பின்பற்றுபவர்கள்

2 ஜூலை, 2010

வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள் !

வலைப்பதிவுகளில் சர்சைக்குரியவற்றை யாராவது எழுதமாட்டார்களா ? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும், அதற்கு நீங்கள் இருவரும் தீணி போடுகிறீர்கள். சர்சையில் தாம் பாதிக்கப்படுவதாக எண்ணுபவர்கள் தவிர்த்து பெருவாரியானவர்கள் சர்சைகளை வரவேற்கவே செய்கிறார்கள், பெரியாரை தாக்கி எழுதினால் இந்துத்துவாக்கள் மகிழ்வார்கள், இந்துக்களை தாக்கி எழுதினால் பிற மதத்தின் தீவிர பற்றாளர்கள் மகிழ்வார்கள், பிற மதத்தினரை தாக்கி எழுதினால் தீவிர இந்துக்கள் மகிழ்வார்கள், ஜெமோவை தாக்கி எழுதினால் சாரு ஆதரவாளர்களும், சாருவை தாக்கி எழுதினால் ஜெமோ ஆதரவாளர்களும், குட்டி சாமியாரை தாக்கி எழுதினால் ஜட்டிசாமியார் ஆதரவாளர்கள் மகிழ்வார்கள். உங்கள் பதிவுகளின் மையக்கருத்து தவிர்த்து எழுத்து நடை மொழிகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீங்கள் எழுதிய

காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்........ மற்றும்

சிலுவைக் கதையின் சில்மிஷங்கள்! - 1

போன்ற பதிவுகளின் போது இந்து மற்றும் கிறித்துவர்கள் கொதித்தது போல் தெரியவில்லை, அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம், ஆனால் இஸ்லாம் குறித்த உங்கள் விமர்சனம் அமீரகத்தில் உங்கள் பதிவுகளை தடை செய்யும் அளவுக்கு சென்றிருப்பதாக நண்பர் சென்ஷி வருத்தப்பட்டு பதிவு எழுதி உங்களை மன்னிப்பும் கேட்கச் சொல்கிறார்.
தன் மதம் மீது எந்த ஒரு பிடிப்பையும் இதுவரை காட்டியிறாத சென்ஷியே கொதிக்கிறார் என்றால் வெளிப்படையாக பற்று வைத்திருக்கும் பிற இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. பிற(ர்) மதங்களை புண்படுத்தும் பதிவுகள் மீது அதே அளவுக்கு எரிச்சல் இவர்களுக்கு ஏற்படுகிறதா என்று கேட்கத் தேவை இல்லை, ஏனெனில் பிற மதத்தினர் தங்கள் மதம் பழிக்கப்படும் போது உணர்ச்சி இல்லாத இருக்கும் போது இவர்களே அதற்கும் சேர்த்து உணர்ச்சி பட்டு இருக்க வேண்டும் என்பது தேவையற்ற எதிர்பார்ப்பு.

தயவு செய்து பிறர் மனம் புண்படும் பதிவுகளை எழுதாதீர்கள் அதுவும் சொந்தப் பெயரில்..... தமிழ் பதிவுகளாக எத்தனையோ மதவாத எதிர்வினை பதிவுகள் வருகிறது அதற்கெல்லாம் இல்லாத எதிர்ப்பு உங்களுக்கு கிடைப்பது உங்களுக்கு பெருமையான ஒன்றே அல்ல அது நீங்கள் சொந்தப் பெயரில் எழுதுவதால் கிடைக்கும் எதிர்வினை மட்டும் தான். முகமூடி போட்டு எழுதுபவர்களை நான் ஆதரிப்பதில்லை, ஆனாலும் அவர்களின் நிலை புரிந்து கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. வால் மற்றும் இராஜன் என்ற பெயர்கள் வெளியே தெரியாவிட்டால் உங்கள் பதிவுகள் கூட பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும், எச்சரிக்கைகளை, அன்பு வேண்டுகோள்களை நீங்கள் சந்திக்கத் தேவை இருக்காது.

50 கருத்துகள்:

smart சொன்னது…

//அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம்//
உண்மைதான் அவர்களுக்கு ரோசம் குறைவுதான்.

smart சொன்னது…

சென்ஷி அவர்கள் இதற்கு முன் தன் மதம் பற்றிய பற்றுயில்லாதவராய் மற்றும் மாற்று மத வெறுப்பு பதிவுக்கு ஆதரவாகவும் இருந்தார் என்பது கசப்பான உண்மை.

eg
http://valpaiyan.blogspot.com/2009/08/blog-post_18.html
http://tvpravi.blogspot.com/2010/03/blog-post_22.html

அப்பாவி முரு சொன்னது…

Hopefully. We get a positive reaction from Vaal and Rajan.

