கட்டற்ற இணையவெளி என்ற நம்பிக்கையில் இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் எழுதுகிறோம். கூகுள் பஸ் மற்றும் கூகுள் தனிநபரைச் சார்ந்து இயங்கும் குழுமங்களிலும் எழுதுகிறோம். கட்டற்ற இணையவெளி என்பது சேறுவாரி இரைக்கும் அல்லது அவதூறுகளையும் சுமந்து கொண்டு செல்லும் என்பது அல்ல என் புரிதல். இருந்தாலும் அரசியல் சார்பு அல்லது பொது நபர்கள் குறித்த விமர்சனங்களில் ஓரளவு நடப்புகளையும் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அரசியல்வாதி அல்லது பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் ஆபாசம் எதுவும் இல்லை என்றால் அது எதிர்வினை அல்லது ஆதங்கம் என்ற அளவில் தான் எனது புரிதல்.
பொதுவாக அரசியல் தளத்தில் இயங்குபவர்கள் தமக்கென்று கொள்கை இருப்பதாகவும் அதுவே தமது அல்லது தான் சார்ந்த கட்சியின் தனித்துவம் என்று சொல்வர். பெரியாரும் அண்ணாவும் உருவாக்கி வளர்த்த திக மற்றும் திமுக கழகத்தின் இன்றைய கொள்கை என்ன என்பது யாரேக்கேனும் தெரியுமா ? இருந்தாலும் அந்தக் கட்சிகள் தங்கள் கொள்கை சார்ந்து இயங்குவதாகவேச் சொல்லிக் கொள்கின்றன. திமுக தோன்றி பதவியை பிடித்த காலத்தில் தமிழக தேசிய காங்கிரஸ் கட்சி என்பது நேரிடையாகவே எதிர்கட்சி முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய கட்சிகள். இதற்கிடையே இந்திராகாந்திக்கு விதவை பென்சன் வேண்டுமானால் தருகிறேன் என்று வீரவசனம் பேசிய கருணாநிதியை எமெர்ஜென்சியின் போது நன்கு புடைத்தனர் காங்கிரசார். அதைத்தான் பாம்புகள் பல்லிகள் நிறைந்த சிறைச்சாலையில் கழித்தகாலம் என்று கருணாநிதி சொல்லிவந்தார். திமுகவை அழிக்க முயன்று அல்லது ஆட்சியை விட்டு அகற்ற முயன்று தோற்கும் நிலையில் முற்றிலுமாக மறையக் கூடிய சூழலில் அப்போதைய திமுகவிலிருந்து பிரிந்த அதிமுக பின்னால் நின்று திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிக்காட்டியது காங்கிரஸ்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான திமுகவிற்கு இறங்குமுகம் தான். இதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் என்றாலும் காங்கிரசின் கூட்டணி இன்றி இதனை அவர் தனித்து செய்து காட்டிவிடவில்லை. எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகும் ஜெயலலிதாவின் பின்னால் நின்று திமுகவை எதிர்த்து வந்தது, ஜெவின் முதல் ஐந்தாண்டு ஆட்சி ஊழல் மலிந்துவிட பொதுமக்களிடம் செல்வாக்கு இழந்த நிலையில் இனியும் காங்கிரஸ் அதிமுகவின் பின்னால் நின்றால் ஒன்றும் தேராது என்று உணர்ந்த மூப்பனார் போன்றோர் சொல்லியும் கேட்காமல் காங்கிரஸ் அதிமுகவுடன் அடுத்தும் கூட்டணி கண்டது. அந்த தோல்வியில் காங்கிரசும் அதிமுகவும் படுதோல்வி அடைய திமுக ஆட்சி அமைந்தது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் என்னும் நந்தி மூப்பனார் தலைமையில் சிதைய கிடைத்த வாய்ப்பே மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி. அப்போது ஐகே குஜரால் மற்றும் தேவ கவுடாவின் மிகக் குறைந்த காலத்திற்கான மத்திய அரசை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஏற்படுத்தின. அவையும் கவிழ இடையில் இருந்த குழப்பமான சூழலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.
