ஹோம் சிக் எனப்படும் பெற்றோரின் நினைவு நம் தமிழக / இந்தியர்களுக்கு தான் மிகுதி, பருவ அகவையை கடந்தும் பெற்றோரை விட்டு இரண்டு நாள் பிரிவு கூட மன உளைச்சலையும் ஏக்கத்தையும் ஏற்படுத்திவிடுவதால் எதற்கு சென்றோமோ அதை நிறைவாக செய்து திரும்ப மாட்டார்கள்.
கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து நாம் விலகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது, கூட்டுக் குடும்பமாக வசித்த காலங்களில் பெற்றோர்களுடன் குழந்தைகள் உறங்குவது கிடையாது. பால் குடி மறக்கும் வரை பெற்றோருடன் படுத்திருக்கும், பிறகு தத்தா பாட்டியுடன் தான் உறங்குவார்கள், 6 ஆம் அகவைக்கு மேல் வசிக்கும் அறையில் (ஹால்) மற்ற பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து படுத்துக் கொள்வார்கள், 8 ஆம் அகவைக்கு மேல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் தனித் தனியாக குழுவாக உறங்குவார்கள், பருவ வயதை அடைந்ததும் தனி அறை வசதி இருந்தால் அதில் உறங்குவார்கள், பெரும்பாலும் பருவத்தை கடந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணமும் முடிந்துவிடும்.
நம் அப்பா காலத்திலேயே கூட்டு குடும்ப அமைப்பில் இருந்து நாம் விலகியாகிவிட்டது, நடுத்தர வர்கம் என்னும் கோட்டில் ஓரறை வீடுகளில் (ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு ஹால் வசதி கொண்டதில்) வசித்து தான் நம்மில் பெரும்பாலோர் படித்து வளர்ந்திருப்போம், குழந்தைகளை தனித்து படுக்க வைத்தால் இரவில் அச்சமடையலாம் என்பதால் பெற்றோர்களுடன் தான் இரு குழந்தைகளும் உறங்கும் படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள், இதில் இருக்கும் சிக்கல் பெற்றோரான கணவன் - மனைவியுடன் ஆன உறவு சீர்கெடுவதுடன். கணவன் மனைவி இருவருக்குமான பிணைப்பு குறைந்துவிடும்.
திருமணமானவர்களின் படுக்கை அறை என்பது ஓய்வெடுக்கும் அறை மற்றும் பாலியல் தேவைக்கான வடிகால் என்பதைத் தாண்டி கணவன் மனைவி இருவருக்குமிடையேயான பேச்சு வார்த்தைகளும் அதன் மூலம் இருவரின் புரிந்துணர்வை வளர்க்கும் இடம், ஆனால் குழந்தைகளை கூடவே படுக்க வைத்திருப்பதால் பெற்றோர்களின் தனிமையும் அதை சார்ந்த விருப்புகளும் குழந்தைகள் தூங்கினால் இன்றி வாய்பே இருக்காது, குழந்தைகள் உடனேயே தூங்கிவிடாது, 9 மணிக்கு தூங்க வைத்தாலே கொட்ட கொட்ட விழித்திருந்து கதைகளை சொல்லக் கேட்டு 10 மணிக்கு தான் தூங்கும், அதற்குள் அசதியில் கணவனோ, மனைவியோ தூங்கி இருப்பர்,
திருமண மான ஆண்களைப் பொருத்த அளவில் பாலியல் தேவை என்பது அன்றாடம் தேவைப்படும் ஒன்று, அதை ஒரு மனைவியால் புரிந்து கொள்ள முடிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் விடியற்காலையிலோ, வீட்டில் குழந்தைகள் இல்லாத பகல் பொழுதிலோ, எந்த ஒரு தூண்டலும் இல்லாத வேளைகளில் உறவு வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இயல்பான பாலியல் இன்பம் தூய்பதற்கு மாற்றாக, கழிவறையைப் பார்த்ததும் ஏற்படும் சிறு நீருக்கான உந்துதல் போல் நேரம் கிடைக்கும் போது மட்டும் நடந்து முடிந்துவிடுகிறது.
