பின்பற்றுபவர்கள்

30 ஆகஸ்ட், 2011

நோன்புத் திருநாள் வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன்...!

சென்ற முறை தை 1 ஐ புத்தாண்டாக கொண்டாடிய போது நண்பர் ஒருவரிடம் உங்களுக்கு சித்திரை 14 தான் புத்தாண்டு அதை நான் குறைச் சொல்லவில்லை, ஆனால் தை 1ல் கொண்டாடும் எங்களுக்கு வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன் ? என்று கேட்டேன், வாஸ்தவம் தான் எங்களுக்கும் சித்திரை 14 க்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல நீங்க மனசு வைத்தால் நான் இப்பச் சொல்லத் தயக்கம் இல்லை என்றார். சரியெனப்பட்டது, அவரும் தை 1க்கு பொங்கல் வாழ்த்துடன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார், நானும் ஏப்ரல் 14 சித்திரை ஒன்றில் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னேன்.

நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் புழங்காத போது இஸ்லாமிய பண்டிகைகளுக்கு இஸ்லாமிய அன்பர்களுக்கு வாழ்த்துச் சொல்வது வழக்கம். அவர்களுக்கும் இந்து பண்டிகைகளுக்குச் சொல்லுவார்கள், இங்கு இணையத்தில் படிக்கத் துவங்கிய போது மதங்களும் அதன் பல்வேறு கோர முகங்களும் அறிமுகமாகின, அதன் பிறகு மதவாத விமர்சனமாகவே அனைத்து மதங்களையும் கண்ணியத்துடன் தான் நான் விமர்சனம் செய்துவருகிறேன். மதம் சார்ந்த பண்டிகைகளில் நான் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதும் இல்லை, இந்நிலையில் இஸ்லாமியர்கள் பிற மதத்தினர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமா ? என்பது போன்ற கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது, அதில் குறிப்பிட்டவாறு,

கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து
சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது ‘அஹ்காமு அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர்
அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்’

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர்
வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ
இருப்பினும் சரியே!

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும்
கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. தனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும்
ஹராமாகும்.

‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

http://islamiyadawa.com/new/?p=529

******இவற்றையெல்லாம் படித்தபிறகு ஈமான் (நம்பிக்கைக்) கொண்ட இஸ்லாமியர் ஒருவர் பிற மதத்தினரின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதே அவர்களின் மதக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று விளங்கியது, இந்த நிலையில் சிலைவழிபாட்டையும், இஸ்லாம் அடிப்படை மீது நம்பிக்கையற்றவர்களின் வாழ்த்துகளையும் அவர்கள் வரவேற்பதில்லை என்று விளங்கியது. அதிலிருந்தே பொதுவாக அனைத்து இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்து என்னும் சீசன் வாசகங்களை பதிவுகளில் வாழ்த்தாக எழுதுவதைத் தவிர்த்து நெருங்கிய மற்றும் நட்பைப் பெரிதாகவும், வாழ்த்தை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு மட்டுமே சொல்வது வழக்கமாகியுள்ளது, இப்பதிவின் மூலம் மாற்று மத அன்பர்களின் நல்வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் நம் வாழ்த்துகளை புறந்தள்ளும் போது பொதுவாகச் சொல்வதும் தேவையற்றதாகவும், தயக்கத்திற்குரியதாகவும் உணர நேரிடுகிறது.

மிகச் சிலரின் கருத்துகளை இஸ்லாமியக் கருத்தாக வைக்கலாமா ? சரிதான், ஆனால் அந்த ஒருசிலரின் கருத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட மற்ற இஸ்லாமியக் கருத்துகளை நான் அறிந்ததில்லை.

4 கருத்துகள்:

VANJOOR சொன்னது…

Assalamu alaikkum.

May the blessings of Allah
Keep your heart & home
Happy & joyous !.

Eid Mubaruk..


Vanjoor & family.

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக,
Brother please see the below link:

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pira_matha_pandikai/

நாங்கள் அப்படி வாழ்த்து கூரினாலும், அது நாங்கள் சொல்லும் பொய்யாகத் தான் இருக்கும். சிலை வணங்குவதிலும், ஏசு இறைவன் என்பதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில் நாங்கள் சொல்லும் பண்டிகை வாழ்த்து ஒரு பொய்யான வாழ்த்தாகத் தான் இருக்கும்.


ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.

