பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2013

பர்மா பஜாரில் விஸ்வரூபத்திற்கு தடை இல்லை ? !


நம்ம மார்க்க சகோக்கள் விஸ்வரூபம் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது, எங்களைப் பற்றி பொது மக்களிடையே தவறாக சித்தரிக்கிறது, எங்கள் சமூகத்தின் பெயருக்கு களங்கம் / வில்லங்கம் என்றெல்லாம் சொல்லி தடை கோரியும், யாரும் பார்க்காதீர்கள் என்று வலைபதில் எழுதி வந்தாலும்,  ஏற்கனவே திருடி வெளியிடப்பட்ட இணையத்திலிருந்து  திருடப்பட்ட படம் வட்டுகளாகப் போடப்பட்டு பர்மா பஜாரில் படுவிறுவிறுபாக வியாபாரம் நடக்கிறதாம் அவ்வாறு விற்பவர்களில் மார்க்க சகோக்களின் சமூகம் சார்ந்தவர்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

எவ்வளவு தான் பணம் கொட்டும் தொழில் என்றாலும் வட்டிவாங்குதல், சாராயம் விற்பது போன்றவற்றில் எங்கள் சமூக ஆட்கள் ஈடுபடமாட்டார்கள் என்று இவர்கள் கூறி வந்தாலும் நிலைமை அதற்கு மாற்றானது தான், அது அவர்களுக்கும் தெரியும், 'இதெல்லாம் எப்படி ?' என்று நாம் சான்றுகளுடன் கேள்வி கேட்டாலும் மார்க்கம் மறுமையில் போடும் மதிப்பெண் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள், நீங்கள் குறிப்பிடுவர்கள் எங்கள் சமூகத்து பெயர் தாங்கிகளே என்பார்கள், பெயர்தாங்கிகளைப் பற்றி பேசினாலோ, படம் எடுத்தாலோ எங்கள் சமூகத்தை தூற்றுகிறார்கள் என்று முரண்பாடாக பேசுவார்கள்.

"புதுப்படங்களை இன்டர்நெட் மூலம் டவுன்லோடு செய்து மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் சிடியில் பதிவு செய்து கொடுத்ததாக குளித்தலை தர்மா (24), பாலக்கரை நிசார் (28), இன்பராஜ் (33), முகமதுஇலியாஸ் (25), ஹபீப் (30), தென்னூரை சேர்ந்த அஷ்ரப்அலி (22), சேட்டு (24), ஆழ்வார் தோப்பு அக்கீம்ராஜா(28), மேலசிந்தாமணி ஜமீர்(21), நாகூர்மீரான் (32), நத்தர்ஷாபள்ளிவாசல் இம்ரான் (22) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள், சிடி ரைட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திடீர் சோதனை 2 மணிநேரம் நீடித்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்வரூபம் திரைப்படத்தை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து விற்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால் விஸ்வரூபம் படத்தை தவிர தற்போது வெளியான அனைத்து படங்கள் மற்றும் ஆபாச படங்களை ரூ.25 முதல் 50 வரை டவுன்லோடு செய்து கொடுத்தது தெரியவந்தது என்றனர்."


http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91207


மேற்கண்ட 11 பேரில் மார்க்க பந்துகளின் பந்துகளின் பெயர்களும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்தது, இவர்களுக்கு தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றி பீஜே கட்சியை சார்ந்தவர்கள் செய்யும் அடவாடி தெரியாதா ? அந்தப் படம் அவர்கள் சமூகத்தை இழிவு செய்கிறது என்பதை அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களிடம் சொல்லி இருக்கவே மாட்டார்களா ?

திரைப்படங்களே பார்க்காதவர்கள் கூட இந்தப் படம் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கப்படுகிறது என்று ஆவலுடன் பார்க்கவே ஆசைப்படுவார்கள், பர்மா பஜார் கடைகாரர்களால் அவர்களது ஆசை நிறைவேறும், போறப் போக்கைப் பார்த்தால் விஸ்வரூபம் பார்க்காத தமிழனே இல்லை என்ற நிலை உருவாகலாம், மார்க்க பந்துகளின் போராட்டம் கமலுக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்தாலும் படம் பலரையும் சென்று அடையும் நிலையை ஏற்படுத்தி உள்ளது, படத்தை யாரையும் பார்க்கவிடக் கூடாத என்கிற முயற்சி கிட்டதட்ட தோல்வியே, கமலுக்கு நட்டம் ஏற்படுத்திவிட்டோம் என்று மட்டுமே அவர்கள் மகிழ்ச்சி அடையலாம், ஆனாலும் அவர்களது நோக்கம் ஒரு தனிமனிதனை தண்டிப்பது என்ற அளவில் தான் நிறைவேறி இருக்கிறது, மற்றபடி அவர்கள் எதை முன்னிட்டு குரல் எழுப்பினார்களோ அவற்றை திருட்டு வட்டு வெளியீட்டார்களே தடுத்துவிட்டனர்.

விஸ்வரூப திரைப்படத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் திரையரங்குகளை முற்றுகை இடுவது போல் திருட்டு வட்டுகடைகளை ஏன் முற்றுகையிடவோ, அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ ஏன் முயற்சிக்கவில்லை ?

28 ஜனவரி, 2013

கமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....


எதோ விஸ்வரூபம் படத்தில் மட்டும் தான் கமலஹாசன் முல்லா ஓமர் மற்றும் ஆப்கானிய தலிபான்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் கையில் வைத்து புனித போருக்கு அழைப்பு விடுக்கும் புனித புத்தகத்தை தீவிரவாத நூலாகக்கி கேவலப்படுத்தி இழிவு படுத்தினார் என்பதில்லை, கமலஹாசன் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை ஏற்கனவே துவங்கிவிட்டார், அவ்வை சண்முகி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே கமல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம், அந்த படத்தில் கமலின் நண்பராக வரும் நாசர் ஒரு முஸ்லிம் சமையல்காரனாக காட்டப்பட்டு இருப்பார், காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்களை கமல் இந்தப்படத்தில் சமையல்காரனாக சித்தரித்திருந்ததை முஸ்லிம் பார்த்திரத்திற்கு  புரோமோசன் கொடுத்திருப்பதாக நினைக்காதீர்கள், அந்த சமையல்காரன் வேடத்திலும் முதலாளியிடம் பணத்தை கையாடல் செய்த நபராகத்தான் நாசரைக் காட்டி இருப்பார், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இஸ்லாமியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சமையல் வேலைக்கு தான் சரியாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்குமா வைக்காதா ?

நன்றாக பேசும் நாசரை அடுத்தக் காட்சியில் ஊமையாக்கி ஒரு பார்பனர் வீட்டில் பொய் சொல்லி வேலைக்குச் சேரும் ஆளாகவும் காட்டி இருப்பதால் இஸ்லாமியர்கள் பொய் சொல்ல ஊமையாகக் கூட நடிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதுடன், அவர் வாய்பேச இயலாத நிலையில் சொல்லும் இறை வேத மந்திரங்களை எதோ காயத்திரி மந்திரம் சொல்லுவதாக டெல்லிகனேஷ் எடுத்துச் சொல்வதாக அவர்களுடைய வழிபாட்டை கொச்சைப்படுத்தி இருப்பார், மீனா வழுக்கி விழ தரையில் எண்ணையைக் கொட்ட நாசர் சொல்லித்தருவது போலவும், குறுக்குவழிக்கு வழி சொல்லுபவர்களாகவும் ஒரு இஸ்லாமியரைக் காட்டி இருப்பதை இவ்வளவு நாள் யாரும் பார்க்காமல் விட்டது வியப்பாக இருக்கிறது. ஐந்துவேலை நமாஸ் செய்யும் நாசருக்கு நெற்றியில் பட்டைப் போட்டு ஊமையாக்கி.........கமலஹாசன்.........

