பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2012

பதஞ்சலி பாம்பின் அற்புதம் !


நான்கு நாளைக்கு முன்பு வலைப்பதிவு நண்பர் ஒருவர் 'மெய் சிலிர்க்க வைக்கும் அற்புதம் ( பதஞ்சலி தரிசனம் ) (படிக்கத் தவறாதீர்கள் )' இணைப்பைக் கொடுத்து 'இதன் உண்மை தன்மை' குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா ? அறிந்து கொள்ள ஆவல் என்று மின் அஞ்சல் செய்திருந்தார். அந்த இணைப்பில் ஏழு தலை நாகம் காட்சி தந்ததையும், அந்த ஏழு தலை நாகம் சாட்சாத் பதஞ்சலி மகரிஷியே தான் என்றும் அந்த வலைப்பதிவில் எழுதி இருந்தனர்.  நண்பர் இது போன்ற தகவல்களை நம்பக் கூடியவர் இல்லை என்றாலும் சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.

நாம் ஏற்கனவே மாடு மணி அடிச்சக் கதை, பாம்பு சிவலிங்கத்திற்கு செய்த வில்வ அர்சனைக் குறித்தப் படம், குரங்கு செய்த பூசை எல்லாம் அறிந்தவர் அலசியவர் என்ற முறையில் இணைப்பில் இருந்த ஏழு தலைகள் நாகமும் தகவலும் பெரிதாக ஈர்க்கவில்லை, இந்த தகவலை 'கும்முகிறவர்களெல்லாம் வரிசையாக வாங்க' என்று கூறி கூகுள் கூ(ட்)டலில் இணைத்துவிட்டேன். அந்த தகவலைப் பார்த்த மற்றொரு கூகுள் நண்பர் இந்த பாம்புக்கு ஏற்கனவே மூணு தலை தானே இருந்தது என்று கூறி அவரும் ஒரு இணைப்பை எடுத்து அனுப்பினார். ஏழு தலை நாகம் பதஞ்சலி மகிரிஷி தான் என்று சத்தியம் செய்து இது கிராபிக்ஸ் படமில்லை என்று சாதித்துக் கொண்டிருந்த பதிவில் சென்று அந்த 'மூன்று தலைகள் நாகம்' குறித்த இணைப்பைப் கொடுத்துப் பின்னூட்டம் போட்டப் பிறகு பதிவையே தூக்கிவிட்டார்கள். ஆனாலும் வேறொரு இணையப்பக்கத்தில் அந்த தகவல் அப்படியே இருக்கிறது.

* ஒரு தகவலை யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறித்து கொஞ்சம் கவலையின்றி நாலு பேருக்கு வதந்திகளைப் பரப்புவதில் உள்ள இன்பம் என்ற வகையில் இதைப் பார்ப்பதுடன், இது போன்றெல்லாம் அற்புதங்கள் நடந்தால் தான் தன் நம்பிக்கைகள் போற்றப்படும் என்கிற தவறான நம்பிக்கைகளையும் பலர் கொண்டு இருக்கின்றனர்.


*****

பாம்பு, இருட்டு இதற்கான அடிப்படை அச்சம் ஒவ்வொரு மனிதருக்குமே உண்டு, பாம்பு, இருட்டு (எமன்) இவைகள் தெய்வமாக மாறியதற்குக் காரணமே அதன் மீது இருக்கும் அடிப்படை பயம், அதைப் போற்றிவிட்டால் அது நம்மை அச்சப்பட வைக்காது அல்லது அச்சமின்றி இருக்கலாம் என்ற உளவியல் காரணங்களால் இவைகள் தெய்வமாயின, நாகம் என்று வாய் சொல்லாகச் சொன்னால் கூட ஏற்படும் அச்சத்தைப் போக்கிக் கொள்ள 'நல்ல பாம்பு' என்று கூறிவருகிறோம், நல்ல பாம்பு என்று கூறிவந்தாலும் அதற்கு நாம் முத்தம் கொடுக்க முடியுமா ? அச்சமற்றவன் (தைரியசாலி) என்று கூறிக் கொள்ள அச்சம்(பயம்) இல்லாதது போல் நடிப்பது போன்றது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ள நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே பாம்பை தெய்வமாக்கியதும், நல்ல பாம்பு என்றதும். பாம்புகள் நம்மைப் பார்த்து அச்சமடைகின்றன, பல்வேறு உயிரினங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு இயற்கை வழங்கி இருக்கும் பாதுகாப்புகள் போன்றவையே பாம்புக்கு நஞ்சு. மற்றபடி யாரைத் தீண்டலாம் என்று எந்த பாம்பும் வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பது கிடையாது.

