இளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நாம் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.
திருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.
மனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை(?) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ? நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான், எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா ?
*********
மாநகரங்கள் தவிர்த்து தமிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........?' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.
எங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள். பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள்.
கிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்வித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள், இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.
ஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா ? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை.
தாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார். தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா ? இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.
திவ்யாவின் அப்பங்காரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ? என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.
திவ்யாவின் அப்பங்காரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ? என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.
*************
தமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர் பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.
18 கருத்துகள்:
நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் [ஊர்ப் பெயர் வேண்டாம்], 20 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனும் மேல் ஜாதிப் பெண்ணும் ஓடிப் போய்க் கல்யாணம் கட்டிக் கொண்டார்கள்; நகரத்தில் குடியேறிவிட்டார்கள். குழந்தை குட்டிகளுடன் சுகமாக இருக்கிறார்கள்.
சொந்த கிராமத்திற்கு வந்து போவது உண்டு. பெண், தன் பிறந்த வீட்டுக்குப் போவதில்லை. அவர்களும் கண்டுகொள்வதில்லை.
ஜாதி வேறுபாட்டை புறக்கணிக்கிற பக்குவம் இல்லையென்றாலும், அனுசரித்துப் போகிற கிராம மக்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தவே இதை எழுதினேன்.
சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான்,///உண்மை
சாதியம் தன் கோர முகத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இங்கு சிக்கலே, சாதி மறுப்பாளர்களின் மவுனங்களும், கையாலாகாத்தனமுமே. தருமபுரி சம்பவம் நடந்த பின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பை உறுதி செய்ய நாம் என்ன செய்தோம்? சாதி வெறியர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதன் மூலம் நமது குற்றவுணர்வை மறைக்க முனைவது முறையல்ல. இங்கு சாதி மறுப்பு பேசும் நாம், நமது வாழ்வில் சாதிகளை முற்றாக துறந்து தான் விட்டோமா? அல்லது குறைந்தது சாதி மறுத்து மணந்தோரின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் எத்தகைய உத்தரவாதங்களை எம்மால் அளிக்க முடிந்தது. இங்கு குற்றவாளிகள் தமது வெறித்தனத்தை பரப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களை நம்மால் ஒழிக்கத் தான் முடிந்ததா? அடுத்து இன்னொரு இளவரசன் இறக்கும் வரை, திவ்யா அபலையாக்கப் படும் வரை, வாய் மூடி மவுனிகளாக கிடப்போம், அல்லது எங்காவது புலம்பித் தீர்த்து விட்டு நாலாம் நாள் அவரவர் சோழியைப் பார்க்கப் போவோம். முடிவு???
vanakkam thiru kovi avargale neenda idaivelikkuppiragu thangalin padhvu nandri surendran
எல்லோருக்கும் ஆசைகள் உடம்பு முழுக்க இருக்கிறது.
சாதி இல்லாத சமூகம் உருவாக வேண்டும். இந்த சாதீயம் அழிய வேண்டும். மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்று. ஆனால் இது அத்தனையும் நமக்கான ஆசைகள்.
இதற்கான முதல் படியில் நாம் கால் வைக்க விரும்புவதில்லை என்பது தான் உண்மை.
காரணம் மாற்றங்கள் என்பது வெளியே நடக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம்.
நாம் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நம் குடும்பத்தில் இருந்து தான் அந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று கனவில் கூட நினைப்பது இல்லை.
காரணம் இப்போது மாற்றங்கள் என்பது நொடிப்பொழுதில் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.
நேற்று என்ன நடந்தது என்பது பற்றி யோசிப்பதற்குள் அதற்குப் பின்னால் பத்து மாற்றங்கள் நம்மை அடித்துக் கொண்டு சென்று விடுகின்றது. நம்மை புறந்தள்ளி விடுவார்களோ? காலத்தோடு ஒட்டி ஒழுகாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சமும், தன் இருப்பு குறித்த பயமும் ஒவ்வொருக்குள்ளும் நெருஞ்சி முள் போல குத்திக் கொண்டே இருக்கின்றது.
