பின்பற்றுபவர்கள்

2 ஆகஸ்ட், 2008

நாளை சிங்கை பதிவர் சந்திப்பு - ஒரு நினைவூட்டல்

நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திட்டமிட்ட படி பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது,சிங்கைவாழ், மலேசியாவாழ் ( விக்னேஷ்வரன், துர்கா மற்றும் பல) பதிவர் / வாசக பெருமக்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுமாய் சிங்கைப் பதிவர் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளும் நினைவூட்டல் பதிவு இது.

சிங்கை மழை ரஜினி மாதிரி எப்ப வரும் எப்டி வரும் என்று யாருக்கும் தெரியாது, நாளைக்குன்னு பார்த்து கரெக்டாக வந்துவிட்டால் அப்பறம் நனஞ்சு சுமக்கனும், குடை எடுத்துட்டு வந்துடுங்க.

நிகழ்ச்சி நிரல்கள் :

வரவேற்புரை : பதிவர் ஜெகதீசன், பதிவர் சந்திப்பு ஏன் ? என்பது குறித்து மெளன உரையாடல் நடத்துவர்

பாரி.அரசு : நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாட்டிலை திறந்து வைப்பார். FANTA, COKE இப்படி எதாவது ஒன்றை திறந்து வைப்பார்

சிறப்புப் பேச்சாளர், ஜோசப் பால்ராஜ் தற்போதைக்கு தற்காலிகமாக பேச்சிலராக இருப்பதால், மனைவி ஊருக்குக்குப் போய் இருக்கும் நேரத்தில் கணவர்கள் லூட்டி அடிக்கலாமா என்பது குறித்து சிறப்புரையாற்றுவார்

நீண்ட நாள் பதிவர் எம்எஸ்விமுத்து தனது எழுத்துப்பணி மற்றும் வலையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்

குசேலன் தோல்விப்படமா ? சின்னக் கோடம்பாக்கம், சின்ன ரஜினி, பதிவர் கிரியின் சிற்றுரை, பதிவர் மாநாட்டில் மாரநேரி ஜோசப் பால்ராஜ் அவர்கள் பதிவர் கிரிக்கு 'ரஜினி கிரி' என்ற சிறப்புப் பெயரை வழங்குவார்.

முகவை மைந்தன் அவர்களால் 'திருக்குறளில் நாட்டுப்பற்று', அவரது அண்மைய பதிவு ஒன்றின் சிறப்பு விளக்கம் இடம்பெரும்

திரு 'ஜோ மற்றும் LL தாஸ்' ஆகியோர் வலையுலகை அடுத்தக் கட்டத்திற்கு 'நகர்த்துவது' எப்படி என்பது குறித்து பேருறை ஆற்றுவார்கள்.

இந்த பதிவர் மாநாட்டில் பார்வையாளர்களாக பெரும் திரளான வாசகர் வட்டமும் கலந்து கொள்ளப் போவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அத்தனைப் பேருக்கும் அல்வா (செய்வதற்காக அடுப்பை இன்றே மூட்டி) கிண்டிக் கொண்டு இருக்கும் செந்தில் நாதன் விழாவை வாழ்த்து சிறப்புரையாற்றி நிறைவு செய்வார்.

பட்டம் வழங்குதல் :

* சந்திப்பில் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப் படும் ஒரு பதிவருக்கு 'பதிவர் சுப்பையா விருது' வழங்கி திரு வடுவூர்குமார் அவர்களின் கையால் பொன்னாடைப் போர்த்தி கவுரவிக்கப்படும்.

* சிறப்பான மொக்கை பேச்சாற்றல் மிக்க ஒரு பதிவருக்கு 'பதிவர் குசும்பன் விருது' வழங்கப்பட்டு பதிவர் ஜீவன் அவர்களின் கைகளால் ஒரு டஜன் கோடாலி தைல புட்டிகள் பரிசாக வழங்கப்படும்

இன்னும் அறிவிக்கப்படாத பலப் பலபரிசுகள் இன்ப அதிர்ச்சியாக அவ்வப்போது அறிவிக்கப்படும்.

விழாவின் முத்தாய்ப்பாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவர்களுக்கு சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்றுவர இரண்டு விமான டிக்கெட் (ஸ்பான்சர் பை பரிசல்காரன் மற்றும் வெயிலான் ரமேஷ்)

*********

மறக்காமல் வந்துவிடுங்கள் பதிவர் நண்பர்களே, இது தனிப்பட்ட எவருடைய பெருமையையும் பேசப் போகின்ற சந்திப்பு அல்ல, நம்முடைய சந்திப்பு, யாரும் 'தலையும்' கிடையாது 'வாலும்' கிடையாது, நாமெல்லாம் ஒரே இனம்தான். 'என்னிய கூப்பிடல' என்று எவருமே நினைத்துக்கொள்ளாமல் இதையே கலந்து கொள்ளும் அனைத்துப்பதிவர்களின் சார்பிலான அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பதிவர்கள் மட்டுமல்ல, வாசகர்கள், தமிழ் ஆர்வளர்கள் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

