பின்பற்றுபவர்கள்

10 ஏப்ரல், 2012

* இது தான் 'உயர்' தமிழா ? - ஒரு மொழிப் பெயர்ப்பு !


சென்ற ஏப்ரல் 1, ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணிக்கு விஜய் தொலைகாட்சியை ஓடவிட்டேன், பக்தி திருவிழா நிகழ்ச்சி யாரோ ஒரு வைணவ சாஸ்திரிகள் நன்னா ப்ரசங்கம் பண்ணிண்டே பஜனை பண்ணினா, நேக்கு தான் ஒண்ணும் புரியல, கீழே உள்ளதைப் படிச்சுப் பாருங்கள், நேக்கு புரியலைன்னாலும் நோக்கு புரியும்னு பதிவு செய்து கொஞ்ச கொஞ்சமாக கேட்டு தட்டச்சினேன், ப்ரசங்கம் பண்றச்ச நாலு பேர் நாமம் பொட்டுண்டு முன்னாடி உட்கார்ந்து கேட்டுண்டு இருந்தா மத்தவாளைப் பார்த்தா ப்ராமணாப் போல் தெரியவில்லை, ஆனால் சாஸ்திரிகள் நன்னா ப்ராமண பாஷையில் தான் பேஷினா, கேட்டுண்டுருந்த மத்தவாளுக்கு அர்தம் ஆனதா நேக்கு தெரியாது.

**********
இப்போது பிரஷங்கம்....


"சாதுக்கள்னா யாரு ?  தீர்கமான ஆயுளைக் கொடுக்கணும் அப்படிங்கிறது தான் ஒரு பிறவியிலே அவனுக்கு தீர்கமான ஆயுள் கிடைக்கறது, அந்த தீர்கமான ஆயுள் கிடைத்த பிறவியிலும் அவன் புண்ணியம் பன்றான், அந்த பிறவியிலும் அவன் நறையா புண்ணியம் பண்றதைப் பார்த்துட்டு அடுத்தப் பிறவியிலே அவனுக்கு * அக்‌ஷயமான ஐஷ்வர்யத்தை பஹவான் அனுக்கிரஹம் பண்றான், அந்த அக்‌ஷ்யமான ஐஷ்வரியத்தை வச்சிண்டு அவன் நறையா புண்ணிய காரியங்களை பண்ணும் பொழுது பஹவான் பார்க்கிறான் அடுத்த ஜென்மாவிலே அவனுக்கு பெரிய எஸ் எஸ் கீர்த்தியைக் கொடுக்கிறான், அந்த கீர்த்தி இருக்கக் கூடிய ஜென்மாவிலேயும் அவன் நறையா புண்ணியங்களை பண்ணிண்டே வர பஹவான் பார்க்கிறான், இவனுக்கு எதக் கொடுத்தாலும் அதற்கு தகுந்த புண்ணியத்தைப் பண்றான் இனிமே இவனுக்கு கொடுக்கறத்துக்கு ஒண்ணுமே இல்லை தீர்கமான ஆயுள் கொடுத்தாச்சு ஆரோக்கியம் கொடுத்தாச்சு அழகு கொடுத்தாச்சு, புகழ் கொடுத்தாச்சு பஹவான்கிட்ட இப்ப கொடுக்கிறதுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு மோ... க்‌ஷ ...ச...ம். ஆனா சாத்திரங்களெல்லாம் என்ன சொல்றதுண்ணா புண்ணியத்துக்கு பலன் மோக்‌ஷசம் இல்ல. புண்ணியம் பண்ணினால் நல்ல ஜென்மாக்கள் வரும் அந்த ஜென்மாக்களிலே நாம் சவுக்கியமாக இருக்கலாம். "

***************


அருஞ்சொற்பொருள்

தீர்கமான ஆயுள் - நீண்ட வாழ்நாள்
புண்ணியம் - நற்பலன்
ஐஷ்வர்யம் - செல்வம்
அனுக்கிரஹம் - கிட்டுதல்
அக்‌ஷ்யமான - குன்றாத
ஜென்மா - பிறவி
எஸ் எஸ் கீர்த்தி - எஸ் எஸ் வாசனா ? ஆவ்வ் ( கீர்த்தி - புகழ்)
மோக்‌ஷசம் - மேலுலகம்
சவுக்கியம் - உடல் நலம்