அரங்கநாதன் அல்லது நாரயணனின் படுக்கையாகவும், சிவன் கழுத்து மாலையாகவும் பாம்புகள் இருப்பதற்கு என்ன காரணம் ? கடவுளுக்கு உருவங்கள் உருவகங்கள் போல் பாம்பு அந்த உருவகத்தில் அமைந்த மற்றொரு உருவகம் அவ்வளவு தான், அதற்கு மேல் ஒன்றுமே இல்லை, பொதுவாக பஞ்சமா பாதகம் அல்லது பெரும்பாவங்கள் என்று சொல்லப்படும் (மிதமிஞ்சிய) காமம் அல்லது காமவெறி, வெறுப்பு, பொறாமை, பேராசை, ஆணவம் ஐந்து தீய குணங்களைக் கொண்டவன் தீயவன் என்றும் அது இல்லாதவனை நல்லவன் என்றும் சொல்லுகிறார்கள், இதை இந்தி அல்லது வடமொழியில் காம, க்ரோத, லோப, மோக, அஹங்காரம் என்று சொல்லுவர். தீய எண்ணங்களால் ஆட்கொள்ளப் படாததே தெய்வாம்சம் அல்லது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும், நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது  குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை என்பது வெளி ஆட்களுக்குத் தான் அன்றி அதை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கைக் கிடையாது. என்னதான் ஒருகடியில் ஒரு கிலோ சதையை கவ்வி எடுக்கக் கூடிய நாயாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தி வளர்ப்பவர்களுக்கு அது நன்றி உள்ள நாய், வளர்ப்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளவை, அந்த நாய் வளர்ப்பவர்களை ஒன்றும் செய்யாது தவிர அவர்களை பாதுகாக்கும், அதைப் பார்த்து வளர்ப்பவர்கள் அச்சம் அடைவதில்லை, தீய எண்ணங்களின் பிடியில் இருப்பவர்களுக்கும். 

தீய எண்ணங்களை கட்டுபடுத்தி வைத்திருப்பவர்களுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளே மனிதன் - தெய்வம் குறித்த வேறுபாடுகள், இதைத் தான் இந்திய சமய உருவ வழிபாடுகளின் உருவங்களில் பாம்புகளும் சேர்த்தே வரையப்பட்டிருப்பதாகக் காண முடியும், முருகனுக்கு கால் அடியிலும், பிள்ளையாரின் இடுப்பு பட்டியாகவும் பாம்பு இருக்கும். இவை தத்துவ ரீதியான விளக்கம், இதைச் சொல்வதால் நான் இந்திய சமயங்களுக்கு முட்டுக் கொடுக்கிறேன் என்று பொருளும் இல்லை, தத்துவங்கள் மதங்களைக் கடந்தவை, மனித நலனுக்காக ஏற்படுத்தி வைக்கப்பட்டவை என்பதை மறுக்கும் எண்ணம் எனக்கு அமையப் பெற்றதும் இல்லை, தந்தைப் பெரியாரையும், இராமலிங்க வள்ளலாரையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் மனநிலை வாய்க்கப் பெற்றவன் நான், தவிர விமர்சனங்களுக்கு பயந்து 'மூடிக் கொள்ளலாம்' என்று என்றுமே நினைத்ததும், என்னைப் பற்றிய எண்ணம் மாறிவிடுமோ என்றெல்லாம் நான் நினைப்பதே கிடையாது.

