பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2011

கலவை 31/ஆகஸ்ட்/2011 !

ஊகங்களுக்கு அப்பாற்பட்டு தூக்குதண்டனையை நீக்கக் கோரி முதல்வர் ஜெ கொண்டுவந்த தீர்மானம் வரவேற்பு பெற்றிருக்கிறது, விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பொடோ சிறையில் ஒராண்டுகாலம் கழித்த வைகோ 'ஜெயலிதா வரலாற்றுப் புகழ் பெற்றுள்ளார்' என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார், என்று என்பதைப் படித்தப்பிறகு இவை வெறும் சட்டமன்ற வழக்கம் இல்லை என்று உணரமுடிகிறது. விடுதலைப்புலிகள், ஈழம், தமிழர் நலம் என்பதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் வைகோ தவிர்த்து ஏனையோர்கள் சொல்லி இருந்தால் இவை வெறும் புகழ்ச்சி என்றே எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனினெல் வைகோ வாழ்நாளில் ஈழத்தமிழர்களின் நலனுக்காக் சிறைவாசம் உள்ளிட்ட பல அற்பணிப்புகளைச் செய்திருக்கிறார், அந்த நிலைப்பாட்டை தமிழக அரசியல் நிலைப்பாட்டில் கலக்காமல் அவர் ஜெவுடன் கூட்டணி அமைத்த பொழுது எள்ளி நகையாடியவர்களில் நானும் ஒருவர் என்பதை இப்போது நினைக்க வைகோவிடமும் வைகோ தொண்டர்களிடமும் மன்னிப்புக் கேட்கத் தோன்றுகிறது.

******

கருணாநிதியின் லாவனி

2000-ம் ஆண்டில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் ஒருசில ஆண்டுகளே தண்டனையை அனுபவித்திருந்தனர். அப்போதுதான் ராஜீவ் காந்தியின் மறைவுக்குக் காரணமாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டியபோது, தி.மு.க. அமைச்சரவையில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவினைக்கூட நான் ஜெயலலிதாவைப்போல தன்னிச்சையாக எடுத்துவிடவில்லை. அமைச்சரவையில் வைத்து விவாதத்துக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது. அப்போதுகூட தூக்கு தண்டனைக்கு ஆளான நான்கு பேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று நான் தெரிவித்த கருத்தினை ஏற்றுத்தான், அவருக்கு அப்போது கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. - கருணாநிதி

அதாவது மூன்று பேர் குறித்த, ஜெ மரணதண்டனைக் குறைப்புக் குறித்தத் தீர்மானம் தன்னிச்சையானதாம். டமிழின தலிவர் (அப்)பட்டம் முற்றிலுமாக உருவப்பட்டதால் ஏற்பட்ட ஆற்றமையோ ? தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்கள் தானே தலைவர் ஆகும் தகுதி பெறுகிறார்கள்.......?

*****

செங்கொடியை யாரோ தீயில் தள்ளியதைப் போன்று சிலர் பேசுகிறார்கள், தரம் கெட்டத் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள் இருக்கும் நாட்டில் இவை நகைப்புக்கும் கேள்விக்கும் இடமாவது வியப்பளிக்கவில்லை, தன் உயிருனும் மேலாக நினைப்பவர்களின் உயிருக்காக தியாகம் செய்வோர் ஒருசிலர் உண்டு, அவர்களின் தியாகம் வரவேற்கத் தக்கதல்ல ஆனால் போற்றுதலுக்குள்ளானவை, இந்த வேறுபாடு தெரிந்தவர்கள் செங்கொடியைப் போற்றுகிறார்கள், மற்றவர்கள் தூற்றுகிறார்கள். ஒரு நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கும் போது ஒவ்வொரு இராணுவ விரனும் கூட செங்கொடியாகத்தான் போரில் கலந்து கொள்கிறார்கள், தன் நேசத்துகுரியவர்களை காக்க இன்னுயிர் தரும் தற்காப்பு வீரனை கோழை என்று எவரும் சொல்வதில்லை, சொங்கொடி தவறான முன் உதாரணம் என்றாலும் அவரின் தன்னலமற்ற பேரன்பு ? சினிமா ஹீரோக்களுக்கு தீக்குளிக்கும் நாட்டில் செங்கொடிகளை அபத்தம் என்று சொல்வதே அபத்தம். உற்றாரும் உடன்பிறந்தோறும் செங்கொடி செய்தது தியாகம் என்று சொல்லும் போது எதிலும் பாதிக்கப்படாத நாம் தூற்றுவதற்கு முதல் ஆளாக நிற்கிறோமே ஏன் ? ஒரு தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், பலாத்காரம் செய்வோரை தாக்க முற்படாமல் பார்த்துக் கொண்டு இருந்து காவல் நிலையத்தில் முறையிடு, உன் நடவடிக்கை சட்டப்படியானது என்று சொல்கிறேன் என்கிறது உலகம்.

*****

போபால் விசவாயு கொலையாளி கவுரமாக வெளியேற்றப்பட்டான், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸுக்கு டெல்லியில் சிவப்புக்கம்பளம் வரவேற்புக் கொடுக்கப்பட்டது, இதனை எதிர்த்து மரணதண்டனைக்கு ஆதரவான எந்த நாயும் குரல் கொடுக்கவில்லை, சங்கராமன் கொலை வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இன்றும் நடக்கிறது, இதற்கெல்லாம் ஞாயஸ்தன்கள் அவற்றை விரைந்து நடத்த குரல் கொடுக்கக் காணும் சோ இராமசாமியும், சு சாமியும் நீதிக்கு தண்டனையான மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாம், வெட்கமாக இல்லையா ?

*****

தமிழகத்தின் அன்னா ஹசாரே இவர்கள் தான் என்று சென்ற கலவையில் ஊகமாக எழுதி இருந்தேன், மறுநாள் சுவரொட்டிகளே வந்துள்ளன. ஒபாமாவையும் சேகுவாரவையும் ஓரம் கட்டிட்டு அன்னா ஹசாரே அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளார், இதே திமுக ஆட்சி என்றால் அஞ்சா நெஞ்சன் ஒரு ஆள் தவிர்த்து 'தமிழகத்தின் அன்னா ஹசாரே' என்று போட்டுக் கொல்லும் தகுதி பிறருக்கு வாய்திருக்காது :)



30 ஆகஸ்ட், 2011

நோன்புத் திருநாள் வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன்...!

சென்ற முறை தை 1 ஐ புத்தாண்டாக கொண்டாடிய போது நண்பர் ஒருவரிடம் உங்களுக்கு சித்திரை 14 தான் புத்தாண்டு அதை நான் குறைச் சொல்லவில்லை, ஆனால் தை 1ல் கொண்டாடும் எங்களுக்கு வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன் ? என்று கேட்டேன், வாஸ்தவம் தான் எங்களுக்கும் சித்திரை 14 க்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல நீங்க மனசு வைத்தால் நான் இப்பச் சொல்லத் தயக்கம் இல்லை என்றார். சரியெனப்பட்டது, அவரும் தை 1க்கு பொங்கல் வாழ்த்துடன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார், நானும் ஏப்ரல் 14 சித்திரை ஒன்றில் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னேன்.

நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் புழங்காத போது இஸ்லாமிய பண்டிகைகளுக்கு இஸ்லாமிய அன்பர்களுக்கு வாழ்த்துச் சொல்வது வழக்கம். அவர்களுக்கும் இந்து பண்டிகைகளுக்குச் சொல்லுவார்கள், இங்கு இணையத்தில் படிக்கத் துவங்கிய போது மதங்களும் அதன் பல்வேறு கோர முகங்களும் அறிமுகமாகின, அதன் பிறகு மதவாத விமர்சனமாகவே அனைத்து மதங்களையும் கண்ணியத்துடன் தான் நான் விமர்சனம் செய்துவருகிறேன். மதம் சார்ந்த பண்டிகைகளில் நான் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதும் இல்லை, இந்நிலையில் இஸ்லாமியர்கள் பிற மதத்தினர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமா ? என்பது போன்ற கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது, அதில் குறிப்பிட்டவாறு,

கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து
சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது ‘அஹ்காமு அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர்
அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்’

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர்
வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ
இருப்பினும் சரியே!

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும்
கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. தனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும்
ஹராமாகும்.

‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

http://islamiyadawa.com/new/?p=529

******



இவற்றையெல்லாம் படித்தபிறகு ஈமான் (நம்பிக்கைக்) கொண்ட இஸ்லாமியர் ஒருவர் பிற மதத்தினரின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதே அவர்களின் மதக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று விளங்கியது, இந்த நிலையில் சிலைவழிபாட்டையும், இஸ்லாம் அடிப்படை மீது நம்பிக்கையற்றவர்களின் வாழ்த்துகளையும் அவர்கள் வரவேற்பதில்லை என்று விளங்கியது. அதிலிருந்தே பொதுவாக அனைத்து இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்து என்னும் சீசன் வாசகங்களை பதிவுகளில் வாழ்த்தாக எழுதுவதைத் தவிர்த்து நெருங்கிய மற்றும் நட்பைப் பெரிதாகவும், வாழ்த்தை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு மட்டுமே சொல்வது வழக்கமாகியுள்ளது, இப்பதிவின் மூலம் மாற்று மத அன்பர்களின் நல்வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் நம் வாழ்த்துகளை புறந்தள்ளும் போது பொதுவாகச் சொல்வதும் தேவையற்றதாகவும், தயக்கத்திற்குரியதாகவும் உணர நேரிடுகிறது.

மிகச் சிலரின் கருத்துகளை இஸ்லாமியக் கருத்தாக வைக்கலாமா ? சரிதான், ஆனால் அந்த ஒருசிலரின் கருத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட மற்ற இஸ்லாமியக் கருத்துகளை நான் அறிந்ததில்லை.

26 ஆகஸ்ட், 2011

கலவை 26/ஆகஸ்ட்/2011 !

புதிய(பழைய) தலைமைச் செயலகம் பற்றி என்னன்னெவோ பரிந்துரைகளெல்லாம் செய்கிறார்கள். பு.த (புரட்சி தலைவி) அம்மா, மருத்துவ மனையாக மாற்றப் போகிறேன் என்று சொல்கிறார், வீம்பு எண்ணத்தை மாற்றிக் கொள்ள இவ்வளவு சிரமப்படனுமா ? கருணாநிதிக்கும், ஜெ தாவுக்கும் வருங்கால வரலாறு முறையெஎ தன்னிச்சையாளர், பிடிவாதக்காரர் என்ற பட்டங்களைத்தான் கொடுக்கும். தமிழனுக்கு நல்ல தலைமை கிடைக்கமால் போனதற்கு ஒற்றுமைகள் இல்லாததும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாததும் ஆகும். நல்லதொரு தலைவர்கள் உருவாக நாட்டில் பொது மக்கள் வாழ்வு உரிமையே கேள்விக்கு உட்படுத்தப்பட்டதாக இருந்தால் தான் உருவாகுவார்களோ என்னவோ. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைமைகள் தேவைப்படாததால் பொம்மைகளும், அறிவித்துக் கொள்ளாத சர்வாதிகாரிகளும் ஆளுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது, நாட்டுமக்கள் ஒற்றுமையாகவும் போராட்ட குணத்துடன் இருக்க அந்நிய படையெடுப்புகள் தேவை தான் என்றே நினைக்கிறேன், சரியா ?

1000 கோடிகளை விழுங்கிவிட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டி போன்று கவனிப்பாரின்றி கிடக்கிறது, கருணாநிதி புலம்புகிறார். தொட்டுத் தொட்டு பார்த்து கட்டியதாம், இராணி மேரிக் கல்லூரியில் கட்ட முயற்சித்த போது திமுக அதனை தடுத்ததால் தான் திமுக கட்டிய தலைமைச் செயலகத்தை ஜெ புறக்கணிக்கிறாராம், இவர்களுக்கு பொது மக்களின் வரிப்பணம் எவ்வளவு தன்மான விளையாட்டுகளாகப் போய்விட்டது பாருங்கள், 1000 கோடிக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெ ஆணை இடாதவரை உபிகள் பெருமூச்சு விடலாம். அந்தக் கட்டிடத்தை எது எதற்கோ பயன்படுத்துவதைவிட மாவட்டந்தோறும் இருக்கும் கலைப் பொக்கிசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து கண்காட்சியாகவும், கலைக் கூடமாக, ஓவியக் கூடமாகவும், தொல்பொருள் காட்சிக் கூடமாகவும் ஆக்கி, 200 ரூபாய் நுழைவுக்கட்டணம் வைத்தால், சுற்றுலா வருமானமாவது கிடைக்கும்.