* மேலேயும் கீழேயும் திரும்பத் திரும்ப சிலவரிகள் வருவது அவர் பேசியதில் இருந்ததே

***************

"இவனோ புண்ணியத்துக்கு மேல புண்ணியம் பண்ணிண்டே இருக்கான், * அந்த புண்ணியத்துக்கு பலனா தீர்கமான ஆயுள், ஐஷ்வர்யம், ஆரோக்கியம், எஸ் எஸ், கீர்த்தி எல்லாம் கொடுத்தாச்சு, பஹவான் பார்க்கிறான் நம்மகிட்டேர்ந்து இவனுக்கு கொடுக்காதது மோட்சம் தான் ஆனா புண்ணியத்திற்கு பலனா மோக்‌ஷத்தக் கொடுக்க முடியாது, அதனால பஹவான் என்ன பண்ணறான்னா இவனோட புண்ணியங்களெல்லாம் உயர்ந்த நிலையை அடையும் பொழுது பஹவன் அவனுக்கு சத்சங்கத்தைக் கொடுக்கிறான், அந்த சத்சங்கத்தினால இவன் மோட்சம் வரட்டும் என்று நினைக்கிறான், அதாவது ஒரு ஜீவனுக்கு எப்பொழுது சத்சங்கம் கிடைக்கினும்கிறது ப்ராப்தம் ஆகிறதுன்னா பல கோ(ட்)டி ஜென்மாக்களில் இவன் பண்ணின புண்ணியங்களெல்லாம் பழுத்து ஒரு நிலையை அடையும் பொழுது தான் அவனுக்கு சத்சங்கம் அப்படிங்கிறது ப்ராப்தம் ஆகிறது. சத்சங்கம் என்றால் என்ன ? ஒரு இடத்தில போர்டு இருக்கு வாசல்ல இது சத்சங்கம் னு எழுதி இருக்கிறதால சத்சங்கம் ஆகிடாது, சத்சங்கம் அப்டினுட்டா, பொதுவா அதற்கு ஒரு அர்தம் சொல்லனும் அப்படின்னுட்டா சாதுக்களுடைய சங்கம் .....சத்சங்கம். "

***************
அருஞ்சொற்பொருள்

சத்சங்கம் - பக்தர் / அன்பர் கூட்டம்
ப்ராப்தம் - விதி
***************

"சாதுக்கள்னா யாரு அப்படினுட்டு பாஹவதமே ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒரு பதிலும் சொல்றது 'ஜீவன் முக்தி, க்ரண முக்தி, காய முக்திய சாது மஹான். அந்த சாதுக்கள் மூன்றே மூன்று காரியம் தான் பண்ணிண்டு இருக்காளாம், அந்த மூன்று காரியத்திற்கு அந்நியமா வேற ஒரு காரியம் பண்ணி பழக்கமில்லே தெரியாது, என்ன பண்ணுவா அப்படின்னா ? எங்கேயாவது யாராவது பஹவானைப் பத்தி சொல்லமாட்டாளா ன்னு ஏங்கி தவிச்சி சதா ஷர்வ காலமும் பஹவானுடைய கதைகளையும், குணங்களையும், லீலைகளையும் கேட்டுண்டே இருப்பாளாம், அப்படி சொல்றதுக்கு யாருமே இல்லேன்னு அப்படின்னுட்டா, நான் சொல்றேன் நீ கேட்கிறியான்னு சின்ன குழந்தையை உக்காத்தி வச்சிண்டாவது பஹவானோட பால லீலைகளை அந்த குழந்தைக்கு எந்த அளவுக்கு புரியுமோ அந்த அளவுக்கு சொல்லுவா, சொல்றதுக்கும் ஆளில்லே, கேட்கிறதுக்கும் ஆளில்லே ங்கிற போது 'க்ருஷ்ணா ஹரே கோவிந்தா, ஹரே க்ருஷ்ணா ராமா கிருஷ்ண கோவிந்தா, நந்த நந்தன கோவிந்தா, ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா அப்படின்னு பஜனை பண்ணிண்டே இருப்பாளாம், ஒண்ணு பகவத் மூலம் சொல்றது மற்றொன்று பகவத் மூலம் அழிக்கிறது இல்லேன்னா பஹவானைப் பற்றி பாடிண்டே இருக்கிறது, இந்த மூன்று காரியங்களை மட்டுமே யார் பண்ணிண்டு இருக்காளோ அவா தான் சாதுக்கள்."

