பொதுவாகவே சிங்கப்பூர் வாழ்மக்கள் தங்களிடையே சிங்கப்பூரில் வரிசையில் நிற்பதில் பாதி வாழ்கைப் போய்விடும் என்று சொல்லுவார்கள். உண்மை தான், இங்கு வரிசையில் நிற்பதில் ஒழுங்கு கடைபிடிக்கப்படும், சின்ன நாடாக இருந்தாலும் மக்கள் நெருக்கம் உள்ள நாடு, வரிசை முறை இல்லை என்றால் எங்கும் சச்சரவுகள் ஏற்பட்டுவிடும், மற்றவர்கள் நேரத்தில் நாம் கைவைக்கக் கூடாது என்பதால் எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டுமோ, அங்கெல்லாம் வரிசை உருவாகும், புது ஐபேசி (ஐபோன்) வெளியிட்டால் முதல் நாள் இரவே போய் நிற்க துவங்கிவிடுவார்கள், 24 மணி நேரம் கூட வரிசையில் நிற்பதை நேரவிரயம் என்று நினைக்க மாட்டார்கள், தமக்கு ஒரு பொருள் வேண்டி இருக்கிறதென்றால் அதற்காக வரிசையில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால் நிற்பார்கள். புதுவீடுகள் விற்பனைக்கு விடும் போது வரிசையில் நிற்பதற்கே கல்லூரி மாணவர்கள் அதை பகுதி நேர வேலையாக எடுத்துக் கொண்டு, வரிசையில் நிற்பதற்காக பணம் பெற்றுக் கொண்டு (டோக்கன்) வாங்குபவர்கள் சார்பில் நிற்பார்கள். 24 மணி நேரம் வரிசையில் நிற்க இவ்வளவு கூலி என்று மணிக் கணக்குகளை வைத்து வரிசையில் நிற்பதும் இங்கு தொழிலாகத்தான் நடக்கிறது.
வரிசை முறைகளை சீர்குழைக்கக் கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளாக கூலிக்கு ஆள் அமர்த்தி வரிசையில் நிறுத்திக் கொள்வது இங்கு தவறாகப் பார்க்கப் படுவது இல்லை, ஒருவர் வரிசையில் நிற்பதால் இழக்கும் பணம் அவர் சார்பில் நிற்பவருக்கு சொற்பக் கூலி தான். பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் / தமிழகத்தில் இருந்து இதைப் படிப்பவர்களுக்கு வரிசை முறைக்கு ஏன் சிங்கப்பூரில் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை மேலே புரிய வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். முறைப்படி வருபவர்களுக்கு முன் உரிமை இங்கு அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் ஒன்று தான், இங்கு யாரும் குறுக்கே சென்றோ, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் குறுக்கு வழியில் நுழையவோ முயற்சிக்க மாட்டார்கள். சிங்கப்பூர் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்பாட நான் இதை எழுதுவில்லை, அப்படி உங்களுக்கு புரிந்தாலும் தப்பு இல்லை, கடந்த 15 ஆண்டுகளாக எனக்கும் என் இல்லத்திற்கும் சோறு போடும் நாடு, என்பதால் நீங்கள் எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு சரி தான், நான் சொல்ல வந்தது பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
*******
நாளை பொங்கலை ஒட்டி சிங்கப்பூர் குட்டி இந்தியாவில் கொள்ளை கும்பல் (நான் விற்பனையாளர்களைச் சொல்லவில்லை, பண்டிகை நாளில் விலை ஏற்றி விற்பது பொதுவானதே) அதாவது மக்கள் கூட்டம் மிகுதி, சிங்கப்பூரில் ஆகப் பெரிய விற்பனை வளாகமான முஸ்தபா நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம், நான் இரண்டு பொருள்கள் வாங்குவதற்குத்தான் சென்றேன், வேறு கடைகளில் கிடைக்கும் என்றாலும் அந்த இரண்டு பொருள்களும் இருவேறு கடைகளில் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், முஸ்தபா அருகில் பேருந்தில் இறங்கியதால் முஸ்தபாவிலேயே வாங்கலாம் என்று நுழைந்தேன், வாங்கிவிட்டு பணம் செலுத்தச் சென்றால் ஒவ்வொரு தளத்திலும் பணம் செலுத்தும் இடத்திலும் குட்டி ரயில் போன்று நீண்ட வரிசை, கடைசியாக மேலே கீழே இறங்கி ஒரு இடத்தில் வெறும் 10 பேர் தான் வரிசையில் நின்று இருந்தார்கள் என்பதால் அங்கு நிற்கலாம் என்று முடிவெடுத்து நின்றேன், ஐந்து நிமிடத்தில் எனக்கு முன்பு நின்றவர் பணம் செலுத்தும் இடத்தை அடைந்துவிட்டார், 65 அகவை மதிக்கத்தக்க முதியவர்.
அந்த முதியவர் பணம் செலுத்த பொருள்களை எடுத்து வைக்கும் பொழுது எதிர்பக்கம் பணம் செலுத்தும் இடத்தை நெருங்கி ஒரு வட இந்திய ஆண். அந்த முதியவரை நெருங்கி வேண்டுகோளாக
"Sir Excuse, Only One Item, Can I Proceed ?"
