் முடியாது என்பதால் ஆங்கிலத்திற்கு பிறமொழியின் சொற்களை கடன் பெறுவது இயல்பு. ஆங்கிலத்தின் முழுவளர்ச்சி இந்த நூற்றாண்டாடில் ஏற்பட்டு மிகுதியாகவும் மாற்றம் கண்டுள்ளது, இன்றைய கணிணி உலகில் ஆங்கிலம் 1000க் கணகான புது சொற்களை இணைத்துக் கொண்டது. இவை பெரும்பாலும் லத்தீன், கிரேக்கம், ரோமன் மொழிகளின் கலவையே.
இந்த நூற்றாண்டில் ஆங்கில உருவாக்கம் வளர்ச்சி என்பது போல் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மொழிகளை கடன் பெற்று பண்பட்ட மொழி என்ற புதிய மொழி உருவாக்கமாக சமஸ்கிரதம் உருவானது, ஆனால் அதை எழுதுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்களேயன்றி அன்றாட பேச்சு மொழியாக இருந்திருக்கவில்லை, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றையும், இலக்கிய நூல்களை எழுதவும் அதை பிறமொழிப் பேசுபவற்களிடம் பரப்பவும் ஒரு கருவியாக சமஸ்கிரதம் இருந்துவந்தது, அந்த நூலின் புழக்கம், அவற்றை சொற்பொழிவு செய்பவர்களின் (பிரசங்கம்) செய்பவர்களால் புழக்கத்தில் விடப்பட்டு வட்டார மொழிகளில் கலக்க பல்வேறு மொழிகளாக அவை உருவானது, தென்னிந்திய மொழிகள் ஒருகாலத்தில் வட்டார மொழிகளாக (நெல்லை, கோவை தமிழ் போல்) இருந்து பின்னர் சமஸ்கிரத கலப்பு விழுக்காட்டு வேறுபாடுகளில் தென்னிந்திய மொழிகள் தனித்தனி வடிவம் பெற்றன. மற்றபடி சமஸ்கிரத்தில் இருந்து எந்த தென்னிந்திய மொழியும் வேர் சொற்களை பெற்றிருக்கவில்லை, தோன்றவில்லை, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பொதுவான தென்னிந்திய மொழியின் சிதைந்த வடிவம் என்று சொல்லலாம்.
சமஸ்கிரதம் படிப்பதால் இன்றைய தேதியில் என்ன பலன் ? ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் ? அர்சகர் அர்சனையின் போது கருமாதி மந்திரம் சொல்லாமல் இருக்காரா என்று தெரிந்து கொள்ளலாம், வேறு பயன் எதுவும் இல்லை, சமஸ்கிரதம் பேசும் போது அதிரும் புதிரும் என்றால் எச்சிலும் தெறிக்கும் என்பதையும், பல கோவில்கள் பாழடைந்து சாய்ந்ததற்கு அர்சகர் ஓதிய மந்திரத்தின் அதிர்வு தான் காரணமாக இருக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.
இதையெல்லாம் வீட 'நாசாவுக்கு தண்ணீர் காட்டிய திருநள்ளாறு' என்று எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் ஒரு கட்டுரை எழுதி இன்னும் கூட அவை முக நூல்களில் பரிந்துரைக்கப்பட்டு பல்வேறு அப்பாவிகளால் அப்படியா என்று கேட்க வைக்கப்பட்டு லைக்கப் படுகிறது, அது போல் நாசா சமஸ்கிரத ஒலியை விண்வெளிக்கு அனுப்பி அதன் எதிரொலியை பதிவு செய்கிறது, என்று ஒரு தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள், முதலில் அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்பதை கட்டுரை எங்கும் விளக்கவில்லை, அதைவிட நாசா அவ்வாறு செய்ததற்கு ஆதாரணமான எந்த சுட்டியும் அதில் காணும். நானும் நாசா வலைத்தளத்தையும் வலைபோட்டேன் அப்படி எதுவும் அகப்படவில்லை. இன்னும் கூட பலரால் கணிணிக்கு ஏற்ற மொழி சமஸ்கிரதம் என்று பரப்பப்படுகிறது ஆனால் எந்த விதத்தில் ? 8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் ? ஆங்கிலத்தில் 26 எழுத்து, அதை வைத்து தமிங்கிலத்தில் கூட விரைவாகவே தட்டச்சுவிடுகிறோம், சமஸ்கிரத அறிவியல் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.
