மும்பைக்கு அலுவலக பயணமாக மும்முறை கிட்ட தட்ட 60 நாட்கள் நாரிமன் பகுதியில் உள்ள ட்ரைடென்ட் விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தி தெரியாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என்று சொல்லும் திராவிட எதிர்ப்பு மற்றும் இந்தி ஆதரவு தூற்றிகள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை.
60 நாட்கள் தங்கியதில் முதல் 15 நாட்களுக்கு வாடகை உந்துகளில் தனித்து சொல்ல நேரிடிகையில் செல்லும் இடம் குறித்தும் இறங்கும் இடம் குறித்தும்
விளக்கிச் சொல்ல கடினமாக இருந்தது, அது நமக்கு ஆங்கிலம் தெரியாத வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவம் போன்றது தான், ஆனால் அடுத்த 15 நாட்களில் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து ஓரளவு இந்தியில் தெரியும், தெரியாது, இங்கே அங்கே, அதற்கு பக்கத்தில் (ஏர் இண்டியாகா பில்டிங்கே பாஸ்) என்ற அளவுக்கு இந்தி புலமை வந்துவிட்டதால் பிறகு வாடகை உந்திகளில் எங்கும் செல்லவும் தயக்கமின்றி சென்று வந்தேன். எந்த மொழியையும் ஊட்டவேன்றுமென்ற தேவையில்லை, அந்த மொழியை மதித்து அவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலே குறிப்பிட்ட மொழி பேசும் நகரத்தில் தங்க நேறும் பொழுது 6 மாதங்களுக்குள் நன்றாகவே பேச முடியும். இந்த திறமை யற்றவர் எவ்வளவு தான் ஒரு மொழியை படிப்பின் வழி திணித்தாலும் பேச கற்றுக் கொள்ளாவே முடியாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஆங்கில வழி கல்வி கற்பவர்களாலும் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் சரளமாக ஆங்கிலத்தால் பேசமுடியும் ? தயக்கமின்றி பேசி பயிற்சி எடுத்தால் மட்டுமே கல்வியாக கற்ற எந்த மொழியையும் பேச முடியும்,
இந்தி கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் வடநாட்டுக்காரனிடம் அசிங்கப்பட்டிருக்கமாட்டோம் என்று மொழியியில் அறிவின்றி கூறுவோரைக் கண்டால் திராவிட இயக்கங்களைத் திட்டும் பாவம் பைத்தியம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றும். கொத்து வேலைக்கு வடநாட்டுக்கு செல்லும் தமிழக கூலிகள் எந்த பள்ளியில் படித்து அங்கே இந்தி பேசக் கற்றுக் கொள்கிறார்கள், பிழைக்கும் வழிக்கு அங்குள்ள மொழியின் முக்கிய தேவை என அறிந்தோர் ஆர்வத்தினால் கற்றுக்கொள்வர்,
மலேசியாவில் முடித்திருத்தும் வேலைக்கு வருபவர்கள், மூன்று மாதங்களில் மலாய் பேசுகிறார்கள், எந்த பள்ளியில் படித்து கற்றுக் கொண்டார்கள் ?
**********
மும்பை என்றதும் இரயில் வெடிகுண்டு வெடிப்புகளும், அண்மையை ஆண்டில் நிகழ்ந்த தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை, மும்பையை பொறுத்த அளவில் இந்த நிகழ்வுகளால் இந்திய இந்து இஸ்லாமிய சமயத்தினரிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை பிரித்துள்ளதை உணர முடிகிறது, அங்குள்ள இந்துக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது இஸ்லாமியர்கள் குறித்து அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை, ஒரு 7 விழுக்காட்டு மக்கள் அவர்களால் தான் இங்கே பிரச்சனை என்பதாக குறிப்பிடுகிறார்கள், பெருகும் பிள்ளையார் ஊர்வலங்கள் அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே காணமுடிகிறது. இந்துக்களின் பலம் என்பது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பினால் கட்டப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மாநில ரீதியான எதிர்ப்புகளை சமாளிக்க இந்துப் போர்வை அவர்களுக்கு தேவைப்படுவதால் அவர்களின் ஆதரவுகளினால் அவை அணையாத நெருப்பாக காக்கப்படுவதை யாகூப் மோனன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளினால் உறுதி செய்யமுடியும், எந்த ஒரு ஊடகமும் யாகூப் மோமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப முன்வரவில்லை, மாறாக புறக்கணித்தன.