தசவதாரம் படத்தில் ஒரு நெட்டை பையனை ஆப்கான் உடையில் காட்டி இஸ்லாமியர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்றெல்லாம் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி இருந்தார், அதுமட்டுமன்றி பலதெய்வ வணக்கம் அம்மன் வேட நடிகையான கேஆர் விஜயாவை இஸ்லாமிய பெண்மணியாக காட்டி இருப்பது இஸ்லாமியர்களின் மீதான தொடர்சியான இழிவாகவும், வண்மமாகவும் இருந்தும் இதுவரையாரும் கண்டுகொள்ளாமல் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. கமல் மட்டுமா ? ஆர்யா என்கிற இஸ்லாமிய நடிகரை இந்து சாமியாராக்கி நெற்றியில் பட்டைப்போட்டு இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் மாற்றான 'நான் கடவுள்' என்ற கடவுள் நிராகரிப்பு தலைப்பில் இஸ்லாமிய நடிகரை இழிவு படுத்தி இருந்தார் இயக்குனர் பாலா.

வடிவேலு ? ஒரு பைத்தியத்திடம் பின்லேடன் அட்ரஸ் பற்றிய காட்சியை நகைச்சுவையாக்கி பின்லேடன் என்கிற இஸ்லாமியரை இழிவுபடுத்தி இருந்தது,.........தொடர்ச்சியாக தமிழ் பட உலகம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது படுத்துகிறது........ப...டு,,,த்,,,து,,,,கி,,,,ற,,,து.

எனக்கு ஒரு ஐயம்.......பின்லேடனுக்கும், முல்லா ஓமருக்கும் அட்ரஸ் தமிழ்நாடா ? அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தை பார்த்தும், பின்னே ஏன் இவர்கள் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தப்படுவதாக விஸ்வரூபத்தின் கழுத்தில் கத்தி வைத்து தலிபான் பாணியில் தண்டிக்க விரும்புகிறார்கள் ? ஞாயமாக தங்கள் ஒட்டுமொத்தப் பெயரையும், புனித நூலையும் கெடுத்த பின்லேடன், முல்லா ஓமர்மீதல்லா இவர்களுக்கு கோபம் வரவேண்டும் ? பின்லேடன் இறப்புக்கு சிறப்பு தொழுகை நடத்தும் பொழுது இழிவுபடாமல் இருந்த இஸ்லாமிய சமூகம், முல்லா ஓமர் பற்றிய படத்தால் இழிவுபடுத்துப்பட்டுவிடுமா ?

எனக்கு வந்த கோவத்திற்கு.....


வழக்கமாக தைப்பூசம் என்றால் குட்டி இந்தியா பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு, பொதுவாகவே காவடி குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து...இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல், தமிழகத்தில் தான் சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஆகாது, அதாவது சிவன் தொடர்புடைய கோவில் நிகழ்வுகள் அல்லது பட்டையடிக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் வைணவ கோவில்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது, ஒரு ஐயங்காரை சிவன் கோவிலுக்கு கூப்பிட்டுப் பாருங்கள், பெருமாளை சேவிக்கிறவா சைவாள் கோவிலுக்கெல்லாம் வரமாட்டா, அபச்சாரம்' என்பார்கள். சிங்கப்பூரிலும் பெருமாள் கோவிலுலும் நாமம் போட்ட ஐயங்கார்ஸ் தான் இருக்கிறார்கள் என்றாலும் தைப்பூசத்திற்கு தெண்டபாணி முருகன் கோவிலுக்கு காவடிகள் பெருமாள் கோவிலில் இருந்து தான் துவங்கும், இங்கே உள்ளவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக காவடிச் சீட்டு, பால்குடம் என்று புறப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணச் சீட்டு விற்பார்கள், வருமானம் தான், தவிர சின்ன ஊரில் சைவம் - அசைவம் பிரச்சனை செய்தால் ஒரு பய கோவிலுக்குள் எட்டிப்பார்க்க மாட்டான்.

எங்கே விட்டேன் ? குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து 5 கி.,மி தொலைவில் உள்ள தெண்டபாணி முருகன் கோவிலுக்கு இடைபட்ட இடத்தில் இறங்கி அதனை பார்வையிட்டபடி காவடி செல்லும் திசைக்கு எதிர்பக்கமாக நடந்து குட்டி இந்தியாவரை நடந்து வந்து பார்த்துவிட்டு திரும்புவேன், நாகையில் இருக்கும் வரை ஆண்டுக்கு இருமுறை இது போன்ற காவடி நிகழ்வுகளைப் பார்த்து அதில் கலந்து கொண்டு வந்ததால் சிங்கப்பூரில் அத்தகைய நிகழ்வுக்கு சென்று வருவது ஞாபகங்களை மீட்டுத் தரும், மற்றபடி சிங்கப்பூர் தைபூச நிகழ்வுகளில் என்னை ஈர்க்கும் படி பெரிதாக இல்லை, இங்கே காவடிக்கு மேளம் அடிப்பது உள்ளிட்ட கொண்டாடம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை, தவிர காவடிகள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும், ஒரே வேறுபாடு, சீனர்களில் ஒரு சிலர் கூட காவடி எடுத்துவருவார்கள், 



இந்த ஆண்டு பாஞ்சாபி குடும்பம் ஒன்று காவடி எடுத்து வந்தது. நான் வழக்கமான இடத்தில் இறங்கி செல்லாமல் இன்றைக்கு முன்கூட்டிய திட்டம் எதுவும் இடாமல் ஞாயிற்றுக் கிழமை வழக்காமாக கறிகாய் வாங்கச் செல்லும் மாலை ஏழு மணிக்கு நேராக லிட்டில் இந்தியாவில் பெருமாள் கோவில் அருகே இறங்கினேன், முத்ல் நாள் நள்ளிரவு துவங்கும் காவடிகள் மறுநாள் இரவு 9 - 10 மணி வரை கூட சென்று கொண்டு இருக்கும், எடுத்துப் போன அலங்கார காவடிகளை திரும்ப எடுத்து வந்து மற்றவர்களும் எடுத்துச் செல்வார்கள், சிங்கப்பூர் இந்து இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்களாக தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் சிலரும், இங்கு நிரந்தரவாசியாக இருப்பவர்களும் வேண்டுதல் தொடர்சியாக இங்கேயே காவடி எடுப்பார்கள், அன்று ஒரு நாள் மட்டும் குட்டி இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத குப்பை மயமாக இருக்கும், 

பெருமாள் கோவில் அருகே இறங்கிப் பார்த்தால் கட்டுகடங்காத கூட்டமும் காவடி ஊர்வலத்தின் ஆரவாரமும், வாய்குள் முனுகுவது போல் கொட்டு அடித்துக் கொண்டு ஆடல் பாடல் என வெகு அமர்களமாக காவடிகள் சென்று கொண்டிருந்தது, சிறிது நேரம் பார்வையிட்டுவிட்டு வந்த வேலையை முடிக்க கறிகாய்களை வாங்கிவிட்டு காவடி செல்லும் திசையை குறுக்காக அடைந்து குட்டி இந்தியா பகுதிக்குள் சென்று விட்டேன், சாலையை முற்றிலும் முடக்காமல் ஒருபக்கம் தடுப்பு அமைத்து காவடிகளுக்கு வழிவிட்டு ஆங்காங்கே தற்காலிக காவலர்களை நிற்க வைத்து பார்வையாளர்களும், பொருள் வாங்க வந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை சந்திப்புகளுக்காக குட்டி இந்தியாவில் கூடியவர்களும் சாலையைக் கடக்க ஏற்பாடு செய்திருந்தனர், அப்படியே சாலையைக் கடந்துவிடலாம் என்று ஒரு அதற்கான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன், காவடிகள் சென்று கொண்டு இருந்தன, 

ஒவ்வொரு காவடியுடனும் எடுப்பவர்களின் உறவினர் நண்பர்கள் என ஒரு 20 பேராவது உடன் செல்வார்கள்  அவர்களில் சிலர் ஆடியும் பாடியும்,  விசிலடித்தும் செல்வார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காவடியுடன் வந்த காவடி எடுப்பவரின் உறவுக்காரரான நடுத்தரவயது பெண், தற்காலிக பாதுகாவலுக்கு இருக்கும் ஒரு பணியாளரிடம் (அவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்று பார்ததும் தெரிவதால்) நீ போக்குவரத்தை ஒழுங்கு செய்யாமல் காவடி எடுப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் நான் 'கொம்ப்ளய்ண்ட்' பண்ணிடுவேன் என்று மிரட்டல் தொணியில் இரண்டு முறை சொன்னார்,  நீல சீருடை அணிந்த சிங்கப்பூர் காவலர்களிடம் இதுபோல் இந்தம்மா பேசுமா ? எளக்காரம் தானே என்று எரிச்சலாக நினைத்தேன்,  அந்த பெண்ணும் அந்த காவடியும் நகர்ந்த உடன் அந்த  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியாளர் என்னைப் பார்த்து சிரித்தார் , நானும் சிரித்தேன், அருகில் இருந்த மற்றொருவர் 'எல்லாம் நம்ம நேரம்' என்றார். சிரித்தேன், ஆனால் இன்னொருவன் இன்னொன்னு சொன்னான் பாருங்க......