priyamudanprabu சொன்னது…

followup

smart சொன்னது…

//பிற மதத்தினர் தங்கள் மதம் பழிக்கப்படும் போது உணர்ச்சி இல்லாத இருக்கும் போது இவர்களே அதற்கும் சேர்த்து உணர்ச்சி பட்டு இருக்க வேண்டும் என்பது தேவையற்ற எதிர்பார்ப்பு.//

பிற மதத்தினர் சண்டைக்கு வரவேண்டும் என்கிறீர்களா? இவர்கள் சண்டைக்கு வந்ததால் சமாதானம் ஆகவேண்டும் என்கிறீர்களா? மொட்டைத் தலைக் கிடைச்சா மிளகாய் அரைக்கலாம் என்கிறீகளா?
விளக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிற மதத்தினர் சண்டைக்கு வரவேண்டும் என்கிறீர்களா? இவர்கள் சண்டைக்கு வந்ததால் சமாதானம் ஆகவேண்டும் என்கிறீர்களா? மொட்டைத் தலைக் கிடைச்சா மிளகாய் அரைக்கலாம் என்கிறீகளா?
விளக்கவும்.//

கைவசம் வாசிங் பவுடர் நிர்மா இல்லை

smart சொன்னது…

//கைவசம் வாசிங் பவுடர் நிர்மா இல்லை//
ஏன்யா அவிங்க பேசுறதுதான் புரியலைன்னு கேட்டா நீங்களும் மப்புத் தட்டுரீங்களே!

[[உங்களிடன் பதில் இல்லை என்பதை தெளிவாகக் கூறியதற்கு நன்றிகள்]]

கோவி.கண்ணன் சொன்னது…

//[[உங்களிடன் பதில் இல்லை என்பதை தெளிவாகக் கூறியதற்கு நன்றிகள்]]//

நிர்மா அம்புட்டு பவர்புல்லா, பேரைச் சொன்னாலே போதும் விளக்கத் தேவை இல்லை போல தெளிவாக இருக்குன்னு சொல்லிட்டிங்க.

priyamudanprabu சொன்னது…

சம்மந்த பட்டவர்கள் வந்து பதில் சொன்னதன் நல்லாயிருக்கும்
பார்ப்போம்

ஜோதிஜி சொன்னது…

கண்ணன் இதையே அவருடைய இடுகையில் ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தேன். அவருடைய தார்மீக கோபம் என்பது சிந்திக்க வைப்பதை விட சர்ச்சைகளை தானே முன்னால் சென்று வரவேற்பது போலவே இருக்கிறது. அவரின் எல்லையில்லா சிந்தனைகள் ஏற்றம் தர வேண்டும். மாற்றமும் வர வேண்டும்.

seethag சொன்னது…

உங்கல் கருத்தை முழுதுமாக ஆதரிக்கிறேன்.உண்மைகளை தெரிய யாருக்கும் பெரிதாக விருப்பமெல்லாம் இல்லை. எங்கேயாவது சுவாரசியமாக வாய் பார்க்கமுடியுமா என்பதே எல்லாருடய ஆவல்.இதர்க்கு தீனி போடுவானேன்.

நான் ஒரு கோயில் சாமி என்ரு கும்பிடும் இந்து,.அதே நேரம் பதிவுலகத்தில் நிலவும் பெருவாரியான அன்பான சூழல்களை கலைப்பதை தவறு என்றே எண்ணுகிறேன்.

வால்பையன் சொன்னது…

பிற மதங்களை சாடினால் ஐஸ் வைத்தது போல் இருக்கும் தோழர் சென்ஷி, இஸ்லாமை கேள்வி கேட்டவுடன் சூட்டு கோள் சொருகியது போல் மத துவேஷ பட்டம் கட்டுகிறார்!

எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்!

நேரடி விவாதத்துக்கு அழைத்தவர்களை ஈரோட்டுக்கு வாங்க நான் தனி ஆளாக தயாராய் இருக்கிறேன் என்று சொல்லியாச்சு!

அவர்களுக்கு உடன்கட்டை ஏறுவதில் கூடத்தான் நம்பிக்கை இருக்கும், பெற்ற குழந்தைகளை பலி கொடுப்பதில் கூட தான் நம்பிக்கை இருக்கும், நான் எல்லா ஓட்டைகளையும் பொத்திகிட்டு போக சொரணை கெட்டவனா!?

அடிப்படையில் நீ ஒரு மனிதன், அதன் பின் தான் உனது பெயர், உனது மதம், மண்ணாங்கட்டியெல்லாம்! உன்னிடம் மனிததன்மை மலியும் போது மதம் பிடிக்கிறது, மதம் பிடித்த யானையை கட்டுபடுத்த சில நேரங்களில் நாமும் வன்முறையை கையிலெடுக்க வேண்டியது கட்டாயமாகிறது!