என்று கூற, பெரியவரும் பெருந்தன்மையாக
"No Problem, You Proceed" என்றார்
எனக்கு செம கோபம் தலைக்கு மேல் ஏறியது, அந்த பெரியவரைப் பார்த்து
"You Cannot allow him, You have to consider the Q Behind, You have to ask opinion from all standing behind"
"No, No he is holding only one item tl"
"You...see I also having just two item, do you appreciate if I try to skip the Q because of less no. of item ?"
அவரும் எதும் பேசவில்லை, மெளனமாக இருந்தார், இந்த இடைவெளியில் அந்த வட இந்திய ஆண் இதைப் பொருட்படுத்தாமல் பொருளுக்கு பணம் செலுத்திவிட்டு அந்த பெரியவருக்கு ஆங்கிலத்தில் "Thank You, Thank You" என்று சொல்லிவிட்டு போய்விட்டார், என்னிடம் முறைப்புக் காட்டவில்லை, எனக்கும் பிரச்சனை வட இந்திய ஆடவன் இல்லை, இந்த பெரியவர் தான் என்பதில் தெளிவாக இருந்ததால் நான் வட இந்தியனிடம் வலுக்கட்டாயமாக மல்லு கட்டவும் விரும்பவில்லை, பெரியவரும் எதுவும் அதற்கு மேல் பேச வழி இல்லாததால் அடுத்து அவருடைய பொருளை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்ததாக பணம் வாங்கும் காசாளரிடம்
"How come you allow him to pay, Are we all standing here for time pass ?"
"No, Since the person in front of you allow him, I decide to accept this"
"You know....here lots of quarreling .. I am arguing with him, you don't consider people standing in the Q opposing this nuisance, What Kind of Service this ?, if the person is very old or having children, or pregnant women or injured person no one care about skipping the Q right......"
அந்த காசாளர் பொண்ணும் எதுவும் பேசவில்லை, அதற்கு மேல் ஏதேனும் பேசினால் நானும் நிறுவனத்தில் முறையிடலாம் என்றே இருந்தேன், எனக்கு பின்னால் நின்றவர்கள் யாரும் வாயைத் திறக்க வில்லை, நான் சொன்னவற்றையெல்லாம் அமோதிக்கும் படி அமைதியாகத்தான் இருந்தார்கள்.
********
பெரியவர் பெரும்தன்மையாகத் தானே நடந்து கொண்டார், இதையேன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கலாம், பெரியவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அவர்களிடையேயும் அதையே சொல்லி இருப்பேன், பெரும் தன்மையாக நடக்கிறேன் என்று தன்னைத் தானே மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் குறிப்பிட்ட சூழலில் பாதிப்பு அடைபவர் தாம் மட்டும் தானா என்று சிந்திக்கவும் வேண்டும், உண்மையிலேயே இந்த சூழலில் பெருந்தன்மையாக நான் நடக்க விரும்பினால் பின்னால் உள்ளவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம், அவர்களின் விருப்பமும் எனக்கு தேவை இல்லை என்று நினைத்தால் முன்னால் உள்ளவரை வாங்க அனுமதித்துவிட்டு நான் வரிசையின் கடைசியில் போய் நின்று கொள்வேன். இங்கு விட்டுக் கொடுப்பது, பெரும்தன்மையாக நடப்பது என்பது தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுப்பது தான், தமக்கு பின்னால் உள்ளவர்களும் பாதிப்படையமாட்டார்கள், எரிச்சல் அடையமாட்டார்கள்.
பொதுவாகவே வட இந்தியர்களில் பலருக்கு இவ்வாறு வரிசையில் நிற்பது ஒழுங்குகளை கடைபிடிப்பதெல்லாம் பிடிக்காது, ஆஸ்திரேலியாவில் அடிக்கடி உதை வாங்குவது கூட இவர்களின் இந்த ஈனத்தனமான நடவடிக்கைகளினால் என்றே நினைக்கிறேன்.
41 கருத்துகள்:
easy way out..! பின்னால் நிற்கும் எல்லோரயையும் கேளுங்கள்...அப்புறம் பில் போடுவரியும் கேளுங்கள்; அப்புறம் நான் என் முடிவை சொல்கிறேன்---இது தான் பதில்.
வட இந்தியன் அப்படிதான் இருப்பன்; அவனுக்கு எல்லாமே இந்தியா என்ற நினைப்பு.
//easy way out..! பின்னால் நிற்கும் எல்லோரயையும் கேளுங்கள்...அப்புறம் பில் போடுவரியும் கேளுங்கள்; அப்புறம் நான் என் முடிவை சொல்கிறேன்---இது தான் பதில்.
//
பில்போடுபவரின் விருப்பம் தேவை அற்றது, அவரோட வேலையே வரிசைபடிவருபவர்களை மட்டுமே ஏற்பது.
உங்களுக்கு சிங்கை எப்படியோ அதுபோல் எனக்கு சவுதி. :-)
//
உங்களுக்கு சிங்கை எப்படியோ அதுபோல் எனக்கு சவுதி. :-)//
அண்ணன் சிங்கப்பூர் சிட்டிசன் உங்களால் சவூதி சிட்டிசன் ஆகா முடியுமா ? :)
// if the person is very old or having children, or pregnant women or injured person no one care about skipping the Q right......"//
உங்களுக்கு வயசாகிடுச்சி இந்த லிஸ்ட் ல young beautiful girl மிஸ்ஸாகிடுச்சி .
