ஜேகே ரித்தீஸ் அளவுக்கு புகழடைந்துள்ள என்னைப் பார்க்க 1000க் கணக்கான பதிவர்கள் நீண்ட காலமாக காத்துக்கிடக்கிறார்கள், 'நேரம் ஸ்பெண்ட் பண்ண டைம் இல்லாததால் (நேற்று வானொலியில் ஒரு நேயர் அப்படித்தான் சொன்னார்) எப்போதாவது பதிவர் சந்திப்பு நடக்கும், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் என் செகரெட்டரியிடம் பெயரை பதிந்து கொள்ளுங்கள். என்றெல்லாம் சொல்ல ஆசைதான். ஹிஹி இது டூ மச்சி !
காம்ப்ளான் குடிச்சி வளர்ந்தேன் என்று சொல்வதுடன் இன்றைய பதிவில் தமிழ்மணம் படிச்சி, எழுதி வளர்ந்தேன் என்று நாளை பதிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் பதிவர் ஓசை செல்லா. ஒரு பொய்யை எப்படிச் சொல்வது, காம்ப்ளான் குடிச்சு வளரும் பணக்கார பையனாக பிறக்கவில்லை. அப்போதைய 10 ரூவா காம்பளானுக்கு பணக்காரனாத்தான் பிறக்கனுமா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது.
காம்பளானெல்லாம் வளரும் பருவத்தில் கேள்விபட்டதே இல்லை. இன்னிக்கும் நினைவு இருக்கிறது கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் முதல் நாள் இரவே செய்து, மறுநாள் கொஞ்ம் தயிரோ மோரோ போட்டு, கூழாகக் கரைத்துக் கொடுப்பார்கள், இரண்டு டம்ப்ளர், கடித்துக் கொள்ள பச்சை மிளகாய் கிடைக்கும். கம்பங்கூழ்தான் நான் குடிச்சு வளர்ந்த காம்ப்ளான்.
நினைவை மீட்டுத்தந்த ஓசை செல்லாவிற்கு நன்னி.
வெறும்பயலாக (பயலாக - நடுத்தர வயசில் வயதைக் குறைத்துக் காட்டும் டெக்னிக்) பொட்டித் தட்டிக் கொண்டிருந்தால் ஒருபயலுக்கும் (ரொமப் ஓவர் இல்லே ?) சாரி ஒருத்தருக்கும் என்னையைப் பற்றி தெரிந்திருக்காது. இப்ப தெரியும் என்பதால் அடுத்த எலெக்சனில் நான் நிற்கமுடியாமல் உட்காரும் போது என்னிய எழுப்பிவிடுவாங்க.... அதுக்குள்ள விசயம் மறந்துட்டு.
ச்சே.....ச்சே என் மூஞ்சைக் காட்டுவதற்கு அல்ல,
பல்வேறு சிந்தனைத் தளங்களில் பயணம் செய்யும் பதிவர்கள், ஒன்று கூடி இளைப்பாறும் மோட்டல் (மாமண்டூர் போல்) தான் பதிவர் சந்திப்பு. புதிய பதிவர்கள் என்றால் 'இந்த மூஞ்சிதான் இப்படியெல்லாம் எழுதியதா ?' வியப்படையலாம், அதிர்ச்சியடையலாம்.
தாரளமனசுக்காரர் யாரவது நிச்சயம் கலந்து கொள்வார்கள், அவர் செலவில் போண்டா தின்றுவிடலாம். கோவையில் சென்றவாரம் பதிவர் சந்திப்பு நடத்திய பெரியவர் மஞ்சூர் ராஜாவை உண்மையில் மனம் திறந்து பாராட்டுகிறேன். பதிவர் சந்திப்பை தன் வீட்டு விழா போல் சிறப்பாக நடத்தி இருக்கிறார். சொந்தக்காரன் இல்லை, சாதிக்காரன் இல்லை, சிறுவயது நண்பனோ, கூடப்படித்தவனோ இல்லை. இத்தனை இல்லைகளாகவும் இருக்கும் பதிவர்களை தன் வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்து, நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால், உண்மையில் மஞ்சூர் ராஜா மற்றும் அவரது இல்லத்தோர்... அவர்களின் பதிவர் பற்றும் அதற்கு அடிப்படைக் காரணமான தமிழ்பற்று, தமிழ் உணர்வு பற்று நெகிழ வைக்கிறது.
