பின்பற்றுபவர்கள்

12 ஏப்ரல், 2012

* உலக அழிவை நாடும் மத நம்பிக்கைகள் !


ரே ஒரு பெரிய நில அதிர்வு அன்றைய செய்திகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி ஊடகங்களை விழுங்கிவிடுகிறது. மனிதர்களை விட இயற்கையே 'சூப்பர் ஸ்டார்கள்'. உடனேயே உலக மக்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன, ஊடகங்களுக்கு முழுத்தீணியாக இயற்கைப் பேரிடர்களே என்றும் உள்ளன.

****

அனைத்து மதவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை 'கடவுள் உலகையும் மனிதன் உட்பட ஏனைய உயிர்களைப் படைத்தார்' என்பதே. மனிதனின் ஆறாம் அறிவு செயல்படத் துவங்கியதிலிருந்து உயிர் தோற்றம் குறித்த சிந்தனைகளில் ஒரு முடிவை எட்டாமல் நம்பிக்கையின் அடைப்படையில் 'இவை கடவுளின்' செயல் என்று முடித்துக் கொள்வதால் கடவுள் குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு கடவுளின் அன்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் விளைவாக இதில் நம்பிக்கையாளர்கள் நிறைவு பெற்றுக்கொண்டார்கள்.  இறப்பிற்கு பிறகான வாழ்கை என்ன ? என்ற கேள்விக்கு விடையாக சொர்க நகரக் கோட்பாடுகளும், பொருள்கள் என்றால் அழிவுக்கு உட்பட்டது என்ற வரையறையின் நீட்சியாக இந்த உலகமும் ஒரு நாள் அழியக் கூடியது தான் என்பது புரிந்துணர்வு என்பதால், உலகம் அழிக்கப்பட்டால் அல்லது அழிந்துவிட்டால் என்ன வாகும் என்ற கேள்விக்கும் கதைகளையும் நம்பிக்கைகளையும் வைத்துள்ளனர்.

ஆப்ரகாமிய மதங்களைப் பொருத்த அளவில் பிரளயக் காலம் என்பது நடந்துள்ளது, நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை, அதில் பூமி முற்றிலுமாக அழியாது, நீரினால் கொள்ளப்படும் என்பதும், அவ்வாறு அழியும் போது அனைத்து உயிரினங்களிலும் ஒரு இணை (ஜோடி) காப்பாற்றப்பற்று பின்னர் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதையும் படைப்புக் கொள்கை மற்றும் மறுமை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பது நன்கு விளங்கும். அதாவது உலகை ஆறு நாளில் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வெடுக்கப் போன கடவுளால் மீண்டும் அவ்வாறே செய்யாமல் ஏன் மக்கள் அனைவரும் கெட்டவர்கள் ஆன பிறகு அதில் இருந்து நல்லவர்களை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்து காப்பாற்றி வைக்க வேண்டும் ? தவிர அவர்களை இந்த உலகில் தொடர்ந்து வாழ வைக்காமல் நேரடியாக சொர்கத்திற்கே அழைத்துச் சென்றிருக்கலாமே ? என்ற கேள்வியும் வருகிறது, ஊழிக்காலத்தின் போது நோவா கப்பலும் அதில் ஏற்றப்படும் உயிரினங்கள் பற்றிய கதை உங்களுக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

தனிமனிதனின் இறப்புக்கு பின்னார் சொர்கம் / நரக கட்டுமானங்களைத் தீர்வு போல் சொல்லும் மதங்கள், ஒட்டுமொத்த மக்களும் கெட்டுவிட்டால் அதற்கான தீர்வு என்ன என்கிற சிந்தனையின் தொடர்ச்சியாக நோவா கப்பல் கதையும், பிரளயம் என்பது ஒரு நிகழ்வு தான் என்றும் அதற்கு பின்னரும் பூமியும் உயிர்களும் உண்டு என்றே சொல்கின்றன. இங்கு தான் மேற்குறிப்பிட்ட கேள்வி, எதற்கு காப்பாற்றி மறுபடியும் உலவ விடவேண்டும், அவர்களை நேரிடையாக சொர்கத்தில் விட்டுவிட்டு அங்கு வாழவைக்கலாமே ? தவிர மனித தவறுகளுக்காக ஒட்டுமொத்த உலகையும் நீரைக் கொண்டு அழிப்பதால் பாழ்படும் பிற உயிரினங்கள் என்ன தவறு செய்தன ? அவற்றையும் ஏன் ஜோடி ஜோடியாக காப்பற்ற வேண்டும் ? கடவுளின் படைப்புத் திறனால் ஆகுக என்று சொன்னபோது தோன்றிய பூமியும் உயிரினமும், பின்னர் ஏன் அவ்வாறே செய்து தோன்ற வைக்க முடியாது ? எதனால் அவை காப்பாற்றப்பட்டு தான் மீண்டும் வெளியில் விட வேண்டும் ?