***

எங்கள் ஊரில் அதிபர் தேர்தல் நடக்கிறது, இந்தியாவில் ஜனாதிபதி என்று இந்தியில் சொல்லப்படும் பதவி தான் சிங்கையில் அதிபர் பதவி, போட்டிக்கு நான்கு சீனத் தலைகள் போட்டி இடுகிறார்கள், ஒருவர் துணைப்பிரதமராக இருந்து பின்னர் 2006ல் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தவர், மற்றவர்கள் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், நான்கு பேர்களின் இல்லப் பெயர்களும் 'டான்' தான். சிங்கையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடக்கிறது, தற்போதைய அதிபர் மேதகு எஸ் ஆர் நாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாகத் தொடர்கிறார், பதவிக்காலம் அடுத்த திங்கள் நிறைவுறுகிறது. புதிய அதிபராகப் போட்டி இடுபவர்கள் அனைவருமே அதிபர் பதவியை அதிகாரப் பதவியாக மாற்ற முயற்சிப்பதாக சொல்லிவருகின்றனர். சிங்கப்பூர் பல இன சமூகம், அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமையில் மாற்றம் இல்லை, என்பதால் இந்திய சமூக முன்மொழிவுக்கு அரசியல் ரீதியில் தனியாகத் தலைவர்கள் தேவைப்படுவதில்லை, இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களில் கனிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர். பார்க்க எளியவராகவும், பொலிவான தோற்றம் கொண்டவராகவும் இருக்கும் எஸ் ஆர் நாதன் இந்தியர்கள் பெருமைப்படும்படியும் சிங்கப்பூர் முன்னேற்றங்களில் முனைந்து செயல்படுவராகவும் இருந்துவருகிறார் என்பது பெருமைக்குரிய, பாராட்டத்தக்க ஒன்று. அடுத்து இந்தியர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட ஆண்டுகள் பல ஆகலாம்.
இப்போதைக்கு வருங்கால அதிபர் பெயர் மிஸ்டர் டான், ஆனால் அது எந்த டான் என்பது இந்த சனிக்கிழமைக்குப் பிறகு தெரியும்.

***

அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நான் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை, இந்தியாவிற்கு தேவைப்படும் புனிதச் சின்னத்திற்கான அத்தனை தகுதிகளையும் பெற்று இருக்கிறார் ஹசாரே, காந்தியை விட கூடுதல் நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது, காந்தி பெயரைக் கேட்டாலே வாந்தி எடுக்கும் இந்துத்துவா கும்பல்கள் அன்னா ஹசாரேவை ஆதரிப்பது காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றவைக்க முடியும் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். இன்னொரு தேசத் தந்தையாக புனிதப்படுத்தி உட்கார வைக்க ஆள் கிடைத்துவிட்டார். எவ்வளவு நாளைக்குத்தான் காந்தியையே அகிம்சையும் உதாரணாமக் கூறிக் கொண்டிருக்க முடியும், வரலாற்றுக்குத் தேவை புதிய தேசத் தந்தைகள், அன்னா ஹசாரே சரியான பாதையில் அவ்விலக்கு நோக்கி ஊடகங்களால் தள்ளப்பட்டு இருக்கிறார். காந்திப் பேரைச் சொல்லி ஆட்சி நடத்தும் காங்கிரசை விமர்சனம் செய்து போராடும் காந்தியவாதி அன்னா ஹசாரே...உம் போராட்டம் வெற்றி பெருக, ஆனால் அதே சமயத்தில் இராஜிவ் கொலை வழக்குத் தொடர்பில் தூக்கு தண்டனையை எதிர்நோக்குபவர்களுக்கான ஆதரவுக் குரல்கள் இவ் அவசர வேளைகளில் அன்னா ஹசரேவின் ஆதரவாளர்களின் ஆதரவுக் கூச்சல்களால் அமிழ்த்தப்படுகிறது என்பது வருத்தம் தான். அன்னாஹசாரேவுக்கு ஆதரவு என்று வெளியே சொல்லாதவர்கள் தேசத் துரோகிகளாகவும் தூற்றப்படுகிறார்கள். உங்களில் யார் யார் தேசத் துரோகி ?

***

காஞ்சி மட சாமியார் ஜெயந்திரர் (எ) சுப்ரமணியன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சர்சைக் குறித்து செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று எல்லோரையும் விட ஜெயந்திரர் தான் ரொம்பவும் பயந்தார் என்றது நக்கீரன் உள்ளிட்ட செய்தி இதழ்கள். ஜெவிடம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத உடன்பாடு இப்போது ஏற்படுமா ? சங்கரராமன் படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா ? இது சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே தீர்புகள் வழங்கப்பட்டாலும் அதன் பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீடு என பெரியவா ஆயுசுக்கும் வழக்கு நடக்கும் என்றே நினைக்கிறேன். தெய்வம் உட்கார்ந்தும் கொல்லாது நின்றும் கொல்லாது.....தண்டனைகள் அதிகாரமட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டவை அல்ல.

***

"ஆட்சி மாறினாலும் அண்ணன் செல்வாக்கு அசைச்சிக்க முடியாது........"

"எதை வச்சுச் சொல்றே....."

"அங்கப் பாரு, 'தமிழ் நாட்டின் அன்னா ஹசாரேவேன் போட்டு அண்ணன் படத்தை அன்னா ஹசாரேவாக மார்பிங்க் செய்து ஒட்டி இருக்காங்க...."

"தலை நகரில் இளையத் தளபதிக்கும், கேப்டனுக்கும் கூட ஒட்டி இருக்காங்களாமே"

****
அடுத்தவன் புகழ் நிழலில் புகழ் தேடும் அசிங்கம்........அடங்கவே மாட்டா(னு)ங்களோ...........!

****

சிங்கைப்பதிவர்கள் நடத்தும் மணற்கேணி 2010 ன் நிறைவாக வெற்றியாளர்கள் சிங்கப்பூர் அழைப்பட்டுள்ளார்கள், அவர்களுடன் ஆன நிகழ்ச்சிகள் குறித்த விவரம் இங்கே.

25 ஆகஸ்ட், 2011

ஒன்றாம் அகவை !

பிறந்த குழந்தைகள் எவ்வாறு வளருகிறார்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பு மகள் பிறந்த போது கிடைக்கவில்லை, அவள் தமிழகத்தில் வளர்ந்து பின்பு இரண்டு வயதிற்கு பிறகே எங்களுடன் இருக்கத்துவங்கினால், கூடவே வைத்து வளர்க்க இயலாத வேலைச் சூழல், போதிய அனுபவமின்மை. ஆனால் மகனை அவ்வாறு விட்டுவிடக் கூடாதென்று இருந்தோம். குழந்தை வளர்ப்பு எளிதல்ல, உறவினர்கள் அற்ற வெளிநாடுகளில் எங்களைப் போன்று கணவன் - மனைவி இருவரும் வேலை பார்க்கும் சூழலில் எளிதே அல்ல. முதல் நான்கு மாதங்களுக்கு மனைவியின் தாயார் உடனிருந்ததால் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தது, அவரையே தொடரச் செய்வதும் முறையாகாது என்பதால் வீட்டில் முழுநேர உதவியாளர் அமர்த்தி தான் பார்த்துக் கொள்கிறோம்.

ஒரு குழந்தை ஒரு ஆண்டு நிறைவதற்குள் என்ன என்ன வற்றையெல்லாம் கற்றுக் கொள்கிறது வியப்பாகத்தான் இருக்கிறது, நாமும் அவ்வாறு தான் வளர்ந்திருப்போம் என்றாலும் அந்த வளர்ச்சியை நம்மால் உணர்ந்திருக்க முடியாது. முதல் ஒரு மாதத்தில் வைத்த இடத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது கண்விழித்துப் பார்த்துவிட்டு மெலிதாகச் சிரிக்கும், அங்கும் இங்கும் தலையை திருப்பாமலே அசைவதையெல்லாம் பார்க்கும், பசித்தால் அழும், பால் குடித்துவிட்டு தூங்கிவிடும், அடுத்த மாதம் கால் கைகளை ஆட்டி ஆட்டி உதைத்து அழும், விளையாடும், கொலுசு அணிவித்திருந்தால் அந்த கொலுசொலி எந்த இசைக்கும் ஈடாகாது, நள்ளிரவில் விழித்துக் கொண்டால் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்துவிடுகிறார்கள். மூன்றாம் மாதம் தலையை அசைக்கிறது, ஒருக்களித்து படுக்கிறது.

நான்காம் மாதம் துவக்கத்திலேயே தலை நிற்க, யார் வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொள்ள முடியும், ஐந்தாம் மாதம் துவங்கும் முன்பே குப்புறப்படுத்துக் கொள்கிறது, விழித்திருக்கும் எப்போதும் குப்புத்துக் கொள்ளவே விரும்புகிறது, அந்த நிலையில் தலையை எந்த பக்கமானாலும் பார்க்க முடிவதால் அதனை விரும்புகிறது, அதன் பிறகு அப்படியே நகரவும் துவங்கும், அடுத்த இரண்டு மாதங்கள் தண்ணீரில் நீச்சல் அடிப்பது போல் தரையில் உந்தி உந்தி உந்தி நகரும், 8 மாதாம் உட்கார வைத்தால் உட்கார முயற்சிக்கும், பின் சாயும், பிறகு சில நாட்களில் உட்காரவைக்க முடியும், அதுவாக உட்கார்ந்த பிறகு தான் தானே மண்டிப் போட்டு தவழ துவங்குகிறது, எட்டாம் முதலே தவழத்துவங்கும், ஆண் குழந்தைகள் 9 மாதாத்திற்கு பிறகு மண்டியிட்டு செல்லத் துவங்குன்றன, பெண் குழந்தைகள் அதற்கும் முன்பாகவே மண்டியிட்டு நகர்கின்றன. பத்தாம் மாதம் துவங்கும் முன்பே எதையாவது பிடித்து எழுந்து நிற்கும். பத்தாம் மாதம் முடியும் முன்பே முன்னம் பற்கள் மேலே கிழே இரண்டாக முளைத்துவிடுகின்றன. எங்கள் மகன் 11 மாதம் தான் நன்றாக மண்டிப்போட்டு ஊறினான், அதற்கு முன்பு குப்புறப்படுத்து நகர்ந்து வருவான்.

12 ஆம் மாதம் கையைப் பிடிச்சு நடத்தினால் கூடவே நடப்பான், தன்னிச்சையாக எழுந்து கொள்கிறான், நாற்காலியை தள்ளி நடக்கிறான், நடவண்டியையும் தள்ளுகிறான், சாவி துளையில் சாவியை நுழைக்க முற்படுவது, பாட்டில் மூடிகளை கழட்ட முற்படுவது என கற்றுக் கொண்டுள்ளான்.





சென்ற வெள்ளிக்கிழமை 19 ஆகஸ்ட் 2011 அவனது பிறந்த நாள், அடுத்த நாள் சிறிய பிறந்த நாள் விழா முடிந்தும் விட்டது. என்னை நெருக்கமாக கருதிய நண்பர்கள், அலுவலக சீன நண்பர்கள், அக்கம் பக்கம் குடியிருப்பாளர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்தி, பரிசுகளைக் கொடுத்துச் சென்றனர். கூகுள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் ஏராளமான நண்பர்கள் வாழ்த்தி இருந்தார்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. குழந்தை பிறந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது அதற்குள் ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. குழந்தை பெற்று வளர்ப்பதில் தூக்கம் கெடுவது, ஓய்வின்மை என பல தொந்தரவுகள் இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு முன்பு அவை ஒன்றுமே இலலை.

பின்குறிப்பு : எனது மற்ற பதிவர் நண்பர்களுக்கு பகிரவே இப்பதிவு.

19 ஆகஸ்ட், 2011

மணிரத்னத்தின் அடுத்தப்பட திரைக்கதை !

மீனவ பிரச்சனைகள் படமாகிறதாம், மணிரத்னம் இயக்குகிறாராம், ஜெயமோகன் வசனம் எழுதுகிறாராம்.

சரி சரி கற்பனை கதை விவாததிற்குள் செல்வோம்

**********

மணி : நம்ம அரவிந்த்சாமி இப்ப இருக்கிற கெட்டப்புல அவரைத்தான் கட்டுமரக்கார மாரிமுத்துவாப் போடனும்னு நினைக்கிறேன்

ஜெமோ : நல்ல சாய்ஸ், அப்படியே குஷ்புவை அவரோட சம்சாரமாக போட்டுவிடுங்க

மணி : கதை என்னான்னா ? நம்ம பையன் மாதவன் மாதிரி ஒரு புதுமுகத்தைக் காட்டலாம்னு இருக்கேன்

ஜெமோ : மீன்காரனாக நடிக்க மீசை இல்லாத ஹீரோவா ?

மணி : மீன்காரனாக இல்லை, மொத்தமாக மீன் வாங்கும் தொழில் அதிபராகத்தான் காட்டுறோம்

ஜெமோ : அதை எப்படி கடலுக்குள் நடக்கும் கதைக்குள் நுழைப்பிங்க ?

மணி : பையன் ஒரு நாள் ஆர்வத்துடன் மீன்பிடி படகுல ஏறிக் கடலைப் பார்க்கப் போறான்

ஜெமோ : அப்பறம்

மணி : எதிரில சிங்களப் கடற்படை.. அதுல கடற்படை அதிகாரியாக ஒரு கன்னிப் பொண்ணு

ஜெமோ : ஒய்யாவோ ஒய்யாவோ அட என்னா ஓ....ன்னு பாடிக் கிட்டே வருகிறார்களா ?

