பின்பற்றுபவர்கள்

10 அக்டோபர், 2009

நானும் ரோசா தான் !

நண்பர் ஜ்யோராம் சுந்தரை ரோசாவசந்த் கைநீட்டிய விவகாரம் சீரணிக்க முடியவில்லை. நம்ம குழந்தைகளையே கைநீட்டி அடிக்கும் உரிமை கிடையாது, பிறகு எப்படி பிறர் மீது கை நீட்டுவதை நாம் ஆயிரம் காரணங்களுக்காக ஞாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

வலையுலகில் இதைப் பதிவாகப் படிக்காவிட்டால் இதை வலையுலகம் சாராத ஒரு நிகழ்வாக புறம் தள்ளலாம். தொடர்புடைய இருவரும் வலையுலகுக்கு தொடர்புடையவர்கள் என்பதால் இதை வலையுலகம் தொடர்புடைய ஒரு செயலுடன் பார்க்கக் கூடிய சூழலாக அமைந்திருக்கிறது. இதன் வழியாக வலையுலகில் இது போன்ற நிகழ்வுகள் கூட நடக்க வாய்ப்புகள் இருப்பதற்கான ஒரு மோசமான ஒரு உதாரணமாக அமைந்துவிட்டு இருக்கிறது என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

பேசித் தீர்க்க வேண்டிய பினக்குகளை பேசித் தீர்க்காவிடில் நீதியை / காவல்துறையை நாடி முறையிடுவது தான் சரியான செயல்பாடு, அதைவிடுத்து தெருச்சண்டைப் போல் குத்துவது என்பதில் தொடங்கி இருப்பது ஒரு தவறான அனுகுமுறை. வலையுலகும் பொதுவான களம் என்பதால் டீசண்ட் இண்டீசண்ட் என்று ஒழுங்கு கட்டமைகளால் வலையுலகை கட்டமைத்துவிட முடியாது என்பதாகவே விளங்குகிறது.

நம் கண்டனங்களால் மறைத்துவிட முடியாத ஒரு நிகழ்வாக, வலையுலகில், பதிவர்களிடையே இது போன்ற மோசமான நிகழ்வுகளை துவக்கி வைத்திருப்பதிலும் தமிழ் பதிவுலகினர் முன்னோடியாக இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று அல்ல என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

நாளைக்கு சுந்தரும் ரோசாவும் மீண்டும் நெருங்கினாலும் இப்படி ஒரு நிகழ்வை பதிவர்கள் மத்தியில் பதியவைத்திருப்பதை அழிக்க முடியாது, ரோசாவின் செயலை முற்போக்கு வாதிகளுக்கும் பொதுப் புத்தி உண்டு என்றும் பொதுப்புத்திகளை அழிப்பது உடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் போல

இனி 'நானும் ரோசாதான்' என்று சிலர் கிளம்பாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

33 கருத்துகள்:

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஜ்யோவ்ராம் என்ற அகந்தை பிடித்த அற்பனின் மூக்கு உடைபட்டது காலத்தின் கட்டாயம்; என்றாலும்,உடைத்தது தன்னை "வசந்தமான ரோசா" என்று வர்ணித்துக்கொள்ளும் அலபம் ஊமத்தம் பூ என்பதை பார்க்கையில் மனது நோகத்தான் செய்கிறது;பதிலுக்கு ஜ்யோவ்ராம் ஊமத்தம் பூவின் மூக்கை உடைத்திருந்தால் நியாயம் நடந்திருக்கும்.இரண்டு மூக்குகளும் உடைபட வேண்டிய மூக்குகள் தான் என்று தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை நிறைவு செய்யுங்களய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
//

இன்னும் இருக்கியா ?

அவ்வ்வ்வ்வ்

டோண்டு சாரை விசாரித்ததாகச் சொல்லவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஓ! இப்படியெல்லாம் நடக்குதா?

எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் கைகலப்பு தேவையில்லாதது.

என்ன பிரச்சனை என்பதை விட
யார் என்பதும்,
என்ன நடந்தது என்பதுதான் முதலில் தெரியும்.




அது யாரு உங்க நண்பர் பாலாவா?

நல்லா இருங்க!

நிகழ்காலத்தில்... சொன்னது…

சுந்தர் திருப்பூர் வந்த போது பார்த்தேன்,
ஜாலியான நபர்தான்,

வலையுலகில் நட்பின் இடையே சற்றே முரண்பட்டவர்களாக யாரையேனும் நம்மால் அடையாளம் காண நேர்ந்தால் விலகி விடுதல் உத்தமம் போல் படுகிறது...

