பின்பற்றுபவர்கள்

9 ஜூலை, 2013

குடுமி - 2

இது தொடர் இடுகை இல்லை, ஏற்கனவே குடுமி பற்றி ஒண்ணு எழுதியதால், அடுத்து இது இரண்டாவது ஆனா இது வேற தகவல். முன்பு எழுதிய குடுமிக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் சிண்டு முடிதலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன். வேண்டுமென்றால் சிங்கம் -2 மாதிரின்னு வைத்துக் கொள்ளுங்கள்

***********

எங்க ஊருல (சிங்கப்பூர்காரவுக தமிழ்நாட்டில் இருந்து வந்தவகளை ஊருக்காரவகன்னு 'செல்லமா' சொல்லுவாக, அவங்களுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து ஒருவர் சிங்கப்பூர் வந்தாலும் அவுகளும் ஊருக்காரவுக தான், சென்னை வாசிகளே சென்னைக்கு வருபவர்களை ஊரான் என்று சொல்லும் முன் உங்களையும் 'நாங்க' ஊருக்காரவங்கேன்னு தான் சொல்லுதோம் என்பதை நினைவில் கொள்க)  ஜெகநாத் ரத யாத்ரைன்னு பல இடங்களில் அறிவிப்பு சுவரொட்டிகள் இருந்ததன,  வீட்டுக்காரம்மாவின் தெரிஞ்சவங்க கொஞ்சபேர் ஹ(அ)ரே இராமா ஹ(அ)ரே கிருஷ்ணா  இயக்கத்தினர், ரதயாத்ரையில் நேரடியாக பங்கெடுப்பவர்கள், அதனால் நாமும் போய் பார்த்து வருவோம் என்று அழைத்தார். அரே இராமா அரே கிருஷ்ணா குழுதான் ரதயாத்ரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

புள்ளைக் குட்டியோடு குடும்பமாக இரத யாத்ரை பார்க்கக் கிளம்பினோம், ரதயாத்ரை எங்கே நடந்தது என்றால் ? அது தோபாயா என்னும் இடத்தில் அமைந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. சிங்கப்பூரில் ரதயாத்ரையா ? இதுக்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள்,. இந்தியாவில் நடக்கும் ரதயாத்ரை குறித்து சிங்கப்பூருக்கு தெரிந்திருக்காதா ? 1988ல் இருந்து நடக்கிறதாம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

அ.ரா.அ.கி: எங்களுக்கு இரத யாத்ரை நடத்த அனுமதி வேண்டும்......நாங்க ரதத்தை ஊர்வலமாக கொண்டு போவோம்

சிங்கப்பூர்.அரசு : சிங்கப்பூரில் ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது

அ.ரா.அ.கி: இது எங்க பண்பாடு, நாங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வோம், ஆடிக் கொண்டே செல்வோம், பல சமயங்களை மதிக்கிற நீங்கள் இதையும் அனுமதிக்கனும்.

சிங்கப்பூர்.அரசு :  சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை....உங்களுக்கு சிறப்பு அனுமதி தருகிறோம், ஆனா நாங்க சொல்ற இடத்தில் தான் நடத்திக்கனும், அங்க நீங்க ஊர்வலம் போவிங்களோ, ஆடுவிங்களோ,,,,,,,வேற வாய்பில்லை

அ.ரா.அ.கி:  முடியாது...............ஆனா முடியும் - 

என்று ஒருவழியாக அனுமதிபெற்று 25 ஆண்டுகளாக இரத யாத்ரை நடத்திவருகிறார்களாம்.  விழாவில் ஒருவர் 1988ல் இருந்து நடப்பதாக அறிவித்தார்

********

ரத யாத்ரை நடந்த இடம் ஓட்டப்பந்தயம் நடத்தக் கூடிய பெரிய கோள வடிவிலான ஓட்ட மைதானம். விழாவிற்கு வருபவர்களை 'ஹரே இராமா' சொல்லி வரவேற்க இரண்டு இளைஞர்கள், அவர்களிடம் சிறப்பு குடுமி எதுவும் இல்லை, அதைத் தாண்டி உள்ளே சென்றால்  பஞ்சு மிட்டாய், அப்பறம் நூல்கள் விற்பனை, இன்னும் வெஜ்டேரியன் பிஸ்ஸா உள்ளிட்ட சில ஸ்டால்கள் இருந்தன, மைதானத்தின் நடுவில் நான்கு பலூன் சிலைகள், இரண்டு பக்கமும் நீலம் மற்றும் காவி உடை அணிந்த கைகளை தூக்கியபடி பால கிருஷ்ணன், நடுவில் ஏதோ அசுர உருவங்கள், விளையாட்டு மைதானத்தில் ஓட்டம் துவங்கும் இடத்தில் மூன்று இரதம், துவாரக கோவில் அமைப்பில் செய்யப்பட்ட ரதம், சுமார் இருபது அடி இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் மழுங்க சிரைத்த தலையில் பின்மண்டையில் மட்டும் கேள்விக்குறி மற்றும் ஆச்சரிய குறி அமைப்புகளில் குடுமியுடன் பூசாரிகள் நின்று கொண்டிருந்தனர், 


ஒவ்வொரு ரதத்தின் முன்பு திரளான அ.ரா.அ.கி இயக்கத்தினர் ஜிங்கச்சா மாதிரி எதையோ தட்டி தட்டி பாட்டுப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் துள்ளி ஆடிக் கொண்டு இருந்தனர். ஓ இது தான் கிருஷ்ணர் அன்பில் அன்பர்கள் திளைத்திருத்தலா ? அதிலும் வெள்ளைக்காரர்கள் குடுமியோடு துள்ளிக் கொண்டு இருந்தது பரவசமூட்டியது. என்னதான் நீங்களெல்லாம் செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தினாலும் எங்காளுங்க உங்களையும் மொட்ட போட்டு வெறுவாயால் பாட வச்சு துள்ள வச்சிருக்காங்களேன்னு நினைக்க பரவசம்.

திரைப்பட நடிகர்கள் படத்துக்கு படம் 'கெட்டப்' மாற்ற தலையிலும், மீசையிலும், தாடியிலும் .......மொத்தத்தில் முடியில் கைவைப்பது போல்.....எந்த ஒரு மத அடையாளமும் தனக்கான கட்டிங்க் ஷேவிங்க் வைத்திருக்கிறது, அ.ரா.அ.கி இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள் இராமனுஜர் போன்று மொட்டை அடித்துக் கொண்டு பின்பக்(ங்)கம் கொஞ்சம் குஞ்சம் போன்று சிறு குடுமி வைத்திருக்கிறார்கள், அதிலும் மேல்சாதியினர் விடாப்படியாக பூணூல் அணிந்திருக்கின்றனர் (வெள்ளைக்காரன் பூணூல் போடவில்லை), அதில் ஓரளவு ஈடுபாட்டில் உள்ளவர்கள் முழுக்க மொட்டை அடிக்காமல் பின்பக்கம் ஒரு சிண்டு முடிந்து கொள்கிறார்கள். நெற்றியில் கீற்று போன்று சந்தனம் வைத்துக் கொள்கிறார்கள், 

விழாவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்து கொண்டு இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கலந்து கொண்ட தமிழ் முகங்கள் மிகக் குறைவு, அவர்களுடைய வழிபாட்டு முறைகளும்,ரத அமைப்பும், அந்த பாடல்களும் தமிழ் பண்பாட்டிற்கும் அதற்கும் வெகு தொலைவு போல், நாம் எதோ அழைக்காத திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றது போல் வெகு அன்னியமாக இருந்தது (ஏன்யா போனே ? ன்னு கேட்காதிங்க........நான் பக்தி என்ற அடிப்படை இல்லாமல் நாகையில் கோவில் திருவிழாக்களுக்கு சென்றிருக்கிறேன், வேளாங்கன்னி திருவிழாவிற்குக் கூட சென்றிருக்கிறேன், அங்கெயெல்லாம் அந்த அந்நிய உணர்வு வந்ததே இல்லை) 