உண்மையிலே ஏழு தலைகள் கொண்ட நாகம் இருப்பதாக நம்புவதன் விளைவே பதஞ்சலி முனிவர் பற்றிய அற்புதமாக பரப்பப்பட்டுள்ளது, அவர்கள் காட்டி இருக்கும் படத்தில் பதஞ்சலி முனிவருக்கு பின்னால் இருக்கும் படத்தில் ஐந்து தலைகள் நாகமே உள்ளது, இவர்கள் எப்படி ஏழு தலைகள் நாகத்தைக் காட்டி பதஞ்சலி காட்சி கொடுத்தார் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. இதற்கு பதிலாக சப்தரிஷிகள் காட்சி கொடுத்தார்கள் என்றாவது இவர்கள் நம்பி இருக்கலாம், ஆக தகவல் பிழை அடிப்படையிலும் இவர்களின் நம்பிக்கைகள் பொய் தான்.

இவர்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலுமே இது போன்ற அற்புதகங்களுக்கு வாய்பிருப்பதாக நம்புகிறார்கள், இரண்டு தலையுடன் பிறந்தாலே அந்த பாம்பு பரிதாபத்துக்கு உரியது என்றே சொல்லுகிறார்கள், ஒரு தலை வலப்புறமாக செல்ல விருப்பப்பட மறு தலை இடப்புற செல்ல விரும்பம் போராட்டத்தில் பாம்பு முடிவெடுக்கத் தெரியாமல் திணறிக் கொண்டு இருக்குமாம், பின்னர் எந்த தலையின் மூளை விரைவாக செயல்படுகிறதோ அந்தப் பக்கம் பாம்பு செல்லுமாம், ஒரு தலைக்கு பசி உணர்வும், மறு தலைக்கு உண்ட களைப்பும் இருக்குமாம், இரண்டு தலைக்கே இப்படி என்றால் ஏழு தலை நாகம் இருந்தால் அது படும்பாடு அந்தோ பரிதாபம்.

இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே மகப்பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும், இரண்டு தலை பாம்பு, ஆமை உள்ளிட்டவை இருப்பதும் அதிசயமோ அற்புதமோ இல்லை, அவை இயற்கையில் சில வேளைகளில் நடைபெறும் கூறுகளே, அவற்றிக்கு அறிவியல் ரீதியான காரணங்களும் விளக்கங்களும் உள்ளன, இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிசயம், அற்புதம் என்று நம்பப்படாத போது ஏழு தலைகளுடன் ஒரு நாகம் ஒரு வேளை இருந்தால் அது மட்டும் எப்படி அதியமாகவோ, அற்புதமாகவோ நம்ப்படும் என்று தெரியவில்லை, இறை அற்புதங்கள் என்றால் அது நம்பக் கூடியத் தன்மையைக் கடந்தது என்ற தவறான அடிப்படைப் புரிந்துணர்வுகளலாம், அவை நடைபெறுவதால் இறைவனின் இருப்பு உறுதிப்படும், தத்தமது நம்பிக்கைகள் போற்றப்படும், பொருள் படும் என்று நம்புவதன் விளைவே அற்புதங்கள் குறித்த மனிதத் தேடலாகவும், அவை குறித்த கட்டுகதைகளை பரப்புவதாகவும் உள்ளது.

*****
நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது, 

"நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்." - சுவனப்பிரியனின் உளறல்.

