அண்மையில் மலேசியாவிற்கு வாடிகனால் அனுப்பப்பட்ட ஒரு கிறித்துவ மதபிரசங்கி பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார். மலேசிய கிறித்துவர்களை வழிநடத்த வந்த அவர், மலேசியாவில் மலாய் பேசும் கிறித்துவர்கள் தங்களுடைய இறைவனை 'அல்லா' என்று அழைக்கலாம், என்று ஒப்புதல் கொடுத்தார், ஏற்கனவே மலாய் மொழியில் இறைவன் என்ற சொல்லுக்கு 'அல்லா' என்றே வழங்கிவருகிறார்கள், எனவே மலாய் இஸ்லாமியர்கள் அல்லாத மலாய் கிறித்துவர்கள், மற்றும் இந்தோனேசிய கிறித்துவர்கள் வழிபாட்டின் பொழுது 'அல்லாவிடம்' தான் மன்றாடுவார்கள், மலாய் இஸ்லாமியர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மலாய் கிறித்துவர்களும் 'அல்லா'வைத்தான் வணக்குத்துக்கு உரியவராக வழிபடுகிறார்கள் என்பது தெரியும். இது போன்று அல்லாவை வணங்குபவர்களில் அரபியை தாய்மொழியாகக் கொண்ட கிறித்துவர்களும் உண்டு. அதாவது அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. 'அல்லா ஹு அக்பர்' என்றால் இறைவன் மிகப் பெரியவன் என்றே பொருள்.
இந்துக்கள் வழிபடும் இறைவன் சிவன், கண்ணன், பிள்ளையார் மற்றும் முருகன் அரேபியில் எழுத நேரிட்டால் இந்துங்களின் அல்லா சிவன், இந்துக்களின் அல்லா கண்ணன், இந்துக்களின் அல்லா பிள்ளையார் மற்றும் இந்துக்களின் அல்லாக்களில் மற்றொருவர் அல்லா முருகன் என்று எழுதுவார்களா ? எனக்கு தெரியவில்லை, ஆனால் மலாய் மொழிப் பெயர்ப்பில் கூகுள் மலாய் மொழிப் பெயர்ப்பு அப்படித்தான் காட்டுகிறது.
ஏற்கனவே மலாய் கிறித்துவர் ஒருவர் தன்னுடைய கடையின் பெயரில் 'அல்லா' வை சேர்த்து எழுதி இருந்ததை மலாய் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு காட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மலாய் கிறித்துவர்கள் 'அல்லா'வைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பாகியது, இருந்தாலும் பிற கிறித்துவர்கள் (மலேசிய இந்திய கிறித்துவர்கள் மற்றும் மாலேசிய சீனக் கிற்த்துவர்கள்) அவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தல் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் போப்பின் தூதுவர் மலேசிய கிறித்துவர்கள் அனைவரும் பைபிள் வாசிக்கும் பொழுதும் வழிபாட்டின் பொழுதும் 'அல்லா' வை பயன்படுத்தச் சொன்னதும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி, மலேசியாவில் பிறர் அல்லாவைப் பயன்படுத்தலாமா என்பதை அரசோ / நீதிமன்றமோ முடிவு செய்யாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று மலேசிய அரசு தரப்பு மதபோதகருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. மதபோதகரும் அங்கு தொடர்ந்து தங்கி மதபோதனை செய்ய வேண்டிய சூழலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
அடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்கள் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் ? கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.
