பின்பற்றுபவர்கள்

7 ஜூன், 2009

இனிப்பு பதிவருடன் இனிய சந்திப்பு !

2004ல் இருந்து எழுதுபவர், நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் ஊக்குவித்தவர், என்றாவது ஒரு நாள் இவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவர், ஆன்மீகவாதி, முத்தமிழ் வித்தகர், கடலுணவு விருப்பர், சிங்கை வந்திருந்தார். அவர் ஜிரா என்று அழைக்கப்படும் ஜி.ராகவன் தான் அந்தப்பதிவர். ஜிரா...ஜீரா -ன்னா இனிப்பு தான். அதோடு மட்டுமில்லாமல் மகரந்தம் என்று தனது வலைப்பதிவுக்கு பெயர் வைத்து எழுதிவருகிறார். இனிப்பு இருக்கும் இடத்தில் தான் மகரந்தம் இருக்கும். பழகுவதற்கும் இனிப்பானவர்.

ஜிரா ஒருவாரக் கால தன் விருப்பப் பயணம் மற்றும் அலுவலகப் பயணமாக சிங்கை வந்திருந்தார். சென்ற செவ்வாய் கிழமை மதுரை இராம், ஆமத்தூர் செகதீசன், பின்னூட்ட புயல் வெற்றி மகிழ்வன் (விஜய் ஆனந்த்) ஆகிய நால்வர் சந்தித்தோம்.






அதன் பிறகு குட்டிப் பதிவர் சந்திப்பு நடத்துவதாக முடிவு செய்து மின் அஞ்சல் வழி தகவல்களை அனுப்பிவிட்டு இன்று மாலை 3 - 5 வரை சந்தித்தோம்.

குறித்த நேரத்திற்கு சற்று நேரம் கடந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்தார் ஜிரா. வரும் போது ஆங்கிலத்தில் எழுதும் பதிவர் ஒருவரையும் அழைத்து வந்தார். அதற்கு முன்பே நான், முகவை இராம், அறிமுகப் பதிவர் பித்தன், வெளிச்சப் பதிவர் ஜோதி பாரதி, அகரம் அமுதா ஆகியோர் ஒரு இடத்தில் கூடி இருந்தோம். பின்னர் அறுவராக தொகுப்பு உணவுக் கூடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம், பின்னர் ஜோ, சரவணன், கடைசியாக ஜெகதீசன் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

பொதுவாக ஒருவருக்கொருவர் அறிமுகம், வலை நடப்புகள், அரசியல் நடப்புகள் பற்றி கதைத்தோம். 2:30 மணி நேரம் சென்றதே தெரியவில்லை.



(இரண்டு படங்களுக்கும் 33 வேறுபாடுகள், என்னன்னு கண்டு பிடியுங்கள்)

களையும் முன் நிழல்படம் எடுக்க ஆயத்தம் ஆனோம், "நிழல்படத்தில் நிற்க வாங்க 'ஜோ' " ன்னு முகவை இராம் அழைக்க. கிட்டதட்ட இரண்டு மணி நேரம் எதிரே எதிரே அமர்ந்து பேசியப் பிறகு,

"அட ட....நீங்க தான் ஜோ வா?" என்று ஜோவைப் பார்த்து இராகவன் கேட்க,

ஜோ மயக்கமானார்.


ஜிரா: "உங்களைக் கும்பிட்டுக் கேட்கிறேன் இந்த மேட்டரை வெளியே சொல்லிடாதிங்க...ப்ளீஸ்"



அதன் பிறகு வேறொரு வேலை காரணமாக நேரம் கருதி இராகவன் விடைபெற, மற்றவர்களுடனான மொக்கை 1 மணி நேரம் தொடர்ந்தது, பின் ஒருவராக ஒருவராக கலைந்தோம்

இருவாரங்களுக்கு முன்பு பதிவர் சந்திப்பு நடந்தேறியதால், ஜிராவுடனான சந்திப்பு பற்றி வலைப்பதிவில் முன்னறிவிக்கவில்லை.