இப்போதே ஆங்கிலம் பல்வேறு வட்டார ஆங்கிலமாகத்தான் இருக்கின்றது, 3000 ஆண்டு பழமையான சமஸ்கிரதம் புழக்கம் முற்றிலும் குறைந்து போய் வெறும் 14,000 பேர் தான் பேசுகிறார்கள் என்றால் ஆங்கிலத்திற்கு அந்த நிலை வர 200 ஆண்டுகள் ஆகலாம், ஏனெனில் இன்றைய தகவல் தொடர்பும் மக்கள் பரவலாக்கமும் மொழிகளில் மாற்றத்தை வெகுவிரைவாகவே ஏற்படுத்திவிடும். உலகமொங்கும் எளிமையான ஆங்கிலம் பரவலாகவும் வாய்ப்புள்ளது.
ஆங்கில மோகம் தான் சமஸ்கிரதம் அழிந்ததற்கு காரணம் என்பது பொய்யான முதிர்ச்சி அற்ற வாதம், சமஸ்கிரதம் ஆங்கிலேயார்கள் உள்ளே நுழையாத காலத்திலும் கூட பெரிதாக மக்களால் பேசப்படவில்லை, அது ஒரு பூசை மொழி என்று பரிந்துரைக்கப்பட்டு பொதுப் புழக்கத்தில் இருந்து உள்நோக்கத்துடன் தடுக்கப்பட்டே வந்தது, இந்தியை வலுகட்டாயமாக நுழைக்க முயற்சிப்பதும், முதலில் ஹிந்தி ஒட்டகத்தின் கழுத்தை நுழைத்து சமஸ்கிரத்த்தை மீட்டு எடுக்கலாம் என்பதன் முயற்சியே, அதுவெற்றி பெறாது ஏனெனில் ஹிந்திபடிப்பதனால் வேலை வாய்ப்பு கூடும் என்ற அளவில் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது., ஹிந்தி தெரிந்தவனும் பிறமாநிலங்களில் பாம்பே மிட்டாய் தான் விற்கிறான் என்பதை நினைக்க ஹிந்தி வாங்கிதரும் வேலை வாய்ப்புகள் பூஜ்ஜியம்.
12 கருத்துகள்:
செம்மொழிகளில் இரண்டு மொழிகள் தான் உயிருடன் இருக்கிறது; ஒன்று தமிழ் மற்றொன்று சைனீஸ்; மீதி எல்லாம் செத்த மொழிகள்: சமஸ்க்ரிதம் உள்பட். அந்த எரிச்சலில் தான் எல்லா மொழிகளையும் செம்மொழியாக்கு கிறார்கள்.
கடைசி செய்தி...எழும்பூரில் பேசும் 'இட்ல பட்ல' மொழியும் செம்மொழியாக்கப் போகிறார்கள் என்று கேள்வி!
________________________
செத்த மொழிக்கு ஏன் உயிர் கொடுக்கவேன்டும் அல்லது எப்படி கொடுக்க முடியும்? எவனாவது பேசுனாத்தானே?
சமஸ்க்ரித மொழி வேண்டும் என்று சொல்பவர்களிடம் கேளுங்கள்...உங்களுக்கு அந்த மொழியில் பெசத் தெரியுமா என்று?
இந்த ஒரு கொள்கைக்காவது பண்டார கட்சியை தோற்கடிக்கனும். ஆனால், இப்போ நம்ம பங்காளிகள் எல்லாமே சம்சக்ரித்த மோகம் கொண்டு அலைகிறார்கள்.