மணி : அதிகாரி எப்படிங்க அப்படி பாடுவாங்க, கதையக் கேளுங்க, சிங்களப் படை நம்ம ஹீரோவை நெற்றியில் துப்பாக்கி வச்சு புடிக்குது

ஜெமோ : அப்படியே இலங்கைக்கு கொண்டு போய்டுறாங்களா ?

மணி : ஆமாம், ஜட்டியெல்லாம் கழட்டிட்டு நிர்வாணமாக போட்டு சக்கரை தண்ணி தெளிச்சு வெயிலில் போட்டுட்டு போய்டுறாங்க

ஜெமோ : ஷங்கர், பாலா டச் கொஞ்சம் வருது..இதுக்கப்பறம் நான் சொல்றேன்

மணி : ம் சொல்லுங்க ஒங்க கதை என் கதையோடு ஒட்டுதான் பார்க்கிறேன்

ஜெமோ : அந்த கடற்கன்னி யாருக்கும் தெரியாமல் வந்து நம்ம ஹீரோவை பாத்ரூமுக்கு கூட்டிப் போய் குளுப்பாடி தலையெல்லாம் துவட்டி விடுது, அந்த நேரமாகப் பார்த்து கடற்படை ஆளுங்க வந்து கோபமாகி அந்த பொண்ணு அதான் நம்ம படத்தோடு ஹீரோயின் அவங்களை மாருல எட்டி உதைக்கிறாங்க

மணி : ம் அட என்னோட தீ(ம்)மை வீட இது நல்லா இருக்கே

ஜெமோ : திரும்பவும் ஹீராவை கட்டிப் போட்டு, ஜீப்புல தூக்கிப் போட்டுட்டு அந்த ஹீரோயினை அங்கேயே விட்டுட்டுப் போறாங்க, போகும் போது பொட்டுத் துணி இல்லாமல் அந்த பொண்ணு ரெத்தவிளாறாக் கிடக்குது

மணி : இதுக்கப்பறம் நான் கதையைச் சொல்றேன்......

ஜெமோ : ம்

மணி : இந்த இடத்தில இன்னொரு பாட்டு வைக்கிறோம்

ஜெமோ : மொதப்பாட்டு எங்கே வைக்கிறோம்னு சொல்லவில்லையே......

மணி :மொதப்பாட்டு : அந்திமழை மேகம் ரேஞ்சுக்கு மீனவ கிராமத்தில் தான் துவங்குது.......யோவ் அதையெல்லாம் நான் ஏற்கனவே ரஹ்மான் கிட்ட டிஸ்கெஸ் பண்ணிட்டேன்யா

ஜெமோ : சரி சரி எனக்கு தெரியாது அதான் கேட்டேன்

மணி : இப்ப கதையைக் கேளுங்க.... தூக்கி வந்த ஹீரோவை கடற்படை அப்படியே கடலில் தூக்கிப் போடுது, அங்க இண்டர்வெல்

ஜெமோ : குறும்படம் எடுக்கப் போறோமா ?......

மணி : யோவ்.....இது திரைக்கதை தான், இடையிடையே சிங்களப் படை தமிழக மீனவர்களை அடிச்சுக் கொல்றது, வலையறுக்கிறது, படகை மூழ்கடிக்கிறதெல்லாம் காட்டினால் 1.15 மணி நேரம் ஓடிவிடும், இன்னும் ஹிரோ இராமஸ்வரம் கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிக்கும் மேட்டரெல்லாம் கூட முன்பே வருது, அதுக்கெல்லாம் வசனம் நீ தான் டெவலப்பண்ணனும், சுகாசினியை எழுதச் சொன்னால், எல்லா வரியிலும் 'லே' போட்டுட்டு இது தான் திருநெல்வேலி / ராமேஸ்வரம் பாசைன்னு சொல்லிடும்.

ஜெமோ : அதுவும் சரிதான்

மணி : கடலில் தூக்கிப் போட்ட ஹீரோ மறுபடியும் இலங்கை கடறகரையில் ஒதுங்கிறார், கடலையே வெறிச்சுப் பார்த்து சிலையாய் நின்ற ஹீரோயின் பார்த்துடுறாங்க, மறுபடியும் காப்பாற்றி அங்கிருந்து கட்டுமரத்துல தூக்கிப் போட்டு இராமேஷ்வரம் வற்ராங்க, வரும் போது மீண்டும் கடற்படை கண்ணுல உப்புத் தண்ணியைத் தூவி தப்பிக்கிறாங்க, அவங்களுக்கு ராமேஷ்வரம் கோவிலில் கல்யாணம் நடக்குது, அங்க ஒரு பாட்டு, பின்னர் அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்குது, ஒரு குழந்தைக்கு தமிழ்பேரும், இன்னொரு குழந்தைக்கு சிங்களப் பேரும் வைக்கிறாங்க

ஜெமோ : இண்டர்வலுக்கு பிறகு முக்கால் மணி நேரம் ஓடும் திரைக்கதை ஆச்சு, பின்னர் ?

மணி : திடிரென்று ஒருநாள் ஹிரோயினுக்கு தன்னோட அம்மா அப்பாவைப் பார்க்கத் தோணுது, யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4 மணிக்கு படகுல போறாங்க, அதிர்ச்சியடைந்த ஹீரோ தன்னோட குழந்தைகளை கூட்டிட்டு இன்னொரு படகுல இருட்டுல தொடருகிறார், மறுபடியும் கடற்படை எல்லோரையும் சுற்றி வளைக்குது, ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் மேஜர் சுட்டுறான். சிங்களப் பேரு வச்சிருக்க குழந்தை காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மயங்கி கடலுக்குள் விழுந்துடுது. எல்லோரையும் சுத்தி வளைக்கிறாங்க.

ஜெமோ : சுத்தி வளைக்காமல் க்ளைமாக்ஸ் சொல்லுங்க.

மணி : இதோ....இப்ப தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடக்குது, இலங்கை கடற்படை மேஜரை நோக்கி, அந்த ஹிரோயின்.......'அப்பா நீங்களே உங்க பேரனை சுட்டுட்டிங்களே' ன்னு சிங்களத்தில் கதறி கதறி சொல்றார். அப்போ நல்லா பொழுது விடிஞ்சிருக்கு, மகள் உருவம் மாறி இருந்ததால் அடையாளம் தெரிந்து கொள்ளாத அப்பா அதிர்ச்சி அடைந்து தன்னோட தவறுகளை உணர்கிறார், கடற்படை ஆட்களுக்கு ஆணையிட்டு குழந்தையை கடலுக்குள் தேடுறாங்க, மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிக் கிடக்கும் குழந்தை, ஒரு சோகப் பாடல் முடியும் போது உதடு அசைய எல்லோர் முகத்திலும் சிரிப்பு, சிங்களத் மேஜர் தாத்தா குழந்தையை அணைத்துக் கொள்கிறார். தன்னோட வேலையை அன்றே ராஜினாமா செய்துவிட்டு, மருமகனையும் பேரனையும் ராமேஷ்வரம் நோக்கி அனுப்பிவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கடலில் வீழ்கிறார்.

ஜெமோ : க்ளாஸ். ஆனால் இது எப்படி மீனவ பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்னு நாம சொல்லவே இல்லையே....

மணி : இதெல்லாம் யாரு கேட்டார்கள் ? கடற்கரை, மீன் பிடிக்கிறது, சிங்கள ராணுவம், சித்திரவதை, செண்டிமெண்ட்ஸ் இதெல்லாம் இருக்கே.....தீர்வு கிடைச்சுடாதா ? ம் சொல்ல மறந்துட்டேன் படத்தோட பேர் இராமேஸ்வரம் இல்லை, அது ஏற்கனவே வேறொரு படப்பெயராக வந்துள்ளது, படத்தோட பெயர் 'கோடியக்கரை' இல்லை என்றால் 'கச்சத்தீவு' சீட்டுக் குழுக்கிப் போட்டு ஒண்ணு எடுக்கனும்







********

ரோஜா, மும்பை மூலம் தேசிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு கிடைச்சுதோ, அதில் குறையாமல் இந்தப்படத்திலும் எதாவது சொல்லி இருப்பார் மணி, நாம் தேடித் தேடி விவாதிப்போம்.

18 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே சாப் நஹி சப்போர்ட்ஸ் !

இந்தியா என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட நாடு, அதிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை தனிநாடுகள். உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகள் தனித் தனி மொழி அடையாளம் கொண்ட குழுவாக இன்றும் அடையாளம் காணப்படுகின்றன. கடந்த 200 நூற்றாண்டுகளில் உருவான நாடுகள் தவிர்த்து பெரும்பாலனவை மொழிவாரி, இனம் சார்ந்த நாடுகள் தான். வெள்ளையர்கள் இந்தியாவை கைப்பற்றி இருக்காவிட்டால்,இந்தியா மொழிச் சார்ந்து பல்வேறு நாடுகளாக இருக்கும் என்றே கருதவேண்டி இருக்கிறது. இந்திய மக்களுக்கு பொது இன அடையாளம் காணப்படுவதும் கடினம் தான்.

Scientific racism of the late 19th and early 20th centuries divided mankind into three "great races", Caucasoid (white), Mongoloid (yellow) and Negroid (black) in accordance with their own world-view.
The populations of the Indian subcontinent however were problematic to classify under this scheme. They were assumed to be a mixture of an indigenous "Dravidian race", tentatively with an "Australoid" grouping, with an intrusive Aryan race, identified as a sub-race to the Caucasoid race, but some authors also assumed Mongolic admixture, so that India, for the purposes of scientific racism, presented a complicated mixture of all major types.
மேலும் படிக்க

ஆனாலும் மொழிக் குழுக்களின் அடையாளமாக திராவிடர் ஆரியர் என்கிற பகுப்புகள் இருக்கின்றன. அதன் உட்பகுப்பாக மொழி அடையாளங்களே மாநிலங்களாகவும் மாநில மக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தென்னிந்தியர் ஒருவரை முகத்தை வைத்து இவர் இந்த மொழி பேசுபவராக இருக்கும் என்று கணிப்பதும் கடினம் தான். பிரச்சனைகள் அதாவது பிறநாட்டினரின் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு என்கிற போது இந்திய நிலம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள், ஆனால் வெள்ளையர்கள் சென்ற பிறகு ஆளுமை / ஆட்சி அதிகாரம் என்று வரும் போது உண்மையில் இந்தியாவின் பிரச்சனைகள் ஒருமைப்பாடு என்பவை கேள்விக்குறியாகவே ஆகின்றன, காரணம் வட இந்தியர்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஆகுவதும் தென்னிந்தியர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. இந்தியா பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தலைவர், மாநிலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுச் சொல்லக் கூடிய ஒருவர், பெரும்பாலான மாநில மக்கள் ஏற்கக் கூடிய தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட சென்ற தேர்தலும் முந்தைய தேர்தலில் இவர் தான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கத் திணறி தேர்தலை சந்தித்து பின் கூட்டணிகள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரம் பெற்று மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி பின் தொடர்கிறது. வெங்கையா நாயுடுவையோ பிற தென் மாநில பாஜக பொறுப்பாளர்களையோ பாஜக பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதே இல்லை, சந்துல சிந்து என்ற அடிப்படையில் தான் தென்னிந்தியர்களான நரசிம்மராவும், குறைந்த நாட்களே தேவ கவுடாவும் கூட பிரதமர் ஆனார்கள், அப்படி பிரதமர் ஆனவர்களுக்குக் கூட அவர்கள் மாநிலங்கள் தவிர்த்து பெரிய ஆதரவோ, மறுமுறை அவ்வாறு ஆகுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை.

ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஆளும் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டால், அந்த மாநிலத்திற்கு மத்திய அரசில் பங்கு பெற எந்த ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்காது, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அந்தந்த மாநில வளர்ச்சிக்கு உதவும் மத்திய அமைச்சர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. கூட்டணி என்பதால் சில பதவிகள் கிடைக்கிறது அதையும் கூட திமுக உள்ளிட்டவை ஊழல் செய்யதாகக் கூறப்பட்டு கெடுத்துக் கொண்டுள்ளது. இரண்டு அமைச்சர்களின் பதவிகளை பறித்துக் கொண்டார்கள் கேட்டுப் பெற ஒரு துப்பும் இல்லை.

ஸ்பெக்டரம் விவாகரத்தை பத்திரிக்கைகள் தான் ஊதிப் பெருக்குகின்றன, ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற காங்கிரஸ் நீதிமன்ற நெருக்கடியால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்துவருகிறது. ஊழலே நடக்கவில்லை என்றால் தற்போது சிறையில் இருக்கும் கல்மாடி, ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் அப்பாவிகள் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே சொல்லிவரலாமே.

எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்று சாதிக்கவே அவர்கள் அவ்வாறு கூறி வந்தார்கள், சில மாதங்களாக அன்னா ஹசாரே கொடுத்துவரும் குடைச்சலாலும், விக்கிலீக் வழங்கியுள்ள ஸ்விஸ் வங்கி கருப்புப்பணப் பட்டியல் வெளி ஆகியுள்ளதால், பிரதமர் சுதந்திர தின உரையில் வெட்கமே இல்லாமல் நாட்டில் ஊழல் பெருகியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார், அதையும் தாங்களே ஒழிக்கப் போவதாகக் கூடச் சொல்லி இருக்கிறார். எங்கள் ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம், நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், நாங்களே நடவெடிக்கை எடுக்கிறோம் என்பதாக வெட்கமே இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறார்கள். சரி அதுவேறு......