(இதுக்குமேல் கேட்கவில்லை தொலைகாட்சியை நிறுத்தியாச்சு)

***************
அருஞ்சொற்பொருள்

பாஹவதம் - சமய நூல்
ப்ராப்தம் - விதி
மஹான் -  மூத்த அறிஞர்
சாது - சாமியார்
அந்நியம் - மாற்றாக
காரியம் - செயல்
லீலை - விளையாட்டு
பால - சிறு அகவை
காயம், க்ரணம், ஜீவன் - உடல், பொருள், ஆவி(உயிர்)
சதா ஷர்வ காலமும் - முக்காலமும் அல்லது எப்பொழுதும்

***************

சென்னையில் கைரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை பாஷையில் பேசுறாங்க, தமிழை கொலை செய்கிறார்கள், கொச்சைப் படுத்துகிறார்கள் என்கிறோம், ஆனால் நானூறு பேர் அமர்ந்திருக்கு ஒரு அவையில் பிரசங்கம் என்ற பெயரில் பார்பன மொழி வழக்கிலேயே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெளியில் பார்பனர்கள் தங்களுக்குள் தவிர்த்து பிறரிடம் பார்பன தமிழ்மொழிப் பேசிவது கிடையாது, எனவே பார்பனர்களுக்கு பொதுவாக பலர் பேசும் பொதுத்தமிழ் உரையாட வராது என்று சொல்வதற்கில்லை, நம்புவதற்கில்லை, ஆனால் எல்லோரும் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் வலிந்தே இவ்வாறு பேசுகிறார்கள், ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது, ஒரு வேளை இழந்து போன பார்பனப் பெருமையை 'ப்ராமணர்' என்னும் கட்டமைப்பாக மீட்டெடுக்கும் முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது, 30 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக தமிழகத்தில் நரேஷ் "ஐயர்" மற்றும் அனுஷா "ஐயர்" போன்ற பெயர்கள் தோன்றி இருக்கின்றன. பார்பனர்கள் தனி அடையாளம் விரும்பும் வரை பார்பன எதிர்ப்புகளை பார்பனர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது பார்பனர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பார்பனர்களும் பார்பன எதிர்ப்புகளை விரும்பியே ஏற்படுத்திக் கொள்கிறார்கள், வெளியில் இருந்து வரும் பார்பனர் எதிர்ப்பு பார்பனர்களை ஒன்று சேர்க்கும் என்றே பார்பனர்கள் நினைக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் !

திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன். 

********

நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு. 


சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது. 

இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.

மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?

  • சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
  • பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
  • பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
  • இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
  • அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.

9 ஏப்ரல், 2012

* எதிர் கிருமி (Anti-Virus) மென்பொருள் இல்லாமல் கணிணிகளை இயக்க முடியுமா ?

உங்களில் பலர் மென்பொருள் துறையில் அன்றி அல்லது வேலை செய்யும் துறையில் கணிணியில் வேலை செய்யாமல் தனி உடைமையாக வீட்டினுள் கணிணி வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள், அதை இயக்கும் அல்லது பயன்படுத்தும் அளவுக்கு திறன் பெற்றவர்களாக இருப்பீர்கள்.  பொதுவாக இவ்வாறு தனிப்பட்ட முறையில் கணிணி பயன்படுத்டுபவர்களுக்கு பயன்படுத்துவதில் அச்சம் இருக்கவே செய்யும், அதில் சிலர் வீட்டில் யாரையும் தொடவும் விடமாட்டார்கள், காரணம் எதோ ஒரு காரணத்தினால் இயங்காமல் போனால் கணிணி பயன்படுத்துவது தடையாகிவிடும் என்கிற அச்சம் தான், பொதுவாக இந்த அச்சம் தேவையற்றது, தெரியாமல் விசைப்பலகையில் ஒரு விசையை அமுக்குவதால் கணிணி செயல்படாமல் போகும் என்ற அளவுக்கெல்லாம் இயங்கு மென் பெருள் (Operating System) அமைக்கப்பட்டிருக்காது, எல்லோரும் பயன்படுத்தும் வகையில் தான் அமைத்திருப்பார்கள், முதன் முதலில் பயன்படுத்தும் போது கண்ணைக் கட்டி விட்டிருப்பதைப் போல் இருந்தாலும், நாளடைவில் நாம் அதில் பயன்படுத்தும் எழுதிகளையும் (வேர்ட் ப்ராசசர்), அட்டவணைகளையும் (எக்ஸெல்), மற்றும் இணைய உலவிகள் (இண்டெர் நெட் எக்ஸ்ப்ளோரர்)  பயன்படுத்தத் தெரிவதால் பின்னர் அந்த அச்சம் போய்விடும்.

