பின்பற்றுபவர்கள்

7 செப்டம்பர், 2010

கலவை 07 செப் 2010 !

ஒரு பக்கம் உலக சுகாதார மையம் இந்திய நாட்டுக் குழந்தைகள் பட்டினிச்சாவில் ஆப்பிரிக்க நாட்டுக் குழந்தைகளுடன் போட்டி இடுகிறார்கள் என்கிற புள்ளி விவரம் தருகிறதாம், மறுபுறம் இந்தியாவில் உணவு தானியப் பொருள்கள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டு வீணடிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதனை இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்திய நீதிமன்றங்கள் குறிப்பிட்டதை கருத்து தெரிவித்தார்கள், உத்தரவிடவில்லை, அது நடைமுறைப்படுத்தப்படாது என்று சரத்பவார் அறிவித்தார். ஐசிசி தலைவர் ஆனபிறகு இந்திய நலம் ஏழைகள் நலம் இவை எல்லாம் விளையாட்டாகப் போய்விட்டது அவருக்கு. உணவு தானியம் வீணடிக்கப்படுவது ஏழைகளுக்கு செய்யும், இந்திய பொருளாதாரத்திற்கு செய்யும் துரோகம் என்றாலும் விவாசாயிகள் பெற்றக் குழந்தைகளை வீதியில் வீசுவதைப் போன்று இதுவும் ஒரு அடாத செயல். இயற்கையே தண்டித்து அடுத்த முறை தேவைக்கு ஏற்ப விளைச்சல்கள் கொடுக்கவிட்டாலும் அரசியல்வாதிகளுக்கு நட்டம் எதுவும் இல்லை. அப்போதும் அல்லாடுவது ஏழைகளே. திரைப்படங்களில் இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்களை நாயகனாக புரட்சியாகக் காட்டுவார்கள், இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் இருந்து நாட்டைக் கைப்பற்றுவது யார் ?

*****

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பது பொதுவான புரிதல், சோதிட மற்றும் மூட நம்பிக்கைக்காரர்களால் இந்தக் கூற்றுக்கு என்றைக்கோ சாவு மணி அடித்துவிட்டார்கள், இராவு காலம் எமகண்டம், முகூர்த்த நாள், நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் கூட நடந்துவருகிறது, இன்னும் கொஞ்ச நாளில் சிசேரியன் செய்து கொள்ள .....என்று நாட்களைக் குறிப்பிட்டு தமிழ் நாட்காட்டிகள் வந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. சீனர்களுக்கும் இது போன்ற மூட நம்பிக்கைகள் உண்டு, அவர்களுடைய திங்கள்களில் (மாதம்) ஏழாம் திங்கள் பேய் திங்கள் எனப்படும், அந்த திங்கள் முழுவதும் முன்னோர்களுக்கு தாள்களில் செய்யப்பட்ட அவர்களுக்கு விருப்பான பொருள்களை எரிப்பது வழக்கம், இப்படியான பேப்பர் பொருள்களில் பீர் பிராண்ட் முதல் கார் பிராண்ட் வகைகள் வரை அடக்கம். இவையெல்லாம் சொர்கத்தில் இருக்கும் அவர்களைச் சென்று அடையுமாம். இதெல்லாம் பரவாயில்லை, அண்மையில் பேய் திங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது இல்லத்திற்கு ஆகாது என்று மருமகளை முன்கூட்டியே சிசேரியன் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள மாமியார் மாமனார் கேட்டுக் கொண்டார்களாம்.