அன்னா ஹசாரே யார் ? யாருக்குத் தெரியும் வட இந்திய செய்தி இதழ்கள் அவரை ஊழலை ஒழிக்க வந்த புதிய அவதாரமாகக் காட்டுகின்றன, அவரும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் நாள் தோறும் செய்திகள் வெளியாகின, அன்றைய செய்திக்கு இடம் போக மீதம் உள்ள இடத்தில் தென்னிந்திய செய்தித்தாள்கள் அவற்றை மீள் பதிவு செய்தன, மற்றபடி அன்னா ஹசாரே என்பவர் இந்திய மாநிலங்கள் அனைத்தாலும் அறியப்பட்டவரே இல்லை. அன்னா ஹசாரே என்பவர் நதி நீர் உள்ளிட்ட தென்னிந்திய பிரச்சனைகளுக்கு ஏதேனும் குரல் கொடுத்துள்ளாரா ? தெலுங்கானப் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா ? இந்தியாவை ஆளும் சக்திகளில் தென்னிந்தியர்களுக்கும் முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஏதேனும் போராடியுள்ளாரா ? மாநில மொழி சார்ந்த உரிமைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ,மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்க குரல் கொடுத்துள்ளாரா ? இந்தநிலையில் தென்னிந்தியர்களால் ஓரளவு அறியப்பட்ட அமிதாப்பச்சன் கட்சித் துவங்கினால் தென்னிந்தியர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்களோ அதைவிடக் மிக குறைவாகத்தான் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும், அதுவும் கூட காங்கிரஸுக்கு மாற்றான தேசியக் கட்சியான பாஜகவின் ஆதரவாளர்களால் தான் கிடைக்கிறது.

அன்னா ஹசாரே தேசிய புதிய அவதாரமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கி இருந்தாலும் அவர் அதன் பிறகு தென்னிந்திய மாநிலங்கள் எதிலும் கால் வைத்தது போலும் தெரியவில்லை, பிறகு எப்படி அவரை ஒரு பொதுத்தலைவர் மற்றும் சமூகப் போராளியாக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுப்பார்கள். மேலும் காங்கிரஸ் ஆட்சிகள் துவங்கி போஃபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நீர்க்கடிக்கப்பட்ட பிறகு ஊழலுக்கு எதிரான கூக்குரல்கள் யாவும் பயனற்றதாகவே போய்விடும் நம்பிக்கையின்மையும் மக்களிடையே இருக்கிறது.

இந்தியை தேசிய மொழியாக திணிப்பதையும், வட இந்தியர் ஆதிக்கங்களைக் குறைத்து, ஆட்சி அதிகாரம், மாநில மொழிக்கு அங்கீகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தென்னிந்தியர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை எந்த ஒரு வட இந்தியரையும் பொதுத் தலைவராக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொள்வது கடினமே. ஆனால் தலைமைத்துவம் சாராத கார்கில் ஊடுறுவல் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டினர் நிறையவே ஆதரவு கொடுத்துவருகின்றனர்.


மேற்கண்ட கட்டுரை வெளியான பின்பு ....

கூகுள் பஸ்ஸில் ஒருவர் ஆவேசமாகக் விமர்சித்துக் கேட்டார்,

அரைகுறை அறைவேக்காட்டு பதிவு

சுத்த ஹம்பக். ஊழல் பொதுப் பிரச்சனை இல்லையா ? ஊழலை ஒழிக்க குரல் கொடுக்க தகுதி வேண்டுமா ? அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமா ?

எதுவுமே தவறு இல்லை. ஊழலை ஒழிக்கக் குரல் கொடுக்கத் தகுதி தேவை இல்லை, திகார் புகழ் ராசா கூட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கலாம், சாராய உடையார் கூட மது ஒழிப்புக்கு போராடலாம், இவையும் பொதுப் பிரச்சனை தானே, அவர்களும் பொது மக்கள் தானே..... அன்னஹசரே நல்லவரு வல்லவரு அவர் (மதவாதி) மோடியையோ, ஊழல் அமைச்சர்கள், அலுவர்களின் தலைவன் மன்மோகன் சிங்கையோ தனிப்பட்ட முறையில் புகழ்ந்திருந்தால் என்ன தவறு ? :)

ஊழலுக்கு எதிராக போராட தகுதி இல்லை சார்.

17 ஆகஸ்ட், 2011

அன்றாடம் தூய ஆடை அணிபவரா நீங்கள் ?

நான் தோல் செருப்புக் கூடப் போடுவதில்லை, காய்கறி உணவுக்களைத் தான் எடுத்துக் கொள்கிறேன் என்னால் சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு கெடுதல்களும் இல்லை என்று சொல்ல முடிந்தவர்கள் கூட தமக்கே தெரியாமல் சுற்றுச் சூழல்களில் மாசுகளை ஏற்படுத்தித்தான் வருகின்றனர். மனிதனின் அன்றாடத் தேவைகளில் உணவு தவிர்த்து உடை, தண்ணீர் சற்று மிகுதியாகவே பயன்படுத்தப்படுகிறது. உடலில் சராசரியாக காலுரை, உள்ளாடைகள் (இடுப்பணியாடை, மார்பணியாடை), மேல்சட்டை, கால்சட்டை என்று அணிந்துவருகிறோம் நான்கு வகை ஆடைகள் அணிந்துவருகிறோம். அதே போல் பெண்களும் நான்குவித ஆடைகள் அணிகிறார்கள், அவற்றின் பெயர் மற்றும் அமைப்பு மாறுபடும் அவ்வளவு தான், இவை பொதுவான ஆடை பண்பாடு, பிறவகை ஆடை விருப்பங்களை விட்டுவிடுவோம், அவை பெரும்பான்மையல்ல.

எப்போதும் 'வெள்ளையும் சொள்ளையுமாக' பளபளப்பாக இருப்பவர்களைப் பார்த்தால் நேர்த்தியான தோற்றத்துடன் தான் இருப்பர். அதில் ஒன்றும் தவறு அல்ல, அவ்வாறான ஆடை அணிபவர்களை பொதுவாக எல்லோருமே மதிக்கிறார்கள். மூன்று திங்கள் முன்பு சீனாவில் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன், அப்போது கழிவறையில் ஒரு பெட்டிச் செய்தி 'ஒரு நாளைக்கு சலவை துணிகளுக்கு பயன்படுத்தும் சலவை தூள்களின் அளவு மற்றும் அதில் இருக்கும் நச்சுகள் கடலில் கலக்கும் அளவுகளும் பட்டியலிடப்பட்டு, நீங்கள் சுற்றுப்புற ஆர்வலராக சுற்றுபுறத்தை பாதுக்காக்க விரும்பினால் இங்கு நீங்கள் பயன்படுத்தும் துண்டுகளை (டவல்) சலவைக்கு போடும் போன் மறுபடியும் பயன்படுத்த முடியும் அளவுக்கு இருந்தால் பயன்படுத்த முயற்சி செய்ய்யுங்கள்' என்றிருந்தது. அதாவது முகம் கழுவிவிட்டு துடைத்து பின் மூளையில் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த துண்டுகளை அடுத்துப் பயன்படுத்தும் முன், அதே துண்டை குளித்தப் பின்பும் துவட்ட பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்திய துண்டு குறைவான பயன்பாட்டுடன் இருந்திருந்தால் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதே. நானெல்லாம் வீட்டில் பயன்படுத்தும் துண்டுகளை துவைத்து பல நாட்கள் இருக்கும், முகத்தைத் துடைத்தாலே எதோ ஊறுவதாக இருக்கும் என்போர்களுக்கு அல்ல, ஆனால் அவர்கள் கூட விடுதிகளில் தங்கும் போது ஒருதடவைக்கு மேல் விடுதி துண்டுகளை மீண்டும் பயன்படுத்துவதில்லை.

சீனாவில் சுற்றுச் சூழல் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள் மாசுகளை கக்கிவருகின்றன, ஆனாலும் அவர்கள் கூட சுற்றுச் சூழலுக்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று தான் செயல்பட்டுவருகிறார்கள். துணிகளை துவைக்க நீரும், சலவை தூள்/ கட்டியும் இன்றியமையாதவை, தண்ணீர் என்றுமே பற்றாக் குறைதான், சலவை இரசாயனங்களும் நச்சுகள் நிரம்பியவை இவற்றை ஒரு சேர நாம் துணிகளை சலவை செய்யப்பயன்படுத்துகிறோம் என்பதால் அவற்றின் பயன்பாட்டின் கட்டுப்பாடு குறித்து கொஞ்சமேனும் கவனம் கொள்வது நன்று.

துணிகளை துவைக்க போடும் முன் உள்ளாடைகள், காலுறைகள் தவிர்த்தவற்றை மறுபடியும் ஒருமுறை அடுத்த நாள்களில் பயன்படுத்த முடியுமா என்று பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம், நமது தூய்மையான ஆடை சுற்றுச் சூழல் மீது உமிழ்ந்தே அப்படி மாறியுள்ளது என்பதை நினைவில் கொள்வது நலம். செய்யாத செலவு அல்லது தவிர்க்கும் செலவுகள் தான் சேமிப்புகளே. உட்காரும் டாய்லெட்டில் கொஞ்சம் எச்சிலை துப்பிவிட்டு 10 லிட்டர் தண்ணீரை திறந்துவிட்டு ஓடவிடுமுன், அதே எச்சிலை பக்கத்தில் இருக்கும் வாஷ்பேசனில் துப்பிவிட்டு கொஞ்சம் தண்ணீர் திறந்துவிட்டாலே ஓடிவிடும், தண்ணீரும் குறைவாக செலவாகும் என்பது பற்றி பலர் நினைப்பது இல்லை. மேலும் தண்ணீரை திறந்துவிட்டுக் கொண்டே முகச் சவரம் செய்வதைத் தவிர்க்கலாம்.

குறைந்தது நான்கு வாளி தண்ணீரில் குளித்தால் குளித்தமாதிரி இருக்கும் என்றால் அதற்கு பயன்படும் சோப்புகளும் சேர்ந்து வீணாகும் நீர் தான் குளித்தமாதிரி இருப்பதற்கு கொடுக்கும் விலை. வரும் தலைமுறைகளுக்கு அசையா சொத்துகளை சேர்த்து வைக்கும் ஆர்வத்தில் கொஞ்சமேனும் அதே தலைமுறை சுற்றமான காற்றையும், தண்ணீரையும் சேமிக்க முடியாமல் போவது வியப்பளிக்கவே செய்கிறது. நாளைக்குத் தேவை என்பதில் பணம் பொருள் தவிர்த்து சுற்றுச் சூழலும் மிகத் தேவையான ஒன்று, என்னதான் ஆடம்பர மாளிகையில் வசித்தாலும் மூச்சுக் காற்றை விலைகொடுத்து யாரும் பயன்படுத்த முடியவே முடியாது. அப்படி பயன்படுத்துபவர்கள் பணக்கார நோயாளிகள் மட்டுமே. தண்ணீரை தூய்மையாக்கவும் ரசாயனங்கள் தான் பயன்படுகிறது, அவ்வாறு ரசாயனம் கலக்கப்பட்டு தூய்மை பெரும் நீர் உண்மையிலேயே தூய்மையான நீரா ? பணத்துக்கு கேடு என்றாலும் கிடைக்கும் பிற தண்ணீரைவிடப் பரவாயில்லை என்பது மட்டும் தான் அவற்றின் உண்மை.

கொஞ்சம் விலை உயர்ந்தது என்றாலும் நல்ல பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினால் அவற்றை ஒருநாளைக்கு மேலும் துவைக்காமல் பயன்படுத்த முடியும், ஜீன்ஸ் ஆடைகளை பலநாட்கள் துவைக்காமல் பயன்படுத்தும் போது பருத்தி ஆடைகளை இரு நாட்கள் பயன்படுத்துவதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது. என்ன தான் துவைத்த ஆடையை, புதிய ஆடையப் போட்டுக் கொண்டாலும் நறுமண திரவங்களைத் தான் பலரும் தெளித்துக் கொள்கிறார்கள் அல்லவா ? வியர்வை சுரக்க வேலை செய்பவர்கள் துவைக்காமல் மீள் பயன்பாடு செய்ய முடியாது ஆனால் குளிர் அறையில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தலாம் அல்லவா ? நம்காலத்தில் பெரிய கெடுதல்கள் ஏற்படாது என்பது நம்பிக்கை என்றாலும் எதிர்காலத்தில் சுற்றுச் சூழலை கெடுப்பதில் நம் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குறைத்துக் கொள்ளலாம். பரம்பரை நோய்களுக்கு நாம் காரணி இல்லை, அது நம் வழியாகவும் பரவுகிறது, ஆனால் இயந்திரங்களை, இரசாயனங்களை பயன்படுத்தும் இன்றைய நம் வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடுகளின் கூறுகளாக சுற்றுச் சூழல் கெடுவது நம் காலத்தில் தானே நடக்கிறது, அவற்றை நாம் நம் வருங்காலத்தினருக்கு வலிய திணித்துவருகிறோம் என்பது உண்மை தானே.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பேன், ஒரு நாள் போட்ட சட்டைய மறுநாள் போடமாட்டேன் என்போரே.....வரும் காலத்தில் உங்கள் பேரன்களுக்கு குளிக்கத் தண்ணீரோ, உடுத்த பருத்தியோ விளையாமல் போகலாம். மரம் நடுவது மட்டுமே சுற்றுச் சூழலை பாதுகாக்கும் என்ற நம்பிக்கயுடன் நமது அன்றாட தண்ணீர் மற்றும் சலவை சோப் பயன்பாட்டின் கட்டுபாடும் கூட சூற்றுச் சூழல் விரைவாக சிதைவதை ஒரளவு தடுக்கும் என்பதை நினைவு கொள்க. கணக்கெடுத்துப் பார்த்தால் ஒருநாள் நம் சலவைக்கு பயன்படுத்தும் சோப்பு நீர் கடலில் கலப்பதையும் திருப்பூர் ஆடைகளின் சாயக் கழிவு நீரையும் ஒப்பிட்டால் சாயக்கழிவுகள் அவற்றில் 10 விழுக்காடு கூட இருக்காது என்றே நினைக்கிறேன்.

