பின்பற்றுபவர்கள்

15 ஏப்ரல், 2012

* தமிழர்களின் வீண் பெருமை !


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் - மனித இனம் உட்பட ஏனைய உயிர்களும் பிறப்பினால் மேன்மையானவை என்று சொல்லியவன் ஒரு தமிழன், அண்மையில் தான் இந்த கருத்து உலகத்தினரில் சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்பதாக விலங்கு பாதுகாப்பு அமைப்புகளாக 'ப்ளூ க்ராஸ்' அமைப்புகள் தோன்றியுள்ளன, நிற அடிப்படைடில் மனிதனையும், ஏனைய விலங்குகளையும் அடிமையாகவும் அற்பமாகவும் நினைக்கும் புற உலகில் அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதியவன் தமிழன்.

முல்லைக்கு தேர், மானுக்கு போர்வை என்று தாவிரங்களையும், விலங்குகளையும் நேசித்திருகின்றனர் தமிழ் மன்னர்கள், புதுச் சிந்தனை என்ற பெயரில் நம்மவர்களே முல்லைக்குக் கொடுத்தத் தேரை உருவாக்க வெட்டப்பட்ட மரங்கள் எத்தனையோ, எனவே மன்னன் தாவிரங்களிடம் அன்பாக இருந்தால் தேரைக் கூடப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாமே என்பர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வில் நாம் இவ்வாறு சொனனாலும், காடுகள் நிறைந்த அந்த காலத்தில் மரத்தை வெட்டுவது பெரிய இழப்பாக இருந்திருக்கவில்லை, தவிர காடுகளை அழித்து நாடுகளாக்குவது, விரிவாக்கம் செய்வது தான் மன்னர்களின் வேலை, ஆனால் முல்லைக்கான தேர் என்ற தகவலில், முல்லை இயல்பாக கொடியில் படர்ந்து வளர்வது அதற்கு பற்றிக் கொள்ள கொழுக் கொம்பு இல்லாததால் அது தனது இயல்பான வளர்ச்சியை எட்டமுடியாமல் தவிக்கிறதோ என்று வருந்தி மன்னன் தன் தேரைக் கொடுத்தான் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்றார் வள்ளலார், அப்படி என்றால் சைவரான அவர் கீரைக் குழம்பு சாப்பிட்டது இல்லையா ? என்கிற குதர்க்கத்தினால் என்ன பயன் ? பயிர் பலனுக்கானது என்றே விதைக்கப்படுகிறது, அவை பலன் தரும் முன்பே அவற்றை பராமரிக்காமல், கவனிக்கப்படாமல்,நீர் ஊற்றாமல் இருப்பதைப் பார்த்து வள்ளலார் அவ்வாறு குறிப்பிடுகிறார், பருவம் எய்தியவர்கள் பயன்படா வாழ்க்கை என்பதை வைத்து முதிர்கன்னி கவிதைகள் எழுதுவோர் சற்று நினைத்துப் பார்க்கவும், இங்குப் பயிர் வாட்டமும் கன்னிப் பெண்ணின் வாட்டமும் பயனற்ற நிலை என்ற அளவில் பார்க்க, பயன் தருவதால் தனக்கும் பெருமை என்ற நிலையை பயன்பாடற்ற நிலை தருவதில்லை, வீணடிக்கப்படுகிறது, பயனற்றுப் போகிறது தவிர தன்னுடைய தன்மையையும் அது (பசுமைத்) தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறதே என்கிற வாட்டம் தான் வள்ளலாரின் வாட்டம், கீரைக் குழம்பு சாப்பிடுவது பற்றி அல்ல.

