தன்வயம் என்ற சொல் திரிபின் வடிவமே தவம் என்ற சொல் என்பதாக நினைக்கிறேன். தன் + திறன்(ம்) > தந்திரம், மன்(மனம்) + திறன் > மந்திரம் என்பதாக சொற்பிறப்பியல் அமைந்திருக்கிறது, இவை முழுக்க தூய தமிழ்ச் சொல்லென்றாலும் வடமொழியில் கடன் பெற்றவையோ என்பதான சொல் மயக்கத்தை ஏற்படுத்துவை தந்திரம், மந்திரம் என்ற சொற்கள். த்யான் என்ற சொல் தமிழில் தியானம் என்பதாக வழங்கப்படுகிறது என்றாலும் இவற்றிற்கான மாற்றுப் பொருள் தமிழில் மனப் பயற்சி என்பதாம். அதுபோன்று யோகம் என்பது உடற்பயிற்சியாகும், ஆசனம் என்பது தமிழில் உட்காரும் காலிகள் மற்றும் (உடல்) நிலை அமைப்பு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சம்மணமிட்டு அமர்தல் என்ற சொல் சம + அணம் அல்லது அணங்கு (கட்டுதல், சேர்த்தல்) என்ற பொருளில் கால்களை ஒன்றாக மடித்து உட்காரும் நிலையைக் குறிப்பதாகும். த்யான் (அ) த்யாணம் என்ற சொல்லின் பின்னொட்டான ஆணம் (பற்றுதல், கட்டுதல்) தமிழ் சொல்லாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். மனதைக் கட்டுதல், ஒன்றிணைத்தல் என்ற பொருள் கொண்டவையே தியானம் என்ற சொல்லின் பொருள்.
*****
புத்தர் தவமிருந்தார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று கண்டு கொண்டார் என்பதாக புத்தர் பற்றிய வரலாறு மற்றும் சமூகக் கருத்தாக அறிந்து கொண்டிருக்கிறோம். புத்தர் வைதீக சமயவாதியாக இருந்திருந்தால், புத்தர் கடும் தவம் புறிந்த காரணத்தினால் ஈச்வரன் அவரின் முன் தோன்றி அவருடைய அறிவின் கண் திறந்து ஆசி கொடுத்தார் என்பதாக எழுதி இருப்பார். புத்தர் இறை மறுப்பாளரோ, ஏற்பாளரோ இல்லை என்பதால் விஷ்ணுவோ, சிவனோ அவருக்கு அருள்பாலிக்கவில்லை. நேற்று கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்து மதத்தின் எல்லா கடவுளும் ஏன் கனவில் மட்டுமே வந்து தனக்கு கோவில் கட்டச் சொன்னார்கள் ? நேரடியாக ஏன் ஒருவரும் வரவில்லை என்பதாகப் பேசினோம். நேரில் வந்தால் ஒருவேலை சிறைபிடித்து வேண்டிய வரங்களை அவ்வப்போது அடியார்கள் கறந்துவிடுவார்கள் என்கிற இறை அச்சமே காரணமாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் விட அனைத்து சக்தியும் மிக்க கடவுள் தனக்கு தானே கோவில் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பக்தனை கெஞ்சாமல் தானே பிறந்து வந்து தனக்கு கோவில் கட்டிக் கொள்ள முடியவில்லை என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்க அங்கே தெய்வ குத்தம் தடுக்கிறது. கடவுள் பற்றிய சிந்தனைகளில் கடவுள் பயத்தின் காரணமாகவே பலர் சிந்திக்க விரும்புவதில்லை, அது ஏன் தொல்லை நாம ஏதாவது நினைக்க அது தவறாகிப் போய் தண்டனை அடைந்துவிட்டால் ? என்கிற அடிப்படை பயமே இவற்றிற்கு காரணம். இவர்களில் ஒருவர் கூட எந்த ஒரு சமய நம்பிக்கைச் சாரந்தவருக்கும் பிற சமயங்களின் நம்பிக்கை கேலியும், கேள்வியும் மட்டுமே என்பதை சிந்திப்பதில்லை. அதாவது பிள்ளையாரைப் பற்றி கேள்வி கேட்க ஒரு இஸ்லாமியருக்கோ, கிறித்துவருக்கோ எந்த கடவுளும் தடைவிதித்து தெய்வக் குற்றம் ஆக்கிவிடவில்லை, கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது போல் இந்துக்களுக்கும் அல்லாவின் இருப்பில், ஏசுவின் இருப்பில் ஐயம், கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு தத்தமது மத நம்பிக்கைக்குள்ளான கேள்விகள் என்பது மட்டுமே பெரும்பாலும் இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை (எந்த ஒரு) நம்பிக்கையாளர்களும் நினைப்பதே இல்லை. ஒரு கிறித்துவர் இந்து சமய நம்பிக்கையை பலிப்பதை பொறுத்துக் கொள்ளும் (இந்துக்) கடவுள் எல்லாக் கடவுளையும் மறுக்கும் நாத்திகனை தண்டித்துவிடுவார் என்று கூட இன்னும் பலர் நம்புகிறார்கள். இவ்வாறான மதம் சார்ந்த இறை நம்பிக்கைகள் அனைத்துமே மடைமை, அறிவீனம் அல்லது பகுத்தறிவின்மை என்று சொல்வதில் நான் என்றுமே தயங்கியதே இல்லை.
