பின்பற்றுபவர்கள்

12 ஏப்ரல், 2011

திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.

1. தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.
2. மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும் முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5 முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல் உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம் தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல் ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்
3. தமிழர்களின் தனி நாடாக ஈழம் மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும், லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத் துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக
4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக
5. உலக தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை அரசு விழாவாகக் காட்டியது.
6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.
7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக
8. இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள் செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால் குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X 12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின் குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)
9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது
10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.

இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின் போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.

இவையெல்லாம் தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள் சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால் இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?


திமுக கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல் உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள் பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால் வரவேற்கத்தக்கது தானே.

சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.

திமுக அரசியல் மூலமாக சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை :). தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.

இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.

சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

34 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

செஞ்சிருவோம்..

Jawahar சொன்னது…

அரசு ஊழியர்கள் மேல் ஆக்‌ஷன் எடுத்தப்போ சரியானதுன்னு நானும் நினைச்சேன், ஆனா அதை அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலேயே ரிரைட் பண்ணிட்டாங்களே! பயம்!!

http://kgjawarlal.wordpress.com

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

கண்ணன்,
பல சூழ்நிலைகளில் தவறான காரணங்களுக்காக சரியான வரிகள் எழுதப்படும்;சரியான காரணங்களுக்காக தவறான வரிகள் எழுதப்படும்..


ஆனால் இது சரியான காரணங்களுக்காக எழுதப்பட்ட சரியான பதிவு.

இவற்றோடு மணல் கொள்ளை,உள் கட்டமைப்பு சீர்கேடு,காவல் துறையின் சீர்கேடு போன்ற பலவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்..

ஒவ்வொரு வரியையும் வரவேற்கிறேன்..பாராட்டுக்கள்.

ஜெயலலிதாவின் 2001-2006 ல் மிதாஸ் ப்ரூவரிஸ் தவிர வேறு பெரிய குற்றச் சாட்டுகள் வந்த மாதிரித் தெரியவில்லை.ஆனால் ஐயா வந்தபின் சசிகலா குரூப் ஐயாவையும் சரிக்கட்டி சாராய சாம்ராஜ்யத்தை மேலும் விரிவு படுத்தி விட்டார்கள்..

ஜெ.(ஒருவேளை)வந்தால் என்ன செய்வார் என்று தெரியவில்லை.

Darren சொன்னது…

திமுக எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதற்காக அதிமுகவிற்க்கு வாக்களிப்பது என்பது மடத்தனமேயாகும்

priyamudanprabu சொன்னது…

http://priyamudan-prabu.blogspot.com/2011/04/blog-post.html

priyamudanprabu சொன்னது…

MM

Prakash சொன்னது…

From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

by வெற்றிவேல் - Part 1

மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..

இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..


என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..


என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.


பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்

இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..

அடுத்து ஊழல்..

ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.


தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?

Prakash சொன்னது…

From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

by வெற்றிவேல் - Part 2

இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..

இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்

நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?

சுருக்கமாக ஒன்று

ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..

நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்

Anand சொன்னது…

அனைத்தும் உண்மை. ஆனால் ஜெ.(ஒருவேளை)வந்தால், அது ஒரு கொடுமையான காட்டாட்சியாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

@ ஆனந்த்

கடந்த ஐந்தாண்டுகளில் மாபெரும் ஊடக, திரைத்துரை ஆக்கிரமிப்பு, இமாலய ஊழல் நடத்திய கருணாநிதி குடும்பத்திற்க்கு ஒரு அதிகார இடைவெளி கொடுக்கவில்லையென்றால் தமிழகம் ஒரு மாபெரும் மோசமான ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்...

jothi சொன்னது…

அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

பெயரில்லா சொன்னது…

//திமுக எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதற்காக அதிமுகவிற்க்கு வாக்களிப்பது என்பது மடத்தனமேயாகும்//

Better you recommend to vote for Educated Independant candidates, it's Good. But your suggestion is totally worst and wrong guidance!

Hope You know innocent 3 BSc (AGRI) studying girls burned with the bus at Krishnagiri.Till the 3 murders not hanged., AIADMK advocates sent a review petition to President to reconsider the Hanging Judgement.

In TANSI Case, a CM convicted, then she refused her signature was not signed by her. Then Supreme court slams and then she resigned.

உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சினையில், "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதா சென்ற முறை ஆட்சியில் இருந்திருந்தால் என்ன என்னவெல்லாம் செய்திருப்பார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் தரவேண்டும்!,
பிரபாகரனை தூக்கிலிடவேண்டும்!,

விடுதலைபுலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும்! என சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் இயற்றியவர் தான் ஜெயலலிதா என்னும் அரசியல் வியாபாரி!

இங்கே கேடுகெட்ட சாத்தான் காங்கிரசின் ஆதரவுக்கு முயற்சித்து கிடைக்காத வேளையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக,
தமிழகத்து தமிழனை முட்டாளாக்க..,!

வோட்டு வாங்க..,

ஈழத்தமிழனுக்கு ஆதரவு என்னும் நாடகத்தை வெறும் இருபது நாட்கள் மட்டுமே தேர்தல் மேடைகளில் நடித்த முன்னாள் நடிகை ஜெயலலிதா!


தேர்தலுக்கு பின் ஈழ தமிழன் இருக்கிறானா??? செத்தானா? என்று சீமானும், தா பாண்டியனும், வரதராஜனும், நடிகன் விஜயும் இன்னும் சொல்லவில்லையாதலால்..,

2008 MP லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.., பிரசாரம் செய்வதும்..,

ஒருவேளை இவர்கள் பிரசாரத்தால்,
இவர்களின் விடிவெள்ளி தலைவி, "ஈழத்தாய் ஜெயலலிதா!". தமிழகத்தில் வெற்றி பெற்றால்?? இலங்கையில் எப்படி தமிழ் ஈழம் அமையும்??

"ஈழத்தாய் ஜெயலலிதா!". அதற்கு ஆதரவளிப்பாரா?

இல்லை " என் ஆட்சியில் ஈழம், தமிழ் உணர்வு என பேசக் கூடாது"-என பழைய குருடி கதவை திறடி என "ஈழத்தாய் ஜெயலலிதா!".

ஆணவத்தோடு அபூர்வ சகோதரர்கள் உங்களை தூக்கி மீண்டும் பொடாவிலோ, தடாவிலோ போட்டால், ஜெயில் கலி தின்ன வைத்தால், உங்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கும் மூடத் தமிழகத் தமிழர்களின் கதி?

பின் ஈழத்தமிழர்களின் கதி?


//மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை Dr venkatesh, dinakaran,thivagaran -SASIKALA குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் Sasikala குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.
including recent 160 candidates released by Maappilai Raavanan., a family member of sasikala?

//ஜெ தான் தற்போது பரம ஏழை //
we are looking for a guide like you to educate the people what is politics? how we should purify/clean that?..,

பெயரில்லா சொன்னது…

வெற்றி பெறும் வரையே கூட்டணி?
வோட்டு வாங்கும் வரையே ஈழம், தமிழின ஆதரவு?
தேர்தல் வரையே ஈழம், தமிழின ஆதரவு?

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்ய துணிந்தவர் ஜெயலலிதா என்பது டிசம்பரில் கர்த்தருக்கு கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடினார்!

நேற்று அய்யா வைகுண்டருக்கு மரியாதை செலுத்தினார்?
தேர்தல் ஆண்டில் மட்டுமே ரமலான் நோன்பு திறப்பார்??? கதை சொல்லுவார்?
தேவர் ஜெயந்திக்கு போவார்?

மீதி நேரங்களில் ...??? கொட நாட்டிலும், சிறுதாவூரிலும், போயஸ் கார்டனிலும் குடித்துவிட்டு கும்மாளமடிப்பார்!

பின் யாரையும் மதிக்காதவர், மதிக்க தெரியாதவர் இந்த ஜெயலலிதா என்பது இன்னுமா பிரபாகரனின் இந்த முன்னாள் தம்பிக்கு தெரியவில்லை?

பிரபாகரனின் மூத்த முன்னாள் தம்பி வைகோ-வை கேட்டால்
விளக்கமாக, கதை கதையாக‌ சொல்லுவாரே????

2001 -தேர்தல் வெற்றிக்கு பின் நடந்ததை இவர்களின் முன்னாள் கூட்டாளி ராமதாசை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வாரே?

1991 -இல் ராஜீவ் காந்தி மரணம் என்னும் கோர அரசியல் விபத்தால் முதல்வரான ஜெயலலிதா பின் வாழப்பாடி ராமமூர்த்தியையும், மூப்பனாரையும் மதித்த வரலாறு மறந்ததா?