வெறும் 13 மாத ஆட்சியில் சு.சாமியுட்ன ஆன டீ பார்டியில் ஜெ பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட. அடுத்த பொதுத்தேர்தலில் மதவாதக்கட்சி என்ற விமர்சித்துவந்த பாஜகவுடன் திமுக கூட்டணி கண்டது, இந்நிலையில் மூப்பனார் கழண்டு கொண்டு தாய்கட்சியுடன் சேர ஜெ தலைமையிலான சட்டமன்ற கூட்டணி அமைய ஜெவிற்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெ ஆட்சி முடியும் முன்பே ஜெ சோனியாவை தனிப்பட்ட தாக்குதல்களாக பதிபக்தி இல்லாதவர் என்பதாக விமர்சனம் செய்யவும், பாஜக செல்வாக்கு இழந்து நின்ற நிலையில் மறு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்திய அரசில் இடம் பெற்று, இரண்டாம் முறையாகவும் தொடர்கின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுக்கும் மேலான மத்திய அரசின் தலைமையில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரவு கொடுத்த விடுதலைபுலிகள் அழித்தொழிப்பு நடவெடிக்கைகளில் ஏராளமான ஈழப் பொதுமக்கள் வீடு இழந்து, இன்றும் முள் வேலியில் வாடும் நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில் தமிழர் நலன் குறித்து எதுவுமே செய்திடாத கருணாநிதி என்று திமுக ஆதரவாளர்களால் தொடர்ந்து குரல் எழுப்பட்டு வருகிறது.
இந்த திமுக எதிர்ப்பு என்பது வெறும் ஈழம் தொடர்புடையது மட்டுமே அல்ல, தரும புரி மாணவிகள் எரிப்பு சம்பவம் போல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டபிறகு, அது குறித்த இரு தரப்பும் கைகுலுக்கிய போது 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்பதாக பேட்டி அளித்து அப்படி ஒரு சம்பவமே தமிழகத்தில் நடக்காது போல் நெகிழ்ந்தார் கருணாநிதி. அப்போது திமுக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டு தான் வந்தனர். என்னுடைய திமுக எதிர்ப்புப் பதிவுகள் என்பது அப்போதே துவங்கிவிட்டன. உச்சமாக அரசு ஆதரவு மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள் மூலம் ஈழம் குறித்த நிகழ்வுகள் எதுவுமே வெளியே தெரிந்துவிடாதபடி அமுக்கப்பட்டதும் ஈழ ஆதரவாளர்கள் பலரை சிறையில் அடைத்தது உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்து கருணாநிதி இனி தன்னை தமிழின தலைவர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர் என்பதாக கட்சி அனுதாபிகள் தவிர்த்து திமுக ஆதரவாளர்கள் அனைவருமே தூற்றினர்.
தமிழர் நலம் மற்றும் கொள்கை அளவிலும் கூட எப்போது காங்கிரஸ்கட்சியை எதிர்த்தே வந்த திமுக ஆதரவாளர்கள் நிலை காங்கிரசுக்கு துதிப்பாடும் திமுகவின் மீதும் கருணாநிதி மீதும் எப்போதோ திரும்பிவிட்டது. துரதிஷ்டவசமாக இவர்களுக்கு மாற்று என்பதாக ஜெவை ஆதரிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலை தான் இன்றைய தமிழர் நலம் சார்ந்து இயங்குபவர்கள் அனைவரின் நிலையும்.
பாம்புகள் பல்லிகள் நிறைந்த பாளையம் கோட்டைச் சிறையில் தான் அடைத்துகிடந்ததை ஹனிபா குரலில் பாடவைத்து காங்கிரசு நிற்கும் தொகுதியில் அந்தப் பாட்டை ஓடவைத்து வாக்குக் கேட்கும் திமுகவினருக்கோ காங்கிரசுக்கோ கொள்கை என்று ஏதேனும் இருக்கிறதா ?