எங்களது பதிவில் சக தோழர்கள் புண்படும் படி எழுதியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், மற்றபடி அல்லா, கர்த்தர், சிவன் டவுசரெல்லாம் வழக்கம் போல் கிழிக்கப்படும்!

கபிலன் சொன்னது…

"இந்து மற்றும் கிறித்துவர்கள் கொதித்தது போல் தெரியவில்லை, அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம் "

அது பேரு சகிப்புத் தன்மைங்க.....சுரணைக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை...

கோவி.கண்ணன் சொன்னது…

//கபிலன் said...

"இந்து மற்றும் கிறித்துவர்கள் கொதித்தது போல் தெரியவில்லை, அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம் "

அது பேரு சகிப்புத் தன்மைங்க.....சுரணைக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை...//

:)

சுரணையற்றவர்களுக்குத்தான் சகிப்புத்தன்மையும் இருக்குமோ !

கபிலன் சொன்னது…

":)

சுரணையற்றவர்களுக்குத்தான் சகிப்புத்தன்மையும் இருக்குமோ ! "

நிஜமாவே...கொஞ்சம் யோசிக்க வேண்டிய மேட்டர் தான்... : )

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றபடி அல்லா, கர்த்தர், சிவன் டவுசரெல்லாம் வழக்கம் போல் கிழிக்கப்படும்!//

திருப்பூரில் உள்ளாடைகள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடக்கிறதா ?

:)

Unknown சொன்னது…

//திருப்பூரில் உள்ளாடைகள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடக்கிறதா ?//

அய்யோ அப்ப நம்ம பனியன் தியாகுவின் கதி?

seethag சொன்னது…

சிவன் டவுசரெல்லாம் வழக்கம் போல் கிழிக்கப்படும்!
12:43 PM, July 02, 2010

சிவன் புலித்தோல் தானே போட்டாரு?அப்புறம் எப்டியாங் அவரோட டவுசரை கிழிக்கிறது?

வால்பையன் சொன்னது…

//hiru said...

சிவன் டவுசரெல்லாம் வழக்கம் போல் கிழிக்கப்படும்!
12:43 PM, July 02, 2010

சிவன் புலித்தோல் தானே போட்டாரு?அப்புறம் எப்டியாங் அவரோட டவுசரை கிழிக்கிறது?//

கோவணம், ஆங்கிலத்தில் டவுசர் என்று அழைக்கப்படுகிறது!

சென்ஷி சொன்னது…

@ SMART..

நான் எப்போதுமே எந்த மதத்தையும் தூக்கிப்பிடித்ததுமில்லை. எந்த மதத்தையும் துவேஷித்ததுமில்லை. வால்பையனின் இடுகைக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடுகைகளுக்கும் ஒரே தராசில் வைத்துப்பார்க்கும் உங்கள் நுண்ணுணர்வு சிலிர்க்க வைக்கிறது.

முன்பும் நான் மற்ற மதங்களை துவேஷித்து தெரிந்தவர் எழுதினால் அங்கு என் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றேன். அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ளாதிருப்பதால் நான் வருத்தப்படுவதில்லை. இந்த பதிவையும் ஸ்மார்ட் ஆகிய நீங்கள் எழுதியிருந்தால் நிச்சயம் திரும்பியும் பார்த்திருக்கமாட்டேன். வால்பையன் நான் அறிந்தவர் என்பதால் நான் குறிப்பிட்டு கூறினேன். ஆனால் வாலும் எனது அரசியல் நிலைப்பாடு ”மதம்” சார்ந்தது என்று கண்டுபிடித்துவிட்டதால் இனி இந்த இடுகைகளைப்பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை.

மற்றபடி நான் வேறு மதத்தை துவேசித்தபொழுது எதிர்ப்பு தெரிவித்ததற்கு சுட்டி தேவையென்றால் தருகின்றேன்.

***

மற்றபடி வால்பையனின் இடுகையில் பின்னூட்டமிடாமல் தனிப்பதிவிட்டதற்கு காரணம் தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கின்றென். அமீரகத்தில் அந்த பதிவு திறக்க இயலவில்லை.

***

//வால் மற்றும் இராஜன் என்ற பெயர்கள் வெளியே தெரியாவிட்டால் உங்கள் பதிவுகள் கூட பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும், எச்சரிக்கைகளை, அன்பு வேண்டுகோள்களை நீங்கள் சந்திக்கத் தேவை இருக்காது.//

வழிமொழிகிறேன். ஆயினும் நான் குறிப்பிட்டது எச்சரிக்கை என்ற தொனி மாத்திரமே உங்களுக்குத் தென்படுமாயின்.. தோளைக்குலுக்கிக்கொண்டு நகர்ந்து போகிறேன்.
*

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

)

சுரணையற்றவர்களுக்குத்தான் சகிப்புத்தன்மையும் இருக்குமோ !
//

அப்ப காந்தி அந்த கேஸூங்கிறியளா!?