கணிணி வைரஸ் என்பது இயங்குதளத்தின் நுட்பத்தை குறுக்குவழியாக பயன்படுத்தி கணிணியை முடக்கும் ஒரு மென் பொருள் தான், இணைய பயன்பாடு இல்லாத காலங்களிலேயே இவைகள் சேமிப்பு தட்டுகளின் (ப்ளாப்பி டிஸ்க்) மூலம் வேக மாகப் பரவின, தற்பொழுது இணையம் வழியாக பரவுகின்றன, வைரஸ் எழுதிவிடுபவர்கள் முன்பு போல் நோக்கமின்றி ஒரு அரைகூவலாக எழுதி விட்டு வேடிக்கைப் பார்ப்பது போல் தற்பொழுது செய்வதில்லை, பெரும்பாலும் வியாபாரம் தொடர்பில் அவை எழுதப்பட்டு உங்கள் கணிணிக்கு அனுப்பப்பட்டு மிகப் பெரிய அளவில் மின் அஞ்சல்களை அனுப்புவம் அந்த மின் அஞ்சலை படிப்பவர்களிடம் பொருள்களை விற்பனை செய்யும் தந்திரமாக அவை செயல்படுகின்றன, இவற்றை மால்வேர் என்பர். இணையம் வழியாக பரவுபவை பெரும்பாலும் இந்த வகை வைரஸ்களே, இவை கணிணீயில் செயல்படும் போது கணிணி மையச் சில்லின் (CPU) மொத்தத் திறனையும் எடுத்துக் கொள்வதால் இயல்பாக நாம் பயன்படுத்தும் கணிணி வேகம் குறைந்துவிடும் அல்லது செயல்பாடு முடக்கப்படும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆண்டி வைரஸ் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். அதை விற்பனை செய்யும் நிறுவனமும் பெருந்த லாபம் அடைகிறது, 90 விழுக்காட்டு வைரஸ்கள் ஆண்டிவைரஸ் நிறுவனங்களால் இணைய வெளியில் அனுப்பப்படுகின்றவை, ஏவுகணை தாக்குதலை ஏவுகணைத் தாக்குதலால் முறையடிப்பது போல் மற்ற ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் அதற்கான தற்காப்பு மென் பொருளை அமைக்கும், உருவாக்கியவர்களே கூட ஆண்டி வைரஸ் மென்பொருளையும் விற்பார்கள், இவையெல்லாம் தொழில் நுட்ப அறிவுத்திறனை குறுக்குவழியில் பயன்படுத்துவது ஆகும், போட்டித்தன்மை மிக்க உலகில் இவை எதிர்பார்த்தது மற்றும் இயல்பானது தான்.

கணிணி வைரஸ்கள் பற்றி அறியாதவர்கள் இந்த மென் பொருளை வாங்கிப் பயன்படுத்துவது தேவை என்ற அளவில் தான் நிலைமை உள்ளது, அதுவும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் மற்றொரு பக்கம். ஆனாலும் கணிணியின் செயல் கட்டுப்பாடுகளை நாம் மாற்றி அமைப்பதன் மூலம் இத்தகைய மென்பொருள் இல்லாமலேயே நாம் கணிணியை இணையங்களிலும் கூட பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸிபி மற்றும் அதற்குப் பிறகான மைக்ரோசாப்ட் இயங்குதள மென்பொருளில் (Operating System) அட்மின் பயனர் (administrator account) கணக்கு ஒன்று இயங்குதள மென்பொருளை அமைக்கும் போதே அமைந்துவிடும், விண்டோஸ் மென்பொருளை நிறுவும் போது அட்மின் பெயருக்கான கடவுச் சொல்லை தெரிவு செய்யச் சொல்லிக் கேட்கும், அதை வெற்றாக (empty) விடாமல் 8 எழுத்துகளுக்கும் மேலான எண்ணிக்கையில் கடவுச் சொல்லை பொறுத்திக் கொள்ளுங்கள், அது தவிர முதல் பயனர் உள்ளிட்ட 5 பயனர்கள் பெயரை பின்னர் கேட்கும், அதில் பெரும்பாலும் முதல் பயனர் கணக்கில் தங்கள் பெயரை அல்லது இல்லத்தில் உள்ளவர்கள் பெயரையோ கொடுப்பார்கள், இந்த முதல் பயனர் கணக்கும் அட்மின் பயனர் கணக்கும் Installation Rights எனப்படும் மென்பொருள் நிறுவிக் கொள்ளும் admin உரிமை பெற்றிருக்கும், நீங்கள் அட்மின் பயனர் கணக்கு பயன்படுத்தாவிட்டாலும் முதன் முதலாக அமைக்கும் பயனர் கணக்கு அட்மின் உரிமையுடன் தான் இருக்கும். அதை பயன்படுத்தி கணிணியை இயக்காமல் புதிதாக ஒரு பயனர் கணக்கைத் துவங்கி அதில் 'Change Account Type' என்பதை தெரிவு செய்து 'Limited' என்று மாற்றிக் கொண்டு அந்தக் கணக்கை பயன்படுத்துங்கள்.

