பின்பற்றுபவர்கள்

12 ஏப்ரல், 2012

* ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெருமை !


பார்பனர்கள் சந்தியா வந்தனம் சொல்றச்சே....சொல்லும் போது ஏழு தலைமுறைகளின் பெயர்களாக அவர்களுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா கொள்ளுத் தாத்தாவின் அப்பா, கொள்ளுத் தாத்தாவின் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாவின் கொள்ளுத் தாத்தா பெயர்களைக் குறிப்பிட்டு இப்படியான பெருமைக் குரிய பாரம்பர்யத்தில் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் படி மந்திரம் இருக்கும். இவ்வாறு பரம்பரைகளின் பெயரைத் தெரிந்துள்ள பார்பனர்களில் சிலர் பார்பனர் அல்லாதவர்களைப் பார்த்து 'மூன்று தலைமுறைக்கு முன் உன் முன்னோர் பெயர் தெரியுமா ?' என்று நக்கலாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், வலைப்பதிவிலும் முன்பு இத்தகைய விவாதங்கள் ஓடியது. நாடோடிகள் படத்தில் சசிக்குமார் ஒரு காட்சியை வைத்து தனக்கு அவருடைய தந்தையின் முன்னோர்களைத் தெரியும் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு ஊர் மற்றும் அவர்கள் வசித்த இடங்களைப் பற்றி படத்தில் கூறி கைதட்டல் பெறுவார். பார்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நம்ம அப்பங்காரன் இதையெல்லாம் நமக்குச் சொல்லவில்லையோ என்று நினைத்து வருந்துவார்கள். நாம் எதோ தவறு செய்து முன்னோர்களை புறக்கணித்துவிட்டோம் என்றே நினைப்பர்.

முப்பாட்டன் பெயர்களை நினைவு வைத்திருப்பதோ அது ஒருவரின் தனிப்பட்ட பெருமைக்குரிய ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் இவர்களில் எத்தனை பெயர் தாய் வழி உறவையோ அல்லது தந்தையின் அப்பா, தாத்தா.......கொள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தாவின் மனைவிப் பெயரையோ தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி. ஆணிய சிந்தனையில் (தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே) என்பதாக குடும்பத் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களுக்கும் கொடுத்த மதிப்பை அவர்களின் மனைவியர் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள் ?

ஒரு குழந்தைக்கு பெற்றோர் என்றால் அதில் அப்பா - அம்மா இருவரும் சம அளவில் தான், இதில் தந்தையின் தந்தையை மற்றும் அவருடைய தந்தை என நினைவு வைத்திருப்பவதும், முன்னோர்களைப் போற்றுவதாகக் கூறுவதும் அதைப் பெருமை என்றும் அவ்வாறு தெரியாதவர்கள் தன் வரலாறு தெரியாதவர்கள் என்று தூற்றுவதும் நகைப்புக்கு இடமானதே.

நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் நினைவில் வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, நமக்கு யார் என்றே தெரியாதவர்களை நாம் அவர்களின் வழி வந்தவர்களாகவே இருந்தாலும் கேட்டுத் தெரிந்து போற்றுவதால் என்ன பலன் ? எதோ ஒரு கட்டத்தில் வாரிசே இல்லாமல் போகும் ஒருவரின் பரம்பரைகள் உலகத்தில் வாழ்ந்ததே இல்லை என்று ஆகிவிடுமா ?

இந்தியாவில் மட்டுமல்ல பிற மதங்களிலும் அவ்வாறே முந்தைய இடுகையில் கொடுத்திருக்கும் ஏசுவின் பரம்பரைப் பட்டியலில் ஆண்கள் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,  அது தொடர்பான வேறு பட்டியலில் சில இடங்களில் மட்டுமே சில பெண் பெயர்கள் வருகின்றன.

ஏழு தலைமுறை பெருமையை வெளியே சொல்ல தந்தை மற்றும் தாய் இருவரின் பெற்றோர்கள் அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் என 14 * 2  = 28 பெயர்கள் அல்லது ஏழு தலைமுறை எண்ணிக்கையில் தன்னையும் சேர்த்துக் கொண்டல் 12 * 2 = 24 பெயர்கள் தெரிந்திருந்தால் உங்கள் பரம்பரைப் பெயரைப் பெருமையாகச் சொல்லுங்கள் ஆனால் அதை வெளியே சொல்வதால் மற்றவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

