பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2008

(சின்னத்)திரை நட்சத்திரங்களுடன் நான் !

ஆகஸ்ட் 13 - 17 வரை சிங்கை எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் இந்திய கைவினை பொருள்கள் மற்றும் வீட்டும்னை விற்பனையாளர்களின் கண்காட்சி நடை பெறுகிறது. இல்லத்தினருடன் இன்று சென்று வந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. சிங்கை வானொலி வழி விளம்பரத்தில் கண்காட்சிக்குச் செல்ல 2 வெள்ளி நுழைவு சீட்டு வாங்க வேண்டும் அறிவிக்கப்பட்டு இருந்ததால் பலர் வரவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டே நுழைவுச் சீட்டை வாங்கும் பகுதிக்கு சென்றேன் பதிவு செய்துவிட்டு இலவச அனுமதி கொடுத்தார்கள். சனி - ஞாயிறு மக்கள் வெளியே கிளம்புவதே அறிது, அதிலும் கட்டணம் என்றால் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியும் போல, அதனால் கட்டணமின்றி இலவசமாகவே அனுமதிக் கொடுத்தார்கள்.

எக்ஸ்போ வளாகத்தின் 3 வது தளத்தில் தான் கண்காட்சி நடந்தது. நடிகர் மோகன் ராம், ???நான் சென்ற போது மாலை 2.30 ஆகி இருந்தது, அருகிலேயே சின்னத்திரை நட்சத்திரங்களுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாங்கள் உள்ளே சென்றதும் நேராக உணவு கடைகளுக்குச் சென்று வேண்டியதை வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். அப்போது நட்சத்திரங்களும் அங்கு வந்து உணவை வாங்கிக் கொண்டு ஒரு மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் துணை நடிகை துணிக்கடைக்குச் சென்றாலே அவளால் கசங்கமல் வெளியே வரமுடியாது. யார் ???, திபாவெங்கட், தேவதர்ஷினி(திருமதி சேத்தன்) இங்கு சின்னத்திரை நட்சத்திரங்களை யாரும் கும்பலாக மொய்க்கவில்லை. அங்கிருக்கும் மக்களில் ஒருவராகத்தான் அவர்களைப் பார்க்க முடிந்தது. விருப்பப் பட்டவர்கள் அவர்களுக்கு கைகுலுக்கி (வெகு சிலர்தான்) அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் ஓரிரு முறை அவர்களை திரும்பிப் பார்த்ததுடன் சரி. சின்னத்திரை நட்சத்திரங்கள் யாரும் 'பந்தா' செய்யவில்லை. பாராட்டலாம் ! அவர்கள் அனைவருமே பெரிய திரைகளிலும் நடிப்பவர்கள் தான்.

நாங்களும் சாப்பிட்டு முடித்ததும், ரவி???, சேத்தன்,???? அருகில் சென்று சின்னத் திரை நட்சத்திரங்களின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். க்ளிக்கிக் கொடுத்தது தங்கமணிதான்.
மேடையில் புடவைக் கட்டிக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை வைத்திருந்தார்கள், புடவையை 200 வகையாக கட்ட முடியுமாம், யாராவது கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? 10 வகையாக ஒரே புடவையை கட்டிக் கட்டினார்கள், சீனப் பெண்ணைத் தான் புடவை கட்டுவதற்கு காட்சிப் பொருளாக ஆக்கி இருந்தார்கள்,

நம் இந்தியப் பெண்கள் பொது இடத்தில் இதெற்கெல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் சீனப் பெண்தான்

கிடைத்திருக்கிறாள். அந்த சீனப் பெண்ணும், அவ(ர்க)ளது பொது இட கலாச்சாரமும் மேற்கத்திய தாக்கம் இருப்பதால், அவள் வெட்கப்பட வில்லை. அழகாகவே சிரித்தாள், புடவை கட்டுவதை மேடை நிகழ்ச்சியாக பார்க்கும் போது ஆபாசமாக பார்த்தால் ஆபாசம் தான், கலையாக பார்த்தால் கலைதான். பெண்களுக்கு கலையாக தெரிந்திருக்கும். நான் கலையாக மட்டும்தான் பார்த்தேன் என்று சொன்னால் அது பொய்தான். கொஞ்சம் ஆபாசமாகத்தன் இருந்து.