'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......'  அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.

'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?

உயர் கல்வி, நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்று தன்னைப் பற்றி எந்த ஒரு உயர்ந்த நிலையையும் இல்லாத ஒரு நபர் கூட ஒருவரை தாழ்த்த அல்லது ஒருவரை கேவலப்படுத்த சாதியென்னும் ஆயுதத்தை எடுத்து வீசுகிறாகளே ? நாம் பிறந்த நாட்டைப் பற்றி நாம் என்ன தான் பெருமை பேசினாலும் அவை வீண் பெருமை தான் என்றாகிறது.

சிங்கப்பூர் இந்தியர்களால் எள்ளலாகச் சொல்லப்படும் "ஊர்காரன்" மட்டுமல்ல, தமிழகத்தில் பிச்சைக்காரன் கூட உயர்ந்த பதவியில் உள்ள பறையர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை 'போடாப் பறப்பயலே' என்று தூற்றி கூணிக் குறுக வைக்க முடியும்...........இந்த நிலை நாடுகளை தாண்டியும் நம்மவர் இடையே உள்ளது,. தமிழன் முன்னேறாமலும் உலகினருக்கு சான்றாக இல்லாததற்குக் காரணம் அவனவனிடம் உள்ள எல்லைகளற்ற, காலத்தால் அழியாத சாதிப்பற்றும், சாதிவெறியுமே யாகும்.

19 ஜனவரி, 2013

சவுதி உதவியை ஏற்க மறுத்த ரிஷானாவின் தாயார் !


உலக நாடுகளின் உருக்கமான வேண்டுகோலை புறக்கணித்து அல்லாவின் ஷரியத்தை நிலை நாட்ட சவுதியில் தலை துண்டிக்கப்பட்ட மும்மின் இளம் பணிப்பெண் ரிஷானா (4 மாதக் குழந்தையைக் கொன்றதாக சொல்லிய கொலை குற்றச் சாட்டின் போது அப்பெண்ணுக்கு 17 வயது தனாம்) பெண்ணின் தாயார் சையது ஃபரீனா சவுதி அரசு சார்பில் இரக்க மனப்பான்மையுடன் அள்ளிக் கொடுத்த 20 லட்சம் இலங்கைப் பணத்திற்கு நிகரான ரியாலை வாங்க மறுத்து சவுதிகளும், சவுதி அரேபியாவும் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

தங்கள் மகள் செய்தது கொலை என்றும் அல்லாவின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்தப் பெண்ணின் தாயார் கூறி இருந்தார் எனவே சரியத் சட்டம் சரியே எல்லாம் முறைப்படி நடக்கிறது, சவுதியோ, ஷரியத் சட்டமோ தவறிழைக்கக் கூடியதில்லை, இதை சாக்கிட்டு வஹாபிய எதிரிகள் சவுதி மீதும், ஷரியத் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் என்று சுவனப்புகழ் சுவனப்பிரியன் மற்றும் அவரது சகாக்கள் நடக்கப் போகும், நடந்த நிகழ்வுக்கு கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் அல்லா அந்த பெண்ணுக்கு நற்கூலி தர பிராத்திக்கிறோம் என்று முடித்துக் கொண்டனர். ஒரு மும்மினுக்கு (அல்லா மற்றும் இறுதி இறைத்தூதர் முகமது மீதான நம்பிக்கையாளர்)  மும்மின்கள் கொடுக்கும் தண்டனையை மும்மீன்கள் ஏற்கிறோம் காஃபீர் உங்களுக்கு என்னைய்யா கொடச்சல் ? என்று இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. 

தாங்கள் சார்ந்த மதக் கொள்கையை எதிர்த்து எதுவும் பேச இயலாத நிலையில் கையறு நிலையில் அந்தத் தாயார் ஷரியத் சட்டத்தின் தண்டனையை ஏற்பபதாக கூறி இருந்தார் என்பது சவுதியின் பண உதவியை புறக்கணித்ததில் இருந்து தெரிகிறது, மகளை அனுப்பியது வீட்டு வேலைக்கு  இதுல ரோசத்திற்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று அந்த தாயாரை இவர்கள் தூற்றாமல் இருந்தால் பெரிது.

சவுதிக்கு வேலைக்கு செல்லும் அப்பாவிகள் சவுதியில் முறையான விசாரணை இன்றி சிறை தண்டனை அனுபவிக்கின்றனர் என்பதை நண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் சக தமிழனை காப்பாற உதவுங்கள்" என்று ஒப்புதல் வாக்குமூலமாக முன்பு இறைஞ்சி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே சவுதியில் சிறைகள் கூட குளிர்சாதன அறைகள் , பாலைவன சொர்கம் அங்கு தண்டனைக்கு சொல்லக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் சொல்லமாட்டார் என்று நம்புவோம்.

நான்கே மாதமான  பச்சிளம் குழந்தையின் மூச்சு திண்றல் மரணத்திற்கு காரணம் என்று நம்பப்படும் குற்றவாளி பெண் இதுவரை அனுபவித்த, ஐந்து ஆண்டுகள் தண்டனை போதாது குற்றவாளியின் தலை வாளால் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று தங்கள் குழந்தையின் மீதான பாசத்தை மறக்க இயலாத அளவுக்கு வெறுப்பும், பழிவாங்கும் எண்ணம் மாறாமல் இருந்திருக்கும் போது,  மறக்கவே இயலாமலும், ஆற்றாமையாலும் இருக்கும் தாய் தனக்காக உழைக்கச் சென்ற தங்கள் இளம் மகள் கொலை குற்றம் செய்திருக்க வாய்பே இல்லை தெளிவாகக் கூறுகின்றார் , 22 வயதான அவருடைய மகள் சட்டம் என்ற பெயரில் ஊர் கூடி பொது இடத்தில் அநியாயமாக தலை துண்டிக்கப்பட்டதற்கு பணம் கொடுக்கிறேன் என்று முன் வந்தால் ஏற்றுக் கொள்வாரா ?

மரண தண்டனைகள் கட்டாயம் தேவை தேவை என்று கூறுபவர்களுக்கும், மரண தண்டனைகள் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இரக்க மனம் வாய்க்க வாய்ப்பே இல்லை என்பதை அந்த குழந்தையின் பெற்றோர்களும் நிருபனம் செய்துள்ளனர்.

இணைப்பு : Executed Sri Lankan maid's mother refuses Saudi money



13 ஜனவரி, 2013

அறச்சீற்றம் !


பொதுவாகவே சிங்கப்பூர் வாழ்மக்கள் தங்களிடையே சிங்கப்பூரில் வரிசையில் நிற்பதில் பாதி வாழ்கைப் போய்விடும் என்று சொல்லுவார்கள். உண்மை தான், இங்கு வரிசையில் நிற்பதில் ஒழுங்கு கடைபிடிக்கப்படும், சின்ன நாடாக இருந்தாலும் மக்கள் நெருக்கம் உள்ள நாடு, வரிசை முறை இல்லை என்றால் எங்கும் சச்சரவுகள் ஏற்பட்டுவிடும், மற்றவர்கள் நேரத்தில் நாம் கைவைக்கக் கூடாது என்பதால் எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டுமோ, அங்கெல்லாம் வரிசை உருவாகும், புது  ஐபேசி (ஐபோன்) வெளியிட்டால் முதல் நாள் இரவே போய் நிற்க துவங்கிவிடுவார்கள், 24 மணி நேரம் கூட வரிசையில் நிற்பதை நேரவிரயம் என்று நினைக்க மாட்டார்கள், தமக்கு ஒரு பொருள் வேண்டி இருக்கிறதென்றால் அதற்காக வரிசையில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால் நிற்பார்கள். புதுவீடுகள் விற்பனைக்கு விடும் போது வரிசையில் நிற்பதற்கே கல்லூரி மாணவர்கள் அதை பகுதி நேர வேலையாக எடுத்துக் கொண்டு, வரிசையில் நிற்பதற்காக பணம் பெற்றுக் கொண்டு (டோக்கன்) வாங்குபவர்கள் சார்பில் நிற்பார்கள். 24 மணி நேரம் வரிசையில் நிற்க இவ்வளவு கூலி என்று மணிக் கணக்குகளை வைத்து வரிசையில் நிற்பதும் இங்கு தொழிலாகத்தான் நடக்கிறது. 