*****


இதோ யாத்திரை துவங்குகிறது..என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள், இரதம் ஒவ்வொன்றாக கிளம்பி ஓட்டப்பந்தைய பாதையில் சுற்றத் துவங்க திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் விளையாட்டு மைதானத்தை சுற்றி வருவதால் என்ன நன்மையோ ? எத்தனை முறை சுற்றினார்கள் என்று தெரியாது, நான் ஒரு சுற்று முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டேன், இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்றால் கிருஷ்ணன் சிங்கப்பூர் ப்ளே க்ராவுண்டில் தான் பிறந்தார் என்ற கதைகள் கூட எழுதப்படலாம், ஆனால் இதன் பிற நன்மைகள் பார்தோமேயன்றால் பொது சனத்துக்கு எந்த இடையூறும் இல்லை, இந்த இரத யாத்திரையினால் மதக்கலவரம் இல்லை. இதையே ஏன் இந்தியாவிலும் பின்பற்றக் கூடாது ? இந்தியாவில் இரத யாத்திரை என்றாலே இரத்த யாத்திரையா என்று கேட்கும் அளவுக்கு அல்லவா இருக்கிறது.

இதே இயக்கத்தினர் ஒரு முறை தெப்பம் விடுவதாக, நீச்சல் குளத்தில் தெப்பம் விட்டு விழா நடத்தினார்கள். விழாவில் ஹைலைட் எனக்கு பிடித்தது அவர்கள் வைத்திருந்த குடுமி தான்.

ம் நிரந்தர சொர்கத்தின் ஆள் பற்றக் குறையை நீக்கனும் என்றால் இந்த சிலை வணங்களும், இணை வைப்பவர்களும் திருந்தனும் இதையெல்லாம் அல்லா எப்போ செய்து முடிக்கப் போறாரோ............? நோன்பு திறக்கும் நேரத்தில் இதை எழுதிவிட்டு எனக்கு கவலையோ கவலை.

33 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

ஒருவகையில் பார்த்தால் தற்போதைய உலகில் மனதளவில் இளைப்பாறிக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள, இடைவெளிகளை இட்டு நிரப்பிக் கொள்ள, ஏதோவொரு வகையில் புத்துணர்ச்சி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு மத பண்டிகைகள் விழாக்கள் அவசியமாக தேவைப்படுகின்றது என்று எண்ணிக் கொள்வேன்.

kamalakkannan சொன்னது…

பொய் சொல்லாதிங்க அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிக்கவும் சுவையான உணவு சாப்பிடவும் தானே போனிங்க :)

எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை , வைதரிச்சல் :)

Jayadev Das சொன்னது…

அழகிய படங்கள். சிங்கப்பூரில் ஜகன்னாதர் இரத யாத்திரையை கண்டுகளிக்க உதவியமைக்கு நன்றி.

இறைவன் எல்லோர் மனதிலும் இருக்கிறான். சரியான தருணத்தில் வெளியிடப் பட்ட இந்தப் பதிவே அதற்க்கு சாட்சி. நாளை [ஜூலை 10] ஒரிசாவில் உள்ள பூரி ஜகன்னாதர் இரத யாத்திரை என்னும் பாரம்பரிய நிகழ்வு துவங்க இருக்கிறது. பத்து லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் கூடும் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். இது தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் சிங்கப்பூரில் முடிந்தால் பார்க்கவும். இதைத்தான் பக்தர்கள் உலகெங்கும் நடத்துகிறார்கள் அங்கும் நடத்துகிறார்கள்.

என்னதான் விஞ்ஞானம் பத்தி பேசினாலும் பகுத்தறிவு என்று சொல்லிகிட்டாலும், தமிழன் தான் சிறந்தவன், தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தான் டாப் என்பதெல்லாம் உமக்குத் தெரியாமலேயே வந்து விடுகிறதே!! உண்மையான பகுத்தறிவுவாதி என்றால், உண்மையிலேயே விஞ்ஞானப் பூர்வமாக சிந்திப்பவன் என்றால் மொழி, இனம் தேசம் ...இத்யாதி.......என்ற அடிப்படையில் பாகுபாடு பார்க்க மாட்டான் நீர் ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு வாதி. இப்படித்தான் இருப்பீர். நீர் நம்பும் டார்வின் தமிழ் குரங்கு என்ற இனம் தனியாக இருந்தது, அதிலிருந்து தமிழன் வந்தது என்றா சொன்னார்? மொழி என்பது கருத்துகளை பரிமாற்ற எழுப்பப் படும் சப்தம் அவ்வளவு தானே? ஒரு குறிப்பிட்ட முறையில் சப்தம் எழுப்புவதாலே ஒருத்தன் உனக்கு சொந்த பந்தமாகி விடுவானா? இது அறிவியலா? உண்மையான பகுத்து அறிந்தவன், ஒட்டு மொத்த மனிதனையும் பாகுபாடின்றி பார்ப்பான், அது மட்டுமல்ல, ஒவ்வொரு உயிருக்கும் அனாவசியமாக துன்பம் இழைக்க மாட்டான். அப்படி எத்தனை பேர் பகுத்தறி(யா)வாதிகளில் உள்ளீர்கள்?

குளத்தில் உள்ள தாமரை, அதில் தேன். எங்கிருந்தோ வரும் வண்டு சுவைக்கும் அங்கேயே அந்த குலத்திலேயே வாழும் தவளை அதை ஒரு போதும் சுவைக்காது. உலகிலுள்ள எல்லோரும் இந்தியாவின் பொக்கிஷங்களை ஏற்றாலும், உம்மைப் போன்ற தவல்கள் அவற்றை ஒருபோதும் ஏற்காது.

http://www.rathyatra.net/
http://www.youtube.com/watch?v=V-8YCcv15zI

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பர் கோவி,
நல்ல பதிவு. ஹரே ராமா ஹரே கிருஷ்னா அல்லது இஷ்க்கான் என்பது இந்து மதத்தின் ஆபிரஹாமிய வடிவம்.

இது பற்றி நாம் எழுதிய பதிவு
இஸ்க்கான் மர்மங்கள் விளக்கும் ஆன்மீகவாதி யார்?
http://aatralarasau.blogspot.com/2012/11/swamy.html
**

கிருஷ்ன வழிபாடு&சிந்த்னை சர்வ ரோஹ நிவாரணி என்பது கொள்கை என்றலும் இவர்களின் மேல் பல குற்றச்சாட்டுகள் உண்டு.

வெள்ளையன் குடுமி வைத்தாலும் இந்தியாவில் இவர்களை கோயிலுக்குள்விடுவதில் பல முறை சிக்கல் எழுவது உண்டு.
http://www.iskcontimes.com/jagannath-puri-temple-resists-suggestions

வெள்ளையன் கிருஷ்ன பக்தன் ஆனாலும் இந்து ஆக முடியாதோ ???

ஒருவேளை இந்து ஆனால் எந்த சாதியில் சேர்ப்பது???

வெள்ளையன் நிஜமாகவே ஆண்ட பரம்பரைதான் ஹி ஹி!!

சிந்திக்க மாட்டீர்களா!!!!