ஏன் இப்படி காந்திய எதுக்கிறிய!

ஆட்டுத்தலை மாதிரி விடுதலையை வாங்கி உங்க கையில கொடுத்தாரே ஏன் பேசாம அதை குழம்பு வைத்து சாப்பிடக்கூடாது. வெட்டிக்குதறுகிறீர்களே! ரெத்தவெள்ளரால்ல போவுது!
:)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

கெட்ட வார்த்தை பேசுவதே ஒரு வகை மனநோய்தான்..

கருத்துகள் கம்மியாகும் போது வேறு வழி தெரிவதில்லை பிரபலமாக...

பாவம் இவர்கள் என பரிதாப்பட்டலாம்..

கத்தும் வரை கத்திவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்..

ஆனால் ஆன்மீகவாதி பலம் வாய்ந்தவன்.. இவர்களை கண்டுகொள்ளாமல் துஷ்டனென நினைத்து தூர விலகுவான்...

அது சுரணையற்று அல்ல அதிகமான அறிவால் அல்லது அன்பால் இருக்கலாம்..

வால்பையன் சொன்னது…

@ புன்னகை தேசம்!

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்,

நான் பதிவை நீக்கிவிடவும், மன்னிப்பு கேட்கவும் தயார், யாரையாவது வந்து அதிலுள்ளவைகள் பொய்ன்னு நிறுபிக்கசொல்லுங்க! ப்ளீஸ்!

ஒரு ஏமாற்றுகாரனை காட்டி கொடுத்ததற்கு இவ்வளவு கண்டனங்களும், எதிர்ப்புகளும்!
உங்களின் அறிவு மிகுதி எதை நோக்கி உங்களை செலுத்துகிறது!, அரசன் எது செய்தாலும் சரி என்றிருந்த காலம் போல் இன்றும் இருக்க முடியுமா?

நான் முட்டாள் என்று நானே சொல்லி கொள்கிறேன், ஆனால் எங்கள் பதிவில் இருப்பதை பொய் என நிறுபிக்க சொல்லுங்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//வழிமொழிகிறேன். ஆயினும் நான் குறிப்பிட்டது எச்சரிக்கை என்ற தொனி மாத்திரமே உங்களுக்குத் தென்படுமாயின்.. தோளைக்குலுக்கிக்கொண்டு நகர்ந்து போகிறேன்.//

நீங்கள் எச்சரித்ததாக நான் குறிப்பிடவில்லை, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வால் பையனுக்கு பகிரங்க எச்சரிக்கை -நன்றியுடன் காதர்
என்ற பதிவை நீங்கள் படிக்கவில்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு ஏமாற்றுகாரனை காட்டி கொடுத்ததற்கு இவ்வளவு கண்டனங்களும், எதிர்ப்புகளும்!//

வால்,

ஏமாற்றுக்காரன் என்கிற அடைமொழியை தவிர்த்திருக்கலாம்.

வால்பையன் சொன்னது…

//ஏமாற்றுக்காரன் என்கிற அடைமொழியை தவிர்த்திருக்கலாம். //

நல்ல மனிதன் என்று பலரால் சொல்ல பட்டு நான் நம்பிய ஒரு மனிதனின் முந்தைய செயல் எனக்கு தெரியும் போது நான் ஏமாற்றுகாரர்களால் அடையாளம் காட்டப்பட்ட மனிதன் என்று சொல்லியிருக்க வேண்டும், சரிதான்!

இனி மாற்றி கொள்கிறேன்!

நான் கருதுவது, முகமது தன் ஆட்சியை நன்றாக செய்து கோண்டு, சராசரி மனிதனைப் போலவே வாழ்ந்து இறந்திருப்பார், பிறகு தான் எவனோ இந்த கதையெல்லாம் தயாரித்திருக்க வேண்டும்!

பெயரில்லா சொன்னது…

//கோவணம், ஆங்கிலத்தில் டவுசர் என்று அழைக்கப்படுகிறது!
..//

ஆங்கிலத்தில் அதற்கு லாயின் கிளாத் (Loin cloth) என்றே பெயர்.

பெயரில்லா சொன்னது…

//பிறகு தான் எவனோ இந்த கதையெல்லாம் தயாரித்திருக்க வேண்டும்!//

கரெகட் அப்ரோச்.

ஆனால் இதையெல்லாவிடங்களிலும் கடைபிடித்த்தாகத் தெரியவில்ல.

