பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2013

மோடி ஆண்டால் என்ன கேடி ஆண்டால் என்ன ?

சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொல்லாடலும் அதன் சூழலும் இல்லாத நாடுகளும் இல்லை, இந்தியாவைப் பொருத்த மட்டில் ஊர்களில், மாநிலத்திற்குள் சாதி பெரும்பான்மை, நாட்டிற்குள் மதப் பெரும்பான்மை, வெளி நாடுகளில் இனப் பெரும்பான்மை சிறுபான்மை, அரபு நாடுகளில் மதப்பெரும்பான்மை, அதனுள் இனப் பெரும்பான்மை என்பவை காலம் காலமாகவே அமைந்துள்ளது, நல்லாட்சி என்பது அனைத்து மக்களையும் சமமாக நடத்துதல், அனைத்து உரிமைகளையும் கொடுப்பது என்பது பற்றியது தான் அன்றி யார் ஆளுவது என்ற கேள்விக்கே இடமின்றி பெரும்பான்மையினரின் பிடியில் ஆட்சிகள் இருப்பது தான் நடைமுறை. சிறுபான்மையினருக்கு உரிமை மறுக்கப்பட்டாலோ, பெரும்பான்மையினர் ஆட்சி அதிகாரம் இழந்தாலோ அங்கே பூசல்கள் கலவரம் வெடிக்கும் என்பது உண்மை. 

மதம் / இனம் சார்ந்த சொல்லில் அடைக்கப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு  எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை ஆளவிட்டு பார்த்துக் கொண்டு இருக்காது, அதற்கான சகிப்பு தன்மைகள் தாம் ஒரே இனம் என்ற அளவில் அனைவருக்கும் இருந்தால் இன்றி வாய்ப்பில்லை, சுதந்திர இந்தியாவில் அப்படியான எண்ணங்கள் இருந்து அவை படிப்படியாக கரைந்து போனது, சிறுப்பான்மை மதப் பிரிவை சேர்ந்த ஒருவரை (இராசசேகர ரெட்டியைப் போன்று) மாநில முதல்வர் ஆக்குவதே கூட அத்திப் பூத்தாற்போல் நடைபெறும் நிகழ்வு, இந்தியாவிற்கு சிறுபான்மை மதத்தைச் சார்ந்த பிரதமர் ? இன்ற அளவில் வாய்ப்பற்றது, வழிபாடு, நம்பிக்கை என்பதைத் தாண்டி மதங்களால் இறுக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நாம் அதனை மீறி தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவது இயலாத ஒன்று. இருந்தாலும் இந்தியாவில் பாஜக ஆட்சி அமைவதை முற்போக்காளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், பாஜக என்பது மதவாத கட்சி என்பதற்காகவே அல்ல. இந்துக்கள் / கிறித்துவர்கள் / இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இடத்தில் / தொகுதியில் எந்த ஒரு தேசிய / மாநில கட்சியும் மாற்று மத வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கவே மாட்டார்கள், என்பதால் பாஜக மட்டுமே மதவாத கட்சி என்று கூறுவது அரைகுறையான அடிப்படை புரிந்துணர்வு அற்ற கருத்து. ஆனாலும் பாஜக ஏன் இந்துகளாலேயே எதிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதக் கொள்கையை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும். இந்து மதக் கொள்கை என்றால் என்ன ? நான்கு வேதங்களும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மறுக்கும் நான்கு வருண கோட்பாடுகள், சுறுக்கமாகச் சொல்லப்போனால் பார்பனரை ஏனைய இந்துக்கள் பிராமணர் என்று ஒப்புக் கொள்ளப் பட வேண்டும், பிறப்பு அடைப்படையில் பார்பனர் அதிகார வரம்புகள் அனைத்தையும் பெறுவதை எதிர்த்துக் கேட்டால் இந்து மதத்திற்கு எதிரானவன் என்று பழிக்கப்படலாம், அல்லது பேச்சு உரிமை மறுக்கப்படலாம், இடப்பங்கீடுகள் மறுக்கப்படலாம், தவிர தீண்டத்தகாதவர்களின் சாதி அமைப்பும் அவர்களது தொழிலும் அழித்து ஒழிக்கப்படாது, மலம் சுமக்கும் மனிதன் சொர்கத்திற்குப் போவான் என்று திருவாளர் மோடி கூட ஒருமுறை திருவாய் மல(ர்)ந்துள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் சார்ந்த பழமை வாதங்கள் தலை தூக்கும் என்பதாலேயே பகுத்தறிவாளர்கள், ஒரு சில சமய சார்பற்றவர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர், மற்றபடி இந்து சமய பெரும்பானமை அரியணை ஏறினால் இந்தியாவின் மதச் சார்பின்மை அழிந்துவிடும் போன்றவை எடுபடா வாதம், மதச் சார்பின்மை என்பது இன்றைய சூழலில் போலியானவையே. போலி மதச் சார்பின்மை இல்லை என்றால் இந்தியாவில் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.