நன்றி!!!

priyamudanprabu சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

உற்றுக் கவனித்தால் உலகின் ஒவ்வோர் இனக் கூட்டத்துக்கும் ஆடல், பாடல், கேளிக்கை, உணவு, குடிநீர் ( மது?) எல்லாம் வேண்டியுள்ளது. இது இளைப்பாறுதலை தர வல்லது. இதனை மதங்களும் உள்வாங்கிக் கொண்டு திருவிழாக்களாய் ஆக்கிக் கொண்டன, மேற்கில் வாராந்திர கேளிக்கைகளாய் ஆகி விட்டன, சில இடங்களில் கேர்னிவாலாக பரிணமித்தன. ஆட்டம், பாட்டம், மது, மாது, உணவு எல்லாம் இன்றளவும் பழங்குடி சமூகங்களில் காணப்படுபவையே. யாருக்கும் இடையூறு தராது, பொது இடங்களை விட்டு விட்டு (பாவம்யா மக்கள்) இவ்வாறு தனித்துவ திடல்களில் வைத்துக் கொண்டால் சிறப்பே. கனடாவில் தமிழ் கோயில்கள் ஊர்வலங்கள் வாகன தரிப்பிடங்களில் நடத்தப்பட்டு நம்மை கிச்சு கிச்சு ( சிரிப்பை ) மூட்டின. என்னவோ இந்தியாவிலும் பொது இடங்களை விடுத்து கேளிக்கை கொண்டாட்டங்களை நடத்தினால் நல்லது.

வவ்வால் சொன்னது…

கோவி,

இந்தியாவில் ரதயாத்திரைனு அரசியல்வாதி வேன்ல ஊர்வலம் போயித்தான் கலவரம் உண்டாச்சு, மற்றபடி ரதயாத்திரைனால் கலவரம் உண்டாகவில்லை(கண்டதேவி மட்டும் விதிவிலக்கு)

இந்தியாவில் நடக்கும் ரத(தேர்) ஓட்டத்தின் பின்னால் இருப்பது "வர்ணாசிரமக்கொள்கை" அக்காலத்தில் அரச பரம்பரை,உயர்வர்க்கம் தவிர யாருக்கும் கோயிருக்குள் சென்று வழிப்பட அனுமதியில்லை,எனவே அனைவருக்கும் "கடவுள் தரிசனம்" தர ஒரு ஏற்பாடே தேரோட்டம்.

மதவெறி,பிற்போக்கு போல சொல்லப்படும் வடமாநிலங்களில் எந்த கோயிலுக்குள்ளும் செல்ல தடையில்லை,கருவறைக்குள்ளும் செல்ல முடியும்,தென்மாநிலங்களில் தான் இந்த "சண்டாளப்ப(க்)தர்கள்" ஆட்டம் போடுதுங்க :-))

தருமி சொன்னது…

சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை...//

அடடா ... நல்லது .. நடத்துங்க!

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//மொழி என்பது கருத்துகளை பரிமாற்ற எழுப்பப் படும் சப்தம் அவ்வளவு தானே? ஒரு குறிப்பிட்ட முறையில் சப்தம் எழுப்புவதாலே ஒருத்தன் உனக்கு சொந்த பந்தமாகி விடுவானா? இது அறிவியலா? உண்மையான பகுத்து அறிந்தவன், ஒட்டு மொத்த மனிதனையும் பாகுபாடின்றி பார்ப்பான், // is it so ? then why in Kovils you guys accepting to use one particular language, Our god only knows sanskrit ? why can't english or chinese ? ;)

why can't you ppl can see all languages are equal as u said பாகுபாடின்றி பார்ப்பான்

கோவி.கண்ணன் சொன்னது…

//மொழி என்பது கருத்துகளை பரிமாற்ற எழுப்பப் படும் சப்தம் அவ்வளவு தானே? ஒரு குறிப்பிட்ட முறையில் சப்தம் எழுப்புவதாலே ஒருத்தன் உனக்கு சொந்த பந்தமாகி விடுவானா? இது அறிவியலா? உண்மையான பகுத்து அறிந்தவன், ஒட்டு மொத்த மனிதனையும் பாகுபாடின்றி பார்ப்பான், அது மட்டுமல்ல, ஒவ்வொரு உயிருக்கும் அனாவசியமாக துன்பம் இழைக்க மாட்டான். அப்படி எத்தனை பேர் பகுத்தறி(யா)வாதிகளில் உள்ளீர்கள்?//

என்னது மொழிங்கிறது வாயுத்தொல்லையை வெளிப்படுத்தும் குசு போன்றது, (வேறயாராவது விட்டால்) மூக்கைப் பொத்திக் கொண்டால் போதும் அதுக்கு மேல் அதில் ஆராய்ச்சி செய்ய ஒண்ணும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ?

மொழி பற்றிய தட்டையான புரிதல் கொண்டுள்ள உங்களைப் போன்றவர்களுடன் அளவளாவி நான் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை.

//குளத்தில் உள்ள தாமரை, அதில் தேன். எங்கிருந்தோ வரும் வண்டு சுவைக்கும் அங்கேயே அந்த குலத்திலேயே வாழும் தவளை அதை ஒரு போதும் சுவைக்காது. //

ஆஹா அருமையான எ.கா. ஒரு பன்றி மனிதனைப் பற்றி 'மனிதன் அறிவான மலத்தின் சுவை' என்று நினைக்குமோ ? எது எது எதை சாப்பிடுமோ அதைத்தான் சாப்பிடும், தவளை எதற்கு தேன் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர் என்று தெரியவில்லை.
எலும்பைக் கடிக்கும் (ஓ)நாய் கூட அதன் சுவையின்பம் மனிதனுக்கு வாய்க்காது என்று நினைத்து உண்ணும் போல.

//உலகிலுள்ள எல்லோரும் இந்தியாவின் பொக்கிஷங்களை ஏற்றாலும், உம்மைப் போன்ற தவல்கள் அவற்றை ஒருபோதும் ஏற்காது. //

ஓ மேலே ஒட்டு மொத்தமாக பார்ப்பான் என்று என்னென்னவோ உளறிவிட்டு திடிரென்று இந்து ஞானமரபும் இந்தியாவும் அது தகவல் பொக்கிஷம்னு இப்பதான் தெரிகிறதா ? இதையெல்லாம் ஏன் திருமுறைகளை பூட்டி வைத்த சிதம்பரம் தீட்சிதர்வாள்களிடம் சொல்லி பாராட்டுப் பெற்றிருக்கக் கூடாது ? எனக்கு தெரிந்து இந்தியாவின் பொக்கிஷங்களில் வேகமாக விற்பனையாகுவது காமசூத்ரா தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி கூறியது...
சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை...//

அடடா ... நல்லது .. நடத்துங்க!//

தைப்பூசத்திற்கு அனுமதி உண்டு, அது 100 ஆண்டுகளுக்கு மேலாக நடப்பாதால் அதற்கு மட்டும் சாலையில் ஊர்வலமாக நடத்த சிறப்பு அனுமதி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏதோவொரு வகையில் புத்துணர்ச்சி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு மத பண்டிகைகள் விழாக்கள் //

ஆண்களுக்கு ஏகப்பட்டவை இருக்கு, பெண்களுக்கு தான் ரொம்ப கஷ்டம், கோவில், ஷாப்பிங் அல்லது தீம்பார்க்

கோவி.கண்ணன் சொன்னது…

// kamalakkannan கூறியது...
பொய் சொல்லாதிங்க அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிக்கவும் சுவையான உணவு சாப்பிடவும் தானே போனிங்க :)//

உணவு ஊர்வலம் முடிந்ததும் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் வயதிற்கு இளம் பெண்களை சைட் அடிப்பது....?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெள்ளையன் குடுமி வைத்தாலும் இந்தியாவில் இவர்களை கோயிலுக்குள்விடுவதில் பல முறை சிக்கல் எழுவது உண்டு.
http://www.iskcontimes.com/jagannath-puri-temple-resists-suggestions

வெள்ளையன் கிருஷ்ன பக்தன் ஆனாலும் இந்து ஆக முடியாதோ ???//

இந்திய தத்துவங்களை வெள்ளைக்காரன் எடுத்துச் சொன்னா அறிவியல் ஆகி ஏற்கிறாங்கன்னு தெரிஞ்சு தான் அவாளை மார்கெட்டிங்கிற்கு சேர்த்துக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன், அவர்களும் ஆண்டாட்டு காலமாக அலேலோயா சொல்லி அலுத்து கொஞ்சம் மாறுபாட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாடம்னு இருப்பதால் வர்றாங்கப் போல.