இந்த கண்றாவியெல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால், இணையம் கட்டற்ற ஊடகம் என்பதாக விமர்சனங்களை எழுதிவருகிறோம் அதில் கட்சி ஆதர்வாளர்களின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது எரிச்சல் ஏற்படத்தான் செய்கிறது. இவ்வாறான கட்சி ஆதரவாளர்கள் பதிவர் நண்பர்கள் என்பதாகத்தான் பழகியும் வந்தனர். அண்மையில் கூகுள் பஸ் விவாதத்தின் போது அத்திவெட்டி ஜோதிபாரதி ஒரு விமர்சனத்தை பஸ்ஸில் ஏற்றினார்
*****
அத்திவெட்டி ஜோதிபாரதி - காங்கிரஸ்காரர்கள் மேல கருணாநிதிக்கு ஒரு மரியாதை உணடு! அவர்களை ஒன்னும் செய்யமாட்டார்! :)))
Govi kannan - விதவை பென்சன் கொடுக்கிறவர் ஆச்சே..
- இது தங்கள் கட்சித்தலைவி சோனியாவைக் குறித்த மிகவும் மோசமான கமெண்ட் என்று அவராகவே கற்பனை செய்து கொண்ட ஒரு காங்கிரஸ் பிரமுகர், 'உங்க வீட்டில் யாரும் விதவை பென்சன் வாங்கி இருக்கிறார்களா ?' என்று என்மீது பாய்ந்தார். இதிலிருந்தே இவர் நண்பர் என்ற போர்வையில் வலைப்பதிவில் நுழைந்த ஒரு கட்சிக்காரர் என்பதாக உணர்ந்து நொந்தேன். பொதுவான விமர்சனத்தை சகிக்க முடியாமல் தனிப்பட்ட தாக்குதல்களாக இவர்கள் சீறும் போது தான் இவர்கள் நண்பர்களாக நாம் நினைத்தது நம் தவறே என்று உணர்ந்தேன். அவரும் சொன்னது தவறு என்று ஒப்புக் கொள்ளாத நிலையில் அவரிடம் தனிப்பட்டு எந்த ஒரு விவாதமும் செய்யாமல் முற்றிலுமாகத் தவிர்த்தேன்.
அடுத்து அபி அப்பா என்கிற திமுக கட்சிக்காரரின் விவாதத்தின் இடையே
அபி அப்பா - \\ நீங்கள் தான் கருணாநிதி பற்றி சொல்லும் இடத்திலெல்லாம் ஜெவைக் கொண்டு வந்து முட்டுக் கொடுக்கிறீர்கள்\\
இல்லை கோவி! நான் அத்தனை அனுபவம் இல்லாதவன் இல்லை.சும்மா சும்மா ஜெயலலிதா பத்தி பேச எனக்கு என்ன வேண்டி கிடக்கு. நீங்கள் தான் எந்த எந்த விஷயம் விவாதத்துக்கு எடுத்து கொண்டாலும் அங்கே கலைஞரை சம்மந்தமே இல்லாமல் கொண்டு வருகின்றீர்கள். அதன் காரணமாகவே நான் ஒரு முறை உங்க பாணிக்கே வந்தேன். அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். சுந்தர் பஸ்ல கூட குழலி கம்பேரிடிவா ஜெ தான் திமுகவை விட உயர்வு என சொல்லிய போது அதை ஒட்டியே தான் வாதம் செய்தேன்.
இப்பவும் சொல்கிறேன். எதை கொடுக்கிறோமோ அதான் திரும்ப வரும்!
@குழலி! கண்ணதாசன் ஒரு பெயிலியர் ரோல் மாடல் இந்த உலகிற்கு. அதை நீங்கள் பின்பற்றுவதால் எனக்கு பெரிய வருத்தம் என்ன இருக்க போகின்றது. கோ அஹட். (உலகில் கண்ணதாசன் பேரன் பேத்திகள் கூட "நீ வரும் காலத்தில் கண்ணதாசன் மாத்ரி ஆகனும்னு தவறி கூட சொல்ல மாட்டாங்க அப்படி ஒரு நொட்டோரியஸ் அவரு என்பது எல்லாரும் ஒத்து கொண்ட உண்மை)
Govi Kannan - //அப்போது கூட கீழே டிஸ்கி போட்டு சொன்னேன்.(அப்பாடா நானும் சம்மந்தமில்லாமல் உளற ஆரம்பிச்சுட்டேனே) என்று சொல்லி தான் நானும் ஜெ வை இழுத்தேன். //
ஆக கருணாநிதி பற்றிப் பேசும் இடங்களில் ஜெவைக் கொண்டு வந்து ஒப்பிடும் போதே நீங்கள் கருணாநிதிக்கு மாற்று ஜெ தான் என்று ஒப்புக் கொள்வதாகவே இருக்கிறது. நீங்க என்ன உங்க தலைவரும் ஜெவின் பேச்சுக்கு வரிக்கு வரி பதில் சொல்லிவருவதில் இருந்தே, கருணாநிதி ஜெ வை எந்த் அளவுக்கு நினைக்கிறார் என்பது வெள்ளிடை மலை.