அதன் பிறகு கோலப்போட்டி நடந்தது. தங்கமணிக்கும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள ஆசை, கலந்து கொள்ளச் சென்றோம், வண்ணப் பொடிகளைக் கொடுத்தார்கள். கோலமாவு இல்லாமல் வண்ணப் பொடிகளை மட்டும் வைத்து எப்படி கோலம் போடுவது ? ஏற்பாட்டளரிடம் கேட்டோம். "By mistake we forgot to bring the rongoli white powder (வெள்ளை கோலை மாவு), please draw the outline on the newspaper and color it...we are very sorry". என்றார்கள். சொதப்பலான, பொறுப்பின்மையாக ஒரு ஏற்பாடு. அப்படியும் சில சிறுவர் - சிறுமியர், சில பெண்கள் வண்ணப் பொடியை வைத்து அவர்களால் முடிந்த அளவு முயன்றார்கள். அருகில் இருக்கும் கோலங்கள் தான் பரிசு பெற்றவை. இது இவ்வளவு அலங்கோலமாக இருப்பதற்குக் காரணமே வெள்ளை கோல மாவு இல்லாததால் தான். ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தால் அடிப்படை தேவைகளாவது சரியாக செய்ய வேண்டும். கோலப் போட்டி பெரிய சொதப்பல் தான். அதன் பிறகு சிறுவர்களுக்கு திரைப்பாடல்களுக்கான நடன அசைவுகளை சென்னையில் இருந்து வந்த திரைக் கலைஞர் ஒருவர் செய்து காட்டினார். விஜய் பாட்டு (மதுரைக்கு போகாதடி....), மற்றும் ஒரு ஹிந்திப் பாட்டின் ஒரு பகுதிக்கு அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார், 20 பேர்வரை சேர்ந்து ஆடினார்கள். அந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

கடைசியாக கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். மாலை 7.00 மணிக்கு நடைபெறப் போகும் சின்னத் திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவு சீட்டுக் கொடுத்தார்கள். மாலை வரை அங்கிருந்தால் மிகவும் அசதி ஆகிவிடும் என்பதால் மாலை 5 மணிக்கு திரும்பிவிட்டோம், 5 மணிக்கு மேல் நல்ல கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதெல்லாம் சின்னத்திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவுச் சீட்டுக் கொடுக்கவில்லை. நண்பர் ஒருவர் இல்லத்தினரோடு அங்கு வந்தார், அவரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் திரும்பிவிட்டோம்.

கண்காட்சிக்கு நாளை கடைசிநாள், பார்க்க விருப்பம் உள்ளவர்கள் சிங்கைப் பதிவர்கள், சிங்கை நண்பர்கள் சென்று வரலாம். சிங்கப்பூர் எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் தான் கண்காட்சி நடக்கிறது. இந்திய மாநகரங்களில் / தலைநகரங்களில் வீடு, மனை வாங்குபவர்களக்காக நிறைய ஆலோசனைக் நிலையங்கள் (ஸ்டால்ஸ்) இருக்கிறது, அவர்கள் விற்பனை செய்யும் இடங்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் மற்றும் பல்வேறு மாநில இந்திய உடைகள், அலங்காரப் பொருள்கள், தரைவிரிப்புகள் எல்லாம் கண்காட்சியில் விற்பனையில் உள்ளது. உள்ளே எல்லாம் சேர்த்து 50 நிலையங்கள் (ஸ்டால்) வரையில் இருக்கும். சைவம் மற்றும் அசைவ உணவுகளுடன் 5 -6 உணவுக் நிலையங்கள் இருந்தது.

40 கருத்துகள்:

Kanchana Radhakrishnan சொன்னது…

கோவி நீங்களுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
கோவி நீங்களுமா?

1:42 AM, August 17, 2008
//

நீங்களுமா என்றால் ? புரியவில்லை !