*****

நித்தி பழையபடிக்கு கடைத்திறக்க கதவை திறந்துட்டார். எஸ்வீசேகர் போன்ற புண்ணிய ஆத்மாக்களினால் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முயற்சித்துவருகிறார். நக்கீரன் மற்றும் லெனின் கருப்பன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு ப(க்)தர்கள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கனுமாம். நல்லா கவனிங்க நக்கீரன் மற்றும் லெனின் மீது தான் நடவடிக்கை வேண்டுமாம், குழந்தைகளும் இருப்பார்களே என்கிற சிரிதேனும் எண்ணம் எதுவுமே இல்லாமல் ஒளி/ஒலியாக வீட்டின் நடுக்கூடத்தில் நீலப்படம் காட்டிய சன் தொலைக்காட்சி குறித்து நித்தி எழுதச் சொன்னக் நடவடிக்கைக் கடிதத்தில் சன் டிவி பெயரைக்காணும், விரைவில் இந்த நாள் இனிய நாள் சன் நிகழ்ச்சியில் கோல்கேட் புன்னகையுடன் நித்தி தோன்றினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

*****
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் கூடிவருகிறது, 1996ல் அம்மா ஆட்சியில் இறுதி காலத்தில் இருந்தது போலவே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு ஊடகங்கள் சென்றுவிட்டன. இருந்தாலும் ஆட்சித்தரப்பு அதே போன்று அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுத்து வருகிறது, இப்படியான மறுப்புகளுக்கு செய்தோம் என்பதைவிட ஆட்சி அதிகாரம் பண பலம் இவைதான் முன்பும் காரணமாக இருந்தன. மக்கள் முட்டாள்கள் ... தொடர்ந்து முட்டாளாகவே இருந்துவிடுவார்கள் என்பதாகவும் மேலுமான இலவச அறிவிப்புகள் கைகொடுக்கும் என்பதாக நம்புகிறார்கள். இந்த ஆட்சியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட இலவச தொலைகாட்சிகள் கொடுத்து முடிக்கவே டிசம்பர் வரை ஆகும் என்று துணை முதல்வர் சொல்லி இருக்கிறார். இலவச திட்டங்கள் என்றாலும் அது சென்று அடையும் காலம் ஐந்தாண்டுகள் ஆகுமா ? அல்லது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவை தொடர ஆட்சி தொடரவேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள் என்பதாக இலவச திட்டங்களை அறிவிக்கிறார்களா ? தெரியவில்லை. இலவசதிட்டங்களினால் ஏழைகளுக்கு பயனுள்ள ஆட்சி என்ற காட்சியைக் காட்டினாலும் முற்றிலும் பெரும்பான்மை நடுத்தர மக்களின் வரிப்பணங்கள் நடுத்தர மக்களுக்கே எந்த வகையில் பயன்பட்டிருக்கிறது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஏழைகள் இலவச திட்டம் என குறிப்பிட்டவர்களுக்கு ஆதாயம் என்று பார்த்தாலும் பெரும்பான்மை நடுத்தரவயதினருக்கு விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, வீட்டுமனை விண்ணளவுக்கு உயர்வு உட்பட எதிராகவே சென்றிருக்கிறது.

*****

வலை நட்பு நிலைக்குமா ? என்கிற ஐயம் எனக்கு இல்லை. எங்கள் வீட்டின் புதியவரவான என் மகனுக்கு பல்வேறு பதிவர்கள் வாழ்த்துகளை அன்புகளையும், முத்தங்களையும் தெரிவித்தார்கள், அதிலும் சிங்கையைச் சேர்ந்த சில பதிவர்கள் மருத்தவமனைக்கே வந்து குழந்தைக்கு பரிசுகளை வழங்கினார்கள், சிலர் இல்லத்திற்கே வந்து மகளுக்கும் சேர்த்தே பரிசுகளை வழங்கினார்கள், சிலர் உறமுறைகளைப் போல் தங்க நகைகளை பரிசாக அணிவித்துச் சென்றார்கள். அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை நெளிய வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் பொதுவில் இப்படி குறிப்பிட்டு நன்றி சொல்லாவிட்டால ?, பதிவர்களின் நட்பு வெறும் எழுத்து சார்ந்த நட்பு மட்டுமே என்கிற சிலரின் புரிதல் தவறு என்பதையும் என்னால் மறுக்க முடியாமல் போய்விடும். பதிவுலகில் எழுத்து வழி கற்றதும் நட்பாகப் பெற்றதும் மிக அதிகம். வெளியுலக நட்பிற்கு பதிவுலக நட்பு குறைந்ததே அல்ல என்பதை அழுத்தமாக பதியவைக்கிறேன். பெருமையாகவும் கூறிக் கொள்கிறேன். கிடைத்த நட்புகள் என்பது தவிர்த்து பதிவுலகில் எழுத்தில் என்ன சாதித்தேன் என்பதை என்னால் அறுதி இட்டு எதையும் சொல்லிவிட முடியாது. முகம் காட்டி எழுதுபவர்களுக்கும் முகம் காட்டாமல் எழுதுவதற்கும் இதுதான் வேறுபாடு. எழுத்து நம்மை பிறருக்கு அறிமுகப் படுத்துவதுடன் நட்பையும் பெற்றுத்தருகிறது. புற உலக நட்புகளுக்கும் பதிவுலக நட்புகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான் அதுவும் சிறப்பான வேறுபாடு பதிவுலக நட்பில் வயது ஒரு தடையே இல்லை.