***பெரியவர் பெரும்தன்மையாகத் தானே நடந்து கொண்டார்,****
இது பெருந்தன்மை எல்லாம் இல்லைங்க. பெரியவருடைய கூறுகெட்டதனம். இவர் யாரு அணுமதிக்க???வயதுக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாரி கூறுகெட்ட ஆட்களாலதான் நம்ம எதையும் ஒழுங்கா செய்யாமல் நாசமாப் போகிறது! இந்த மாரி "பெருந்தன்மைக்கு" மட்டும் நம்மாளுககிட்ட பஞ்சமே இருக்காது!
தங்கள் கருத்து சரியே! இனிய புத்தாண்டு, பொங்ல் வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பரே,
சிங்கையில் நடைமுறையில் இருக்கும் ஒழுங்கு முறைகள் பாராட்டுக்கு உரியன. அங்கும் நம்ம வட இந்திய சகோக்கள் ஒழுங்கைக் குலைத்து குறுக்கு வழி காண் முயற்சிப்பது நம் நாட்டின் அடிப்படைச் சிக்கலை வெளிப்படுத்துகிறது.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
**
அண்ணன் சுவனப்பிரியனின் பின்னூட்டம் கண்டாலே நம்க்கு "என் உசி மண்டையில் கிர்ருங்குது" மாதிரி கருத்து பொங்கும்.ஹி ஹி
@ சகோ சுவனப் பிரியன்
என்ன சகோ ஒரு மார்க்க மேதையாக இருந்தும் ஒரு மூமின் த்னக்கு பிடிக்கும்,பிடிக்காது என்பதை ஏக இறைவனின் குரான்&நபி(சல்) அவர்களின் ஆதார பூர்வ ஹதித் அடிப்படையின்றி சொல்லக்கூடாது என்பதை மறக்க்லாமா?
நபி(சல்) எந்த நாடு பிடிக்கும் என சொல்கிறார்?
//1037. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :15//
இதில் ஷாம் என்பது சிரிய,பாலஸ்தின,இஸ்ரேல் பகுதிகளைக் குறிக்கும்,நெஜித் என்பதே சவுதி ஆகும். ஆகவே முகமது (சல்) அவர்கள் கூறிய சைத்தானின் கொம்பு சவுதி நாட்டை சு.பி ஆதரிப்பதை மூமின்கள் சிந்திக்க மாட்டீர்களா??
நன்றி!!
சார்வாகன் ,நஜ்த் என்பது சவூதி அல்ல .இராக் .ரியாத்தின் வடமேற்கில உள்ளபகுதியே நஜ்த் எனப்படுகிறது .ரியாத்தின் வடமேற்கில் இராக் உள்ளது என்பதையும் கவனிக்கவும்
http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/najd_pakuthi_sabikapatatha/
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
சகோ இப்பூ,
இக்கட சூடண்டி!!
அது காஃஃபிர் அண்ணன் விட்ட டுமீல்!!
இங்கே படியும்.
http://en.wikipedia.org/wiki/Najd
"நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா
http://vilambi.blogspot.com/2012/09/blog-post_6842.html
Thank you
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!
வரிசைல ஒழுங்க நிக்கமாட்டேன்றானு சொன்னாலும் மதச்சண்டையை ஆரம்பிக்கிறியே, மாப்பூ! திருந்தவே மாட்டீங்களா நீங்க?
எங்க போனாலும் இதே எழவாயிருக்கு!
"இது பெருந்தன்மை எல்லாம் இல்லைங்க. பெரியவருடைய கூறுகெட்டதனம். இவர் யாரு அணுமதிக்க???வயதுக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாரி கூறுகெட்ட ஆட்களாலதான் நம்ம எதையும் ஒழுங்கா செய்யாமல் நாசமாப் போகிறது! இந்த மாரி "பெருந்தன்மைக்கு" மட்டும் நம்மாளுககிட்ட பஞ்சமே இருக்காது!"
i agree with you
சார்வாகன்,
//வரிசைல ஒழுங்க நிக்கமாட்டேன்றானு சொன்னாலும் மதச்சண்டையை ஆரம்பிக்கிறியே, மாப்பூ! திருந்தவே மாட்டீங்களா நீங்க?
எங்க போனாலும் இதே எழவாயிருக்கு!//
என்னோட கருத்தும் இதே தான். தயவு செஞ்சு தேஞ்சு போன tape மாதிரி அறுக்காதீங்க.
//சுவனப் பிரியன் கூறியது...
உங்களுக்கு சிங்கை எப்படியோ அதுபோல் எனக்கு சவுதி. :-)//
சுவனப்பிரியன்,
நான் இங்கு, சவுதி, வஹாபி என்றெல்லாம் எதுவும் எழுதவில்லை, இங்க வந்து சந்துல கறிக்கடைப் போட்டுட்டுப் போறிங்க.
ஒப்பிடுவது உங்க உரிமை அதை நான் மதிக்கிறேன், ஆனால் உங்கள் ஒப்பிடு எனக்கு ஏற்பு இல்லை,
* சிங்கையில் தகுதி உள்ளவர்களுக்கு குடி உரிமையும், தாள் உள்ளவர்களுக்கு ரம்சான் மாதமாக இருந்தாலும் "குடி"யுரிமையும் கிடைக்கும். உங்களுக்கு இதில் ஏதேனும் ஏதேனும் கிடைக்கிறதா ?