குறிப்பிட்ட சில ஆன்மிகம் சார்ந்த இடங்களை குறிப்பாக பெத்லகேம், மெக்கா, வாடிகன், திருப்பதி, இமய மலை ஆகியவற்றை இறைவனின் இருப்பிடம் என்றே அம்மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவை வழிப்பாட்டுத்தளங்கள் அதுவும் குறிப்பிட்ட மதத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. கடவுளின் நாடு கேரளா என்பதாக கேரளவாசிக்கள் சொல்லிக் கொள்வதைப் போன்றவையே அவை. உலகின் ஆன்மிக நாடு இந்தியா என்பதாக இந்துக்கள் சொல்வது போல், உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) அந்த அளவுக்கு இந்தியா பல்வேறு அரசியல் வாதிகளால் (உறிஞ்சப்பட்டு) பயன்படுத்திக் கொள்ளப்பட்டுவருகிறது (எழுத வந்தது வேறு, மன ஓட்டம் எங்கே செல்கிறது மன்னிக்கவும்)
மனம், சிந்தனை இவற்றின் அடைப்படையில் தான் செயல்கள் நடக்கின்றன. தவத்தின் பலனாக கிடைததது என்று சொல்வதெல்லாம் 'நாம் அதையே சிந்தனைசெய்து செயலாற்றியதன்' விளைவால் கிடைத்த நன்மை என்பதே பொருள். முன்னோர்கள் தவம் செய்து அதன் மூலம் வரமாக கிடைத்தவற்றையே 'வேதங்களாக' ஆக்கி வைத்தனர் என்று விளக்கம் (வ்யாக்காணம்) சொல்லுவர். தவம், தியானம் செய்வதால் வரம் எதுவும் கிடைகாது. சிந்தனை வளம் பெருகும், அதன் மூலம் சில ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும். இவைதான் மனப் பயிற்சியின் பலன்கள். எந்த ஒரு எழுத்தாளரும் முழுக்க முழுக்க யாருமே அறியாத தகவல்களை தந்துவிட மாட்டார்கள், பல்வேறு நூல்களின் படித்தவற்றில் மனம் விரும்பும், மார்கெட் (விற்பனைக்கு ஈர்ர்கும் தகவல் என்பதை நம்பி) செய்யக் கூடிய தகவல்களை அவர்கள் தொகுப்பார்கள், அந்நூலை அமைக்கும் வரை அவர்களுடைய மனம் அந்நூலை எப்படி சீராகக் கொண்டு செல்வது பற்றிய சிந்தனைகளில் இருக்கும். இது ஒருவகையான தவம், இது போல் இயக்குனர்கள், ஆராய்சியாளர்கள் ஆகியோரும் மனம் சார்ந்து மன ஒரு நிலையில் இருப்பர். இவற்றைத்தான் தவம் என்கிறார்கள். தவம் என்பது தன்வயத்தில் ஒத்த சிந்தனையில் இருப்பது, தியானம் என்பது அதனை வழிநடத்துவதற்கான செயல். ஒவ்வொரு படைப்பாளியும் தவம், தியானம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி தியானம், தவம் என்ற சொற்களெல்லாம் சமய நம்பிக்கையில் சம்மணம் மிட்டு அமர்ந்திருக்கும் சாமியார்களின் நிலை பற்றியது மட்டுமே அல்ல. வடமொழி சொற்களாக, அலங்காரமாக நமக்கு படுவதால் அந்தச் சொல்லின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறோம், அவையும் செயல்கள் (verb) குறித்தான மற்றொரு சொற்கள் தான். நானும் இந்த இடுகை நிறைவுறும் வரையில் சிறு நினைவு தடங்கல் ஏற்பட்டிருந்தாலும் எழுதி முடிக்கும் வரை தியானமும், தவமும் செய்து கொண்டிருந்தேன் :)
எளிமையாகச் சொல்வதென்றால் ஒன்றைப் பற்றிய சிந்தனையும் செயலும் நல்ல விளைவுகளை தந்திருந்தால் நீங்கள் தவமும் தியானம் செய்து பலன் அடைந்திருக்கிறீர்கள் என்பதே.