******

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் இன்றைய சூழலில் பலர் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள், அதற்கு காரணமாக கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள், இதே போன்று அத்வானியை பாஜக முன்னிறித்திய பொழுது பாபர் மசூதி உடைப்பு பற்றி கூறி எதிர்த்தார்கள், ஆனால் பாபர் மசூதி உடைப்புக்கு பிறகே இந்தியாவில் இருமுறை பாஜக ஆட்சியை பிடித்தது, ஒரு முறை ஜெ-வால் கவிழ்ந்தது, மறுமுறை கருணாநிதியால் நீடித்தது. அத்வானி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது எதிர்க்கக் காரணம் இருந்தது போல் மோடிக்கும் காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள், ஆனால் வெங்கைய்யா நாயுடுவையோ, சுஷ்மா சுவராஜையோ பாஜக முன்னிறுத்தினால் இவர்களெல்லாம் மனம் மாறி காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவிற்கு வாக்களிக்கும் எண்ணம் கொண்டிருந்தார்களா ? என்றால் அதுவும் இல்லை, பாஜக மதவாத கட்சி, சிறுபான்மையினருக்கு ஆபத்து அதனால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்ற நிலையில் இருந்து கொண்டு அத்வானி ஆகாது, மோடி கூடாது என்கிற கருத்து முத்துகளினால் ஆகப் போவது என்ன ? பாஜகவில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை நிறுத்துவது சரியான முடிவு என்று அவர்கள் முடிவெடுப்பது அவர்களது உள்கட்சி விருப்பம், அதில் அவர்களுடைய கட்சியை எந்த காலத்திலும் ஆதிர்க்காதவர்களின் எதிர்ப்புக்கும், எதிர்க்கருத்திற்கும் அடிப்படை ஞாயம் என்று ஏதேனும் உண்டா ?

வாஜ்பாய் ஆட்சியின் பொழுது எந்த மதக் கலகவரமும், சிறுபான்மை அச்சுறுத்தலும் இருக்கவில்லை,கார்கில் நிகழ்வுகளுக்கு பின்னும், கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் பிரதமர் முஷ்ரப்பை டெல்லி வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்தார், அவர் வளர்ந்த இடங்களையெல்லாம், வீடுகளையும் புதுப்பித்து, மெருகூட்டி அழைத்துச் சென்று காட்டினார், இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியில் கூட நடைபெற்றதில்லை, ஆனாலும் வாஜ்பாயை போலி மதவாத எதிர்ப்பாளர்கள் ஆதரிக்கவும் இல்லை.

சிறுபான்மை காவலன் என்ற பெயரில் காங்கிரசை ஆட்சியில் உட்கார வைத்து நாட்டில் ஊழல்கள் பெருத்துவிட்டதும், லட்சம் கோடி என்ற அளவில் எல்லாம் ஊழல் நடைபெறுவதும், இந்திய பண மதிப்பு பாதளத்திற்கு சென்றதையும் கண்ணுறுகிறோம், 10 விழுக்காட்டு மக்களின் மன திருப்திக்காக மீதம் 90 விழுக்காடு மக்கள் வதைபடுவது ஞாயம் அது தான் மதச் சார்பின்மை என்றால் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நலனைவிட சிறுபான்மையினரின் விருப்பமே மேலானது என்கிற மனப்போக்கு வெகுவிரைவில் மதம் சார்ந்தே மீதம் இருக்கும் 90 விழுக்காட்டினரை அழைத்துச் சென்றுவிடும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் பெரும்பானமியினரின் கையில் ஆட்சி இருப்பதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது, அவை இல்லை என்றால் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படும்.  இந்திய  மக்கள் பல்வேறு மதவாதிகளின் /  மதங்களின் கையினுள் சிக்கிவிட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு எழுதுகிறேன். 

***

75 விழுக்காடு சீனர் வசிக்கும் சிங்கப்பூரில் ஒருமுறையாவது இந்தியரோ, மலாய்காரரோ பிரதமாராக வந்தால் நல்லா இருக்கும் என்றே நாம நினைக்கலாம் ஆனால் சீனார்களுக்கு அவை பெருமையானது அல்ல அதற்கான வாய்ப்புகளும் ஏற்படாது, அவை ஞாயம் என்ற அளவுகோலிலும் வைத்துப் பார்க்க முடியாது. இந்தியர்களும், மலாய்காரர்களும் சீனர்களுக்கான உரிமையுடன் இருக்கிறார்களா ? என்பது மட்டும் தான் இங்கே முக்கியம்.