*************
பதிவர் சந்திப்பு அழைப்புக்கு இவ்வளவு நீளமாக பதிவிடலாமா ?
சுறுக்கமாக முடித்துவிடுகிறேன்,
மாரனேரி என்ற புதிய வலையின் புதிய பதிவரும் நீண்ட காலமாக பதிவுகளை வாசித்துவரும் ஜோசப் பால்ராஜ் (பயந்துடாதிங்க பால் தினகரன் இல்லை), சிங்கைப் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். தேதி இடம் மற்றவர்களுடன் கலந்து பேசி சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது
தேதி : 2008, ஆகஸ்டு 3, ஞாயிற்றுக் கிழமை
இடம் : அங்மோக்யோ நூலக எதிரில் உள்ள பூங்கா (வருபவர்களுக்கு வழிகாட்ட தட்டி வைத்துக் கொண்டு நூலகம் அருகில் ஜெகதீசன் நிற்பார்)
நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை (அதற்கும் மேலும் மொக்கைப் போடுவோர் போடலாம்)
சென்ற முறை கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ளாதவர்களும், கோவித்துக் கொண்டவர்களும், மற்றும் எல்லா'ளும்' வெட்கப்படாமல் இந்த முறை கலந்து கொள்ள வேண்டும் என்று என் சார்பிலும், ஜோசப் பால்ராஜ் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்
பின்குறிப்பு : பதிவர்களில் தலை / கால் / வால் என்று யாரும் இல்லை, யாராவது ஒருவர் ஏற்பாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏற்பாட்டு குழுதலைவர் யார் என்றால் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பதிவர்களும் தான். சொந்தக்காரர்கள் போல் 'எனக்கு அழைப்பு விடுக்கவில்லை' என்று யாரும் நினைக்காமல் தவறாது கலந்து கொள்ளவேண்டும், இது போல் பதிவர் சந்திப்புக்களை அடுத்து அடுத்து ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
39 கருத்துகள்:
அண்ணே, போன பதிவர் சந்திப்புக்கு வீட்ல இருந்து அல்வா, முறுக்கு எல்லாம் எடுத்துகிட்டு வந்த அந்த அன்புக்குறிய பதிவருக்கு சொல்லீட்டிங்களா?
மறக்காம இந்த தடவையும் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க.
//
ஜெகதீசன் +65 93372775
//
அது சரி... யார் இவர்?
புதுப் பதிவரா?
கோவை பதிவாளர் சந்திப்பில் விருந்தோம்பல் பற்றிய தங்கள் பாரட்டு
கோவையார்களின் ப்ழகும் பண்பை படம் பிடித்து காட்டுகிறது.
சிங்கை பதிவர் சந்திப்புக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்
அனேகமாக அங்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.முடிந்தால் வருகிறேன்.
//நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால்,//
அம்புட்டு கஷ்டமா?
// (வருபவர்களுக்கு வழிகாட்ட தட்டி வைத்துக் கொண்டு நூலகம் அருகில் ஜெகதீசன் நிற்பார்)//
வழிகாட்டி தட்டியில் எல்லாம் போஸ்டர் ஒட்டுவது எங்கள் வழக்கம், அதனால் அவர் முகத்திலும், முதுகிலும் போஸ்டர் ஒட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
என் பரிந்துரைகள் ஏற்கப்படாததால் இந்த சந்திப்பை நான் புறக்கணிக்கிறேன்....
:P
வரமுடியும் என நினைக்கிறேன் .
//ஜெகதீசன் said...