ஏழு தலைமுறைப் பெயர்கள் தெரிவதால் நானும் எம் முன்னோர்களும் மேலானவர்கள், வந்த வழி தெரிந்தவர்கள் என்று கூறுவது நகைப்புக்கிடமானதே. பரம்பரைப் பெருமை என்பது ஆண்ட பரம்பரை அல்லது பே.......ட பரம்பரை, ராசராசன் வாரிசு என்று சொல்வதோ இல்லை, உங்கள் முன்னோர்கள் இன்றும் நினைவு கொள்ளத் தக்க ஏதேனும் ஊருக்குள் நல்லது செய்துள்ளார்கள் என்றால் அது தான் பெருமையானது, முகம் தெரியாத நடிகர்கள் மீது வைத்திருக்கும் தீராக் காதல்  போன்றதே நாம் பார்க்காத முன்னோர்களை நினைத்து பெருமை பேசுவதும். வெற்றுப் பெருமை அதனால் யாருக்கும் பயனில்லை.

தற்போதைய ஏழு தலைமுறைப் பெருமை என்பது ஆணாதிக்க பெருமை தான், இவற்றில் வெளியே சொல்வது அருவெறுப்பானது.

19 கருத்துகள்:

Raghav சொன்னது…

இதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...
Y chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன். அது அற்ற ஒரு உலகம் என்றால் அங்கு அடையாளத்திற்கான தேவையே இல்லாத வித்தியாசமோ தனித்துவமோ இல்லாத உலகமாக இருக்குமோ என்னவோ?!? அது நல்லதா இல்லையா என்பதை கூற இயலவில்லை.

திருமணம் ஒரு சமூக வரையறுப்பு... நான்கு தலைமுறைக்கு மேல் ஒருவன் பெயரை குறிப்பிடும் பொது குறிப்பிட்ட நபர்க்கு அந்த தலைமுறை இணைப்பு அவன் மனைவியால் மட்டுமே கொடுக்கப்படும் ஒரு விஷயம். இதில் அந்த மனைவியின் பெயர் குறிப்பிட வில்லை அனால் அவர்களை மரியாதையுடன் வணங்குவதாகவே கருதுகிறேன். மேலும் ஸ்ரார்தம் போன்ற விஷயங்களில் மூன்று தலைமுறை வரையில் பெண்களின் பெயரும் இடம்பெருகிரதேன்றே நினைக்கிறன் - என் ஞாபகம் தவறில்லை என்றால்.

திருமணங்களின் பொது இதுபோன்ற தலைமுறை பெயர்களை குறிபிடுவது வழக்கம். இது ராமாயனத்திலும் வருகிறது. ராமனின் தலைமுறை இக்ஷ்வாகு வரையும் சீதையின் தலைமுறை முதல் ஜனக ராஜாவும் அவர் தந்தை நிமி ராஜா வரையிலும் குறிப்பிட படுகிறது.

பொதுவாக பலவிஷயங்கள் நமது கலாச்சாரங்களில் சாதாரணமாக குரிபிட்டவையோ அல்லது ஒரு விஷயத்தின் பொருதே மட்டும் குரிப்பிடவைகளோ ஊதி ஊதி hype கொடுத்து பெரிதாக படுகின்றன. சனாதனத்தில் ஊதி பெருசாக சொல்ல தேவைகள் இருபதில்லை. பெருமைபடுபவர்களும் அல்லது இதை சொல்லி மற்றவர்களை கீழ்படுதுபவர்களையும் நொந்து கொள்ளவதை விட சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஒரு விஷயம் நிச்சயம், நம் முன்னோர்களை புரிந்து கொள்வது மூன்றோ, ஏழோ, பதினாலோ, இருபதினாலோ - எந்த ஒரு முக்கிய சந்தர்பத்தில் அவர்கள் செயல் என்னவாக இருந்தது என்பதை புரிந்துகொள்வது நம் அடிப்படையை பொட்டில் அறைதாற்போல் சொல்லும் ஒரு விஷயமாக எடுத்துகொள்ளலாம். உதரணத்திற்கு இயேசுவின் தலைமுறையினரில் பொதுவாக காணபடுவது இறைவன் பால் அவர்கள் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த புரிதல் பொருட்டு தலைமுறையினரை வணங்குவதும் அவர்களை நினைவில் கொள்ளுவதும் தவறில்லை என்று எண்ணுகிறேன்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்

நாங்களும் பெரியவர்களிடம் கேட்டு ஜெனி மரம் கணிணியில் வரைந்திருக்கிறோம்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தெய்வத்திருமணங்களில் பிரரவம் என்கிற சடங்கில் ஏழு தலைமுறைப் பெயர்கள் ராகமாக சொல்வார்கள் மந்திரம் மாதிரி ஒலிக்கும்.. அருமையாக இருக்கும்..