எனது பிராமின் வகுப்பு தோழியின் மகனுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்க சொன்னபோது அவர் சமஸ்கிருதத்தில் தான் பெயர் வைப்பேன் ஏன் என்றால் சமஸ்கிருதம் தேவ மொழியாம் , ராகுல் ,ஹேமந்த் ,ரஷ்மா என பெயர் வைத்தால் அது style லாம் .
சில மொழி புரியாதா மாங்க மட்டைகள் நியூமராலஜி பார்த்து பெயருக்கு பொருள் புரியாமல் ,எழுத்து பிழையோடு பெயரிடுகிறார்கள் .
எந்த மாதிரியான சமுகத்தில் வாழ்கிறோம் நாம் ?
புளுகு தவிர வேறொன்றும் இல்லை.
சமஸ்கிரதம் தேவை என்றால் பார்பான் மட்டும் படித்து கொள்ளட்டும்.
எப்படி தேவதாசி முறை வேண்டும் என்று அவாள் அடம் பிடித்த போது , உங்கள் ஆட்களை வைத்து கொள்ளுங்கள் என்றதும் எல்லாம் அடங்கி விட்டது.
மக்களை எதையாவது சொல்லி ஏமாற்றி அதன் மூலம் தான் மட்டும் சுகவாழ்வு பெற நினைப்பது பார்பனியத்தின் அடிப்படை.
புழுங்கல் அரிசியை ஏன் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதையே இட்லி செய்ய மாவிற்கு ஊற வைப்பார்கள்.. அதே பலன் கிடைக்குமா ..
கோதுமை , மைதா பற்றி எல்லாம் சொல்கிறீர்கள் , ஆனால் பரோட்டா மாஸ்டர் பற்றியும் அவர் பக்குவமாக மாவு தயாரிப்பதை விட்டு விட்டீர்கள் . மாஸ்டருக்கு மாவின் தரம் முக்கியமா ?
//சமஸ்கிரதம் தேவை என்றால் பார்பான் மட்டும் படித்து கொள்ளட்டும். //
சமஸ்கிரதம் பேசுபவர்கள் வெறும் 15,000 பேர்தானாம், அப்படி என்றால் பார்பனர்கள் வெறும் 15,000 தானா ?
இது மொத்த பார்பன மக்க்கள் தொகையில் 1 விழுக்காடு கூட இருக்காது என்றே நினைக்கிறேன், அவர்களெல்லாம் பணம் கொடுக்கும் வாழ்வதற்கு அடிப்படையான ஆங்கில மொழியைப் படித்துவிட்டு மற்றவர்களையும், ஆங்கிலத்தையும் இவர்கள் ஏன் குறை சொல்ல வேண்டும் ?
இஸ்லாமிய மதராசா பள்ளிகளில் அரபி சொல்லிக் கொடுப்பதைப் போல் தாம்ப்ராஸ்கள் இலவசமாக சமஸ்கிரத பள்ளியைத் துவங்கி அதன் அருமை பெருமைகளைக் கூறி சொல்லிக் கொடுக்கலாமே, ஏன் புலம்புகிறார்கள் ?
//கடைசி செய்தி...எழும்பூரில் பேசும் 'இட்ல பட்ல' மொழியும் செம்மொழியாக்கப் போகிறார்கள் என்று கேள்வி!//
:)
//எந்த மாதிரியான சமுகத்தில் வாழ்கிறோம் நாம் ?//
தம்பிறி மற்றவர்களை விடு உன் வாரிசுகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று உறுதி கொள். என் எழுத்தின் பயனென நானும் மகிழ்வேன்
Sorry that one of my comment wrongly posted.(on Rice)
நானிட்ட கருத்தைக் காணவில்லையே, தணிக்கையோ?!
நிரஞ்சன்,
நான் எதையும் தனிக்கை செய்வதில்லை. உங்கள் பின்னூட்டம் மின்னஞ்சலில் இருக்கிறது, இங்கு ஏன் வெளியாகவில்லை, கூகுள் சொதப்பல் போல.