வெள்ளைக்காரனையெல்லாம் இந்து ஆக்கி உயர்வகுப்பாக்கிக் கொள்வார்கள், கருப்பர்களைத்தான் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ, அவர்களே வரமாட்டார்களோ என்னவோ, எனக்கு தெரிஞ்சு ஆப்ரிக்க கருப்பர்கள் 'இந்து ஞான'மரபில் நாட்டம் கொண்டது போல் தெரியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னவோ இந்தியாவிலும் பொது இடங்களை விடுத்து கேளிக்கை கொண்டாட்டங்களை நடத்தினால் நல்லது.//

இதைத்தான் நான் இந்த இடுகையில் வலியுறுத்த விரும்பியது. அதாவது நரி வலம் போனாலோ இடம் போனாலோ பரவாயில்லை யாரையும் பிடுங்காமல் இருந்தால் சரி

கோவி.கண்ணன் சொன்னது…

//மதவெறி,பிற்போக்கு போல சொல்லப்படும் வடமாநிலங்களில் எந்த கோயிலுக்குள்ளும் செல்ல தடையில்லை,கருவறைக்குள்ளும் செல்ல முடியும்,தென்மாநிலங்களில் தான் இந்த "சண்டாளப்ப(க்)தர்கள்" ஆட்டம் போடுதுங்க :-))//

அதற்கு காரணம் வடமாநில கோவில்களில் போதிய அளவு வருமானம் இல்லாததே, வருமானம் இருந்தால் யார் யார் உள்ளே செல்லலாம் என்று முடிவு செய்வார்கள், இப்போதைக்கு ஒத்த ரூபா உண்டியலில் விழுந்தாலும் வருமானம் தானே.

Jayadev Das சொன்னது…

\\என்னது மொழிங்கிறது வாயுத்தொல்லையை வெளிப்படுத்தும் குசு போன்றது, (வேறயாராவது விட்டால்) மூக்கைப் பொத்திக் கொண்டால் போதும் அதுக்கு மேல் அதில் ஆராய்ச்சி செய்ய ஒண்ணும் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ?\\ உமது வக்கில்லாத நிலைக்கு எமது அனுதாபங்கள்.

\\மொழி பற்றிய தட்டையான புரிதல் கொண்டுள்ள உங்களைப் போன்றவர்களுடன் அளவளாவி நான் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை.\\ அதுசரி, தட்டையான புரிதல் வேண்டாம் உமது உருட்டுக் கட்டையான புரிதல் தான் என்ன என்று பறையுமே பார்ப்போம்?

\\ஓ மேலே ஒட்டு மொத்தமாக பார்ப்பான் என்று என்னென்னவோ உளறிவிட்டு திடிரென்று இந்து ஞானமரபும் இந்தியாவும் அது தகவல் பொக்கிஷம்னு இப்பதான் தெரிகிறதா ? \\ இன்றைய அரசியல் ரீதியாக இந்தியா என ஒருஎல்லைக் கோட்டால் சொல்லப் படும் பகுதியை வேறெப்படி குறிப்பிடுவது? அவர்கள் அந்நிய தேசம், அது எனக்கு எதற்கு என்று ஒதுக்கவில்லை, நல்லது என்று பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

\\ இதையெல்லாம் ஏன் திருமுறைகளை பூட்டி வைத்த சிதம்பரம் தீட்சிதர்வாள்களிடம் சொல்லி பாராட்டுப் பெற்றிருக்கக் கூடாது ? \\ இந்தக் கோவில்தான் வேணும்னு நாம் ஒரு போதும் அடம்பிடிப்பதில்லை.

\\எனக்கு தெரிந்து இந்தியாவின் பொக்கிஷங்களில் வேகமாக விற்பனையாகுவது காமசூத்ரா தான். \\ அப்புறம் உமக்கு ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாகின்ஸ் புத்தகமா விளங்கப் போவுது?

திருவாளர் கோவி கண்ணன், பொதுவெளியில் கருத்தை வைக்கும்போது நிச்சயம் எதிர்கருத்து வரத்தான் செய்யும். அதற்க்கு பதில் சொல்ல வக்கில்லாமல் போய் உமது டவுசர் கிழியும்போது ஆத்திரத்தில் உமது வாயில் இருந்து மலத்தை கக்குவதைப் பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒன்று அபத்தமாக எழுவதைத் தவிர்க்கலாம் அல்லது கமண்டு மாடரே ஷன் போட்டு பதில் சொல்ல முடியாத பின்னூட்டங்களை அமுக்கி விடலாம். வசதி எப்படி?

வடுவூர் குமார் சொன்னது…

தோபோயாவிலா? இப்போது தான் முதல் முறையாக நானும் கேள்விப்படுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திருவாளர் கோவி கண்ணன், பொதுவெளியில் கருத்தை வைக்கும்போது நிச்சயம் எதிர்கருத்து வரத்தான் செய்யும். அதற்க்கு பதில் சொல்ல வக்கில்லாமல் போய் உமது டவுசர் கிழியும்போது ஆத்திரத்தில் உமது வாயில் இருந்து மலத்தை கக்குவதைப் பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒன்று அபத்தமாக எழுவதைத் தவிர்க்கலாம் அல்லது கமண்டு மாடரே ஷன் போட்டு பதில் சொல்ல முடியாத பின்னூட்டங்களை அமுக்கி விடலாம். வசதி எப்படி?//

ஐய்...ஐய்யா.....!

நானு தேவநாதன் மருமகன்கள், சகளைகளுக்கே கூட பின்னூட்ட பெட்டியை திறந்து தான் வைத்திருக்கிறோம். உங்களுக்கு இல்லைன்னா எப்படி ?

நீங்க கண்டபடி/ விருப்பப்படி வா(ந்)தி(எடு)க்கலாம்.

ஏற்கனவே மொழி நிறைய எழுதியாச்சு என்னதான் சொன்னாலும் ஏறாத கரும்பாறை மட்டையன்களுக்கு விளங்காதுன்னு தெரியும், நான் உங்களைச் சொல்லவில்லை. ஆனால் உங்களிடம் தற்கம் செய்வதும் பாறையில் முட்டிக் கொள்வதும் ஒன்றே. அதனால் தான் இது பற்றி உங்களிடம் பேச விரும்பவில்லை.......

********

எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான், அவை வெறும் அடிப்படைப் புரிதல். மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும். இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான், இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.

http://govikannan.blogspot.sg/2011/12/1.html

http://govikannan.blogspot.sg/2007/05/blog-post.html

Jayadev Das சொன்னது…

நாதீகனுங்க ஆட்சிக்கு வந்து செய்யாத அட்டூளியமில்லை. அதுக்காக நீரும் அந்த லிஸ்டைச் சேர்ந்தவர் என்றால் அது கேனத் தனம். குற்றம் புரிந்த நாலு போலி பூசாரிகளை நீர் சொன்னால், அது என்னை ஒன்றும் செய்துவிடாது.