முரண்பாடுகளைத் தான் நாம் விமர்சனம் செய்கிறோம், குனிந்து நிமிரும் தொழுகையால் கூன் விழும் ஆபத்து உண்டு, முதுகு தண்டுவடம் தேயும், பாதிப்பு அடையும், ஆண்களின் விந்தகம் (Prostate)  அடிக்கடி அழுத்தம் ஏற்படுவதால் பாதிக்கப்படும் என்று ஒரு நாசா விஞ்ஞானி கூறியுள்ளார் என்று ஒருவர் காணொளி காண்பித்தால் சுவனப்பிரியனுக்கு இனிப்பாக இருக்குமா ?

மேலும் இணைப்புகள்.
ஆக ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே.

*****

இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதும் அற்புத விளக்கங்களினாலும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி கடவுள் நினைத்தால் சாத்தியமே என்று இவர்கள் எழுதிவதில் இருந்தும் எனக்கு விளங்காதவை ஒன்று உண்டு. இயற்கைக்கு மேம்பட்ட சக்திகள் எல்லாம் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உண்மை என்றால். ஓருபால் சேர்கையாளர்களையும், திருநங்கைகளையும் @#%%&&& கொழுப்பெடுத்தவர்கள், அரிப்பெடுத்தவர்கள் என்றும் இவர்கள் எள்ளி நகையாடுவதன் முரண்பாடுகள் எத்தகையது ?  இவையெல்லாம் அற்புதம், விசித்திரம் என்ற வகைக்குள் வராதா ? இயற்கைக்கு மாறுபட்டு பாம்புக்கு பல தலைகள் இருந்தால் அதிசயம், அற்புதம், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பால் விருப்பம், திருநங்கைத் தன்மை ? இவர்களின் படைப்புகள்  மட்டும் யார் செயல் ?

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு செய் குடும்பக் கட்டுப்பாடு - கலைஞானி கமலஹாசன்

28 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு ... முதலில் நம் மக்கள் இன்னும் லூசுகளாக இருப்பதை நினைத்தால் என்னவென்று சொல்வது .. கிராபிக்ஸ் என்று கூட தெரியாமல் .. இன்னும் ஐந்து தலை நாகம், ஏழு தலை நாகம் இருப்பதாக நம்புகின்றார்கள்.. இதை தேடி சன்டிவியின் நிஜம் குழு வேறு மலை மலையாக ஏறி அலைந்தார்கள் ..

நாகம் மட்டுமல்ல.. இந்துக் கடவுள்கள் பலவும் வெறும் உருவகமே ... மழைக்கான காரணம் தெரியாதத்தால் இந்திரன் எனவும், தீக்கான காரணம் தெரியாதத்தால் அக்னி எனவும் உருவகப்படுத்தினார்கள் ...

ஆனால் அதனையே உண்மை என நம்பி கும்பிடும் மக்களை என்ன சொல்வது ...

பஞ்சமா பாதகத்தை இப்படி உருவகமாக விளக்கியத்தால் மக்கள் பஞ்சமுக நாகத்தை பிடித்துக் கொண்டார்கள், மெய்ன் மேட்டரை விட்டுவிட்டார்கள் ... !!!

பெயரில்லா சொன்னது…

// இயற்கைக்கு மாறுபட்டு பாம்புக்கு பல தலைகள் இருந்தால் அதிசயம், அற்புதம், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பால் விருப்பம், திருநங்கைத் தன்மை ? இவர்களின் படைப்புகள் மட்டும் யார் செயல் ?//

நியாயமான கேள்விகள் சகோ. ஒரு பாலினத்தவருக்கு ஆதரவாக எழுதினால் எமக்கு வரும் hate mails அதிகமாகி கொண்டே போகின்றது .. ஆனால் உண்மையை விளங்கிக் கொள்வதில்லை பலரும் ... !!!

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

நல்ல லாஜிகலான விளக்கங்கள்..

இந்தப் பதிவின் சில செய்திகளுக்கு மேலும் விளக்கங்கள் தேவை என்று தோன்றுகிறது..முடிந்தால் பதிவாக இடுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரிவான விளக்கம்...