நிரஞ்சன் தம்பி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் !":
மிகவும் ஆழமான எளிமையான விளக்கம். முதலில் ஒரு மொழி உயர்ந்தது தாழ்ந்தது என்றக் கருத்தியலை உடைக்க வேண்டும். எம் மொழியும் உயர்வும் இல்லை தாழ்வுமில்லை. இங்கு தமிழா? ஆங்கிலமா? சமற்கிருதமா? பிராகிருதமா? என்ற குழம்புவது வீண் வேலை. உண்மையில் குழந்தைகள் அறிவு, ஆற்றல், பொருளாதாரம், சமூக நிலையில் வெற்றியாளானாய் இருக்க வேண்டும் என விரும்பினால். குழந்தையின் 5 வயது வரை ஒரு மொழியை உருப்படியாக பயிற்றுவியுங்கள். அது உங்கள் வீடுகளில் பேசும் மொழியாக இருக்க வேண்டும். அது உங்கள் பூர்விக மொழியோ, கடன் வாங்கிய மொழியோ, பழங்குடி மொழியோ, புதுக்குடி மொழியோ, எதனாலும் தாய், தந்தை, வீட்டு வாசிகள் பேசும் மொழியே குழந்தைக்கு மிக பரிச்சயப்படும் மொழி, அதனை முறையாக பயிற்றுவித்தால் அடித்தளம் ஆழமாய் அமையும், மூளை விருத்தியாகும், சிந்தனை ஆற்றல் பெருகும். 5 வயதின் மேல் நீங்கள் வாழும் பகுதியின் ஆட்சி மொழி, புழங்கு மொழி, முதன்மை மொழி, அதான் உங்கள் வீட்டுக்கு வெளியே நீங்கள் வாழும் பகுதியின் பிரதான மொழியை பயிற்றுவிக்க வேண்டும். இது குழந்தையின் அறிவு, சமூக குண நலன், வாழ்க்கை அடையாளத்தை கட்டமைக்கும். அது எந்த மொழியோ இருந்து விட்டுப் போகட்டும். தமிழ்நாடு எனில் அது தமிழ், கருநாடகம் எனில் அது கன்னடம், சிறிலங்கா தெற்கு எனில் அது சிங்களம்,. மூன்றாவதாய் நீங்கள் விரும்பும் பணம் பண்ணும் அல்லது மதம் பண்ணும் எதாவது பண்ணக்கூடிய மொழியைக் கற்றுக் கொடுங்கள். அதற்காக மூன்றாம் மொழியிலேயே உண்டு உறங்கு கழித்துக் கிடக்க அவசியம் இல்லை. ஒன்றைக் கற்றாலும் ஒழுங்காய் கற்க வேண்டும். மூன்றாம் மொழி ஆங்கிலமோ, பிரஞ்சோ, இந்தியோ, உங்கள் பொருளாதார நலனுக்கு விரும்பியதை கற்க. வீட்டு மொழியில் குழந்தை முறையாக பயிற்றுவித்தால் எளிதாக பிற் மொழிகளை அவனால் கற்கவும், உள்வாங்கவும், வெளிக்கொணரவும் முடியும் என்பதை மரமண்டைப் பெற்றோர் உணர்க.
வீட்டில் இருக்கும் மூன்று பேரில் இரண்டு பேருக்கு தமிழிலில் தான் பெயர் உள்ளது. ஒருவர் மட்டும் ஒரு தலைவரின் பெயர் வைக்க எண்ணி இயல்பாக அமைந்து விட்டது.
ஆனால் எனக்கு நம்பிக்கை உண்டு. நாம் வாழ்ந்து முடிக்கும் வரைக்கும் இந்த தமிழ் மக்களின் பேச்சு மொழியாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.
தமிழ்வந்த பாதை
http://deviyar-illam.blogspot.in/2009/11/blog-post.html
கருத்துரையிடுக