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இந்த உள்குத்து, வெளிக்குத்து, சைடு குத்தெல்லாம் பதிவர் மொழிகளில் நிறையப் புழங்கும் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திருக்கும் எனக்கு, புதிதாக ரோசாக் குத்து என்ற இன்னொரு பதமும் அறிமுகமாகி இருக்கிறது:-((

குத்தினது ரோசாவாக இருக்காது! ரோசாவோடு இருக்கும் முள்ளாகத்தான் இருக்கும்.

சிங்கக்குட்டி சொன்னது…

என்னது அடிதடியா? இப்படியும் நடக்குதா?

என்ன கொடுமை சார் இது?

துளசி கோபால் சொன்னது…

'சம்பவம்' அறிந்து மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு.

'பதிவர் சந்திப்பு'ன்னதும் இனிமே கொஞ்சமாவது யோசிக்கத்தான் வேணும்(-:

குப்பன்.யாஹூ சொன்னது…

என்னதான் சுந்தரும் ரோசாவும் நண்பர்களாய் இருந்தாலும், வன்முறை ஒரு தவறான வழி.

அதுவும் பக்கம் பக்கமாய் இலக்கியம், புனைவு, சைடு நவீனத்துவம் என்று எழுதும் ரோசா போன்ற பதிவர்களிடம் வன்முறை சற்றும் எதிர் பார்க்க வில்லை.

இவர்கள் எழுதும் எழுத்தில் (பதிவில்) சத்தியம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அறிவிலி சொன்னது…

நல்ல வேளை, தலைப்பை பார்தது பயந்துட்டேன்.


//கோவி.மு.கண்ணன் அய்யா//

மு?

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அது யாரு உங்க நண்பர் பாலாவா?

நல்லா இருங்க!
//

ஆமாம் ஜோதி, அவன் என் நண்பன் தான். அவன் பேரு ஜயராமன் அவன் தான் சல்மா ஜயராமன் என்கிற பேச்சும் உண்டு. ஆனால் இந்த ஜயராமனும் டோண்டு சாரின் நண்பர் வைதீகஸ்ரீ ஜயராமன் சாரும் ஒருவரா என்று எனக்கு தெரியாது. இருவரும் ஒருவரா இல்லையா என்பது டோண்டு சாருக்கு தெரிந்திருக்கலாம் ஏனெனில் இருவருமே டோண்டு சார் பதிவுக்கு பின்னூட்டுபவர்கள். டோண்டு சாரிடம் நட்பு கருதி நானும் இது பற்றிக் கேட்கப் போவதில்லை. என்னை நீங்கள் வற்புறுத்தினாலும் டோண்டு சாரிடம் நான் இதைக் கேட்கமாட்டேன்.

சிரிப்பானெல்லாம் போட முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
சுந்தர் திருப்பூர் வந்த போது பார்த்தேன்,
ஜாலியான நபர்தான்,//

இதுல குணநலன்களைத் தொடர்பு படுத்தி நான் பார்க்கல, எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு. ரத்தம் வரும், பெரிய சிக்கலாகும் என்று ரோசா எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். ஆனால் ஒருவரை அழைத்து, அவர் போதையானவுடன் தனிமையான ஒரு இடத்தில் வைத்து எதிர்பாராத நேரத்தில் அடித்ததெல்லாம் திட்டமிட்ட ஒன்றாகவே தெரிகிறது.

//வலையுலகில் நட்பின் இடையே சற்றே முரண்பட்டவர்களாக யாரையேனும் நம்மால் அடையாளம் காண நேர்ந்தால் விலகி விடுதல் உத்தமம் போல் படுகிறது...
//

இது பொதுப் புத்தி :) ஒருவரை வைத்து அனைவரையும் எடை போடுவதை எல்லா விசயத்திலும் தவிருங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
இந்த உள்குத்து, வெளிக்குத்து, சைடு குத்தெல்லாம் பதிவர் மொழிகளில் நிறையப் புழங்கும் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திருக்கும் எனக்கு, புதிதாக ரோசாக் குத்து என்ற இன்னொரு பதமும் அறிமுகமாகி இருக்கிறது:-((

குத்தினது ரோசாவாக இருக்காது! ரோசாவோடு இருக்கும் முள்ளாகத்தான் இருக்கும்.
//

ஆத்திரக்காரனுக்கு ன்னு பழமொழியே இருக்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கக்குட்டி said...
என்னது அடிதடியா? இப்படியும் நடக்குதா?

என்ன கொடுமை சார் இது?
//

கத்திரிக்கா முத்தினால் கடைவீதி....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
'சம்பவம்' அறிந்து மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு.