பின்பற்றுபவர்கள்
27 செப்டம்பர், 2010
23 செப்டம்பர், 2010
மானம் கப்பல் ஏ(ற்)றிய காமன் வெல்த் போட்டி !
உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்தது, ஏழைகளை இருப்பிடங்களை விட்டுத் தூறத்தினார்கள், பெய்ஜிங்க் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்கிற வெளி நாட்டுத் தகவல்களை தவிர்த்து சீனா ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திமுடித்து ஐரோப்பிய நாடுகளின் விழிகளை விரிய வைத்தது.
காமன்வெல்க்த் போட்டிகளை ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்த இந்தியா பல்வேறு நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறது. துவக்கம் முதலே ஊழல் குற்றச் சாட்டுகள், தற்போது தரமற்ற கட்டுமானங்களினால் பாதுகாப்புக் கூரைகள் இடிந்துவிழவதும், மற்றும் விளையாட்டுவீரர்களுக்கான வசதிக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் காமன் வெல்த் போட்டிகளுக்காக தங்கள் வீரர்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர். காமன்வெல்த் போட்டியின் கண்காணிப்புக் குழுவும் இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடங்களை பார்த்து ஏற்பாடுகள் நிறைவாக இல்லை என்று அறிவித்துவிட்டன. வெளிநாட்டு ஊடக செய்திகளில் காமன்வெல்த் போட்டியின் குறைபாடுகளை கட்டம் கட்டிப் போட்டு இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிவருகிறார்கள்.

தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், போட்டி ஏற்பாடுகளின் சொதல்பல்களையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புறக்கணித்திருப்பதை நாம் தவறு என்று பார்க்க முடியவில்லை. பளுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது என்னும் போது இவர்களை நம்பி எந்த ஒரு நாடும் வீரர்களை அனுப்ப முடிவு செய்வார்கள் என்று நம்புவது நம் மடைமை.
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை. வாரம் ஒருமுறையாவது மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தே வருகின்றன. இந்திய பாதுகாப்பும், இந்திய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகளும் இராஜபக்சேவை திருப்திபடுத்தி இலங்கை வீரர்களாவது விளையாடவருவார்களா ? அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
உணவு தானியம், பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரசு அரசின் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக, இந்திய நலன் சார்ந்ததாகவோ, பொறுப்பாகவோ இல்லை. எந்த ஒரு தனிப்பெரும்பான்மை பலமும் இல்லாத நிலையில் கூட்டணி என்ற பெயரில் ஆளும் காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது தவிர்த்து எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு இலவச செல்போனாம், எத்தனை ஆண்டுகளுக்கு ? ஒருவேளை ஏழைகளும் செல்போன் பயன்படுத்தி பழகிக் கொண்டால் இலவச செல்போன் திட்டங்களை களையும் போது பயன்படுத்தியவர்கள் எப்படியேனும் செல்போன் பயன்பாட்டை நாடுவார்கள், அதன் மூலம் தனியார் செல்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபம் அடையும் என்பதைத் தவிர்த்து வேறென்ன நடக்கும் ? கருணாநிதியில் இலவச தொலைகாட்சியைப் பெற்றுக் கொண்டோர் அவர் வாரிசுகள் நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு மாதக் கப்பம் கட்டிவருவது தானே நடந்துவருகிறது. அரசுகள் அறிவிக்கும் இலவசங்களெல்லாம் தனியார் லாபங்களை கருத்தில் கொண்டவையே.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணங்களை விளையாட்டு நடத்த செலவிட்டு, ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் நாட்டுமக்களை தலைகுனிய வைத்துவிட்டு, சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எந்த ஒரு நாடும் கலந்து கொள்ளாதோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது. அதிலும் ஆழம் பார்க்க இலங்கை கழண்டு கொண்டால் வியப்பேதும் இல்லை.

