பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2012

ஆவியில் கோவி ...!

நாளிதழ்களில் பெயர் வருது ஏற்பு (அங்கீகாரம்) என்று நான் வலைப்பதிவில் எழுதும் முன்பு நினைத்திருந்தேன், வலைப்பதிவில் எழுதும் முன்பு சிங்கைத் தமிழ்முரசில் கவிதை, சிறுகதைகள் எழுதியுள்ளேன், வெளி இட்டிருகிறார்கள், வலைப்பதிவில் எழுதத் துவங்கிய பிறகு பதிப்புகளுக்கு (Printed Magazine) எழுதுவதில்லை, காரணங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் அலுப்பு என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, தவிர வலைப்பதிவில் எழுதும் போது அதற்கான எதிர்வினைகள், பாராட்டுகள், கருத்துகள், மாற்று கருத்துகள் உடனடியாகக் கிடைக்கிறது என்பதும் தான்.

விகடன் 100 ஆண்டு காலத் தமிழக வார இதழ், ஓரளவு நடுநிலையோடு எழுதுவார்கள், தினமலர், துக்ளக் சார்பு நிலைகளை ஒப்பிட விகடன் குழுமம் ஆயிரம் மடங்கு சிறப்பானது. விகடன் குழும ஆனந்தவிகடனில் சார்பு அரசியல் மிகக் குறைவே, அதனால் தான் அவர்களின் வார இதழ் மற்றும் பிற இதழ்கள் தமிழக இதழ்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.

ஆனந்தவிகடனின் இந்தவாரப் பதிப்பில் எனது வலைப் பதிவு பற்றிய தகவல்கள் வெளி இடப்பட்டுள்ளன. அதில் நான் சர்சைக்கு இடமாக எழுதியுள்ள (இந்தியா மற்றும் திருநங்கைகள் குறித்தவற்றின்) இரண்டு பத்திகளும் உள்ளன. இதே போன்று வலையோசையை தினமலர் திரட்டினால் இது போன்ற தகவல்களை வெளி இடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

விகடனின் வாசகர் வட்டத்தை ஒப்பிட அவர்களுடைய வார இதழில் எனது பதிவைக் குறிப்பிட்டு அறிமுகம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
விகடன் குழுமத்திற்கும், விகடனின் வலையோசையில் எனது பதிவு இடம் பெற்றிருப்பதாகச் சுட்டிக் காட்டி வாழ்த்திய நண்பர்களுக்கு மிக்க நன்றி.
17 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

அகல்விளக்கு சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவரே...

வவ்வால் சொன்னது…

கோவி,

வாழ்த்துகள்! ஆவியும் அவ்வப்போது நல்லப்பதிவுகளையும் அடையாளம் காட்டுகிறது எனத்தெரிகின்றது. ஆவியில் சினிமா தவிர்த்து நல்ல கட்டுரைகள் என்பது குறைவே,ஆவியில் வரும் கட்டுரைகளை தங்கள் கட்டுரைகள் மிகுந்த செரிவானவை.

வாழ்த்துகள்,தொடரட்டும் உங்கள் வலையோசை கல கலவென தமிழ் பதிவுலகில்!

துளசி கோபால் சொன்னது…

இனிய வாழ்த்து(க்)கள்.

கானா பிரபா சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் ஒளவியமாகவும் இருக்கிறது.

R.Puratchimani சொன்னது…

எல்லாம் பூனையார் அருள்தான் :) வாழ்த்துக்கள்

naren சொன்னது…

வாழ்த்துக்கள்....

வேகநரி சொன்னது…

வாழ்த்துக்கள். பூனையார் தக்க கூலியை உங்களுக்கு தந்துள்ளார்.

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்...

வலசு - வேலணை சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

kaialavuman சொன்னது…

அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை என்றாலும், தங்கள் பதிவுகளை கட்ந்த 7-8 வருடங்களாகத் தொடர்ந்து படித்துவருபவன் என்பதால் ஆவி சிறந்த ஒரு பதிவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது என்பது என் கருத்து.

வாழ்த்துகள் நண்பரே!

Riyas சொன்னது…

வாழ்த்துக்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி!

காலம் கடந்து, ஆனந்த விகடன் சரியான தேர்வைச் செய்துள்ளது.

கிரி சொன்னது…

வாழ்த்துகள் கில்லாடி கண்ணன் :-)

Unknown சொன்னது…

Congrats Goviji, really it is very happy news; you deserve for it.

Ama party eppa, enge? :)

'பசி'பரமசிவம் சொன்னது…

தங்களின் எழுத்தாற்றலுக்குத் தரப்பட்ட மரியாதை.
வாழ்த்துகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்