தலையணை மந்திரம் என்று மாமியார்கள் விமர்சனம் செய்யும் காலகட்டங்களில் கூட மண முறிவுகள் மிக அறிதாகவே நடந்தது, தற்காலத்தில் மிகுந்துவிட்டதற்கு காரணமே, கணவன் - மனைவி இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்து போய், பாலியல் தேவையின் தீர்வு, கடமை என்ற நிலைக்கு தள்ளப்படும் பொழுது, தேவையற்ற சிறு சொல்லும் சீண்டலும், கிண்டலாக ஏற்கப்படாமல் வெறுப்பாக மாற்றி நினைக்கப்பட்டு உறவுகள் சீர் குழைகின்றன, திருமணமான ஆண்களின் வெளி நாட்டமும் மிகுந்துவிடுகிறது, திருமணம் ஆன ஆண்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் கள்ளத் தொடர்புகளையோ, பாலியல் தொழிலாளியை நாடுவதையோ ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
25 அகவைக்குள் திருமணம் நடந்தால் தம்பதியினரிடையே புரிந்துணர்வு மேம்பட இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட முடியும், ஆனால் இனிமே நமக்கு சந்தை மதிப்பு இல்லை என்னும் நிலையில் ஆண்கள் 30 அகவைக்கு மேலும் பெண்கள் 25 க்கு மேலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் குழந்தைப் பிறப்பு உடனடியாக நிகழவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர், குழந்தை உருவனாதுமே குழந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் தம்பதிகள் தள்ளிப்படுக்க நேர்ந்துவிட இயல்பான நெருக்கம் குறைந்துவிடும், குழந்தை பிறந்து ஒராண்டாகியும் அடுத்து உடனேயே ஏற்பட்டுவிட்டால் ? என்ன செய்வது என்பதில் தம்பதியினரின் நெருக்கம் குறைந்து இடைவெளி மிகுந்து கொண்டே வரும், பின்னர் குழந்தைகள் உறங்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று பாலியல் தேவையின் தீர்வு, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே.
குழந்தைகளை வெளிநாட்டினர் 3 ஆம் திங்களில் (மாதம்) இருந்தே தனித்து படுக்க வைத்துப் பழக்குகின்றனர், இதனால் தம்பதியினரின் நெருக்கம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை, குழந்தைகளின் மீதான அன்பும் குறைவதும் இல்லை, இந்திய பெற்றோர்களும் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கும் வசதியுடன் வீடு இருந்தால் படுக்க வைத்து பழக்கலாம், குழந்ந்தைகளின் நடவடிக்கைக் குறித்து, குழந்தைகளை அருகில் படுக்க வைத்துக் கொண்டு பேசவே முடியாது, ஒன்றாக படுக்கும் குழந்தைகள் பல வேளைகளில் நடு இரவில் கூட விழித்திருக்கும், குழந்தைதான் தூங்கி விட்டதே என்று நினைத்து தம்பதிகள் கூடினால், மறுநாள் தன்னுடன் படிக்கும் குழந்தைகளிடம் 'அப்பாவும் அம்மாவும் ராத்திரி கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று வெகுளியாக சொல்லிவிடும், சிறுவயதில் இது போன்ற பேச்சுக்களை நான் என் அகவையை ஒத்தவர் (7, 8 அகவையினர்) சொல்லக் கேட்டிருக்கின்றேன். எந்த குழந்தையும் பெற்றோர்கள் இருவரும் தன்னிடம் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்பும், இரவில் தப்பித் தவறி அம்மா அப்பா கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களால் அதை ஏற்க இயலாது.
நடு இரவின் அமைதியில் நாம் பெற்றோர்களுடன் படுத்தகாலங்களில் 'குழந்தைகள் தூங்கட்டும்...' னு அம்மா மெல்லிய குரலில் சொல்லுவதை காது கொடுத்திருப்போம், அதற்கான பொருள் நாம் பெற்றோர் அகவையை அடையும் பொழுது நினைத்தால், மிகவும் தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது, பெற்றோரின் தனிமையும் அதற்கான தேவைகளை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்கிற வெட்கப்பட வைக்கிறது. அதே தாழ்வுணர்வை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டாமே.
குழந்தைகளுக்கு 6 அகவை வரை பாலியல் உறுப்பு பற்றிய விழிப்புணர்வும், அம்மணமாக நிற்பதின் கூச்சமும் தெரியாது, அதுவரை கூட பெற்றோர்களுடன் படுப்பதால் அதற்கு மன அளவில் பாதிப்பு ஏற்படாது, 6 ஆம் அகவைக்கு மேல் சுற்றி நடப்பவற்றை ஆராயும் எண்ணம் ஏற்படும், பெற்றோரின் உறவு காட்சிகளை பார்க்கும் நிலை ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு அடையும். 5 அகவைக்கு மேல் குழந்தைகளை தனித்து படுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு தனிமை குறித்த அச்சம் நீங்கும், தன்னம்பிக்கை வளரும்.
படுக்கை அறையின் தேவை கணவன் மனைவியினரிடையே புரிந்துணர்வை வளர்க்கும் இல்லத்தை மேம்படுத்தும் வீடு வாங்குதல், வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுதல் குறித்த பேச்சுவார்த்தைகான இடம், அதன் பிறகு பால் உணர்வு தீர்வு, அதில் முன் விளையாட்டு, ஒன்று கூடல் என தூங்கும் முன் ஒரு மணி நேரமாவது செலவிட்டு பின்னர் கட்டியணைத்தப்படி தூங்குவதால் இருவருக்குமான நெருக்கம் மேம்படும், அன்றாடம் முடியாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டாலே தேவையற்ற பிணக்குகள் குறைந்து போய்விடும், வேலைக்கு செல்லும் மனைவியரின் நிலையை கணவர்கள் புரிந்து கொள்ள படுக்கை அறையை விட்டால் வேறு நேரமோ இடமோ வாய்காது.