* இங்கு வெறும் குற்ற முகாந்திரம் என்ற பெயரில் விசாரணை இன்றி அப்பாவிகளை சிறையில் அடைப்பது கிடையாது, நாங்களும் சவுதி சிறையில் சாரி சாரி சிங்கை சிறையில் வாடும் அப்பாவி இளைஞனைக் காப்பாற்றுங்கள் என்று பதிவு எழுதும் துரதிஷ்ட வாய்ப்பை வழங்கியதில்லை.
* கூலி வேலைக்கு வந்து விபத்தில் இறந்தால் உரிய இழப்பீட்டை உடனே கொடுத்துவிடுவார்கள், அது வெறும் முதலாளி - தொழிலாளி பிரச்சனை என்று பிழைக்க வந்தவனை ஆதரவற்றப் பிணம் ஆக்கி அனுப்புவதில்லை
* பணிப்பெண் வேலைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கிடையாது, தெரிந்தால் பொண்டாட்டியே வெட்டிவிட்டுவிடுவாள்
*****
சவுதியில் தோளோடு தோள் உரசி தொழுகை செய்ய அனுமதிக்கிறார்கள் என்பதற்காக உங்க ஒப்பீடு இருந்தால் உலக நாடுகள் அனைத்தையும் ஒப்பிட்டுவிடலாம்.
சவுதி பெண்களை வேற்று நாட்டு இஸ்லாமிய ஆடவன் ஒரே மதம் என்பதற்காக மணம் செய்ய அரசாங்க அனுமதியாவது உண்டா ?
//அண்ணன் சிங்கப்பூர் சிட்டிசன் உங்களால் சவூதி சிட்டிசன் ஆகா முடியுமா ? :)//
நான் சிங்கப்பூர் சிட்டிசனா இல்லையா என்பதைவிட எனது வாரிசுகளை அவ்வாறு மாற்றிக் கொள்ள முடியும், அப்படி ஒரு நாட்டைப் பற்றிப் பேசுவது அவருக்கு ஏன் பொறுக்காமல் திருஷ்டிப்பொட்டு வைத்துப் போகிறாரோ
//இந்த மாரி "பெருந்தன்மைக்கு" மட்டும் நம்மாளுககிட்ட பஞ்சமே இருக்காது!//
அந்தத் தாத்தா எதுவும் பேச முடியாது என்பதால் என்னை புழுவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு சென்றார்.
:)
//உங்களுக்கு வயசாகிடுச்சி இந்த லிஸ்ட் ல young beautiful girl மிஸ்ஸாகிடுச்சி .//
அவங்களுக்கெல்லாம் க்யூவில் நிற்க பாய்பிரண்டு காத்துக்கிடப்பான்
//புலவர் சா இராமாநுசம் கூறியது...
தங்கள் கருத்து சரியே! இனிய புத்தாண்டு, பொங்ல் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ஐயா, உங்களுக்கும் இல்லத்தினருக்கும் நல்வாழ்த்துகள்
//அண்ணன் சுவனப்பிரியனின் பின்னூட்டம் கண்டாலே நம்க்கு "என் உசி மண்டையில் கிர்ருங்குது" மாதிரி கருத்து பொங்கும்.ஹி ஹி
@ சகோ சுவனப் பிரியன்//
அவரே இப்ப தான் மூக்கில் வியர்த்து எட்டிப்பார்த்துட்டு கடைப்போட்டு சென்றுள்ளார்
//http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/najd_pakuthi_sabikapatatha///
இங்கிட்டும் பீ..ஜேவுக்கு புகழ்பாட வந்துட்டுப்போய் இருக்காங்க, பீ.ஜே பற்றி நல்லா தெரிந்த மூ,மாலிக் பாய் என்னான்னு எட்டிப்பார்த்துட்டு.....கருத்துசொல்லிட்டுப் போங்க
//பழனி.கந்தசாமி கூறியது...
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.//
மிக்க நன்றி ஐயா
//முகவை மைந்தன் கூறியது...
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!//
மிக நன்றி
//வருண் கூறியது...
வரிசைல ஒழுங்க நிக்கமாட்டேன்றானு சொன்னாலும் மதச்சண்டையை ஆரம்பிக்கிறியே, மாப்பூ! திருந்தவே மாட்டீங்களா நீங்க?
எங்க போனாலும் இதே எழவாயிருக்கு!//
:)
வணக்கம் நண்பர் வருண்&ஸலாம் ரகுமான்,
நான் சகோ சு.பி உடன் விவாதிப்பது கடந்த இரு வருட நிகழ்வு.அண்ணன் சு.பி யின் இரசிகர் மன்ற ஆள் என்பதால் அவர் சொல்வது மார்க்கரீதியாக சரியாக உள்ளதா,அண்ணன் சூப்பர் சுவனத்தை இழக்க கூடாதே என்ற நல்ல எண்ணம்,அன்பு,பாசம் கொண்டே அண்ணனின் கருத்துகளை நல்வழிப் படுத்துகிறோம்.
அவருக்கு சவுதி குடியுரிமை வழங்காவிட்டாலும்,அரபி அல்லாதவர்களை மதிக்காவிட்டலும்,வெள்ளையினத்தவருக்கு அடி பணிந்தாலும்,ஷரியா மூலம் ஏழை நாட்டவரை சரியான விசாரனை இன்றி தலை வெட்டினாலும் பிடிக்கிறது.
ஆனால் அவரின் கருத்து மார்க்கரீதியாக சரியாக இல்லாவிட்டால் சுவனம் கிடைக்காது!!!