பதிவர்:
கோவி.கண்ணன்
at
9/23/2010 12:19:00 PM
தொகுப்பு :
அரசியல்,
இந்தியா,
விளையாட்டு
18
கருத்துக்கள்
17 செப்டம்பர், 2010
தனியார் பள்ளிகள் - என்ன நடக்குது தமிழ்நாட்டில் ?
தரமான கல்வி என்று கடைவிரித்த தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று தமிழ் நாட்டின் கல்வி அமைப்பை அக்டோபஸ் போன்று வளைத்தும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன. முன்று ஊருக்கு 3 என்ற அளவில் இருந்த தனியார் பள்ளிகள் இன்று பெருகி மாநகராட்சி பள்ளிகளையே மூட வைத்துள்ளன. நான் படித்த மாநகராட்சிப் பள்ளிக் கூட மாணவர்கள் சேர்க்கையே நடைபறாததால் மூடப் பட்டுவிட்டது. நான் படிக்கும் காலத்தில் இருந்த தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி என்பது கிடையாது என்பது அம்மாணவர்கள் என்னுடன் +2 படிப்பில் சேரும் போது தான் தெரிந்தது, அம்மாணவர்களைவிட அரசு பள்ளியிலேயே ஆங்கில வழியில் கற்றவர்கள் ஆங்கிலத்தில் நல்ல அறிவை பெற்றிருந்தனர். இதற்குக்காரணம் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்றாலும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எவரும் +2 படிப்பை தாண்டாதவர்கள் என்பதும் அவர்களைத்தான் மிகக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும் என்பது தனியார் பள்ளிகளின் தேர்வாக இருந்தது. ஆனாலும் அந்தப் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டில் செலவிடும் தொகையை ஒரு பெற்றோர் அரசு பள்ளி மாணவர்களின் 10 வகுப்பு படிக்கும் வரை கூட செலவிடலாம். ஏனென்றால் அரசு பள்ளிகளில் குறிப்பேடுகள் தவிர்த்து அனைத்தும் இலவசம், மேலும் ஆண்டுக்கட்டனம் மிகக் குறைவே. நான் படிக்கும் போது ஆண்டுக் கட்டணம் ரூபாய் இருபது, அதுவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடையாது. தனியார் பள்ளிகளுக்கு தீனி போட முடியவில்லை என்பதால் என் பெற்றோர்கள் என் தம்பி தங்கைகளை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்து போது தான் தெரிந்தது அவர்கள் படித்த தனியார் பள்ளிகள் அரசு அங்கிகாரத்துடன் துவங்கி இருக்கவில்லை என்பதே, பிறகு வேறு வழியின்று வேறொரு பள்ளிக்கு மாற்ற வேண்டிய சூழல் உருவானது, ஐந்தாம் வகுப்புகள் முடிந்த பிறகு பழைய படி தம்பியும் மகன்களை அரசு சார்பு/ உதவி பள்ளியில் ஆங்கில வழி கல்வியிலேயே சேர்த்துவிட்டார். நகரங்களில் ஐம்பதற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் கல்வி வழியாக சொல்லிக் கொடுக்கின்றனர். இருந்தாலும் அவற்றில் படிக்கும் மாணவர்களால் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் மதிப்பெண்களை பெற முடியவில்லை. மாணவர்களுக்கு டை கட்டி, காண்வெண்ட் சீருடைகள், சீரற்ற ஆங்கிலப் பேச்சு, அம்மாவுக்கு 'மம்மி' அப்பாவுக்கு 'டே(ர்)டி' இவைகள் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் வழியாக கிடைக்கும் வெகுமதிகள், இவற்றிற்கு செல்ல வாகனம் உட்பட பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை கிட்டதட்ட வருமானத்தில் கால் பங்கு, இவ்வாறு வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் தவிர்த்து பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் இவற்றிக்கு நன்கொடை என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் பெற்றோர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது, இவற்றிற்கெல்லாம் முறையான கணக்கு வழக்குகளை பெற்றோர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கொடுப்பதும் இல்லை.