கவிஞர் அறிவுமதிப் சிங்கை நிகழ்ச்சியில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு தகவல் சொன்னார், இன்றும் வடவர்கள் இராவணை அழிப்பதாகக் கூறி ஆண்டு தோறும் தெற்கு நோக்கி வில்லில் நாண் தொடுத்து அம்புகளை விடுகின்றனர், ஆனால் கொலைக் கருவியில் ஒன்றான வில்லை கவிழ்த்து வைத்து இசைக்காகப் பயன்படுத்துகிறான் தமிழன், வில்லுப்பாட்டு, உலகிலேயே கொலைக் கருவியையும் இசைக் கருவியாக்கிப் பயன்படுத்தும் பெருமை பெற்றவன் தமிழன் தான்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - அவ்வையார், உலகில் எந்த ஒரு நாட்டிலும் தாய் தந்தையரை கடவுளாகப் போற்றும் வழக்கம் கிடையாது, உலக வழக்கம் பெற்றோர்களிடம் அன்பு செலுத்துவது மற்றும் அவர்களின் பாதுகாப்பில் வளரும் வரை இருப்பது மட்டுமே, தாய் தந்தை தான் முதலில் உனக்கு தெய்வம் மற்றதெல்லாம் பிறகே என்றவன் தமிழன்

யாதும் ஊரே யாவரும் கேளீர் - எல்லா நாடும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று உலகெங்கிலும் பல்வேறு படையெடுப்புகளைத் தான் காலம் தோறும் கடைபிடித்தே வருகின்றனர், ஆனால் உலகத்தில் உள்ள எல்லா ஊரும் ஒன்றே தான், அவற்றில் வேறுபாடுகள் இல்லை, உன் நாட்டை நேசிப்பது போல் பிற நாட்டையும் நேசி என்கிறார் கனியன் பூங்குன்றனார், ஒரு தமிழர்.

எல்லாவற்றிக்கும் மேலாக குற்றம் செய்தவன் கடவுளே ஆனாலும் 'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று எடுத்துரைத்தான் தமிழன், எவருக்கு வரும் இந்தத் துணிவு ? 

தமிழர் தம் தனி இயல்புகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால்

இவற்றையெல்லாம் நினைத்துப் பெருமைபடுங்கள் என்று நான் சொல்லவரவில்லை, பழம்பெருமையில் திளைத்திருங்கள் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை ஆனால் இவை தமிழனின் தனிச் சிறப்பாக இருந்தது, பெருமைக் குரியதாக இருந்தது இலக்கியம், வாழ்வியல், விலங்குகளையும், தாவிரங்களையும் நேசிப்பது இவற்றை நாம் எந்த பிற மொழி/மத. இனத்தினரிடமிருந்தும் கற்றுக் கொள்ளத் தேவை இல்லை, இவற்றையெல்லாம் நான் கற்றுக் கொடுக்கும் நிலையில் தான் நாம் இருந்தோம் தற்போது தன்னிலை மறந்துவிட்டோம். நமது பெருமைகளெல்லாம் வீண் (வீணாகப்) போய்விட்டது

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

என்பதை மட்டும் நாம் நம் பொருளியல் சார்ந்த தன்னல வாழ்கைக்காக பின்பற்றிவருகிறோமோ.

பின்குறிப்பு : தமிழ்மண நட்சத்திர வாரத்தின் இடுகைகள் இத்துடன் முற்றிற்று, திங்கள் கிழமை காலை ஒரு நன்றி நவிழல் இடுகையுடன் என் நட்சத்திர வாரம் நிறைவுறும்.

15 கருத்துகள்:

விழித்துக்கொள் சொன்னது…

vanakkam thiru kovi kannan avargale
enakku indha padhivu migavum pidiththirundhadhu nandri
surendran

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மாற்தட்டி சொல்லடா மனிதன் என்று தலைநிமிர்ந்து நில்லடா தமிழன் என்று.

'பசி'பரமசிவம் சொன்னது…

’நட்சத்திர வாரத்தில்’ தங்களின் ஆழ்ந்த படிப்பறிவு அறியப்பட்டது; சிந்திக்கும் திறன் உணரப்பட்டது; படித்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
உளப்பூர்வமான பாராட்டுகள்.
மிக மிக மிக்க நன்றி கண்ணன்.

Unknown சொன்னது…

மிக அருமையான சிந்தனைகள்
ப்கிர்ந்தமைக்கு நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

படத்துல பாட்டி,பாட்டன்களை காணும்போது தலைப்பை தமிழனின் பெருமை என்றே வைத்திருக்கலாம்.