இரத்தத்தை துடைத்துக் கொண்டே நாமும் வெட்கம் இல்லாமல் எதை எதையோ நோக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம்.
அடிமைத்தனம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்தது.
ஆதிக்கம் தொடங்கிய போது தன் சுயநலம் மேலோங்கி நின்றது.
சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாக பார்க்க நாகரிகம் என்ற வார்த்தை நமக்கு பலவற்றையும் கற்றுக் கொடுத்தது.
ஆனால் இந்த படிப்படியான வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வன்மத்தோடு கலந்த பொறாமைகள் நம்மோடு தொடந்து கொண்டேயிருப்பதால் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் வாழும் மிருகம் போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
இதுவே தான் ஒரே சாதி ஆனால் பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து என்கிற அளவில் மாற்றம் பெற்றுள்ளது.
பணபலத்தில் சமமாக இல்லாதவன் ஒரே சாதியாக இருந்த போதிலும் கூட அவனும் தள்ளி நிற்க வேண்டியது தான்.
http://deviyar-illam.blogspot.in/2013/05/blog-post_12.html
//மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை//
என்னமோ எல்லாரும் வேத புத்தகத்த கையில வெச்சுகிட்டு அதன்படி நடக்குற மாதிரி சொல்றீங்க. இல்ல, அந்த புத்தகங்கள கொளுத்திட்டா தான் சாதி போயிடுமா?
எந்த இந்து வேத புத்தகத்த படிச்சிருக்கான்? இங்க யாருக்கும் வர்ணாசிரம படிக்கட்டு பத்தி தெரியாது. எனக்கு தெரிஞ்சதுக்கு காரணம் கூட சாதி கூடாதுனு சொல்றவங்க மூலமாத்தான்.
எல்லா சாதிக்காரனுக்கும் இருக்கும் பொதுவான எண்ணம், 'தன் சாதி தான் உயர்ந்தது'னு தான்...
இளவரசன் இறந்ததுக்கு காரணம் வருணாசிரம் அல்லா கேவலமான தலித்திய புரட்சி பற்றி பேசுபவர்கள்தான் , தனக்கு கீழான சக்கிலிய சமுகத்தில் பெண் எடுக்க முன்வராத எந்த ஒரு தலித்தும் சாதி வெறிபிடித்த கீழ் சாதி காரர்கள்தான்.
சாதி வெறியில் மேல்சதிவெறி ,கீழ் சாதி வெறி ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை எல்லாம் ஒன்றுதான் .
வன்னியருக்கு ஒரு பாமகா , பறையருக்கு விடுதலை சிறுத்தைகள்,பள்ளருக்கு புரட்சி தமிழகம் இதுதான் உண்மை . அணைத்து கட்சிகளும் கீழ் சாதியில் திருமணம் செய்தால் எதிர்ப்பார்கள் .
எனக்கு தெரிந்தவரை சாதியம் ஒழிய பொருளாதரா சம பலம் வேண்டும். திருமணத்தினால் சாதியை ஒருபோதும் ஒழிக்க முடியாது .
இறந்த பிறகும் இந்த தலித்திய புரட்சியாளர்கள் பிணத்தை வைத்து நடத்தும் அரசியல் இவர்களின் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாகிறது .
பிணத்தை வைத்து ,இளவரசனின் கடைசி கடிதத்தை மறைத்து இந்த தலித்திய வெறிபிடித்த வக்கீல் ரஜினி ,திருமாவளன் செய்யும் அரசியல் மிக கேவலமானது ஆதிக்க சமுதயாதினரைவிட மிகவும் ஆபத்தானவர்கள் இந்த போலி சம தர்மம் பேசும் தலித்திய புரட்சியாளர்கள் அதைவிட ஆபத்தானவர்கள் சாதி ஒழிய ஆதிக்க சக்திகள் மட்டும் தான் காரணம் என்பவர்கள் இவர்கள் முதலில் சேரியில் சாதியை ஒழித்து சமதர்மத்தை நிலைநாட்டட்டும் .
இளவரசன் தற்கொலை செய்ய காரணம் திவ்யா பிரிந்ததினால் ஏற்பட்ட அவமானம் தான் காரணம் அவள் மேல் கொண்ட காதல் அல்ல.