அகரம் அமுதா, முகவை இராம், பின்னூட்ட புயல் (மீசை எடுத்ததால் இந்திரன்), வெளிச்ச பதிவர், பித்தன், சரவணன், ஜிரா, கோவியார்(ஹிஹி), 'கடற்புறத்தான்' ஜோ. (படத்தை 'கிளிக்'கி முழுதாகப் பார்க்கவும்)

கடைசி நான்கு படங்கள் எடுத்தவர்:

50 கருத்துகள்:

இராம்/Raam சொன்னது…

ஜிரா இல்லை... இராகவ் கான்... :))

பெருசு சொன்னது…

ஜி.ரா வுக்கு இலந்த வடையும் ,
கிளி மூக்கு மாங்காயும் ரொம்ப
பிடிக்கும்.

வாங்கி குடுத்தீங்களா கோ.வியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//பெருசு said...
ஜி.ரா வுக்கு இலந்த வடையும் ,
கிளி மூக்கு மாங்காயும் ரொம்ப
பிடிக்கும்.

வாங்கி குடுத்தீங்களா கோ.வியாரே.
//

இரண்டுமே இங்கே கிடைக்காதே. தாய்லாந்து இளநீர் பிடிக்கும் என்றார். அவரே வாங்கிக் குடித்துக் கொண்டார் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
ஜிரா இல்லை... இராகவ் கான்... :))
//

மும்பை பக்கம் போய் இருந்தா இரோ ஆகி இருப்பார் !
:)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

முக்கிய வேலைக்காரணமாக வர இயலவில்லை... இருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் அறிந்தது மகிழ்ச்சி....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இந்த படங்களில் நீங்க எங்கே !!!

G.Ragavan சொன்னது…

பதிவு போட்டாச்சா! ஆகா... கோவியின் சுறுசுறுப்பே சுறுசுறுப்பு... அப்ப பதிவர் சந்திப்புல நம்ம பேசிக்கிட்டது உண்மைதானே ;-)

// 2004ல் இருந்து எழுதுபவர், நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் ஊக்குவித்தவர், //

அதாகப்பட்டது பழம்பெரும் (அ) பெறும் பதிவர்னு சொல்ல வர்ரீங்க. சரியா? ;)

// "அட ட....நீங்க தான் ஜோ வா?" என்று ஜோவைப் பார்த்து இராகவன் கேட்க,

ஜோ மயக்கமானார். //

தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்களே... எனக்கு அவர்தான் ஜோன்னு தெரியும். நாங்கதான் நடிகர்திலகம் பத்திய பதிவுகள்ள சரியா வந்து பின்னூட்டம் போட்டுருவோம்ல. அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)

G.Ragavan சொன்னது…

// இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :)) //

அப்படிப் போடு.... அங்க நீதானே ஹீரோ. நாங்கள்ளாம் ஒரு ஓரத்துலதானே நின்னுக்கிட்டிருந்தோம்.

விவோசிட்டில ஒரு சைனீஸ் பொண்ணு ஒன்னப் பாத்து சிரிச்சாளே... அப்புறம் என்னாச்சு?

// பெருசு said...

ஜி.ரா வுக்கு இலந்த வடையும் ,
கிளி மூக்கு மாங்காயும் ரொம்ப
பிடிக்கும். //

ஆகா... ஆகா.... சரியாச் சொன்னீங்க. எலந்தவடை வாங்கித் தரல.... ஆனா மலாய் காப்பி.. இல்ல.. இல்ல கோப்பி வாங்கிக் குடுத்தாங்க. :-)

குமரன் (Kumaran) சொன்னது…

இராகவன் சிங்கை போறார்ன்னு கேள்விபட்டப்பவே நினைச்சேன் உங்களை வந்து பாப்பாருன்னு. பாத்துட்டாரு. :-)

சி தயாளன் சொன்னது…

நல்லது....:-)))

// இராம்/Raam said...
ஜிரா இல்லை... இராகவ் கான்... :))
//

அதேதான் நானும் நினைத்தேன் :-)

அறிவிலி சொன்னது…

அடடே.. ஊர்ல இல்லாததால நெறைய விஷயம் மிஸ் ஆவுதே..