என் பரிந்துரைகள் ஏற்கப்படாததால் இந்த சந்திப்பை நான் புறக்கணிக்கிறேன்....
:P
//
ஊட்டுக்குள்ள பூந்து உன்னைய டவுசரோடு இழுந்து வந்துவிடுவேன்.
// -L-L-D-a-s-u said...
வரமுடியும் என நினைக்கிறேன் .
//
தாஸ்,
நினைக்காதிங்க வந்துடுங்க, பத்து கிலோ கடலைமாவுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கோம், போண்டா செய்து தர பாரி.அரசு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, போன பதிவர் சந்திப்புக்கு வீட்ல இருந்து அல்வா, முறுக்கு எல்லாம் எடுத்துகிட்டு வந்த அந்த அன்புக்குறிய பதிவருக்கு சொல்லீட்டிங்களா?
மறக்காம இந்த தடவையும் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க.
//
ஜோசப்,
அவர் சிங்கை நாதன் செந்தில்,
சொல்லியாச்சு சொல்லியாச்சு, இப்பவே எல்லாம் செய்து வைத்துட்டாராம், ப்ரீசரில் தயாராக இருக்கிறது.
//ஜெகதீசன் said...
//
ஜெகதீசன் +65 93372775
//
அது சரி... யார் இவர்?
புதுப் பதிவரா?
1:04 PM, July 18, 2008
//
தொலைபேசி எண்ணை சரி செய்துவிட்டேன். அவர் ஒரு இளம் பதிவர் அதாவது சின்னத் தம்பி, தாலி என்றாலே என்னாவென்று தெரியாதவர்.
//வடுவூர் குமார் said...
அனேகமாக அங்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.முடிந்தால் வருகிறேன்.
//
குமார்,
வந்துவிட்டால் வந்துடுங்க.
//குசும்பன் said...
//நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால்,//
அம்புட்டு கஷ்டமா?
//
ம், அதைத்தான் சந்திப்பு பற்றிய எழுதிய பதிவர்கள் ஹைலைட் பண்ணி இருக்காங்க.
//விஜய் said...
கோவை பதிவாளர் சந்திப்பில் விருந்தோம்பல் பற்றிய தங்கள் பாரட்டு
கோவையார்களின் ப்ழகும் பண்பை படம் பிடித்து காட்டுகிறது.
சிங்கை பதிவர் சந்திப்புக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்
//
வாங்க விஜய், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி !
//குசும்பன் said...
// (வருபவர்களுக்கு வழிகாட்ட தட்டி வைத்துக் கொண்டு நூலகம் அருகில் ஜெகதீசன் நிற்பார்)//
வழிகாட்டி தட்டியில் எல்லாம் போஸ்டர் ஒட்டுவது எங்கள் வழக்கம், அதனால் அவர் முகத்திலும், முதுகிலும் போஸ்டர் ஒட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
//
இங்கே சிங்டெல் ப்ரீபெய்டு அட்டை விற்க கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக் கொண்டு விளம்பரம் செய்வாங்க, அதில் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன், அதில் எழுதி ஜெகதீசன் கழுத்தில் தொங்கவிடனும்.
//
சென்ற முறை கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ளாதவர்களும், கோவித்துக் கொண்டவர்களும், மற்றும் எல்லா'ளும்' வெட்கப்படாமல் இந்த முறை கலந்து கொள்ள வேண்டும் என்று என் சார்பிலும், ஜோசப் பால்ராஜ் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்
//
என் சார்பில் கேட்டுக்கொள்ளாததாலும் நான் இந்த சந்திப்பைப் புறக்கணிக்கிறேன்....
:P
தாராள மனசுக்காரர்கள் யாராவது உடனே பெங்களூரு - சிங்கை ரிடன் ப்ளைட் டிக்கட் அனுப்பவும்
//
ஜெகதீசன் +65 93372775
//
அது சரி... யார் இவர்?
புதுப் பதிவரா?
//நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால்,//
அம்புட்டு கஷ்டமா?