சுத்தம் சூழலைக் கெடுக்கும் என்று புது மொழிகள் ஏற்படும் நாள் விரைவில் இல்லை. திருவள்ளுவர் இன்றிருந்தால் புறந்தூய்மை நீரால் அமையும் என்பதற்கு பதிலாக 'மிகவும் புறந்தூய்மை நீரைக் கெடுக்கும்' என்ற பொருள் பட எழுதுவார்.

இடுகையின் சுருக்கம் : எந்த ஒரு தூய ஆடையும் சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தி தான் பளபளக்கிறது, ஆடைகளில் மின்னலடிக்கும் வெண்மை எதிர்காலத்தின் கருமை. சலவைத் தூள், கட்டி, குளிப்பு கட்டிகள் (சோப்) பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கடைபிடித்தால் சுற்றுச் சூழலை காப்பதற்கு நம்மாலான பங்குகளை ஆற்றி வருங்காலத்தினருக்கு கொஞ்சமாவது நல்ல தண்ணீர், காற்று மீதம் வைக்க முடியும், நீர்வாழ் உயிரனங்களை பாதுக்காக்க முடியும். இராசயனங்கள் குறைந்த (ECO Friendly) மற்றும் இராசயனம் அற்ற சலவை பொருள்களை பயன்படுத்தத் துவங்குவோம்

சுட்டிகள் :
http://www.nosuds.com/NSEnvironment.htm

http://www.accu.or.jp/litdbase/material/pdf2/mt/mt10.pdf

16 ஆகஸ்ட், 2011

சென்றவார அறுசுவை உணர்வுகள் !

இனிப்பு : எங்க ஊரு நாகைக்குச் சென்று சென்ற வியாழன் அப்படியே (பாலையூர் - எ - பாலூர்) கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றிருந்தேன், கிழக்கு கடற்கரைச் சாலை அந்தப் பகுதியில் புதிதாகச் செல்வதால் இருசக்கர வாகனத்தில் சாலையில் கீழே இறங்கி ஒரு கி.மீ குறுகிய பாதையில் வண்டியை ஓட்டினால் போதும் அடைந்துவிடலாம், கிட்டதட்ட ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகிற்று அப்படிப்பட்ட பச்சைகளைப் பார்க்க. பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் காலம் மழைக்காலம் அல்லது அறுவடை முடிந்த பிறகு என்பதால் வயல்வெளிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் விவசாயம் துவங்கி அறுவடை வரை ஊருக்குள் மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார்கள், இப்போதெல்லாம் அவ்வாறு பார்க்க முடியவில்லை, வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்.

நகரங்களுக்கு பலர் பெயர்ந்துவிட்டார்கள், சிறுவிவசாயிகளே தங்கள் நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டு பிற விவசாயிகளுக்கும் செய்து தருகிறார்கள், வேலைக்கு ஆள் கிடைக்காத சூழலில், விவசாயம் பார்க்க முடியாததால் பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. கதிர் அறுக்க, நாற்று நட எந்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை இயக்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது, கிராமங்களில் மாட்டுவண்டிகளையோ, மாடுகளையோ பார்க்க முடியவில்லை, நெல் அறுத்து குவித்து வைத்த வைக்கோல் போர் விலை போகாமல், யாரும் வாங்காமல் அப்படியே தான் கிடக்கிறது. அம்மா காலம் வரையிலும் எங்க வயலில் தட்டுத்தடுமாறி விவசாயம் நடக்கும், அதன் பிறகு என்ன ஆகும் என்று இப்போது தெரியவில்லை, இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வயலில் இறங்கி நடந்தேன், முன்கூட்டியே அம்மா அங்கு சென்றுவிட்டதால் எதிர்கொண்டார்கள். வயல் வெளி என்ன ஒரு பசுமை, கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கண் கொள்ளாக் காட்சி. வாய்க்காலுக்கு முதல் மடை என்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போது தண்ணீர் பாய்ச்ச வசதியான வயல்வெளி தான். சிறுவயதில் படிக்கிற காலத்தில் அங்கு செல்ல விருப்பம் இருக்காது, ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி வேலை செய்யச் சொல்லுவார்கள். பயிர் சுனை பட்டால் கை காலெல்லாம் அரிக்கும், இப்ப பார்க்க குளிர்ச்சியாக இருக்கு, அதுவும் மாலை 5 மணிக்கு மேல் மஞ்சள் வெயிலில் சுற்றிலில் பச்சை வெளிகள்.

அம்மா





களையெடுக்கும் பெண்மணி


புளிப்பு : சென்னையில் நண்பர் வசிக்கும் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன், அது ஒரு 7ஜி ரயின்போ காலனி போல் குடியிருப்பு பகுதிகளுக்கு ச-ரி-க-ம-ப-த-நி- என்று ஏழு ஆங்கில எழுத்தில் பெயர் வைத்திருந்தார்கள், அன்றைய நாள் ஞாயிறு குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து 'நம் குடும்பம்' என்ற பெயரில் இணைந்து கொண்டாடினார்கள், கோலப் போட்டிகளெல்லாம் நடைபெற்றது, கோலங்களில் மயில் கோலம் முதல் பரிசாகவும், கதகளி முகம் இரண்டாம் பரிசாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, கோலங்களில் பல மயில் கோலங்கள் இருந்தன.

பல மாநில மக்கள் அந்த குடியிருப்பில் வசித்தாலும் தமிழ் கோலத்திற்கு முதல் பரிசு. தமிழக மக்கள் இன்னும் கலை உணர்வோடு தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இருப்பிடங்களின் சூழல்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள இது போன்ற தனிப்பட்ட விழாக்கள் தேவை, அங்கு வசித்த அனைத்து சிறுவர் சிறுமியர்களையும் மேடை ஏற்றி எதோ அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வைத்து, ஒருவரையும் ஏமாற்றாமல் அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்தனர். நல்லா தமிழும் ஆங்கிலமும் தெரிந்த எந்த இருவரும் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது, அங்கே வசித்த இந்திக்காரர்கள் அவர்களுக்குள் இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தற்போது பேசாமல் விட்ட 'சார் சார்' தமிழகத்தில் வியாதியாகவே பரவி இருக்கிறது.



முதல் பரிசு பெற்றது



இரண்டாம் பரிசு பெற்றது




உப்பு : கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்தேன், இதுவரை பலமுறை அந்த வழியில் சென்றிருந்தாலும் பகலில் சென்றதில்லை, சோழிங்க நல்லூர் தாண்டி 'இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரைச் சாலை உங்களை இனிதே வரவேற்கிறது' என்ற வரவேற்பு பலகை இருந்தது. இயற்கை எழில் ஒன்றும் அவ்வளவாக ஈர்க்க வில்லை, உப்பளங்கள் இருக்கின்றன, வீட்டுமனைகள் வருவதற்கான கற்கள் நடப்பட்டு இருக்கின்றன, சாலைகளும் நேரானதாகவோ அகலமாகவே இல்லை, சாலை நடுவே தடுப்புகள் இல்லை, அந்த சாலையில் மணிக்கு 60 கிமி மேல் செல்வது பாதுகாப்பற்றது, நாள் தோறும் நடக்கும் விபத்துகளே கண்கூடு. இரவில் எந்த ஒரு போக்குவரத்து விளக்கும் கிடையாது. ஈசிஆர் சாலை எமன் குடியிருக்கும் சாலை தான்.

நான் கண்ட ஒரே இயற்கை எழில் லேசான மழை பெய்ததும் ஏற்பட்ட அழகான வானவில் தான். அதைத் தாண்டி பாண்டிச்சேரி சென்றேன் பாண்டி முதல்வர் இரங்கசாமிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளாம், 'அழகிரி டைப்' மிதமிஞ்சிய புகழ்ச்சி சுவரொட்டிகள் பாண்டி எங்கும் இரங்கசாமியின் பல்வேறு 'போஸ்களில்' சுவரொட்டிகள் முகம் சுளிக்க வைத்தது, அதில் ஒன்று தெய்வத்திருமகன் போஸ்டரின் நடுவே இரங்கசாமியின் படம் இருப்பது போன்றும் அடிக்கப்பட்டு இருந்தது, மனநலம் குன்றிய நாயகனாகக் காட்டப்பட்ட படத்தில் ரங்கசாமி முகம் ஒட்டுதல், வாழ்த்தா, வதையா ? ஒட்டியவர்களுக்கே வெளிச்சம். டிவிஎஸ் பிப்டியில் வரும் முதல்வருக்கு இவ்வளவு ஆடம்பர போஸ்டர்களா ? அடுப்பொடிகள் வேலைகள் தான், பாவம் வாழ்த்துவதற்கு பதில் வசைபாடி, முகம் சுளிப்போர் மிகுதி, எதுக்கு இத்தனை ஆடம்பரம், தேவையா அட போங்க சார். தமிழகம் - பாண்டியின் போஸ்டர் பண்பாடு ரசிக்க முடியவில்லை. இரங்கசாமிக்கு அடுப்பொடிகளே ஆப்பு வைத்துவிடுவார்கள் போல. பாண்டியைச் சேர்ந்த காரைக்காலில் சுவரொட்டிகள் கண்ணில் படவில்லை.






துவர்ப்பு : சென்ற வெள்ளிக்கிழமை சென்னை மெரினா சாலை வழியாக பயணித்தேன், கண்ணகி சிலை மிடுக்காக நின்று கொண்டிருந்தது, இன்னும் அம்மா விசுவாசிகள் கண்ணில் படவில்லையோ, இல்லை அதற்காகவே அந்தப்பகுதி சிலைகள் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்படுமோ யார் கண்டது. பொதுச் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது சென்னையில் கவர்ந்ததில் ஒன்று, அம்மாவுக்கு பிறந்த நாள் வரும் வரையில் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் சென்னையில் மாற்றமே இல்லாத பகுதி பாரிஸ் கார்னர் தான். அங்கே இருக்கும் மொத்த விற்பனைக்கடைகளை சேட்டுகளும் மலையாளிகளும். கொஞ்சம் தெலுங்கர்களும் ஆக்கிரமித்துள்ளனர், அவர்களிடமிருந்து சில்லரை விற்பனைக்காக தமிழர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மின்னனு சாதனங்களின் வாயிலாகவே அந்த இடங்கள் இருக்கின்றன, உலக நாடுகள் சீனப் பொருள்களைத் தவிர்த்தாலும் அவர்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் 'சிவப்பு' கம்பளம் விரித்து வைத்துக் கொண்டுள்ளது.





காரம் : அந்தப் பகுதியில் அமைந்த சரவண பவனுக்குச் சென்றிருந்தேன், குளிர்சாதன அறையில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் சனி / ஞாயிற்றில் தான் உட்கார இடம் கிடைகாது, தற்போதெல்லாம் வெளியே சாப்பிடுவர்கள் மிகுந்துவிட்டார்கள், அல்லது வீட்டுச் சமையல்கள் குறைந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சரவணா ஸ்பெசல் மீல்சாம். என்ன வென்று வாங்கினேன். 'அடப்பாவிகளா .........இவ்வளவு சாப்பிட்டுவிட்டு எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் ?' என்று நினைக்கத் தோன்றியது. அதில் அஜினமோட்டோ இல்லாத வகைகளே இல்லை, யாரு கேட்கிறார்கள். சுவை சுவை சுவையோ சுவை என்றே அனைத்து உணவு கடைகளிலும் அஜி(ர்)னமோடோ சேர்கப்படுகிறது.