தமிழ் சொன்னது…

/ இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :))/

உண்மை தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) 10:39 AM, June 07, 2009
இராகவன் சிங்கை போறார்ன்னு கேள்விபட்டப்பவே நினைச்சேன் உங்களை வந்து பாப்பாருன்னு. பாத்துட்டாரு. :-)
//

குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
முக்கிய வேலைக்காரணமாக வர இயலவில்லை... இருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் அறிந்தது மகிழ்ச்சி....
//

ஞான்ஸ்,
பரவாயில்லை, அடுத்தடுத்த சந்திப்புக்கும் ஆள் சேர்க்க வேண்டி இருக்கு, அப்ப கணக்கில வச்சிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
இந்த படங்களில் நீங்க எங்கே !!!
//

இரண்டாவது படத்தில் இடதுபக்கம் ஓரத்தில், கழுத்தில் தொங்கும் ஆரஞ்சு நிற பட்டையுடன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்களே... எனக்கு அவர்தான் ஜோன்னு தெரியும். நாங்கதான் நடிகர்திலகம் பத்திய பதிவுகள்ள சரியா வந்து பின்னூட்டம் போட்டுருவோம்ல. அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)//

ஜிரா,

அதை ஜோ சொல்லட்டும். சமாளிபிகேசன் செல்லாது ! செல்லாது ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
நல்லது....:-)))

// இராம்/Raam said...
ஜிரா இல்லை... இராகவ் கான்... :))
//

அதேதான் நானும் நினைத்தேன் :-)
//

உங்களை எதிர்பார்த்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
அடடே.. ஊர்ல இல்லாததால நெறைய விஷயம் மிஸ் ஆவுதே..
//

அண்ணே, ஊருக்குப் போறேன்னு சொல்லி இருந்தால் எதாவது பொருள் கொடுத்து அனுப்பி இருப்போம்ல !
:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
/ இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :))/

உண்மை தான்
//

ம் பாவம் நீங்களுமா ?

பலர் பேசிக்கிறாங்க, ஐஸு திருமனத்திற்கு முன் ஜிராவைப் பார்த்திருந்தால்......

இவரு கூட ஒரு படமாவது நடிக்கனும் என்று சொல்லி இருப்பாங்களாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விவோசிட்டில ஒரு சைனீஸ் பொண்ணு ஒன்னப் பாத்து சிரிச்சாளே... அப்புறம் என்னாச்சு?//

ஜிராம்
இராமு ஒரு மார்க்கமாத்தான் இருக்கான், அடிக்கடி காணாமல் பூடுறான். இப்பதான் மேட்டர் தெரியுது.
:)

தருமி சொன்னது…

ஜிரா ஒரு படத்தில இப்படி தாடியோடு இருக்காரே .. என்ன ஆச்சாம்? கேட்டு சொல்லுங்க ...

அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்னென்னு தெரிஞ்சு சொல்லுங்க....... நாளைக்கு அவங்க அப்பாவைப் பார்க்கப் போகணுமா?

சி தயாளன் சொன்னது…

//கோவி.கண்ணன் said...

உங்களை எதிர்பார்த்தேன்.
//

தகவல் என்னை வந்தடையவில்லை. கும்மி கழகத்தில் இருந்த தகவலை படிக்க மறந்துவிட்டேன் :-))))

G.Ragavan சொன்னது…

// தருமி said...

ஜிரா ஒரு படத்தில இப்படி தாடியோடு இருக்காரே .. என்ன ஆச்சாம்? கேட்டு சொல்லுங்க ...//

என்ன ஆச்சா?!?!?! இன்னைக்கு ஒரு சைனீஸ் முடி திருத்தத்துல போய் நீண்ட முடியைக் கத்தரிச்சிட்டு...டிரிம்மர் வெச்சி தாடியை டிரிம் பண்ணியாச்சு... :-)

குசும்பன் சொன்னது…

ஆமா அந்த ஹீரோ கணக்கா இருப்பவர்தான் ஜி.ராவா?

கோவி அண்ணாச்சி அவருக்கு பக்கத்தில் இருக்கும் பொழுதுமட்டும் உங்க அழகு ஒரு 10% கம்மியா தெரியுது.

இராம்/Raam சொன்னது…

//அதாகப்பட்டது பழம்பெரும் (அ) பெறும் பதிவர்னு சொல்ல வர்ரீங்க. சரியா? ;)//

இராகவ் கான்,

அப்பிடியில்லை... ஒங்களே Fruity'ன்னு சொல்லுறாரு.... :))

இராம்/Raam சொன்னது…

// G.Ragavan said...

// இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :)) //

அப்படிப் போடு.... அங்க நீதானே ஹீரோ. நாங்கள்ளாம் ஒரு ஓரத்துலதானே நின்னுக்கிட்டிருந்தோம்.

விவோசிட்டில ஒரு சைனீஸ் பொண்ணு ஒன்னப் பாத்து சிரிச்சாளே... அப்புறம் என்னாச்சு?//

ம்ம்... ஆமாம்... இம்புட்டு அழகான இராகவ் கான் வர்றப்போ ஏண்டா நீயெல்லாம் கூட வந்து வெறுப்பேத்துறேன்னு அசட்டு சிரிப்பு சிரிச்சா... அதுக்குப்புறம் என்னாச்சின்னு நீங்க தான் சொல்லனும்...

ஏன்னா நீங்கதானே அவக்கிட்டே போயி பேசி மொபைல் நம்பர்'லாம் வாங்கினீங்க.... :))

இராம்/Raam சொன்னது…

// இராமு ஒரு மார்க்கமாத்தான் இருக்கான், அடிக்கடி காணாமல் பூடுறான். இப்பதான் மேட்டர் தெரியுது.
:)//

வொய் திஸ் மச் கொலைவெறி வித் மீ????? :(


//தருமி said...

ஜிரா ஒரு படத்தில இப்படி தாடியோடு இருக்காரே .. என்ன ஆச்சாம்? கேட்டு சொல்லுங்க ...

அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்னென்னு தெரிஞ்சு சொல்லுங்க....... நாளைக்கு அவங்க அப்பாவைப் பார்க்கப் போகணுமா?//

வெளங்கும்... :(

நாமெல்லாம் ஓரே ஊருக்காராய்ங்கே சார், இப்பிடியெல்லாம் வீடு தேடி போயி குண்டு வைக்கப்பிடாது... :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இராம்/Raam 1:30 AM, June 07, 2009
ஜிரா இல்லை... இராகவ் கான்... :))
//

அச்சோ! ராமேய்!
அது இராகவ் கான் இல்லை!

உண்மையான பேரு ஜிரா கான்!- பாலிவுட்-ல ஐஸ் அப்படித் தான் கூப்டுவாங்க! ஓர்க்குட்-ல என் பாரீஸ் ஆல்பம் போயி பாருங்க! :))

இராகவ் கான்-ல கான் மட்டும் தான் மாடர்னா இருக்கு! இராகவ் பெருமாள் மாதிரி போரடிக்குது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

ஜிரா கான் நல்லா பாட்டு பாடுவாரே! சந்திப்புல பாடச் சொல்லி கேக்கலீயா கோவி அண்ணா?

ஜிரா போட்ட கும்புடு போஸ் நீங்களும் போட வேணாம்-ன்னு நினைச்சி கேட்காம வுட்டுட்டீங்களா? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) 11:07 PM, June 07, 2009
ஜிரா கான் நல்லா பாட்டு பாடுவாரே! சந்திப்புல பாடச் சொல்லி கேக்கலீயா கோவி அண்ணா?
//
கேஆர்எஸ்,
கண்டனம் ! கண்டனம் !, உங்க நண்பரைப் பற்றி எழுதினால் தான் பதிவுக்கு பின்"நோட்டம்" வருது !
:)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)//

அவருக்கு அவரு தான் ஜோவான்னு "ஜோ"திச்சுப் பாக்கணும்!
நீங்க ஏன் "சோ"திச்சிப் பாத்தீங்க?

தப்பு உங்க பேர்-ல தான் ஜிரா! அதுக்காக இன்னொரு-கா ஜோ-வைக் கும்பிட்டுக்குங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்.
:)//

குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்..............பழி தீர்க்க! :))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அப்புறம் எங்க ஊரு பையன் - சைனா பொண்ணு விஷயம் என்னென்னு தெரிஞ்சு சொல்லுங்க....... நாளைக்கு அவங்க அப்பாவைப் பார்க்கப் போகணுமா?//

தருமி சார்
நீங்க எந்த சைனாப் பொண்ணைப் பத்தி கேட்கறீங்க? :))
ராயல் ராம்! அயோத்தி ராம்! பாலம் ராம்! ஹே ராம்! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்.
:)//