Subramanian சொன்னது…

கடந்த கால ஆணாதிக்க சமூகத்தை எதிர்ப்பது மட்டுமல்லாது, நிகழ்காலத்திற்குள் ஊடுருவும் அதன் வேர்களை வெட்டி எறிய முயற்சிக்கும் தங்களது எண்ணத்திற்கு காலத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!

Subramanian சொன்னது…

@ Raghav
//இதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...//

//Y chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன்.//

இதுபோன்ற வார்த்தைகளை இன்னும் எப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்க முடியும் நண்பரே? கொஞ்சம் பொறுப்புடன் நாம் செயல்படுவது, பல மேம்படல்களுக்கு வழிவகுக்கும். நன்றி!

எல் கே சொன்னது…

கோவியாரே, உங்களுக்கு சரியாக தெரியாவிடில் உங்கள் நண்பர் கேசவனிடம் கேட்டு எழுதவும். நீங்கள் சொல்லுவது தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்யும் சமயத்தில் சொல்லுவது. அதில் தாத்தா பேரும் வராது அப்பா பேரும் வராது. இந்த ரிஷிகளின் வம்சத்தில் வந்தவன் , இந்த வேதத்தை (ரிக்/யசுர்/சாமம்/அதர்வணம் ) அத்யயனம் பண்ணுபவன் என்று வரும்

அன்பு ஆமீரா சொன்னது…

தனது பரம்பரை மூதாதையரை நினைவுகூர்வதில் என்ன தப்பு இருக்கிறது என்று புரியவில்லை அண்ணா. எனக்கும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எனது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கவும் அவர்கள்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் விருப்பமாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...
Y chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன்.//

திரு இராகவ், X குரோமோசோம் என்ன தவறு செய்தது, மேற்படி பரம்பரைப் பெருமைகளில் ஒரு பெண் பெற்றொருக்கு ஒரே குழந்தையான பிறகு அவளுக்கு திருமணம் செய்ய அவர்களது முன்னோர்கள் நினைக்கப்படவில்லை என்பதையாவது ஒப்புக் கொள்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இராஜராஜேஸ்வரி கூறியது...
நான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்

நாங்களும் பெரியவர்களிடம் கேட்டு ஜெனி மரம் கணிணியில் வரைந்திருக்கிறோம்..//

நல்லது, பெற்றோர்களின் பெற்றோர்கள் அனைவரையும் நினைவில் வைத்திருப்பது சிறப்பானது, இந்தக் கட்டுரையின் சாடல் தந்தைவழியில் ஆண்களை மட்டும் நினைவு படுத்திக் கொள்வதை பெருமையாக குறிப்பிடுகிறர்கள் என்பது தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//இராஜராஜேஸ்வரி கூறியது...
தெய்வத்திருமணங்களில் பிரரவம் என்கிற சடங்கில் ஏழு தலைமுறைப் பெயர்கள் ராகமாக சொல்வார்கள் மந்திரம் மாதிரி ஒலிக்கும்.. அருமையாக இருக்கும்..//

அதில் ஆண் பெண் இருவரையும் குறிப்பிட்டார்களா ? என்பதே கேள்வி

கோவி.கண்ணன் சொன்னது…

//வே.சுப்ரமணியன். கூறியது...
கடந்த கால ஆணாதிக்க சமூகத்தை எதிர்ப்பது மட்டுமல்லாது, நிகழ்காலத்திற்குள் ஊடுருவும் அதன் வேர்களை வெட்டி எறிய முயற்சிக்கும் தங்களது எண்ணத்திற்கு காலத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!//

திரு வே சுப்ரமணியன் ஒத்தக் கருத்துகளுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//எல் கே கூறியது...
கோவியாரே, உங்களுக்கு சரியாக தெரியாவிடில் உங்கள் நண்பர் கேசவனிடம் கேட்டு எழுதவும். நீங்கள் சொல்லுவது தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்யும் சமயத்தில் சொல்லுவது. அதில் தாத்தா பேரும் வராது அப்பா பேரும் வராது. இந்த ரிஷிகளின் வம்சத்தில் வந்தவன் , இந்த வேதத்தை (ரிக்/யசுர்/சாமம்/அதர்வணம் ) அத்யயனம் பண்ணுபவன் என்று வரும்//

இங்கு யாரும் பார்பனர்கள் நான் குறிப்பிட்டுள்ளதில் தவறு என்று மறுதளித்தாகத் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அன்பு ஆமீரா கூறியது...
தனது பரம்பரை மூதாதையரை நினைவுகூர்வதில் என்ன தப்பு இருக்கிறது என்று புரியவில்லை அண்ணா. எனக்கும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எனது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கவும் அவர்கள்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் விருப்பமாக இருக்கிறது.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012 3:23:00 am GMT+08:00 //