\\ஏற்கனவே மொழி நிறைய எழுதியாச்சு என்னதான் சொன்னாலும் ஏறாத கரும்பாறை மட்டையன்களுக்கு விளங்காதுன்னு தெரியும்.\\

நீர் மொழி என்ற வகையில் அதன் அருமை பெருமைகளையும் அதை பேசுபவன் உமது உறவினன் என்றும் இதைப் புரியாதவன் அடிமுட்டாள் என்றும் கதையளக்கிரீர். மொழியைப் பற்றி நேர் விடும் புருடாவை எல்லாம் ஏற்கவேண்டும் என்றும் அதை மறுப்பவன் முட்டாள் என்றும் நீர் நினைத்தால் உம்மைப்போல முட்டாள் வேறொருத்தன் இருக்க மாட்டான். ஒரு மொழியைப் பேசுவதாலேயே எந்த விதத்தில் ஒருத்தன் வேண்டியவனாகிறான் அவனுக்காக ஏன் ஓலமிட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிவியல் ரீதியாக நீர் விளக்கம் தர வேண்டும். அதுதான் பகுத்தறிவு வாதி என்பதன் அர்த்தாம். அது உம்மால் முடிந்ததா? முடியவில்லை. உமக்கு மொழி வெறி இருந்தால், அதைப் பேசுபவனுக்காக நீர் ஊளையிடுவீர் என்றால் அதே மாதிரி இன்னொருத்தன் தன் சாதி என்ற வெறி பிடித்தவனாக இருக்கக் கூடும், அதைச் சேர்ந்தவர் மீது அவன் பற்று வைக்கக் கூடும், அதைப் புரியாதவன் முட்டாள் என்று அவனும் சொல்லுவான். அவனை அயோக்கியன் என்று சொல்ல உமக்கென்ன யோக்யதை இருக்கிறது?.

திருவாளர் கோவி கண்ணன், நீர் என்னமோ பெரிய அறிவாளி மாதிரியும் மற்றவன் எல்லோரும் முட்டாள்கள் என்பது போலவும் உமது தளங்களில் வாந்திபேதி எடுத்து வைக்கிறீர்கள். சற்று உற்று நோக்கினால் அதே முட்டாள்தனத்தையே நீரும் செய்து கொண்டிருக்கிறீர் என்பது தான் நிதர்சனம். கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு, தமிழ் நாட்டில் உள்ள சர்ச்சும் சமாதியும் இனிக்கிறது என்னும் போதே உமது போலி பகுத்தறிவு பல்லிளிக்கிறது.
இது ஒன்றும் எமக்கு புதிதல்ல. நீர் ஒரு மலகுட்டை, அதில் கல்லெறிய எமக்கு விருப்பமில்லை. உம்மைப் போன்ற வாழை மட்டைகளை திருத்தி நான் காணப் போவது ஒன்றுமில்லை.

kamalakkannan சொன்னது…

//இறைவன் எல்லோர் மனதிலும் இருக்கிறான். சரியான தருணத்தில் வெளியிடப் பட்ட இந்தப் பதிவே அதற்க்கு சாட்சி.//

ஜெயததேவ்வின் மனதில் இறைவன் வெளிப்பட்டதற்கு ஜெயதேவின் பின்னுட்டமே சாட்சி .

நல்ல சாமிய கும்புட்டு புத்தியோட பின்னுடம் இடவும் ,யா அல்லா கசம் .

கோவி.கண்ணன் சொன்னது…

//நீர் ஒரு மலகுட்டை, அதில் கல்லெறிய எமக்கு விருப்பமில்லை. உம்மைப் போன்ற வாழை மட்டைகளை திருத்தி நான் காணப் போவது ஒன்றுமில்//

வாலறுந்த நரியின் ஓலம்.

மலக்குட்டையை தேடி எங்கேயும் போக வேண்டாம், பேதி மாத்திரை எடுத்துக் கொண்டால் உம் வயிறு கூட மலக் குட்டை தான். கையை வச்சு தானே கழுவுறீர். கல்லால் துடைத்துக் கொள்ளவில்லையே.

நான் ஏற்கனவே பலபதிவுகளில் சொல்லியது தான் உம்மைப் போன்ற மேதாவிகளுக்காக நாம் எழுதவில்லை. முன்பதிவில் ஆபாச பின்னூட்டமிட்டவனுக்கு ஆபாசச் சொல்லைப் பயன்படுத்தினான் என்பது தவிர உமக்கும் அவனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

முச்சந்தியில் மலக்குட்டையில் இறங்கி தூர்வாருகினானே அவனிடம் போய் உம் மலக் குட்டை புராணத்தைப் பாடி நான் கல் எரியமாட்டேன் என்று சொல்லி வந்து அவன் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி வந்து சொல்லுவீர். பூவும், புஷ்பமும், சந்தனம் தொட்டக் கையால் மலக் குட்டையில் கல் எரியமாட்டேன் என்கிற உம் வீராப்பு மெச்சக் கூடியதே. நான் உமக்காக எழுதவில்லை, மலக்குட்டையில் இறங்கி வேலை செய்பவனுக்காகத்தான் எழுதுகிறேன், திங்க சோறும், படுக்க இடமும், பரம்பரைக்கு பணமும் இருந்தால் எவன் வேணுமானாலும் பக்தி மானாகிடலாம் ஓய், ஏனென்றால் அதைவிட ஆடல்பாடல்கள் நேரடிக்காட்சிகளாக நிறைந்த வேறு நிகழ்வுகள் குறைவு, ஆட்டம் பாத்தமாரியும் ஆச்சு, பாவத்தைப் போக்க பகவானை வேண்டியதுமாச்சு.

Jayadev Das சொன்னது…

\\மலக்குட்டையை தேடி எங்கேயும் போக வேண்டாம், பேதி மாத்திரை எடுத்துக் கொண்டால் உம் வயிறு கூட மலக் குட்டை தான். கையை வச்சு தானே கழுவுறீர். கல்லால் துடைத்துக் கொள்ளவில்லையே.\\ மலகுட்டையில் இறங்க வேண்டிய அவசியம் நகரமயமானதால் வந்தது. முன்னாடி வெட்ட வெளியில் மலம் கழித்தான், வெயிலில் காய்ந்துவிடும், அல்லது பன்றி வந்து சுத்தம் செய்யும். அதுசரி, இந்த ஏற்றத் தாழ்வைப் போக்க தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட பகுத்தறிவுவாதிகள் எதைப் புடுங்கினார்கள்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அது பிரச்சினையே என்றாலும் அதை எதற்கு இங்கே கொண்டாந்து நுழைக்கிரீர் என்று தெரியவில்லை. நீர் சிங்கப்பூர் காரர், உமது குண்டியை ஆள் வைத்து கழுவுகிரீரோ என்னவோ தெரியவில்லை.

\\முன்பதிவில் ஆபாச பின்னூட்டமிட்டவனுக்கு ஆபாசச் சொல்லைப் பயன்படுத்தினான் என்பது தவிர உமக்கும் அவனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.\\ அவனுக்கும் உமக்கும் மட்டும் வேறுபாடு உள்ளதா என்ன? நாத்தீகன் நாறவாயன் என்பது உமது பதிலில் இருந்தே தெரிகிறதே? உமது வாயில் இருந்து மலத்தைத் தவிர வேறொன்றும் வரவில்லையே?

\\முச்சந்தியில் மலக்குட்டையில் இறங்கி தூர்வாருகினானே அவனிடம் போய் உம் மலக் குட்டை புராணத்தைப் பாடி நான் கல் எரியமாட்டேன் என்று சொல்லி வந்து அவன் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி வந்து சொல்லுவீர். பூவும், புஷ்பமும், சந்தனம் தொட்டக் கையால் மலக் குட்டையில் கல் எரியமாட்டேன் என்கிற உம் வீராப்பு மெச்சக் கூடியதே. நான் உமக்காக எழுதவில்லை, மலக்குட்டையில் இறங்கி வேலை செய்பவனுக்காகத்தான் எழுதுகிறேன், திங்க சோறும், படுக்க இடமும், பரம்பரைக்கு பணமும் இருந்தால் எவன் வேணுமானாலும் பக்தி மானாகிடலாம் ஓய், ஏனென்றால் அதைவிட ஆடல்பாடல்கள் நேரடிக்காட்சிகளாக நிறைந்த வேறு நிகழ்வுகள் குறைவு, ஆட்டம் பாத்தமாரியும் ஆச்சு, பாவத்தைப் போக்க பகவானை வேண்டியதுமாச்சு.\\ இதையே உம்மைப் பார்த்தும் சொல்லலாம். இவயெல்லாம் உம்மிடம் இருப்பதால்தான் நாத்தீகம் பேசித் திரிகிறீர் என்றும் சொல்லலாம். நாத்தீகம் உமது கொள்கை என்பது போல இறைவன் இருப்பதை நம்புவதற்கும் ஒரு ஆத்தீகனுக்கு உரிமை இருக்கிறது. அவன் குடுமி வைப்பது, மற்ற சம்பிரதாயங்கலைப் பின்பற்றுவது அவன் உரிமை. கடவுள் இருக்கிறான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்று நீர் கூறினால் இல்லை என்றும் எவனும் இதுவரை நிரூபிக்கவில்லை. இறைவனை நம்புவது அறிவியல் இல்லை என்றால் நாத்தீகமும் அறிவியல் இல்லை தான்.