நேற்று எங்கெங்கோ சுற்றி கடைசியில் மதுரைக்குப் போய் விட்டேன்.கோயிலின் கட்டிடக் கலை தவிர மதுரையின் சாலைகள் கட்டமைப்பு பிரமிக்கத் தக்கவை.ஆனால் யதார்த்தமாக பார்க்கும் போது லட்சுமி நாயர் சேச்சி மட்டன் தோசை எப்படி செய்வது என்று தோசை மாஸ்டரிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்.

அய்யா தருமி முன்னாடி மதுரை மீனாட்சியம்மன் கோயில் பக்கமெல்லாம் சுத்திகிட்டிருந்திருப்பார் போல தெரியுது.

பெருமைகள் ஒரு புறமிருக்க மதுரையைச் சார்ந்த கணினி துறையாளர்கள் சுமார் 25% பல இடங்களிலும் பணிபுரிந்தாலும் கணினிப் பொருளாதாரத்துக்கு மதுரையில் மூலதனம் செய்ய யாரும் முன் வருவதில்லை என்பதற்கு மதுரை பற்றிய எதிர்மறையான வன்முறை கலாச்சாரமே காரணமா?

Robin சொன்னது…

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

தமிழன் பெருமைகளைச் சொல்லி பிற மொழியினரை வெறுப்பேற்றுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு :)

Robin சொன்னது…

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

தமிழன் பெருமைகளைச் சொல்லி பிற மொழியினரை வெறுப்பேற்றுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு :)

Unknown சொன்னது…

நமது பண்டைய தமிழ் சான்றோர்கள் தங்கள் சிந்தனைகளை தனி மனித நன்மைக்காக அல்லாமல் சமூக நன்மைக்காகவே கோட்பாடுகளாக வழங்கினார்கள். அவற்றை மீறினால் சமூக தீமை உறுதி என்பதாக இருந்தது.
ஆனால் தங்களை போன்றோர் பெரும்பான்மையோர் பக்கம் சேர்ந்துகொண்டு வயிறை வளர்ப்பதால் சமூகத்தில் அறநெறிகள் அழிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்ணுரிமை என்னும் பெயரில் அரங்கேற்றப்படும் அக்கிரமங்கள்.

பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அனுபவத்தின் பேரில், சமூக நன்மையை கருதி, கற்றுணர்ந்த சான்றோர்களால் பரிந்துரைக்கப்பட்டவைகளே.
பெண்பாற் புலவரான ஔவையார் “ தையல் சொல் கேளேல் “ என்று அதாவது பெண்களின் சொற்க்களை கேட்டு நடக்க வேண்டாம் என்று ஆண்களுக்கு அறிவுரித்தியுள்ளார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி “ பெண்வழிச் சேறல் ” என்ற தனது 91- வது அதிகாரத்தில் பெண்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை 10 குறள்களில் பட்டியலிடுகிறார்.
ஆனால் இன்றைக்கு தங்களை போன்றோரும், ஊழலில் கைதேர்ந்த அரசியல்வாதிகளும்,கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களும் தங்கள் சுயநலனுக்காக மக்கள் நலனையும், நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்கும் மகா பாதக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் சமீப காலமாக இந்தியாவில் பெண்ணுரிமை என்னும் பெயரில் இந்திய ஆண்களை ஒடுக்கும் அராஜகங்கள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பாவி ஆண்களும், குடும்பங்களும், கலாச்சாரங்களும் ஆண்களின் தொழில்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
அவைகளில் முக்கியமானவை,
1 ) வரதட்சினை தடுப்புச்சட்டம் :
பாதிக்கப்பட்ட பெண்களை விட பாதிக்கப்படாத பெண்கள் தரும் பொய் புகார்களால் நிலைகுலையும் குடும்பங்களும், முதியவர்களும், பணிகளில் கவனம் செலுத்தமுடியாத ஆண்களும் அதிகம்.
2 ) குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்.
பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் தரம் கெட்ட, பலி, பாவங்களுக்கு அஞ்சாத பெண்களால் உண்டாகும் விளைவுகள் தனிமனித உயிருக்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இவைகள் போதாதென்று மனைவி விவாகரத்து கோரினால் கணவன் எதிர்த்தாலும் மனைவிக்கு உடனே விவாகரத்து வழங்கப்படுவதொடு கணவனின் சொத்தில் மனைவிக்கு சரி பாதி உரிமையுண்டு. அதே காரணத்திற்காக கணவன் விவாகரத்து கோரினால் மனைவி மறுத்தால் கணவனுக்கு விவாகரத்து மறுக்கப்படும். ஒருவேலை மனைவியின் ஒப்புதலுடன் கணவனுக்கு விவாகரத்து கிடைத்தாலும் மனைவியின் சொத்திலிருந்து கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற சமநீதி இல்லாத சட்டத்திற்கு கேபினெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்தகைய சட்டங்களால் பெண்கள் திருமணங்களின் மூலம் பெருமளவு பொருள் ஈட்டும் எளிய வழி உருவாக்கப்பட்டுள்ளது., திருமணங்கள் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சட்டபூர்வமான, லாபகரமான தொழிலாக ( LEGAL PROSTITUTION ) மாற்றப்பட்டுள்ளது.