********

தேதி : 2008, ஆகஸ்டு 3, ஞாயிற்றுக் கிழமை
இடம் : அங்மோக்யோ நூலக எதிரில் உள்ள பூங்கா (வருபவர்களுக்கு வழிகாட்ட தட்டி வைத்துக் கொண்டு நூலகம் அருகில் ஜெகதீசன் நிற்பார்)
நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை (அதற்கும் மேலும் மொக்கைப் போடுவோர் போடலாம்)

தொடர்புடைய சுட்டிகள்:

சந்திப்பு குறித்த ஜோசப் பால்ராஜின் இடுகை :

எனது முந்தைய இடுகை :

உருகுவேயில் பாரி.அரசு ஏன் நேசனல் பார்டியை ஆதரிக்கிறார்? - ஜெகதீசன்



26 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

நானும் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் :-)

பரிசல்காரன் சொன்னது…

மீ த பஷ்டூ?

வாழ்த்துக்களுங்க!

பரிசல்காரன் சொன்னது…

அடடே! தல முந்தீடுச்சே!

பரிசல்காரன் சொன்னது…

பதிவுலகத்தை உயிர்பாக வைத்திருக்க எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் கோவி.கண்ணன் அவர்களுக்கு பரிசல்காரன் சாரிபில், கிரி அவர்கள் ஒரு பரிசளிப்பார்!

கிண்டலல்ல! நிஜம்!

கிரி.. என்ன ஒக்கேவா?

பெயரில்லா சொன்னது…

Hello & Greetings,

It's an adventure to visit
your web page.
Good job and keep up!

Andrew
Invitation:
visit & contribute to
http://egogooglogy.blogspot.com/

குசும்பன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பரிசல்காரன் சொன்னது…

நான் கலந்துக்கபோறேன்.. கலந்துக்கபோறேன்.. கலந்துக்கபோறேன்..

ஏற்கனவே சொல்லிவெச்சிருக்கேன்!

ஆமா!

பரிசல்காரன் சொன்னது…

//கல்வைக்கு பாட்டில் ஓப்பன் ஓக்கே,
மெயின் பாட்டிலை ஓப்பன் செய்ய போவதுயாரு//

மறுக்கா கேளேய்ய்ய்ய்...

குசும்பன் சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாட்டிலை திறந்து வைப்பார். FANTA, COKE இப்படி எதாவது ஒன்றை திறந்து வைப்பார்//

கலவைக்கு பாட்டில் ஓப்பன் ஓக்கே,
மெயின் பாட்டிலை ஓப்பன் செய்ய போவதுயாரு?

பெயரில்லா சொன்னது…

//சந்திப்பில் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப் படும் ஒரு பதிவருக்கு 'பதிவர் சுப்பையா விருது'//

நீங்களுமா?

குசும்பன் சொன்னது…

//துர்கா மற்றும் பல) பதிவர் / வாசக பெருமக்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுமாய//

துர்கா பல் நிவாரண நிதியை கொடுக்கும் நிகழ்ச்சியை பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே!!!

ஜெகதீசன் சொன்னது…

எனக்குச் சிலப்பல அவசர வேலைகள் இருந்தாலும் முடிந்தவரை வர முயற்சிக்கிறேன்..

ஆனால், கிரி என்மீது பயங்கர காண்டாக இருப்பதால், அவரால் எனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தகுந்த பாதுகாப்பு வழங்கினால் சந்திப்புக்குக் கட்டாயம் வருவேன் என உறுதியளிக்கிறேன்...
:)

வடுவூர் குமார் சொன்னது…

பொன்னாடை சிங்கையில் கிடைக்குதா?
எல்லோருக்கும் வேலைகொடுத்துவிட்டு நீங்க சும்மா இருந்தா,எப்படி?? :-))

பரிசல்காரன் சொன்னது…

//குசேலன் தோல்விப்படமா ? சின்னக் கோடம்பாக்கம், சின்ன ரஜினி, பதிவர் கிரியின் சிற்றுரை, //

அவரென்ன சொல்றது.. அதான் ஊரே சொல்லுதே!

பரிசல்காரன் சொன்னது…

//பதிவர்களுக்கு சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்றுவர இரண்டு விமான டிக்கெட் (ஸ்பான்சர் பை பரிசல்காரன் மற்றும் வெயிலான் ரமேஷ்)//

இங்க திருப்பூரிலிருந்து சென்னை போறதுக்கு சிங்கி..

இதுல சிங்கையிலிருந்து சென்னையா?

எஸ்கேப்பு!

ஜெகதீசன் சொன்னது…

அங்-மோ-கியோ இண்ட்டர்சேஞ்ல இருந்து நடக்குற தொலைவுன்னு சொல்றீங்க சரி...

முதல்ல இண்ட்டர்சேஞ் எப்படி வற்றது? அதை சொல்லுங்க தல....

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அண்ணே அடுத்த முறை கொஞ்சம் முன்னரே சொல்ல முடியுமா? இரண்டு வாரங்களுக்கு முன் சொல்லிவிடுங்களேன்... நான் ஏற்பாடு செய்ய சுலபமாக இருக்கும்... அந்த இலச்சிமல ஆத்தா சத்தியமா அடுத்த சந்திப்பில் கலந்துக் கொள்கிறேன்...