படங்களும் கண்ணொளிகளும் சிறப்பு...

/// ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே.///

உண்மை... மக்களின் அறியாமை...

வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)

பெயரில்லா சொன்னது…

சுவனப்பிரியன் said - //ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். //

சுவனப்பிரியன் said - //எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. போன வருடம் வரை முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன் - ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை 50 முறைக்கும் மேல் குனிந்து நிமிர்ந்து தனது உடல் எலும்புகளுக்கும் சதைக்கும் சரியான வேலை கொடுத்து வந்தால் பல நோய்கள் குணமாக வாய்ப்புண்டு. இந்த தொழுகையானது அல்சைமர் வியாதி நீங்குவதற்கு பல காரணிகளில் ஒன்றாக உள்ளது. //

சுவனப்பிரியனின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!!

யோகா செய்த தாத்தா சீக்கிரம் இறக்க காரணம் யோகா எனக் கூறுகின்றீர்கள் .. ஆனால் அவர் தொழுததால் தான் சீக்கிரம் இறந்திருப்பாரோ என்று தோன்றச் செய்கின்றதே !!!

ஏனிந்த இரட்டை வேடம் .. அவருக்கு இது நல்லாருக்கா ???

தொழுகை செய்தால் நல்லது வல்லது உடல் நலம் காப்பாற்றப்படும், அல்சீமர் போகும் என கூறினார்.. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை என சொன்னோம் ..

ஆனால் யோகா மோசம், சரியில்லை என கூறுகின்றார். யோகாவில் அனைத்து ஆசனங்களும் அனைவராலும் செய்யக் கூடியதல்ல.. ஆனால் சில ஆசனங்களை இங்கு மேற்கு நாடுகளில் மருத்துவமனைகளில் நோய் தீர்க்க பயன்படுத்துகின்றார்கள் ..

மனநல நோய்கள் பலவற்றுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகளைக் கொடுக்கின்றார்கள் ... என்ன சொல்ல ???


கோவி.கண்ணன் சொன்னது…

சகோ.இக்பால்

இந்த இணைப்பைப் படித்துப் பாருங்கள்.
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

அறிவன் சார், மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் இடுகைக்காக காத்திருக்கிறேன். நன்றி

பெயரில்லா சொன்னது…

@ கோவி.கண்ணன் - ஹிஹி !! நல்லதொரு இணைப்பு .. இதற்கு தீர்வையும் அல்லாஹ் சொல்லி இருப்பாரே !!! :)

பெயரில்லா சொன்னது…

அப்படியே இதனையும் பார்க்கவும் - இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ---- http://bit.ly/NmbXNm

விருச்சிகன் சொன்னது…

நல்ல பதிவு கோவி சார்.

கடவுள் என்ற ஒருவரை நாம் உருவாக்க காரணமே, நாம் தான்தோன்றித்தனமாக திரிந்து அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்து, கடவுளையும், பேயையும் யாரும் பார்த்ததாக தெரியவில்லை.

இப்போதைக்கு, கடவுள் என்றால், கடமை தவறாத அரசாங்க அதிகாரியும், அரசியல்வாதிகளும்தான். அவர்களை பார்த்தவர்கள் கூட மிகவும் அரிது

நிகழ்காலத்தில்... சொன்னது…

//சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.//

அற்புதமாக இருக்காது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் அதை உறுதி செய்துகொள்ளாமல் கருத்து சொல்லக்கூடாது என்பதற்காகவே உங்களிடம் கேட்டிருக்கலாம் :)

உண்மையிலேயே பலரிடம் சம்பந்தபட்ட பதிவர் ஏமாந்த சோணகிரியாகவோ அல்லது ஏமாற்றுபவராகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். உங்களிடம் சொன்னால்தான் இது போன்றவைகள் ’நல்லபடியாக நடக்கும்’ என்றும் நினைத்திருக்கலாம்.