இவற்றை அரசியல் சமூக ரீதியில் நான் பார்த்தாலும் மும்பையின் மாறுபட்ட முகமாக வேறு சிலவும் என் கவனத்தை ஈர்த்தது, இந்திய நகரங்களில் பொதுக்கழிவறைகள் நிறைந்த நகரம், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை காண்பது அரிது. பொதுக்கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதற்கு கட்டணங்கள் கிடையாது, ஒரு பொதுக்கழிவறை இருந்தால் அங்கு அருகே நடைபாதை வாசிகளின் கூடாரங்களை காணமுடியும். அவர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை எல்லாமே பொதுக்கழிப்பிடம் தான்.
வேறெந்த நகரங்களைவிட கொசுக்கள் மும்பையில் குறைவே, மாலை ஏழுமணிக்கு மேல் திறந்த வெளியில் நின்றாலும் கொசுத் தொல்லைகளை உணரமுடியவில்லை, அவ்வளவு பெரிய நகராட்சியில் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மும்பையின் சிறப்பு, மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வாடகை உந்திகளின் நச்சுக்கள் மிகக் குறைவு.
வெறெந்த நகரங்களைவிட சிலெம் எனப்படும் சேரிப்பகுதிகள் மும்பையில் மிக மிக அதிகம், மும்பையில் மொத்த மாக 50 சேரிகளுக்கு மேல் உண்டு, சேரிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, காரணம் மும்பைக்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுவதால் சேரிகளின் எண்ணிக்கையும் மிகும், மும்பையின் வீட்டுமனைகளின் விலைக்கு குறைந்த கூலி வாங்குபவர்களால் வாடகைக்கு வீட்டின் ஒரு அறைகூட எடுக்க முடியாது, கூலியாட்களை அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் எந்த நிறுவனமும் தங்குமிட வசதி எதுவும் செய்து தராததால் அவர்களின் புகலிடம் சேரிதான், அதற்குள்ளும் இடம் கிடைக்காத நிலையில் நடைபாதையில் டெண்ட் அடித்து தங்கிவிடுவார்கள், குடும்பம் குடும்பமாக மும்பையின் வணிக தளமான நாரிமன் பகுதியிலும் கூடாரங்களை பார்க்க முடிகிறது, அவர்களை அப்புறப்படுத்தவும் முடியாது, அவ்வாறு செய்தால் அந்த பகுதியில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.
மும்பை போன்ற மாநகரங்களில் சேரிகளும் கூடாரங்களும் தவிர்க்க முடியாதவை, என்னைக் கேட்டால் அவைகள் நகரத்தின் ஒரு அங்கம் அதற்காக முகம் சுளிக்கத் தேவை இல்லை. சேரிகளை பார்த்து முகம் சுளிப்பவர்கள் நகரங்களில் சேரிகளுக்கான தேவை ஏன் வந்ததது என்று நினைத்தால் சேரிகளில் வசிப்பவர்களின் இன்னல்களுக்காக பரிதாபப்படுவார்கள்.
மும்பை வெடிகுண்டு வெடிப்பினால் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் பல கோடிகள் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எந்த நகரத்தையும் விட பாதுகாவலர் பணிக்கு மிகுந்த அளவில் ஆட்களை வைத்திருக்கும் நகரம் மும்பை தான், எந்த ஒரு கட்டிடங்களில் பாதுகாவலர்களின் சோதனைகளை கடக்காமல் நுழைந்துவிட முடியாது, கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மிகுதியானவர்கள் குறைந்த படிப்பு படித்தவர்கள் பாதுகாவலர் உடையணிந்து ஆண் பெண் இருபாலரும் பணியில் இருக்கின்றனர், எந்த ஒருநிறுவனமும் லாபத்தில் 5 - 10 விழுக்காடு பாதுகாப்புகளுக்காக செலவிடுகிறது. மும்பையில் வெடிகுண்டே வெடிக்காமல் அமைதியாக இருந்திருந்தால் படிக்காத அல்லது குறைந்த படிப்பு படித்த 25 லட்சம் பேருக்கு மிகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்பதை அரசாங்கமோ தனியாரோ ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியுமா ?
நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன், லாபத்தில் முழுவதையும் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் நிறுவனங்களி 5 - 10 விழுக்காட்டை பாதுகாப்புக்கு கட்டாயமாக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, நகரத்தில் வேலை வாய்ப்பை கூட்டும் ஒரு கூறுகாக அமைந்துள்ளதை முற்போக்கான மனநிலையில் தான் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதால் அங்கு சமூகம் சார்ந்த திருட்டு குற்றங்கள் குறைவு தான், இரயில் பிதுங்கி பயணம் செய்தாலும் பிக்பாக்கெட் திருட்டுகள் அரிது தான், சிக்கியவன் செத்துவிடுவான் அது வேற ஆனாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் சோம்பேரிகளாகவும் உழைக்க விரும்பாதவர்களாகவும் தான் இருக்கக் கூடுமே தவிர வேலை கிடைக்காதவர்கள் என்ற வாய்ப்பு மும்பையில் இல்லை.
வெங்காயமும் உருளை கிழங்கும் உற்பத்தி நின்றால் மிகுதியாக பாதிக்கப்படுவது மும்பை வாசிகளாக இருக்கக் கூடும், அவர்களின் அன்றாட உணவுகளில் அவை இல்லாத நாட்களே இல்லை, வெறெந்த நகரங்களைவிட மும்பை பெண்கள் ஆண்கள் குறித்து அச்சப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்கள் புகைப்பதை பார்க்க முடிகிறது, ஆடைகளும் விரும்பிய அளவிற்கு அணிகிறார்கள், பெரிதாக யாரும் அவற்றை வெறித்துப் பார்ப்பதும் இல்லை, குடியகத்திற்கு (பப்) வருகிறார்கள், சேர்ந்தும் குடிக்கிறார்கள், ஆண் பெண் சமநிலை மும்பையில் பேணப்படுகிறது.
மும்பை அனைத்துலக விமான நிலையம் உள்கட்டமைப்பும் சேவைகளும் சர்வதேசத் தரத்துடன் உள்ளது.
மும்பையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்க நேரிடுபவர்களால் மும்பையை விட்டுச் செல்ல முடியாது, அவர்களை எல்லா விதத்திலும் மும்பை ஈர்த்துவிடும் அம்சம் மும்பையில் உண்டு. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தவிர்த்து மும்பையில் இயல்பு வாழ்க்கைக்கான தனிமனித பாதிப்புகள் வெறெந்த இந்திய நகரங்களைவிட குறைவே.
7 கருத்துகள்:
//நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன்,//
விரைவில் உங்க சிங்கப்பூரில் இதே மாதிரியான ஆக்கபூர்வமான விளைவுகளை உங்க மும்பை பயணம் ஏற்படுத்தும் போலிருக்கே?
வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்துகொண்டு...கொடுமைடா சாமி!
வாங்க கோவி!
சேரி வாழ்க்கைனா என்னங்க? பொறம்போக்கு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு, சாக்கடையில் வாழ்ந்து, பக்கத்திலேயே டாய்லெட் போயிக்கொண்டு, பிள்ளைகளை பிச்சை எடுக்கவிட்டு, வாழும் ஒரு சுதந்திர வாழக்கை.
உடனே.."பாவம் ஏழைகள் அவங்க கஷ்டம் உனக்கென்ன தெரியும்?" னு இவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
"ஏழைத் தமிழர்கள்தான் அப்படி வாழ்றாங்க பாவம். அவர்களை இப்படி இழிவுபடுத்துறேயே, தமிழின துரோகி" னு தமிழ்ப்பற்றை சாக்கடையில் கலந்து ஊட்டுவது.