வரிசை முறைகளை சீர்குழைக்கக் கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளாக கூலிக்கு ஆள் அமர்த்தி வரிசையில் நிறுத்திக் கொள்வது இங்கு தவறாகப் பார்க்கப் படுவது இல்லை, ஒருவர் வரிசையில் நிற்பதால் இழக்கும் பணம் அவர் சார்பில் நிற்பவருக்கு சொற்பக் கூலி தான். பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் / தமிழகத்தில் இருந்து இதைப் படிப்பவர்களுக்கு வரிசை முறைக்கு ஏன் சிங்கப்பூரில் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை மேலே புரிய வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். முறைப்படி வருபவர்களுக்கு முன் உரிமை இங்கு அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் ஒன்று தான், இங்கு யாரும் குறுக்கே சென்றோ, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் குறுக்கு வழியில் நுழையவோ முயற்சிக்க மாட்டார்கள். சிங்கப்பூர் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்பாட நான் இதை எழுதுவில்லை, அப்படி உங்களுக்கு புரிந்தாலும் தப்பு இல்லை, கடந்த 15 ஆண்டுகளாக எனக்கும் என் இல்லத்திற்கும் சோறு போடும் நாடு, என்பதால் நீங்கள் எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு சரி தான், நான் சொல்ல வந்தது பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.


*******

நாளை பொங்கலை ஒட்டி சிங்கப்பூர் குட்டி இந்தியாவில் கொள்ளை கும்பல் (நான் விற்பனையாளர்களைச் சொல்லவில்லை, பண்டிகை நாளில் விலை ஏற்றி விற்பது பொதுவானதே)  அதாவது மக்கள் கூட்டம் மிகுதி, சிங்கப்பூரில் ஆகப் பெரிய விற்பனை வளாகமான முஸ்தபா நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம், நான் இரண்டு பொருள்கள் வாங்குவதற்குத்தான் சென்றேன், வேறு கடைகளில் கிடைக்கும் என்றாலும் அந்த இரண்டு பொருள்களும் இருவேறு கடைகளில் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், முஸ்தபா அருகில் பேருந்தில் இறங்கியதால் முஸ்தபாவிலேயே வாங்கலாம் என்று நுழைந்தேன், வாங்கிவிட்டு பணம் செலுத்தச் சென்றால் ஒவ்வொரு தளத்திலும் பணம் செலுத்தும் இடத்திலும் குட்டி ரயில் போன்று நீண்ட வரிசை, கடைசியாக மேலே கீழே இறங்கி ஒரு இடத்தில் வெறும் 10 பேர் தான் வரிசையில் நின்று இருந்தார்கள் என்பதால் அங்கு நிற்கலாம் என்று முடிவெடுத்து நின்றேன், ஐந்து நிமிடத்தில் எனக்கு முன்பு நின்றவர் பணம் செலுத்தும் இடத்தை அடைந்துவிட்டார், 65 அகவை மதிக்கத்தக்க முதியவர். 

அந்த முதியவர் பணம் செலுத்த பொருள்களை எடுத்து வைக்கும் பொழுது எதிர்பக்கம் பணம் செலுத்தும் இடத்தை நெருங்கி ஒரு வட இந்திய ஆண். அந்த முதியவரை நெருங்கி வேண்டுகோளாக

"Sir Excuse, Only One Item, Can I Proceed ?"

என்று கூற, பெரியவரும் பெருந்தன்மையாக

"No Problem, You Proceed" என்றார்

எனக்கு செம கோபம் தலைக்கு மேல் ஏறியது, அந்த பெரியவரைப் பார்த்து

"You Cannot allow him, You have to consider the Q Behind, You have to ask opinion from all standing behind"

"No, No he is holding only one item tl"

"You...see I also having just  two item, do you appreciate if I try to skip the Q because of less no. of item ?"

அவரும் எதும் பேசவில்லை, மெளனமாக இருந்தார், இந்த இடைவெளியில் அந்த வட இந்திய ஆண் இதைப் பொருட்படுத்தாமல் பொருளுக்கு பணம் செலுத்திவிட்டு அந்த பெரியவருக்கு ஆங்கிலத்தில் "Thank You, Thank You" என்று சொல்லிவிட்டு போய்விட்டார், என்னிடம் முறைப்புக் காட்டவில்லை, எனக்கும் பிரச்சனை வட இந்திய ஆடவன் இல்லை, இந்த பெரியவர் தான் என்பதில் தெளிவாக இருந்ததால் நான் வட இந்தியனிடம் வலுக்கட்டாயமாக மல்லு கட்டவும் விரும்பவில்லை, பெரியவரும் எதுவும் அதற்கு மேல் பேச வழி இல்லாததால் அடுத்து அவருடைய பொருளை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்ததாக பணம் வாங்கும் காசாளரிடம்

"How come you allow him to pay, Are we all standing here for time pass ?"

"No,  Since the person in front of you allow him, I decide to accept this"

"You know....here lots of quarreling .. I am arguing with him, you don't consider people standing in the Q opposing this  nuisance, What Kind of Service this ?, if the person is very old or having children, or pregnant women or injured person no one care about skipping the Q right......"

அந்த காசாளர் பொண்ணும் எதுவும் பேசவில்லை, அதற்கு மேல் ஏதேனும் பேசினால் நானும் நிறுவனத்தில் முறையிடலாம் என்றே இருந்தேன், எனக்கு பின்னால் நின்றவர்கள் யாரும் வாயைத் திறக்க வில்லை, நான் சொன்னவற்றையெல்லாம் அமோதிக்கும் படி அமைதியாகத்தான் இருந்தார்கள்.

********

பெரியவர் பெரும்தன்மையாகத் தானே நடந்து கொண்டார், இதையேன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கலாம், பெரியவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அவர்களிடையேயும் அதையே சொல்லி இருப்பேன், பெரும் தன்மையாக நடக்கிறேன் என்று தன்னைத் தானே மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் குறிப்பிட்ட சூழலில் பாதிப்பு அடைபவர் தாம் மட்டும் தானா என்று சிந்திக்கவும் வேண்டும்,  உண்மையிலேயே இந்த சூழலில் பெருந்தன்மையாக நான் நடக்க விரும்பினால் பின்னால் உள்ளவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம், அவர்களின் விருப்பமும் எனக்கு தேவை இல்லை என்று நினைத்தால் முன்னால் உள்ளவரை வாங்க அனுமதித்துவிட்டு நான் வரிசையின் கடைசியில் போய் நின்று கொள்வேன். இங்கு விட்டுக் கொடுப்பது, பெரும்தன்மையாக நடப்பது என்பது தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுப்பது தான், தமக்கு பின்னால் உள்ளவர்களும் பாதிப்படையமாட்டார்கள், எரிச்சல் அடையமாட்டார்கள்.

பொதுவாகவே வட இந்தியர்களில் பலருக்கு இவ்வாறு வரிசையில் நிற்பது ஒழுங்குகளை கடைபிடிப்பதெல்லாம் பிடிக்காது, ஆஸ்திரேலியாவில் அடிக்கடி உதை வாங்குவது கூட இவர்களின் இந்த ஈனத்தனமான நடவடிக்கைகளினால் என்றே நினைக்கிறேன்.

திருட்டு லட்டும் (நகை) சுவை தான் !