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய Tamilish.com தளத்தில் பகிரவும்

Kanchana Radhakrishnan சொன்னது…

இதற்கெல்லாம் ஆசைப்படுவது

மங்களூர் சிவா சொன்னது…

கோவி நீங்களுமா?

மங்களூர் சிவா சொன்னது…

/
அபி அப்பா said...

தீபா வெங்கட்டுக்கு அவ்ளோ பக்கத்தில் சென்று போட்டோ எடுத்துக்கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்
/

ரிப்பீட்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
இதற்கெல்லாம் ஆசைப்படுவது

1:58 AM, August 17, 2008
//


இராதகிருஷ்ணன் ஐயா,

அதை எனது ஆசை என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் கலைஞர்கள், நானாக அவர்களைத் தேடிப்போகவில்லை. இங்கு வந்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டால் சக தமிழர்களிடம் ஒரு கலைஞன் என்ற முறையில் தங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று அவர்கள் நினைப்பார்கள், அவர்களுக்கு அது பெருமைதானே. அவர்களும் தமிழக, தமிழ் பேசும் கலைஞர்கள் தானே. முகம் தெரிந்த ஒரு தமிழன் என்று நினைத்து அவர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக கொள்ளுங்கள் !
:)

மங்களூர் சிவா சொன்னது…

/
சனி - ஞாயிறு மக்கள் வெளியே கிளம்புவதே அறிது, அதிலும் கட்டணம் என்றால் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியும் போல
/

அவ்ளோ நல்லவிங்களா சிங்கப்பூர் ஆளுங்க!?

:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/
சனி - ஞாயிறு மக்கள் வெளியே கிளம்புவதே அறிது, அதிலும் கட்டணம் என்றால் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியும் போல
/

அவ்ளோ நல்லவிங்களா சிங்கப்பூர் ஆளுங்க!?

:))))
//

சிவா,

வார நாட்களில் இயந்திரத்தனமான வேலை, சனி-ஞாயிறுதான் ஓய்வு கிடைக்கும், திட்டமிடாமல் எங்கும் கிளம்பமாட்டாங்க !

Thekkikattan|தெகா சொன்னது…

கோவி நீங்களுமா? :-)

Athisha சொன்னது…

ரவி மற்றும் சேத்தனுடன் இருப்பது , நண்பர் ராகவ்

...

படங்களும் சிங்கப்பூர் எக்ஸ்போ குறித்த தகவல்களும் அருமை தோழர்

புதுகை.அப்துல்லா சொன்னது…

உங்களின் முதல் படத்தில் இருக்கும் நடிகர் திரு.மோகன்ராம் அவர்களும் ஓரு வலைப்பதிவர் :)

ஆயில்யன் சொன்னது…

//அவர்கள் கலைஞர்கள், நானாக அவர்களைத் தேடிப்போகவில்லை. இங்கு வந்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டால் சக தமிழர்களிடம் ஒரு கலைஞன் என்ற முறையில் தங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று அவர்கள் நினைப்பார்கள், அவர்களுக்கு அது பெருமைதானே. அவர்களும் தமிழக, தமிழ் பேசும் கலைஞர்கள் தானே.//

மிகச்சரியானதுதான்!

நானும் இங்க காத்துக்கினு இருக்கேன்! ஆனா இது வரைக்கும் இந்த மாதிரி வாய்ப்பு 1ம் வர்லை! :(((

பேசாம சிங்கை அல்லது துபாய்க்கு ஷிப்ட் ஆகிடலாம் போல :)

இக்பால் சொன்னது…

\\.அவர்கள் கலைஞர்கள், நானாக அவர்களைத் தேடிப்போகவில்லை. இங்கு வந்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டால் சக தமிழர்களிடம் ஒரு கலைஞன் என்ற முறையில் தங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்று அவர்கள் நினைப்பார்கள், அவர்களுக்கு அது பெருமைதானே. அவர்களும் தமிழக, தமிழ் பேசும் கலைஞர்கள் தானே. முகம் தெரிந்த ஒரு தமிழன் என்று நினைத்து அவர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக கொள்ளுங்கள் !
:)\\