பாருங்கள் நெஜித் என்பது அரேபியாவுக்கு வடமேற்கில் உள்ள இராக் என்கிறார்கள்.இராக் சவுதிக்கு வடகிழக்கில் உள்ளது. அண்ணன் சுவனப்பிரியனுக்கு சுவனம் கிட்டாவிட்டால யாருக்கு சுவனம் கிடைக்கும்?
சுவனப் பிரியனுக்கு சுவனம் கிடைக்ககூடாது என்ற பொறாமையில் நீங்கள் சொல்வதை அண்ணன் சு.பி அறிந்து ,மார்க்கத்தை சரியாக பின்பற்றி கருத்திட அன்புடன் ஆலோசனை கூறுகிறோம்.
சுவனப் பிரியன் சுவனம் செல்வதே நம் விருப்பம்!!
அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்!!!
நன்றி!!!
அறச் சீற்றம் சரியே
அதுவும் பொது அறம் காக்கிற நாட்டில் மிகச் சரியே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்
சகோ சார்வாகன்!
//சுவனப் பிரியன் சுவனம் செல்வதே நம் விருப்பம்!!//
நான் சுவனம் செல்வது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் சுவனம் புக சகோதர சகோதரிகள் இணைந்து 'எதிர்க் குரல்' என்ற பெயரில் ஒரு புத்தகம் இன்று வெளியாக்கி உள்ளனர். சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும. முதன் முலாக எனது ஆக்கம் அச்சில் வருகிறது. படித்து விட்டு கருத்தை சொல்லவும்.
இவ்வளவு எதிர்ப்பு காட்டியும் இந்த முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லையே என்று வழக்கம் போல் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். திறந்த மனத்தோடு அந்த புத்தகத்தை அணுகவும். நேர் வழி பெற பிரார்த்திக்கிறேன்.
ஸலாம் சகோ சு.பி,
உங்களின் இரசிகன் என்ற முறையில் உங்களின் வாழ்வின் நோக்கமான சுவனப் பாதையில் இருந்து நீங்கள் த்வறிவிடக்கூடாது என்பதே நமது ஆசை.
சவுதி(நெஜித்) என்பது ஷைத்தானின் கொம்பு என நபி(சல்) கூறுவதாக பல் [வஹாபி அல்லாத]இஸ்லாமிய அறிஞர்களும் கூறுகின்றனர்.
ஆக்வே ஷைத்தானின் கொம்பு பற்றி கவனம்!!.
நீங்களும் வஹாபிய பாதை, சவுதி ஷரிஆ புகழ் பாடுவதை விட்டு விலகும் நாளை எதிர்பார்க்கிறேன்.
**
உங்களின் ஆக்கம் வந்துள்ளது குறித்து வாழ்த்துக்கள்.
புத்தகம் படித்து மறுப்பும் அவசியம் என்றால் தெரிவிப்போம்!
வாழ்க வளமுடன்!!!.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி!!
//சவுதி பெண்களை வேற்று நாட்டு இஸ்லாமிய ஆடவன் ஒரே மதம் என்பதற்காக மணம் செய்ய அரசாங்க அனுமதியாவது உண்டா ? //
என்ன இப்படி கேட்டுட்டேள.... எகிப்து, பாகிஸ்தான், இந்திய நாட்டு ஆடவர்களை நிறைய சவுதி பெண்கள் மணந்துள்ளனர். எனது ஹைதரபாத் நண்பனின் சொந்தத்தில் இன்னும் ஒரு வாரத்தில் சவுதி பெண்ணோடு திருமணம் முடிவாகியுள்ளது. அதுபற்றிய பதிவே பின்னால் வருகிறது. பலர் சவுதி நாட்டு குடியுரிமையும் பெற்றுள்ளனர்.
லோகத்துல என்னவெல்லாம் மாறுதல்கள் நடந்துண்டு வர்றது. கலி முத்திடுத்து. :-)
கோவி கண்ணன்!
//* சிங்கையில் தகுதி உள்ளவர்களுக்கு குடி உரிமையும்,//
இந்தியனாக பிறந்தேன். இந்தியனாக வாழ்கிறேன். இந்திய முஸ்லிமாகவே மரிப்பேன். வேறு நாட்டு குடியுரிமை கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்.
// தாள் உள்ளவர்களுக்கு ரம்சான் மாதமாக இருந்தாலும் "குடி"யுரிமையும் கிடைக்கும். உங்களுக்கு இதில் ஏதேனும் ஏதேனும் கிடைக்கிறதா ?//
அது தான் குடியும் விபசாரமும் தெருவெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறதாமே! நமக்கு வேண்டாம்பா...
*// இங்கு வெறும் குற்ற முகாந்திரம் என்ற பெயரில் விசாரணை இன்றி அப்பாவிகளை சிறையில் அடைப்பது கிடையாது, நாங்களும் சவுதி சிறையில் சாரி சாரி சிங்கை சிறையில் வாடும் அப்பாவி இளைஞனைக் காப்பாற்றுங்கள் என்று பதிவு எழுதும் துரதிஷ்ட வாய்ப்பை வழங்கியதில்லை.//
அந்த பெண்ணுக்காக மன்னரே குறிப்பிட்ட குடும்பத்தை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அரசனின் பேச்சுக்கும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அதற்காக ஆட்டோ அனுப்பி அந்த குடும்பத்தை தொலைத்து விடுங்கள் என்று ஆள்வோரும் நினைக்கவில்லை. இதற்கு பெயர்தான் சட்டம்.