மழைக்கு திரையரங்கம் பக்கம் ஒதுங்கிப் பார்த்தப் படம், மாலை 5.30 மணிக்கு நல்ல மழை, தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மழையோ மழை, மழை விடும் வரை என்ன செய்வது ? அடுக்குமாடி குடியிருப்புகளுனூடாக நுழைந்து சாலையைக் கடக்கும் போது மட்டும் கொஞ்சம் மழையில் நனைந்தால் கோல்டன் சுல்தான் திரையரங்கை அடைந்துவிடலாம், சரி போய் தான் பார்ப்போமே ஆனால் என்ன படம் பார்ப்பது ? அங்கு மேல் கிழ் என இரு திரையரங்குகள், பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவார்கள், அலெக்ஸ் பாண்டியனும், கண்ணா லட்டு திண்ண ஆசையா ? ஓடியன. அலெக்ஸ்பாண்டியன் பார்த்துவிட்டு காய்சல் கண்டு கேபிள் சங்கரும், மூனா செந்திலும்  முனுகலாக எழுதிய பதிவுகளைப் படித்தது, அலெக்ஸ் பாண்டியனுக்கு நான் பலியாக விரும்பவில்லை, ஏற்கனவே மூன்று நாளாக காய்சல், இன்று தான் குறைந்திருந்தது, விஷப்பரிட்சை வேண்டாமே ? எனவே சந்தானம், பவர் ஸ்டார் நடித்த லட்டு தின்ன ஆசையா ? படத்தைத் தேர்வு செய்தேன், 13 வெள்ளி கட்டணம், (13 X 43 ரூ), ஆங்கிலப்படங்களைவிட இங்கு தமிழ் படங்களுக்கு கட்டணம் கூடுதலாக வாங்குகிறார்கள், பார்க்க வாய்ப்பு என்ற அளவில் கொடுக்க வேண்டித்தான் இருக்கிறது.

திரையரங்கில் திரளாக மக்கள் குவிந்திருப்பார்களோ....என்றெல்லாம் கற்பனை செய்வதில்லை, ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்கள் தவிர்த்து படங்கள் பற்றிய நல்ல விமர்சனம் வராத வரை மக்கள் திரையரங்கிற்குள் எட்டிப்பார்த்து கை சுட்டடுக் கொள்ள விரும்புவதில்லை, மொத்தமாக 50 பேர்கள் தான் இருந்தார்கள், 500 பேர் வரை பார்க்கக் கூடிய பெரிய அரங்கு. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்று எழுத்தைப் பார்த்ததும் 50 பேரில் 40 பேர்கள் ஆரவாரம் செய்தார்கள், இது வரை லத்திகா என்ற பெயரைக் கேள்விப்படாதவர்கள் கூட பவருக்கு ரசிகர் ஆகி இருக்கிறார்கள், பவரு கோபிநாத்திற்கு நன்றி சொல்லலாம். ஆஹா பவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பது  திரைப்படத்தின் பங்குபெற்றவர்களின் பெயர்களைப் போடும் போதே தெரிந்துவிட்டது, தமிழ் திரையில் கதைக்கும் சதைக்கும் பஞ்சம் என்றால் பழையப் படம், ஆங்கிலப் படம் மற்றும் பாம்பே பக்கம் சென்றுவிடுவார்கள், இந்த முறை இந்தியாவின் மிகசிறந்த திரைகதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனரான பாக்கியராஜின் இன்று போய் நாளைவா கதையையே சுட்டு கிட்டதட்ட மறு ஆக்கம் என்ற அளவில் எடுத்திருக்கிறார்கள், திருட்டு விசிடிபார்த்தால் பொங்கும் திரையுலகம், சக இயக்குனரிடமே அனுமதி பெறாமல் படம் எடுத்திருப்பதும்  'சினிமா பொழைப்பு' என்ற ஒற்றைச் சொல்லில் பல பொருள்களை வைத்து நாம் சொல்லிவிடலாம். 

மூன்று நண்பர்களாக சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் ஒரு புதுமுக நடிகர் சேது, புதுமுகங்கள் காமடிப்படங்களில் அறிமுகம் ஆகும் பொழுது அவர்களுடைய நடிப்பைக் குறைச் சொல்ல வாய்ப்பில்லை என்ற அளவுக்கு நகைச்சுவைக்காட்சிகள் அவற்றை சரி செய்துவிடும், புதுமுக நடிகருக்கு இது + தான். சேது சாயலில் சற்று ஶ்ரீகாந்தை நினைவுபடுத்துகிறார். சேது விளம்பர மாடலாக நடிப்பவர், சந்தானம் கல்யாணம் முதல் கருமாதி வரை ஆல் இன் ஆல் தொழில் செய்து KK என்று பெயரில் இருப்பார், மூன்றாவதாக பணக்கார கிழைஞன் பவர் என்ற பெயரிலேயே வருகிறார், இவர்கள் மூவரும் சேர்ந்தால் தண்ணியடிப்பது இளைஞிகளை பின்தொடர்வது என்பதாக் இருக்க, இடையில் சேதுவீட்டுக்கு எதிரே வரும் விஷாகா என்ற புதுமுகம் கதைக்குள் வரும் பொழுது மூவருக்கும் விஷாவை காதலியாக அடைவது பற்றி போட்டி ஏற்பட்டு ஆளுக்கு ஆள் ஒவ்வொரு விதத்தில் விஷாகாவின் வீட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள், மிச்சசொச்சமெல்லாம் இன்று போய் நாளைவா பாணி தான். படம் முழுக்க கோவை சரளா, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் இவர்களுடன் நடன இயக்குனர் சிவசங்கர்.

படம் கலகலப்பாகப் போகிறது, வலைப்பதிவில் பவர் ஸ்டார் கலாய்க்கப்படுவதைவிட பலமடங்கு படத்தில் சந்தானத்தால் பவரின் பல், விக்கு, தொப்பை, எடை ஆகியவற்றை நக்கல் அடித்து கலாய்க்கப்படுகிறார்,  சென்னை மொழி வழக்கில் பேசும் இளம் கவுண்டமணி என்பதைத் தவிர சந்தானத்தின் காமடிகள் என்னைப் பெரிதாக ஈர்பதில்லை, கவுண்டமணியின் காலி இடத்தில் நிற்கிறார், கவுண்மணியைப் போன்று உருவங்களைக் கிண்டல் செய்து பேசுவது, நக்கல் அடிப்பது, எல்லாம் கவுண்டமணி பாணிதான், இதுவரை மக்கள் திரையுலகில் நகல்களை ஏற்றுக் கொண்டதில்லை என்பதில் சந்தானம் விதிவிலக்காக இருக்கிறார், அதற்குக் காரணம் கவண்டமணியின் பாதிப்புகள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு தேவைபடுவதாக இருக்கிறது, அதை கவுண்டமணி ஏற்படுத்திவிட்டிருக்கிறார், அவை சந்தானத்தால் நிரப்பப்படுகிறது என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் என்னால் நினைக்க முடியவில்லை,

படத்தில் சந்தானம் பாட்டுக் கற்றுக் கொள்வது, பவர் பரதம் கற்றுக் கொள்வது எல்லாம் நகைச்சுவை சரவெடிகள், பழைய படக்கதை சுட்டு எடுத்திருப்பது போல் பழையைப்பாடல்கள் ரீமிக்ஸாக வருகிறது, படம் துவங்கியது முதல் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு பாடல் என்று வருகிறது, கடைசி 45 நிமிடம் பாடல்கள் இல்லை, பாடல்காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக எடுத்திருப்பதால் எழுந்து போகும் அளவுக்கு இல்லை, சிம்பு சிம்புவாகவே சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார், அவருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். காட்சித் துவக்கத்தில் குத்துவிளக்காக அறிமுகப்படுத்தப்படும் நாயகி அடுத்தப் பாடல்காட்சியில் அனுஷ்கா அளவுக்கு ஆடைகளைக் குறைத்துக் கொண்டார்.

இராமநாரயணன் தயாரிப்பு என்பதால் விரக தாபத்தில் ஒரு துணை நடிகை அம்மனாக (எழுத்துப் பிழையோ என்று நினைக்காதீர்கள்) காட்சியில் மூவரையும் பார்த்து உருக, அது கனவு காட்சியாகவும் அவர் எதிரே நிற்கும் பெண் காவலாளி என்றும் காட்டப்படுகிறது, அம்மன் கதைகளாக எடுத்து பிழைப்பு நடத்தியவர், இத்தகைய காட்சியை படத்தில் வைத்திருப்பதைப் பார்க்கும் பொழுது 'சினிமா பிழைப்பு' என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல ?