நாங்க கருணாநிதியைத்தான் விமர்சனம் செய்வோம், அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர். ஜெ ஆட்சியில் இல்லை. ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?
அபி அப்பா - \\அவரு தான் இப்ப ஆட்சி கட்டிலில் உண்ணாவிரதம் இருந்தவர்\\\
அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!
\\ஜெ ஊழல் வாதி இல்லைன்னு கோர்ட் சொன்னாலும் நீங்க ஒப்புக் கொள்ளுவிங்களா ?\\ :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!Sep 29
KRISHNAMOORTHY BASKARAN - // இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்!
ஜென்மம் 2010 mudivurum.................Sep 29
Govi Kannan - //:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) என்ன பதில் எதிர்பார்க்குறீங்க என் கிட்ட இருந்து??? அதையே போட்டுகுங்க கோவி!//
என்ன பதிலா கருணாநிதியும் ஜெவும் என்னைப் பொருத்த அளவில் ஒன்று தான். நீங்க என்ன தான் கரடியாக கருணாநிதி நல்லவரு வல்லவரு என்றாலும் தீர்ப்பு வழங்கினாலும் நாங்க ஒப்புக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்னும் முள்ளி வாய்க்காலுக்கு விமோசனம் கிடைக்காத நிலையில் கருணாநிதி இருந்தாலும் ஒண்ணு தான் செத்தாலும் ஒண்ணு தான்
Govi Kannan - //அப்ப இந்த ஜென்மம் முழுக்க நீங்க கலைஞரை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்க என் ஆசிகள்! //
கிழவன் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் மண்டையைப் போடுவது திண்ணம்.
அவரு கருணாநிதியை வாழ்த்துவதாக நினைத்து என் ஆயுளை குறைத்து கேவலப்படுத்துறார், கருணாநிதி ஆதரவாளர்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவர்கள்.
அபி அப்பா நீங்க வேண்டுமானால் ஆயுள் முழுவதும் கருணாநிதி காலில் விழுந்து கிடங்கன்னு சொல்கிறேன், இது வாழ்த்தா வசவான்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
*****
இந்த உரையாடலின் தொடர்ச்சியில் திமுக பற்றாளர் ஒருவர் (அபி அப்பா அல்ல)
அது எப்படி என் தலைவனை செத்துப் போகச் சொல்லுகிறாய் ? ஒருவர் சாகவேண்டும் என்று நினைக்கும் உன்னை போன்ற ஆட்களுடன் நான் நட்பாக இருக்க விரும்பவில்லை, இதுவே நமக்கு நடக்கும் கடைசி உரையாடல் இனி என்னைப் பார்க்கவேண்டாம் என்பதாக ஒரு உடன் பிறப்பு எகிறிச் சென்றார்.
இவர்களுக்கு முள்ளிவாய்கால் பிணங்களோ, தமிழக மீனவக் காயங்களோ செயல்படும் இடத்தில் இருந்து செயல்படாமல் போன தலைவன் ஒருநாள் போகத்தானே போகிறார் என்று சொன்னதைவிட பெரிதே அல்ல. சாவு என்பது தன் தலைவனுக்கு என்றால் தான் சோகம் மற்றவர்களுக்கு என்றால் அது தீபாவளி நாள்.
கருணாநிதியை 'நன்கு வாசிப்பவர்' என்று சொல்லி சாதிச் சாடல் சாடிய இளங்கோவனும் கருணாநிதி பக்கத்தில் அவ்வப்போது நின்று போஸ் கொடுத்துதான் வருகிறார். ஜெ பக்கத்தில் நின்று கருணாநிதியைத் தூற்றியோர் பிறகு கருணாநிதி பக்கத்தில் நின்று ஜெவைத் தூற்றுகிறார்கள். இவற்றில் ஆபாசப் பேச்சுகளும் அடங்கும். முற்றிலும் எதிர் எதிர் நிலையில் இருந்த திமுகவும் காங்கிரஸும் பத்தாண்டுகளாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, இவர்களின் நிலையும் கொள்கைகள் எதுவும் கூட நிலையானது இல்லை. கருணாநிதிய அடித்து உதைத்து துன்புறுத்தியோர், எதிர்கட்சியில் இருந்து கொண்டு செய்யாத விமர்சனத்தையா நான் செய்துவிட்ட்டேன் ?