குழந்தைகளை (விதைத்து) வைத்து செய்யப் படும் இந்த தனியார் பள்ளி விவசாயங்களில் நட்டமென்ற பேச்சுக்கே இடமின்றி பல மடங்கு லாபமும் வசதிகளும் கூடவே பள்ளியில் தாளாளர், முதல்வர் என்கிற தகுதியும் அதனால் சமூக பெரும்பேறு (அந்தஸ்து) கிடைப்பதால் சாராயம் விற்றவர்களெல்லாம் கல்விக் கூடம் அமைக்கச் சென்றுவிட்டார்கள் என்பதும் உண்மை. அதற்காக பார்பன தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியைத் தருவதாக நினைக்க வேண்டாம். அந்த கல்வி நிறுவனத் தொழில் கிடைக்கும் நன்மைகள் என்பதற்க்காக 'சாராயம் விற்பவர்கள்' என்று குறிப்பிட்டேன். மற்றபடி அந்த தொழில் குறிப்பிட்ட சமூகம் தான் செய்கிறது என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரம் கிடையாது. ப்ரவுசிங் செண்டர் எனப்படும் இணைய மையங்களைப் போல் தனியார் கல்வி நிறுவனங்களும் சாதிமதம் சாராது அனைத்து பிரிவினர்களாலும் நடத்தப்படுகின்றன, ஆனால் பார்பனர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணங்கள் என்பதுடன் அதனை 'ஆஸ்ரமம் அல்லது சேவை அமைப்பு' என்பதாக விளம்பரப்படுத்துவார்கள். (மற்றபடி) எந்த ஒரு தனியார் பள்ளிகளும் பலமடங்கு லாபம் எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட நிருவனங்கள் என்று சொல்வது பொருத்தமானது.
கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்கிற் பெற்றோர் கோரிக்கைகளால் ஓய்வு பெற்ற கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டது, இதற்கு தனியார் பள்ளிகள் ஒப்புக் கொள்ளவில்லை. கொள்ளையில் பங்கு கேட்டாலும் பரவாயில்லை கொள்ளையே அடிக்கக் கூடாது என்பது கொடுமை அல்லவா என்பதாக அவர்கள் கோவிந்தராஜன் பரிந்துரைக்கு தடை ஆணையும் பெற்றுவிட்டார்கள். அந்த தடையை எதிர்ப்பு பெற்றோர்கள் முறையிட்டு போராட தற்போது தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக பள்ளிகளை மூடும் போராட்டம் அறிவித்துள்ளார்களாம்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவியே முதல் இடம் பெற்றார். மார்கெட்டிங்க் டிமாண்ட் எனப்படும் சந்தை தேவை இருக்கும் வரை அதற்கான விலையும் மிகுதியாகவே இருக்கும் என்பதாக தனியார் பள்ளிகள் பணவேட்டை நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.
15 செப்டம்பர், 2010
வேதாளம் சொல்லாத ஆரிய மாயை !

நவீன இந்து மதம் என்பது பண்டைய ஆரிய மதத்தின் இன்றைய பெயர் வடிவம். வடமொழி இந்தி வடிவமாக மறைந்திருப்பதைப் போலவே ஆரிய வைதீகம் மதம் இந்து மதம் என்ற பெயரில் மறைந்திருக்கிறது என்பதை அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வழியாக நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்திக்கும் இந்து மதத்திற்கும் அதனால் ஏற்படும் சீர்கேட்டிற்கும் சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. பிற மக்கள் இனங்களை ஒப்பிடும் போது சிறிய அளவிலான மக்கள் தொகை என்றாலும் குயுக்தி அல்லது பஞ்ச தந்திரம் என்பதை அறிவுத்திறனாக கூறிக் கொண்டு ஆளுமைகளைத் தொடர்ந்துவருவதால் அண்ணா யூதர்களையும் பார்பனர்களையும் ஒன்றாகவே பார்த்தார். இன்றும் கூட யூதர்கள் மீது பார்பனர்கள் பலர் பெருமை கொள்வதை பார்க்கலாம். இன்னும் சில பார்பனர்கள் தாங்கள் ஆரியர் எனப்படும் ஹிட்லர் வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதாகவும் பறை சாற்றிக் கொள்கின்றனர். ஏனென்றால் யூதர் மற்றும் செருமானியர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதால் இந்த இரு இனங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றாலும் பார்பனர்களைப் பொருத்த அளவில் இருவரும் பார்பனர்களுக்கு மாமா மச்சான்கள் தான்.
தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரைச் சொல்லாமலோ 'திராவிடம்' என்கிற பெயரைச் சொல்லாமலோ எந்த ஒரு கட்சியும் இன்னும் ஓர் நூற்றாண்டுக்குக் கூட தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலைதான். இந்த இருவர் மீதும் பார்பனர்கள் காண்டு கொண்டிருப்பதற்கு இதற்குமேல் தனிப் பெரும் காரணம் எதுவும் இருக்க முடியாது. பார்பன நலம் விரும்பும் கட்சி எனப்படும் காங்கிரசு கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியதால், பார்பன எதிர்ப்பில் (திராவிட) ஆட்சி அமைத்ததால் பார்பனர்களின் வெறுப்பு அண்ணா மற்றும் பெரியார் மீது தொடர்வதில் வியப்பே இல்லை. மத அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை பிரிக்க இந்து என்ற சொல் மிகவும் வசதியாக இருப்பதால் மதவாத அரசியல் நடத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று பாஜக போன்ற மதவாதக் கட்சிகள் நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை கைப்பெற்றும் நிலைக்குச் சென்று, விழித்துக் கொண்டோர்களின் சகிப்புத்தன்மையால் மீண்டும் இந்தியாவில் காங்கிரசு ஆட்சி என்னும் பேரவலமும் நடந்தேறிவருகிறது என்றாலும் அறுதிப் பெரும்பான்மையை மக்கள் காங்கிரசு வசம் தந்துவிட வில்லை என்பதால் இந்தப் பேய்களில் எந்தப் பேயால் ஆபத்துக் குறைவு என்கிற முடிவாகத்தான் இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்தியாவில் இந்து மதம் சார்ந்த கட்சிகள் வளர்வதற்கு இந்துக்கள் மதவாதிகள் ஆனார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் இஸ்லாமியர்களின் மத ஈடுபாடு , ஊடகங்களின் இந்து சார்பு நிலைகள் அந்தக்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. இந்தியா என்ற நாடு மத அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்தது என்னும் போது எஞ்சி இருப்போரின் மத உணர்வுகள் தாம் இந்து என்ற உணர்வை அவர்கள் பெறவதையும் பிரிந்தவர்கள் மறைமுகமாக அதை விதைத்துச் சென்றிருக்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. இவைதான் இந்தியாவில் மதம் சார்ந்த சக்திகள் தலை எடுப்பதற்கு காரணம். இதைத் தவிர்த்து இந்தியர்கள் மதங்களின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, எல்லாம் சூழலால் ஏற்படும் (எதிர்) வினையே. பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியா என்று சொல்லப்படுவதைப் போலவே பல்வேறு சமய நம்பிக்கைகளை இந்து மதம் என்று சொல்கிறோம் என்பது தவிர்த்து பார்பன இந்து சமய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கை என்பது வெறும் பரப்பல் தான். உண்மையில் சொல்லப் போனால் பார்பன நான்கு வேதங்களில் காணப்படும் நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாம் என்றோ சிதைந்து போய்விட்டன. நிலம் சார்ந்த தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்து புராணம் எழுதி அவற்றை வேதகால தெய்வங்களாகக் காட்டி பார்பனர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர். பார்பனர்களின் முழுமுதல் கடவுளான இந்திரன், சோமன் உள்ளிட்டோர் என்றைக்கோ முதன்மை வழிபாட்டில் இருந்து மறைந்துவிட்டார்கள். நிலம் சார்ந்த தெய்வங்கள், சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவற்றைத்தான் பார்பனர்களும் ஆராதனை செய்துவருகின்றனர்.
பெரியார், அண்ணா இராமனை பழிப்பதைவிட பல மடங்கு இந்திரன் புராணங்களில் பழிக்கப்பட்டு இருகின்றான், உடலெங்கும் பெண் குறி பெறக் கடவது என்பதாக சபிக்கப்பட்டு இருக்கிறான். இந்திரன் ஒரு காம வெறியன் என்பதாகவே புராணங்களில் வழியாக பழிக்கப்பட்டு இருக்கின்றான்.