நேரில் பேசுவதற்கும் எழுத்தில் ஒரு விசய்த்தை உரையாடுவதில் வரக்கூட்டிய இடைவெளியாக இருந்திருக்கலாம் :)))

Unknown சொன்னது…அன்பரே!
தங்களின் விரிவான கட்டுரை
உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக உள்ளது. விருப்பு, வெறுப்பு
அற்று வழக்கம் போல் உள்ளது. பொது
வாக, கண்டவர் விண்டிலர், விண்டவர்
கண்டிலர் என்பதே உண்மை!

கோவி.கண்ணன் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், விருச்சிகன் மற்றும் இராமநுசம் ஐயா பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//நேரில் பேசுவதற்கும் எழுத்தில் ஒரு விசய்த்தை உரையாடுவதில் வரக்கூட்டிய இடைவெளியாக இருந்திருக்கலாம் :)))//

எப்படியோ ஒரு தவறான தகவல் பரவாமல் தடுத்தாச்சே.
:)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக //ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை // ... ?...?...?

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது,//

இரண்டு பதிவுகளுமே எனது சொந்த கருத்து அல்ல. மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் எடுத்த ஆராய்ச்சியின் முடிவைத்தான் நான் பதிவாக்கியிருந்தேன். அது வாந்தியாக உங்களுக்கு தெரிந்தால் முதலில் அந்த மேல் நாட்டு அறிஞர்களிடமே உங்களின் கேள்வியை வைத்திருக்க வேண்டும். என்ன எழுதினாலும் கண்களையும் காதையும் மூடிக் கொள்பவர்களிடம் ஒன்றும் செய்ய இயலாது. :-)


suvanappiriyan சொன்னது…


இக்பால் செல்வன்!

//சுவனப்பிரியனின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!!//

யோகா பதிவில் நான் குறிப்பிட்ட தாத்தா எனது அப்பாவின் அப்பா. அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஐந்து வேளை தொழுபவராக இருந்தும் யோகாவையும் தொடர்ந்து செய்து வருவார். சிறிய விபத்து அவரை இறப்பு வரை கொண்டு சென்றது யோகாவோ என்று எனது சந்தே கத்தைத்தான் வெளியிட்டிருந்தேன்.

அடுத்து அல்ஸிமர்ஸ் பதிவில் வந்த தாத்தா எனது தாயாரின் தந்தை. அவர் இன்னும் உயிருடன் உள்ளார்.

இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் மேற்குலக அறிஞர்களின் கருத்துகளேயன்றி எனது கருத்துகள் அல்ல. முரண்கள் இருந்தால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் மேற்குலக அறிஞர்களின் கருத்துகளேயன்றி எனது கருத்துகள் அல்ல. முரண்கள் இருந்தால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.//

சுபி ஐயா,

உங்க ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது.

பிற மதங்களின் யோகா உள்ளிட்டவற்றின் மீது இருந்த ஆர்வம் தான் உங்களை அவ்வாறு எடுத்து எழுத வைத்தது, அறிஞர்கள் சொறிஞர்கள் இன்னும் கூட பல இடங்களில் எழுதிவருகிறார்கள், அதையும் எடுத்துப் போடுங்கோ.

தனக்கு தனக்குன்னா %$%#%### க்கும் தாளம் போடும்னு சொல்லுவாங்க.

மேற்குலம் பற்றி தற்பொழுது வந்திருக்கும் மேலான சிந்தனைகள் வரவேற்க்கத் தக்கது. அவிங்களெல்லாம் ஒழுக்கமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள் என்றெல்லாம் செய்திபரப்பிவரும் நீங்க அவர்கள் காட்டினார்கள் என்று மேற்கோள் காட்டுவது விந்தையிலும் விந்தை

கோவி.கண்ணன் சொன்னது…

//வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை // ... ?...?...?//

ஒருவருக்கு பயத்தை ஏற்படுத்தும் ஒன்று மற்றவருக்கு அடிமையாக இருப்பது என்று பொருள்

Unknown சொன்னது…

வணக்கம் சகோ. நல்ல பதிவு மூடத்தனத்தை ஒழிக்க இன்னும் பல பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். எல்லா உயிரினங்களிலும் ஆண்+பெண் ஜோடி ஜோடியாக படைத்த கடவுள் திருநங்கைகளுக்காக எந்த ஜோடியைப் படைத்தானோ???

