பின்பற்றுபவர்கள்

7 மே, 2008

பறக்கும் பெண் சூர்பனகையாக இருக்கலாம் (?) !

15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இராமனால் கட்டப்பட்ட(?) இராமர் பாலம் இன்னும் இராமேஷ்வரத்தில் மூழ்கி இருப்பது வியப்பு(?) தான்.

இராமன் மனித பிறப்பெடுத்ததால் சிலையாக இருந்த அகலிகை மேல் அவன் பாதம் பட்டு மோட்சம் கொடுத்தது, மற்றும் தாடகியை அம்பால் வீழ்த்தியது, எவருமே தூக்க முடியாத வில்லை ஒடித்து சீதா பிராட்டியாரை மணந்தது, அவன் பக்தனாக இருந்த அனுமனே விந்திய மலையை பெயர்த்து எடுத்து பறக்க முடிந்தது என இராமன் தொடர்புடைய தெய்வீகத் தன்மைகளையெல்லாம் மறந்துவிடுவோம். காரணம் இராமன் மனிதனாகப் பிறந்தான் என்று தான் சொல்கிறார்கள். இராமன் மனிதன் என்பதற்கு மற்றொரு சாட்சியாக வனரங்கள் மற்றும் அணில்கள் உதவியுடன் பாலம் அமைத்து இந்து பெருங்கடலை கடந்து இலங்கையை அடைந்தான், தெய்வீக சக்தி இருந்திருந்தால் பாலம் இல்லாமலேயே பறந்து இருப்பான்.

இராமன் பாலம் அமைத்து தான் இலங்கையை கடந்தான், ஆனால் இராவணனோ புஷ்பக விமானத்தில் (நம் இந்து தருமத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வான் வழி விமானம் மூலம் பறப்பதற்கு விமானம் இருந்திருக்கிறது, இந்துக்கள் கண்டுபிடிப்புக்கெல்லாம் முன்னோடி என்று இதன் மூலம் சொல்லிக் 'கொல்வோம்') பறந்து இலங்கையில் இருந்து இராமன் வசித்த காட்டுப் பகுதிக்கு வந்து சீதையை கவர்ந்து சென்றான்.

அவன் மட்டும் தானா ? அதற்கு முன்பே அவன் தங்கை சூர்பனகை அதே காட்டுப்பகுதிக்கு பறந்து வந்து இராமன் மீது மையல் கொண்டு மூக்கறுபட்டாள். இராமர் பாலம் பற்றி மீண்டும் பேச்சு நடப்பதைத் தொடர்ந்து, சூர்பனகையின் ஆவிதான் அங்கும் இங்கும் பறக்கும் பெண்ணாக அலைகிறதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

இராமர் பாலத்தைத் தொடர்ந்து இராமன் தொடர்புடைய(?) சூர்பனகை பறக்கும் அசைபடத்தை (வீடியோ) இந்துக்கள் உரிமை கொண்டாடி, அதை இந்தியாவின் பழஞ்(புராதான) சின்னமாக அறிவிக்க இந்திய அரசு முயற்சி நடத்தவேண்டும். பறக்கும் பெண் சூர்பனகை தான் என்று அமெரிக்க நாசாவும் உறுதிப்படுத்திவிட்டால் எந்த கொம்பனாலும் இராமர் பாலத்தை அசைக்கக் கூட முடியாது.

சிரிப்பான் போட மறந்துவிட்டேன். ஒண்ணும் தப்பு இல்லையே !

பின்குறிப்பு : இந்த இடுகையால், ஆதாம் பாலத்தை இராமர் பாலம் என நம்பும் இந்துக்கள் மனம் புண்படும். மன்னிக்கவும், மக்களை மூடர்களாக வைத்திருக்க முயல்வது கூட பலர் மனதை புண்படத்தான் வைக்கிறது என்ன செய்யலாம்?