உணவில் உப்பு அளவு, கொழுப்பு அளவு பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'என்னன்னு தெரியலை சார், நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார், இன்னிக்கு டக்குன்னு போய் சேர்ந்துட்டார்' யாரேனும் சொன்னால் விசாரித்து பாருங்கள், நேற்று அவர் ஏதேனும் புல்மீல்ஸ் கட்டி இருக்கக் கூடும். சென்னையில் அசைவ உணவுக்கடைகள் சைவ உணவு கடைகள் அளவுக்கு பெருகிவிட்டது, முன்பெல்லாம் 'சுத்தமின்மை' (அதாவது அசைவம் நன்றாக தூய்மை செய்து சமைக்கமாட்டார்கள் என்பதாக) காரணமாக வெளியே அசைவம் சாப்பிட மக்கள் தயங்குவார்கள், இப்ப பழகிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வரும் போது ஏசி பேருந்து பயணம் மிகக் குறைந்த பயணிகள், ஒரு அரைக்கிறுக்கன் செருப்பணியாத தன் காலை யாருமற்ற இருக்கை மீது வைத்திருந்தான். நடத்தினர் சொன்னதும் எடுத்துக் கொண்டான். அவன் அரைக்கிறுக்கன் என்பது அவன் செருப்பே அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் உறுதிபடுத்திக் கொண்டேன். ஏசி பேருந்தில் செல்பவர்கள் சாதாரணப் பேருந்தில் செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார்களாமே, அவர்கள் அந்த அரைக்கிறுக்கன் கால் வைத்த இடத்தில் கூட உட்கார நேரிடலாம்.


(இந்தப்படத்திற்கு என்ன செய்தியா ? மேலே இருக்கும் படத்தைப் போன்று தான், எந்த மரியாதையும் கிடைப்பதாகத் தெரியவில்லை, 1000 கோடிகளை விழுங்கிவிட்டு மதிப்பற்று கிடக்கிறது)

அன்று மாலை தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க்ஸ் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூன்றாம் மாடியில் தான் கழிவறையா ? மக்கள் வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கு ரண்டுக்கு போகவே மாட்டாங்களா ? ஏனிப்படி ? ஐஞ்சு மாடிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ?. உள்ளே அவசரத்துக்குச் சென்றால் 'வெஸ்டர்ன் டாய்லெட்' ஒண்ணே ஒண்ணு தான், அதிலும் சீட் கிடையாது, அதில உட்கார முடியுமா ? ஒருவழியாக முடித்து வந்தேன். ஏன் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் வைத்திருக்கும் குறியின் கவனம் சிறிதேனும் வருபவர்களுக்கு நல்ல கழிவறை ஏற்படுத்தித் தர வைக்க முடியவில்லை. அரசுகளின் கவனமின்மையும் காரணம், வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகள் இல்லை என்றால் அனுமதிகளை நீக்கலாமே. அப்போது அலறி அடித்து வசதி செய்வார்களோ.




சென்னையில் ஆட்டோக்கள் குறைந்து அந்த இடத்தை மாருதி வேன் போன்ற கூட்டுப் பயண வாகனங்கள் நிறைய ஓடுகின்றன, 8 பேர் வரை பயணம் செய்ய ஏற்ற வகையிலும், 5 கிமிதொலைவு வரை 10 ரூபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை ஓரளவு போக்கு வரத்து நெருக்கத்தை குறைத்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சாலை குண்டு குழிகள், தண்ணீர் இன்மை, மின்சார துண்டிப்பு, கொசுக்கடி இவற்றில் எதையும் பற்றி கவலைப்படாமல் ஆடி வெள்ளி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சென்னையில் அங்காங்கே சென்னையின் காலம்காலமாக வாழ்பவர்கள் நடத்திவருகிறார்கள், 'ஆத்தாள கும்புட்டு துண்ணூறு இட்டுனு போ....பாசாயிடுவ' எந்திரன் வசனம் நினைவுக்கு வந்தது.

கசப்பு : ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:15 விமானம், எல்லாம் முடித்து விமானத்திற்கு செல்லும் முன் காத்திருக்கும் அறைக்குச் சென்றேன், அந்த கூடத்தில் நடுப்பகுதிக்கு சற்று தள்ளி 'ஸ்மோக்கிங் அறைக்கு' எதிரே ஒரு நடுத்தரம் கடந்த பெண் மணி கிடத்தப்பட்டு இருந்தார், அவர் இறந்து விட்டார் என்பது அவரது அசைவற்ற உடலே சொன்னது. அவரது உடலில் இருந்த நகைகளை கழட்டி பாதுக்காப்பிற்காக கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர் ஒரு கடைநிலை ஊழிய பெண் மணி மூலமாக காவலர்கள், அங்கு நடப்பதைப் பார்த்தால் சென்ற அரைமணிக்குள் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றே தோன்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்தவராம், திரும்பப் போகும் முன் இதய வலியால் உயிர் துறந்திருக்கிறார், அவர் தமிழர் , 55 வயது என்று காவலர்களின் உரையாடலில் இருந்து தெர்ந்தது, பெயர் ஊரைக் கூட யாருக்கு அலைபேசி வழியாக தெரிவித்து ஆணை யிட்டுக் கொண்டிருந்தனர், எனக்கு பெயரும் ஊரும் நினைவுக்கு வர இயலவில்லை.

கிட்டதட்ட 1.30 மணி நேரம் அவ்வாரே கிடத்தப்பட்டு இருந்தார், காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோர் அருகில் நின்று கொண்டிருந்தனர், அங்கு வந்த பயணிகள் ஒருவருக்கும் அந்தப் பகுதியை தாண்டி செல்ல மனம் செல்லவில்லை. இறந்தவர் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றே தவிர்த்தனர், வழக்கமாக 'புகைப்பிடிக்கும் அறைக்கு' செல்லும் ஒருசிலர் கூட பயத்தின் காரணமாக அங்கு செல்லவில்லை. நான் தொலைவில் இருந்து கூட உடலை படம் எடுக்க விரும்பவில்லை. எதிர்பாராவிதமாக மரண மடைந்த ஒருவரை காவல் துறை முறைப்படியான நடவடிக்கை ('புரோசிஜர்') என்ற பெயரில் அங்கேயே கிடத்தி இருந்தது முகம் சுளிக்க வைக்காவிட்டாலும் வருத்தம் ஏற்படச் செய்யதது, உறவினர்கள் யாரும் அற்ற ஒருவராக அவர் கிடத்தி இருந்தது ஏற்கத்தக்கதே அல்ல, அவர் உடலுக்கு கொஞ்சமேனும் மரியாதைக் கொடுத்து, புரொசிஜர் படி உடனே அவரை அப்புறப்படுத்தாவிட்டாலும் சுற்றிலும் தற்காலிக திரையாவது அமைத்திருக்கலாம்.

அவருக்கும் மரியதை கொடுக்காவிட்டாலும் கூட விமானத்தில் ஏறக்காத்திருந்தவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது ஏனெனில் அவர்களில் பலர் வயதான பெற்றோர்களை பிரிந்து வந்திருக்கக் கூடும், அவர்களை நினைத்தாவது உடலை மறைத்திருக்கலாம். மற்றும் வயதானவர்களே கூட இருக்கக் கூடும். வழக்கமாக விமானத்திற்கு காத்திருக்கும் போது பயணத்தின் போது அசைப்போட்டபடியும், சில நண்பர்களுக்கு அலைபேசிக் கொண்டு இருப்பேன், ஆனால் இந்த முறை 'பாவம் அந்த பெண்மணி, அவரது உயிருக்கு தெரிந்திருக்கிறது நாடுகள் என்பது பெயர்களால் பிரிக்கப்பட்ட ஒரே மண், எங்கு பிரிந்தால் என்ன ?' ஆனால் அருகில் உறவினர்கள் இல்லையே' என்பது தான்.

15 ஆகஸ்ட், 2011

அண்மைய நாட் குறிப்புகள் !

சென்ற ஞாயிறு (07 - 14 ஆகஸ்ட்) முதல் நேற்றைய ஞாயிறு வரை தமிழகத்தில் இருந்தேன், மிக மிக தனிப்பட்ட பயணம் என்பதால் நண்பர்கள் யாருக்கும் முன்கூட்டித் தகவல் அளிக்கவில்லை, யாரையும் சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. எதிர்பாராமால ஏற்பட்ட சந்திப்புகளில் என்னுடன் முன்பு வேலைப்பார்த்தவர்கள், படித்தவர்கள் என 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு விட்டு இருந்தவர்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினேன்.

நாம பார்த்து 10 ஆண்டு ஆச்சு, நாம பார்த்து 23 ஆண்டுகள் ஆயிற்று என்று அவர்கள் குறிப்பிடும் முன்பே அவர்களுடைய தோற்றங்கள் அது உண்மை தான் என்றது. பேச்சிலர்களாக இருந்தவர்களுக்கு மகனோ மகளோ படித்துக் கொண்டிருந்தார்கள், சைக்கிள் வைத்திருந்தவர்கள் மோட்டார் வாகனங்களுக்கும், பைக் வைத்திருந்தவர்கள் கார்களுக்கும் மாறி இருந்தார்கள், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள், வங்கிக் கடன்களையெல்லாம் மீறி சொந்தவீட்டில் இருக்கும் அவர்களது முகத்தில் தெளிவு இருந்தது, பேச்சிலர் வாழ்கை , இல்ல வாழ்க்கையென மாறி இருந்தாலும் வரட்டு வேதந்தமாக அப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக யாரும் குறிப்பிடத் தவறவில்லை. இவர்களில் தற்போது 38 முதல் 48 வயதினரும் அடக்கம், சிலருக்கு முன் தலை வழுக்கையும், சிலரது மிகவும் கருமையான தலைமுடி அது 'டை' என்றே சொல்லியது. நான் 'டை' அடிப்பதில்லை என்றாலும் சொன்னால் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தலைமுடி தனிமனித தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன்.

என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்தவர்களில் ஐவரை ஒன்றாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஒருவர் சிங்கப்பூரில் குடிமகனாகவும் மற்ற ஒருவர் வளைகுடாவில் தற்காலிகப் பணியிலும் இருப்பவர், மற்ற மூவரில் ஒருவர் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர், இன்னொருவர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நகரினுள் குடிபெயர்ந்து படகு கட்டித்தந்து பெரும் பொருளீட்டி வருகிறார், மற்றொருவர் பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடர பொருளியல் வசதி இன்மையால் கட்டிட நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கம்பி கட்டி வேலை பார்த்துவருகிறார், இவர்களில் ஒருவரை அவ்வப்போதும் மற்றவர்களில் சிலரை எப்போதாவது வாய்பில் சந்திப்பதும், கட்டிட வேலை பார்த்து வருபவரை 23 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்க நேரிட்டது, அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லி அழைத்தார், எனக்கு அவரை அடையாளம் தெரிந்தாலும் பெயரை நினைவு கூறத் திணறினேன், பின்னர் அவரே தெளிவு படுத்தினார், இது ஒருவகையான மூளைச் சிக்கல், பெயரும் உருவமும் மூளையில் தனித்தனியாக சேமிக்கப்படுமாம், நாட்கள் கடந்துவிட்டால் ஒன்று சேர்ந்து சட்டென நினைவுக்கு வராது, சிறிது நினைவூட்டல் தேவை என்று எங்கோ படித்தது அறிவியல் / உயிரியல் உண்மை ஒன்றை தெளிவு படுத்தியது. இரவு 7 மணிக்கு பிறகு நாகை கடற்கரையில் அமர்ந்தும்,





(நண்பர்கள் இரவி, ஆறுமுகம், சக்திவேல், இராமனாதன் (எ) இராமு மற்றும் நான்)


பின்னர் பேருந்து நிலையத்திலும் பேசிக் கொண்டிருந்தோம், அவர்களிடையே இயல்பாகவே 'நீ வா.....போ' தொடர்ந்தது, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம்மைப் எப்போது பார்த்தாலும் மகிழ்பவர்கள் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும். ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கி இருந்ததால் அவர்களின் இல்லம் வரையிலெல்லாம் சென்று வர இயல வில்லை. 10 ஆம் வகுப்பில் படித்த பலரை மற்றும் வகுப்பாசிரியர்கள் பலரை நினைவு கூர்ந்தார்கள். இரை தேடிய பறவைகளாக அவர்களெல்லாம் எங்கெங்கோ இருப்பதாக அறிய நேரிட்டது. எங்களுடைய ஆசிரியர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்றும் தெரிந்தது. காலம் நம்மை கடந்து வேகமாக செல்வது நமக்கு தண்டனையா ? நல் மகிழ்ச்சியா ? அவையெல்லாம் தற்போதைய நிலையைப் பொருத்ததே. நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகள், சொந்த வீடு பிற வசதிகள் என்பது காலம் நமக்கு கொடுத்த நற்கொடையாகத் தானே கொள்ள முடியும்.