இனியவன்...

swartham sathsangam சொன்னது…

எனக்கு தெரிந்த ஒருவரின் நம்பகமான தகவலின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை வெளியிட்டோம். பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். பிறகு அதையும் நான் நீக்கி விட்டேன். தவறுகளுக்கு மன்னிக்கவும் இதை சரியான தருணத்தில் உணர்த்திய கோவி. கண்ணன் போன்ற நண்பர்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். //

ஒருவேளை அஞ்சு தலைப் பாம்பு இருந்து படமெடுத்தாலும் எல்லாத் தலையும் மொத்தமாக படமெடுக்க வாய்ப்பில்லை, ஒரு சில தலைக்கு கோவம் வராது, தவிர தலை எல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது போலவும் இருக்காது. கழுத்துப் பகுதியில் இருந்து தலைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத்தான் இருக்கும்.

நம்பகத்தன்மையை சோதிக்காமல் நீங்கள் இந்தப் படம் உண்மையானது கிராபிக்ஸ் இல்லை என்றெல்லாம் கூட எழுதி இருந்தீர்கள்.

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

என்னுடைய இரண்டு பைசாக்கள் இங்கு.

தருமி சொன்னது…

நல்ல பதிவு.

எனக்கு அந்த சிங்கத்தின் ‘சத்தம்’ ரொம்ம்ம்ம்ப பிடிச்சுது! என்னமா (சரியாக) கத்துது! எந்த ஊரு சிங்கம்... அரபியிலேயே பேசுதே!!

தருமி சொன்னது…

இந்தோனேசுயாவில் சுனாமிக்குப் பிறகும் ‘நின்ற’ மசூதிகள் பார்த்து அசந்துட்டேன். மனுசங்க செத்தாலும் பரவாயில்லை; ஆனால் அவனுக நமக்காகக் கட்டின கட்டிடங்கள் மட்டும் அழியக்கூடாதுன்னு நினச்ச அல்லாவை நினைச்சா ஒரேடியா புல்லரிக்குதுங்க.

அட .. அதுக்காக ஒரு பாட்டு போட்டுருக்காங்க பாருங்க ... ரொம்ப நல்லா இருந்திச்சி.

ஆமா, அல்லாதான் பாட்டெல்லாம் பாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரே .. பிறகு எப்படி மசூதிகளும் பாட்டுகளும் ஒண்ணா சேர்ந்து வருது. சாமிக்கு இதனாலேயே மறுபடியும் கோபம் வருமல்லவா?

நிகழ்காலத்தில்... சொன்னது…

swartham sathsangam சொன்னது…

எனக்கு தெரிந்த ஒருவரின் நம்பகமான தகவலின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை வெளியிட்டோம். பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். பிறகு அதையும் நான் நீக்கி விட்டேன். தவறுகளுக்கு மன்னிக்கவும் இதை சரியான தருணத்தில் உணர்த்திய கோவி. கண்ணன் போன்ற நண்பர்களுக்கு நன்றி.///

தவறுகள் நடப்பது இயல்பானதுதான். அதை திருத்திக்கொள்வதே மேம்படுவதற்கு வழி., இதை தாங்கள் நிறைவேற்றி இருக்கறீர்கள். இதற்கு மகிழ்கிறேன் :)டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தெளிவான விளக்கங்கள்

Srinivasan ramakrishnan சொன்னது…

போடா லுசு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்