Limited User கணக்கை நுழைவு (Login) கணக்காகப் பயன்படும் பொழுது எந்த ஒரு மென் பொருளையும் புதிதாக நிறுவ முடியாது, பெரும்பாலும் கணிணி வைரஸ் அல்லது மால்வேர்கள் அட்மின் உரிமை உள்ள கணக்கின் வழியாக நுழையும் பொழுது வைரஸ் அல்லது மால்வேர் மென்பொருள்களை அந்த அட்மின் உரிமை மூலமாக நிறுவிடுகின்றன  Limited User ஆகப் பயன்படுத்தும் போது அவற்றால் செயல்படமுடியாது, ஒரு சில மால்வேர்கள் தனிப்பட்ட பயனராக இங்கும் நுழையும், அதை அகற்றுவது மிக எளிது தேவையான கோப்புகளை / படங்களை சேமித்துவிட்டு, அந்த  Limited User கணக்கை மொத்தமாக நீக்கிவிட்டால் அந்த மால்வேரும் அழிந்துவிடும், பிறகு பழைய படி அதே பயனர் கணக்கை அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.






விண்டோஸ் Firewall ன்னும் தடுப்பு சுவரை 'ON' செய்வதன் மூலம் மால்வேர்கள் நுழைவதையும் தடுத்துவிடலாம். விண்டோஸ் Firewall ஐ அட்மின் கணக்கின் வழியாகத்தான் ON/OFF செய்ய முடியும், Limited User பயன்படுத்திவரும் பொழுது புதிய மென் பொருளை கணிணியில் சேர்க்க வேண்டுமெனில் Logout செய்துவிட்டு அட்மின் உரிமை உள்ள கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மென் பொருளை அமைத்துவிட்டு Logout செய்துவிட்டு மீண்டும் Limited User  கணக்கின் வழியாக நுழைந்து புதிய மென் பொருள் அமைக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கணிணி வைரஸ்கள் உள்ளே நுழைந்தாலும் தானாக செயல்படும் ஆற்றல் வெகுவாக குறைக்கப்படுவதுடன் ஆண்டி வைரஸ் மென்பொருள் இன்றியே கணிணியை பயன்படுத்த முடியும்

கணிணி வைரஸ் மற்றும் மால்வேர்கள் கணிணியினுள் செல்லாமல் இருக்க பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை :

  • தேவையற்ற அல்லது அனைத்து Tool Bar களையும் இணைய உலவியில் இருந்து நீக்குங்கள்
  • பொதுவாக ஆபாச இணையத் தளங்கிலிருந்து தான் மால்வேர் மற்றும் வைரஸ்கள் பரவுகின்றன, அவற்றிற்கு தெரியாமல் அல்லது தெரிந்தே சென்றால் எதாவது pop-up விண்டோஸ் வந்து OK, Yes எதாவது கேட்டால் உடனேயே மூடிவிடுங்கள், அப்படி மூடமுடியாமல் போனால் Task Manager (ctrl+alt+del, then select Star Task Manager, under Process, Select the Browser Name then Kill Process Tree ) வழியாக அந்த உலவியின் செயல்பாட்டை நிறுத்திவிடுங்கள். \
  • உலவிகளின் Plug-in வகைகளில் தேவையற்றதன் செயல்பாடுகளை (Disable) நிறுத்திவிடுங்கள்


IE Plug-in



  • உலவியின் Cookies' களை அடிக்கடி அழித்துவிடுங்கள் (Clean)
மேலே சுட்டியுள்ளபடி Limited User பயன்படுத்துவதில் ஏதேனும் ஐயம் இருந்தால் தெரியப்படுத்தவும். விண்டோஸ் XP க்கு என்று எடுத்துக்காடுகள் கொடுத்திருந்தாலும் விண்டோஸ் 7 மற்றும் 8 ஆகியவைகளிலும் இதே முறைகள் தான் பின்பற்றப்படுகின்றன.