சிவன், முருகன், பிள்ளையார் என்றெல்லாம் சாமிகள். அவர்களாக வந்து என்னைக் கும்பிடு, என்னைப் பற்றிப் பாடு, கதையெழுது, என்றல்லாம் சொல்லவில்லை. மனிதர்கள் செயலகள். ஆனால் கடவுளர்களப் போட்டு திட்டித்தீர்த்தல் நல்லாவாயிருக்கு?

மார்கண்டேயன் சொன்னது…

இந்து மற்றும் கிறித்துவர்கள் கொதித்தது போல் தெரியவில்லை, அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம்,

இது போன்ற வரிகள் தேவையற்ற (மத)வெறியை தூண்டுவதாகவே தெரிகிறது . . . தவிர்த்தல் நலம்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

Blogger வால்பையன் said...

அதிலுள்ளவைகள் பொய்ன்னு நிறுபிக்கசொல்லுங்க! ப்ளீஸ்!

உங்களின் அறிவு மிகுதி எதை நோக்கி உங்களை செலுத்துகிறது!, அரசன் எது செய்தாலும் சரி என்றிருந்த காலம் போல் இன்றும் இருக்க முடியுமா?

--------------------------------
அன்பின் வால்பையன் ,

காற்றை காண முடியாது உணர முடியும்..

நான் மதத்துக்கு அப்பார்பட்டவள்.. ஆனாலும் இன்றுவரை தவறாது சர்ச் செல்வேன்.. ஏனெனில் அது ஒரு ஒழுக்கத்தை, நல்ல மனிதராய் இருப்பதை எனக்கு கற்று தந்த இடம்..

இது கோவிலோ மசூதியாகவோ இருந்தாலும் எனக்கு அதே எண்ணம்தான்..

என் கடவுள் என்னை மட்டும் கும்பிடு என ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.. ஏன்னா ஒரு அன்னையாக நம் பிள்ளை மீதே நாம் அப்படி திணிப்பதில்லையே, அப்படியிருக்கும் போது நம்மை படைத்தவர் ஒருவர் இருந்தால் நம்மைவிட அத்தனை அன்பானவராய் இருக்கணும்.. பேராசை இராதே..

நீங்கள் மத கதைகளை எதிர்கின்றீர்கள் .. சரியே.. எனக்கும் பலவற்றில் உடன்பாடில்லை.. மனதுக்குள் சிரிப்பேந்தான், எப்படிலாம் கத உட்ருக்காங்க ன்னு..

ஆனா நம்பிக்கை என்ற விஷயம் மிக மிக பலம் வாய்ந்தது..

ஒருத்தி நம்மை காதலிக்கின்றாள் என்று நம்ப ஆரம்பிக்கும்போது ஒருவன் உலகையே மறக்கிறான்..இத்தனைக்கும் ம்னிதன் என்பவன்/ள் மாறக்கூடியவரே..என தெரிந்தும் , அந்த நம்பிக்கை அவனுக்கு சுகம்..

கவிதை பல கற்பனைதான்.. நிஜமென நிரூபிக்க புறப்பட்டால் எல்லாம் மாயையாகும், வெறுமை நிரம்பும்..

கற்பனை என தெரிந்தும் புரிந்தும் ரசிக்கிறோம் பலவற்றை வாழ்வில்..

அதே நம்பிக்கை தான் கடவுள் இருக்கிறார்..என்பது..

அவருக்காக நாம் நல்லது செய்யணும், தப்பு செய்யக்கூடாது என்ற எண்ணம் எத்தனை நல்லது..

என்ன கஷ்டம் வந்தாலும் அந்த கடவுள் ஒருநாள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு மரணம் வரை செல்வது எத்தனை எளிதும்..?

கடவுள் இல்லை என நீங்க நிரூபிக்கின்றீர்கள் என வைப்போம்..

உங்கள , என்னை மாதிரியான விபரம் தெரிந்தவருக்கு வேணா டேக் இட் ஈஸியா இருக்கும்..ஆனா மென்மை மனம் படைத்தவருக்கு?.. நம்பிக்கையோடு வாழ்வை நடத்துபவருக்கு?..

என்ன பதில் வைத்திருக்கோம் நாம்?.

உலகில் நடக்கும் துன்பத்தை பார்க்கும்போது எனக்கும் அடிக்கடி சந்தேகம் வருதுதான் " கடவுள் இருக்காரா னு?.."

ஆனா அதுக்காக நடக்கும் துன்பத்தை போக்க முயலுவேனே தவிர கடவுள் இல்லை என்று கெட்ட வார்த்தை பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டேன்..நேர விரயம் செய்து , கடவுளை கோபிப்பது போல..

உங்க கூற்றுபடி கடவுள் இல்லைன்னு உலக மக்கள் எல்லாரும் நம்ப ஆரம்பித்துவிட்டால் என்னாகும்?..நல்லதா கெட்டதா?..