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வெகுளித்தனமான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை, இல்லம் என்பதில் பலர் ஒன்றாக இருந்தாலும் தேவைகள் தனித்தனியானவை, ஒவ்வொருவரின் தேவைகளுமே கவனிக்கத் தக்கத்து, இன்றியமையாதது, அப்பா என்னும் ஆண்களைப் பொருத்த அளவில் தம் குழந்தைகள் மீது அன்பு இருக்கும் அளவுக்கு, மனைவியுடன் கூட விரும்பும் பாலியல் தேவைக்கான வடிகாலும் தேவைப்படும். மனைவியின் வெறும் முகத்தை மட்டுமே பார்த்து தூங்க ஆண்கள் விரும்புவதில்லை. சூழல்களை ஆண்கள் புரிந்து கொண்டாலும் ஏற்க விரும்புவதுமில்லை, நாளடைவில் உன் முகத்தை பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள், அதே போன்று எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு அது தான் முக்கியமா ? என்கிற மனைவியின் ஏளனம் / இயலாமை / வெறுப்பு...இதை எதிர் கொள்வதை தவிர்க்க ஆண்களின் வெளி நாட்டம், அதன் பிறகு அவை வெளியே தெரிய மொத்தத்தில் இல்லத்தின் அமைதி குலையும். பொதுவாகவே பெருவாரியான ஆண்களின் அலையும் மனது சந்தர்ப்பத்திற்கும் காரணத்திற்கும் காத்திருக்கும், இதில் இரண்டில் எது வாய்த்தாலும் தவறு செய்துவிடுவார்கள்,
***************
வளர்ந்த குழந்தைகளை தனியாக படுக்க வைத்துப் பழக்கி, அங்கேயே சிறிது நேரம் இருந்து தூங்க வைத்துவிட்டு, தேவை ஏற்பட்டால் நடு இரவில் அவர்கள் நன்றாக உறங்குகிறார்களா, அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று எழுந்து வந்து பார்க்கலாம், ஒற்றைக் குழந்தைகளுக்கு கூடவே ஒரு பொம்மையை படுக்க வைத்தால், மிகவும் பிடித்த பொருள்களை வைத்துவிட்டால் அவர்களுக்கு தனிமை தெரியாது, அவர்களுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்களின் அறையிலேயே அருகில் படுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம், விடுமுறை நாட்களில் பகலில் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து குழந்தைகளின் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும், எங்காவது சுற்றுலா சென்றால் ஒன்றாக படுத்து உறங்கலாம், அதைவிடுத்து வீட்டிற்குள் குழந்தை பாசம் என்கிற உணர்வில் தம் உணர்வுகளை அழித்துக் கொள்வதால் தீமையே தவிர்த்து எந்த நன்மையும் இல்லை, கூடவே படுத்து பழகும் குழந்தைகள் ஒரிரு நாட்கள் கூட பெற்றோர் இல்லை என்றால் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்ளத் தெரியாது வளரும். நன்றாக குழந்தைகளை வளர்த்து, இல்லற இன்பத்தை நீட்டித்து வாழ விரும்புவர்கள் குழந்தைகளை தனியாக படுக்க வைப்பத்தால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை.
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பி, வெளிநாடு சுற்றுலா சென்றால் அவரின் நான்கு குழந்தைகளுக்கும் தனி அறை தான் எடுப்பார், ஏன் என்று கேட்டேன், அவர் சொன்னார்,
My Husband also important for me, I have to / like to entertain him in the night, sleeping with children is nothing other than sleepless, So when ever we go for tour, I always prepare to book 2 bedroom residential apartment type hotel, instead of separate hotel rooms.
Seems to be valid right ?
6 கருத்துகள்:
அருமையான பதிவு கோவி.
மிக்க நன்றி அண்ணன்
கோ வி சார்,
உளவியல் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். நமது நாட்டில் குழந்தைகளை தனியே படுக்கவைப்பது தாய்ப்பாசம் என்ற அதீத மேற்ப்பூச்சின் மீது எழுப்பப்படும் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.அப்படி செய்பவர்கள் குழந்தைகளின் மீது பாசமில்லாதவர்கள் என்ற புரையோடிய சிந்தனை நம்மிடம் இருக்கிறது. மேற்கத்தியர்களை இதற்காகவே குறை சொல்லும் போக்கும் நம்மிடம் அதிகம். ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
Nice Article Kannan.
சிறந்த உளநல வழிகாட்டல்
இனிதே தொடருங்கள்
Eventhough have the same thought as you mentioned, but bit confused sometimes. Your blog cleared that. Thx
கருத்துரையிடுக