குமரன் சிங்கைப் போறார்னு கேள்விப்பட்டால் கோவி.கண்ணன் குமரனையும் சந்திப்பார்..............பழி தீர்க்க! :))))
//

வாங்க நாரதரே !
வானவில்லில் நிறவேறுபாடு இருந்தாலும் தனித்தனியாக ஒவ்வொரு நிறவானவில் என்று சொல்லாமல் வானவில்லுன்னு தான் சொல்கிறோம். அவருக்கும் எனக்கும் ஆயிரத்து ஒண்ணு இருந்தாலும் அதெல்லாம் நட்புக்குள்ளே தானே இருக்கு !
:)

ரொம்ப கடினப்பட்டு மெசேஜ் எழுதி இருக்கேன். கொற சொல்லாமல் பாராட்டனும் சொல்லிப்புட்டேன்
:))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இராகவ் கான்,

அப்பிடியில்லை... ஒங்களே Fruity'ன்னு சொல்லுறாரு.... :))//

Fruity-யா? ஜிரா-வா? யார் சொல்வது? என்ன ஆணவம்?

சரி சரி...முருகன் கோட்டை விட்ட மாங்கோ Fruity-ஐ,
முருக பக்தர் ஜிரா கான் கிட்ட கொடுத்து சரி கட்டச் சொல்லுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//கேஆர்எஸ்,
கண்டனம் ! கண்டனம் !, உங்க நண்பரைப் பற்றி எழுதினால் தான் பதிவுக்கு பின்"நோட்டம்" வருது !
:)//

ஹா ஹா ஹா
கோச்சிக்காதீங்க கோவி அண்ணா!
அதுக்காக ஒங்க பதிவைப் படிக்காம விட்டுருவோமா என்ன?
ஞாயிற்றுக் கிழமை அதுவுமா ஆபீஸ்-ல உட்கார்ந்துகிட்டு எந்தப் பதிவுல இருக்கேன் பாருங்க? உங்க பதிவுல தானே!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//நீயெல்லாம் கூட வந்து வெறுப்பேத்துறேன்னு அசட்டு சிரிப்பு சிரிச்சா... அதுக்குப்புறம் என்னாச்சின்னு நீங்க தான் சொல்லனும்...

ஏன்னா நீங்கதானே அவக்கிட்டே போயி பேசி மொபைல் நம்பர்'லாம் வாங்கினீங்க.... :))//

ராமேய்...
ஜிரா கான் போய் ச்சிங்கு பொண்ணு கிட்ட நம்பர் கேட்டது, பிள்ளையார் அவர் தம்பி ராயல் ராமுக்கு ஓடியாந்து ஹெல்ப் பண்ணா மாதிரி-ப்பா!
இதுக்கெல்லாம் ஃபீல் ஆவக் கூடாது! :)

இராம்/Raam சொன்னது…

//
அச்சோ! ராமேய்!
அது இராகவ் கான் இல்லை!

உண்மையான பேரு ஜிரா கான்!- பாலிவுட்-ல ஐஸ் அப்படித் தான் கூப்டுவாங்க! ஓர்க்குட்-ல என் பாரீஸ் ஆல்பம் போயி பாருங்க! :))

இராகவ் கான்-ல கான் மட்டும் தான் மாடர்னா இருக்கு! இராகவ் பெருமாள் மாதிரி போரடிக்குது! :))//

ஜீரா கான்'ன்னு சொன்னா கட்டை பிகர் ஜீயா கான் ஞாபகமில்ல வருது....
அதுதான் இராகவ் கான்... இராகுல் போஸ் மாதிரி... :)

அதுக்காக ராகுல் போஸ் நடிச்ச கேரக்டர் மாதிரில்லாம் இவரையும் நினைச்சிற பிடாது... :))

இராம்/Raam சொன்னது…

//ராமேய்...
ஜிரா கான் போய் ச்சிங்கு பொண்ணு கிட்ட நம்பர் கேட்டது, பிள்ளையார் அவர் தம்பி ராயல் ராமுக்கு ஓடியாந்து ஹெல்ப் பண்ணா மாதிரி-ப்பா!
இதுக்கெல்லாம் ஃபீல் ஆவக் கூடாது! :)//