நீங்களே சொல்லிடுங்க..ஆராய்ந்து பார்த்து..

கடவுள் , மதத்தின் பெயரால் உலகில் பல நல்ல காரியங்கள் நடைபெறுது..

அழிக்க வேண்டியது மூட நம்பிக்கைகளை ( களைகளை /கிளைகளை மட்டுமே. ) முற்றிலுமான நம்பிக்கையை ( ஆணி வேரை ) அல்ல...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

Blogger வால்பையன் said...
---------------------------------
உங்களின் அறிவு மிகுதி எதை நோக்கி உங்களை செலுத்துகிறது! - உங்க கேள்வி

----------------------------------------------------------------------------------------------

கடவுள் இல்லை என எனக்கு முழுதாய் தெரிந்தாலுமே, என் அறிவு இப்புவியுலக மனிதரின் நிம்மதியை நோக்கி.. அது கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலே இருக்கின்றது என்பது என் கருத்து..

--------------

நீண்ட பதில் தட்டச்சினேன். ஆனால் பிரசுரிக்க இயலவில்லை..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

Blogger வால்பையன் said...

அதிலுள்ளவைகள் பொய்ன்னு நிறுபிக்கசொல்லுங்க! ப்ளீஸ்!

--------------------------------
அன்பின் வால்பையன் ,

காற்றை காண முடியாது உணர முடியும்..( பலூன் வைத்து நிரூபிப்பதல்ல )

நான் மதத்துக்கு அப்பார்பட்டவள்.. ஆனாலும் இன்றுவரை தவறாது சர்ச் செல்வேன்.. ஏனெனில் அது ஒரு ஒழுக்கத்தை, நல்ல மனிதராய் இருப்பதை எனக்கு கற்று தந்த இடம்..

இது கோவிலோ மசூதியாகவோ இருந்தாலும் எனக்கு அதே எண்ணம்தான்..

என் கடவுள் என்னை மட்டும் கும்பிடு என ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.. ஏன்னா ஒரு அன்னையாக நம் பிள்ளை மீதே நாம் அப்படி திணிப்பதில்லையே, அப்படியிருக்கும் போது நம்மை படைத்தவர் ஒருவர் இருந்தால் நம்மைவிட அத்தனை அன்பானவராய் இருக்கணும்.. பேராசை இராதே..

-- தொடரும்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

தொடர்ச்சி-----------

நீங்கள் மத கதைகளை எதிர்கின்றீர்கள் .. சரியே.. எனக்கும் பலவற்றில் உடன்பாடில்லை.. மனதுக்குள் சிரிப்பேந்தான், எப்படிலாம் கத உட்ருக்காங்க ன்னு..

ஆனா நம்பிக்கை என்ற விஷயம் மிக மிக பலம் வாய்ந்தது..

ஒருத்தி நம்மை காதலிக்கின்றாள் என்று நம்ப ஆரம்பிக்கும்போது ஒருவன் உலகையே மறக்கிறான்..இத்தனைக்கும் ம்னிதன் என்பவன்/ள் மாறக்கூடியவரே..என தெரிந்தும் , அந்த நம்பிக்கை அவனுக்கு சுகம்..

கவிதை பல கற்பனைதான்.. நிஜமென நிரூபிக்க புறப்பட்டால் எல்லாம் மாயையாகும், வெறுமை நிரம்பும்..

கற்பனை என தெரிந்தும் புரிந்தும் ரசிக்கிறோம் பலவற்றை வாழ்வில்..

அதே நம்பிக்கை தான் கடவுள் இருக்கிறார்..என்பது..

அவருக்காக நாம் நல்லது செய்யணும், தப்பு செய்யக்கூடாது என்ற எண்ணம் எத்தனை நல்லது..

என்ன கஷ்டம் வந்தாலும் அந்த கடவுள் ஒருநாள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு மரணம் வரை செல்வது எத்தனை எளிதும்..?

கடவுள் இல்லை என நீங்க நிரூபிக்கின்றீர்கள் என வைப்போம்..

உங்கள , என்னை மாதிரியான விபரம் தெரிந்தவருக்கு வேணா டேக் இட் ஈஸியா இருக்கும்..ஆனா மென்மை மனம் படைத்தவருக்கு?.. நம்பிக்கையோடு வாழ்வை நடத்துபவருக்கு?..

என்ன பதில் வைத்திருக்கோம் நாம்?.

உலகில் நடக்கும் துன்பத்தை பார்க்கும்போது எனக்கும் அடிக்கடி சந்தேகம் வருதுதான் " கடவுள் இருக்காரா னு?.."

ஆனா அதுக்காக நடக்கும் துன்பத்தை போக்க முயலுவேனே தவிர காடவுள் இல்லை என்று கெட்ட வார்த்தை பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டேன்..