இந்த இணைப்பில் உள்ள படத்தில் இளவரசனின் கை மணிக்கட்டு பகுதில் உள்ள கட்டுக்கு உங்களின் யூகம் என்ன ?
http://indiatoday.intoday.in/story/chennai-dalit-boy-married-to-higher-caste-girl-found-dead-on-railway-tracks/1/286867.html
அம்பிகாபதி படம் பார்த்து கதை சொல்லவும் :)
இவ்வளவு நாள் இளவரசனிடம் திவ்யா இருத்தன் காரணம் என்னை விட்டு பிரிந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என இளவரசன் மிரட்டியது தான் காரணம் .தற்கொலை கடிதத்தை மறைத்த புரட்சியாளர்கள் திவ்யா எதுவும் சொல்லமாட்டாள் என்ற தைரியத்தில் எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள்.
திவ்யாவின் தந்தை சாராயம் குடிக்காமல் செய்த தற்கொலை மூலம் தனது மகளை கடைசியலாவது காப்பாற்றி உள்ளார்.
இளவரசன் தனது இன்ப ஆசை இளம் வயதில் நிறைவேறாதா ஏக்கத்தினாலும் , சிவப்பானா உயர்சாதி பெண் இனி கிடைக்கமாட்டாள் என்ற காரணமும்தான் "I love you baby " என கடிதம் எழுத வைத்து , கட்டிங் அடித்து இரயிலில் விழுந்து கோழையாக சாக காரணம் .
***இவ்வளவு நாள் இளவரசனிடம் திவ்யா இருத்தன் காரணம் என்னை விட்டு பிரிந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என இளவரசன் மிரட்டியது தான் காரணம் .***
அதெப்படி உமக்குத் தெரியும்? திவ்யா உம்மிடம் சொன்னாளா? இல்லை என்றால் மூடிக்கொண்டு இருக்கணும். சும்மா வாய்க்கு வந்ததை ஒளறக்கூடாது!
ஏன் திவ்யா இளவரனை காதலிச்சதே, காதலிக்கலைனா நான் தற்கொலை பண்னி செத்துருவேன்னு மிரட்டில்யாதால் னு பீலா விட வேண்டியதுதானே?
கேக்கிறவன் கேணையான இருந்தா உம்மைமாரி கீழ்தரமான ஆட்கள் எல்லாம் பெரியமனுஷனாயிடலாம்!
வந்துட்டாணுக யோக்கிய சிகாமணிகள், கதை விடுறருக்கு!
//***இவ்வளவு நாள் இளவரசனிடம் திவ்யா இருத்தன் காரணம் என்னை விட்டு பிரிந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என இளவரசன் மிரட்டியது தான் காரணம் .***
அதெப்படி உமக்குத் தெரியும்? திவ்யா உம்மிடம் சொன்னாளா? இல்லை என்றால் மூடிக்கொண்டு இருக்கணும். சும்மா வாய்க்கு வந்ததை ஒளறக்கூடாது!//
அதே தான். இதே மாதிரி அபத்தமாக தான் இத்தனை நாள் அவனை கொலை செஞ்சுட்டாங்கனு கூட சொன்னாங்க. அவிங்களையும் மூடிக்கிட்டு இருக்க சொல்லியிருக்கலாம்.
***இளவரசன் தனது இன்ப ஆசை இளம் வயதில் நிறைவேறாதா ஏக்கத்தினாலும் , சிவப்பானா உயர்சாதி பெண் இனி கிடைக்கமாட்டாள்!!! ***
திவ்யா உயர்சாதியா? வன்னியர்கள் உயர்சாதி??? எவன் சொன்னான் உனக்கு? பார்ப்பானிடமும் முதளியாரிடமும், பிள்ள்ளைமகன்களிடமும், கவுண்டர்களிடமும் இதைச் போயி சொல்லிப்பாரு! உம்மைப் பார்த்து, சரியான காமெடியன் இவன்னு நமட்டுச் சிரிப்பு சிரிப்பாணுக! :)))
நீயா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியதுதான் நான் உயர்சாதி, மயிரு, மண்ணாங்கட்டினு!