திருவாளர் கோவி கண்ணன், மனிதனுக்காக ஒப்பாரி வைக்கும் நீர், அறிவியலால் பல லட்சம் பேர் செத்தது சரிதான் என்று வாதமிட்டவர். உமது கருணை உள்ளம் ஒருதலைப் பட்சமானது. கடவுளை மூடநம்பிக்கையாளன் என்னும் நீர், மொழி வாரியாக என் இனம் என்ற பார பட்சம் பார்க்கிறீர். இது அறிவியல் கிடையாது. மற்றவன் முட்டாள் என்று எது எதையெல்லாம் நீர் சொல்கிறீரோ, அதே முட்டாள் தனத்தை நீர் வேறு விதத்தில் செய்கிறீர், மற்றவன் ஒரு இனத்தை exploit செய்தான் என்று நீர் சொன்னாலும் கொலை செய்யப் படுவதையும் ஆதரிக்கிரீர். முரண்பாட்டின் மொத்த வடிவமாக நீர் இருக்கிறீர். எனவே நாம்தான் அறிவாளி, மற்றவன் எல்லாம் கேனையன் என்ற வகையில் கருத்துக்களை விதைப்பதை தவிர்ப்பது நல்லது.

புத்தியில் ஓங்கிய இனம் புத்தியில்லாத இனத்தை exploit செய்யும். மனிதன் அடித்துத் தின்னும் ஆடு, கோழி, மீன்களுக்காக என்றைக்காவது யாரவது அழுதிருக்கிரார்களா? அவற்றுக்கு மட்டும் வலி இருக்காதா என்ன? அது மட்டும் சரியாகுமா? மனிதன் கொல்லப் படுவதையே ஆதரிக்கும் நீர், மல்குட்டையில் தள்ளியதை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது ஏன்? ஏன் இந்த இரட்டை நிலை. கொஞ்சம் நேர்மையை வளர்த்துக் கொள்ளுமைய்யா, போலியாக யோக்கியன் என்ற விளம்பரம் வேண்டாம். அடுத்தவனை அயோக்கியன் என்று சொல்லும் முன்னர் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. திருந்துமைய்யா திருந்து.

பெயரில்லா சொன்னது…

//அதுசரி, இந்த ஏற்றத் தாழ்வைப் போக்க தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட பகுத்தறிவுவாதிகள் எதைப் புடுங்கினார்கள்?//
அந்த பகுத்தறிவாதி எதையும் புடுங்கவில்லை தான். ஆனால், அந்த பகுத்தறிவுவாதிக்கு முன்பு ஆண்ட ஆத்திகர்களும், இப்போது இந்தியாவையும், தமிழகத்தையும் ஆண்டு கொண்டிருக்கிற ஆத்திகர்களும் எதைப் புடுங்கிக்கொண்டிருக்கிரார்கள்? இப்போது மட்டும் ஏற்ற தாழ்வு போய்விட்டதா?

//நாத்தீகன் நாறவாயன் என்பது உமது பதிலில் இருந்தே தெரிகிறதே?//
அடுத்தவன் பொண்டாட்டிய சாமி கருவறையில் வைத்து ஓxxற ஆத்திகன் சுத்தமான வாயனா?

//இறைவனை நம்புவது அறிவியல் இல்லை என்றால் நாத்தீகமும் அறிவியல் இல்லை தான்//
நாத்திகம் அறிவியல் என்று உமக்கு யார் சொன்னது?

//கடவுளை மூடநம்பிக்கையாளன் என்னும் நீர், மொழி வாரியாக என் இனம் என்ற பார பட்சம் பார்க்கிறீர். இது அறிவியல் கிடையாது//
எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத இரண்டையும் ஓன்று சேர்த்து குழப்பிக் கொண்டிருக்கிரீர் நீர். என் இனம் என்று பாரபட்சம் பார்ப்பதற்கும், பகுத்தறிவுவாதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பாரபட்சம் எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள். உமது கூட பிறந்த சகோதரனுக்கும், பெரியப்பா மகனாகிய சகோதரனுக்கும் வித்தியாசம் பார்பதில்லையா நீர்? அதேபோல் தான், மொழியும். தாய் மொழி பேசுகிறவனை சொந்த சகோதரனைப்போலவும், பிறமொழி பேசுகிறவர்களை ஓன்று விட்ட சகோதரனைப்போலவும் தான் பொதுவாக எல்லோரும் பார்ப்பார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இது நன்கு புரியும். இதில் எந்தவித முரண்பாடும் இல்லை. இதற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Jayadev Das சொன்னது…

\\அந்த பகுத்தறிவாதி எதையும் புடுங்கவில்லை தான். ஆனால், அந்த பகுத்தறிவுவாதிக்கு முன்பு ஆண்ட ஆத்திகர்களும், இப்போது இந்தியாவையும், தமிழகத்தையும் ஆண்டு கொண்டிருக்கிற ஆத்திகர்களும் எதைப் புடுங்கிக்கொண்டிருக்கிரார்கள்? இப்போது மட்டும் ஏற்ற தாழ்வு போய்விட்டதா?\\ உங்கள் கணக்குப் படி ஆத்தீகர்கள் ஏய்த்துப் பிழைப்பவர்கள், அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பெரியாரின் தொண்டன் நான் என்றும், பகுத்தறிவாளன் என்றும், ஒடுக்கப் பட்ட மக்களின் உயர்வுக்காக உயிரையும் தருவேன் என்றும் சொன்னவனுக்கு ஐந்து முறை மாநிலத்தை ஆளும் வாய்ப்பு வந்ததல்லவா? அதை வைத்து அந்த மக்களின் துயர் துடைத்திருக்கலாமல்லவா? உயிரை கொடுப்பதெங்கே தலையில் இருந்த மயிரைக் கூட தரவில்லை, அவை தானாகத்தான் கொட்டின. பெண்டாட்டி பிள்ளைகளுக்கே எல்லாம் சரியாகப் போய்விட்டது. மக்களுக்கு சாரயக்கடை, ஒரு ரூபாய் அரிசி, இலவசத் தொலைகாட்சி அப்புறம் நேரே சுடுகாடு. இதுதான் பகுத்தறிவு வாதிகள் நாட்டுக்கு உ(ம)யிரைக் கொடுத்த லட்சணம்.


\\அடுத்தவன் பொண்டாட்டிய சாமி கருவறையில் வைத்து ஓxxற ஆத்திகன் சுத்தமான வாயனா?\\ அந்த பூசாரி தவறு செய்ததற்கு சட்டம் தனது கடமையைச் செய்யும். இதையெல்லாம் பேசும் நீர் எந்த அளவுக்கு ஒழுக்கமானவர் என்பது உமக்கு மட்டுமே தெரியும். ஐந்து முறை நாட்டை ஆண்ட பகுத்தறிவாளன், கோடம்பாக்கத்தில் கதவைத் தட்டாத விபச்சாரி வீடுகளே இல்லை. உடன் சென்ற கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். போய்ப் படியும்.