உங்க கூற்றுபடி கடவுள் இல்லைன்னு உலக மக்கள் எல்லாரும் நம்ப ஆரம்பித்துவிட்டால் என்னாகும்?..நல்லதா கெட்டதா?..

நீங்களே சொல்லிடுங்க..ஆராய்ந்து பார்த்து..

கடவுள் , மதத்தின் பெயரால் உலகில் பல நல்ல காரியங்கள் நடைபெறுது..

அழிக்க வேண்டியது மூட நம்பிக்கைகளை ( களைகளை /கிளைகளை மட்டுமே. ) முற்றிலுமான நம்பிக்கையை ( ஆணி வேரை ) அல்ல...

வால்பையன் சொன்னது…

//கடவுள் , மதத்தின் பெயரால் உலகில் பல நல்ல காரியங்கள் நடைபெறுது.. //

அதை விட கொடுமைகள் அதிகம் என்பதாலேயே அதை தீவிரமாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலை!

நான் மதத்திற்கு தான் எதிரி, மனிதர்களுக்கு அல்ல!

ராவணன் சொன்னது…

//தயவு செய்து பிறர் மனம் புண்படும் பதிவுகளை எழுதாதீர்கள் அதுவும் சொந்தப் பெயரில்.//

அப்ப நீங்க பதிவே எழுதமுடியாதே?

சாம்பார் சோறுதான் நல்லாயிருக்கும் என்று நீங்கள் எழுதினால், என்னைப் போன்ற பிரியாணிப் பிரியர்களுக்கு மனம் புண்படுமே?
அதற்காக மிரட்டல் விட நான் அல்கொய்தா கூட்டம் இல்லை.

beer mohamed சொன்னது…

வியாபாரிகளின் திறமை என்ன தெரியுமா விற்பனை ஆகாத பொருள்களை தள்ளுபடியில் விற்பனை செய்வார்கள்.அது போல தான் இவர்கலின பதிவும்

உமர் | Umar சொன்னது…

//வியாபாரிகளின் திறமை என்ன தெரியுமா விற்பனை ஆகாத பொருள்களை தள்ளுபடியில் விற்பனை செய்வார்கள்.அது போல தான் இவர்கலின பதிவும்//

அவர்கள் முன்வைத்த பொருளை பொய் என்று நிரூபிக்க முடியுமா உங்களால்? அது உண்மை என்பதால்தானே, இதுவரை யாரும் மையப்பொருளின் அருகில்கூட செல்லவில்லை.

dondu(#11168674346665545885) சொன்னது…

//என் கடவுள் என்னை மட்டும் கும்பிடு என ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.//
தவறு. பழைய ஏற்பாட்டில் மோசசுக்கு கடவுள் அளித்த பத்துக் கட்டளைகளில் முதல் சில கட்டளைகளே இது பற்றித்தான்:
“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்”.

ஆங்கிலத்தில்:
I am the Lord your God, who brought you out of the land of Egypt, out of the house of slavery;
3 Do not have any other gods before me.
4 You shall not make for yourself an idol, whether in the form of anything that is in heaven above, or that is on the earth beneath, or that is in the water under the earth.
5 You shall not bow down to them or worship them; for I the Lord your God am a jealous God, punishing children for the iniquity of parents, to the third and the fourth generation of those who reject me,

dondu(#11168674346665545885) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

dondu(#11168674346665545885) said...

//என் கடவுள் என்னை மட்டும் கும்பிடு என ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.//
தவறு.

-------------
அன்பின் டோண்டு ,

நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்கன்னு நினைக்கிறேன் நான் சொன்னதை..

வேதாகமத்தில் நீங்க சொன்ன வசனம் இருக்கு..

நான் சொல்வது அன்பே நிறைந்த கடவுளுக்கு பேராசை எப்படி இருக்க முடியும்?..

முரண் அல்லவா?..

என்னை மட்டும் வணங்குன்னு சொல்லியிருப்பாரா என்பது என் சந்தேகம்..

இது போல பல சந்தேகங்கள் உண்டு பைபிள் வசனத்தில்..

மத புத்தகங்கள் அந்தந்த கால கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப்ப்ட்டவை..

பெண்கள் ஆண் போல் உடை உடுத்த கூடாது என சொல்லப்ப்ட்டுள்ளது . இக்காலத்துக்கு பொருந்துமா?..

இப்படி பல....

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

வால்பையன் said...

//கடவுள் , மதத்தின் பெயரால் உலகில் பல நல்ல காரியங்கள் நடைபெறுது.. //

அதை விட கொடுமைகள் அதிகம் என்பதாலேயே அதை தீவிரமாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலை!
----------------------

இதுதான் சர்வே செய்து எடுக்க வேண்டிய முடிவு..

மதத்தால் அளிவு எவ்வளவு ஆக்கம் அவ்வளவு என.?