Unknown சொன்னது…

நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களின் வளமான வாழ்விற்கு வழி செய்தால் வரவேற்கலாம். ஆனால் ஏற்கனவே பெண்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டங்களால் சாதித்திருப்பது என்ன ?
1 ) மேற்கத்தியர்கள் நம் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைபட்ட காலங்கள் போய் நம் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றுநோயை போல பரவிவருகிறது.
2 ) குடும்பங்களில் வாழ்ந்த முதியவர்கள் இன்று தெருக்களிலும், காப்பகங்களிலும் வாழ்கிறார்கள்
3 ) பிள்ளைகள் பெரியவர்களின் அரவணைப்பிலும், வழிகாட்டுதளிலும் வளர்ந்து பண்பாளர்களாகவும், நாட்டு பற்று மிக்கவர்களாகவும் உருவான காலம் போய் இன்று முறையான வளர்ப்பில்லாமல், தடம் மாறி, சீரழியும் அவலங்கள் நடைபெறுகிறது.
4 ) நாட்டின் பொருளாதாரத்தை தாங்கும் இளையஞர்கள் இன்று தரம் தாழ்ந்த பெண்களின் பொய் வழக்குகளால் சிக்கி சிறை சாலைகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள்.
5 ) மேற்கத்திய மோகத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள்.
6 ) பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பெண்களும், ஆண்களும் காம போதையில் மிதந்து தங்கள் கல்வியை, பொறுப்புகளை, எதிர்காலத்தை தொலைக்கும் அக்கிரமங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
7 ) இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல நாட்டில் காம போதையை ஏற்படுத்தி, மயங்கி கிடக்கும் காதலர்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு வியாபார சக்திகளின் ஆதிக்கம் பெருகிவருகிறது.
8 ) மேற்கத்திய உடை மற்றும் அழகுசாதன பொருட்களின் அமோக விற்பனையால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவு பொருளீட்டி வருகின்றன. சொந்த நாட்டில் தொழில் முனைவோரும், நாட்டு பாரம்பரியங்களும் உருத்தெரியாமல் அழிந்து வருகின்றன

Unknown சொன்னது…

இத்தகைய சட்டங்களை இந்த மண்ணில் பிறந்த, தேச பற்று மிக்க உண்மையான இந்திய குடிமகனுக்கு ஆதரிக்கும் எண்ணம் இருக்காது.
ஆனால் இத்தகைய அநியாய சட்டங்கள் அரங்கேருவதற்க்கு யார் காரணம் ? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? யார் ?
நிச்சயமாக வர்த்தக நோக்கம் கொண்ட திருடர்களான பன்னாட்டு நிறுவனங்களும் , ஊழல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், தான்.


• தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் மேர்பட்டவர்கள் மீது கிரிமினல் குற்றசாட்டுகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவிக்கிறது.
• ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவதர்க்காக இந்திய அமைச்சகங்களுக்கும், பெண்ணுரிமை வாத அமைப்புகளுக்கும் 2010-2011 ஆண்டிற்காக ரூபாய் 67,749.80 கோடி பண பட்டுவாட செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


நமது நாட்டு மக்கள் ஊழல் பெருச்சாளிகளை தங்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளுக்கு வியாபார உலகின் திருடர்கள் லஞ்சத்தை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இந்த பன்னாட்டு வியாபாரிகள் நாட்டை தங்களின் மறைமுக கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.
ஏமாற்று பிரசாரங்களை செய்து எத்தகைய பொருட்களையும் விற்று தீர்க்கும் வல்லமை படைத்த வியாபார உலகம், பலகாலமாக ஆண்களை தங்கள் வியாபார இலக்காக கொண்டு விரும்பத்தகாத மணமுடைய சிகரேட், பீடி, மற்றும் மது வகைகளையே ஆண்மையின் அடையாளம் என்று விற்று வந்தது. ஆண்களை குறிவைத்து தயாரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளையும் விற்று ஒரு உச்சபட்ச நிலையை ( saturation ) அடைந்த நிலையில், ஆண்களை குறிவைத்து ஒரு சில பொருட்களையே வியாபாரம் செய்ய வாய்ப்புகள் உள்ள நிலையில், பெண் இனத்தை தங்கள் வியாபார இலக்காக கொண்டால் கணக்கிலடங்காத பொருட்களை சந்தை படுத்த வாய்ப்புகள் உள்ளதாக உணர்ந்தது. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு பொருளாதார நாடுகளிலும் ஊழல் பெருசாளிகலான அரசியல் வாதிகளை லஞ்ச லாவண்யங்கள் மூலம் அடக்கி நாட்டை தங்கள் மறைமுக கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதன்பிறகு பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றுவது மட்டுமல்ல தங்கள் வியாபாரத்திற்கு தடையாக பெண்களை கட்டுபடுத்தும் ஆண்களை ஒடுக்கும் பணிகளையும் ஒருசேர செய்துவந்தனர். அவர்கள் நவீன யுகத்தில் சொந்த மண்ணில் பிறந்த ஆண்களை தொலைவிலிருந்து ஒடுக்கும் ரிமொட்கான்ரோல்களாக செயல்படுகின்றனர்.
அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார நாடுகளை பதம் பார்த்து, அங்கு மனநல மருத்துவர்களுக்கு பற்றாகுறை ஏற்படுமளவுக்கு மனநல நோயாளிகளை உருவாக்கி சமூகத்தை சீரழித்த இந்த பன்னாட்டு வியாபார சக்திகளின் தற்போதைய இலக்கு தற்பொழுது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நம் இந்திய நாடு.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் தாராளமயமாக்கல் கொள்கையின் முழு பலனையும் அடைய விரும்பும் வியாபார சக்திகள், இந்திய பெண் இனத்தை முழுமையாக பயன்படுத்த தலைப்பட்டுவிட்டன. பெண்களுக்கான சமூக கட்டுபாடுகளை நீக்கி, பெண்களின் உணர்வுகளையும் தூண்டிவிட்டு அதற்க்கு ஆண் இனத்தை அடி பணிந்து போகும் படியான அபாண்டமான சட்டங்களை பெண்ணுரிமை என்னும் பெயரால் அரங்கேற்றி வருகின்றனர். இதனை ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையோடு, வியாபார சக்திகளின் சேவகனான நம் நாட்டு ஊழல் அரசியல்வாதிகள் அரங்கேற்றி வருகிரார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கலாக ஊடகங்கள் தன் பங்கை செய்கிறது.