விக்கிப் பீடியாபடி முகமது நபிக்கு முன்பு இருந்த பாகன் பல தெய்வ வழிபாட்டு முறையில் இருந்த இறைவனுக்கும் அல்லா என்று தான் பெயர், ஹிப்ரு மொழியிலும் அரபி மொழியிலும் வழங்கப்படும் 'அல்லா' என்று சொல் வழக்கு உச்சரிப்பு என்ற வகையில் பெரிய வேறுபாடும் இல்லை. சவுதி அரபி கிறித்துவர்கள் இறைவழிப்பாட்டில் அல்லா என்று சொல்ல எந்த தடையும் இல்லை, அது ஒரு இறைவன் குறித்த சொல் என்பதுடன் இருவரின் இறைவனும் ஒன்றே, அவர்களும் அல்லாவைத் தான் வழிபடுகிறார்கள் என்கிற புரிதல் உள்ளது, ஆனால் மலாய்காரர்கள் 'அல்லா' தனிப்பட்ட முறையில் இஸ்லாமியரின் பயன்பாட்டிற்கானது என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிழ் முஸ்லிம்களும் 'வணக்கம் சொல்லுதல்' என்றால் அல்லாவுக்கு வணக்கம் சொல்லுவதுடன் முடித்து போட்டுக் கொண்டு முடிந்தவரை வணக்கம் சொல்லவே தயங்குவார்கள், மறுப்பார்கள், வணக்கம் சொல்லுவதற்கும் கும்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு, தமிழ் தெரிந்தும் தமிழ் இஸ்லாமியர்களிடையே இவ்வளவு தகறாரு என்றால் 'அல்லா' என்ற ஒற்றைச் சொல்லை யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுவது என்பது தான் இப்போது மலேசியாவில் மலாய் இஸ்லாமியர்கள் கிளப்பும் பிரச்சனை.
அரேபியாவில் கிறித்துவர்களுக்கு அனுமதி இருக்கும் ஒரு சொல் மலேசியாவில் மறுக்கப்படுவதற்கு உணர்ச்சி வசப்படுதல் அல்லது வெறும் மொழி மற்றும் மொழிப் பெயர்ப்பு பிரச்சனை என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை, 'இறைவன்' என்பது பண்பு மற்றும் தொழில் பெயராகப் பயன்படுத்தலாம், 'இறைவன் சிவன்' என்னும் பொழுது வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதை பிரச்சனையாக்குவதில்லை, அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்ற வட்டத்திற்குள் வந்துவிடும். அரபியில் அல்லாவுக்கு வேறு எதுவும் பெயர் இருந்தாலும் (அளவற்ற அருளாளன், நிகரற்ற பொருளாளன் மற்றும் 100க் கணக்கான பெயர்கள் இருந்தும்) அவை புழக்கத்தில் பெயராக அழைக்க அல்லது பயன்படுத்தப்படாததால் தான் இத்தகைய குழப்பங்கள் வருகிறது என்றே நினைக்கிறேன்.
*******
மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது, அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம், சிங்கப்பூரில் மலாய்காரர்கள் நடத்தும் உணவுக் கடைகளில் 80 விழுக்காடு விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, காரணம் மலாய் உணவை பிறரும் உண்ணுகிறார்கள் என்பதுடன் ஒரு மாதம் கடையை அடைத்தால் பின்பு கடைக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்பதுடன் ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்களா என்கிற அச்சமும் இருப்பதால் மலாய் இஸ்லாமியர் உணவு கடைகள் அடைக்கப்படுவதில்லை. மாணவர்கள் நிலைமை வேறு என்றால் கழிவறையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது மட்டும் எப்படி சரியாகுமோ ? அதற்கு மாற்றாக உணவு இடைவேளையில் கேண்டின் பக்கம் இஸ்லாமிய மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தி இருக்கலாமே.
இதுவும் மலேசிய தகவல் தான், ஒரு சீன வலைப்பதிவர் ஒருவர் தனது நண்பியிடன் சேர்ந்து ரம்சான் நோன்பு துவங்கும் நாளில் 'ஹேப்பி ஹரிராயா ஹேவ் எ நைஸ் ஹலல் பாக் த்குதே' என்று வலையில் வெளியிட்டு கைதாகியுள்ளார், பாக் குத்தே என்பது பன்றி இறைச்சியில் செய்யப்படும் ஒருவகை சூப் உணவு. பிரச்சனைக்கு வேறு எதுவும் வேண்டுமா ? இங்கு சீன சைவ உணவு வகைகளில் சோயாவில் செய்த சைவ மீன், சைவ மட்டன், சைவ இறா உள்ளிட்டவைகள் உண்டு, கிட்டதட்ட அதே பொருளில் தான் மேற்கண்ட பொருளில் தான் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார், ஹலல் பீர் இருக்கும் பொழுது, அனுமதிக்கப்படும் பொழுது (தெரியவில்லை என்றால் அண்ணன் சு.பி பதிவை பாருங்கள்') ஒருவேளை சோயாவில் செய்து அதை ஹலல் பாக் த்குதே என்று சொன்னாலும் தவறாகுமோ ?
**********
இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.
**********
இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.
இணைப்புகள் :