1998 -இல் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு, அரசியல் மறு வாழ்வு கொடுத்த இதே வைகோ, அண்ணன் பிரபாகரனையும், விடுதலைபுலிகளையும் ஆதரித்து பேசியதாக "பொடா" மூலம் 18 மாதம் ஜெயில் கலி தின்றதும், இப்போது மறந்துவிட்டதா?

பெரியவர் நெடுமாறன் "பொடாவில்'' சிறை சென்றதும் மறந்துவிட்டதா?

இல்லை., அவருக்கு வயதாகி விட்டதால் அவர் இடத்தை நிரப்ப வந்து விட்டானா இந்த சினிமாக்காரன் சீமான்??

இவற்றையெல்லாம் கண்டிக்க, தட்டிக் கேட்க அண்ணன் பிரபாகரன் இல்லை என்கிற தைரியமா?

மானம் கெட்ட மடையர்களே!!!
சோற்றில் உப்பை போட்டு தின்கிறீர்களா? வேறு ஏதாவது..,?

தன்ஆட்சிக்காக இனப் படுகொலையை கண்டு கொள்ளாத
கருணாநிதி,

இந்திரா காங்கிரஸ் உற‌வுக்காக MGR தொடங்கி..,

முப்பது ஆண்டுகளாய் ஈழத் தமிழர்களுக்காக, தமிழ் இனப்போருக்கு ஆதரவு என்ற பேரில் ஏற்கெனவே நிறைய பேர் அரசியல் வியாதியாகி!!!,

எங்களை முட்டாளாக்கியது போதும்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

கொள்ளையடிக்கும் உரிமையை ஒருவருக்கே பட்டா போட்டு தந்து விடக்கூடாது. மற்றவர்களும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் அதிமுக வை ஆதரிப்பதே சரியானது.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

திமுகவிற்கு பதிலா யார்(எது) சார்?
// 4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும்...//
அதையாவது செய்ததா எதிர் கட்சி? ரவிசங்கர் இலங்கை சென்றுவந்தபின், ஜெவை சந்தித்து... பின்னர்தானே "ஜெ" ஈழத்தாயாக தன்னை காட்டிக்கொண்டார்? அதற்க்கு முன்னர் எங்கே போச்சு சுயபுத்தி?

//10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.//
ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் etc திடிரென சசிக்கலாவைப்போல், நடராஜனைப்போல், தினகரனைப்போல் அதிமுக கட்சிக்குள் வரவில்லையே?
எதிர்கட்சியாகவே இருந்தாலும், ஸ்டாலின் ஜெவை சந்தித்து சுனாமி நிவாரண நிதி கொடுக்கவில்லையா? அந்த பண்பு, சுட்டுப்போட்டாலும் ஜெவிற்கு வராது. அகங்காரம், மெத்தனம், திமிர் இவற்றின் மொத்த உருவமாகவே ஜெ இருந்தார், இருக்கின்றார், இருப்பார்.

திமுக நல்லதே செய்யவில்லையா? ஆதிமுக நல்லது மட்டும் தான் செய்ததா?

2006-11 அதிமுக ஆட்சி அமைத்திருந்தாலும் அவர்களும் திரையுலகத்தை ஆட்சி செய்திருப்பார்கள் ( "வடை போச்சே" மாதிரித்தான் இப்போ பேசிட்டு இருக்காங்க)

திமுக செய்த தப்பை நான் ஆதரிக்கவில்லை.

தெரியாத கடவுளை விட தெரிந்த பேய் எவ்வளவோ மேல்!!

அம்மாவின் ஆட்சி பற்றி முன்னர் சோ : "தலைவாழை இலைபோட்டு விருந்துவைக்கும், ஆனால் இலை ஒரத்தில் கொஞ்சமா காய்ந்த பீ யும் இருக்கும்"

Unknown சொன்னது…

5 வருசம் காஞ்சி போய் ஆட்சிக்கு வரவங்க இன்னும் அதிகமா தான் சுருட்டுவாங்க.. இப்போ தன்னிறைவடைஞ்ச கலைஞர் இன்னும் பெட்டரா அள்ளித்தருவார்’னு மக்கள் பீல் பண்றாங்க.. இதுதான் லாஜிக்..