இந்த முரண்பாடுகளின் தொகுப்புகளை வைத்துப் பார்க்கும் போது கடவுள் படைக்கவில்லை என்பதை நேரிடையாக ஒப்புக் கொள்ளத் தயங்கிய மனநிலையில், பூமி அழியும் ஆனால் தொடரவேண்டும் என்கிற மன நிலையில், நோவா கப்பலும் அந்தக் கதைகளும் வந்திருக்க வேண்டும். கடவுள் எதையும் படைக்கவில்லை என்று மதங்களே ஒப்புக் கொள்வதற்கு நோவா கப்பல் கதைகளே சாட்சியாகக் கிடக்கின்றன.

கெட்டுப் போன வேலை செய்யாத கணிணியை தூக்கி வீசிட்டு புதுக்கணிணி வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் கடவுள் ஏன் பழைய பூமியை அழித்துவிட்டு புதிதாக இன்னும் அதிக பரப்பளவுடன் ரியல் எஸ்டேட் பிரச்சனை இல்லாமல், ஆறு நாளைக்கு பதில் 10 நாளே எடுத்துக் கொண்டு மிகப் பெரிய அளவுக்கு மற்றொரு கோளை உருவாக்கி அதில் புதிய உயிரினங்களை படைக்கக் கூடாது ? 

ஆப்ரகாமிய மதங்களில் மட்டுமா பிரளய காலத்தில் ஜோடி ஜோடியாக காப்பற்றப்பட்ட கதை ?  அகத்தியர் நாடியில் இதே போன்ற கதைவருகிறது,  ஒவ்வொரு யுகம் முடியும் போது உலகம் நீரினால் சூழப்படுமாம், அப்போது பாதுகாப்பட்டவேண்டிய அனைத்து உயிரினங்களையும் ஒரு கலசத்தில் போட்டு இமயமலையின் உச்சியில் வைப்பாராம் பிரம்மன், பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு அவை விடுவிக்கப்பட்டு வாழவிடப்படும், யுகங்களின் தொடர்சிகள் இவ்வாறாக இருக்கின்றது என்கிறது இந்து மதப் புராணம்,

 ‘பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால் கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே’

கடவுள் குறித்த மனித சிந்தனைகளும், படைப்பு, உயிர், அழிவு குறித்த சிந்தனைகளும் உலகெங்கிலும் ஒன்று போல் தான் இருந்திருக்கின்றன, எனபதற்கு இவ்வெவ்வேறு கதைகளும் சாட்சி.


பூமி ஏன் அழியும் ? அழிய வேண்டும் என்கிற நம்பிக்கை ஏற்பட வேண்டும் ? ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் பிறழ்ந்துவிடுகிறார்கள், வாழ்கை நெறியைக் கெடுத்துவிடுகிறார்கள், அவர்களுக்கு அச்சமூட்டவேண்டும் என்பதே காரணம் என்பது தவிர்த்து நோவா கதைகளிலோ, அகத்தியர் நாடியிலோ சுற்றுப் புறச் சூழல், ஓசோன் ஓட்டை பற்றியெல்லாம் எதும் சொல்லப்படாததால் நாம் அவற்றை சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் உலகம் அழியும் என்று தொடர்புபடுத்திவிட முடியாது. ஆக மனிதன் என்றுமே நல்லவனாக நீடித்தது இல்லை, மனிதர்கள் கெட்டுவிடும் போது உலகம் அழிவதில் தவறில்லை, அழிய வேண்டும் என்கிற எண்ணமும், அதே சமயத்தில் பூமியில் மனித இனம் / உயிர்கள் தொடர்ந்து வாழும் என்கிற நம்பிக்கையாவே இந்தக் கதைகளின் உளவியல் விளங்குகிறது. 


****
தீர்ப்பு நாள், கல்கி அவதாரம் 'ஜல பிரளயம்' ஏற்படும் என்றெல்லாம் நம்புபவர்களும் அதை விரும்புவர்களும் நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை, இயற்கைப் பேரிடர் என்றால் வழிபாட்டுத் தளங்களில் தஞ்சம் அடைந்து காப்பாற்ற கெஞ்சுகிறார்கள், வேண்டுகிறார்கள், அப்பறம் எப்படித்தான் கடவுள் ஏற்கனவே சொன்னப்படி உலகை அழித்து நம்பிக்கையாளர்களை (மீளா) சொர்கத்திற்கு இட்டுச் செல்வாராம் ? இந்தப் பதிவை முதற்பத்தித் தவிர்த்து ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.