Unknown சொன்னது…

அணைவரும் அறிந்த ஒரு புகழ் பெற்ற கதையை இங்கு காண்போம் .
ஒரு முட்டாள் மன்னனிடம் வியாபாரம் செய்ய நினைத்த துணி வியாபாரி “ தான் கொடுக்கப்போகும் ஆடை முட்டாள்களின் கண்களுக்கு தெரியாது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியும் “ என்று இல்லாத ஆடையை இருப்பதாக பொய் கூறி மன்னனிடம் ஒரு காலி பெட்டியை கொடுக்க, அதனை பெற்ற முட்டாள் மன்னன் தன்னை புத்திசாலி என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள தான் அந்த ஆடையை உடுத்திகொண்டதாக நிர்வாணமாக உலாவருவதும், அதனை கண்ட மக்களும் தங்களை புத்திசாளிகலாக காட்டிக்கொள்ள மன்னன் அழகான ஆடை அணிந்திருப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றிகொண்டிருக்கும் சம்பவங்களே நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. பொருளாதாரம் என்னும் பெயரில் அகில உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வியாபார உலகம், தனது வியாபாரத்தின் நுகர்வோராக பெண் இனத்தை பயன்படுத்த வசதியாக அவிழ்த்துவிடும் புழுகு மூட்டைகள் தான் “ ஆண் ஆதிக்கம்”, “பெண் அடிமை” என்னும் புளுகு மூட்டைகள். இந்த புளுகு மூட்டைகளை ஆதரிப்பவர்களே புத்திசாலிகள், புரட்சியாளர்கள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர். தங்களை போன்றோர் தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ள "பெண்ணுரிமை" என்னும் இல்லாத ஆடையை உடுத்திக்கொண்டு நிர்வாணமாக உழவருகிரார்கள்
இன்று ஆண்கள் பெண்களை அடிமை படுத்தியிருப்பது உண்மையானால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் ஆண்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை சுதந்திரமாக தாங்களே தேடிக்கொள்ளட்டுமே. விவாகரத்திற்கு பிறகும் ஆண்களின் இரத்தத்தை ஏன் குடிக்கவேண்டும்.
18 ம் நூற்றாண்டில் தொடங்கி இந்தியாவை அடிமைபடுத்தி சுரண்டிவந்த மேற்கத்தியர்களிடமிருந்து விடுதலை அடைந்த நம்மை நமது ஊழல் அரசியல்வாதிகள் “பெண் அடிமை” என்னும் மாயை வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் மேற்கத்தியர்களின் “ அடிமை தேசமாக “ மாற்றிவருகிறார்கள்

Unknown சொன்னது…

உண்மையிலேயே பெண்களுக்கு நடத்தப்பட்ட சில கொடுமைகள் இன்றும் தொடர்ந்தால், பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக, அக்கா தங்கைகளுக்கு சகோதரனாக நம் மனம் கணக்கவே செய்யும்.
ஆனால் நம் முன் நிற்கும் கேள்வி என்னவென்றால்
1 ) ஆண்களில் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்று மட்டுமே முழங்கப்படுகிறதே, பெண்கள் அணைவரும் யோக்கியமானவர்கள் தானா ?
தனது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்லகூடிய பெண்கள் இல்லையா? இதையும் தாண்டி இதே காரணத்திற்காக தான் பெற்ற பிள்ளைகளையே கூட கொன்ற பெண்கள் இல்லையா?

