பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2014

உலக வலம் (1) !

எழுத நேரமின்மையால் மற்றொரு நொடுந்தொலைவு பயணம் பற்றி எழுத வேண்டும்... எழுத வேண்டும் என்று நினைத்து ஆறுதிங்கள்கள் கடந்துவிட்டன, எழுதுவது மற்றவர்களுக்கும் திரட்டிக் கொடுக்கும் தகவல் மட்டுமின்றி தத்தம் நினைவிற்கான சேமிப்பு என்ற அளவில் பயணக் கட்டுரைகள் எழுதுவதை பெரும்பாலும் தவிர்த்தது இல்லை. ஊர் சுற்ற பொருள் (பணம்) முதன்மையானது போலவே அதற்கான நேரம் வாய்பதும் இன்றியமையாததே. பணம் இருப்பவர்கள் அனைவரும் ஊர் சுற்றுவது இல்லை, பெரும்பாலும் பொருள் ஈட்டுவதிலேயே தங்களது நேரத்தை செலவிட்டுவிடுவார்கள், ஓய்வு காலத்தில் உடலும் ஓய்ந்துவிடும், சுற்றுச் சூழல் பருவ நிலைகளும் அச்சப்பட வைக்கும், காலும் கையும் நன்றாக இருக்கும் பொழுதே சுற்றும் வரை சுற்றிவிட வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.

இந்த அறிவியல் உலகத்தில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு வானூர்திப் பயணம், எத்தனை முறை வானூர்தியில் பயணம் செய்தாலும் எனக்கு அலுத்ததே இல்லை, இடையே இடையே டர்புலன்ஸ் எனப்படும் காற்றுகுறைந்த வெற்றிடத்தைக் வானூர்திக் கடக்கும் போது குலுங்குவதில் அடிவயிறு கலக்கும், அந்த வேளையில் எனக்கு நீச்சல் தெரியும் என்கிற ஆறுதல் உயிர் அச்சத்தைக் கொஞ்சம் குறைக்கும், மற்ற ஊர்த்திப் பயணங்களைவிட வானூர்திப் பயணம் மிகவும் பாதுகாப்பானதே. வானூர்திப் பயணங்களில் உணவு முடிந்த பிறகு பெரும்பாலும் தூங்கிவிடுவேன்.

ஏற்கனவே ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு அமெரிக்க வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தார், அப்பொழுது அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை காரணங்களினால் எனக்கான வேலை வாய்ப்பு கிட்டவில்லை, அத்துடன் அமெரிக்கா செல்லும் எண்ணங்களை முற்றிலும் மறந்தே போனேன், சுற்றுலாவாக செல்லாம் என்றாலும் இந்திய கடவு சீட்டுக்கு அவ்வளது எளிதாக நுழைவு அனுமதி கிட்டுவதில்லை என்பதால் அமெரிக்காவிற்கு செல்வதற்கு பதில் அமெரிக்கர் காலடி வைத்த நிலவிற்கே சென்றுவிடலாம் என்ற அலுப்பு தான் தோன்றியது,

என்னுடைய தற்போதைய சூழலில் எனக்கு அமெரிக்கா நுழைவு அனுமதி பிரச்சனை இல்லை என்றாலும் பெரிதாக ஆர்வமும் இல்லாமல் இருந்தது, இந்த சூழலில் பணி தொடர்பில் வீட்டு அம்மணி கனடாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவே, சரி எல்லொருமே சென்றுவரலாம் என்று திட்டமிட்டு 2013 நவம்பர் திங்களில் செல்ல முடிவெடுத்து அதற்கு ஏற்பாடாக பயணச் சீட்டு, குளிர் உடைகள் எல்லாவற்றையும் மூன்று திங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்து கொண்டே வந்தோம்.

2013 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து திட்டமிட்டு நிறைய தடங்கல், பள்ளி விடுமுறை, போதிய விடுப்பு இன்மை என்றெல்லாம் தள்ளிப் போய் நிறைவாக நவம்பர் நடுவில் செல்லலாம்  என்று முடிவு செய்திருந்தேன், எனக்கு இந்தியாவில் உறவினர்களை சந்தித்துவரவேண்டி இருந்தது, எனவே மனைவி, மகள் மற்றும் மகனை சிங்கப்பூரில் இருந்து கனடா கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு நான் இந்தியாவில் இருந்து கனடா செல்ல முடிவு செய்திருந்தேன், சிங்கப்பூரில் இருந்து சென்னை, பின்னர் பயண சீட்டு செலவுகளை ஒப்பிட பெங்களூரில் இருந்து புறப்படும் ஏர் பிரான்ஸ் வானூர்தி தான், புறப்படும் நேரம், போய் சேரும் நேரம் உள்ளிட்டு எனக்கு எல்லா வகையிலும் சரியாக இருந்தது, 

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி (மூன்றாம்) நிலையம் 

பயணம் நல்ல துய்ப்பு, அமெரிக்கா கனடாவை பார்த்ததைவிட உலகத்தை வானூர்த்தி வழியாக வலம் வந்து, புறப்பட்ட இடத்தில் இருந்து கடிகார திசையில் மட்டுமே, ஒருவழி பயணமாக புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது... எந்த வழியாக சென்றேன் ? மற்றும் யாரையெல்லாம் சந்தித்தேன், என்ன பார்த்தேன் ஆகியவற்றின் நிழல்படங்கள் இவற்றை பின்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.

8 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

அற்புதம்.

ப.கந்தசாமி சொன்னது…

முன்னுரை ஆரவத்தைத் தூண்டுகிறது. காத்திருக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

புத்தாண்டில் நல்ல ஆரம்பம்.

பயணம் விரும்பாதவர் உண்டோ இவ்வுலகில்?

தொடர்கின்றேன்.

தங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும், காலத்தின் வாசக அன்பர்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

அழகுத் தமிழில் ஆரம்பமே அசத்தல் சார். அடுத்து வரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான துவக்கம்
இந்தியாவை விட்டுத் தாண்டாத என்போன்றவர்களுக்கு
இது நிச்சயம் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ராவணன் சொன்னது…

சிங்கப்பூர் சிட்டிசன் ஆகிவிட்டீர்கள்.....வாழ்த்துக்கள்.

வேகநரி சொன்னது…

உங்க பயண கட்டுரைக்காக காத்திருக்கேன்.
பாலி பயணகட்டுரைக்கு பின் இது தான் உங்க பயண கட்டுரையென்று நினைக்கிறேன்.
ஏர் பிரான்ஸ் எப்படி இருந்திச்சு? தமிழ்படம் காட்டினாங்களா? எனக்கு பிடித்தது உங்க சிங்கப்பூர் ஏர்லைன் தான்,அடுத்தது சிறீலங்கன் எயர்லைன்ஸ்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அமெரிக்கா- கனடா - பயணக் கட்டுரை தொடரை அதிக வண்ணப் படங்களுடனும், தங்களின் சுவையான அனுபவங்களோடும் எதிர்பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்