11 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

இதைப்படித்தும் புரிந்து கொள்ளவில்லை என்றால் போய் எங்கேயாவது முட்டிக் கொண்டு மோடி ஒழிக என்று கத்திக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// எங்கேயாவது முட்டிக் கொண்டு மோடி ஒழிக என்று கத்திக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.//

எங்கேயாவது மோதிக் கொண்டு மோதி ஒழிக என்று கத்திக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

மறுக்க திறன் இல்லாத பொழுதும், உண்மையை ஒப்புக் கொள்ள மன மில்லாத பொழுதும் மைனஸ் ஓட்டுகள் போடப்படும்.

:)

ADMIN சொன்னது…

**** சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் பெரும்பானமியினரின் கையில் ஆட்சி இருப்பதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது, அவை இல்லை என்றால் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படும்.****

தெளிவா சொல்லியிருக்கீங்க..!!

நன்றி...!

பெயரில்லா சொன்னது…

தெளிவான பதிவு. பலரை தெளிவாக்கவல்ல பதிவு. பாஜக- மோடி- ஆட்சியில் வருவதில் பிரச்சனை இல்லை பார்ப்பனிய பாசிச மயமாக்கலை ஊக்குவிக்காமல் சமத்துவ மதச்சார்பின்மை மீது கைவைக்காதிருந்தாலே போதும். ஊழலால் வெறுத்துவிட்ட நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு ஒரு மாற்று அவசியம், அம் மாற்று பார்ப்பனியத்தை தலையில் ஏந்தாமல் வந்தால் வரவேற்போமாக.

kamalakkannan சொன்னது…

மண்ணு மோகனை ஒப்பிட மோடி மஸ்தான் வருவதில் தவறில்லை :)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

Sketch Sahul சொன்னது…

மோடி போன்ற கேடி ஆண்டாள் என்ன ? இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் ...

வேகநரி சொன்னது…

சிறப்பான பதிவு.
//75 விழுக்காடு சீனர் வசிக்கும் சிங்கப்பூரில் ஒருமுறையாவது இந்தியரோ, மலாய்காரரோ பிரதமாராக வந்தால் நல்லா இருக்கும் என்றே நாம நினைக்கலாம் ஆனால் சீனார்களுக்கு அவை பெருமையானது அல்ல அதற்கான வாய்ப்புகளும் ஏற்படாது, அவை ஞாயம் என்ற அளவுகோலிலும் வைத்துப் பார்க்க முடியாது. இந்தியர்களும், மலாய்காரர்களும் சீனர்களுக்கான உரிமையுடன் இருக்கிறார்களா ? என்பது மட்டும் தான் இங்கே முக்கியம்.//
சிறப்பாகவே நியாயமான நடைமுறை சாத்தியங்கள்,நீதியான நடைமுறைகள், பற்றி தெளிவுவிபடுத்தியுள்ளீர்கள்.

R.Puratchimani சொன்னது…

//மதம் / இனம் சார்ந்த சொல்லில் அடைக்கப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை ஆளவிட்டு பார்த்துக் கொண்டு இருக்காது,//

மன்மோகன் சீக்கிய மதத்தை சார்த்தவர் பாஸ்...பல குடியரசு தலைவர்கள் சிறுபான்மையினரே.
பெரும்பான்மையான இந்துக்கள் மற்றவர்களின் மதத்தை பார்ப்பதில்லை.

கிருத்துவ,இசுலாமிய பிரதமர்களை ஏற்கும் பக்குவம் இந்தியர்களுக்கு மட்டுமே உண்டு

வருண் சொன்னது…

****10 விழுக்காட்டு மக்களின் மன திருப்திக்காக மீதம் 90 விழுக்காடு மக்கள் வதைபடுவது ஞாயம்****

10 விழுக்காடுகள், 10 விழுக்காடு ஓட்டுக்கள்தான் போட முடியும்!

90 விழுக்காடுகள் சுய சிந்தனியுடன் தான் ஓட்டுப் போடுறாங்க. 90 விழுக்காட்டில் உள்ளவரகளில், மெஜாரிட்டி 10 விழுக்காடு யாருக்கு ஆரதவாப் போடுறாங்களோ அவர்களுக்கு ஆதரவாக ஓட்டளிப்பது தன்னுடிய சுய சிந்தனை, மற்ரும் சுய நலத்திற்காக!

நீங்க என்னவோ, 10 விழுக்காடை காப்பாத்த்தான் அந்த 90 விழுக்காடுல உள்ளவங்க காங்கிரஸ்க்கு ஓட்டுப் போட்டு தனக்குத்தானே சூனி வைத்து வதைந்ந்து சிதைந்து சாவது போல இருக்கு!

கொஞ்சம் யோசிக்கலாமே! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்