அதற்கு முன்பே சென்ற ஞாயிற்றில் சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் வேலைப் பார்த்தவர்களில் இருவரை சந்தித்தேன். நேற்று அலுவலகத்தில் எப்படிப் பேசிக் கொண்டு இருந்தார்களோ அதே போல் தான் இன்றும் பேசுகிறார்கள் என்று நினைக்க வைத்தது, அவர்களுடைய இன்றைய குடும்ப பொறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் 14 ஆண்டுகள் கடந்தது கூட நேற்று என்ற அளவில் தான் அவர்களிடையே இருந்தது. 'தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நீ, உனக்கு என்ன குடும்பத்தில் பெரிய பிரச்சனை இருக்கப் போகிறது, தங்கம் தங்கம்னு தாங்குவாங்களே மனைவி' ன்னு நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

(நண்பர்கள் திருச்செல்வன் மற்றும் தமிழ்செல்வன்)

'குடும்பத்தில் தாங்குறாங்களா இல்லையாங்கிறதெல்லாம் வேற விசயம், ஆனா தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நல்லவனாக இருப்பான் என்று யார் சொன்னது, தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேன், ஆனா நல்லவன் என்று நினைக்க ஒன்றும் இல்லை, தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிய உதவிகளெல்லாம் செய்வதில்லை, எதை வச்சு என்னை நல்லவன் என்று சொல்கிறீர்கள் ?' என்றார் நண்பர் தமிழ்செல்வன். பொதுப்புத்தி பற்றி பாடம் படித்த நமக்கு அவர் சொன்னது 'பொளேர் என்று அறைபட்ட உணர்வை ஏற்படுத்தியது ?' நாம தனிமனித ஒழுக்கத்தை குடி, பீடி களில் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அதை தொடர்பவர்களில் நல்லவர்களும் உண்டு அதைத் தொடராதவர்கள், தொடாதவர்களை ஒழுக்கமானவர்களின் சான்றிதழகாகவும் கொள்ளத் தேவை இல்லை, இவை முதலில் உடல் நலத்தையும் பிறகு குடும்ப நலத்தையும் சார்ந்து பிறகு மிதமிஞ்சிப் போனால் மட்டுமே ஒழுங்கீனத்திற்குள் வரும் என்று அவர் சொல்லியதில் இருந்து அறிந்து கொண்டேன்.





(நண்பர் ஜெ.கண்ணன் மற்றும் அவருடன் சுரபி - Surabi நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்)

நேற்றைக்கு முந்தைய நாள், நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்தக மையம் (சென்னை டிரேட் செண்டர்) நண்பர் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன், அவரும் அங்கு காட்சிக் கடை (ஸ்டால்) வைத்திருந்தார். சென்னை பல துறைகளில் நன்கு வளர்ந்துள்ளது, சர்வதேசத் தரத்துடன் காட்சிக் கூடம் அமைந்திருந்தது, கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கி இருந்தது, மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய காட்சிகள் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் ஏறத்தாழ 200 ஸ்டால்கள் வரை அமைத்திருந்தார்கள்.





மிகவும் புதிய (அதி நவீன) உத்திகளில் அமைந்த மின்னனு சாதனங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள், நான் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களில் ஒன்று மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வது, அதில் எனக்கு உயர் மேலாளராக பணி புரிந்தவர் பின்னர் தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இல்லை. எனது நண்பரிடம் குறிப்பிட்டு கேட்டேன் 'எங்க சார் ஸ்டால் போட்டிருக்கிறாரா ?' நண்பரும் அதே துறை சார்ந்தவர் என்பதால் அவர் உடனேயே சொன்னார். 'அவரை நன்கு தெரியும் ஸ்டால் எண் இது' என்றார். உடனேயே சென்று பார்த்தேன். 'வாங்க கண்ணன்...' என்று உற்சாகமாக அழைத்து சிறிது நேரம் பேசி பின்னர் அவருடைய அலுவகலத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி 'ஹி ஈஸ் மிஸ்டர் கண்ணன், வெர்ரி ஹார்ட் ஒர்கிங்க் பர்சன்' (அதெல்லாம் அந்த காலம் சார், இப்போதெல்லாம் வேலை பார்ப்பதே இல்லை.......என்று சொல்ல நினைத்தேன்), கிளம்பும் முன் இனிப்புகளை கொடுத்தார் வாங்கி வந்தேன்.






(எனது முன்னாள் மேலாளர் திரு எல் நாரயணன் மற்றும் அவரது சிலிகான் லேப்ஸ் காட்சி)


நான் இதுவரை 9 நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதில் ஓராண்டுக்கு கீழ் மற்றும் மிகுதியாக 3 ஆண்டுகள் வரை வேலை பார்த்த நிறுவனங்கள் உண்டு, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களில் பலர் இன்றும் அன்போடுதான் பழகுகிறார்கள், நம் நிறுவனத்தை விட்டுச் சென்றவன் என்று நினைப்பது கிடையாது. இதில் சிங்கப்பூர் சீன நிறுவன உரிமையாளர்களும் கூட உண்டு. ஊதியத்திற்கான வேலை செய்வதைத் தாண்டி ஏதோ கொஞ்சமேனும் அவர்களை நாம் நினைவு கூற வைக்கும் படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்க எனக்கும் என் நடவடிக்கைகள் பெருமையைத் தருகின்றன.

நேற்றைய முந்தைய நாள் சனிக்கிழமை, பதிவர்களில் பதிவர் என்பதைத் தாண்டி தவிர்க்க முடியாதவர்களில் ஒருவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன், அவர் வேறு யாரும் இல்லை, நம்ம 'தமிழா தமிழா' டிவி இராதாகிருஷ்ணன் ஐயா தான். அவரது மனைவி காஞ்சனா அம்மாவும்வீட்டில் இருந்தார்கள், ஒருவேளை அவர்கள் இருவரையும் பார்க்காமல் திரும்பி இருந்தால் மிகவும் ஏமாற்றமாக அமைந்திருக்கும், குறிப்பாக டிவிஆர் ஐயா எனது அழைப்புக்காக காத்திருந்ததாகச் சொன்னார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வருவதாகச் சொல்லி இருந்தேன், மேல் தள வராண்டாவில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார், கிளம்பும் போதும் அப்படியே. என்ன ஒரு பந்தம் ? நினைத்தாலும் பிடிபடவில்லை. உணர்வுகளால் உள்ளத்தில் நுழைந்தவர்கள் எப்போதும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நண்பர் என்று சொல்லிக் கொள்ள ஆண்டுக்கணக்கில் அவரிடம் பழகி இருக்கவும் இல்லை, உறவுக்காரரும் இல்லை, இருந்தாலும் இவரைப் பார்க்க ஏதோ ஒரு ஈர்ப்பு தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. நட்பு, உறவு இவற்றையெல்லாம் தாண்டி, நாம்/நம்மை விரும்புவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். அவற்றை என்னவென்று சொல்ல ? நம்பிக்கைகளைத் தாண்டிய 'முற்பிறவி தொடர்போ ?' இருக்கலாம். :)

அடுத்த பதிவில் நண்பர்கள் அல்லாத பிற தகவல்கள் எழுதுகிறேன்

2 ஆகஸ்ட், 2011

நட்பு நாளில் கிடைத்த நண்பர் - முக நூலுக்கு நன்றி !

80களின் இறுதியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அலுவலகம் மூலமாக கிடைத்த நட்பு, அலுவலகம் மாறிய பின் தொடர்வது அரிதாகவே நிகழ்ந்தது, காரணம் அப்போதெல்லாம் இன்றைய அலைபேசிகள் போன்ற இணைப்புகள் இல்லை, அதையும் மீறி நட்புகள் தொடர குறிப்பிட்ட நண்பர் நமக்கு நன்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும், அவர் வாடகை வீடு அல்லாத தன்னுடைய வீட்டில் வசித்துவருபவராகவும், அவரது பெற்றோர்கள் மற்றும் இல்லத்தினர் வரை நாம் நட்பு பாராட்டி இருக்க வேண்டும், அப்படியான சூழலில் மட்டும் தான் தொடர்புகளை அவ்வப்போது மீண்டும் இணைத்துக் கொண்டிருக்கவே முடியும். மற்றபடி நன்கு பழகி இருந்தும் தொடர்பு விட்டுப் போனால் அதன் பிறகு அவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ நண்பர்களை பின்னாளில் தேடிப் போக அவர்கள் வாடகை வீட்டை காலி செய்து கொண்டு எப்போதே சென்றிருப்பார்கள், சொந்த வீட்டில் வசிப்பவர்களை மட்டுமே தேடிப்பிடிக்க முடிந்தது.

முகநூலில் பதிவு செய்த பிறகு எனக்கு நினைவு தெரிந்த நண்பர்களை தொடர்ந்து அதில் தேடிவருகிறேன், அப்படியாக தேடிய போது என்னுடன் 90 களில் பணி புரிந்து பின் காணாமல் போனவர் சிக்கினார், இருந்தும் அவரது படிப்பு குறித்த விவரங்கள் என்னைக் குழப்பியது, எனவே நான் பணிபுரிந்த ஆண்டு விவரம், நிறுவனப் பெயர் ஆகியவற்றையும், அவர் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு சென்ற மார்ச் மாதம் குறிப்பு அனுப்பினேன். சரியாக நட்பு நாளில் நேற்று குறிப்பு அனுப்பி அவர் தான் அது என்று தெரிவித்திருந்தார், பின்னர் அலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லி இருந்தேன், அவரும் சிங்கப்பூரிலேயே பணி புரிவதால் உடனடியாக அழைத்துப் பேசினார், தொடர்ச்சியாக 25 நிமிடங்கள், பழைய கதை, தற்போதைய இல்ல நிலவரம் குறித்தெல்லாம் பேசினோம், நேரில் சந்திக்க இந்த வாரம் வாய்ப்பிருக்கிறது. அவர் மூலமாக இணைப்பு துண்டிக்கப்பெற்ற பிற நண்பர்களின் விவரங்களும் என் மூலமாக அவருக்கும் சில நண்பர்கள் பற்றிய விவரங்களும் தெரிய வந்தது.

பழைய நண்பர்களை முகநூலில் தேடும் போது சிக்கல் என்னவென்றால் அவர்கள் முகங்கள் மாறி இருக்கும், அதைக் கூட கண்டுபிடித்துவிடலாம், ஆனால் அவர்களது முகப்(பு) படத்தில் (ப்ரொபைல்) வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் கண்டுபிடிக்க இயலாது. எனவே உங்கள் முகப்பு படங்களை அமைக்கும் போது அதில் உங்களது முகப்பு படங்களையே போடுங்கள், குழந்தைகள் அல்லது வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் தேடிவருபவர்கள் கண்டுகொள்வது கடினம் தான்.

உங்களுக்கு பழைய நண்பர்கள் தொடர்பு குறித்த ஆர்வம் இருந்தால்,

* உங்கள் புரொபைல் படம் உங்களுடையதாக இருக்கட்டும், அதில் 20 வயதிற்குப் பிறகான பல்வேறு புரொபைல் படங்கள் இருந்தால் இணைத்து வையுங்கள், நண்பருக்கு ஒரு வேளை உங்கள் பழைய முகமே நினைவு இருக்கக் கூடும்.
* பிறந்த ஊர் பற்றிய விவரங்கள்

* படித்த பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விவரங்கள் ஆண்டுகள் உள்பட தெரிவியுங்கள்

* வேலை பார்த்த நிறுவனங்களின் பெயர் மற்றும் வேலை பார்த்த ஆண்டுகளை குறிப்பிடுங்கள்
இவையெல்லாம் இருந்தால் உங்கள் நண்பர் முகநூல் வைத்திருந்தால் உங்களை தேடி அடைவது எளிது. ஒரு சில குறிப்புகளை வைத்து அவர்கள் முகநூலில் உங்களைப் பற்றிய குறிப்பு அனுப்பி விவரம் கேட்டால், அவர் ஒருவேளை உங்களை அறிந்து கொள்ளும் தெரிந்தவராக இருந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்.

என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடை பணிபுரிந்தவர், அதன் பிறகு நானும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர் என மாறி மாறி வேலையை மாற்றிக் கொள்ள முற்றிலும் தொடர்பு அறுந்து போனது.

பழைய நண்பர் ஒருவரைத் தேடித் தந்த முக நூலுக்கு நன்றி.

1 ஆகஸ்ட், 2011

மஜுலா சிங்கப்பூரா....!

20 நூற்றாண்டுக்கு பிறகு உருவான அல்லது மறுமலர்ச்சி / விடுதலைப் பெற்ற நாடுகள் அனைத்துமே மதச் சார்பற்ற அல்லது பல இன சமூகங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவ்வாறான நாடுகளில் இனம் அல்லது மதம் சார்ந்த செயல்பாடுகளைத் தவிர்த்து அவை நிலம் சார்ந்த நலனை முன்னிறுத்தி செயல்படும் போது அங்கு வாழும் மக்கள் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, நாட்டின் செல்ல வளத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றி ஒட்டு மொத்த நாடே பொருளியல் மற்றும் சமூக வளர்ச்சியில் வெற்றிபெருகிறது. அப்படி ஒரு வெற்றிகரமான நாடாக உருவாகியுள்ளது தான் சிங்கப்பூர். இதே சிங்கப்பூர் 46 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் காரணங்களால் மலேசியாவின் அரசியல் ஆளுமைகளிலிருந்து தனித்து விடப்பட்டதாகும், எந்த ஒரு இயற்கை வளமும் இல்லாமல் தனியாக நாம் எப்படி உலகவாழ்கையை எதிர்கொண்டு முன்னேறப் போகிறோம் ?