ஆத்துல ஆத்துக்காரெல்லாம் அவிச்ச முட்டை மற்றும் ஆம்ப்ளேட் சாப்பிடுவா.......என்பதை தேவ தர்ஷினி மூலம் ஒரு காட்சியாக வைத்திருக்கிறார்கள், படம் போரடிக்கவில்லை, படம் முழுவதும் வசனங்கள் கொஞ்சம் காதுவலியாக இருக்கிறது, பவர் ஸ்டாரின் அண்ணன் மற்றும் அப்பா ஆகிய இருவராக வருபவர்களில் லூட்டிகள் ரசிக்க முடிந்தது, பவர் ஸ்டாரில் உண்மையான சுய விளம்பர தட்டிகள் போன்றே படத்திலும் பவரின் பிறந்த நாள் தட்டிகளெல்லாம் வந்திருப்பதால் படத்தில் பவர் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், பவர் ஸ்டார் படத்தில் பேசும் பஞ்சு வசனம் சிலரை பார்த்தால் தான் பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும் என்னையெல்லாம் பார்க்காமலேயே பிடிக்கும். உண்மை தான்.

இயக்குனர், படப்பிடிப்பு, பாடியவர்கள், இசை அமைத்தவர்கள்  இவர்களெல்லாம் யார் யார் என்று கண் கொட்டாமல் திரையைப் பார்த்து தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை, சுட்டக் கதைக்கு இவையெல்லாம் முக்கியமா என்ன ?

பவர் ஸ்டார் கலக்கிபுட்டப்படி

கண்ணா லட்டு தின்ன ஆசையா ? திருட்டு லட்டு !............திருட்டு மாங்காயின் சுவை

6 ஜனவரி, 2013

ஆண்கள் குற்றவாளிகளா ? சந்தர்பவாதிகளா ?


இந்தியாவில் இதுவரை பாலியல் வன்கொடுமைகள் எதுவும் நடக்காதது போலவும் இதுவே முதன் முறையாக நடந்தது போலவும் இவை இனி கிள்ளி எரியப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியர்களும் அதே பேச்சாக போராட்டமாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசுகிறார்கள், கொதிக்கிறார்கள், ஓடும் ரயில்களில் பெண்களை மானபங்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது, அவைகளை அன்றாடச் செய்திகள் ஆகிவிடுவதைத் தவிர அவைகளை தடுத்து நிறுத்த அரசுகள் எந்த முயற்சி எடுத்தன ? டெல்லி நிகழ்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு ? காரணம் தலைநகரில் நடந்தது என்பது தவிர்த்து வேறு என்ன ? ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்சனை தலைநகரிலேயே இவ்வாறு நடந்துவிட்டதே ? தலைகுனிவு என்று தூற்றக் கூடும் என்ற அச்சம, எதிர்கட்சிகளுக்கு தலைநகரில் இவ்வாறு நடந்ததால் ஆளும் கட்சி சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற குற்றச் சாட்டைப் பெரிதாக்க முடியும், என்பது தவிர்த்து பாதிக்கப்பட்டவர் குறித்த உண்மையான அக்கரையில் அவர்கள் செயல்படுகிறார்களா ? என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்று நாம் கூற முடியும் காரணம், பாஜாக உள்ளிட்டவர்களின் கருத்து பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக பெண்களின் உடை குறித்த கருத்து விமர்சனங்கள் வெளி இடப்படுகின்றன, கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகள் தண்டனைக்குறியவர்கள், என்ன விதமான தண்டனை என்பதை பாதிக்கப்பட்டரின் குடும்பத்தாரும் குற்றவியல் சட்ட சாசனங்களும் முடிவு செய்யட்டும் என்பது தவிர்த்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதிற்கும் குறைந்தவன் என்பதால் அவனை முழுமையாக தண்டிக்கும் விதத்தில் சட்ட வரையறைகளில் சிறுவர் குற்ற வயதைக் 16 ஆகக் குறைக்க சட்டவல்லுனர்கள் மற்றும் ஆலோசனைக் குழு ஒட்டுமொத்தமாக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பருவ வயது என்பது பருவமடைந்த வயதல்ல, மனப் பக்குவம் அடையும் வயது என்ற அடிப்படையில் தான் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறுவர் சிறுமியர் என்ற வரையறையில் வைத்து அவர்களில் குற்றவாளிகளை சிறுவர் தண்டனைச் சட்டங்களில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கிறார்கள், இந்த வரையறையை 16 ஆகக் குறைப்பதன் மூலம் முன்தேதியிட்ட சட்டத்திருத்தம் என்று அடிப்படையில் அந்த குற்றவாளியை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் 16 வயது என்கிற வரையறையைக் கொண்டு வருவதன் மூலம் திருமணச் சட்டத்தில் பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருப்பதை இவர்கள் குறைப்பார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே சிறுமிகளையும் இளம் வயது திருமணங்களையும் ஆதரிக்கக் துடிக்கும் மதவாத அமைப்புகளுக்கு இத்தகைய சட்டங்கள் ஆதரவாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடலாம், இன்றைய திருமணங்கள் பொருளாதார தன்னிறைவு என்கிற அடிப்படையில் தான் ஆண் பெண் இருவரும் திருமணத்திற்கு தயாராகும் நிலை, ஆனால் இத்தகைய சட்ட வகைகள் திருமணம் என்பது பருவயதினால் முடிவு செய்யக் கூடியவை என்ற நிலைக்கு வரும் பொழுது, இளம் வயது திருமணங்கள் இன்றைய பொருளாதார போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைவுறும் வாய்ப்பு அதிகமாகும், போதிய பொருளாதாரமின்றிய திருமணங்கள் நிலைக்கமல் போகவும் கள்ள உறவுகள், மனமுறிவுகள் பெருகவும் வாய்பளிக்குமே அன்றி பெரிதாக சமூகத்திற்கு பலன் அளிக்காது. தவிர 18 வயதிற்கு குறைந்தோர் தற்பொழுது வேலை செய்யத் தடையும் உள்ளது, ஏற்கனவே 18 வயதிற்குட்பட்டோரை 19 வயதானவர் என்று வேலைக்கு வைத்துக் கொள்ளும் 5 மாடி ஜவுளி ஸ்டோர்கள் இனி 12 வயதான சிறுவனைக் கூட 16 வயது நிரம்பியவன் என்று சொல்லி வேலை வாங்கக் கூடும்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் மதவாதங்களில் காலம் காலமாக பெண் உடையை சமூகத்தை பாதுகாக்கும் போர்வையாக அறிவிக்கும் மதவாதிகள் கருத்து கூறுகிறார்கள், பெண் என்பவளுக்கும் போஸ்ட் மார்டம் செய்யப் பட்ட பிணத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது போல் பெண் உடல் வெள்ளை அல்லது வேறு நிறத்  துணியால் முழுக்கப்  போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்திருந்தால் போதும் என்கிறார்கள், 21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா ? என்பதை நாமே கேட்டுக் கொள்ள வைக்கும் இது போன்றக் கருத்துகளால் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளிகள் அதிகமாகி பெண் என்பவள் போகப் பெருள் என்பதை அழுதமாக பதியவைக்குமேயன்றி, ஆணும் பெண்ணும் மனிதப் பிறவிகளே என்பதை புரிந்து கொண்டு எதிர்பாலினரை மதிக்கும் போக்கு இல்லாமல் உருவாகாமல் போகும். மாற்றுப் பாலினம் என்பது தவிர்த்து ஆண் பெண்ணிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதாக வளர்க்கப்படும் நாடுகளில் பெண்களின் உடையைக் குறித்து ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, உடை என்பது அவரவர் சுதந்திரம் என்பதாகத்தான் நினைக்கிறார்கள், இங்கு சிங்கப்பூரில் பிறந்தது முதல் அரைகால் சட்டையும் ஒரு பணியனும் அணிந்து வேலைக்குப் போகும் தன் அம்மாவைப் பார்த்து வளரும் ஒரு சீன ஆண் பருவ வயதில் அதே போன்ற உடை அணியும் இளம் பெண்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. 