//* கூலி வேலைக்கு வந்து விபத்தில் இறந்தால் உரிய இழப்பீட்டை உடனே கொடுத்துவிடுவார்கள், அது வெறும் முதலாளி - தொழிலாளி பிரச்சனை என்று பிழைக்க வந்தவனை ஆதரவற்றப் பிணம் ஆக்கி அனுப்புவதில்லை//
இங்கும் உரிய இழப்பீடு கிடைக்கிறது. எனது தமிழக நண்பன் கார் ஆக்சிடெண்டில் இறந்து விட்டான். அவனுக்கு உரிய இழப்பீடும் கிடைத்தது. இந்த வருடம் வரை அவனது குடும்பத்துக்கு அவனது ஓனர் வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை அனுப்பி வருகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.
//* பணிப்பெண் வேலைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கிடையாது, தெரிந்தால் பொண்டாட்டியே வெட்டிவிட்டுவிடுவாள்//
நம் இந்திய நாட்டில் பெண்கள் இரவில் வெளியில் நடமாடவே முடியவில்லை. தினம் ஒரு கற்பழிப்பு செய்தி. ஆசிட் வீச்சு. அதற்காக நமது நாட்டை காட்டு மிராண்டிகள நாடு என்று அறிவித்து விடுவோமா?
எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.
கோவி,
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
வரிசையில் நிற்பது,கடைப்பிடிப்பது நல்ல வழக்கமே,ஆனால் முன்னேறிய நாட்டில் வரிசையில் நிற்காமல் காரியமாற்ற ஏதேனும் தொழில்நுட்பத்தினை புகுத்தலாமே.
------------
//நம் இந்திய நாட்டில் பெண்கள் இரவில் வெளியில் நடமாடவே முடியவில்லை. தினம் ஒரு கற்பழிப்பு செய்தி. ஆசிட் வீச்சு. அதற்காக நமது நாட்டை காட்டு மிராண்டிகள நாடு என்று அறிவித்து விடுவோமா?
//
சு.பி சுவாமிகள்,
இந்தியாவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது, அரேபிய தேசத்தில் அப்படி இல்லையே.
வணக்கம் நண்பர்களே,
நான் சகோ சு.பி ஐ கிண்டல் அடித்தால் நடுநிலையாளர்கள் பொங்கி எழுகின்ற்னர்.
ஆனால் பாருங்கள் நான் சொன்ன விடயம் தவிர அனைத்தையும் பின்னூட்டத்தில் அடித்து ஆடுகிறார் அண்ணன் சுவனன் என்றால் என்ன விடயம்?
நான் சொல்வதை அவரால் மறுக்கமுடியவில்லை என்பதுதானே விடயம்!!
சரி அவருக்கு நம் கேள்விகள்
1.சவுதி பெண்களை இந்தியர்கள் மணமுடிக்க அந்நாட்டு சட்டத்தின் படி அனுமதி உண்டா? ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!
2. அப்படி மணமுடிக்கும் ஆண்களுக்கு,பிறக்கும் குழந்தைகளுக்கு சவுதி குடியுரிமை கிட்டுமா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!
3. சவுதி பெண்களை மிஸ்யார் வகைத் திருமணம் பிற நாட்டவர் செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!
***
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121201144559
Saudi society may still be struggling to accept the idea of citizens marrying foreigners but that hasn’t stopped Saudi women from choosing who they want to marry.
According to statistics published last year, the Ministry of Interior approved 6,123 marriage requests of Saudi men wanting to marry non-Saudi women and vice versa. The percentage of Saudi marriages to non-Saudis was only 10 percent of this number or 612 marriages.
A proposed law governing the marriage of Saudi nationals to foreigners was recently transferred by the Shoura Council to a special committee for further study.
...
இந்த மூன்று கேள்விகளுக்கு சரியான தரவுகள் இல்லை எனில் ஹி ஹி
நமது கிண்டல் கேள்விகள்,எந்த நடுநிலைவியாதிகள் தடுத்தாலும் தொடரும்!!
திரு சார்வாகன்!
//1.சவுதி பெண்களை இந்தியர்கள் மணமுடிக்க அந்நாட்டு சட்டத்தின் படி அனுமதி உண்டா? ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//
Under the law, the marriage must be in line with Islamic rules and the couple must be free of any serious diseases, should not be drug addicts and the age gap between them must not exceed 25 years.
After a lengthy debate on Monday, the Shura council, the Gulf Kingdom’s appointed parliament, ratified the law which gave Saudis the right to have spouses from the other members of the Gulf Cooperation Council.
Official data showed Saudi Arabia had around 1.8 million unmarried national women above 30 years old and that their number could exceed four million in the next four years. Officials attributed the problem to the fact that many Saudi men prefer foreign wives despite the existing curbs due to the high wedding expenses and dowries demanded by national spouses.