கோவி.கண்ணன் சொன்னது…

உனா பினாக்களின் பின்னூட்டங்கள் நாளை வாக்குப்பதிவின் பிறகு வெளியிடப்படும்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

கோவி.கண்ணன் said...
//உனா பினாக்களின் பின்னூட்டங்கள் நாளை வாக்குப்பதிவின் பிறகு வெளியிடப்படும்.//

சரி

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

// தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.//

என் எண்ணமும் இதுவே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//அனைத்தும் உண்மை. ஆனால் ஜெ.(ஒருவேளை)வந்தால், அது ஒரு கொடுமையான காட்டாட்சியாக இருக்கும்.//

யாருக்கு கருணாநிதி குடும்பத்துக்குத்தானே இருக்கட்டுமே!

கோவி.கண்ணன் சொன்னது…

//யாருக்கு கருணாநிதி குடும்பத்துக்குத்தானே இருக்கட்டுமே!//

:)

'ஐயோ கொல்றாங்களே' செகண்ட் எபிசோட் வருமான்னு தெரியல

ராஜ நடராஜன் சொன்னது…

//இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.//

தி.மு.க எதிர்ப்புக்கான காரணம் சரி.ஆனால் அ.தி.மு.க கூட்டணி ஆதரவுங்குறது சரியா:)ஓ!ஆதரவு தராட்டி எதிர்ப்பணி வந்துடுமில்ல?

யார் வந்தாலும் இன்னும் 5 வருடத்திற்கு தமிழர்கள் பாடு தி்ண்டாட்டம்தான்.இருந்தாலும் மாற்றம் என்ற ஒரே காரணத்துக்காகவும்,வாரிசு அரசியல் ஒழியும் வாய்ப்பு இருப்பதால் தி.மு.க எதிர்ப்பு தேவையே.

ராஜ நடராஜன் சொன்னது…

////உனா பினாக்களின் பின்னூட்டங்கள் நாளை வாக்குப்பதிவின் பிறகு வெளியிடப்படும்.//

அதென்ன நாளைக்கு?சுயமாகவா ஏதாவது சொல்லப் போறாங்க.எல்லா கடையில ஒட்டுன ஒரே போஸ்டரை உங்க கடையிலும் ஒட்டப்போறாங்க!

நான் சொன்னது சரியா:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
////உனா பினாக்களின் பின்னூட்டங்கள் நாளை வாக்குப்பதிவின் பிறகு வெளியிடப்படும்.//

அதென்ன நாளைக்கு?சுயமாகவா ஏதாவது சொல்லப் போறாங்க.எல்லா கடையில ஒட்டுன ஒரே போஸ்டரை உங்க கடையிலும் ஒட்டப்போறாங்க!

நான் சொன்னது சரியா:)//

ம் சரிதான், போனியாகாத போஸ்டர், நாளைக்கு போனாப் போவுதுன்னு ஒட்டிவிடலாம்னு இருக்கேன். கருத்து சுதந்திரம் கழுத்தை நெறிக்கக் கூடாதே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒவ்வொரு வரியையும் வரவேற்கிறேன்..பாராட்டுக்கள்.// நன்றிங்க அறிவன் சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//அரசு ஊழியர்கள் மேல் ஆக்‌ஷன் எடுத்தப்போ சரியானதுன்னு நானும் நினைச்சேன், //

ஜவஹர் அண்ணே,
அரசு ஊழியர்களுக்கு பயம் இருந்தாதான் கொஞ்சமாவது வேலை பார்ப்பாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
திமுக எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதற்காக அதிமுகவிற்க்கு வாக்களிப்பது என்பது மடத்தனமேயாகும்//

மாற்றம் என்பது தடாலடியாக செய்ய வாய்ப்பில்லாத போது பொன்சேகாவை ஆதரித்த ஈழத் தமிழன் நிலையை எடுக்க வேண்டி இருக்கு. அதிகாரத்தில் உள்ளவர்களை இறக்கத்தானே கஷ்டப்பட வேண்டி இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

// Anand said...
அனைத்தும் உண்மை. ஆனால் ஜெ.(ஒருவேளை)வந்தால், அது ஒரு கொடுமையான காட்டாட்சியாக இருக்கும்.//

அப்படியெல்லாம் நான் நம்பவில்லை, திமுக கொள்ளையடித்ததை (மிரட்டி மிரட்டியே) ஜெ பங்கு போட்டுக் கொண்டாலே நலத்திட்டங்களுக்கான அரசு கஜனாவில் கொள்ளை அடிக்கத் தேவை இருக்காது.