Unknown சொன்னது…

2 ) பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பண்புள்ள ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர ஊக்குவிக்கப்படுகிரார்களா? அல்லது ஒழுக்கம்கெட்ட ஆண்களுக்கு சமமாக பெண்கள் வளர ஊக்குவிக்கப்படுகிரார்களா?
a ) தனது வீட்டில் வெற்று உடம்புடன் திரியும் ஆண் பொது இடங்களில் தன் உடல் மறைத்து நாகரிகமாக உடை அணிகிறான். பிச்சைக்காரன் கூட கந்தை துணி ஆனாலும் தன் உடல் மறைத்து நடமாடுகிறான். ஆனால் இன்றைய பெண் இனமோ கல்லூரிகளில், பொது இடங்களில் தன் உடல் உறுப்புகளில் அதிகபட்சம் எந்த அளவுக்கு அம்பலப்படுத்தி காமத்தை பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பரப்பி சமூகத்தை காமகடலாக்கி EXHIBITIONIST - களாக உலா வருகிறார்கள். இதனால் நம் இளைஞர்களான தேசத்தின் தூண்கள் காம நெருப்பால் எரிக்கப்பட்டு இளைஞர்களின் எதிர்காலமும் தேசத்தின் எதிர்காலமும் அழிக்கப்பட்டுவிட்டது.
b) எய்ட்ஸ் நோயை தடுக்க பல கோடி ரூபாயில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இக்கால பெண்கள் சமூகத்தில் அரைநிர்வானமாக உலாவந்து, காம தீயை மூட்டி, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்தின் பலனை எல்லாம் நொடியில் அழித்துவிடுகிரார்கள். காமநோயை பரப்பும் நடமாடும் விளம்பர மாடல்களாக உலா வருகிறார்கள்.
c) பெண்கள் ஆண்களுக்கு பணம் கொடுத்து தங்கள் காம இச்சையை தணித்துக்கொள்ள விலை ஆண்களை தேடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
d) ஊழல் செய்யும் ஆண்களுக்கு எவ்விதத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று இக்கால பெண்கள் நாள்தோறும் நிரூபித்து வருகிறார்கள்.
e) ஆண் திருடர்களை போலவே பெண் திருடர்களும் உலா வந்துகொண்டிருப்பதாக பேருந்து நிலையங்களில் காவல் துறையின் ஒலிபெருக்கி எச்சரிக்கை.
f) பெண்கள் வேலைக்கு செல்வது உண்மையில் தனது கணவனுக்கு தோல்கொடுக்கவா ? தங்கள் சுயநலனுக்காகவா ?
ஆண்களுக்கு சமம் பெண்கள் என்று வாயில் மட்டும் கூறிக்கொண்டு, பணிகளும், பதவிகளும் பெண்கள் தங்களுக்கு ஊதியங்களும் சலுகைகளும் ஈட்டிக்கொல்வதற்காக, தங்கள் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகல்தான் என்றும், கடினமான பணிகளை எல்லாம் ஆண்கள்தான் செய்யவேண்டும் என்றும் சாதுரியமாக நலுவிக்கொள்கிறார்கள்.
உண்மையில் அணைத்து பணிகளும் பதவிகளும் மக்களுக்கான சேவையை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவைகளே. பாதுகாப்பிற்கே பஞ்சமில்லாத முப்படைகளுக்கே தலைவரான ஜனாதிபதி முதல் போர்முனையில் துப்பாக்கி ஏந்தி மரணத்தை மலர்மாலையாக எண்ணி ஏற்க்க தயாராக இருக்கும் போர் வீரன் வரை அணைவரும் வெவ்வேறு மக்கள் சேவைகளை நோக்கங்களாக கொண்ட இயந்திரங்களே. இந்த இயந்திரங்கள் இடங்க தேவைப்படும் பெற்றோலை போன்றதே ஊதியங்களும் சலுகைகளும். ஒரு இயந்திரம் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை இலக்காக கொள்ளாமல் பெற்றோலை உறிஞ்சுவதை மட்டுமே இலக்காக கொண்டால் அதை எந்த பொறுப்புள்ள மனிதனாவது வைத்திருப்பானா ? மக்களுக்கான சேவை உணர்வு இல்லாமல் சம்பளத்தையும் சலுகைகளையும் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பெண்களை மக்கள் ஆதரிப்பது சரியா ?

Unknown சொன்னது…

பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பு தான் தேவையே தவிர பெண்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகள் இல்லாத பாதுகாப்பு என்பது சமூகத்தில் தடைசெய்யப்பட்ட போதைபோருட்களை தடையின்றி புழக்கத்தில் விட்டால் ஏற்படும் பேராபத்தை விட பெறும் நாசங்களையே ஏற்படுத்தும்.
ஒழுக்கம் கெட்ட பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கமுள்ள ஆண்களை ஒடுக்குவதை விட்டுவிட்டு ஒழுக்கமுள்ள பெண்களை ஊக்குவித்து, ஒழுக்கம் கெட்ட ஆண்களை ஒடுக்குவதே அறநெறி செயலாகும்.

ஒரு பெண்ணாக, பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக, அக்கா தங்கைகளுக்கு சகோதரனாக உங்கள் மனதில் “ பெண்கள் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படுவது குற்றம்” என்று தோன்றினால் அது
முழுக்க முழுக்க சுயநலத்தின் வெளிப்பாடே !
சமூக அழிவிற்கான வழியே !!
தனது சுயநலனுக்காக தேசத்தை அழிக்கும் தேச துரோக செயலே !!!
இராணுவ படையின் தளபதியே ஆனாலும் அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதே தேசத்திற்கு நன்மை பயக்கும் வழியாகும்.

Unknown சொன்னது…

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்