கிரி சொன்னது…

//பாரி.அரசு : நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாட்டிலை திறந்து வைப்பார். FANTA, COKE இப்படி எதாவது ஒன்றை திறந்து வைப்பார்//

ஹா ஹா ஹா ஹா

//குசேலன் தோல்விப்படமா ? சின்னக் கோடம்பாக்கம், சின்ன ரஜினி, பதிவர் கிரியின் சிற்றுரை,//

கோவி கண்ணன் அளவிற்கு பேசும் சிறந்த பேச்சாளன் அல்ல :-) எனவே நம்ம ரேஞ்சுக்கு விமர்சனம் தான் போட முடியும். பேசி ரஜினி மாதிரி மாட்டிக்க நான் தயார் இல்லை :-)))) திங்கள் கிழமை விமர்சனம் என் பார்வையில் குசேலனும் உங்கள் பார்வையில் குப்பையும் ;-)

//பதிவர் மாநாட்டில் மாரநேரி ஜோசப் பால்ராஜ் அவர்கள் பதிவர் கிரிக்கு 'ரஜினி கிரி' என்ற சிறப்புப் பெயரை வழங்குவார்.//

:-) உங்க காட்டுல மழை (சிங்கப்பூர் ல இல்ல) அதனால ஒண்ணும் சொல்வதற்கு இல்ல :-)))))

//அத்தனைப் பேருக்கும் அல்வா (செய்வதற்காக அடுப்பை இன்றே மூட்டி) கிண்டிக் கொண்டு இருக்கும் செந்தில் நாதன் //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இப்படி கூறி அடுத்த முறை கோபம் ஆகி கொண்டு வராம இருந்துட போறாரு.

//நம்முடைய சந்திப்பு, யாரும் 'தலையும்' கிடையாது //

ஒத்துக்க மாட்டோம் ஒத்துக்க மாட்டோம் அதெல்லாம் முடியாது கோவி கண்ணன் தான் தலை ..

//பரிசல்காரன் said...
பதிவுலகத்தை உயிர்பாக வைத்திருக்க எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் கோவி.கண்ணன் அவர்களுக்கு பரிசல்காரன் சாரிபில், கிரி அவர்கள் ஒரு பரிசளிப்பார்!

கிண்டலல்ல! நிஜம்!

கிரி.. என்ன ஒக்கேவா?//

கலக்கிடுவோம் ..நீங்க கொடுத்த பரிசை பரிசல் கொடுத்ததாக கூறி கொடுத்து விடுகிறேன் :-)

பரிசல் உங்க விமர்சனம் பார்த்தேன் யு டூ கே கே :-(

கிரி சொன்னது…

// ஜெகதீசன் said...
அங்-மோ-கியோ இண்ட்டர்சேஞ்ல இருந்து நடக்குற தொலைவுன்னு சொல்றீங்க சரி...

முதல்ல இண்ட்டர்சேஞ் எப்படி வற்றது? அதை சொல்லுங்க தல....//

ஹா ஹா ஹா ஹா

ஜெகதீசன் போன வாட்டி எனக்கு நீங்க வழி :-) காட்டுனீங்க, இந்த வாட்டி கோவி கண்ணன் ஐயா வழி!! கூறி இருக்காரு..அவர் சொல்ற பேரே வாயில நுழையில இதுலே எங்கே போய் கண்டுபிடித்து ம்ஹீம் கோவி கண்ணன் மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணிடாதீங்க :-)

கிரி சொன்னது…

//ஜெகதீசன் said...
ஆனால், கிரி என்மீது பயங்கர காண்டாக இருப்பதால், அவரால் எனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தகுந்த பாதுகாப்பு வழங்கினால் சந்திப்புக்குக் கட்டாயம் வருவேன் என உறுதியளிக்கிறேன்//

ஹி ஹி ஹி ஹி ஜெகதீசன் நாங்க பிரச்சனையையே போர்வையா போத்தி தூங்குறவங்க இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக மாட்டோம். தைரியமா வாங்க :-)

முரளிகண்ணன் சொன்னது…

சந்திப்புக்கு தாமதமாக வருபவர்களுக்கு குசேலன் திருட்டு டிவிடி அன்பளிப்பாமே? உண்மையா?

பெயரில்லா சொன்னது…

:O

பெயரில்லா சொன்னது…

நான் ரொம்ப பிசி :P
அதான் இத்தனை சிங்கங்கள் இருக்காங்களே! :)
நடுவுல சுண்டெலிக்கு என்ன வேலை?நான் எஸ்கேப்பூ!

குரங்கு சொன்னது…

நானும் நானும்... :)

எங்க சங்கத்து சார்பா, சிங்கை குரங்கை பார்வையாளராக அனுப்புகிறேன். யப்பா... குரங்கை பிரியானி எதுவும் போட்டுறாதீங்க...

கோவை விஜய் சொன்னது…

நாளை கூடும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு

நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

விஜய் ஆனந்த் சொன்னது…

அண்ணே!!!நானும் வரலாமாண்ணே???

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்