கபிலன் சொன்னது…

திமுகவை தோற்கடிக்கணும்.....காங்கிரசை தோற்கடிக்கணும்...

அவங்களுக்கு எதிரா ஒரு கழுதை குதிரை நின்னா கூட அந்த பிராணிகளுக்கு தான் ஓட்டு

Bala சொன்னது…

ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி ஏராளமாக முன்னரே எழுதியுள்ளோம்.
ஊழலில் சிகரம் தொட்டது மட்டுமல்ல, அது பற்றிய விமர்சனங்களை
ஜாதியைச்சொல்லி திசை திருப்ப பார்த்த ஆட்சி. ஒரு அமைச்சர்
சிறைக்கு சென்ற பிறகும், மனைவியையும் துணைவியின் மகளையும்
மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த பிறகும் முழுப் பூசணி அல்ல பூசணித் தோட்டத்தையே ஒரு கவளம் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.


தொலைக்காட்சி கொடுததால் குடும்பத்திற்கு வருமானம்,
காப்பீட்டுத் திட்டம் என்றால் குடும்பத்திற்கு வருமானம்,
அரிசி வழங்கினால் கடத்தல் மூலம் வருமானம்,
குடும்பத்தில் அனைவருக்கும் பதவி,
அதனால் அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு,
முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச்சினை என்றால்
முதலாளிகளுக்கு ஆதரவாக,
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் மோதல் என்றால்
ஆதிக்க சக்திகளின் பக்கமாகவே
ஆரவார முழக்கங்கள் அரைகுறையாக நின்று போனாலும் அதைப்
பற்றி சிறிதும் கவலை கொள்ளாத
அரசாக மட்டுமே திமுக அரசு இருந்தது. விமர்சனத்தை சகித்துக் கொள்ள இயலாத அரசு, சுய நலமா, மக்கள் நலமா என்றால் சுய நலம் மட்டுமே
மேலோங்கிய ஒரு அரசு.

இவர்கள் மீண்டும் வந்தால் இவர்களின் தவறுகளை மக்கள் அங்கீகரித்ததாகக் கருதி இன்னும் அராஜகமாக ஆட்சி செய்வார்கள்.

http://ramaniecuvellore.blogspot.com/2011/04/blog-post_12.html

suvanappiriyan சொன்னது…

சீரியஸாக எழுதிக் கொண்டு வரும் பொழுது இடையிடையே இதுபோல காமெடி பதிவுகளும் போடுவதே உங்களது வழக்கமாகி விட்டது.

ரசித்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப்பிரியன் said...
சீரியஸாக எழுதிக் கொண்டு வரும் பொழுது இடையிடையே இதுபோல காமெடி பதிவுகளும் போடுவதே உங்களது வழக்கமாகி விட்டது.

ரசித்தேன்.//

இஸ்லாமில் தீவிரவாதிகளே இல்லை அவங்க வெடிகுண்டு வீசல கோலிக் குண்டு வெளையாண்டங்கன்னு சொல்லி சிரிக்கிறவர் நீங்க. உங்க டேஸ்டுக்கு (1.75 LC ஊழலைச் சுட்டும் ) இது ரொம்ப மலிவான காமடிப்பதிவாகத்தான் தெரியும். ஏனென்றால் கருணாநிதி சிறுபான்மை காவலன் ஆச்சே.

R.Gopi சொன்னது…

ஐயோ கொல்றாங்கோ...

ஐயய்யோ கொல பண்றாங்கோ...

இந்த எபிசோட் மறுபடியும் ரீ-டெலிகாஸ்ட் செய்தால் கழகம் பிழைக்க வாய்ப்புண்டா இந்த தேர்தலில்?

கோவி.கண்ணன் சொன்னது…

//இசை said...
5 வருசம் காஞ்சி போய் ஆட்சிக்கு வரவங்க இன்னும் அதிகமா தான் சுருட்டுவாங்க.. இப்போ தன்னிறைவடைஞ்ச கலைஞர் இன்னும் பெட்டரா அள்ளித்தருவார்’னு மக்கள் பீல் பண்றாங்க.. இதுதான் லாஜிக்..//

கருணாநிதி குடும்பத்தினரின் ஆசையே ஒவ்வொருவரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பது தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்