\\நாத்திகம் அறிவியல் என்று உமக்கு யார் சொன்னது?\\ அறிவியல் இல்லையென்றால் அது உமது மனக்கற்ப்பனை, அதை ஏற்க்கச் சொல்லி ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஆத்தீகர்களை காட்டு மிராண்டி என்று ஏன் சொல்ல வேண்டும்?

\\எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத இரண்டையும் ஓன்று சேர்த்து குழப்பிக் கொண்டிருக்கிரீர் நீர். என் இனம் என்று பாரபட்சம் பார்ப்பதற்கும், பகுத்தறிவுவாதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.\\ இந்த ஈரவெங்காயமெல்லாம் எனக்கும் தெரியும். நீர் அக்மார்க் பகுத்தறிவுவாதியாக இருக்கலாம். பெரியார் திராவிடர் கழகம் என்று தான் ஆரம்பித்தார். திராவிடர் என்றான் நான்கு தென் மாநிலத்தவரை மட்டுமே குறிக்கும். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவன் கட்சி வளர்த்ததே ஹிந்தி எதிர்ப்பை மாணவர்களிடையே தூண்டிவிட்டுத்தான். இந்தப் பதிவின் ஆசிரியர் திருவாளர் கோவி கண்ணன் அவர்களும், தமிழன், தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்காகச் சொன்னது இது. நீர் ஏன் திறந்த வீட்டில் எதுவோ வந்தமாதிரி சம்பந்தமில்லாமல் வாதம் பிளக்கிரீர்?

\\பாரபட்சம் எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள். \\ இப்போ புரியுது இல்ல? அதே மாதிரிதான் சிலர் சாதி மேல் பிரியம் வைத்திருப்பான் அதைப் பார்த்து கூவாமல், வாயைப் பொத்திக் கொண்டு இரும் என்று சொல்கிறோம்.

\\உமது கூட பிறந்த சகோதரனுக்கும், பெரியப்பா மகனாகிய சகோதரனுக்கும் வித்தியாசம் பார்பதில்லையா நீர்? அதேபோல் தான், மொழியும். தாய் மொழி பேசுகிறவனை சொந்த சகோதரனைப்போலவும், பிறமொழி பேசுகிறவர்களை ஓன்று விட்ட சகோதரனைப்போலவும் தான் பொதுவாக எல்லோரும் பார்ப்பார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இது நன்கு புரியும். \\ இதெல்லாம் பகுத்தறிவு இல்லாதவன் செய்யும் வேலை. எல்லாத்தையும் பகுத்து அறிந்தவன் அறிவியல் ரீதியாக சிந்திப்பவன், கடவுள் சிலை கல்லு என்று அறிந்தவன் செய்யும் வேலை அல்ல. காதில் பூ சுற்ற வேண்டாம்.

திரு ஏலியன் கெட்ட வார்த்தைகள் தெரிந்த ஒரே தமிழன் நீர்தான் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம், நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், இல்லாவிட்டால் சும்மனே இருப்பதே நலம். இன்னொரு மலக்குட்டையில் என்னை கல்லெறிய வைக்காதீரும்.

பெயரில்லா சொன்னது…

நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியவில்லையா அல்லது பதில் சொல்ல தெரியவில்லையா?
கேள்வியை நன்றாக படித்து அதற்க்கு மட்டும் பதில் தாருங்கள். தெரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். சும்மா கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதிலை தரக்கூடாது.

//பகுத்தறிவாளன் என்றும், ஒடுக்கப் பட்ட மக்களின் உயர்வுக்காக உயிரையும் தருவேன் என்றும் சொன்னவனுக்கு ஐந்து முறை மாநிலத்தை ஆளும் வாய்ப்பு வந்ததல்லவா? அதை வைத்து அந்த மக்களின் துயர் துடைத்திருக்கலாமல்லவா?//
உங்கள் கணக்குப் படி நாத்திகர்கள் ஏய்த்துப் பிழைப்பவர்கள், அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பலமுறை ஆள வாய்ப்பு வந்த ஆத்திகர்கள் மக்களின் துயர் துடைத்திருக்கலாமல்லவா?

//கோடம்பாக்கத்தில் கதவைத் தட்டாத விபச்சாரி வீடுகளே இல்லை//
அந்த பகுத்தறிவாளன் தவறு செய்ததற்கு சட்டம் தனது கடமையைச் செய்யும். பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற ஆத்திகர்கள் எப்படி ஏமாற்றி பெண்களுடன் உறவு கொண்டார்கள் என்று பல பத்திக்கைகளில் வந்துள்ளன. போய்ப் படியும்.
//அறிவியல் இல்லையென்றால் அது உமது மனக்கற்ப்பனை // எனது மனக்கற்பனையோ, பணக்கற்பனையோ...அதெல்லாம் சரியான பதிலல்ல. நாத்திகம் அறிவியல் என்று உமக்கு யார் சொன்னது?

//நீர் ஏன் திறந்த வீட்டில் எதுவோ வந்தமாதிரி சம்பந்தமில்லாமல் வாதம் பிளக்கிரீர்?//
திறந்த வீட்டில் நீர் தான் முதலில் வந்தீர், நான் இரண்டாவதாக தான் வந்திருக்கிறேன்.
திருவாளர் தாஸ், பொதுவெளியில் கருத்தை வைக்கும்போது நிச்சயம் எதிர்கருத்து வரத்தான் செய்யும். அதற்க்கு பதில் சொல்ல வக்கில்லாமல் போய் உமது டவுசர் கிழியும்போது ஆத்திரத்தில் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏதோதோ உளறுகிறீர்கள். பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அபத்தமாக எழுவதைத் தவிர்த்து விடுங்கள்.

//அதே மாதிரிதான் சிலர் சாதி மேல் பிரியம் வைத்திருப்பான் அதைப் பார்த்து கூவாமல், வாயைப் பொத்திக் கொண்டு இரும் என்று சொல்கிறோம்//
சாதிமேல் பிரியம் வைத்திருப்பவர்களை நாங்கள் விமர்சிப்பது இல்லை. சாதியை வைத்து வன்முறையோ அல்லது தன் சாதி அல்லாதோரை இகழ்ந்து பேசுவோரைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.

//கடவுள் சிலை கல்லு என்று அறிந்தவன் செய்யும் வேலை அல்ல. காதில் பூ சுற்ற வேண்டாம்.//
சரி. நீர் கடவுளை கும்பிடுகிறவன் முட்டாள் என்று ஒத்துக்கொண்டால், நீர் சொன்னதையும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

//திரு ஏலியன் கெட்ட வார்த்தைகள் தெரிந்த ஒரே தமிழன் நீர்தான் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம், நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், இல்லாவிட்டால் சும்மனே இருப்பதே நலம். இன்னொரு மலக்குட்டையில் என்னை கல்லெறிய வைக்காதீரும். //

மனைவியிடம் செய்தால் நான் அந்த வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டேன். கருவறையில் செய்ததால் தான் நான் அப்படி சொன்னேன். சொன்னதில் தப்பே இல்லை.

Jayadev Das சொன்னது…

\\சும்மா கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதிலை தரக்கூடாது.\\ இதைத் தான் நீங்களும் பதிவரும் செய்கிறீர்கள்.

\\உங்கள் கணக்குப் படி நாத்திகர்கள் ஏய்த்துப் பிழைப்பவர்கள், அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பலமுறை ஆள வாய்ப்பு வந்த ஆத்திகர்கள் மக்களின் துயர் துடைத்திருக்கலாமல்லவா?\\ வடிவேல் கையைப் புடிச்சு இழுத்தியா என கேட்ட மாதிரி கேட்க ஆரம்பித்து விட்டீர், இருக்கட்டும். ஆத்தீகர்கள் வெள்ளைக்காரன் காலத்துக்கு முன்னர் இருந்தே ஏய்த்துப் பிழைத்தவர்கள் என்பது உமது கருத்து. அப்புறம் எப்படி அவர்கள் நல்லது செய்வார்கள் என நினைக்கிறீர்கள்? அதற்க்கு மாற்றாக வந்த பகுத்தறிவாளர்கள் ஏற்றத் தாழ்வைப் போக்க என்ன செய்தார்கள்?