ஒருவரை கைக்குலுக்கவோ, தொட்டுப் பேசவோ குறைந்தப் பட்சம் ஒருமுறையாவது அவரிடம் பழகி இருக்க வேண்டும், இல்லை என்றால் ஒருவர் உடல் மற்றவர் மீது படுவது கூட அருவெறுப்பானது தான், கைகுலுக்குவதற்கே தெரிந்தவராக அல்லது தொடர்பில் வருபவராக இருக்க வேண்டும்  என்ற நிலையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதவரை உரசுவதும் உடலைத் தீண்டுவதும் பாலியல் ரீதியான வன்முறைகள் தான், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளே விரும்பி அனுமதித்தால் அவளைத் தொட முடியும் அதையும் மீறி தொட்டால் அது பாலியல் வன்முறைதான், இதில் உடைகளை எங்கு கொண்டு வந்து இந்த மதவாதிகள் நுழைக்கிறார்கள் என்றே தெரியவில்லை,  மதவாதிகளும் சமூகவாதிகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தவிர்த்து பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதையும் ஆணும் பெண்ணும் சமாமானவர்களே என்பதையும் புரிய வைத்தாலே எந்த ஒருவரையும் யாரும் தொடுவது கூட தவறு என்று நினைப்பார்கள், அது தவிர்த்து இந்த மதவாதிகளில் கருத்து அரைகுறையாக ஆடை அணிபவர்களை ஒருவன் தாம் தண்டனைக்குப் பயப்படாமல் இருந்தால் தொடலாம் வன்முறை செய்யலாம் என்று சொல்லும் அனுமதியாக இருக்கிறது அவர்களது கருத்துகள்.

சமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள், உணர்ச்சி வசப்படும் சமூகம் ஒருவர் அல்லது ஒரு குழு தவறாக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த ஆண்களும் குற்றவாளிகள் என்பது போல் நினைக்கிறார்கள். "Teach your son not to rape Women" இந்த வாசகத்தை தந்தை தாய் இருவரும் படித்திருக்கக் கூடும், இந்த வாசகம் தந்தையை நோக்கி சொல்லப்பட்டதா ? தாயை நோக்கிச் சொல்லப்பட்டதா ? தந்தைகளை நோக்கிச் சொன்னால் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் குற்றவாளி ஆக்கிப் பார்ப்பதாகவும், தாயை நோக்கிச் சொல்லி இருந்தால் ? எந்த ஒரு தாயும் தன் மகனிடம்  உன் விருப்படி நீ ஒரு பெண்ணைக் கெடுக்கலாம் என்று பாடம் நடத்துவதும் இல்லை. என்னைக் கேட்டால் "Dear Religious Leaders Teach your followers not to rape women" என்று சொல்லி இருந்தால்  பெண் உடைபற்றி பேசும் முன் மதவாதி யோசிப்பான்.

இஸ்லாமியவாதிகளா இருந்தாலும் இந்துமதவாதிகளா இருந்தாலும் பெண் உடை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து கொள்கிறார்கள். மதுரை ஆதீனம் சொன்னதில் தவறென்ன ? என்கிற பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். 21  ஆம் நூற்றாண்டில் தான் பெண் தெய்வ சிலைகள் ஜாக்கெட் அணிந்து காணப்படுகின்றன, அதற்கும் முன் கோவில் சிலைகள் பெண் உருவங்கள் திறந்த மார்பில் தான் இருக்கும் இந்த பாரம்பரியத்தில் வந்த இந்து மதவாதிகளும் பெண் உடைதான் ஆண் சமூகத்தின் தவறுக்கு ஊற்றுக் கண் என்று பேச முன்வருவதில் இருந்தே அவர்கள் பெண்களை அடங்கிப் போக வேண்டியவர்கள் என்கிற பிற்போக்கு மற்றும் அடைப்படை மதவாதக் கருத்துகளைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

********

பாதிப்பட்ட பெண் குறித்து பெண் பிள்ளையைப் பெற்றவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், 

"ஓடும் ரயில் பெண்" என்று கூகுளிட்டு தேடிப்பாருங்கள்... இவ்வளவு நாட்கள் அரசியல்வாதிகள், பத்திரிக்கைகாரர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா ? என்று கேட்டுக் கொள்வீர்கள். ஏதோ தனியார் பேருந்து போட்டுனர்களும், ரவுடிகளும் தான் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இல்லை.


1 ஜனவரி, 2013

2012ல் விடுபட்டவை !


நாள்,  கிழமை, ஆண்டு இவைகளில் நல்லது கெட்டது பற்றிய நம்பிக்கை எனக்கு கிடையாது,  என்றாவது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எதாவது கெடுதல் நடந்தால் நடக்க இருந்தவைகளில் ஒன்று இந்த நாளில் / இந்த காலகட்டத்தில் நடந்துவிட்டது என்பது தவிர்த்து குறிப்பிட்ட நாளை / நேரங்களை வெறுக்கும் அளவுக்கு நான் நினைத்துப் பார்ப்பது இல்லை.

சென்ற ஆண்டைப் பொறுத்த அளவில் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு நாடுகடந்து சுற்றுலா சென்று வந்தேன், ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டு என்று சொல்ல முடியும், அதே வேளையில் உடன் பிறந்த தம்பியையும் இழந்திருக்கிறேன், இடையில் வேலை மாற்றம், அதற்கான சூழலும் உருவானது, வேலை மாற்றத்தை தொடர்ந்து பார்த்த வேலைப் போனது என்று நினைத்துப் பார்பதைவிட வேலை மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றே கருதினேன், எந்த ஒரு நிகழ்வும், மகிழ்சியைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும், நிம்மதியை கெடுத்தாலும் இவை நடக்க இருந்த நிகழ்வாக வந்து சென்றது என்பது தவிர்த்து குறிப்பிட்ட கால கட்டத்தை வெறுக்க ஒன்றும் இல்லை என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து.

தம்பியின் மறைவிற்கு முந்தைய வாரத்தில் இருநாள்கள் நண்பர் ஒருவருடன் கோவா சென்று வந்தேன், ஸ்பைஸ் ஜெட் சன் நிதி குடும்பத்தினரின் விமானத்தில் தான் சென்றேன், கட்டணம் ஒன்றும் அவ்வளவு மிகுதி இல்லை, போக வர சென்னை - மும்பை - கோவா - கோவா - மும்பை - சென்னை  நான்கு விமான சேவைகளுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஆகியது, தங்கும் செலவு இருவருக்கும் இரண்டு நாளைக்கு 5 ஆயிரம், பயணச்சீட்டை (eTicket) எடுத்துச் செல்லவில்லை என்றால் பிச்சைக்காரர்களைப் போல் 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டு,  அவர்களே ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து தருகிறார்கள்,  செல்போன் வழியாக உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சலைக் காட்டி eTicket இன்றி Boarding Pass கொடுக்கும் இடம் வரை சமாளித்து வந்தவரிடம் கூட 100 ரூபாய் பிடிங்கிக் கொண்டு தான் Pass கொடுக்கிறார்கள்,  அது எதற்கு என்று தெரியவில்லை,  கோவா பற்றிய தகவல்களை பிறகு நேரம் கிடைத்தால் தனிப்பதிவாக இடுகிறேன். வெட்டியாகப் பொழுது போக்கும் பொழுது மற்றவர்கள் எப்படி நேரம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சிக்குறிய கேள்விகளுள் ஒன்றாக இருக்கும், திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது "நேரமின்மை" குறித்த தெளிவு கிடைத்தது, வலைப்பதிவால் சீரழிஞ்சேன் என்று நான் புலம்புவதோ, புலம்பப் போவதோ  இல்லை, ஏனெனில் என்னுடைய எழுத்தின் வழியாக எனது எண்ணங்களைப் புரிந்தோர்  அவர்களாகவே விரும்பி நண்பர்களாக அறிமுகம் செய்து, நட்பைத் தொடரும் வாய்ப்புகள் வலைப்பதிவு வழியாகத் தான் கிடைத்தது.



கோவாவில் இருந்து சென்னையில் இறங்கி பின் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மதுரைக்கு ரயிலில் இரவுப் பயணமாகப் புறப்பட்டு முன்னாள் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றேன், மிகவும் நெருக்கமானவராக இருந்து பின்னர் தொடர்பு வசதி இன்மையால் 16 ஆண்டுகள் தொடர்பில்லாமல் சென்றவர்களில் அவரும் ஒருவர், எதற்கும் அவர் வேலை செய்த அலுவலத்தில் தான் தொடர்ந்து பணியில் இருப்பாரோ என்று மின் அஞ்சல் செய்து பார்க்க, மதுரைக் கிளையில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர், பின்னர் தொடர்பு கொண்டு அலைபேசி எண் பெற்று, சென்னை வரும் பொழுது சந்திப்பாகதாகக் கூறி, பின்னர் மதுரையிலேயே சந்திக்க முடிவு செய்து அவரை சந்தித்தேன்.

