பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2011

சிபிஐயை ஏமாற்றிய ஹிரிதிக்கின் தந்தை !

மேக்ஸிமா, ரமேஷ்கார் இன்னும் எத்தனையோ 24% விழுக்காடு வட்டித் தருவதாக பொதுமக்களிடம் சுருட்டி மூடிக் கொண்ட நிருவன உரிமையாளர்கள் தண்டனைப் பெற்றார்களா என்று தெரியவில்லை. காவல்துறை தண்டனைவாங்கித் தருவதெல்லாம் அமாவாசைத் திருடர்கள், பிக்பாக்கெட் அடிக்கிறவன், ப்ளாக்கில் சினிமா சீட்டு வைக்கிறவன் இவர்கள் தான், இரட்டிபாக்கித் தருவதாக பணமோசடிக் கும்பல்கள் ஆண்டு தோறும் உருவாகுவதும், அதில் பொதுமக்கள் பணத்தை இழப்பதும் வாடிக்கையாகத் தொடர்வதே. இவற்றை துவக்கத்திலேயே கண்டுபிடிப்பதோ, சிக்கியவர்களை தண்டிப்பதோ சட்டப்படி எதுவும் நடைபெறுவதே இல்லை, இந்திய ஊழல் வழக்குகெல்லாம் நீதிமன்றகளில் நீர்த்துப் போகின்றன. ராசாவும் கனிமொழியும் கூட விடுதலை ஆகிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்.....குண்டு. அதாவது சட்டமெல்லாம் சராசரி வருமான பொதுமக்களுக்குத்தான். பணமுதலைகள் சட்டத்தையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

நேற்றைய ஒரு செய்தி, 'ஹிருத்திக் தந்தையிடம் 50 லட்சம் மோசடி' இவ்ளோ பெரிய பணக்காரன் கூட ஏமாறுகிறானோ ? என்ற ஆவலில் செய்தியைப்
படித்தேன்.

**********

"நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தையிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த 2 போலி சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன். நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தை. கடந்த 20 வருடங்களுக்கு முன் ராகேஷ் ரோஷன் தயாரித்த ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

சமீபத்தில் ராகேஷ் ரோஷனை சந்தித்த 2 பேர் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் எனவும் மேல்குறிப்பிட்ட வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 50 லட்சம் தந்தால் அந்த வழக்கை முடித்துவிடலாம் எனவும் கூறினர். இதை நம்பிய ராகேஷ் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சிபிஐ துணை இயக்குநர் ரிஷி ராஜ் சிங்கிடம் புகார் அளித்தார். விசாரணையில் அவர்கள் 2 பேரும் போலி எனத் தெரியவந்தது"

**********

- இதைப் படிக்கும் பொது புத்தி ஹிரிதிகின் தந்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டதாகத்தான் நினைக்கும், சினிமா பின்புலம், பணக்காரன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற ரீதியில் தான் செய்திகள் சேகரிக்கப்பட்டு, தலைப்பிடப்பட்டு வெளி இடப்படுகின்றன, அந்த ஆவலில் படிக்கும் நாமும் மையச் செய்தியை அவ்வாறே படித்துத் தெரிந்து கொள்கிறோம், அவ்வளவே.

ஹிரிதிக் தந்தை 50 லட்சத்தை லஞ்சமாகக் கொடுக்க முன்வந்து வழக்குகளை முடித்துக் கொள்ள முன்வருகிறார் என்பதும் அதில் இருக்கும் தகவல் தான், இவன் ஏன் என்ன மயித்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க முன்வரனும் ? இவன் அடித்த கோடிகளில் ஒரு பங்காக இந்த 50 லட்சம் இவனுக்கு ஒரு மதிப்பே இல்லை என்பது தான் அதில் இருக்கும் மற்றொரு தகவல், ஹிரிதிகின் தந்தை நேர்மையாளராக இருந்திருந்தால் 50 லட்சத்தின் மதிப்பு உணர்ந்தவர் என்றால் இவர் ஏமாற்றப்பட்டிருப்பார் ?

அல்லது இவரை ஏமாற்ற நடந்த முயற்சி நடந்திருக்குமா ? வாய்ப்பே இல்லை.

நாட்டு நலனில் அக்கரை உள்ள புலனாய்வுத்துரை உண்மையிலேயே ஏமாற்றியவர்களை கைது செய்தது போலவே இவரையும் 'சிபிஐக்கு லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள விரும்பியவர் என்று கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் சிபிஐ அதிகாரிகள் இவரது செல்வாக்கை வைத்து குற்றவாளிகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து இழந்த பணத்தில் பகுதியை மீட்டுக் கொடுத்திருக்கின்றனர். அன்னா ஹசாரேக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த ஒரு சட்டமும் தண்டனையும் ஏழைபாழைகளுக்கு மட்டுமேயன்றி அவர்களைச் சுரண்டும் பணக்கார வர்கத்திற்கு கிடையாது.

அரசியல் சட்டங்கள் என்பது பணக்கார வீட்டு நாய்கள் போன்றது

வாழ்க முதாலாளித்துவம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்