ராஜ நடராஜன் சொன்னது…

//உங்கள் பதிவுகளின் மையக்கருத்து தவிர்த்து எழுத்து நடை மொழிகளில் எனக்கு உடன்பாடு இல்லை.//

மேலும் இடுகையை தொடராமலும்,பின்னூட்ட பரிணாமங்களை பார்க்காமலும் வழிமொழிகிறேன்.

Matra சொன்னது…

//சுரணையற்றவர்களுக்குத்தான் சகிப்புத்தன்மையும் இருக்குமோ !
//

ஹிந்துக்களுக்கு இந்த சுரணையற்ற‍சகிப்புத்தன்மை இருந்ததனால்தானே இந்தியாவில் இஸ்லாமும் கிருத்தவமும் வர முடிந்தது ???

MR.BOO சொன்னது…

//மத புத்தகங்கள் அந்தந்த கால கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப்ப்ட்டவை..//

Royal Salute...

dondu(#11168674346665545885) சொன்னது…

//மத புத்தகங்கள் அந்தந்த கால கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப்ப்ட்டவை..//
உண்மையே, ஆனால் அதை இசுலாமியர் ஒப்புக் கொள்வதில்லையே. அவர்களை பொருத்தவரை முகம்மது காலகட்டத்தில் அக்கால அரேபியாவுக்காக எழுதப்பட்ட விஷயங்கள் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும், இக்காலத்துக்கும் பொருந்தும் என்றுதானே இருக்கிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//
என் கடவுள் என்னை மட்டும் கும்பிடு என ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.. ஏன்னா ஒரு அன்னையாக நம் பிள்ளை மீதே நாம் அப்படி திணிப்பதில்லையே, அப்படியிருக்கும் போது நம்மை படைத்தவர் ஒருவர் இருந்தால் நம்மைவிட அத்தனை அன்பானவராய் இருக்கணும்.. பேராசை இராதே..
//

ஒரு இஸ்லாமியரிடையோ அல்லது கிறித்துவரிடையோ உங்கள் சாமி பிறர் சாமிகளை வணங்க அனுமதிக்கிறதா என்று கேட்டுவிட்டு சொல்லி இருக்கலாம், எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மையே, ஆனால் அதை இசுலாமியர் ஒப்புக் கொள்வதில்லையே. அவர்களை பொருத்தவரை முகம்மது காலகட்டத்தில் அக்கால அரேபியாவுக்காக எழுதப்பட்ட விஷயங்கள் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும், இக்காலத்துக்கும் பொருந்தும் என்றுதானே இருக்கிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உங்கள் கூற்று பாதி சரி, சரியத் சட்டங்கள் தான் சிவில் சட்டமாக இருக்கனும் என்கிற இஸ்லலமியர்கள் அனைவருமே கிரிமினல் சட்டத்தை சவுதியையோ அல்லது தலிபானையோ பார்த்து பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்துவது இல்லை. அமைதி மார்க்கத்தில் கண்ணுக்கு கண் இல்லைன்னு தான் சொல்லுவாங்க :)

Unknown சொன்னது…

மேலும் சில விளக்கங்கள் என் பதிவில்
http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

கோவி சார் ...

இப்போது தான் உடல் நலம் தேறி ஊரிலிருந்து திரும்பினேன்... ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த பதிவுகளையும் படிக்க முடியாமற் போனது ....

// மையக் கருத்து தவிர மொழியில் உடன் பாடு இல்லை ...தோழர் சென்சியே கொதிக்கிறார்... இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை... தயவு செய்து பிறர் மனம் புண்படும் பதிவுகளை எழுதாதீர்கள்...அது நீங்கள் சொந்தப் பெயரில் எழுதுவதால் கிடைக்கும் எதிர்வினை மட்டும் தான்...எச்சரிக்கைகளை, அன்பு வேண்டுகோள்களை நீங்கள் சந்திக்கத் தேவை இருக்காது...//

தோழர் ... நீங்களும் நமது அப்துல்லா (லேட்.பெரியார் தாசன்) செய்தார் போன்று புனித குரானை ஆய்வு செய்து வருகிறீர்களா...? எப்போது விமானம் ஏற உத்தேசம் ?

இஸ்லாமியத்தை விமர்சிக்க அனைவரும் தொடை நடுங்கும் சூழலில் வால் பையனையும் ராஜனையும் பாராட்ட ஒண்ணாமல் தடுக்கும் உங்கள் பகுத்தறிவை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை ...

பகுத்தறிவு வாதம் என்பது இந்து மற்றும் கிறித்துவ மதங்கள் சம்பந்தப் பட்டது ; இஸ்லாமியத்திற்கு பொருந்தாது என்பது வெறும் மஞ்சள் வாதம்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்