சிங்கப்பூர் பொதும்க்களிடம் கேள்வியாக வைத்து அதற்கு விடையாக பல இனசமூகமாக இருந்தாலும் ஒற்றுமையாக நாம் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி தலைமை ஏற்று, மூத்தவர், சிங்கப்பூரின் தந்தை என்று சிங்கப்பூரார்களால் அழைத்துப் போற்றப்பட்ட திரு லீக்வான்யூ அவர்களின் வழிகாட்டுதலும் கடந்த 46 ஆண்டுகளாக சிங்கப்பூர் சிங்க நடைபோட்டு வருகிறது. ஆசியாவின் பொது முகம் என்பது போல் பல்வேறு இன, மொழி மற்றும் மத அடையாளங்களுடன் இருக்கும் சிங்கப்பூரை காணும் ஆசியர் அல்லாத ஒருவர் ஆசியாவின் அனைத்து பண்புகளையும் கண்டு செல்வர். ஆசியாவின் நுழைவாயிலாகவும், ஆசியாவின் வர்தக மையமாகவும் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்துவருவதும் அதற்கேற்ற வசதிகளைக் கொண்டிருப்பதும் சிங்கப்பூரின் பலம்.

பல்வேறு சமூக இன மக்கள் வசிக்கும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் அவர்களுக்குள் அல்லது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பொதுவான ஒரே விழா அந்நாட்டின் தேசிய நாளாகத்தான் இருக்கும், இவை சிலநாடுகளில் விடுதலை பெற்ற நாளாகவோ, குடியரசு நாளாகவோ, நாட்டின் பிறந்த நாளாகவோ இருக்கும்

******

இந்த ஆண்டு சிங்கப்பூர் வரும் ஆகஸ்ட் 9 ஆம் நாள் தனது 46 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது, சிங்கப்பூர் தனித்த நாடு என்று அடையாளம் கிடைத்த நாடே சிங்கப்பூரின் பிறந்த நாளாகும், சிங்கப்பூரின் பிறந்த நாள் கொண்டாட்டாம் ஒரு திங்கள் (மாதம்) முன்பாக தொடங்கி இரு திங்கள்களுக்கு தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும், அரசு அலுவலகங்கள், வீடுகள் அனைத்திலும் சிங்கப்பூரின் தேசிய கொடி முகப்பில் வைக்கப்பட்டிருக்கும், நகரெங்கிலும் கொடிகளும் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 9 நாள் சிங்கப்பூரின் தேசிய நாள், அன்று பொது விடுமுறை, விழாவிற்காக அமைக்கப் பெற்ற வளாகத்தில், மாலையில் பிரதமர், ஆளுனர், அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக அமர்ந்திருக்க இராணுவ, உள்நாட்டு பாதுகாப்பினர் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெரும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிகழ்ச்சிகான ஒத்திகை ஒரு திங்களுக்கு முன்பாகவே வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெரும், ஒத்திகையும், விழா நாள் நிகழ்விற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, நாட்டின் தலைவர்கள் தவிர்த்து பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகைகள் நடைபெரும், இதற்குக்காரணம் பல்வேறு தரப்பினருக்கு விழாவைக் காணுவதற்கு நல்வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மற்றும் விழா முன்னோட்டத்திலேயே நன்கு பயிற்சி பெற்று விழா நடைபெறும் அன்று மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை அமைப்பதும் தான். ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு முன்பே பலமுறை தனித்தனிக் குழுக்களாக ஒத்திகைகளை செய்தே படைப்பார்கள் என்பதால் ஒத்திகை நிகழ்சிகள் விழாநாளை ஒத்த நிகழ்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சிங்கப்பூரில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்துவருகிறேன், சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆண்டு தவறாமல் தொலைகாட்சிகளில் கண்டு களிப்பது உண்டு, நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை, இருந்தாலும் நிழல் காட்சியாக தொலைகாட்சியின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, விழா நிகழ்ச்சிகளில் விழா மைதானத்திற்கு மேலே பறந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்த சில வினாடிகளில் நம் வசிக்கும் வீட்டை கடந்து சென்று கொண்டிருக்கும், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் அவற்றின் ஒலியோ உருவமோ கூட தெண்படும், கடந்து செல்லும். அடுத்தடுத்த வினாடிகளில் 'இப்ப டீ வில பார்த்த ஹெலிகாப்டர்....தோ வருது பாரு....' என்று இல்லத்தினரை வெளியே பார்க்கச் சொல்லிக் காட்ட அக்காட்சி இன்பம், அவை விவரிக்க முடியாத உணரத்தக்க ஒன்று. அன்றாட வாழ்க்கையை சிங்கப்பூர் வாழ்க்கையாகவே வாழப்பழகி, சிங்கப்பூரைப் பிரிய மனமின்றிய வாழ்க்கை தான் என்னுடையது, காரணம் மகனும் மகளும் இங்கேயே பிறந்து வாழ்க்கிறார்கள், அவர்களுக்கு இந்திய வாழ்க்கைச் சுழலை எதிர்கொள்ளும் மன நிலையை நான் ஏற்படுத்தித்தரவும் இல்லை. வாழும் எந்த ஒரு நாட்டையும் நேசித்தால் மட்டுமே அந்த நாட்டில் நாம் மனம் ஒன்றி வாழ முடியும். இதுவரை எனது வாழ்வில் கால்பங்கு சிங்கப்பூரில் கழிந்துவிட்டது. அடுத்தும் குழந்தைகளின் எதிர்கால நலனின் நாட்டமாக இப்படியே தொடரும். இதுவரை நேரடியாக கண்டு களித்திருக்காத தேசிய நாள் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு ஒத்திகை நிகழ்வாக கண்டு களிக்கும் வாய்ப்பு சென்ற சனிக்கிழமை கிடைத்தது.

விழா மைதானம், சிங்கப்பூரின் புதிய அடையளங்களுல் ஒன்றான மெரினா சான்ட்ஸ் முன்பாக மெரினா பே எனப்படும் கடல் தளத்தில் தெப்ப மேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு தான் நிகழ்சிகளை நடத்துகிறார்கள், பார்முலா எப் 1 கார் பந்தயங்களும் அந்தப்பகுதியில் தான் நடந்துவர ஏற்பாடுகள் செய்யப்படும், விழா மைதானத்திற்கு இரண்டு மணிகள் முன்பாக அதாவது மாலை நான்கு மணி முதலாக அனுமதிக்கிறார்கள், கைபைகள் மற்றும் உடைமைகள் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறது, விழாவின் பார்வையாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு பை இலவசமாக வழங்கப்படுகிறது, அதனுள் தொப்பி, மின் ஒளி கைவிளக்கு, குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்கள் பல்வேறு பொருள்கள் மற்றும் விழா குறித்த முக ஒட்டிகள் (Face Tattoo) இருந்தது. ஏறத்தாழ 25 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் அரங்கம், அனைவரும் வந்து அமர இரண்டு மணி நேரம் ஆகிறது, நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஏற்கனவே அதுவரை அமர்ந்து வருபவர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சி அட்டைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை முக நூலில் (பேஸ் புக்) வெளியிட இருப்பதாகச் சொல்லி சுட்டி குறித்த சீட்டு கொடுக்கிறார்கள், மேலும் குழந்தைகளுக்கு பலூன் உருவங்களைச் செய்து தருகிறார்கள், அரங்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய திரையில் ஒலி / ஒளிக்காட்சிகளை ஓடவிடுகிறார்கள், நானும் மகளும் இரண்டு மணி நேரம் முன்பாகச் சென்றிருந்தாலும் நிகழ்ச்சி எப்போது துவங்குமோ என்று எங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லை.





நிகழ்ச்சி குறித்த நேரத்தில் சரியாக மாலை ஆறுமணிக்கு துவங்கியது, உள்ளூர் கலைஞர்கள் பங்குபெற்ற டிரம் மற்றும் இசை நிகழ்ச்சி அதனை வழி நடத்தியவர்கள் சிங்கப்பூர் தொலைகாட்சியில் புகழ்பெற்றவர்கள். அதன் பிறகு எல்லோரையும் மேலே பார்க்கச் சொன்னார்கள், கண்ணுக்கு எட்டிய தொலைவில் வெள்ளை எள்ளு அளவில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்தது, கிட்டதட்ட 10 ஆயிரம் அடி உயரமாம், அதிலிருந்து 5 வான்குடை வீரர்கள் குதித்திருக்கிறார்கள் என்பது சில வினாடிகளில் தென்பட்டது, பின்னர் அவர்கள் வானில் வட்டமடித்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொருவராக விழா மேடையின் முன்பாக சரியாக இறங்கினார்கள். அவர்களில் சிலர் பலமுறை பயிற்சி பெற்றவர்களாகவும், ஒரு சிலர் இம்முறை தேசிய நிகழ்ச்சிகளுக்காக முதன்முறையாக குதிப்பவராகவும் இருந்தனர், மேலிருந்து பார்க்கும் போது சிவப்பு வண்ணக் மக்கள் கூட்டத்தையும் அவர்களின் ஆரவாரமும் கண்டு மெய்சிலிர்த்தாகக் குறிப்பிட்டார்கள், அவர்கள் மேலிருந்து இறங்கும் காட்சி மெய்சிலிர்பாக இருந்தது, கரணம் தப்பினால் மரணம் தான், ஆனால் இவர்கள் குடைச் சிறகு விரியாவிட்டால் சிதறல் தான், நினைத்தாலே அச்சமூட்டுகிறது.




அதன் பின்னர் ஆபத்தான வேளைகளில் உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது காட்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பது, மற்றும் இயந்திர உருவங்கள் (ரோபோ) செயல்பாடு மற்றும், இராணுவ வண்டிகள், ஹெலிகாப்டர் ஆகியவை மேடைக்கு அருகேயே சாகசங்கள் செய்து காட்டின. உயர உயர கட்டிடங்களுக்கு இடையே அவை வந்தது மிகப் பெரிய பறவை ஒன்று அங்கு இரையெடுக்க வந்து வட்டமடித்தது போன்று இருந்தது. அதிலிருந்து சில வீரர்கள் கடலுக்குள் குதித்து தீவிரவாத செயல்குறித்து ஆய்வு நடத்தினார்கள். பின்னர் சிங்கப்பூரின் தேசிய கொடியைத் தாங்கிய ஹெலிகாப்டர்கள் விழா மைதானத்தின் மேலாக பறந்தது. பின்னர் தேசிய கொடியேற்றம் என வழக்காமாக சுற்றுலாவாக பார்கும் அந்த மெரினா பே பகுதியில் இவ்வகைக்காட்சிகள் வியப்பூட்டின. அனைத்து காட்சிகளும் நேரிடையாகவும் அங்கே அமைக்கப்பட்ட அகலத் திரையிலும் மிகப் பெரிதாகப் பார்க்கும்படியும் அமைந்திருந்தன.




பிறகு இராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு, பின்னர் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை, பின்னர் இராணுவ உயர் அலுவலரால் அரசு தலைவரின் அனுமதி பெற்று நிகழ்ச்சி துவங்குவதற்கான ஒப்பம், அரசு தலைவர் அணிவகுப்பை பார்வை இடுதல் (பொதுவாக நாட்டின் ஆளுனர் தான் அணிவகுப்பை அருகில் சென்று பார்வை இடுவார்) , அங்கே கடல் பகுதியில் மிதவை மேடையில் வைக்கப்பட்ட பீரங்கிகள் தொடர்ந்து இடைவெளி விட்டு முழங்கிக் கொண்டு இருந்தன.

'உங்களுக்கு முன்பாக எதிரே வானத்தைப் பாருங்கள்' என்றார்கள், பார்க்க.........தொலைவில் சிறிதாகத் தெரிந்து பின்னர் சீறிப்பாய்ந்து காற்றைக் கிழித்தபடி 'எப்' வகை போர் விமானங்கள் ஐந்து ஒன்றாகப் பறந்து பின்னர் விரிந்து சென்றது.











பின்னர் சிங்கப்பூரின் பல்வேறு உணவு வகைகள் குறித்த உருவங்களை தாங்கியவர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப்பாடல்கள், இசை மற்றும் சிங்கப்பூர் எவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்பது குறித்த பொருளில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.












இறுதியாக கண்கவர் பல வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கண் கொள்ளக்காட்சியாக அமைந்தன, கூடவே லேசர் ஒளிகற்றைகள், அந்த இடமே ஒளி வண்ணங்களால் ஒலிகளாலும் ஒளிர்ந்தது, பொறிந்தது. சரியாக 8. 20க்கு நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்து தேசிய பாடல் ஒலிக்கப்பெற்று ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எத்தனை பெரிய திரைகளில் எந்த வித ஒலி அமைப்புகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை நிழலாகக் தொலைக்காட்சியில் நேரடி காட்சியாகக் (லைவ் டெலிகாஸ்ட்) கண்டாலும், சாட்சியாக அமர்ந்து நேரடியாக காண்பதும் அதன் துய்ப்பும் விவரிக்க முடியாத ஒன்று.





சிங்கப்பூரின் தேசிய நாள் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது, அதன் நேரடி ஒளிபரப்பும் இணையங்களில் காணக்கிடைக்கும், அதன் இணைப்பு பின்னர் தருகிறேன்.

மஜுலா சிங்கப்பூரா மலாய் மொழி சொற்றொடர், இதன் பொருள் முன்னேறட்டும் சிங்கப்பூர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்