தல! அங்க எல்லாருக்கும் என்னோட வாழ்த்தைச் சொன்னேன்னு சொல்லுங்க...
மழை பெய்தால் வெட்ட வெளியில் தான் நிற்க வேண்டும். திங்கணும்னு நினைச்சாக்கூட எதுவும் வாங்க முடியாது. அதுக்கு பேசாம ஜெகதீசன் சொன்ன மாதிரி இடங்களுக்குப் போகலாம்.
சந்திக்கும் இடம் மறு பரிசீலணைக்கு உட்பட்டதா? ஒதுக்கப் பட்ட நேரம் மிகக் குறைவு. அழைக்கிறேன், அப்புறமா.
//முகவை மைந்தன் said...

4:54 PM, July 20, 2008
//
முகவை மைந்தன்,
கவலையே படாதிங்க, மழை பெய்தால் அப்படியே பக்கத்தில் இருக்கும் Food Court க்கு சென்றுவிடுவோம். மாலை 7 மணி வரைத்தான் சந்திப்பு.
//
சந்திக்கும் இடம் மறு பரிசீலணைக்கு உட்பட்டதா? ஒதுக்கப் பட்ட நேரம் மிகக் குறைவு.
//
மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்....
சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!
//குசும்பன் said...
//நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால்,//
அம்புட்டு கஷ்டமா?//
வந்து கேட்டிருந்தா தெரியும்! (ஆனா.. விஷய ஞானமுள்ள மனிதர்! ரிப்பீட் - மனிதர்!)
//சென்ற முறை கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ளாதவர்களும், கோவித்துக் கொண்டவர்களும், மற்றும் எல்லா'ளும்' வெட்கப்படாமல் இந்த முறை கலந்து கொள்ள வேண்டும் என்று என் சார்பிலும், ஜோசப் பால்ராஜ் சார்பிலும், திருப்பூரிலிருந்து பரிசல்காரன் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்//
என் சார்பில் அழைத்ததற்கு மிக்க நன்றி!
// -L-L-D-a-s-u said...
வரமுடியும் என நினைக்கிறேன் .//
இவரு பேரை சொல்றதுக்கே இத்தனை தடங்கல்! பாருங்க - L-L-D-a-s-u!!! தடங்கலில்லாம வரச்சொல்லுங்க!
//கோவி.கண்ணன் said...
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, போன பதிவர் சந்திப்புக்கு வீட்ல இருந்து அல்வா, முறுக்கு எல்லாம் எடுத்துகிட்டு வந்த அந்த அன்புக்குறிய பதிவருக்கு சொல்லீட்டிங்களா?
மறக்காம இந்த தடவையும் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க.
//
ஜோசப்,
அவர் சிங்கை நாதன் செந்தில்,
சொல்லியாச்சு சொல்லியாச்சு, இப்பவே எல்லாம் செய்து வைத்துட்டாராம், ப்ரீசரில் தயாராக இருக்கிறது.
//
அடடா.. கோவைப் பதிவர் சந்திப்புக்கு முன்னே, அவரைப்பற்றித் தெரியாமல் போனதே! (பார்சலில் அனுப்பீயிருப்பாருல்ல?)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன் சார்.
அரிசி விலை ஏற்றம் இங்கும் விஷம் போல் ஏறுகிறது. ஒரு அறிக்கை இப்படியே போனால்( விவசாயம் புறக்கணிக்கப் பட்டல்)வரும் 2020 ல் நம்து பாரத தேசம் அரிசி ஏற்றுமதி நாடு என்பது மாறி இறக்குமதி நாடாய்
மாறும் என்கிறது.
வளம் கொடுக்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டுயது அனைவரது கடமைய்ன்றோ !
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
பரிசல்,
இம்புட்டு பின்னூட்டங்களா ?
'இதுக்கெல்லாம் எப்படி பின்னூட்டமாறு செய்யப்போகிறேன்...' என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.
:)
நானும் வர்றேன்.
சிங்கை பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல் வாழ்த்துகள். எனக்கு அல்வா முறுக்கு பார்சலில் வருகிறதா ?