சவுதி பெண்கள் மஹர் பிரச்னைகளால் தங்கி விடக் கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளை அரசு வைத்துள்ளது. இஸ்லாம் மற்ற நாட்டு ஆண்களையும் பெண்களையும் மணப்பதற்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.
http://www.emirates247.com/news/region/saudi-law-approves-marriage-with-foreigners-2011-06-28-1.404884
//2. அப்படி மணமுடிக்கும் ஆண்களுக்கு,பிறக்கும் குழந்தைகளுக்கு சவுதி குடியுரிமை கிட்டுமா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//
Al-Jasser said the amendment to Article 7 states that in light of the information provided by a male applicant, his application shall be evaluated by a committee formed by the Directorate of Naturalization branch of the Ministry of Civil Affairs through five elements: If his residence in the Kingdom is permanent at the age of majority (becoming an adult), he gets one point; if he has an academic certificate not less than that of a secondary level, he gets one point; if the father of the mother and her grandfather from her father’s side were Saudis, he gets six points; if only her father is a Saudi, he gets two points, and if an applicant has one Saudi brother or sister, or more, he gets two points.
If an applicant gets at least seven points, the committee recommends that his application be considered, otherwise his application shall be reserved.
If a female applicant gets 17 points, the committee recommends that her application be considered, otherwise her application shall be reserved.
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=20120115115592
//3. சவுதி பெண்களை மிஸ்யார் வகைத் திருமணம் பிற நாட்டவர் செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா?
ஆம்/இல்லை
ஆம் எனில் தரவு சுட்டி!!!//
மிஸ்யார் திருமணம் ஷியாக்கள் ஆங்காங்கு செய்து வருகின்றனர். இது ஈரானில் அதிகம். சவுதியில் உள்ள சில ஷியாக்களும் செய்து வருகின்றனர். போர்க்காலங்களில் இது அனுமதிக்கப்பட்டது. தற்போது அதற்கு அவசியம் இல்லை என்பது சில அறிஞர்களின் கருத்து. பெரும்பான்மையான முஸ்லிம்களை இந்த வகை திருமணங்களை செய்வதில்லை.
சு.பி: விவரத்தை சரியாக புரிந்து கொள்வத்க்ர்காகவே!
எப்படி serious வியாதிகள் இல்லை என்று தெரியும்? இந்த serious என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்; இந்த வார்த்தையை எப்படி வேண்டுமானகல் வலிக்கலாம். Type II diabetes எப்படி?
25 வயது? நிறை பேர் சௌதியில் இருந்து இந்தியா வந்து சிறுசுகளை (25-க்கு மேல்)கட்டுகிறார்களே: அவர்களை திருப்பி சௌதிக்கு மனைவி என்று எப்படி கூட்டிக் கொண்டு செல்லமுடியும்?
[[Under the law, the marriage must be in line with Islamic rules and the couple must be free of any serious diseases, should not be drug addicts and the age gap between them must not exceed 25 years.]]
போன பின்னூட்டத்தின் தொடர்ச்சி..
வயது வித்யாசததிர்க்கு மேல் இந்தியாவிற்கு வந்து திருமணம் செய்கிறார்களே?
15 வயது பெண் 41 வயது ஆண் எப்படி இந்தியாவில் கல்யாணம்; எப்படி சௌதியில் மனிவியாகும்?
பெண்கள் வெளி நாட்டிற்கு சென்று மண் முடிக்கலாமா? வயது குறைந்த ஆணை?
முழு மருததவ் பரிசோதனை செய்கிறார்களா? பன்னாமல எப்படி எந்த serious வியாதிகள் இல்லை என்று கிண்டு பிட்கிக்கமுடியும்?
North Indians are like this only, back in Chennai also I experience the same, especially girls are worst offenders
@சொவனபிரியர்/சொர்க்க பிரியர்
அது தான் குடியும் விபசாரமும் தெருவெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறதாமே! நமக்கு வேண்டாம்பா..."
ஆமா உங்கள் இஸ்லாமிய நாடு மலேசியாவில் என்ன நடக்குது?
மலேசியாவில் பொண்ணுங்க இரவில் நடமாட முடியுமா (ஏன் நடமாடனும் என்று கேட்பீர்கள் ) சிங்கப்பூரில் இரவில் 12மணிக்கும் பெண்கள் வேளையில் இருந்து தனியாக நடந்து வீட்டுக்கு போக முடியும்.
"அந்த பெண்ணுக்காக மன்னரே குறிப்பிட்ட குடும்பத்தை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அரசனின் பேச்சுக்கும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அதற்காக ஆட்டோ அனுப்பி அந்த குடும்பத்தை தொலைத்து விடுங்கள் என்று ஆள்வோரும் நினைக்கவில்லை. இதற்கு பெயர்தான் சட்டம்."
அது சரி. மன்னர் குடும்பத்துக்கு சட்டம் பொருந்தாதோ. சவுதியில் பெண்கள் முகத்தை மூடி, உடலை மூடி செல்ல வேண்டும். இல்லை என்றால் தண்டனை.
சவூதி இளவரசி நமீதா ரேஞ்சுக்கு நடமாடி திரிகின்றார். அவர்க்கு சட்டம் பொருந்தாதா?
இளவரசர் பொண்ணுகளோட கூத்தடிக்கின்றார். அவருக்கு தண்டனை எல்லாம் கிடையாதா?
இனிய பொங்ல் வாழ்த்துக்கள்..
சகோ சு.பி,
1. பெரிய வியாதி அற்றவராக,போதை மருந்துக்கு அடிமை ஆகாதவராக,வயது வித்தியாசம் 25க்கு மிகாமல்[ ஹி ஹி இது நபி(சல்)க்கு பொருந்தாது] இருக்க வேண்டும்.