ஒரு தமிழர் தலைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ரீதியில் ஈரண்டுகளுக்கு மேலாக ஊகங்களே நிலவு வரும் வேளையில் 87 வயது முதியவர் ஒருநாள் இறக்கப் போகிறவர் தானே என்பது தூற்றலாம். சூப்பர் ஸ்டார் இறக்கும் படி நடித்தால் ரசிகர் பொங்கிவிடுவார்கள் என்பது போல் கருணாநிதி இறந்துவிடுவார் என்று சொன்னால் கூட இவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதாம். இந்த உலகத்தில் சாகாவரம் பெற்றவர் யார் ?
*********
ஒருவரிடம் நீ கருணாநிதி தாத்தா வாழும் வரை வாழ வாழ்த்துகிறேன் என்று சொல்வது அவருக்கு வாழ்த்தா ? வசவா ? அபி அப்பா அப்படியான வாழ்த்தை எனக்கு வழங்கினார், அதற்கு பதில் சொன்ன நான் கருணாநிதி செத்துப் போகவேண்டும் என்று விரும்புகிறேனாம். கருணாநிதி ஏற்கனவே 87 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர். பெரியார் 90 வயதுவரை வாழ்ந்தார், அதிகபட்சமாக கருணாநிதியின் வாழ்நாள் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது கருத்து சொல்வது இயல்பு தானே.
யார் வேண்டுமானாலும் எந்த கொள்கையில் இருக்கட்டும், அதற்காக பழகியவர்களைவிட கொள்கை பெரிது என்று நினைக்க அவர்கள் கொள்கை சார்ந்தவர்களிடம் மட்டும் பழகினால் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்படியானவர்கள் தங்கள் நிலையை என்றுமே தெரிவித்து இருந்தது இல்லை, ஒருவேளை அப்படித் தெரிவித்திருந்தால் என்போன்றோர் ஏன் பழக்கப் போகிறோம் ? கட்சிகார்ர்களை நண்பர்களாக நினைத்துப் பழகும் கட்சி சார்பற்றவர்கள் சிந்தனைக்கு விடுகிறேன்
வேறொரு பதொவொன்றில் ரஜினி குறித்த விவாதத்தின் முற்றலில் பதிவர் கிரியுடன் கடும் வாக்குவாதம் முடிவில் தனித்தாக்குதலாக தொடரும் வேளையில் 'இதுவரை உங்களை சந்தித்தாத ஒருவருக்காக, இனியும் உங்களை அவர் சந்திப்பாரா என்று எந்த உறுதியும் இல்லாத நிலையில், இதுவரை பழகிய என்னை தனித்தாக்குதல் செய்கின்றீர்களே, ஒருவேளை அவர் தான் முக்கியம் என்றால் நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது ?' என்று கேட்டேன். உடனடியாக அவர் எனக்கு ரஜினி முக்கியம் இல்லை கோவி.கண்ணன் நீங்கள் தான் முக்கியம் என்று அதுகுறித்த பின்னூட்ட கருத்துக்கள் அனைத்தையும் அழித்தார் கிரி, அது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது.
என்னுடன் பல பார்பனர்கள் நெருங்கிப் பழகுகின்றனர், என்னுடைய சமூகக் கட்டுரைகளில் பார்பனியம், இந்துத்துவம் பற்றிய கடுமையான விமர்சனம் அனைவருமே அறிந்தது தான். நான் அப்படி எழுதுகிறேன் என்பதற்காக இதுவரை என்னுடன் நேரிடையாகப் பழகும் எந்த ஒரு பார்பனரும் நட்பை முறித்துக் கொள்கிறேன் என்று விலகியதோ, தனிப்பட்ட தாக்குதல் தொடுத்ததோ இல்லை.