பரம்பரைப் பெருமை என்றால் தாய் தந்தையர் இருவரின் பெயர்களை தெரிந்து வைத்திருந்து அவர்கள் பெருமைக் குரிய நற்செயல் செய்திருந்தால் போற்றுவதில் தவறு இல்லை

எல் கே சொன்னது…

/இங்கு யாரும் பார்பனர்கள் நான் குறிப்பிட்டுள்ளதில் தவறு என்று மறுதளித்தாகத் தெரியவில்லை/

கமென்ட் போட்டவங்க யார் பிராமணர் என்று எனக்குத் தெரியாது...நான் அறிந்ததை சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் .ஆனால் உங்கள் நண்பர் விடுமுறை முடிந்து வந்தவுடன் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//கமென்ட் போட்டவங்க யார் பிராமணர் என்று எனக்குத் தெரியாது...நான் அறிந்ததை சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் .ஆனால் உங்கள் நண்பர் விடுமுறை முடிந்து வந்தவுடன் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவும்//

பின்னூட்டம் போட்டவர்களின் ரிஷி மூலம் எனக்கும் தெரியாது, அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை, ஆனால் பார்பனர்களும் இந்தப் பதிவை படித்திருப்பார்கள் என்ற பொருளில் தான் மேலே சொல்லியுள்ளேன்.

நன்றி
:)

Ramachandranwrites சொன்னது…

நீங்கள் சொல்வது தவறு, சந்தியா வந்தனத்தில் ஏழு தலைமுறை பெயர் எல்லாம் வராது

Raghav சொன்னது…

சென்னை - திருச்சிக்கு வழி சொல்லுங்கனு கெட்டா எனக்கு இன்த பக்கம் கோயமுத்தூருக்கும் வழி தெரியும் இதயும் நான் சொல்லியெ தீருவேன் நீங்க கேட்டெ ஆகனும்நா... சொப்பா!

"@வே.சுப்ரமணியன். கூறியது... :
பல மேம்படல்களுக்கு வழிவகுக்கும்." - இவைகளால் அல்லது இவைகளை சாடுவதால் மேம்படல்களுக்கு வழி கிடைக்கும் என்று நம்ப முடியவில்லை.

சனாதனத்தில் பென்களை பொற்றும் இடங்கள் எராளம். அங்கெல்லாம் இது என்ன பென் ஆதிக்கம் என்றால்... அதை பொல் தான் இதுவும் இருக்கிரது.

இது குறிப்பாக எங்கு இடம் பெருகிறது என்று எணக்கு தெரியவில்லை,இங்கு பொருள் உள்ளதாக படுவதினால் கூறுகிரென். குருவிடம் கல்வி கற்க வந்த சிருவனிடம் நீ யார் பிள்ளை எனற கேள்விக்கு தன் தாயின் பதிலை குருவிடம் கூருகிரான், நான் என் தாய் ஜாபாலாவின் மகன், எனக்கு படிக்க விருப்பம்- என்கிற அளவில். இதை குருவும் ஏற்கிறாற். இது சனாதன மரபில் வருகிர ஒன்ரு.

நான் சொல்ல வருவது இதை தான், இதை இதன் பொருட்டு செய்ய வேண்டும் எனும் பொது அதை அப்படி தான் செய்ய வேண்டும். காலபொக்கில் இதை எதற்க்கு ஏண் செய்கிறொம் என்ரு கேள்வி எழந்து விடை கண்டால் நல்லது. இல்லை விடை நம் சிற்றறிவிற்கு இன்னும் எட்ட வில்லை என்ரால் தெடலை நிருதாமல் செயலையும் தொடர்வதெ சரி.

அது ஒருவாராக மேம்படல்களுக்கு வழி வகுக்கும்.

"@எல் கே கூறியது..."-பொல் சந்தியாவன்தனதிர்கும் மூதாதயர் பெயர்களை சொல்வதர்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் தெரின்த வரை மூதாதயர் பெயர்களை சொல்லும் இடங்களும் உன்டு. அதன் பொறுட்டெ இங்கு பின்னூட்டம் இடுகிரென்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

அப்பா வழியில் 7 ம் அம்மா வழியில் 5 ம் தெரியும் எனக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா கூறியது...
அப்பா வழியில் 7 ம் அம்மா வழியில் 5 ம் தெரியும் எனக்கு :)//

அதெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது, (7 x 2) * 2 (பெற்றோர்கள்) மொத்தம் 28 பெயர் தெரிந்தால் வாங்க, மற்றபடி செல்லாது. ஆணாதிக்கம் தான்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்