நான் இதை வழிமொழிகிறேன்

கிரி சொன்னது…

நடத்துங்கோ :-)

வடுவூர் குமார் சொன்னது…

நான் இருக்கும் இடத்தில் இருந்து எக்ஸ்போ போகனும் என்று நினைத்தாலே போகவேண்டாம் என்று தோன்றிவிடும்.
ஏன் படங்கள் கலங்களாக வந்திருக்கு?தங்கமனி எடுப்பதால் செட்டிங் ஏதாவது மாற்றிவைத்துவிட்டீர்களா?:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/
அபி அப்பா said...

தீபா வெங்கட்டுக்கு அவ்ளோ பக்கத்தில் சென்று போட்டோ எடுத்துக்கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்
/

ரிப்பீட்டு

2:05 AM, August 17, 2008
//

தங்கச்சிக் கூட அண்ணன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுக்கு ஏன் பொகையுறிங்க ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
கோவி நீங்களுமா? :-)

2:15 AM, August 17, 2008
//
தெகா,

நானுமா என்றால் ? அடியேன் ஒரு சாதாரண மனிதன் ! - இது எப்படி இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
ரவி மற்றும் சேத்தனுடன் இருப்பது , நண்பர் ராகவ்

...

படங்களும் சிங்கப்பூர் எக்ஸ்போ குறித்த தகவல்களும் அருமை தோழர்
//

அதிஷா,

மிக்க நன்றி, ராகவ் ஒரு சீரியலில் அறிமுகம் ஆனபோது கலக்கினார். சீரியல் பெயர் தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
உங்களின் முதல் படத்தில் இருக்கும் நடிகர் திரு.மோகன்ராம் அவர்களும் ஓரு வலைப்பதிவர் :)

3:26 AM, August 17, 2008
//

ஓ அப்படியா ? அவருக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கிறதா ? நல்ல நடிகர், பெரியார் படத்தில் அம்பேத்காராக நடிதிருந்தார். பொருத்தமாக இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயில்யன் said...

மிகச்சரியானதுதான்!

நானும் இங்க காத்துக்கினு இருக்கேன்! ஆனா இது வரைக்கும் இந்த மாதிரி வாய்ப்பு 1ம் வர்லை! :(((

பேசாம சிங்கை அல்லது துபாய்க்கு ஷிப்ட் ஆகிடலாம் போல :)

3:47 AM, August 17, 2008
//

கிளம்பி வாங்க ! நட்சத்திரங்களை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் போது அதற்கான நேரமும் கிடைக்காது !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...

நான் இதை வழிமொழிகிறேன்

8:33 AM, August 17, 2008
//

இக்பால்,
கருத்துக்கு மிக்க நன்றி !
பதிவர் சந்திப்புக்கு வருகிறேன் என்று சொல்லி எஸ்கேப் ஆயிடுறிங்க ! அடுத்த முறை பார்க்கலாமா ?

Sanjai Gandhi சொன்னது…

நன்னா இருக்கு அண்ணா.. ஏன் அபியப்பாவின் காதலி (3வது படத்தில் நடுவில்)நைட்டியில் இருக்கிறார். மாற்று உடை எடுத்து வர மறந்துவிட்டாரா? :P

என்னதான் சிங்கப்பூரா இருந்தாலும் இட்லிய இஸ்பூன்லையா சாப்பிடறது? உவ்வ்வ்வே.. :)

அபி அப்பா சொன்னது…

\\தங்கச்சிக் கூட அண்ணன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுக்கு ஏன் பொகையுறிங்க ? :)\\

தங்கமச்சான் நீங்க உண்மையிலேயே தங்கமச்சான் தான்!!!:-))

வெண்பூ சொன்னது…

கோவி.கண்ணன் உங்கள் வர்ணனை அருமை. நீங்களும் ஒரு (சின்னத்)திரை நடிகர் மாதிரிதான் உள்ளீர்கள்.

Unknown சொன்னது…

அபி அப்பாவை படிச்சிட்டு அப்புறம்தான் இதைப் பார்த்தேன். நன்றாகவே வெட்டி ஒட்டி இருக்கிறார்.