///////சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும்
பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால், உண்மையில்
மஞ்சூர் ராஜா மற்றும் அவரது இல்லத்தோர்... அவர்களின் பதிவர்
பற்றும் அதற்கு அடிப்படைக் காரணமான தமிழ்பற்று,
தமிழ் உணர்வு பற்று நெகிழ வைக்கிறது.//////
இது த்ரி மச்சி! வாத்தியார் இருந்ததே ஒன்றரை மணி நேரம்தான்
நான்கு மணி நேரம் எப்படிப் பேசியிருக்க முடியும் ஸ்வாமி?
ஒன்றரை மணி நேரப் பேச்சில் அனைவரும் 4 மணி நேர உரையைக்
கேட்டதுபோல அயர்ச்சியாகி இருந்தால், அதற்கு என்ன செய்யலாம்
சொல்லுங்கள்?
அடுத்த பதிவர் சந்திப்புக்களுக்கு வாயைக் கட்டிக் கொண்டு போகவா?:-)))))
//இது த்ரி மச்சி! வாத்தியார் இருந்ததே ஒன்றரை மணி நேரம்தான்
நான்கு மணி நேரம் எப்படிப் பேசியிருக்க முடியும் ஸ்வாமி?
ஒன்றரை மணி நேரப் பேச்சில் அனைவரும் 4 மணி நேர உரையைக்
கேட்டதுபோல அயர்ச்சியாகி இருந்தால், அதற்கு என்ன செய்யலாம்
சொல்லுங்கள்? //
ஐயா.. தப்பா நெனக்கப்படாது!
ஒன்றரை மணி நேரத்துலேயே, நாலு மணி நேரத்துக்கான விஷயங்களைச் சொல்லிச் சென்றீர்கள் எனப் பொருள் கொள்க!
//அடுத்த பதிவர் சந்திப்புக்களுக்கு வாயைக் கட்டிக் கொண்டு போகவா?:-)))))////
உங்ககிட்ட சரக்கிருக்கு, பேசறீங்க.. பேசணும்! வாயைக்காட்டிக் கொண்டெல்லாம் வரப்படாது! நாங்க மௌன சந்திப்பு போட்டாக்கூட சிறப்பு பேச்சாளர் நீங்கதான்! நான் உங்க கட்சி!
//கோவி.கண்ணன் said...
பரிசல்,
இம்புட்டு பின்னூட்டங்களா ?
'இதுக்கெல்லாம் எப்படி பின்னூட்டமாறு செய்யப்போகிறேன்...' என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.
//
சந்திப்புல என்னைப்பத்தி சிறப்புரை ஆற்றுவதாகச் சொல்லீருக்கீங்களே... ஹி..ஹி..அது போதும்! (யாருப்பா அங்க, கம்பெடுத்துட்டு வர்றது?)
ஆஹா! அதுக்குள்ளே இரண்டாவது சந்திப்பா!
கலந்துட வேண்டியது தான்..கோவி கண்ணன் நானும் வரேன்..என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க :-)
ஆஹா! அதுக்குள்ளே இரண்டாவது சந்திப்பா!
கலந்துட வேண்டியது தான்..கோவி கண்ணன் நானும் வரேன்..என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க :-)
இன்று நண்பகல் பாஸ்கர் எனும் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, நான் பதிவுலக வாசகர், பதிவர் அல்ல, நானும் கலந்துகொள்ள முடியுமா என கேட்டார், கட்டாயம் வாருங்கள், உங்களையும் பதிவராக்கி விடுவோம் என்று கூறியுள்ளேன்.
மேலும் மலேசியாவின் ஈப்போவில் இருந்து நண்பர் விக்னேச்வரன் http://vaazkaipayanam.blogspot.comஅவர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
இப்படி பலமுனைகளில் இருந்தும் எங்கள் பதிவர் மாநாட்டிற்கு ஆதரவுகள் வந்து குவிகின்றன என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துரையிடுக