மற்றொரு பதிவில் admin user கடவுச் சொல் மறந்துவிட்டால் அல்லது செயல்படாவிட்டால் கணிணி தகவல்களை எப்படி மீட்டெடுப்பது என்று பார்ப்போம்.

* மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு !

கஸ்ட் 20, 2007 ஆம் ஆண்டு கிடைத்த தமிழ்மணம் நட்சத்திர பதிவர் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. எழுதத் துவங்கி ஓராண்டு கழித்து கிடைத்த முதல்வாய்பிற்குப் பிறகு நான்கு அரை ஆண்டுகளில் இரண்டாம் வாய்ப்புக் கிடைத்துள்ளது, மீண்டும் நட்சத்திரம் ஆக்கப்படலாம் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாவிட்டாலும். அதை ஒரு நன்மதிப்பாக நினைத்திருந்ததால் அப்போது எடுத்து வைத்த திரை ஒற்று (ஸ்கிரீன் ஷாட்கள்) கீழே உள்ளப் படங்கள்.





புதிதாக எழுதவரும் பதிவர்கள் துவக்க காலத் தமிழ்மணத்தின் முகப்பு எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளலாம். முன்பு தமிழ்மணம் சார்பில் 'பூங்கா' என்கிற மாத இதழ் இணையப் பதிப்பு வெளியானது(படத்தில் பார்க்க), அப்போழுது எழுதிவந்தவர்களில் 80 விழுக்காட்டினர் எழுதுவதைக் குறைத்துவிட்டார்கள், அவர்களில் ஐம்பது விழுகாட்டினர் எழுதுவதையே நிறுத்திவிட்டனர், மீதம் டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூலில் எழுதிவருகின்றனர். எல்லோருக்கும் எப்போதும் நேரமும் ஆர்வமும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அதே போன்று எழுதப் பழகியவர்களுக்கு எதையாவது எழுதாவிட்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும், சமூக அவலங்கள், வன்கொடுமைகள் குறித்து நம்மால் எதுவும் செய்ய இயலாது என்று தெரிந்த போதிலும் ஆற்றாமையை நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது ஓரளவு மன அழுத்தம் குறைகிறது. 

தேர்தல் காலங்களில் பதிவர்கள் தீயாக எழுதுவார்கள், ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இருக்காது, விழிப்புணர்வு, பொதுபுத்தி ஆகியவற்றை ஓரளவு கடந்து எழுதுவதால் உலக நடப்பும் அப்படித்தான் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், அது வலைப்பதிவுகள் மூலம் வளர்த்துக் கொண்ட பொது புத்தி. புற உலகில் ஊடகங்களை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அதுவும் தமிழ் சூழலில் ஊடகங்கள் பக்க சார்பு உள்ளவை என்பதால் சில நாளிதழ்களின் வாசகர்களாக இருப்பவர்கள் நாளிதழலின் மன நிலையைக் காட்டுபவர்களாகத்தான் கருத்து கொண்டிருப்பார்கள். வலைப்பதிவில் எழுதுவதால் பெரிதாக சமூகமாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் நாளடைவில் எழுதுபவர்களின் எண்ணிக்கைக் கூட, வாசகர்களின் எண்ணிக்கைக் கூட அவர்கள் மூலம் கருத்துப் பரவல்களை ஏற்படுத்தி, பொது புத்திகட்டமைப்புகளையும் அசைத்துப் பார்க்க முடியும்.

வலைப்பதிவில் எழுதுவதன் மூலம், உலகத் தமிழ் சமூகத்தில் வெவ்வெறு நாடுகளில் வசிப்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது,  வகுப்பு தோழர்கள், வசிக்குமிடத் தோழர்கள் என்பதைத் தாண்டி நட்பு வட்டம் விரிவடைகிறது,  வலைப்பதிவரின் திருமணங்களுக்கு வலைப்பதிவர்கள் திரளாக சென்று வருகின்றனர், 10 ஆண்டுக்கு முன்பு இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒருவரின் எழுத்தின் தன்மையை வைத்து ஓரளவு அவருடைய சிந்தனை ஓட்டம் மற்றும் எண்ணங்களை அறிந்து கொள்வதால் நம்முடன் தொடர்பில் இருக்கும் பதிவர் நண்பரின் தன்மைக்கேற்ப பழக முடிகிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளமுடியும். 7 ஆண்டுகளாக எழுதிவருவதன் மூலம் எனக்கு கிடைத்த வலைப்பதிவு நண்பர்கள் வட்டத்தில் குறைந்தது 100 பேராவது என்னை / நான் நேரில் சந்தித்துப் பேசியவர்கள்.