சின்னப் பையன் சொன்னது…

கலக்குங்க...

சின்னத்திரை நட்சத்திரங்களுடன் படமெடுத்துக்கொண்ட பெரிய அண்ணன் கண்ணன் வாழ்க!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வணக்கம் திரு.கோவி கண்ணன்,
வார இறுதி நாட்களை பயனுள்ள வகையில் குடும்பத்துடன், கழித்ததோடு மட்டுமல்லாமல் அதை வலை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொண்டது அருமை.
வருணனைகள் வகை வகையாக, புகைப்படங்களை வகைப்படுத்தியது அருமை.
சின்னத்திரையின் சிறந்த நடிகர்கள் மோகன்ராம்,தீபா வெங்கட் ஆகியோரை தேர்தெடுத்து படம் பிடித்திருப்பத்தையும் கவனித்தேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanJai said...
நன்னா இருக்கு அண்ணா.. ஏன் அபியப்பாவின் காதலி (3வது படத்தில் நடுவில்)நைட்டியில் இருக்கிறார். மாற்று உடை எடுத்து வர மறந்துவிட்டாரா? :P

என்னதான் சிங்கப்பூரா இருந்தாலும் இட்லிய இஸ்பூன்லையா சாப்பிடறது? உவ்வ்வ்வே.. :)

3:01 PM, August 17, 2008
//

அபிஅப்பா ஏன் டென்சன் ஆனாருங்கிற வெவரம் இப்பதான் தெரியுது ! இட்லியை ஸ்பூனில் சாப்பிட்டு அவரோட காதலி அவரோட மானத்தை இட்லிக்கு வித்துட்டாங்க !

தகவலுக்கு நன்றி சஞ்ஜெய் !

கோவி.கண்ணன் சொன்னது…

// அபி அப்பா said...
\\தங்கச்சிக் கூட அண்ணன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுக்கு ஏன் பொகையுறிங்க ? :)\\

தங்கமச்சான் நீங்க உண்மையிலேயே தங்கமச்சான் தான்!!!:-))

3:33 PM, August 17, 2008
//

அபிஅப்பா,
வயித்தெரிச்சலுக்கு துபாய் இரண்டாவது குறுக்குசந்து மெடிக்கல் ஷாப்பில் எதுவும் கிடைக்கதா ?

அந்த பொண்ணு (தீபா வெங்கட்) உங்களுக்கு மகள் மாதிரி ! :)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
கோவி.கண்ணன் உங்கள் வர்ணனை அருமை. நீங்களும் ஒரு (சின்னத்)திரை நடிகர் மாதிரிதான் உள்ளீர்கள்.

4:56 PM, August 17, 2008
//

பாராட்டுக்கு நன்றி ! லக்கி லுக் எழுதபோகும் மெக தொடரில் நடிக்க இருக்கிறேன். கெளரவமான (சரவணாஸ் ஸ்டார்) பாத்திரம் தருகிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கார்.

ஜ்யோவ்ராம் சுந்தரரின் அதீதனாக நடிப்பதற்கு ஆள் தேவையாம், அபி அப்பாவை அனுப்பிடுவோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
வணக்கம் திரு.கோவி கண்ணன்,
வார இறுதி நாட்களை பயனுள்ள வகையில் குடும்பத்துடன், கழித்ததோடு மட்டுமல்லாமல் அதை வலை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொண்டது அருமை.
வருணனைகள் வகை வகையாக, புகைப்படங்களை வகைப்படுத்தியது அருமை.
சின்னத்திரையின் சிறந்த நடிகர்கள் மோகன்ராம்,தீபா வெங்கட் ஆகியோரை தேர்தெடுத்து படம் பிடித்திருப்பத்தையும் கவனித்தேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