மனிதர்களுக்கு 20 - 25 வயதில் என்னமாதிரியான மனநிலை வாய்க்கிறதோ, அதுவே தான் காலம் முழுவதும் இருக்கும் என்றே நினைக்கிறேன், ஆண்டுக் கணக்கை தாண்டிய பழக்க வழக்கங்கள் இதை மெய்பிக்கின்றன, வயதின் வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு அனுபவம் ஓரளவு முடிவுகளை எடுப்பதற்கும், முன்கூட்டிய திட்டமிடலுக்கும் பயன்படுமேயன்றி, 20 வயதில் உருவான உலகம், நட்பு, சமூக எண்ணங்கள்,  தன்னைப் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றைக் குறித்த எண்ணங்களை வயதின் ஏற்றம் மாற்றிவிடாது, நண்பரைப் பார்த்த பொழுது கடந்து போன 16 ஆண்டுகள் சுருங்கி இருந்தது, எனக்கும் அவனுக்கும் முந்தைய பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியை காண முடிந்தது, தோற்றங்கள் கொஞ்சம் மாறி இருந்ததால் ஏற்பட்ட மனத் தடுமாற்றத்தில் "நீ" என்பதை "நீங்கள்" என்று பேசத் துவங்கும் பொழுதே தடுத்தேன் "என்னடா ஆச்சு உனக்கு ?" "வா போ என்றே பேசுடா" என்று சொன்னதைக் கேட்டு சிரித்து உடனே மாறிக் கொண்டான்' 

மதுரையில் ஒரு பகல் பொழுது தங்கி இருந்தேன், மூன்று வலைப்பதிவு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, ஒருவர் பேராசியர் தருமி, மற்றவர் உங்கள் சிலருக்கு அறிமுகமானவர் Consent to be......nothing! என்ற வலைப்பதிவில் எழுதும் திரு கிருஷ்ண மூர்த்தி, மற்றொரு வலைப்பதிவர் (தற்பொழுது பெயர் நினைவில்லை). தருமியை பலமுறை சந்தித்திருந்தாலும் கிருஷ்ண மூர்த்தியை சந்தித்தது முதல் முறை, சென்ற முறை மதுரை சென்ற பொழுது பார்க்க வாப்பில்லாமல் திரும்பிவிட்டேன் என்று வருத்தம் அடைந்திருந்தார், அதனால் இந்த முறை மதுரைக்கு சென்ற பொழுது அவரையும் பார்த்து வந்தேன், 


பிறகு மதுரையில் இருந்து இரவு புறப்பட்டு கோவை சென்று அங்கொரு நாள் பகல் பொழுது, நான் புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து கிளம்பிய எனது மதுரை நண்பரும், சென்னை நண்பரும் கோவையில் சந்திப்பது என்பது ஏற்பாடு, என்னுடைய சென்னை நண்பரும் மதுரை நண்பரைப் பார்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, மூவரும் பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக சந்தித்தது மற்றற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கியது, இடையில் பகல் பொழுதில் நம்ம ஜோதியர் இல்லம் ஜோதிஜி மற்றும் என்னுடன் நான்கு ஆண்டுகளாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் அறிவே தெய்வம் சிவா ஆகிய இருவரையும் பார்க்க திருப்பூர் வருவதாகக் கூறி இருந்தேன், அவர்களும் காத்திருந்தனர், இடையில் திட்டமிட்ட நேரம் தவற, திருப்பூருக்கும், கோவைக்கும் இடைப்பட்ட இடமான அவிஞாசிக்கு வரச் சொன்னார்கள், சாலை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் தொடர்பில் பேருந்து ஊர்த்து செல்ல மதியம் மூன்று மணிக்குத் தான் அவினாசிக்குச் சென்றேன். 

அதுவரை சாப்பிடாமல் இருவரும் காத்திருந்தனர், பார்த்ததும் தழுவல்களுடன் பலநாள் பழகியவர்களைப் போல் எந்த வித மனத்தடங்களும் இன்றி பேசிக் கொண்டே ஒரு மூன்று நட்சத்திர உணவகத்திற்குச் சென்று தாமே எடுத்து உண்ணும் (பபே) உணவுக்கு அழைத்துச் சென்றனர், ஏற்கனவே பகல் 12 மணிக்கு ஸ்வாமி ஓம்காருடன் கொஞ்சம் வயிற்றை நிரப்பி இருந்ததால், அந்த உணவை சற்று திணறியே உண்டேன், அவர்களும் அப்படியே, நேரம் தப்பிய சாப்பாடு விரும்பிச் சாப்பிட முடியாது அல்லவா ?  நட்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்த உணவுக்கு செலவளிக்கும் பணம் பயன்படும் என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் நெடும் தொலைவில் இருந்து அவர்களைப் பார்க்க வந்தேன், எனக்கு என்ன சிறப்பாக செய்துவிடமுடியும் ? என்ற அவர்களின் கேள்விக்கு அதிக நேரம் செலவழித்து பதில் தேடாத விடையாக பபே உணவு, மற்றபடி ஏன் பணத்தை இப்படி விடுதிக்காரனிடம் வீணடிக்கிறீர்கள்  ? என்று நாகரீகமும் புரிந்துணர்வும் இல்லாமல் கேட்கக் கூடாது என்பதால் அதை நண்பர்களின் உபசரிப்பு என்றே கொண்டேன்.

ஜோதிஜி நினைத்த அளவுக்கெல்லாம் ஒல்லிக் குச்சியாக இல்லை, ஓரளவு பணக்கார களையோடு தான் இருந்தார், மாறாக சிவா நினைத்த அளவுக்கே புகைப்படத்தில் பார்த்தது போல் இருந்தார், நிறைய பேசினோம், 

கோவையில் இருந்து நாகை திரும்பும் போது கோவை தனியார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இரவில் மின்சாரம் இல்லாததால் ஒரு பயணி நகரும் பேருந்தின் முன் சக்கரத்தில் காலைவிட்டு பாதத்தை இழந்தார், அவருடைய கதறல், சுற்றி இருந்தவர்களின் உடனடியான செயல்பாடுகள், அடுத்த ஐந்து நிமிடத்து 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது, மின்சாரம் இன்மையின் கொடுமைகளில் ஒன்றாக இதுவும் நடந்தது, கருணாநிதியின் ஒரு சில திட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு நன்றாகவே பயன்படுகிறது, ஜெ - தன் ஈகோவை மீறி விட்டு வைத்திருப்பதும் அதை தொடர்ந்து நடத்துவதும் பாராட்டுக்குரியது, 


சென்னையில் அகநாழிகை பொன் வாசுதேவன் மற்றும் மூனா செந்தில், மோகன் குமார் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களையும் முதன் முறையாகப் பார்த்தேன், அதில் பொன். வாசு நான் தங்கி இருந்த இடத்திற்கே  தன் மகனுடன் வந்து பார்த்துச் என்றார், 


****

ஒரு சிலர் தாம் விரும்பி குறிப்பிட்ட நாள்களில் தம்மை மாற்றிக் கொள்கிறோம் என்று முடிவு செய்து, அதன்படி செயல்படுவதைத் தவிர்த்து எந்த ஒரு நாளுக்கும் தனிச் சிறப்பு தனியாக வந்துவிடாது, கடந்தவைகளில் மறக்கக் கூடியவையும் உண்டு, நினைக்கக் கூடியவையும் உண்டு, நடக்க இருந்த நிகழ்வுகள் கடந்து போனது என்பது தவிர்த்து சென்ற ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்று நினைக்கவில்லை, படிப்பினைகளும், அனுபவங்களும் மோசம் என்றால் அவற்றை கடந்தும் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம், கடந்த ஆண்டு பலவற்றைச் சுமத்திக் கொண்டு, தனிப்பட்ட அளவில் நாம் தொடர்ந்து இயங்க வழங்கிய வாய்ப்பு என்று பார்த்தால் எந்த நாளும் மோசமான நாள் இல்லை, எந்த ஆண்டும் மோசமான ஆண்டு கிடையாது என்பதை என்னளவில் நம்புகிறேன்.

அனைவருக்கும் அன்பான  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்