மெட்ராஸ் மாகானம் என்ற பெயரை தமிழ் நாடு என்று மாற்றியதில் அண்ணாவின் பங்கையாராலும் மறக்க முடியாது. கருணாநிதி பேசுவதைவிட பல மடங்கு இலக்கிய சுவையுடன் பொருளுடன் பேசக் கூடியவர் அண்ணா. ஆட்சி அதிகாரம் என்றால் அடிப்படை கொள்கை சீரழிந்துவிடும் என்பதால் கட்சியாக மாறாமல் இருந்த பெரியார் கொள்கைகளை, ஆட்சி அதிகாரம் பெற்றால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும் என்று பெரியாரிடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டு வெற்றிபெற்றவர் அண்ணா. இன்றைக்கும் அண்ணாவின் பெரியாரின் கொள்கைகளின் தேவை என்பதற்கு காரணங்கள் வேண்டுமானால் இல்லாது போய் இருக்கலாம், இதன் காரணமாகவே திராவிடக் கட்சிகளும் தமக்குள் உடைந்து நீர்த்து போய் இருக்கலாம். ஆனால் இன்றைய நிலையை வைத்து அண்ணாதான் தமிழ் நாட்டைக் கெடுத்துவிட்டார் என்று சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை இந்தியாவில் தலித்துகள் அனைவருமே சமநிலை பெற்ற பிறகு அம்பேத்கார் என்பவர் சாதிவெறியை தலித்துகளிடம் தூண்டினார் என்று எழுதினால் அது போன்ற அபத்தம் இருக்க முடியுமா ? அண்ணா பற்றி எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.தமிழ் ஹிந்து கட்டுரைக்கு வரிக்கு வரி மறுப்பு எழுத நான் திராவிடக் கட்சிகளின் தீவிர தொண்டனும் இல்லை. பார்பன ஆதிக்கத்தை ஒழித்தவர்கள், மூட நம்பிக்கைகளை சாடியவர்கள் என்பதால் அண்ணா மற்றும் பெரியார் மீது எனக்கு ஆழ்ந்த பற்றுதல்கள் உண்டு. பெரியாரைப் போல் முற்றிலும் இறைமறுப்புக் கொள்கை என்பதாக இல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே தாக்கியவர் அண்ணா என்பதை நான் அவரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒண்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிற திருமந்திர வரியை அண்ணாவும் பரப்பினார்.
அண்ணாவை கிண்டல் செய்வது அவமானப் படுத்துவதாக கட்டுரை எழுதிய இணைய தளம் மாடு படம் ஒன்றைப் போட்டு அதன் பின்பக்கம் பணமூட்டைகள் கொட்டுவதாகப் போட்டு படம் இருக்கிறார்கள். அந்தப்படத்தைப் பார்த்தால் மாட்டுச் சாணத்தை திருநீராக்கி பசுமாடுகளின் பின்பக்கத்தை பணம் காய்க்கும் மரமாக்கியவர்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். பிறரைப் பற்றி சொல்வதெல்லாம் தன்னையும் சுட்டும் என்று அண்ணா சொன்னதை உணராதவர்கள் போலும் இவர்கள். இது தான் ஆரிய மாயை என்பதா ?அண்ணா என்ன செய்தார் ? பார்பன தமிழ் இந்துக்கள் பார்பனர்களின் ஒருவரான ஜெயலலிதாவே நன்கு சொல்லி இருக்கிறார்.
கருணாநிதி போல் சொல்ல வேண்டுமென்றால் 'அண்ணா பல்கலைகழகம், அண்ணா சாலை, அண்ணா விமான நிலையம், அண்ணா பொது நூலகம், அண்ணா நகர் என தமிழக எங்கெங்கும் இருக்கும் அண்ணாவின் பெயரை ஒரு கேவலமான திரிப்பு கட்டுரைமூலம் கெடுத்துவிட முடியும், அகற்றிவிட முடியும் என்று நினைக்கும் சிறுமதியர்களின் செயலைக் கண்டு நாமெல்லாம் நகைக்கலாம்'
பதிவர்:
கோவி.கண்ணன்
at
9/15/2010 10:39:00 AM
தொகுப்பு :
அண்ணா,
அரசியல்,
எதிர்வினை,
பெரியார்
9
கருத்துக்கள்
13 செப்டம்பர், 2010
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா !
ஒருவார இடைவெளியில் திரையுலக நட்சத்திரங்களான நடிகர் முரளியும், பாடகி ஸ்வர்ணலதாவும் திரையுலகையும் திரை இசை இரசிகர்களையும் விட்டு மறைந்துவிட்டனர்.
காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் மிகவும் இனிமையான பாடல் ஒன்று 'வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா' என்ற பாடல், இந்த பாடல் காட்சி படி கவுசல்யா ஒரு திருமணத்திற்கு வருவார் என்று நண்பர்கள் சொல்ல, அந்த திருமண ஊர்வலத்தில் பாடகராகச் சென்றால் கவுசல்யாவை பார்க்க முடியும் என்பதால் முரளி ஒத்துக் கொண்டு பாடச் செல்லுவார்.
கவுசல்யாவின் குரலை மட்டும் அறிந்தவராக படத்தின் இறுதிவரை காட்சிகளை அமைத்திருப்பார்கள். படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சான். தங்கர்பச்சான் முரளி மீது மிகவும் அன்பு கொண்டவர், முரளியின் இறுதி சடங்குகளின் போது துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தாராம்.
மெற்கண்ட பாடலைப் பாடியவர்கள் ஆண் குரலுக்காக எஸ்பிபியும் பெண் குரலுக்கு ஸ்வர்ணலதாவும் மிக நன்றாகப் பாடி இருப்பார்கள். தேவாவின் இசையில் பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. கிளாரிநெட், ட்ரம்ஸ் என ஊர்வலப் பாடல்களின் இசையில் கேட்க சலிக்காத பாடல், படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட அந்தப் பாடல்களை ஊர்வல இசைகளில் அடிக்கடி கேட்க முடிந்தது.
பாடல் காட்சியின் போது பாடகியாக நடிப்பவர் இடையில் தாகத்திற்காக சோடக் குடிப்பதாகவும் உடனேயே பெண் குரலில் தொடரவேண்டிய நிலையில் முரளியே குரலை மாற்றிப் பெண் குரலில் பாடுவதாக அமைந்தப் பாடல். சொர்ணலாதாவின் உருவத்தை ஒத்த ஒரு துணை நடிகை படத்தில் பாடலை பாடிவருவார். முரளி பெண் குரலில் பாடுவதாக அமைந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். பாடியது ஸ்வர்ணலதாவாக இருந்தாலும் முரளியின் அந்த நொடி நடிப்பு அவரே அதைப் பாடுவதாக ரசிகர்களை உணரவைத்தது.
'ஆட்டமா தேரோட்டமா ?' சொர்ணலாதாவை அடையாளப்படுத்தியதைப் போன்றே ரம்யா கிருஷ்ணனின் இடைகால மீள் வரவையும் அந்தப் பாடல் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சித்ராவின் பாடல்கள் வெளிவந்த காலங்களில் சொர்ணலதாவின் குரல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களும் இனிமையாக அமைய எல்லா முன்னனி இசை அமைப்பாளர்களிடம் ஸ்வர்ணலதா பாடி வந்தார்.
'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போன்ற சோகப்பாடல் மட்டுமில்லாது மிகவும் விரைவான 'மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாயா' போன்ற பாடல்களிலும் தனி முத்திரையை பதித்தார்.
பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்று இனம் காண முடியாதது போலவே பாடகியில் இவர் இனிமையான குரலுக்கு சொந்தமானவர் என்பதாக நான் பாடல்களை ரசிப்பதில்லை, என்பதால் எல்லாப் பாடகிகளைப் போலவே ஸ்வர்ணலதாவும் இனிமையான குரலுக்குச் சொந்தகாரராகவே எனக்கு பட்டார். எந்த ஒரு தென்னிந்திய பாடகியும் தமிழில் பாடுவதன் மூலமே பெரும் புகழடைகிறார்கள் என்பதை ஸ்வர்ணலதாவும் நிருபணம் செய்துவிட்டார். மலையாளி என்றாலும் கூட ஒரு தமிழ் பாடகியாக தமிழ் மண்ணில் சென்னையில் இறுதி மூச்சை விட்டு தமிழ் பாடகியாக மறைந்திருக்கிறார் என்பதால் தமிழ் திரை இசை இருக்கும் காலம் வரை ஸ்வர்ணலாதாவும் போற்றப் பட வேண்டிய ஒருவர்.
ஸ்வர்ணலாதவின் குரலில் இனி புதிய பாடல்கள் கிடைக்காது என்று நினைக்கையில் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரை இசை நுகர்வாளன் என்ற முறையில் ஸ்வர்ணலாதாவின் மறைவில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.
முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.

9/13/2010 12:24:00 PM
தொகுப்பு :
திரை உலகம்,
திரை செய்திகள்,
திரைமணம்
4
கருத்துக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்