9 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

ஆளும் க‌ட்சிக்கு இந்த‌ முறை கொஞ்ச‌ம் போட்டி அதிக‌மாக‌வே இருக்கும் என்று தோன்றுகிற‌து.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//வெளியுலக நட்பிற்கு பதிவுலக நட்பு குறைந்ததே அல்ல என்பதை அழுத்தமாக பதியவைக்கிறேன். பெருமையாகவும் கூறிக் கொள்கிறேன். //

நிஜம். நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். :))

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// 1996ல் அம்மா ஆட்சியில் இறுதி காலத்தில் இருந்தது போலவே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு ஊடகங்கள் சென்றுவிட்டன.

//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் திமுக வரும் தேர்தலில் அன்று அதிமுக போல முழுமையான தோல்வியைத் தழுவ வேண்டும். பார்ப்போம்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// நிஜம். நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். :))

//

நிஜமா?? அப்புறம் ஏன் பாபாஜி என்னை நம்பாமல் போனீர்கள்?? பெயர் குறிப்பிடாமல் எழுதியதற்குப் பதில் உரிமையோடு சட்டையைப் பிடித்து உண்மையாடா தம்பின்னு என்னை கேட்டு இருக்கலாமே?!?

ILA (a) இளா சொன்னது…

//உண்மையாடா தம்பின்னு என்னை கேட்டு இருக்கலாமே?!?//
உண்மை , நாணயம், உழைப்பிற்கு அப்துல்லா & கோ, எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

புருனோ Bruno சொன்னது…

ஜூனியர் அப்படியே உங்கள் முகசாடை :) :) :)

ஒரு கணம் நீங்கள் தான் மேக்கப் ஏதாவது போட்டு யூத்தாகிவிட்டதாக நினைத்து விட்டேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

லி(தொ)ட்டில் கோவியாரோட லேட்டஸ்ட் ஸ்னாப் ஜட்சுபண்ற அளவுக்கு இருக்கு!

ஐபோனை கையில குடுத்து பாத்தியளா?
:)))

”கலைஞராட்சி மலரப்போகும் காலம் வருதைய்யா!”

ஒரு காலத்துல விரும்பிக்கேட்ட பாடல்!!

ஜோ/Joe சொன்னது…

//பெரும்பான்மை நடுத்தரவயதினருக்கு விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, வீட்டுமனை விண்ணளவுக்கு உயர்வு உட்பட எதிராகவே சென்றிருக்கிறது.//

:)))

சுதந்திரம் வாங்கி இதுவரை எப்போதாவது இதெல்லாம் உயராம இருந்திருக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

// புருனோ Bruno said...

ஜூனியர் அப்படியே உங்கள் முகசாடை :) :) :)

ஒரு கணம் நீங்கள் தான் மேக்கப் ஏதாவது போட்டு யூத்தாகிவிட்டதாக நினைத்து விட்டேன்//

எங்க அப்பாவுக்கும் குழந்தை முகம்னு அவன் முகம் காட்டுறான் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்