[ இத்னை சவுதி கிழவன்கள் வேறு நாட்டுப் பெண்களை மணமுடிக்க காட்டுவது இல்லை!!]
சவுதி பெண்கள் அதிகம் மஹர் கேட்பதால் மட்டுமே முதிர் கன்னிகள் சவுதியில் அதிகம், மஹர் ஏன் அதிகம் எனில் ஆண்கள் எந்த நேரமும் விலக்கு செய்து விடலாம்,இன்னும் சில திருமணம் செய்யலாம் என்பதால் ஒரு பிடிப்பு.
ஆகவே மணம் சவுதியில் சிக்கல் ஆக எது காரணம்? இஸ்லாம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?
நீங்கள் கொடுத்த சுட்டியின்படி சவுதி பெண்ணைத் திருமணம் செய்பவர் குடிமகன் ஆக முடியும் என சொல்லவில்லை. பிறக்கும் குழந்தைகள் குடிமகன் ஆக சில கடினமான நடைமுறைகள் சொல்லி இருக்கின்ற்னர.
***
2.என்ன மதிப்பெண் போட்டு திருமணம் அடேயப்பா!! இங்கு இஸ்லாம் வரவில்லையே!!. தொழுகைக்கு மட்டும் பின்னால் நிப்பார் சவுதி போல!!
இரு ஆரோக்கியமான [ஒரே மதம் சார்] மனிதர்கள் திருமணம் செய்யக் கூட அல்லாஹ் அறிவுறுத்தவில்லையே!!
குழந்தை ஆணாக இருந்தால் 10 புள்ளியில் 7 புள்ளி பெற வேண்டும்.
எப்படி?
அ) மேஜர்[வயது] ஆகும் போது சவுதியில் வசிக்க வேண்டும்=1 புள்ளி
ஆ) கல்வியில் பள்ளிப் படிப்பு முடித்து இருக வேண்டும்[சுமார் 12 வது]=1 புள்ளி
இ) தாயின் தந்தை, தந்தையின் தந்தை சவுதிகளாக இருக்க வேண்டும்=6 புள்ளி
இ1) தாயின் தந்தை மட்டுமே சவுதியாக இருந்தால்= 2புள்ளி மட்டுமே
ஈ) சவுதி சகோதரன்,சகோதரி இருப்பின் [இது எப்படி என்றால் தாயின்முந்தைய திருமணம் அல்லது ஏற்கெனவே குடியுரிமை பெற்றும் இருப்பவர்கள்] =2 புள்ளி
மொத்தம்= 10 புள்ளிகள். எப்புடி புண்ணிய பூமியின் சட்டம்??
**
3. சவுதி பெண்,பிற ஆண் த்மபதிகளுக்கு பிறந்த பெண் 17 புள்ளிகள் பெற்றல் மட்டுமே சவுதி குடியுரிமை பெற முடியும்.
அது என்ன?
அ) சவுதியில் பிறந்து இருந்தால்=2 புள்ளி
ஆ)ஏதேனும் ஒரு உறவு(தந்தை,தாய்,சகோத்ரன்)சவுதி ஆக இருப்பின்=2 புள்ளி
இ) கல்வியில் பட்டப் படிப்பு முடித்து இருக வேண்டும்.=2 புள்ளி
ஈ) குடியுரிமை கோரும் பெண் திருமணத்துக்கு முன் சவுதியில் 10 ஆண்டுகள் வசித்தால்=2 புள்ளி.
உ) திருமணத்தின் பின் ஒவ்வொருவருடத்துக்கும் ஒரு புள்ளிவீதம் அதிக படசம்=10 புள்ளிகள்
ஊ) ஒரு குழந்தைக்கு 2புள்ளிகள் வீதம் இரு குழந்தைகள் வரை அதிக பட்சம்=4 புள்ளிகள்.
மொத்தம் 20 புள்ளிகள்;
ஹி ஹி குடியுரிமை கோரும் கண்வன் சவுதியாக இல்லாவிட்டால் ,குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப் படும் ஹி ஹி!!
இப்படி ஒரு கோணத்தனமான குடியுரிமை சட்டம் அமலில் உள சவுதியையும் போற்றும் மூமின்களின் மூளையே மூளை!!!
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=20120115115592
நன்றி!!
சகோ சு.பி ,
மிஸ்யார் வகைத் திருமணம் என்பது பயணியின் திருமணம் என்ற பொருள் கொண்டது. மெஹர் குறைத்துக் கொடுக்க்லாம்,பெண்ணுக்கு செலவு அதிக செய்ய வேண்டாம் ஹி ஹி.இது சுன்னி மூமின்களுக்கு ஹலால் ஆனது.சவுதியில் பல்ர் செய்கின்றனர். ஷியாக்கள் செய்வது முட்டா!! குழம்ப வேண்டாம்.
http://www.guardian.co.uk/commentisfree/belief/2009/aug/16/saudi-arabia-marriage
Emirates-based scholar Sheikh Ahmad al-Kubaisi says that while misyar marriage is correct Islamically, it also compromises some values. Al-Kubaisi believes that misyar can solve the high rate of spinsterhood in the Arab countries:
The only difference (with a normal marriage) is that the woman abandons voluntarily her right to housing and support money. There is nothing wrong in relinquishing one's own rights.
http://en.wikipedia.org/wiki/Nikah_Misyar#Legality_of_misyar_marriage
Thank you
கருத்துரையிடுக