சில ஆண்டுகள் கழித்து நாம் எழுதியதைத் திரும்பப்படிக்க நமக்கே வியப்பாக இருக்கும், ஒன்று நம்மால் இவ்வளவு சிறப்பாக இவற்றை எழுத முடிந்திருக்கிறதா ? இரண்டு எழுத்தின் தரம் ஒப்பிட தற்காலத்தில் கூடி இருப்பதையும் அறிய முடியும். வலைப்பதிவு என்பது ஆவணம் போன்றது,  நமது நிலைப்பாடுகள் ஒவ்வொரு காலத்தில் எப்படி சென்றிருந்தது என்று அறிய முடியும். கேள்விப்படாத தகவல்களை, ஆதாரமின்றிய தகவல்களை எழுதுவது பின்னர் அவற்றில் உண்மையில்லை என்று அறியும் பொழுது நாம் எழுதியவை பயனற்றவையாகி இணையக் குப்பையாகிவிடும், அதை வேறொருவர் போதிய தெளிவின்றிப் படிக்கும் போது உண்மை என்றே நினைத்துக் கொண்டு இருப்பர், தவறான தகவல்களை ஒரு சிலர் நம்முடைய பொறுப்பற்ற செயலால் உள்வாங்கிக் கொண்டிருப்பர் என்பதை நினைத்து எழுதுவது வலைப்பதிவில் எழுதுவதில் கடைபிடிக்க வேண்டிய எழுதப்படாத அணுகுமுறைகள்.


******
மூன்றாம் முறையாக காலம் வலைப்பதிவின் முகப்பை மாற்றி இருக்கிறேன் , கீழே உள்ளது 2008 செப்டம்பர் வரை இருந்தது

அதன் பிறகு சென்றவாரம் வரை இருந்த முகப்பு 
இப்போதெல்லாம், பெரிய திரைகளும் அகலத் திரைகளும் மேசைக் கணிணி மற்றும் மடிக்கணிணிகளில் இருப்பதால் புதிய முகப்பை அதற்கேற்றவாறு மாற்றி இருக்கிறேன். இடுகை எழுதும் / படிக்கும் பகுதி பெரியதாகவும் பிற பக்கவாட்டுத்தகவல்களுக்கு போதிய அளவும் விட்டிருப்பதால் வாசிக்கவும், பெரிய அளவுக்கு படங்களை பார்ப்பதற்கும் இந்த முகப்பு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கூகுல் ப்ளாக்கரின் அண்மைய மாற்றங்களின் பயன்பாடுகளுடன், செல்பேசி உள்ளிட்டவைகளில் வாசிக்க எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளதால் நான் இந்த புதிய முகப்பிற்கு மாறி உள்ளேன். பழையன கழிதல் என்ற அடிப்படியில் உங்கள் வலைப்பதிவுகளையும் மாற்றிக் கொண்டால் வாசிப்பவர்களுக்கு பயனாக இருக்கும் என்பது எனது பரிந்துரை.
*******
எனக்கு தெரிந்து இரண்டாம் முறை நட்சத்திர பதிவராகும் வாய்ப்பு பெற்றவர்கள் 13 வலைப்பதிவர்கள்.

திருமதி துளசி கோபால்
தமிழ்மணம் திரு காசி ஆறுமுகம்
திரு தருமி
கூடல் வலைப்பதிவு திரு குமரன்
(ஐ)சங்கமம் திரட்டி / விவசாயி திரு இளா
சாத்தான் குளத்து வேதம் திரு ஆசிப் மீரான்
நண்டு @நொரண்டு -ஈரோடு 
இளவேனில் திரு தமிழ்நதி 
திரு மோகன்தாஸ் இளங்கோவன்
தமிழ் புத்தகத் தகவல் திரட்டு விருபா(தொடர்ந்து இருவாரம்)

நாம் வாழ்நாளில் வால்நட்சத்திரங்களை இருமுறை பார்க்க முடிவது அரிது, தமிழ்மணத்தில் இரண்டாம் முறை நட்சத்திரப் பதிவராக எழுதும் வாய்ப்புக் கிடைத்ததற்கு தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் பதிவர் நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்றவார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகளை சிறப்பாக எழுதிய தனிமரம் திரு சிவனேசன் அவர்களுக்கு பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.

5 ஏப்ரல், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 !