Laura Antonio சொன்னது…

சக்தி வாய்ந்த முஸ்லீம் பாரம்பரிய ஹீலேர் / இஸ்லாம் மருந்தல் துபாய் மற்றும் ஜின்கள் / திரும்ப பெற LOVE / திரும்ப ஏ.வி. LOVE / பணம் SPELL DUA / FERTILITY MAGIC RING WHATSAPP +79268011965
(dr.oduduwaspellcaster@gmail.com) சக்தி வாய்ந்த முஸ்லீம் பாரம்பரிய ஹீல் / இஸ்லாம் மருந்தை டுஏ மற்றும் ஜின்கள் / திரும்ப பெற LOVE / பி.இ. இ EX LO / பணம் SPELL DUA / FERTILITY MAGIC RING +79268011965 இழந்த காதல் மயக்கங்கள் நனவு தட்டுவதன் மூலம் வேலை வேலை & உங்கள் முன்னாள் காதலனின் ஆன்மாவின் மனோபாவத்தை அவர்களை ஆராய்ந்து, அவர்களது ஆத்ம துணையை காதலிக்கவும். சில நேரங்களில் ஒளி, காதல் ஆற்றல், ஒரு மனிதனின் மனநிலை மற்றும் ஆன்மா ஆகியவை நித்திய தாக்கங்களால் சிதைந்து போகும். இந்த அவர்களின் ஆன்மா துணையை காதலன் ஒரு உறவு அல்லது திருமணம் உடைக்க வழிவகுக்கும்.என் திரும்ப இழந்த காதல் மயக்கங்கள் நபர் உங்கள் முன்னாள் காதலனை மீண்டும் இணைக்க குறிப்பாக நீங்கள் இலக்காக இல்லை, அவர்கள் உங்கள் முன்னாள் காதலன் ஆன்மா துணையை காதலனை இலக்கு. நீங்கள் உங்கள் முன்னாள் காதலனின் ஆத்ம துணையை காதலிக்கிறீர்கள், என் சிறப்பு மனநல சக்திகள் உன்னை கண்டுபிடித்து உன்னை மீண்டும் இணைக்கின்றன.உணவு உறவுகளின் அண்ட ஒழுங்குமுறை நீ என்னுடைய இழப்புக்கு என் முன்னாள் காதலனின் ஆத்ம துணையை காதலிக்க வேண்டும் காதலிக்கிறேன் உன்னை காதலிக்கிறேன். இழந்த காதல் மயக்கங்கள் நேரடியாக மனித ஆற்றல் அமைப்பில் நேரடியாக வேலை செய்கின்றன. சில நேரங்களில் வாழ்க்கையின் தொந்தரவுகள் மற்றும் சுவாரசியங்கள் ஆன்மாவை சேர்ந்த காதலர்களுக்கு இடையேயான ஆன்மீக தரத்தை disorientates. ஆரிய குணப்படுத்துதல் மற்றும் நேர்மறையான ஆற்றலின் மனநல சேனல்கள் & அனைத்து எதிர்மறையான சக்திகளையும் சிதைப்பதன் மூலம் உங்கள் பிரியமான ஆற்றலில் உள்ள அன்பின் பிரபஞ்சத்தை அன்பைக் கொண்டுவரும், நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் முன்னாள் காதலருடன் மீண்டும் இணைக்கப்படுவீர்கள். PROF YUSUFU இன் குணப்படுத்துதலும், உங்கள் ஆற்றலுக்கும் ஆத்ம துணையை நேசிக்கும் மனித ஆற்றல் நனவை முறையை சரிசெய்யட்டும். காதல் போட்டியாளர்களுடன் நட்புறவுள்ள அனைத்து நட்பு உறவுகளும் விலக்கப்படும், மற்றும் நீங்கள் பிரிக்க முடியாத அன்பின் பிணைப்பு இருக்கும். பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதற்கும் ஆன்மா துணையை நேசிப்பவர்களுடன் இணைக்கும் அன்பின் ஆற்றல் வயலில் அவர்களைத் தீர்ப்பதற்கும் ஒத்துழைக்க உதவுகின்ற பல்வேறு தொலைதூர கருவி கருவிகள் உள்ளன. NB: WhatsApp மேலும் தொடர்புக்கு மற்ற டாக்டர்களிடமிருந்து அனைத்து UNFINISHED வேலைகள் தேதியை டெல்: +79268011965

என் மனைவி வீட்டுக்கு என்ன வேண்டும்

உங்கள் மனைவியை வீட்டிற்கு திரும்பி வர தயாராக இருக்கிறீர்களா?

உங்கள் மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்ல நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்