இந்த அவதாரங்களைப் பார்த்துவிட்டு இன்னுமா உலகம் அழியாமல் இருக்கு என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.
********

நேற்றைய சுனாமி எச்சரிக்கையால் அவதியுற்றவர்கள் நோயாளிகளும் பள்ளிக் குழந்தைகளும் தான், என்ன தான் மனித நேயம் பேசினாலும் தன் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து என்னும் போது எதிரே சாகக் கிடப்பவர்களை மிதித்துக் கொண்டு ஓடுவதே இயல்பாக நடக்கிறது, இதையும் தாண்டி இதை வாய்பாக எடுத்துக் கொண்டு சூறையாடும் கூட்டமும் உண்டு, சென்ற முறை சுனாமி ஏற்பட்டப் பிறகு கரையில் சிதறிக் கிடந்த பிணங்களின் நகைகளை, உடைமைகளை  எடுத்துக் கொண்டதுடன் தோடுகளை கழட்டி எடுத்துக் கொள்ள காலமெடுக்கும், அதற்குள் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று மிக விரைவாக தோடு துளைப் பகுதியை கீறி எடுத்துச் சென்றிருந்தனர். எதிரே நடந்த பேரழிவு, மரணம் இவற்றையெல்லாம் நேரில் பார்த்தும் பிறர் பொருள் பேராசை கொண்டோர் இருக்கிறார்கள் என்பது, சுனாமிகளை விட ஆபத்தான மக்களுடன் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பதும் உண்மை தான்.

7 கருத்துகள்:

தருமி சொன்னது…

நட்சத்திரம் பிரகாசிக்கிறது ...

Karthik Vasudevan சொன்னது…

அருமையான சிந்தனை. ஆனால் இந்த மதவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது என்பது என்னுடைய கருத்து.

வவ்வால் சொன்னது…

கோவி,

நல்லா அலசி இருக்கீங்க. பழி,பாவம் ,புண்ணியம் ,இம்மை,மறுமை என்றெல்லாம் சொல்லிப்பயமுறுத்தி மக்களை நல்வழிப்படுத்த தான் மதங்கள் உருவாகின ,ஆனால் அதனை பிரச்சாரம் செய்பவர்களுக்கே அது கட்டுக்கதை என்று தெரியுமாதலால் அவர்கள் அதனைக்கண்டுப்பயடாமல் "இருப்பது ஒரு வாழ்வு அனுபவிப்போம்" என மக்களை சுரண்டி அனுபவிக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு அத்தெளிவு வந்துவிட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள் என அச்சமூட்டும் கதைகளை தொடர்ந்து நிறுவியும்,பரப்பியும் வருகிறான்.

பல பேர் மரணத்திலும் வாழ்வுக்கு பொருள் தேடுபவனும் அவ்வாறே , செத்தா செத்துட்டு போறோம்,இன்று என்ன கிடைக்கும்னு பார்க்கிறான்.

அவர்களை எல்லாம் பார்க்கும் போது மனசாட்சியின் படி நல்லது,கெட்டது என தர்க்க/பகுத்தறிவு ரீதியாக அனுகும் நாத்திகன் எவ்வளவோ மேல்.

நோவா ஆர்க் போல இந்து புராணத்திலும் "மனு" வுக்கு ஒரு மீன் கப்பல் செய்ய சொல்லி பெரு வெள்ளத்தில் இருந்து மானுட குலம் அழியாமல் காப்பாற்றியதாம்,அப்படி மீண்டும் மானுட குலத்தை மீட்டெடுத்து மனு ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் போட்டாராம் அதான் மனு ஸ்மிருதியாம் , எல்லா நாடு,மொழிலயும் ஹிட்டான ஒரே கதையை ரீமேக் செய்யுற கலாச்சாரம் அப்பவே இருந்து இருக்கு :-))

விழித்துக்கொள் சொன்னது…

அருமையான சிந்தனை. ஆனால் இந்த மதவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட மக்களை காப்பாற்ற யாராலும் முடியாது என்பது என்னுடைய கருத்து.karthik vasudhevan karuththai naanum aamodhikkindren
surendran

ராஜ நடராஜன் சொன்னது…

//எல்லா நாடு,மொழிலயும் ஹிட்டான ஒரே கதையை ரீமேக் செய்யுற கலாச்சாரம் அப்பவே இருந்து இருக்கு :-)) //

வவ்வால்!ரீமேக் செய்தாலும் விளம்பர டெக்னிக் மாறுபடுதே!உதாரணமா சந்திரமுகி படத்தை நோவா ஆர்க் எனலாம்.அதே கதை மணிச்சித்ரதாள் மனு எனலாம்:)

ராஜ நடராஜன் சொன்னது…

//தருமி கூறியது...
நட்சத்திரம் பிரகாசிக்கிறது ..//

அய்யா தருமியின் வெள்ளை மீசையும்,தாடியும் கூடத்தான் பிரகாசிக்கிறது:)

தருமி சொன்னது…

//தருமியின் வெள்ளை மீசையும்,தாடியும் கூடத்தான் பிரகாசிக்கிறது:) //

காலம் வரும்வரை காத்திருங்கள் ...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்