\\ பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற ஆத்திகர்கள் எப்படி ஏமாற்றி பெண்களுடன் உறவு கொண்டார்கள் என்று பல பத்திக்கைகளில் வந்துள்ளன. போய்ப் படியும்.\\ தப்பு யார் செய்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும், அதற்க்கு இவர்களும் விதி விலக்கல்ல. ரஞ்சிதானந்தாவைப் பொருத்தவரை விசாரணை நடக்கிறது, சாட்சியங்களின் படி தீர்ப்பு வரட்டுமே. அவர் குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்பளிக்க வேண்டியது நீதிமன்றம், வீடியோவை வெளியிட்டவனோ, பத்திரிகைகளோ அல்ல.

\\நாத்திகம் அறிவியல் என்று உமக்கு யார் சொன்னது?\\ அதுசரி அறிவியல் இல்லை என்றால் அது வேறு என்ன என்பதை நீர் சொல்லவேயில்லையே? விளக்கலாமே? நானும் தெரிந்து கொள்கிறேன்.

\\திருவாளர் தாஸ், பொதுவெளியில் கருத்தை வைக்கும்போது நிச்சயம் எதிர்கருத்து வரத்தான் செய்யும். அதற்க்கு பதில் சொல்ல வக்கில்லாமல் போய் உமது டவுசர் கிழியும்போது ஆத்திரத்தில் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏதோதோ உளறுகிறீர்கள். \\ யோவ் ..... சொந்தமாக யோசிச்சு எழுதுங்கைய்யா....... இந்த பதிலில் மூணு பத்தி நான் எழுதியதைக் காப்பியடித்திருக்கிரீர். மேல்மாடி டோட்டால் காலியா என்ன?

\\சரி. நீர் கடவுளை கும்பிடுகிறவன் முட்டாள் என்று ஒத்துக்கொண்டால், நீர் சொன்னதையும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.\\ அதென்னது நான் சொல்வதை கண்டிஷன் பேரில் ஒப்புக் கொள்வது? உண்மை எதுவென்று பார்க்கத் தேவையில்லையா? தற்போதைக்கு ஆத்தீகம் நாத்தீகம் இரண்டையுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்க இயலாது. எனவே ஆத்தீகம் கற்பனை என்பதைப் போல நாத்தீகமும் கற்பனையே, தனி மனிதனது சொந்தக் கருத்தே. எனவே ஆத்தீகனை சாடுவதை நாத்தீகர்கள் தவிர்ப்பது நல்லது.

திரு.ஏலியன் காப்பியடிப்பதைத் தவிருங்கள் சொந்தக் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.

பெயரில்லா சொன்னது…

//திரு.ஏலியன் காப்பியடிப்பதைத் தவிருங்கள் சொந்தக் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.//

இதைதான் நாங்களும் உங்களுக்கு சொல்கிறோம். முன்னோர்களை காப்பியடித்து அப்படியே கடவுளை ஏற்றுக்கொள்ளாமல், சொந்தமாக யோசியுங்கள்.

ராவணன் சொன்னது…

பொம்பளப் பொறுக்கி கும்பலான இஸ்கானைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால் எனக்கு கெட்ட கோவம் வரும்.

சாரி...சாரி....அந்த இஸ்கானின் தலைவன் ஒரு ஆம்பளப் பொறுக்கி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீர் ஒரு மலகுட்டை, அதில் கல்லெறிய எமக்கு விருப்பமில்லை. உம்மைப் போன்ற வாழை மட்டைகளை திருத்தி நான் காணப் போவது ஒன்றுமில்லை.//

மிஸ்டர் மலக்குட்டை தாஸு ஐயா, நீர் ஏற்கனவே டவுசர் உருவப்பட்ட பைத்தியம் என்பதை நான் இன்று தான் அறிந்து கொண்டேன், இவ்வளவு நாள் நான் ஒரு பைத்தியத்திடம் விவாதித்தேன் என்பதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

Jayadev Das சொன்னது…

\\மிஸ்டர் மலக்குட்டை தாஸு ஐயா, நீர் ஏற்கனவே டவுசர் உருவப்பட்ட பைத்தியம் என்பதை நான் இன்று தான் அறிந்து கொண்டேன், இவ்வளவு நாள் நான் ஒரு பைத்தியத்திடம் விவாதித்தேன் என்பதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.\\ யார் எப்படிப் பட்டவர்கள் என்பதை நடுவு நிலையோடு படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் அன்பரே. எனக்கு பட்டம் கொடுக்க நீர் ஒன்றும் பல்கலைக் கழகம் இல்லை. தமிழ் பற்று இருந்தால் மட்டும் போதாது எதிர் கருத்துகளுக்கு அதே தமிழில் நாகரீகமான நல்ல வார்த்தைகளில் உமது மறுப்பையும் தெரிவிக்கக் கற்றுக் கொள்ளும்.

ssk சொன்னது…

கல்வியை கொடுக்காதே. ஜாதி வாரியாக மக்களை பிரித்து அவர்களிடையே ஏற்ற தாழ்வு கற்பித்து கொடுமை செய் . ஒரு தவறை பார்பான் செய்தால் அவன் முடியை வெட்டு , அதே தவறை மற்றவன் செய்தால் தலையை வெட்டு போன்ற தத்துவங்கள் நிறைந்த பார்பனியம் அநீதி என்பதன் பொருள் ஆகும். வேறு எந்த நாட்டிலும்/உலகிலும் பார்ப்பனீயம் செல்லுபடியாகது. இங்கு கல்வி மறுக்கப்பட்டதன் விளைவு பலரும் மனித சக்தியை நம்பாமல் எதோ எங்கோ இருந்து கொண்டு பார்பனின் பேச்சுக்கு மட்டும் அடங்கி ஆட்டுவிப்பதாக நினைத்து உள்ளனர் கல்வி அறிவு பெற்ற சிலர் இதை எதிர்த்து கருத்து சொன்னால் அவர் கூட்டம் கதறுவது இயல்பு. அவன் உழைத்து பிழைக்க இயலாமல், சூத்திரன் உழைத்து வைத்திருப்பதை, கடவுள் ,தகுதி ,மற்ற பிற காரணம் காட்டி எயித்து பிழைப்பவன் . ஆக அடுத்தவன் அறிவு பெற ,அவர்கள் கதறுவது இயற்கையே. எல்லா இடங்களிலும் அவன் இருந்து இன்று வரை சுகம் பெற, சிலர் அந்த இடத்திற்கு வந்துவிட்டால் ஏக போக சுக வாழ்வு அழியும் என்று தெரிந்து , மீடியா மற்றும் பல அமைப்புகளில் இருந்து இழிவு செய்து தடுக்கிறான். காமராஜர் வந்து தான் கல்வி வந்தது. அவர்களால் இன்றுவரை சமுகத்திற்கு என்ன நன்மை? ஒவ்வொரு உரிமையும் போராடியதால் மட்டுமே வந்தது. வெள்ளைக்காரன் வந்து சமத்துவத்தை சொல்லிகொடுத்து போக , ஒவ்வென்றாக போராடி மக்கள் உரிமை பெறுகிறார்கள் .மருத்துவம் படிக்கச் சமஸ்கிருதம் வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள் !
கடவுளால் இங்கு என்ன நடந்தது என்று கேட்டால் ஓடி விடுவான் (அவன் தொப்பை வளர்ந்ததை தவிர வேறொன்றும் சொல்ல முடியாதே)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்