தங்களின் பதிவில் சாதி பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளத்தால் நானும் சாதி பெயர்களை குறிப்பிட்டு உள்ளேன் , பின்னுட்டதினை நீட்க வேண்டாம்
வருண் அருந்ததி (சக்கிலி )மக்களிடம் பறையர்கள் உயர்சாதி என்றால் , பறையருக்கு வன்னியர் உயர்சாதி ,வன்னியருக்கு முதலியார்கள் உயர்சாதி , முதலியாருக்கு பார்பனர் உயர்சாதி , என்னை பொறுத்தவரை அனைவரும் ஒன்று .
http://indiatoday.intoday.in/story/chennai-dalit-boy-married-to-higher-caste-girl-found-dead-on-railway-tracks/1/286867.html
இந்த இணைப்பில் இளவரசனின் கையில் மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட என்ன காரணம் ? திவ்யாவை மிரட்டும் போது ஏற்பட்ட காயம் இது :)
****kamalakkannan கூறியது...
தங்களின் பதிவில் சாதி பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளத்தால் நானும் சாதி பெயர்களை குறிப்பிட்டு உள்ளேன் , பின்னுட்டதினை நீட்க வேண்டாம்***
உம் பின்னூட்டத்துக்கு நீர்தான் ரெஸ்பாண்சிபிள். நீ சொன்ன பொய்க்கும்தான். நாளைக்கு எவனாவது சைபர் போலிஸ் வந்து நீ விட்ட அக்தைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால், கொடுக்க ரெடியா இரு!
நீ சொல்றதெல்லாம் கதை இல்லை! உன்னுடைய கருத்து! அதற்கு நீதான் பொறுப்பு!
சிவப்பான உயர் சாதி பெண்ணிடம் காதல் , அவள் அப்பன் இறந்ததிற்கு கூட போகவிடாமல் சிறை அதில் இருந்து தப்பிக்க நினைத்தால் தற்கொலை மிரட்டல் முடிவில் சரக்கடித்து "i love you baby" என்று ஒரு பெண்ணை போக பொருளாக நினைத்து கடிதம் எழுதி ரயிலில் விழுந்து தற்கொலை ,அந்த தற்கொலை கடிதத்தை மறைத்து வைத்து ,ஆர்ப்பாட்டம் ,வீரவணக்கம் செய்ய அரசுக்கு நிபந்தனை இது அல்ல தலித்திய புரட்சி .
அம்பத்கர் செய்தது தான் உண்மையான புரட்சி ,
உம் பின்னூட்டத்துக்கு நீர்தான் ரெஸ்பாண்சிபிள். நீ சொன்ன பொய்க்கும்தான். நாளைக்கு எவனாவது சைபர் போலிஸ் வந்து நீ விட்ட அக்தைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால், கொடுக்க ரெடியா இரு!
சுய சிந்தனை செய்யவும் அனைவருக்கும் தனது தரப்பு கருத்தை முன் வைக்க உரிமை உள்ளது உங்களின் ஒறு பக்க சார்பு நிலைப்பாடு நியாய செயல் ஆகாது , I am not afraid of cyber police ஆனால் ஒரு தலித்திய போலீஸ் திவ்யாவின் தகப்பனை சாதியை சொல்லி திட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் .
****சுய சிந்தனை செய்யவும் அனைவருக்கும் தனது தரப்பு கருத்தை முன் வைக்க உரிமை உள்ளது உங்களின் ஒறு பக்க சார்பு நிலைப்பாடு நியாய செயல் ஆகாது , I am not afraid of cyber police ஆனால் ஒரு தலித்திய போலீஸ் திவ்யாவின் தகப்பனை சாதியை சொல்லி திட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் .***
///இவ்வளவு நாள் இளவரசனிடம் திவ்யா இருத்தன் காரணம் என்னை விட்டு பிரிந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என இளவரசன் மிரட்டியது தான் காரணம் .///
This is NOT a THOUGHT! It sounds more like you know what went on, really. Just watch out! That's all I can tell you!
கருத்துரையிடுக