'பதிவர் சந்திப்பு'ன்னதும் இனிமே கொஞ்சமாவது யோசிக்கத்தான் வேணும்(-:
//

தலைக் கவசம் போட்டுக் கொண்டு போகலாம் :)

நிகழ்காலத்தில்... சொன்னது…

//ஒருவரை வைத்து அனைவரையும் எடை போடுவதை எல்லா விசயத்திலும் தவிருங்கள்//

எல்லோரையும் ஒரே மாதிரி பொதுவாக பார்க்கக் கூடாது என்றுதான் நானும் சொல்லி இருக்கிறேன்.

(\\சற்றே முரண்பட்டவர்களாக யாரையேனும்\\)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

என்ன சார் இப்படியெல்லாம் நடக்குது! நம்பதான் முடியுமா? இனி எப்படி பதிவர்களை சந்திக்க துணிவு வரும்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

+1
வேற என்னத்த சொல்ல..

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//Blogger கோவி.கண்ணன் said...

//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
//

இன்னும் இருக்கியா ?

அவ்வ்வ்வ்வ்

டோண்டு சாரை விசாரித்ததாகச் சொல்லவும்.//

:)))

இரும்மா இருக்கீறாரா?

bala சொன்னது…

////கோவி.மு.கண்ணன் அய்யா//

மு?////

அறிவிலி அய்யா,

மு என்றால் முண்டம் என்பதின் சுருக்கம்.கோவி ஒரு டிபிகல் திராவிட கருப்பு சட்டை வெறி நாய் முண்டம் என்பதால், அவர் சான்றோர்களால், கோவி.மு.கண்ணன் என்றழைக்கப்படுகிறார்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ யெஸ்.பாலபாரதி ♠


+1
வேற என்னத்த சொல்ல..
//

+ குத்துன்னா ப்ளாஸ்திரியா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
////கோவி.மு.கண்ணன் அய்யா//

மு?////

அறிவிலி அய்யா,

மு என்றால் முண்டம் என்பதின் சுருக்கம்.கோவி ஒரு டிபிகல் திராவிட கருப்பு சட்டை வெறி நாய் முண்டம் என்பதால், அவர் சான்றோர்களால், கோவி.மு.கண்ணன் என்றழைக்கப்படுகிறார்.

பாலா
//

வாடா பாலா அலைசு சல்மா ஜெயராமா,

நாம நண்பர்கள் என்று யாருக்கும் தெரியாதாம். வந்து தெளிவு படுத்தியதற்கு நன்றி
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// அவர் சான்றோர்களால், //

தெண்டம் பாலா,

சான்றோர்கள் என்றால் யாரு ? உன்னைமாதிரி உன் நூலோடு இணைந்தவர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//.ஞானசேகரன் said...
என்ன சார் இப்படியெல்லாம் நடக்குது! நம்பதான் முடியுமா? இனி எப்படி பதிவர்களை சந்திக்க துணிவு வரும்
//

சந்திக்கப் போனால் துணியோடு வருவோமா என்று கேட்காதவரை நன்று !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//(\\சற்றே முரண்பட்டவர்களாக யாரையேனும்\\)//

சிவா,

விளக்கத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குப்பன்.யாஹூ


என்னதான் சுந்தரும் ரோசாவும் நண்பர்களாய் இருந்தாலும், வன்முறை ஒரு தவறான வழி.

அதுவும் பக்கம் பக்கமாய் இலக்கியம், புனைவு, சைடு நவீனத்துவம் என்று எழுதும் ரோசா போன்ற பதிவர்களிடம் வன்முறை சற்றும் எதிர் பார்க்க வில்லை.
//

உணர்ச்சிவசப்பட்டு செயலாற்றுவதை பின்னவீனத்துவாதிகள் 'அறச்சீற்றம்' என்பார்கள். கஷ்டம் கஷ்டம்

bala சொன்னது…

ஜாதி வெறி பிடித்து அலையும் டிபிகல் திராவிட கருப்பு சட்டை குஞ்சு கோவி.மு.கண்ண்ன் அய்யா,

இந்த நாத்தம் பிடிச்ச ஊமத்தம் பூ அய்யா ஜ்யோவ்ரமின் முக்குக்கு பதிலாக உங்க மூக்கை உடைத்திருந்தால் நோபல் பரிசை ஒபாமாவுக்கு பதிலாக அவருக்கு கொடுத்திருப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
ஜாதி வெறி பிடித்து அலையும் டிபிகல் திராவிட கருப்பு சட்டை குஞ்சு கோவி.மு.கண்ண்ன் அய்யா,

இந்த நாத்தம் பிடிச்ச ஊமத்தம் பூ அய்யா ஜ்யோவ்ரமின் முக்குக்கு பதிலாக உங்க மூக்கை உடைத்திருந்தால் நோபல் பரிசை ஒபாமாவுக்கு பதிலாக அவருக்கு கொடுத்திருப்பார்கள்.
//

நேராக வாடா நண்பா பாலா என்கிற சல்மா ஜயராமா, அப்போது உன் முகரையையும் 8 ஆம் நம்பர் நூலையும் பதிவர்களுக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.