வெளங்கும்... பிள்ளையார் கள்ளாட்டை ஆடி பழத்தை வாங்கிட்டு பவுசா போன மாதிரி இவரும் நம்பரு வாங்கிட்டு நைசா எஸ்கேப் ஆகிட்டாரு.... :( இதிலே ஃபீல் ஆவ வேணாமின்னு வேற ரெக்கமெண்ட்சனா??? :(

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அவருக்கும் எனக்கும் ஆயிரத்து ஒண்ணு இருந்தாலும் //

ஓ...அப்ப விஷயம், "ஆயிரத்து ஒண்ணு" - ஃபோர் டிஜிட்ல இருக்கா?
குமரன்
நோட் திஸ் பாயிண்ட்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ரொம்ப கடினப்பட்டு மெசேஜ் எழுதி இருக்கேன். கொற சொல்லாமல் பாராட்டனும் சொல்லிப்புட்டேன்//

ஹா ஹா ஹா
கொறையா? சேச்சே! அள்ள அள்ளக் "கொறையாத" எங்க தங்கச் சுரங்கம்! கோவி அண்ணா! வாழ்கவே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதுக்காக ராகுல் போஸ் நடிச்ச கேரக்டர் மாதிரில்லாம் இவரையும் நினைச்சிற பிடாது... :))//

ராகுல் போஸ் = ராகவ் கான்! :))

தக்க சமயத்தில் நினைவு படுத்திய ராமேய்...நீ நூறாண்டு வாழ்க! நூறு ஃபிகர் கண்டு வாழ்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கள்ளியிலும் பால் - இந்தி ரீ மேக் - கள்ளி மே தூத்!

உங்கள் அபிமான நட்சத்திரம் ராகுல் போஸ் ராகவ் கான்,
சாயா சிங்குடன் இணைந்து நடிக்கும் கிளுகிளுப்பான காட்சிகள்!

உங்கள் அபிமானத் திரையரங்கு மாதவிப் பந்தலில் காணத் தவறாதீர்கள்! :))

ஜெகதீசன் சொன்னது…

:)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

// ஜெகதீசன் said...
:)
//

ஜெகா
இந்த ஒத்தைச் சிரிப்பான் எல்லாம் செல்லாது! இது ராமுக்கு மட்டுமே உரியது! copy cat பண்ணாதீங்க! :)))

இராம்/Raam சொன்னது…

//ராகுல் போஸ் = ராகவ் கான்! :))//

LOL

ஜோ/Joe சொன்னது…

ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)

மணிகண்டன் சொன்னது…

ராகவ் கான் சிங்கைய விட்டு கிளம்பியாச்சா ? இதுவரை புதிவுலக அறிமுகம் மூலமாக நான் நேரடியாக பார்த்திருக்கும் ஒரே ஒருவர் ஜி ரா தான் !

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஜோ/Joe said...
ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)//

ஜோ அண்ணே,
ராகவன், "நீங்க தான் ஜோ-வா?"-ன்னு கேட்டது அந்த "ஜோ"-வை! :))
பாதிக் கனவுல எழுந்து பதிவர் சந்திப்புக்கு ஓடியாந்தாரா? அதான் "ஜோ" கனவுகள்! நீங்க ஃபீல் ஆவாதீங்க-ண்ணே! :))

கோவி.கண்ணன் சொன்னது…

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஜோ/Joe said...
ஜி.ரா :))))))))
மறக்க முடியாதய்யா ..மறக்க முடியாது :)//

ஜோ அண்ணே,
ராகவன், "நீங்க தான் ஜோ-வா?"-ன்னு கேட்டது அந்த "ஜோ"-வை! :))
பாதிக் கனவுல எழுந்து பதிவர் சந்திப்புக்கு ஓடியாந்தாரா? அதான் "ஜோ" கனவுகள்! நீங்க ஃபீல் ஆவாதீங்க-ண்ணே! :))
//

அதெல்லாம் இல்லேப்பு, அவரு நெதர்லாந்திருந்து சிங்கைப் போனதாகவும், சிங்கைப் பதிவர் சந்திப்புல கலந்துகிட்டதாக கனவு கண்டேன்னு பதிவிடுவார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்