8:32 PM, August 17, 2008
//

சனி-ஞாயிறு வீட்டில் இருந்தால் தொலைக்காட்சியே கெதின்னு ஆகிடும். இரண்டு நாளில் ஒருநாள் வெளியே தான் சாப்பிடுவோம். இந்த வாரம் எக்ஸ்போவுடன் போய்விட்டது. நாட்குறிப்பு எழுதும் வழக்கம் சிறுவயதில் ஏற்படவில்லை. இப்பொழுது வலைப்பதிவு நாள்குறிப்பு போன்றே பயன்படுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
நடத்துங்கோ :-)

//

உங்களுக்கு தகவல் சொன்னேனே நீங்கள் போகவில்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
:)
//

எதுக்குன்னு சொல்லிட்டு சிரிங்க சேர்ந்து சிரிக்கிறேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
நான் இருக்கும் இடத்தில் இருந்து எக்ஸ்போ போகனும் என்று நினைத்தாலே போகவேண்டாம் என்று தோன்றிவிடும்.
ஏன் படங்கள் கலங்களாக வந்திருக்கு?தங்கமனி எடுப்பதால் செட்டிங் ஏதாவது மாற்றிவைத்துவிட்டீர்களா?:-))//


குமார்,

உங்க இடத்தில் இருந்து வர 1 மணி நேரமாவது ஆகும்.

நல்ல கேமராதான் எனக்கும் முழுதாக பயன்படுத்தத் தெரியல, நிறைய mode இருக்கு, இன்னும் சரியாக பழகவில்லை.

துளசி கோபால் சொன்னது…

தீபா வெங்கட்டின் ரசிகருக்கு நீங்க அவரைப்பார்த்த விவரம் தெரியுமா?

ஆமாம். புடவை கட்டுவதில் ஆபாசமா?

என்னமோ போங்க.....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
தீபா வெங்கட்டின் ரசிகருக்கு நீங்க அவரைப்பார்த்த விவரம் தெரியுமா?

ஆமாம். புடவை கட்டுவதில் ஆபாசமா?

என்னமோ போங்க.....

9:01 AM, August 18, 2008 //

துளசி அம்மா,
புடவை உடுத்தி இருக்கும் பெண்களும் ஆபாசமாக தெரியவில்லை. பலருக்கு முன் அதைக் கட்டிக் காட்டினார்கள், தமிழ் பெண்கள் யாரும் அதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் தான் சீனப்பெண்ணுக்கு கட்டிக் காட்டினார்கள். இப்ப சொல்லுங்க நான் ஆபசம் என்று சொன்னது சரியா இல்லையா ? ஏன் தமிழ்பெண்கள் அதற்கு முன்வரவில்லை ? சீனப்பெண்ணைப் பயன்படுத்தியதான் ரொம்ப ஆபாசமாக தெரியவில்லை.

துளசி கோபால் சொன்னது…

//ஏன் தமிழ்பெண்கள் அதற்கு முன்வரவில்லை ? சீனப்பெண்ணைப் பயன்படுத்தியதான் ரொம்ப ஆபாசமாக தெரியவில்லை.//

அடக்கடவுளே......... தமிழ்ப்பெண்கள் முன்வராததுதான் இப்படி உங்களைப் படுத்துதா?

என்னமோ போங்க:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//ஏன் தமிழ்பெண்கள் அதற்கு முன்வரவில்லை ? சீனப்பெண்ணைப் பயன்படுத்தியதான் ரொம்ப ஆபாசமாக தெரியவில்லை.//

அடக்கடவுளே......... தமிழ்ப்பெண்கள் முன்வராததுதான் இப்படி உங்களைப் படுத்துதா?

என்னமோ போங்க:-))))
//

துளசி அம்மா,

ஆபாசமாக இருக்கும் என்பதால் முன்வருவதில்லை என்றேன். தயங்காமல் வரவேண்டும் என்ற புரட்ச்சிக் கருத்தெல்லாம் நான் சொல்லவில்லை. ஆளை விடுங்கோ !

என்னை எதுவும் படுத்தல. சாரி எனக்கு கல்யாணம் ஆச்சு !
:)

முகவை மைந்தன் சொன்னது…

கலக்கி இருக்கீங்க! ஆமா, படத்துல ஏன் ஒடிஞ்சு நிக்கிறீங்க?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்