அப்பாவி முரு சொன்னது…

pathivukku

:(

pinnuuttaththirkku

:((((

பித்தனின் வாக்கு சொன்னது…

நான் வலையுலகிற்கு சின்ன பையன், எனக்கு ஒன்னும் தெரியாது. ஆதலால் கருத்துச் சொல்லவில்லை. இது என்ன பூ ஒன்று புயலானதா?

அறிவிலி சொன்னது…

கோவி கண்ணன்,

மன்னிக்கவும்.விவரம் அறியாமல் மூக்கை நுழைத்துவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
கோவி கண்ணன்,

மன்னிக்கவும்.விவரம் அறியாமல் மூக்கை நுழைத்துவிட்டேன்.
//

அதனால் என்ன சொறி நாய் ஒன்று வலையுலகில் சுதந்திரமாக உலாவருவதை தெரிந்து கொண்டு எச்சரிக்கை ஆகி இருக்கிறீர்கள்.
:)

ஆண்மை குறையேல்.... சொன்னது…

//எப்படி பிறர் மீது கை நீட்டுவதை நாம் ஆயிரம் காரணங்களுக்காக ஞாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை//

ஞாயப்படுத்த கார‌ண‌ங்க‌ள் இருகிற‌து கோவி..

உங்க‌ள் உற‌வுக‌ளை கொச்சைப‌டுத்தி பேசினால்...
சென்னை வார்த்தையான‌ "ங்கோ**" என்று அழைத்தால்...
அறியா சிறுமியிட‌ம் த‌காது ந‌ட‌ன்து கொண்ட‌வ‌னை பார்த்தால்...

இப்ப‌டி நிறைய‌...

அத‌ற்காக‌ சுந்தர் அப்ப‌டி பேசினார் என‌ சொல்ல‌வில்லை...

நான் கேள்விப்ப‌ட்டேன் அவ‌ர‌து குடும்ப‌த்தை ப‌ற்றி எழுதினார் என்று..

ஆண்ட‌வ‌னுக்கு தான் தெரியும்....

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆண்மை குறையேல்.... said...
//எப்படி பிறர் மீது கை நீட்டுவதை நாம் ஆயிரம் காரணங்களுக்காக ஞாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை//

ஞாயப்படுத்த கார‌ண‌ங்க‌ள் இருகிற‌து கோவி..

உங்க‌ள் உற‌வுக‌ளை கொச்சைப‌டுத்தி பேசினால்...
சென்னை வார்த்தையான‌ "ங்கோ**" என்று அழைத்தால்...
அறியா சிறுமியிட‌ம் த‌காது ந‌ட‌ன்து கொண்ட‌வ‌னை பார்த்தால்...

இப்ப‌டி நிறைய‌...

அத‌ற்காக‌ சுந்தர் அப்ப‌டி பேசினார் என‌ சொல்ல‌வில்லை...

//

அங்கே "ரோசா குத்தினார்" என்பதற்காக "ரோசா கொலை செய்தார்" என்ற சொல்லைப் போட்டு அப்படி ஒரு நிகழ்வையும் கற்பனை செய்து பாருங்கள். அப்பொழுதும் நீங்கள் சொல்வதில் எதும் நியாம் இருக்கிறதா என்று பாருங்கள்.

இன்னும் கொஞ்சம் இரத்தம் வெளி ஏறி இருந்தால் கண்டிப்பாக சுந்தர் உயிருக்கு ஆபத்தாக முடிந்து இருக்கும், போலிஸ் கேசாக மாறி இருக்கும். எனவே அடித்தார், குத்தினார், கொஞ்சமாகத்தானே அடித்தார் என்பதெல்லாம் காயத்தின் தன்மையை வைத்து நாம் ஞாயப்படுத்த முயல்வது தான்.

சுந்தர் தவறு செய்திருந்தால் முறை இட்டிருக்க வேண்டிய இடம் காவல் துறைதானேயன்றி அவர் மீது கை வைத்ததை என்னால் ஞாயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

உணர்ச்சிவசப்படுபவர்கள் பொதுச் சமூகத்திற்கு அறிவுரைக் கூறவோ, அதை மாற்ற முயலவோ தகுதிகள் உண்டா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்