எனக்குத் தெரிய எங்க ஊரில் ஒருத்தங்க மும்பையில் போயி வாழ்ந்துட்டு வந்தாங்க. எங்க ஊரில் சொந்த பந்தம்லாம் இருக்காங்க. மும்பையில் போயி என்ன "தொழில்"ப் பண்ணினாங்கனு தெரியலை, அந்தம்மாவுக்கு நடத்தை சரி கெடையாது. திரும்பி வந்த கொஞ்ச நாள்லயே தெருவில் உள்ள ஆம்பளைங்க எல்லாம் அதை சினிமாக்கு கூட்டிப் போனானுக. வீட்டுக்காரனுக்கு தண்ணீ வாங்கைக்கொடுத்துட்டா என்னனு தெரியலை. அதுக்கு ரெண்டு வயதுக்கு வந்தும் வராததுமா பொண்ணுங்க, அதுகளும் அப்படித்தான். அம்மா சரியில்லைனு மகன் குடிகாரனாகிட்டான்.
எங்க ஊரில் வாழ்ந்த அவர்கள் சொந்தக்காரங்க எல்லாம் அந்தளவுக்கு நடத்தைக் குறைவெல்லாம் கெடையாது. நல்லாத்தான் தரமான வாழ்க்கை வாழ்ந்தாங்க. இவ்னக்க மட்டும்தான் மும்பையில் போயி எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து சேர்ந்தாங்க.
இந்தமாரி வாழ்க்கைக்கு வக்காலத்து செய்ற உங்களை எல்லாம் என்ன செய்யலாம்?னு தெரியலை. எனன்வோ போங்க!
மூன்று மாதங்கள் முழுமையாக இருந்துள்ளேன். எனக்கும் மும்பை எனக்குப் பிடிக்கும். ஹிந்தி உண்மையிலேயே அற்புதமான மொழி. ஆனால் நாதாரிங்க இந்த மொழியை வைத்துக் கொண்டு பரமபதம் ஆடும் ஆட்டம் சகிகல. இன்னும் எழுதுவதற்கு நிறைய உள்ளது கண்ணன்.
அப்புறம் நந்தவனம் சொன்னதை ஆமோதிக்கிறேன்.
ஜோதியின் கருத்து முதிர்ச்சியை இல்லை. எட்டு பேர் மும்பை போவதற்காக எட்டு கோடி தமிழனும் ஹிந்தி கற்க வேண்டியது இல்ல. நாளைக்கு ஜோதி சப்பான் போவார், சீனா போவார்; அதுக்கு அதையும் படிக்கணுமா/ யாருக்கு இஷ்டமோ அவர்கள் படியுங்கள் பிறகு அண்ணே ஆப்ரிக்கா போவார். அங்கு 80 மொழிகள், இந்தியா மாதிரி; அதையும் கற்க வேண்டுமா? தமாஷ்பா! ஒரு ஹிந்திகாரன சென்னியில் தமிழ் பேசுறானா? யோசித்து பேசணும்.
அன்பே தமிழ்
நீங்க நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டீங்க. திணித்தல் என்பது வேறு. இயல்பாக வாய்ப்பு இருப்பவர்கள் விரும்புவர்கள் தேவைப்படுபவர்கள் அவசியமுள்ளவர்கள் கற்றுக் கொள்வது என்பது வேறு. தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் தமிழை அழிக்கவும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதையும் நீங்க நினைவில் வைத்திருக்க வேண்டும். தமிழும் வளரல. ஆங்கிலத்தையும் ஒழுங்காக கற்றுக் கொள்ள முடியல. ஹிந்தியையும் முறைப்படி எதிர்க்க துப்புல்ல.
நானும் கண்ணன் போல அவசியமான வார்த்தைகளை அங்கே இருந்த போது கற்றுக் கொண்டு சமாளித்தேன். எனக்கும் அப்போது கடினமாக தெரியல.
அருமை யான மும்பை
சேரியில் உள்ளவர்களுக்கு அரசாங்கமே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி குறைந்த வாடகையில் அங்கு அவர்களை குடியமர்தலாமே... இலவச லேப்டாப், இலவச அரிசி, இலவச சைக்கிள் கொடுப்பதை தவிர்த்து இதை செய்யலாமே...
https://www.scientificjudgment.com/
கருத்துரையிடுக