12 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

என்ன கொடுமை இதெல்லாம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
என்ன கொடுமை இதெல்லாம்?
//

ம்...இலைக்காரர் செய்வதெல்லாம் உங்களுக்கு கொடுமையாக தெரியலையா ?
:)

ஜெகதீசன் சொன்னது…

//
கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
என்ன கொடுமை இதெல்லாம்?
//

ம்...இலைக்காரர் செய்வதெல்லாம் உங்களுக்கு கொடுமையாக தெரியலையா ?
:)
//

80 கோடி இந்துக்களின் ஒரே வலையுலகப் பிரதிநிதியும் நீங்களும் ஒன்னா?(ஒருவேளை ஒன்னு தானோ..... :P)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

80 கோடி இந்துக்களின் ஒரே வலையுலகப் பிரதிநிதியும் நீங்களும் ஒன்னா?(ஒருவேளை ஒன்னு தானோ..... :P)
//

கண்ணாடிக்கு முன்பு நின்று பேச வேண்டிய வசனமெல்லாம் பின்னூட்டத்தில் வருது.

:)

நையாண்டி நைனா சொன்னது…

வரலாற்றையும், புராணத்தையும், அறிவியலையும் இவ்வாறு மிக
சிறப்பாக புனைந்து கூறிய உங்களுக்கு நாங்கள் ஏன் முனைவர் பட்டம் கொடுக்க கூடாது?

குடி குடியை கெடுக்கும்
இது அநேக குடிமகன்களின் மனத்தை புண்படுத்துகிறது.
ஆகவே இதனை சகல இடத்திலிருந்தும் நீக்குமாறும், குறிப்பாக குடிமக்கள் கூடும் இடத்தில்
இருக்கவே கூடாது என்றும் குடிமக்களின் அரசு ஆவன செய்ய வேண்டும்.

ஹல்லோ..... சில விசயங்களை இப்படி பப்ளிக்கா வெளிய சொல்லக்கூடாது... சரியான உளறு வாயா இருக்கீங்களே.... எதாவது ரகசியம் சொன்னா அதை இப்படியா வெளிய போட்டு உடைக்கிறது...... :P

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...

நைனா,

முனைவர் பட்டமா ? அடிக்கடி பின்னூட்டத்தில் அது போல் வருது, ரொம்பவே ஆபாசமாக இருப்பதால் அதையெல்லாம் வெளி இடுவது இல்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

ஹல்லோ..... சில விசயங்களை இப்படி பப்ளிக்கா வெளிய சொல்லக்கூடாது... சரியான உளறு வாயா இருக்கீங்களே.... எதாவது ரகசியம் சொன்னா அதை இப்படியா வெளிய போட்டு உடைக்கிறது...... :P
//

ஜெகதீசன்,
நான் சொல்லவில்லை, ஆனால் நீங்கதான் ஒப்புதல் கொடுப்பது போல் தெரியுது. எதுக்கும் ஆட்டோ வருதான்னு பாருங்க

நையாண்டி நைனா சொன்னது…

/*நைனா,
முனைவர் பட்டமா ? அடிக்கடி பின்னூட்டத்தில் அது போல் வருது, ரொம்பவே ஆபாசமாக இருப்பதால் அதையெல்லாம் வெளி இடுவது இல்லை.
:)*/

முனைவர் பட்டம் உங்களுக்கு ஆபாசமா? (இதில் வேறு உள் குத்து இல்லையே)

முனைவர்.திரு.கோவி அவர்கள்
நல்ல பதிவு எழுதமுனைவார்.
நல்ல கருத்து சொல்ல முனைவார்.
நல்ல சிந்தனை கொள்ள முனைவார்.
அதனால் உங்களை முனைவர்.திரு. கோவி.கண்ணன் என்றே
அழைக்க நான் முனைவேன்.

மேலும் அநேகர் நல்ல பதிவு தர முனைவர்.
(அப்ப தானே நானும் முனைவர் ஆக முடியும்)

இதில் ஆபாசம் எங்கே உள்ளது.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Shahul Hameed Adanoorar சொன்னது…

சகோதரர் கோவி அவர்களே, ராமர் அம்பெய்து அழித்ததாக கூறப்படும் பாலம், இவ்வளவு பிரச்சினைகளை ஏன் உண்டுபண்ணுகிறது? ராமர் பெயரால் அரசியல் பண்ணும் ஆன்மீக அரசியல்வாதிகளுக்கு, இலங்கை சென்று அங்கிருக்கும் கொஞ்சம் நிம்மதியையும் கெடுக்க பாலம் தேவைப்படுகிறதோ? பாவம் ராமர், வால்மீகி, கம்பர்.

சின்னப் பையன் சொன்னது…

'குருவி' படத்துலே டாக்டர் பறக்கறாரே... அவர்தான் 'ராமரோ'!!!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்