ரொம்பவும் வேலையாக இருந்ததால் சரியாத் தூங்கவில்லை, அப்பறம் எப்படி பூனையார் கனவில் வருவார்,  நேற்று கொஞ்சம் அசந்து தூங்கினேன், காத்திருந்தது போல் பூனையார் கனவில் வந்துவிட்டார், "உன்னைப் போல் பொறுப்பற்றவர்களால் தான் பூனையார் மதம் அழிந்தது" என்று கோபமாகக் கூறினார், ஏன் பூனையாரே என்றேன், "பின்னே தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருந்தால் தானே பூனையார் மார்க்கம் பரவும்" என்று எடுத்துக் கூறினார், தப்புதான், சரி இப்போ நிறைய அன்பர்கள் பூனையார் மார்க்கத்தில் இணைந்துள்ளனர், அவர்களுக்கும் தங்கள் நல்லருள் தந்து அவர்களுடைய கனவிலும் ஊடுறுவி பூனையார் மர்கம் பற்றி எழுத வையுங்களேன் என்று கூறினேன், பார்க்கலாம் என்றார்.

"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் " - இதுல ஒரு உலக வரலாறே அடங்கி இருக்கிறது என்றார் பூனையார், எப்படி பூனையாரே ஒரே வரியில் கமண்டலத்திற்கு காவேரியை அடக்கியது போல் சொல்கிறீர்கள், புரிய வில்லை என்றேன். இன்னிக்கு தேதிக்கு உலக மதங்களெல்லாம் மதயானை போல் மதவெறியுடன் அலைகின்றன, அவற்றிற்கான காலம் இது, மக்கள் விழிப்படைந்துள்ளதால் மதவாதிகள் கட்டுப்பட்டுள்ளனர், பூனையார் மார்க்கம் இனி பரவும் என்பதைத் தான் அது விளக்குகிறது என்று கூறி, மதங்கள் எப்படி உருவாகி ஒன்றை ஒன்று அழித்து வளர்ந்தன என்று பெரிய பிரசங்கம் கொடுத்தார், "ஓ இது தான் உலக வரலாறோ" என்று கேட்டுக் கொண்டேன்.

நம்ம பூனையார் மார்க்கத்தில் உலகம் உருண்டை என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்று நான் எப்படி பிறரை நம்ம வைப்பது என்று கேட்டேன், உலக அறிவியல் அனைத்தும் பூனையாரின் புனுகு போன்று பூனையாரின் மார்க்கத்தில் இருந்து எடுத்த அமுத வாக்கியங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை, ஆய்வு செய்யப்படாத நிலையில் நிறைய அமுத வாக்குகள் உண்டு, அவற்றையெல்லாம் ஆய்ந்தால் உலகம் அறிவியல் உச்சம் அடைந்துவிடும் என்றார், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் இப்ப பூமி உருண்டையாக இருந்தது பூனையார் மார்க்கத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டது என்று வாசிப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் பூனையாரே என்று கேட்டேன். உனது ஆவலை மெச்சுகிறேன், பூனையார் மார்க்கத்தில் பூசைகள் துவங்க நாள் வந்துவிட்டது, இப்போது உலக உருண்டை பற்றி விளக்கம் சொல்கிறேன் கேள். என்று கூறி

"பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும்" என்கிற அமுத மொழி உனக்குத் தெரியும் தானே, என்று கேட்டார், நானும் ஆமாம் சாமி இது பற்றி தான் ஏற்கனவே விளக்கம் பிரபஞ்சத் தோற்றம் குறித்து எழுதிவிட்டோமே என்றேன், ஆம் உண்மை தான் ஆனாலும் அதன் தொடர்பில் இரண்டாவது அமுத மொழி உண்டு, அது மிகவும் ரகசியமானது வியப்பானது என்றார். சொல்லுங்களேன் என்றேன்

"பூனைக் கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்" இப்போது படித்துப் பார் லோகம் கோளம் ஆகி இருக்கிறது, ஆம் என்றேன், கோளம் என்றால் என்ன ? என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் "உருண்டை" என்றார், இப்பொழுது புரிகிறதா ? பூகோளம் அதாவது பூமி உருண்டை வடிவம், இதை நான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன், அதைத்தான் இன்று தமிழ் சமூகத்திலும் கூட பழமொழியாக்கி வைத்து பூகோளம் இருண்டது என்கிறார்கள் சிலர் திரித்து பூலோகம் என்கிறார்கள். பூனையாரின் பூகோள விளக்கம் என்னை சிலிர்க்க வைத்தது"


இதோ பூனையாரின் பூதை மொழி,

"பூமியை உருண்டையாகவும், சந்திரன் சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)


பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !
பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !
பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்