பின்பற்றுபவர்கள்

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

7 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

அண்டார்ட்டிகாவுக்கு வேண்டிய பொருட்களை இங்கே நம்மஊரில் இருந்துதான் விமானத்தில் ஏற்றி அனுப்புவாங்க. எங்க விமான நிலையத்தில் இதுக்குன்னே தனிப்பிரிவு ஒன்னு இருக்கு. அதேபோல் ஆராய்ச்சிக்குன்னு அமெரிக்கள் வன்துபோக தனி பேஸ் ஒன்னு வச்சுருக்கோம்.

சில வருசங்களுக்கு முன்னால் நத்தானியல் .பி.பார்மர் என்ற ஐஸ் ப்ரேக் & அண்டார்ட்டிக்கா ஆராய்ச்சிக்கப்பல் ஒன்னு எங்க துறைமுகத்துக்கு வந்துச்சு. ஊரே கூடிப்போய் கப்பலுக்குள் ஏறி எந்த மாதிரி ஆராய்ச்சிகள் என்று பார்த்துவந்தோம்!!!!!

தனிமடல் பார்க்கவும்:-)

'பசி'பரமசிவம் சொன்னது…

சிறிதும் சலிப்பில்லாமல், இடையில் நிறுத்தாமல் முழுப் பதிவையும் படித்து முடித்தேன்.
தங்களின் எளிய, இயல்பான நடை, ஒரு முறை அண்டார்டிக்காவுக்குப் பயணித்த சுகானுபவத்தைப் பெற்றுத் தந்தது.
பாடுபட்டுத் தேடிச் சேகரித்த தகவல்களை நண்பர்களுக்கு வழங்கிய தங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியது.
நன்றி கண்ணன்.

விழித்துக்கொள் சொன்னது…

arumayana ariviyal padhivu nandri thiru kovi kannan avargale
surendran

வேகநரி சொன்னது…

எனக்கு பிடித்த பதிவாக இருந்தது.
_________________
//பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு//
எமது பூனையாரே எல்லோரும் வியக்கும் படி அண்டார்டிக்காவை உருவாக்கி வைத்துள்ளார்.

Unknown சொன்னது…

சூப்பர்

இன்றைய பதிவு
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்

Unknown சொன்னது…

சூப்பர்

இன்றைய பதிவு
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்

Vadivelan சொன்னது…

good article.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்